privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஇப்டியே போனா கழகம் என்ன ஆகும் ? தொழிலாளிகள் என்ன ஆவாங்க ? நேர்காணல் -...

இப்டியே போனா கழகம் என்ன ஆகும் ? தொழிலாளிகள் என்ன ஆவாங்க ? நேர்காணல் – படங்கள்

-

போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் நீதி மன்றத்தின் மிரட்டலையும் மீறி  09.01.207 இன்று ஆறாவது நாளாக  தொடர்கிறது. தமிழகம் முழுவதும் பேருந்துகள் அந்தந்த பணிமனைகளில் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிமுக-வின் காலிகள் தொழிலாளர்களை மிரட்டுவதும், வசைபாடுவதும் என்பது ஒருபுறம். மற்றொருபுறம் அரசே மிரட்டி வருகிறது.

“கிட்டத்தட்ட ஐம்பது சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டனர்” என்று அரசு கூறுகிறது. ஆனால், சென்னையின் முக்கியமான பணிமனைகளுக்கு சென்று தொழிலாளர்களை சந்தித்தப்பின் முன்னைக்காட்டிலும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது என்பது தெளிவாகிறது.

சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு செல்லத் தயாராகும் ஐயப்பன்தாங்கல் பணிமனை தொழிலாளர்கள்.

அய்யப்பந்தாங்கல் பணிமனை தொழிலாளர்கள்: அரசு கோரிக்கையை நிறைவேத்திடாங்க. பதினோராயிரம் சம்பளம் போட்டிருக்குன்னு சொல்றாங்க. அதைத்தான் உங்க பத்திரிக்கைகாரங்க போடுறாங்க… ஆனா எங்களுக்கு முழுசா ஏழாயிரம் கூட ஒருத்தருக்கும் போடல. எல்லாம் ஏமாத்து. சம்பள பட்டியல் அந்த போர்டுல ஒட்டியிருக்கு. நீங்களே போயிட்டு பாருங்க. இதை எல்லாம் உங்க பத்திரிக்கையில போடாம அரசாங்கம் சொல்ற போய்யத்தான போடுறீங்க….

ஐயப்பன் தாங்கள் பணிமனையில் ஒட்டப்பட்டுள்ள சம்பள உயர்வுப்பட்டியல்.

வரலாறு காணாத சம்பள உயர்வு என்று அறிவித்து புளகாங்கிதம் அடையும் அதிமுக அடிமைகள்.

சிஐடியு மற்றும் தொமுச சங்க நிர்வாகிகள்,அய்யப்பந்தாங்கல்:  தொழிலாளிங்க கலக்சன்ல 10 ரூபா குறைந்தா கூட மெமோ கொடுப்பாங்க.. இங்க்ரீமென்ட் கட் பண்ணிடுவாங்க. பெனால்டி போடுவாங்க. வண்டி கொஞ்சம் இடித்து விட்டால் கூட தொழிலாளிகள் தான் முழு பொறுப்பு என்று எங்களை வாட்டுவார்கள். ஆனால் உண்மையில் பிரேக்கே வண்டியில் இல்லை. நாங்க பிரேக் மேல ஏறி நின்னா தான் பிரேக்கே புடிக்கும். அந்த அளவுக்கு வண்டியோட கண்டிசன் மோசமா இருக்கும் போது தற்காலிக ஓட்டுனரை வச்சி ஓட்டுறாங்க. இரண்டு இடத்துல விபத்து நடந்திருக்கு. மக்கள் மேல கொஞ்சம் கூட அக்கறையே இல்லாம அரசு நடத்துக்குது சார்.

இந்த வண்டிய ஒட்டுறதுக்குன்னு சில தகுதி வச்சிருக்காங்க. ஆனா எந்த விதிமுறையும் மதிக்காம சட்ட விரோதமா இயக்கிட்டு இருக்காங்க. வழக்கமா 166 கி.மீ ஓட்டினா தான் ஒரு நாள் வருகைப் பதிவேடு போடா முடியும். ஆனா வெறும் 50 கி.மீ ஓட்டிட்டு வரவங்களுக்கு அட்டனென்ஸ் போடுறான். அவனையே அடுத்த ரூட்டுக்கு மாத்தி விடுறானுங்க. அப்படி தான் இவனுங்க கணக்கு காட்டுறாங்க. வர டிரைவர் எல்லாம் கலக்சனை எடுத்து கிட்டு ஓடிடுரானுங்க. வண்டி இயல்பா ஓடிகிட்டு இருக்குன்னு சொல்றாங்களே… தைரியம் இருந்த எவ்ளோ கலக்சன் ஆச்சின்னு வெள்ளை அறிக்கை விட முடியுமா?

கக்கன் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள்: “சார் நாங்க சம்பள உயர்வுக்காக போராடல சார். கார்ப்பரேசன் நிலைமை மோசமாகிடுச்சி. அதனை காப்பத்தனும் அதுக்கு தான் இந்த போராட்டம். சம்பள உயர்வு அடுத்த ஒப்பந்தத்துல கூட கேட்டுக்குவோம். இன்னைக்கு என்ன நிலைமை’ன்னா தொழிலாளிங்களோட வைப்பு நிதியிலதான் கழகமே  ஓடிகிட்டு இருக்கு. தொழிலாளிங்களால ஒரு லோன் கூட போடா முடியல.. சொசைட்டில கூட கடன் கொடுக்க மாட்டேன் என்கிறார்கள். ஓய்வு பெற்ற தொழிலாளிங்க பென்சனை வைத்து தான் கொஞ்ச காலத்தையும் கழிப்பாங்க. அவர்களுக்கு இரண்டு வருசமாகியும் பணம் வரல..எப்ப வரும்னும் தெரியல. இப்படியே போனா கழகம் என்ன ஆகும்? தொழிலாளிங்க என்ன ஆவாங்க?

பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் தொழிலாளிகளை மிரட்டுவதற்காக ஒட்டப்பட்டுள்ள நீதிமன்ற உத்தரவின் அறிவிப்பு.

பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் சவீதா நிறுவனப் பேருந்துகளை கொண்டு இயக்கம் நிர்வாகம்.

வழக்கம் போல் பேருந்துகள் இயங்கும் என்று சில பேருந்துகளில் மட்டும் அக்கியூஸ்டு ஜெயாவின் படத்தோடு ஒட்டப்பட்டுள்ள அரசின் அறிவிப்பு.

கண்ணன், சாய்ராம் கல்லூரி ஓட்டுனர், தாம்பரம் பேருந்து நிலைய தற்காலிக ஓட்டுனர்: எங்க கல்லூரியில இருந்து மட்டும் ஐம்பது பேர் வந்திருக்காங்க. RTO மூலமா எங்களை அனுப்பினாங்க. நாங்க வந்ததுக்கு முக்கிய காரணமே எங்கள கல்லூரி பஸ் fc,இன்சுரன்ஸ் பண்ணனும்னா அவங்க கிட்ட தான் போகணும். நாங்க இப்ப வரலனா வண்டி FC ஆகாது. அதுக்கு பயந்து தான் வந்திருக்கோம்.  எங்கள மாதிரியே பல தனியார் கல்லூரிகள்ல இருந்து ஆட்கள் வந்திருக்காங்க. ஓட்டுனருக்கு 400ரூபா.. கண்டக்டருக்கு 450 ரூபா தராங்க.

நீதி வழங்கிய நீதிபதிகளுக்கு 2.50 லட்சம் சம்பளம் வழங்கும் போது போக்குவரத்து தொழிலாளிக்கு 2.57 காரணி பொருந்தாதா? இடம்:குரோம்பேட்டை பணிமனை.

அரசு,நிர்வாகத்தோடு சேர்ந்து நீதிமன்றமும் துரோகம் செய்கிறது. இடம்: குரோம்பேட்டை பணிமனை.

மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்படும் கே.கே நகர் பேருந்து பணிமனை.

கே.கே.நகர் பணிமனை, தொமுச சங்க  நிர்வாகிகள்: 22 வருஷம் சர்விஸ் இருக்கவங்க நாங்க. எங்ககிட்ட இருந்து பிடிச்ச பணத்த கேட்டு போராடினா, சம்பளம் பத்தலனா வேற வேலைக்கு போக வேண்டியது தானேன்னு கேக்குது அந்த நீதிபதி அம்மா. சரி நாங்க வேற வேலைக்கு போறோம். நீதிதியாகிய நீங்களே நல்ல சம்பளத்துல வேலை பார்த்து கொடுத்துட்டா போயிடுறோம். “அந்தியூர் MLA வண்டி ஓட்டினாரே அதுமாதிரி நாளைக்கு துப்புரவு தொழிலாளி ஸ்ட்ரைக் பண்ணா சாக்கடைய கிளின் பண்ணா உண்மையா நாங்க சந்தோசப்படுவோம்”. லஞ்சம் வாங்காத ஒரே தொழிலு எங்களோடது தான். அந்த அளவுக்கு நேர்மையா வாழற எங்கள வீட்டுக்கு போக சொல்லுறாங்க. எங்களை மாதிரி வேற யாரையாவது அரசு துறையில காட்ட முடியுமா?

ஒண்ணுமில்ல சார், எங்களோடது பப்ளிக் சர்விஸ்.. ஆனா அதிகாரிங்களுக்கு வண்டி ஓட்டுறது பிரைவேட் சர்விஸ்.  அதிகாரிங்களுக்கு ஓட்டுறது இலகுரக வாகனம். எங்களோடது கனரக வாகனம். நியாயமா பார்த்தா எங்களுக்கு தான் சம்பளம் அதிகமா தரனும்.

இந்த தொழில்’ல பொண்டாட்டி புள்ளைங்கள பார்க்காம, தூங்காம மக்களுக்காக உழைக்கிறோம். நாங்க வீட்டுக்கு போகும்போது அவங்க தூங்கிடுவாங்க. அவங்க முழிச்சிகிட்டு இருக்கும் பொது நாங்க டூட்டிக்கு வந்துடுவோம். இந்த மக்களோட தான் எங்க வாழ்க்க. அதனால எங்களுக்கு கடமை இருக்கு சார்.. முக்கியமா நாங்க ரோட்டு கடையில தான் சாப்பிடுறோம். மக்களும் அங்க தான் சாப்பிடுறாங்க. நாங்க எல்லாம் ஒன்னு தான் சார். அப்படி இருக்க எங்களை இப்ப ரோட்டுக்கே தள்ளிடுச்சி அரசு.

நேர்காணல், படங்கள் : வினவு செய்தியாளர்கள்

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க