Thursday, January 16, 2025
முகப்புகட்சிகள்சி.பி.ஐ - சி.பி.எம்பாலேஸ்வரம் கருணை இல்லம் : பொதுப் புத்திக்கு அஞ்சும் வாசுகி !

பாலேஸ்வரம் கருணை இல்லம் : பொதுப் புத்திக்கு அஞ்சும் வாசுகி !

-

பாலேஸ்வரம் முதியோர் காப்பகம் – என்.ஜி.ஓ பாணியில் என்.ஜி.ஓக்களை எதிர்கொள்ளும் மார்க்சிஸ்ட் வாசுகி.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் பாலேஸ்வரம் முதியோர் காப்பக விவகாரத்தை இந்துத்துவ இயக்கங்கள் மற்றும் ஊடகங்கள் “பயன்படுத்தி” தூக்கிப்போட்ட பிறகு அதனை ரீ சைக்கிளிங் செய்யும் வேலையை மார்க்சிஸ்ட் கையில் எடுத்திருக்கிறது.

பாலேஸ்வரம் கருணை இல்லம்

மா.கம்யூ வாசுகி மற்றும் குழுவினரின் பாலேஸ்வரம் கருணை இல்லம் பற்றிய உண்மை அறியும் குழு அறிக்கை 09.03.2018 அன்று ‘தமிழ் இந்துவில்’ வெளியாகியிருக்கிறது. நல்லது, என்.ஜி.ஓக்கள் மற்றும் மத நிறுவனங்களால் நடத்தப்படும் சேவை மையங்களை தொடர்ந்து கண்காணிப்பதும் அதன் நோக்கங்களை ஆய்வுக்கு உட்படுத்துவதும் அவசியம் செய்யப்பட வேண்டியவைதான். ஆனால் அதனை வாசுகி மற்றும் குழுவினர் செய்திருக்கும் விதம் ஒரு எலைட் என்.ஜி.ஓ பாணியில் இருக்கிறது என்பதுதான் கவலையுற வைக்கிறது. ஒருவேளை பத்ரி சேஷாத்ரி மார்க்சிஸ்ட் கட்சியில் இருந்து அவர் இந்த அறிக்கை கொடுத்திருந்தால் அதுவே இன்னும் கொஞ்சம் நன்றாக இருந்திருக்குமோ என எண்ணத்தோன்றுகிறது.

முதல் குற்றச்சாட்டு, மனித எலும்பு விற்பனை.

மனித எலும்புக்கூடு விற்பனையும் மனித எலும்பு விற்பனையும் (மருந்து செய்யவாம்) நடக்கிறதா என குற்றச்சாட்டும் வகையிலான கேள்வியை எழுப்பியிருக்கிறார் வாசுகி. சும்மா கேட்டுவிட்டு கிளம்ப நீங்கள் என்ன எச்.ராஜாவா? மனித எலும்புக்கு என்ன சந்தை இருக்கிறது, அதனை எப்படி ஏற்றுமதி செய்ய முடியும், அதனை செய்ய ஏனைய அரசு நிறுவனங்கள் உதவி வேண்டுமே எனும் கேள்விகளோ தரவுகளோ இல்லை. ஆர்.எஸ்.எஸ் வாட்சப் தகவல்போல வாய்க்கு வந்ததை எழுதுவதற்கு உண்மை அறியும் அறிக்கை என பெயர் சூட்டமுடியாது.

ஒருவேளை மனித எலும்புகளுக்கு பெரும் சந்தை இருப்பது நிஜம் என்றால் இந்தியாவில் பிணம் எரிப்பது தடை செய்யப்பட்டு சுடுகாடுகள் அத்தனையும் அதானிக்கு தானமளிக்கப்பட்டிருக்கும். ஒரு குற்றச்சாட்டை முன்வைக்கும்போது அதற்கான அடிப்படைகளை விளக்க வேண்டாமா? பத்து ரூபாய் நாணயம் செல்லாது எனும் ஒற்றை வாட்சப் வதந்தியால் 6 மாதங்களுக்கு முன்பிருந்து இப்போதுவரைக்கும் அவற்றை செலவு செய்ய முடியவில்லை (சென்னைக்கு வெளியே). இந்த ஜமாவில் வாசுகி வகையறாக்களும் அய்க்கியமானால் எங்குபோய் முட்டிக்கொள்வது?

இரண்டாம் குற்றச்சாட்டு, கட்டாயப்படுத்தி தங்கவைக்கப்படும் முதியவர்கள்.

இதில் நிச்சயம் உண்மையிருக்கும்தான். ஆனால் அதனை அப்படியே விளங்கிக்கொள்ள வேண்டுமா என்பதுதான் கேள்வி. வீட்டில் கோபித்துக்கொண்டுவரும் முதியவர்கள் இத்தகைய இல்லங்களுக்கு வருவார்கள். ஆனால் அதன் சூழல் அவர்களை இன்னும் சங்கடப்படுத்தும் ஆகவே பலர் வீடு திரும்ப விரும்பலாம். இன்னும் சில முதியவர்கள் வீட்டு நபர்களாலேயே துரத்தப்பட்டவர்கள். அவர்களும் வீடு திரும்ப விரும்பலாம். அவர்களை திருப்பி அனுப்புவதில் ஏன் நிர்வாகம் அலட்சியம் காட்டியது எனும் கேள்வி நியாயம்போல தோன்றலாம். ஆனால் அவர்கள் வீட்டை கண்டறிவதும் பிள்ளைகளிடம் அவர்களை ஏற்றுக்கொள்ள வைப்பதிலும் பல்வேறு சிக்கல்கள் இருக்கின்றன.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி

கைவிடப்பட்ட சிறார்களையே உறவினர்களிடம் ஒப்படைக்க முடியவில்லை. இதில் முதியவர்களை எப்படி வீட்டில் சேர்ப்பது? பெரும்பாலான முதியவர்களை அரசு அமைப்புக்களே அனுப்பியிருக்கின்றன. அவர்கள் போக விரும்பி வெளியேறினாலும் எங்கே போக இயலும்? அப்படி போய் வேறு ஏதேனும் நடந்தால் அப்போதும் வேறொரு வாசுகி வந்து “ஏன் பாதுகாப்பில்லாமல் போக விட்டீர்கள்” என கேள்வியெழுப்பக்கூடும். போக விரும்பும் முதியவர்களை வலுக்கட்டாயமாக தங்க வைப்பதற்கான தேவை என எதை வாசுகி குழு கருதுகிறது?

இந்தியாவில் பணம் இல்லாத முதியவர்கள் நாயினும் கீழாகவே நடத்தப்படுகிறார்கள். அரசும் ஏனைய நிறுவனங்களும் முதியவர்களை தேவையற்ற சுமையாகவே கருதுகின்றன. முதியவர்களால் சம்பாதிக்க இயலாது, அவர்களுக்கு மருத்துவச்செலவு அதிகம். ஆனால் அவர்களுக்குத்தான் மருத்துவக் காப்பீட்டு பிரீமியம் அதிகம். ரயில் நிலையம், பஸ் நிலையம் ஏனைய அரசு அலுவலகங்கள் என எங்குமே முதியோருக்கென சிறப்பு வசதிகள் இருக்காது.

ஏற்கனவே சம்பாதித்து சேமித்த முதியவர்களுக்கு வட்டியை குறைத்து வயிற்றில் அடித்துவிட்டன வங்கிகள். ஆக அவர்களுக்கு இனி இருக்கும் வாய்ப்பு அடுத்தவரை அண்டி வாழ்வது அல்லது சாவுக்கு காத்திருப்பது. காசில்லன்னா சாவு நாயே என்பது எழுதப்படாத விதியாக உள்ள நாட்டில் முதியோர்கள் கைவிடப்படுவதும், அவர்களுக்கான (லாப நோக்கிலான) கருணை இல்லங்கள் உருவாவதும் அவைகள் தரமற்று இருப்பதும் நிகழ்ந்தே தீரும்.

நாம் இவற்றை வழக்கமாக பேசுவதில்லை. குறந்தபட்சம் பாலேஸ்வரம் சம்பவத்துக்கு பிறகாவது இதனை விரிவான விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் வாசுகி அண்ட் கோ இதனை பாலேஸ்வரம் கருணை இல்லம் எனும் வளாகத்துக்குள்ளேயே செட்டில் செய்ய முனைவது ஒரு நாசூக்கான அராஜகம்.

அடுத்த குற்றச்சாட்டு, சுகாதாரமற்ற தங்குமிடம் அவர்களுக்கு வழங்கப்பட்டது என்பது.

இது நிச்சயம் உறுதியான குற்றச்சாட்டுதான். ஆனால் இந்த குற்றச்சாட்டுக்காக யாரையேனும் தண்டிக்க விரும்பினால் நாம் நமது அரசை நடத்துவோரைத்தான் முதலில் தண்டிக்கவேண்டும். அரசு மருத்துவமனை பொது வார்டுகளை பார்த்திருக்கிறீர்களா? அங்கே தொற்று நோய் வந்தவர்களும் தொற்றா நோய் வந்தவர்களும் ஒன்றாக கொட்டப்பட்டிருப்பார்கள்.

செத்துக்கிடக்கும் நோயாளியோடு பல மணிநேரங்களை ஏனைய நோயாளிகள் இருக்க வேண்டும். குளியல் மக் கொண்டுதான் சிறுநீரை நோயாளிகள் பிடித்து வைத்துக்கொள்ள வேண்டும். புதிய நோயாளிகள் காலியாகப்போகும் படுக்கைக்கு அருகே காத்திருப்பார்கள். அனத்தலும், கசகசப்பும் நாற்றமுமே அங்கே நிரந்தரமாக குடிகொண்டிருப்பவை. செத்தால் தேவலாம் என நோயாளிகள் சிந்திக்க வேண்டும் எனுமளவுக்குத்தான் அரசு தமது மருத்துவமனை நோயாளிகளை நடத்துகிறது.

இங்கே அதுதான் ஒரு ஏழை நோயாளியை, இயலாதவனை நடத்துவதற்கான அளவீடு. உனக்கெல்லாம் இதுவே ஜாஸ்தி எனும் தர்மகர்த்தா சிந்தனை அரசின் நிர்வாக மட்டத்தில் வேர்பிடித்திருக்கிறது. அவர்கள் பாலேஸ்வரம் இல்லத்தையும் அப்படித்தான் அனுகுவார்கள். காசு கொடுத்து தங்கவைக்கப்படும் முதியவர்களும், இயலாதவர்களும்கூட இப்படித்தான் பல இல்லங்களில் நடத்தப்படுகிறார்கள்.

இறுதி குற்றச்சாட்டு விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்பது.

இதில் பிரதான குற்றவாளி அரசுதான். 5 மாதங்களுக்கு முன்னால் உரிமத்தை புதுப்பிக்கக் கோரி விண்ணப்பம் இல்லத்தின் சார்பாக வழங்கப்பட்டுவிட்டது. அதனை கிடப்பில் போட்டது அரசுதான். அங்கு தங்குவதற்கான ஆட்களை அரசு மருத்துவமனைகளும் போலீசுமே அனுப்பியிருக்கின்றன. இந்தியாவில் விதிமுறைகள் என்பவை தேவைப்படும்போது ஒருவனை சிக்க வைப்பதற்காகவும் லஞ்சம் வாங்கவுமே பயன்படுத்தப்படுகிறனவே அன்றி அவை ஒழுங்கான சேவை என்பதை இலக்காக கொண்டு பின்பற்றப்படுவதில்லை.

பிணங்களை அடக்கம் செய்யும் தலைவலியில் இருந்து தான் தப்பித்துக்கொள்ள போலீஸ் அவர்களுக்கு அனாதைப் பிணங்களை அடக்கம் செய்யும் தடையில்லா சான்றிதழ் வழங்கியிருக்கிறது. ஆனால் அப்படி வழங்கும் அதிகாரம் அவர்களுக்கு இல்லை. பாலேஸ்வரம் இல்லம் இப்போது மூடப்பட்டுவிட்டது. அனாதைப் பிணங்களை அடக்கம் செய்ய அதிகாரம் வழங்கிய அதிகாரிக்கு என்ன தண்டனை? 5 மாதங்கள் உரிமத்தை தாமதித்த அதிகாரிகளுக்கு என்ன தண்டனை? இவை குறித்து வாசுகி குழுவினரின் பரிந்துரைகள் என்னென்ன?

மேலும் சில கேள்விகள் எழுகின்றன..

அந்த இல்லத்தில் இருந்து வெளியேற விரும்பிய முதியவர்களின்பால் கரிசனம் கொண்ட வாசுகி குழு, அங்கே தங்க விரும்பிய முதியோரின் கோரிக்கை குறித்து ஏதேனும் யோசனை வைத்திருக்கிறதா?

அது ஒரு சாதாரண கருணை இல்லம். அரசின் கட்டமைப்பு பிரம்மாண்டமானது. அந்த அரசு ஒரு இல்லத்தை ஏற்று தற்காலிகமாகக்கூட நடத்த வக்கற்று நோயாளர்களை நலாப்பக்கமும் விசிறியடித்திருக்கிறது. ஆக 300 முதியவர்களைப் பராமரிக்கும் தகுதிகூட அரசுக்கு இல்லை என்பது தெளிவாகிறது. இது பற்றி மர்க்சிஸ்ட் இன்வெஸ்டிகேஷன் குழு எதுவுமே சொல்லவில்லையே, ஏன்?

ஆயிரக்கணக்கான முதியோர் காப்பகங்களுக்கான தேவை நாட்டில் இருக்கிறது. வறியவர்கள் தமது வயதான பெற்றோரை கௌரவமாக பராமரிக்க மருத்துவ உதவியும் பொருளாதார உதவியும் தேவைப்படுகிறது. அது குறித்து மா.கம்யூ எப்போது பேசும்?

காலையில் கஞ்சி, மதியம் மற்றும் இரவில் “ரேஷன்” அரிசி சாதம் ஆகியவை மட்டுமே கிடைப்பதாகவும். இட்லியை பார்த்தே பல மாதங்கள் ஆனதாகவும் புகார்கள் வந்திருப்பதாக இக்குழு சொல்கிறது. ரேசன் அரிசி சாதம் மோசமான உணவு எனில் அந்த சோற்றைத்தான் அரசு பலகோடி மக்களுக்கு தலையெழுத்தென விதித்திருக்கிறது. நாம் என்ன செய்யலாம், ரேசன் அரிசியின் தரத்தை பற்றி கவலைப்படலாமா அல்லது ரேசன் அரிசி சோறு பாலேஸ்வரம் இல்லத்தில் இருப்பதைப் பற்றி மட்டும் கவலைப்படலாமா?

இதே அழகில்தான் இங்குள்ள ஆகப்பெரும்பாலான ஆதரவற்றோர் இல்லங்கள் சோறிடுகின்றன. அவற்றை எப்போது ஆய்வு செய்யலாம்? அவற்றுக்கான மார்க்சிஸ்ட் உ.அ.குவின் தீர்வு என்ன?

இப்போதைய பிரச்சினைக்குப் பிறகு பாலேஸ்வரம் இல்ல முதியவர்கள் பல இல்லங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறார்கள். அந்த காப்பகங்கள் நிலை குறித்து மா.கம்யூ எப்போது ஆய்வு செய்யும்?

இதுவரைக்கும் பாலேஸ்வரம் இல்லத்துக்கு ஆட்களை அனுப்பியவர்கள் (போலீஸ், அரசு மருத்துவமனை) இனி எங்கே அனுப்புவார்கள். அரசின் அந்த வட்டாரங்களை எப்போது வாசுகி குழுவினர் ஆய்வு செய்வார்கள் என்பதை அறிய ஆவலாய் இருக்கிறேன்.

வாசுகி குழுவினரின் நோக்கத்தையும் கண்ணோட்டத்தையும்கூட குறை சொல்ல வேண்டாம். அவை highly subjective. ஆனால் அதில் ஹீரோயிசம் மட்டுமே இருப்பதுதான் சிக்கல். இந்திய சமூக பொருளாதார அமைப்பை பீடித்திருக்கும் எண்ணற்ற நோய்களின் ஒரு அறிகுறிதான் பாலேஸ்வரம் இல்லம் மற்றும் அதன் விதிமீறல்கள். அதனை அற உணர்வோடும் குறைந்தபட்ச முழுமையோடும் மார்க்சிஸ்ட் அனுகியிருக்க வேண்டும். ஆனால் வாசுகியாரின் அறிக்கை இந்திய அரசுக் கட்டமைப்பின் ஒரு சிரங்கோடு செல்ஃபி எடுத்து போட்டுக்கொண்டது போல இருக்கிறது. ஆகவே அதனை அன்லைக் செய்ய வேண்டிய அவசியம் எழுகிறது.

நன்றி : வில்லவன்

 

  1. இதில் சிபிஎம் மீதான விமர்சனம் என்பதிலேயே அதிக கவனம் குவிக்கப்பட்டிருக்கிறது. முதியோர் நலம்/பராமரிப்பு, ஆதரவற்றோர் பராமரிப்பு, அவர்களின் உறுப்பித்திருட்டு குறித்த கண்ணோட்டம், மருத்துவ ஆய்விதழ்கள் வழியான தகவல்களைப் பற்றிய பரிசீலனையுடன்+ சோசலிச அரசின் கவனிப்புநோக்கு ஆகியவை இல்லாமல் இந்த விவகாரத்தைப் பார்க்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் அந்தக் காப்பகத்திலிருந்து திருப்பிவிடப்பட்டவர்கள் அனைவரும் ஏன் 14 தனியார் காப்பகங்களுக்கே அனுப்பப்பட்டார்கள் என்பதை ஒரு வாக்கியத்திலாவது குறிப்பிட்டிருக்கலாம்.

  2. புனித வளனார் கருணையில்லம் நிறுவனம் தங்களை எவ்வாறு அடையாளப் படுத்தி இருக்கிறார்கள்?
    சாகும் தருவாயில் கைவிடப் பட்டவர்களின் இல்லம் (Home for Dying Destitute) என்று தானே! புனித வளனார் கருணையில்லம் நிறுவனம் எதையுமே மறைக்க வில்லையே! தங்கள் வெப்சைட்டில் ( http://www.stjosephshospices.com/web/index.php) எவ்வாறு பெட்டகத்தில் இறந்தவர்கள் அடக்கம் செய்யப் படுகிறார்கள் என்பதை படத்துடன் வெளியிடிருக்கிறார்களே! YouTube கூட இது பற்றிய காணொலிகள் (videos) உண்டு:
    https://youtu.be/zwhLvMgDxuI
    https://youtu.be/9gGDqbRl5m0
    அங்கு இருக்கும் பலர் (50%) படுக்கையில் கழிப்பார்கள், இதை சுத்தம் செய்ய எத்தனை பேர் முன் வருவார்கள்.?
    சிலுவை என்பது கருணையின் குறியீடா ?
    இந்த கருணை இல்லத்தை நடத்துவது ஒரு கிறிஸ்தவ நிறுவனம் . அதன் பொறுப்பாளர் தாமஸ் என்ற பாதிரியார். பல கிளைகளைக் கொண்ட நிறுவனம்.ஆனால் அனைத்தையும் விட அதிர்ச்சி அளிப்பது அந்த முதியவர்களின் இறந்த உடல்கள் சுவற்றில் கல்லறை கட்டி புதைக்கும் முறை. அப்படிப் புதைப்பதற்கு ஏதும் காரணம் இருக்கிறதா என்பது இனிதான் தெரியும். எலும்புகளை வெளிநாட்டில் விற்பதற்கு ஆக இப்படிப் புதைக்கப்படுகிறது என்று ஒரு சந்தேகம் எழுந்துள்ளது . முறையான விசாரணை தான் உண்மையை உலகுக்கு சொல்ல முடியும்.
    சிலுவைச் சின்னம் பொறிக்கப்பட்ட இடங்களில் தவறுகளோ முறைகேடுகளோ நடக்காது என்று யாராவது நம்பினால் அது அறியாமை .இந்த இல்லத்தில் தவறுகள் நிரூபிக்கப் பட்டால் அரசுகள் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களது அனைத்து இல்லங்களும் ஆய்வு செய்யப்பட வேண்டும்.எந்த குற்றத்தையும் சிறுபான்மை சமூகத்தினர் செய்தால் அவர்கள் தண்டிக்கப் படக்கூடாது என்பது எங்கள் கருத்தல்ல. நாங்கள் குறிப்பிட்டு எழுதாத ஒவ்வொன்றையும் ஆதரிப்பதாக யாரும் பொருள் கொள்ளத் தேவையில்லை.
    ஒன்றை நாம் நினைவில் கொள்ள வேண்டும். முதியோர்களை வைத்து இத்தகைய இல்லங்களை தவறாக நடத்தும் கொடியவர்களோடு அந்தப் பெரியவர்களை இந்த நிலைக்கு ஆளாக்கிய குடும்பத்தினரும் தண்டிக்கப் பட வேண்டும்.

    அடுக்குமாடி கல்லறை முறை என்றால் என்ன?
    தற்போது ஒரு உடலை மண்ணில் புதைத்தால் அடுத்த 14 ஆண்டுகளுக்குப் பிறகுதான்அந்த இடத்தில் இன்னொரு உடலைப் புதைக்க முடியும்.தற்போதைய அடுக்குமாடி கல்லறை முறையில் இதற்கு அவசியம் இல்லை. ஒருஉடலை புதைத்தால் 2 ஆண்டுகளிலேயே அடுத்த உடலை அந்த இடத்தில் புதைக்கமுடியும்.இதற்கு வால்ட் முறை என்று பெயர். அதன்படி 30 அடி நீளம், 8 அடி அகலம், 10 அடிஉயரத்தில் சிமென்ட் அறை அமைக்கப்படுகிறது. இந்த அறை குறுக்குவாக்கில் 15பிரிவாக பிரிக்கப்படும்.ஒவ்வொரு பிரிவும் மேலும், கீழுமாக 5 அடுக்குகளாக பிரிக்கப்படும். இப்படியாகமொத்தம் 75 வால்ட்டுகள் அதாவது கல்லறைகள் அமைக்கப்படும்.
    ஒவ்வொரு வால்ட்டின் உட்புறமும் காற்றுப் புகாத அளவக்கு கதவுகளும்அமைக்கப்படும்.
    இந்த வால்ட்டுகளுக்குப் பின்புறம் 8 அடி இடைவெளி விட்டு இதேபோன்றுஇனனொரு வால்ட் கல்லறை அமைக்கப்படும். இதிலும் 75 கல்லறைகள் இருக்கும்.இரண்டு வால்ட் கல்லறைகளுக்கும் இடையே முழுவதும் சிமென்ட்டால் ஆன கிணறுஅமைக்கப்படும்.

    மொத்தம் 150 கல்லறைகளும் ஒரு கிணறும் சேர்ந்து பிளாக் எனப்படும்.
    இந்த 150 கல்லறைகளில் ஒரு வால்ட்டுக்கு ஒரு உடல் என மொத்தம் 150 உடல்களைவைக்க முடியும். 2 ஆண்டுகள் கழித்து அந்த வால்ட் தேவைப்படுமானால் அதன்கதவுகள் திறக்கப்படும்.
    2 ஆண்டுகள் ஆகியும், அழுகாமல் உள்ள உடலின் மீதப் பகுதிகள் அகற்றப்பட்டுஅருகே உள்ள கிணற்றில் விடப்படும். பின்னர் அந்த வால்ட் சுத்தம் செய்யப்பட்டுஅங்கு வேரு ஒரு உடலை வைக்கலாம்.

    இதை பரப்பிய மீடியாக்களே அதைப்பற்றி மீண்டும் வாய்திரக்கவில்லை விவாதங்கள் நடத்தவில்லை இதை வலைத்தளங்களில் அதிகம் பரப்புவது ராஜா வகையினர்தான்!

    மேலே நான் சொன்னது போல் இல்லாமல் கருணை இல்லத்தில் ஏதேனும் தவறுகள் தடந்திருந்தால் அவர்கள் தன்டிக்கப்படவேன்டியவர்களே!

    Thanks
    A.Vijay

  3. வினவு கொடுக்கும் விளக்கம் அந்த பாலேஸ்வரம் முதியோர் காப்பகத்து நிர்வாகிகள் கொடுக்கும் விளக்கம் போலவே இருக்கு…! அவர்கள் கூட இந்த அளவுக்கு போல்டா பேசுவார்களா என்று தெரியவில்லை…!
    தொடர்ந்து பேசுவோம்…..

  4. “வாசுகி – ஒரு நாசூக்கான அராஜகம்.”
    ஈழத்திற்கு எதிரா இந்தம்மா ஆத்துன ஆத்தெல்லாம் மறக்க முடியுமா!!
    மீண்டும் அம்பலப்படுத்துவற்கு நன்றி.

  5. It is a kind of hospice center with sophisticated burial setup .
    What is the problem if they sold bones/body parts? As long as they feed and take care of the old till their natural death, why is that a problem? It is a win-win setup. Old gets the needed care and Charity gets money feed to the old and run the organization.

    If they have killed for economic benefit instead of waiting for natural death then there is an issue.
    It is not mentioned as an accusation . Am I missing something?

  6. இந்த என் ஜீ ஓ அமைப்பை சந்தேககண்ணுடன் பார்க்கவே கூடாது என்ற தோரணையில் தான் இந்த கட்டுரையை எழுதியிருக்காங்க…அந்த இல்லத்துக்கு இந்த ஆண்டு அனுமதி வழங்கபடவில்லை என்றால் அதில் என்ன வில்லங்கம் இருக்கும், என்ன பேரன்கள் அரசு அதிகாரிகள் செய்துகிட்டு இருப்பாங்க என்றும் யோசிக்கவேயில்லை இந்த கட்டுரை ஆசிரியர்..அங்கே அந்த கல்லறை அமைப்பில் பிணங்களை புதைக்க போலிஸ் கொடுத்த அனுமதி செல்லாது என்றும் தெளிவாகவ தானே சொல்றாங்க தமிழ் ஹிந்துவில்….

    “”””கருணை இல்லத்தில் உள்ள அடுக்குக் கல்லறை அமைப்புக்கு அனுமதி வாங்கியிருப்பதாக பாதிரியார் தாமஸ் கூறினார். ஆவணங்களைப் பார்த்ததில் 2011-ல் மாவட்ட காவல் கண்காணிப்பா ளர் (எஸ்.பி.) தடையில்லா சான்றிதழ் அளித்ததை அனுமதி என்று கூறிக்கொண்டிருக்கிறார் என்பதை புரிந்துகொள்ள முடிந்தது.

    எஸ்.பி.க்கு பாதிரியார் தாமஸ் அனுப்பிய மனுவில், இல்லத்தில் தங்கியிருப்பவர்கள் மட்டுமின்றி, வழியில் இறந்துபோனால் அந்த சடலத்தையும் கொண்டுவந்து அடக்கம் செய்ய அனுமதி கோரியுள்ளார். இந்த மனுவை மேல் நடவடிக்கைக்காக மாவட்ட ஆட்சியருக்கு எஸ்.பி. அனுப்பியுள்ளார். அதன்பிறகு, எஸ்.பி. நேரடியாக பாதிரியாருக்கு ‘தடையில்லா சான்றிதழ்’ போன்ற ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளார். இதுபோன்ற சான்றிதழ் அளிக்க எஸ்.பி.க்கு அதிகாரம் இல்லை என்பதை மாவட்ட ஆட்சியரே ஒப்புக் கொண்டுள்ளார். ஒரு தனியார் அமைப்பு, பொதுமக்களை அடக்கம் செய்யும் கல்லறையை தம் நிறுவனத்துக்குள் அமைத் துக் கொள்ள எப்படி அனுமதி வழங்க முடியும்?”””””-தமிழ் இந்துவில்…

    அடுத்து பார்த்தால் கட்டாயப்படுத்தி தங்கவைப்பு விசயத்தில்….

    “””விருப்பம் இல்லாதவர்கள்கூட நிர்ப்பந்தப்படுத்தி அழைத்து வரப்படுகின்றனர். வீட்டுக்குப் போக விரும்புபவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது என்றும் தெரியவருகிறது. சமீபத்தில் ஆம்புலன்ஸில் இருந்து மீட்கப்பட்ட பெண்மணியும், ‘‘வீட்டில் கோபித்துக் கொண்டு வந்து கொண்டிருந்தேன், என்னைப் பிடித்து ஆம்புலன்ஸில் ஏற்றிவிட்டனர். இறக்கி விடுங்கள் என்றாலும் கேட்கவில்லை’’ என்று கூறியது ஊடகங்களில் வெளியாகி இருந்தது.

    கோபிச்செட்டிப்பாளையத்தில் இருந்து வந்த ஒருவர், அரசு அதிகாரி ஒருவரிடம் செல்போனை வாங்கி, வீட்டுக்கு பேசினார். எங்கள் கண் முன்னாலேயே, ‘நான் இந்த இடத்தில் இருக்கிறேன், வீடு திரும்பி விடுவேன்’ என அவர் கூறியதைக் கேட்டோம். ஒரு முதியவர், ‘‘சளி அதிகம் என்பதால் தாம்பரம் சானடோரியம் சென்றுவிட்டு திரும் பிக் கொண்டிருந்தேன், என்னைப் பிடித்து இங்கு அழைத்து வந்துவிட்டனர். திரும்பிப் போக அனு மதிக்கவில்லை’’ என்றார்.”””- தமிழ் இந்து…

    தொடரும்….

  7. மனித எலும்புகளை விற்கும் விசயத்தில்….. பாதிரி தாமசை செருப்பல அடிச்சி தானே விசாரணை செய்து இருக்கணும்…!

    மனித எலும்புகளை அமெரிக்காவில் விற்க ஏதும் தடை இல்லை என்ற செய்தியின் அடிபடையில் பாருங்க விசயத்தின் பரிமாணம் புரியும். Native American Graves Protection and Repatriation Act of USA என்ன சொல்லுது என்றால் மனித எலும்புகளை ஏற்றுமதி செய்யவும், இறக்குமதி செய்யவும் யாதொரு தடையும் இல்லை அமெரிக்காவில் என்று சொல்லுது.

    மேலும்….India has long been the world’s primary source of bones used in medical study, renowned for producing specimens scrubbed to a pristine white patina and fitted with high-quality connecting hardware. In 1985, however, the Indian government outlawed the export of human remains, and the global supply of skeletons collapsed.—

    Now, 22 years after India’s export ban, there are signs that the trade never ended. Black-market vendors in West Bengal continue to supply human skeletons and skulls using the time-honored method: Rob graves, separate soft flesh from unyielding calcium, and deliver the bones to distributors — who assemble them and ship them to dealers around the globe.

    https://www.wired.com/2007/11/ff-bones/

  8. வினவு பாதிரி தாமசுக்கு வக்காலத்து வாங்குவது எவ்வளவு கேவலம் என்று தெரியலையே! அந்த இல்லத்தில் உள்ளவர்கள் விருப்பத்தின் பேரில் வெளியேறுகின்றேன் என்றால் கூட விடமாட்டேன் என்றால் அதன் அர்த்தம் என்ன? வேன் சம்பவம் நடந்த அன்று அந்த மூதாட்டியை கடத்திகிட்டு வந்து இருக்கானுங்க…. அவிங்க காப்பாத்துங்க காப்பாத்துங்க என்று க்த்தியபின் தான் ஊர்மக்கள் அந்த வேனை மறித்து போராடியிருகங்க…! எதுக்கு? இப்படி? செத்தவங்க பொணம் வேணும் அந்த பாதிரிக்கு பணம் சம்பாரிக்க தானே? வேறு எதுக்கு சாவும் தருணத்தில் உள்ளவர்களை அனுமதி வாங்காத கல்லறை அமைப்பில் இந்த பாதிரி வைக்க வேண்டும்? ஆதாயம் இல்லாமலா இப்படி செய்யறான் அந்த பாதிரி?

  9. இது வினவின் பதிலாக தெரியவில்லை, சிபிஎம் பற்றி வில்லவன் எழுதியதை இங்கே பதிப்பித்துள்ளார்கள்.

  10. அனாதைகளை உருவாக்கும் இந்த சமூக அமைப்பை பற்றி கண்டு கொள்ளாமல், அனாதை இல்லத்தை ஆய்வு செய்ய சென்ற சிபிஎம் கட்சியின் நடவடிக்கை முட்டைக்கு மயிர் பிடுங்குவதற்கு சமமானது.
    இவ்வளவு பிரச்சனை வந்த பின்னர் பாதிரியார்கள் இல்லத்தை மூடி விட்டு, மாநில ஆர்.எஸ்.எஸ். அரசிடமும், வழக்கு நடத்தும் கல்யாணராமனிடமும் கையளித்து செல்லலாம்.
    இல்லம் நடத்திய பாதிரியார்கள் மீது குற்றம் இருந்தால், இவர்களின் சட்டபடி நடக்கட்டுமே.

  11. மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மீதானா வெறுப்புணர்வே கட்டுரை முழுவதும் தூவப்பட்டிருக்கிறது .வாழ்த்துக்கள் வினவு.

  12. மார்க்சிஸ்ட் கட்சியின் மீதான விமர்சனம் என்று நீங்கள் பார்ப்பதைவிட சொல்லியிருக்கும் கருத்துக்களை மீண்டும் படியுங்கள்….

    ஒரு ஆய்வு நடத்தி முடிவுகளை வெளியிடும் பட்சத்தில் குறைந்த பட்ச நேர்மை கூட வெளிப்படவில்லை என்பது தான் இங்கே அழுத்தமாகச் சொல்லப்பட்டிருக்கிறது…. ஒரு இந்து பத்திரிக்கையாளருக்கும், சிபிஎம் பத்திரிக்கையாளருக்கும் வித்தியாசம் இருக்க வேண்டுமா இல்லையா என்பது தான் விமர்சனம்….

  13. ராஜா , என்னுடைய பின்னுட்டங்களை படித்தீர்கள் அல்லவா? இப்படி பொதுவாக பேசுவதனை தவிர்த்து குறிப்பாக்க பதில் அளிக்க முயற்சிக்கவும். ஏன் அங்கே முதியவர்கள் கடத்தபடுகின்றார்கள்? ஏன் அங்கே உள்ள முதியவர்கள் வலுகட்டாயமாக வைத்து இருக்க படுகின்றார்கள்? என்ன நோக்கம் பாதிரி தமாசுக்கு? இயற்கையான சுடுகாடுகளை தவித்தது எதுக்கு தனிசிறப்பான சமாதிகள்? இதற்க்கு எல்லாம் பதில அளிக்காமல் உள்ள வினவு கட்டுரை பற்றி உங்க கருத்து என்ன? மனித எலும்புகள் இந்தியாவில் இருந்து கடத்தபடுவது அதனை கள்ள சந்தையையில் விற்பது எல்லாம் உண்மை தானே? எப்படி எல்லாம் கேள்வி கேட்டால் முதியோர் பிரச்சனையை சமுக பிரச்சனையாக பாருங்க என்று கூறுவது எப்படி நியாயம் ? முதியோர் பிரச்னை சமுக பிரச்சனையாக இருந்தாலும் அதுக்காக அவர்கள் வலுகட்டாயமாக அங்க வைக்கப்படுவது ,இறந்த மனிதர்களின் எலும்புகள் சேகரிக்கப்டுவ்து எல்லாம் எப்படி நியாயம்? அடிபடையான கேள்வி… அதே ஊரில் சுடுகாடுகள், மற்றும் இடுகாடுகள் இருக்க எதுக்கு தனி சிறப்பான சவ அறைகளை செய்து வைத்து உள்ளார்கள் அந்த முதியோர் விடுதியில்? மற்றும் ஒரு கேள்வி…. இப்படி செய்தது ஒரு ஹிந்த்டுத்டுவா ஹமாந்தா புரே (கற்பனை பெயர் தான்)சாமியாரின் ஆசிரமாக இருந்தால் இப்படி தான் சமுக பிரச்சனையாக பாருங்க என்று சொல்லிட்டு போயிடுவோமா? எவனா இருந்தா என்ன சாமியாரா இருதால் என்ன சன்யாசியாக இருந்தால் என்ன ? இது போன்ற குற்றங்களை செய்தவனை செருப்பால் தானே அடிக்கணும்?

  14. அந்த முதியோர் இல்லத்தில் மனித எலும்புகள் கள்ள சந்தையில் விற்கப்படுகின்றன என்பதற்கு பிரைமரி எவிடன்ஸ் என்ன என்றால் முதியோர்கள் அங்கே கடத்தபட்டு அங்கே வலுகட்டாயமாக வைக்கப்டுவ்தும் , தனி சிறப்பான சவ அறைகளை அரசு அனுமதியுடனோ, அல்லது இல்லாமலோ கட்டிவைத்து இருப்பது தான்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க