28.02.2026

தில்லி ஜே.என்.யு மாணவர்கள் மீதான பி.ஜே.பி போலீசின்
அராஜக நடவடிக்கையை எதிர்த்து முறியடிப்போம்!

பத்திரிகைச் செய்தி

திக்கச் சாதி வெறி பிடித்த பல்கலைக்கழக துணைவேந்தரை நீக்க வேண்டும், தேர்வுக் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லி ஜே.என்.யு மாணவர்கள் தொடர்ந்து போராடி வந்தனர்.

போராடிய ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீது தில்லி போலீஸ் கடும் தாக்குதல் நடத்தி 51 பேரை சட்டவிரோதமாகத் தடுத்து அவர்களைச் சித்திரவதை செய்துள்ளது. மேலும் தடுத்து வைக்கப்பட்டவர்களில் 14 பேரை நீதிமன்ற காவலிலும் அடைத்துள்ளது.

நேற்றைய தினம் காவலில் அடைக்கப்பட்ட 14 பேருக்கும் பிணை கிடைத்திருக்கிறது. பல்கலைக்கழக மாணவர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி மாநில கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிடச் சென்ற போதுதான் மாணவர்கள் சட்டவிரோதமாகத் தடுத்து நிறுத்தப்பட்டு அடைக்கப்பட்டனர். மாணவிகள் அனைவருமே போலீசால் கடும் தாக்குதலுக்கு உள்ளானது மட்டுமின்றி அவர்களது உடைகளும் கிழிக்கப்பட்டதாக மாணவர் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். பல்கலைக்கழக மாணவர்கள் கொண்டு சென்ற அண்ணல் அம்பேத்கருடைய படத்தை போலீசே திட்டமிட்டு அடித்து உடைத்தும் உள்ளது.

மேலும் பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீசு அராஜகமான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக ஜே.என்.யு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கமும் தெரிவித்துள்ளது. மாணவர்களின் ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டத்தினை திட்டமிட்டுச் சீர்குலைத்து இதனை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு ஜே.என்.யு பல்கலைக்கழக மாணவர்களை போலீசு அடக்கி ஒடுக்கியுள்ளது.

மோடி – அமித்ஷா பாசிச கும்பலின் இந்து ராஷ்டிர நடவடிக்கைகளுக்கு எதிராகத் தொடர்ந்து போராடிவரும் சக்திகளில் முதன்மையானவர்கள் பல்கலைக்கழக மாணவர்கள். அம்மாணவர்கள் மீது தொடர்ந்து பாசிச மோடி அரசு தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாகவே மேற்கண்ட நடவடிக்கைகளையும் நாம் பார்க்க வேண்டி உள்ளது.

இதை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது. ஜே.என்.யு பல்கலைக்கழக மாணவர்கள் மீது போடப்பட்ட அனைத்து பொய் வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் என்றும் ஆதிக்கச் சாதி வெறி பிடித்த பல்கலைக்கழகத் துணைவேந்தர் பணி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்றும் அண்ணல் அம்பேத்கரின் படத்தைத் திட்டமிட்டு அடித்து உடைத்த போலீஸ்காரர்கள் மற்றும் போலீஸ் உயரதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக் கொள்கிறது.


தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலப் பொதுச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்,
தமிழ்நாடு – புதுவை.
9962366321

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க