அன்பார்ந்த உழைக்கும் மக்களே!
கடந்த பத்தாண்டுகள் இந்தியாவை சூறையாடிய பாசிச மோடி-அமித்ஷா கும்பல், மூன்றாவது முறையாக இந்த நாடாளுமன்றத் தேர்தலில் 370 இடங்களில் வெற்றியடைந்து, மூன்றில் இரண்டு பங்கு தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துவிடலாம் என்று கருதிக் கொண்டிருக்கிறது.
இதற்காக அரசு அதிகாரத்தில் ஊடுருவியிருக்கும் ஆர்.எஸ்.எஸ். கும்பலைப் பயன்படுத்தி பல்வேறு சதி நடவடிக்கைகள், மோசடி, முறைகேடுகளில் ஈடுபட்டு வருகிறது.
தேர்தல் கமிசன், அமலாக்கத்துறை மூலமாக எதிர்க்கட்சிகளுக்கு நெருக்கடி கொடுப்பது; மின்னணு இயந்திரங்கள் மூலம் மோசடி செய்வது; வடமாநிலங்களில் இந்துமதவெறியையும் தென்மாநிலங்களில் வளர்ச்சியையும் முன்னிறுத்தி மக்களை ஏமாற்றுவது; மிகைப்படுத்தப்பட்ட செய்திகளையும் பொய் செய்திகளையும் பரப்பி மோடியை தேசியத் தலைவராகக் காட்டுவது; சங்கப் பரிவார கும்பல் மூலமாக வதந்திகளைப் பரப்புவது, இசுலாமிய வெறுப்புப் பிரச்சாரங்களைத் தீவிரப்படுத்துவது, திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலான அடுத்தடுத்த தொடர் நடவடிக்கைகள் மூலமாக மக்கள் மீதும் எதிர்க்கட்சிகள் மீதும் பல்வேறு தாக்குதல்களைத் தொடுப்பது, வேறெதையும் சிந்திக்கவிடாமல் அச்சத்திற்குள்ளாக்குவது போன்றவை மோடி-அமித்ஷா கும்பலின் பாசிச நடவடிக்கைகளுக்கு சில சான்றுகள் மட்டுமே.
இப்படிப்பட்ட பாசிசக் கும்பலை தேர்தலில் வீழ்த்துவது எப்படி என்பது குறித்து மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, (மாநில ஒருங்கிணைப்புக் குழு) மக்கள் அதிகாரம் ஆகிய புரட்சிகர அமைப்புகள் சார்பாக சிறுநூல் கொண்டுவரப்பட்டது. அது ஜனநாயக சக்திகள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று மூன்றாவது பதிப்பைக் கண்டுள்ளது.
இச்சிறுநூல் பலரிடமும் சென்று சேர வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு நாங்கள் இதனை மின்னிதழாக PDF வடிவில் வழங்குகிறோம்.
PDF டவுண்லோடு செய்ய கீழே உள்ள இணைப்பை அழுத்தவும்..
இணைப்பு 1
பாசிச பா.ஜ.க-வை தேர்தலில் வீழ்த்துவது எப்படி? (PDF வடிவில்) Link 1
இணைப்பு 2
பாசிச பா.ஜ.க-வை தேர்தலில் வீழ்த்துவது எப்படி? (PDF வடிவில்) Link 2
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube