privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திதமிழ்நாடுகாவரி : தமிழகம் முழுவதும் மத்திய அரசு அலுவலகங்கள் முற்றுகை ! படங்கள்

காவரி : தமிழகம் முழுவதும் மத்திய அரசு அலுவலகங்கள் முற்றுகை ! படங்கள்

-

காவிரி விவகாரத்தில் தொடர்ந்து தமிழகத்தை வஞ்சித்து வரும் மத்திய அரசைக் கண்டித்து, மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடத்தினர்.

*****

சென்னையில்…

“காவிரித் தீர்ப்பில் வஞ்சகம்! மீண்டும் தமிழகத்தின் மீதான டெல்லி தாக்குதல்! பிரதமர் ஜனாதிபதி உச்ச நீதிமன்றம் அனைத்தும் தமிழகத்திற்கு எதிரானவையே! மத்திய அதிகாரத்தை ஏற்க மறுப்போம்!” என்ற முழக்கத்தின் அடிப்படையில் சென்னை அண்ணா சாலையில் இன்று பிப். 17, 2018 மக்கள் அதிகாரம் அமைப்பினர் தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

போராடிய தோழர்களை போலீசு கைது செய்து சிந்தாதிரி பேட்டை சமூக நலக் கூடத்தில் அடைத்து வைத்துள்ளது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்
சென்னை, தொடர்புக்கு : 91768 01656.

*****

தருமபுரியில்…

காவிரி தீர்ப்பில் வஞ்சகம் மீண்டும் தமிழகத்தின் மீதான டெல்லி தாக்குதல்! என்ற தலைப்பில் தமிழகம் முழுவது மக்கள் அதிகாரம் சார்பாக மத்திய அரசின் அலுவலகங்கள் முற்றுகை போராட்டம் நடந்துக்கொண்டு இருக்கின்றது.

அதன் ஒரு பகுதியாக மக்கள் அதிகாரம் தருமபுரி மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் முத்துக்குமார் தலைமையில் தருமபுரி தலைமை தபால் நிலையம் முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தில் கலந்துக் கொண்டவர்களை தருமபுரி காவல் துறை ஆய்வாலர் இரத்தினக்குமார் மாணவர்களின் சட்டையை கிழித்தும் பெண்களை இழிவாக, பேசி வலுக்கட்டயமாக கைது செய்து மண்டபத்தில் அடைத்துள்ளது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்
தருமபுரி. தொடர்புக்கு : 81485 73417.

*****

மதுரையில்…

காவிரி நதிநீர் பிரச்னையில் தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் வகையில் தீர்ப்பளித்த சர்வாதிகரி உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ராவைக் கண்டித்தும் விவசாயிகளுக்கு உரிய நீதியை தர கோரியும் குடந்தை அரசு கலை கல்லூரியில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது…
மதுரையில்…

காவிரியில் வஞ்சிக்கும் அரசை கண்டித்து மதுரை தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு மக்கள் அதிகாரம் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசு கொடுரமாகத் தாக்கி கைது செய்துள்ளது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
மதுரை.

*****

திருச்சியில்…

க்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் திருச்சியில் உள்ள தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
திருச்சி.

*****

விழுப்புரத்தில்…

விழுப்புரம் பகுதி மக்கள் அதிகாரம் சார்பில், காவிரி தீர்ப்பில் தமிழகத்தை வஞ்சிக்கும் அரசைக் கண்டித்து தலைமை தபால் நிலையம் முற்றுகையிடப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தது போலீசு.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
விழுப்புரம்.

 

  1. மதுரையில் காவிரிக்காகப் போராடிய மக்கள் அதிகாரம் தோழர்கள் 20 பேரை ரிமாண்ட் செய்வதாக போலீசு தெரிவித்துள்ளது.

  2. தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலின் தேர்தல் நடந்து முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது அதைப்பற்றி கட்டுரை எழுதலாமே

  3. முதல் ஆட்களாக களத்தில் இறங்கி போலீசிடம் அடி வாங்குவது தோழர்கள், ஆனால் ‘போராட வேறு ஆட்கள் இருக்கிறார்கள்’ என்பவனுக்கு சுற்றி கிறுக்கு கூட்டம். இப்போ கூட பாருங்க மத்த பயலுங்க வெறும் கண்டனம், எடுபிடி அரசை இறங்கு என சொல்வது போன்ற சந்தர்ப்பவாத நரிகளாகவே உள்ளனர். செயலில் இறங்கியது தோழர்கள் மட்டுமே. ஏன்டா உங்களுக்கெல்லாம் மீசை வேட்டி சட்டை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க