மக்கள் அதிகாரக் கழகத்தின் ஐந்தாவது பொதுக்குழு கூட்டம் மே 24 அன்று உற்சாகமாக நடந்து முடிந்தது. அதனையொட்டி மே மாத தொடக்கத்தில் ம.அ.க-வின் மாவட்ட செயற்குழு கூட்டங்கள் நடத்தப்பட்டன. அக்கூட்டங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
சென்னை மாவட்ட தீர்மானங்கள்:
1. பல் மருத்துவர்கள் தங்களுக்கான பணி நிரந்தரம் வேண்டி போராடி கொண்டிருக்கின்றனர். 4000 மருத்துவர்கள் இருக்க வேண்டிய இடத்தில் வெறும் 478 மருத்துவர்கள் தான் இருக்கின்றனர். அந்த 478 மருத்துவர்களும் பல ஆண்டுகளாக தற்காலிக மருத்துவர்களாக பணியாற்றிவருகிறார்கள். இந்திய பல் மருத்துவர்கள் ஆணையத்தின் படி 20 பேருக்கு ஒரு மருத்துவர் இருக்க வேண்டும் ஆனால் இங்கு ஒரு மருத்துவர் 50 பேருக்கு மருத்துவம் பார்க்கிறார். அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களில் பல் மருத்துவர்களை நியமனம் செய்ய வேண்டும், பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் பல் மருத்துவர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும். தற்காலிக பணியாளர்களுக்கு சிறப்பு தேர்வு நடத்தி பணி நிரந்தரமாக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மே மாதம் சென்னையில் நடத்திய பல் மருத்துவர்களின் போராட்டத்தை மக்கள் அதிகாரக் கழகம் ஆதரிக்கிறது. அவர்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுமென தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறோம்.
2. ஆவடி அருகே வெங்காயம் ஏற்றுமதி நிறுவனத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த 2 பேர் தொட்டிக்குள் விழுந்து இறந்துள்ளனர். கழிவு நீரை அகற்றுவதற்காக 4 பேரை நிறுவனம் பணியில் ஈடுபடுத்தியுள்ளனர். 4 பேரும் தொட்டிக்குள் இருக்கும் கழிவு நீரை இரும்பு ஏணி மூலம் உள்ளே இறங்கி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். திடீரென அதில் வேலை செய்த விஜய் மற்றும் அருண் ஆகியோர் உள்ளே விழுந்து உயிரிழந்துள்ளனர். சட்ட விரோதமாக அந்த வெங்காய ஏற்றுமதி நிறுவனம் தொழிலாளர்களிடம் வேலை வாங்கியுள்ளது. அவர்களை சட்டப்படி தண்டிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு முறையான இழப்பீட்டை வழங்க வேண்டும்.
மலக்குழி மரணங்களை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமல் இருக்கும் ஆவடி மாநகராட்சியை மக்கள் அதிகாரக் கழகத்தின் சென்னை மாவட்டத்தின் சார்பாக வன்மையாக கண்டிக்கின்றோம்.
இப்படி சென்னையில் தொடர்ந்து விஷவாயு தாக்கி பலர் உயிரிழந்து வருகின்றனர். இதை தடுப்பதற்கு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறோம்.
3. ஆவடியில் பட்டாபிராம், கரியப்பா நகரில் குப்பையை உரமாக மாற்றும் உரக்கிடங்கு அமைத்தால் சுகாதார சீர்கேடு ஏற்படும் என சுற்றுவட்டார மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகின்றனர். குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் உரக்கிடங்கு அமைத்தால் சுகாதார சீர்கேட்டால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள். ஏற்கனவே சாலை, குடிநீர், கால்வாய் என அடிப்படை வசதிக்காக மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் செவி சாய்க்காத ஆவடி மாநகராட்சி. மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் உரக்கிடங்கு திட்டத்தை அமல்படுத்துவது ஏன்? எனவே ஆவடி மாநகராட்சி அதிகாரிகள் இத்திட்டத்தை உடனே கைவிட வேண்டும் என்ற மக்கள் கோரிக்கையை மக்கள் அதிகாரக் கழகம் சென்னை மாவட்டம் ஆதரிக்கிறது.
4. சென்னை மாநகராட்சி ஆலந்தூர் மண்டலத்திற்கு உட்பட்ட முகலிவாக்கத்தில், 20க்கும் மேற்பட்ட பூங்காக்கள் உள்ளன. நந்திதி தெருவில் உள்ள மாநகராட்சி பூங்கா பராமரிப்பின்றி படுமோசமாக இருக்கின்றது. பூங்காக்களை சுற்றி கொட்டப்படும் குப்பை கழிவுகளால் அசுத்தமாக மாறி வருகிறது. சமீபத்திய கோடை மழையால் அதிலிருந்து துர்நாற்றம் அடிக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, பூங்காக்களை தூய்மையாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கையை மக்கள் அதிகாரக் கழகத்தின் சென்னை மாவட்டத்தின் சார்பாக வலியுறுத்துகிறோம்.
5. மாநகர் போக்குவரத்து பணிமனைகளில் அலுவலகப் பணிப்பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களில் உரிய பணியாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கத்தினர் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுமென மக்கள் அதிகாரக் கழகத்தின் சென்னை மாவட்டத்தின் சார்பாக வலியுறுத்துகிறோம்.
6. சென்னை மாநகராட்சி நிர்வாகம் பிஎஸ் என் எல் நிறுவனத்தில் இருந்து 3000 சிம் கார்டுகளையும் தனியார் நிறுவனமான ஏர்டெல் சேவைக்கு மாற்றியுள்ளது. பி.எஸ்.என்.எல் சேவை சரியாக கிடைக்கவில்லை எனவும் எழுத்துப்பூர்வமாகக் கடிதம் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. இணைய வேகமும் சீராக இல்லை என்று சென்னை மாநகராட்சி குற்றம் சாட்டுகின்றனர். பி.எஸ்.என்.எல் அதிகாரிகளோ போதிய உள்கட்டமைப்பு வசதிகள் எங்களிடம் இல்லை என்கின்றனர். இப்படி திட்டமிட்டே அரசு தொலைத்தொடர்பு நிறுவனத்தை ஊத்தி மூடி தனியார்மயத்தை திணிக்கும் ஒன்றிய பாசிச மோடி அரசை வன்மையாக மக்கள் அதிகாரக் கழகம் கண்டிக்கிறது. பொதுத் துறை நிறுவனங்களை பாதுகாக்க போராட்டங்களைக் கட்டியமைப்போம்.
7. சாதாரண கைப்பேசி வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே மாதாந்திர பயண அட்டை வழங்கப்படும் என சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. ஸ்மார்ட் கைப்பேசி வைத்திருக்கும் அனைவரும் சென்னை ஒன் செயலி வாயிலாக மாதாந்திர பயண அட்டையை பதிவிறக்கம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பணமில்லா பரிவர்த்தனை என்று மா.போ.கழகம் கூறினாலும், ஊழியர்களின் எண்ணிக்கையை ஒழித்துக்கட்டும் தனியார்மயத்திற்கு வழிவகுக்கும். இதை மக்கள் அதிகாரக் கழகத்தை வன்மையாகக் கண்டிக்கிறது. பழைய முறையிலேயே பயண அட்டை வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறது.
இவண்,
மக்கள் அதிகாரக் கழகம்,
சென்னை மாவட்டம்.
7358482113
***
காஞ்சிபுரம் மாவட்ட தீர்மானங்கள்:
1. ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் சிப்காட் பகுதியில் அமைய இருக்கும் நிறுவனங்களுக்கு உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க காஞ்சிபுரம் மாவட்ட சார்பாக ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
2. காஞ்சிபுரம் டு வந்தவாசி நெடுஞ்சாலையில் பாலாற்றின் குறுக்கே அமைந்துள்ள உயர்மட்ட பாலம் மிகவும் சேதம் அடைந்து தினம்தோறும் விபத்து வாகனப் பழுது ஏற்பட்டு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது இதனால் பள்ளி மாணவர்கள் வேலைக்குச் செல்வோர் மருத்துவமனைக்குச் செல்பவர்கள் என பலரும் பெரும் பாதிப்புக்கு உள்ளார்கள் உடனடியாக போர்க்கால அடிப்படையில் பாலத்தைச் செப்பனிட மாவட்டம் சார்பாக தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது
3. காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள கழிப்பறைகள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு கட்டண கொள்ளையிலும் சுகாதாரமற்ற நிலையில் இயங்கி வருகிறது கோயில் நகரம் என போற்றப்படும் காஞ்சிபுரத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து போகும் இப் பேருந்து நிலையத்தில் கட்டண கொள்ளை தடுக்கவும் மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக சுகாதாரமான இலவச கழிவறைகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என மாவட்டத்தின் சார்பாகத் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
இவண்,
மக்கள் அதிகாரக் கழகம்,
காஞ்சிபுரம் மாவட்டம்.
9042746881
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads





