முசுலீம்களை நேசித்ததற்காக மாணவி தன்யாஸ்ரீயை தற்கொலை செய்யவைத்த இந்துமதவெறியர்கள் !

1
4

சிக்மகளூரு : முசுலீம்களை நேசித்தற்காக மாணவி தன்யாஸ்ரீயை தற்கொலை செய்யவைத்த இந்துமதவெறியர்கள் !

“நான் முசுலீம்களை நேசிக்கிறேன்” என்று ஒரு வாட்ஸ் அப் செய்தி அனுப்பியதற்காக ஒரு இளம்பெண் தற்கொலை செய்திருக்கிறார். தன்யாஸ்ரீ, வயது 20, இளங்கலை வணிகவியல் மாணவர். கடந்த சனிக்கிழமை 6.01.2018 அன்று அவரது அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து போனார்.

இந்தியாவின் காஃபி கோப்பை என அழைக்கப்படும் சிக்மகளரூ நகருக்கு அருகே உள்ள முடிகிரி நகரில் இந்த துயர சம்பவம் நடந்திருக்கிறது.

தற்கொலை செய்து கொண்ட மாணவி தன்யாஸ்ரீ

அந்த இளம்பெண் தனது நண்பரான சந்தோஷுடன் கடந்த வெள்ளியன்று சாட் மூலம் சாதி – மதம் குறித்து விவாதித்திருக்கிறார். அதில்தான் அவர் “நான் முசுலீம்களை நேசிக்கிறேன்” என்று குறிப்பிட்டார்.

மதவெறி ஏறியிருந்த சந்தோஷ் அந்த செய்தியால் எரிச்சலுற்று, உடனே அந்த தகவலை உள்ளூர் பஜ்ரங் தள் மற்றும் விசுவ இந்து பரிஷத் உறுப்பினர்களுக்கு பகிர்ந்திருக்கிறார். பிறகு அந்த செய்தி வைரலானது. கூடவே தன்யாஸ்ரீ மற்றும் அவரது தாயார் மீது உளவியல் சித்திரவதை ஆரம்பமானது.

பாஜக -வின் இளைஞர் அணித் தலைவரான அனில்ராஜ், அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று நேரிலேயே மிரட்டியிருக்கிறார். முசுலீம்களோடு எவ்வித நட்பும் பாராட்டக் கூடாது என்றும் எச்சரித்திருக்கிறார்.

இந்த சித்திரவதைகளின் தொடர்ச்சியாக தன்யாஸ்ரீ அடுத்த நாள் தூக்கு போட்டு இறந்து போயிருக்கிறார். அவரது தற்கொலைக் குறிப்பில் இந்த சம்பவங்கள் அவரது சொந்த வாழ்க்கை மற்றும் படிப்பை நிலைகுலைத்து விட்டது என்று கூறுகிறது.

பாஜக -வின் தலைவரான அனில்ராஜை, போலிசார் கைது செய்திருக்கிறார்கள். கூடவே முதன்மைக் குற்றவாளியான சந்தோஷ் மற்றும் மூவரை தேடி வருகிறார்கள்.

“ஐந்து பேர் அந்த பெண்ணின் வீட்டிற்குச் சென்றிருக்கிறார்கள். நாங்கள் இதை பாரதூரமான சம்பவமாக கருதுகிறோம். அனைவரும் தண்டிக்கப்படுவார்கள். தயவு செய்து ஒழுக்க (கலாச்சார) காவல்தனம் என்று இதை அழைக்காதீர்கள். ஒழுக்கத்தின் பெயரிலான குண்டர்கள் ஆட்சி என்று அழையுங்கள்” என்று சிக்மகளூருவின் காவல்துறை கண்காணிப்பளரான அண்ணாமலை கூறியிருக்கிறார். மேலும் அந்த வாட்ஸ் அப் செய்தியின் ஸ்கீரின் ஷாட்டை பகிர்ந்தோர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருக்கிறார்.

ஆனாலும் இந்த காவல்துறை அதிகாரியின் கோபத்தினால் என்ன பயன்? மோடியின் ஆட்சியில் இந்தியா முழுவதும் இத்தகைய கொலைகள், மிரட்டல்கள், தற்கொலைகள் நடக்கும் போது காங்கிரசே ஆண்டாலும் அங்கே இந்துமதவெறியர்கள்தானே ஆட்சி செய்கிறார்கள்?

ஒரு இளம்பெண்ணை இரக்கமின்றி கொன்றிருக்கிறார்கள் இந்துமதவெறியர்கள். சாதி, மதம் பாரக்க மாட்டோம், முசுலீம்களை நேசிப்போம் என்று சொன்னதற்காக இங்கே ஒரு மாணவி தற்கொலை செய்திருக்கிறார் என்றால்….?

மேலும் :

Girl Driven to Suicide Over ‘I Love Muslims’ Message on WhatsApp, BJP Youth Wing Leader Arrested

 

1 மறுமொழி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க