மக்கள் அதிகாரக் கழகத்தின் ஐந்தாவது பொதுக்குழு கூட்டம் மே 24 அன்று உற்சாகமாக நடந்து முடிந்தது. அதனையொட்டி மே மாத தொடக்கத்தில் ம.அ.க-வின் மாவட்ட செயற்குழு கூட்டங்கள் நடத்தப்பட்டன. அக்கூட்டங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

மதுரை மேற்கு மாவட்ட தீர்மானங்கள்:

1. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி முல்லை பெரியாரின் கொள்ளளவை 152 அடியாக உயர்த்தி நீர் நிரப்பு. பேபி அணையை மராமத்து செய். காலதாமதம் காரியக் கேடு. காலதாமதம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியீடு.

2. உசிலம்பட்டி 58 கிராம பாசன கால்வாயில் நடைமுறைக்கு ஒத்து வராத அரசாணை பிறப்பித்தும் 58 கிராம பாசன கால்வாய் மடையை வைகை அணையில் தற்போது உள்ள (68 அடி) இருப்பதையும் மாற்றி வைகை அணையில் குறைந்த அடியில்( 60 அடியில்) 58 கிராம பாசன திட்ட கால்வாய் மதகினை வைத்து வருடம் தோறும் நிர்ணயிக்கப்பட்ட நீரை பெரும் வகையில் பாசன திட்டமாக அறிவித்து அரசு நிரந்தர அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும்.

3. வன பாதுகாப்பு சட்டம் என்ற பெயரில் {கா கா சட்டம்} வீட்டுமனை வாங்குவோர் வீடு கட்டுவோரை சித்திரவதை செய்யாதே பத்திரப்பதிவு அலுவலகத்தில் கொள்ளையடிக்காதே. லஞ்சம் வாங்குவதற்காக காக்கா சட்டத்தை காட்டாதே. வீட்டடிகளை பதிவு செய்.

4. உசிலம்பட்டி நகருக்குள் போக்குவரத்து மிகவும் சரியில்லை போக்குவரத்து இடையூறை அகற்ற உடனடியாக மேம்பாலம் கட்டிக்கொடு. புறவழிச்சாலை அமைத்துக் கொடு.

5. ராஜபாளையம் பகுதியில் சொக்கநாதன் புதூர் சிவகிரி ஏ கே ஆர் கல்குவாரி மணல் கொள்ளையை தடுத்து நிறுத்து.

6. திருமங்கலம் பகுதி திருமால் கல்லணை ஏரியாவில் அனுமதி இன்றி நடத்தப்படும் கல்குவாரிகளை தடை செய்.

7. உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர் பற்றாக்குறையை உடனடியாக நிரப்பு. சித்த மருத்துவம் ஹோமியோபதி போன்ற மருத்துவத்திற்கு சிறப்பு கவனம் செலுத்து.

8. தமிழ்நாட்டிலேயே ஹோமியோ மருத்துவ முறைக்கு இருக்கும் ஒரே மருத்துவமனை அரசு மருத்துவமனை திருமங்கலத்தில் இருக்கும் ஹோமியோ மருத்துவமனை ஆகும்.திருமங்கலம் அரசு ஹோமியோ மருத்துவமனை மருத்துவ மாணவர்கள் தொடர் போராட்டம் செய்து கொண்டிருக்கிறார்கள் அவர்கள் கோரிக்கை மிகவும் நியாயமானது இளம் நிலை பட்டப்படிப்போடு முதுநிலை பட்டப்படிப்பு வகுப்புகளையும் உடனடியாக தொடங்கு அதற்குண்டான கட்டடங்களையும் வசதிகளையும் செய்து கொடு படித்து முடித்த மாணவர்களுக்கு அரசு வேலைக்கு முன்னுரிமை கொடு.

9. திருப்பரங்குன்றம் மலை மீது இருக்கும் சிக்கந்தர் தர்காவில் பாரம்பரியமாக நடந்து கொண்டிருந்த ஆடு கோழி பலியிட்டு வழிபாடு நடத்தும் வழிபாட்டு முறையை தடுத்து நிறுத்தியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடு. மீண்டும் பாரம்பரிய முறையில் வழிபாடு நடத்த உடனடியாக அனுமதி வழங்கு. தற்கா நிர்வாகம் தற்கா கட்டிடங்களையும் பாதையையும் மராமத்து பணிகள் செய்ய அனுமதி. மாற்றாந்தாய் மனப்பான்மையில் இஸ்லாமிய மக்களின் வழிபாட்டு முறையில் தலையிட்டு வருவதை அனுமதிக்காதே.

10. சோழவந்தான் கரட்டுப்பட்டி உசிலம்பட்டி திருமங்கலம் ஆகிய பகுதிகளில் அறுவடை செய்த நெல்லை ஒரு வாரத்திற்குள் அரசே கொள்முதல் செய்திடு. தாமதமின்றி குடோனில் கொண்டு போய் அடுக்கி வை. மழையில் நனையவிடாதே. ஒரு வாரத்திற்குள் விவசாயிகளுக்கு பணப் பட்டுவாடா செய். விவசாயிகளிடம் லஞ்சம் வாங்குவதை தவிர்க்க கூலி தொழிலாளிக்கு மூட்டை ஒன்றுக்கு ரூபாய் 25 அன்றாட கூலியாக வழங்கு. பிசி மூலமாக 60 ரூபாய் பெற்று லஞ்சம் வாங்குவதை தடுத்து நிறுத்து.

இவண்
மக்கள் அதிகாரக் கழகம்,
மதுரை மேற்கு மாவட்டம்.
7826847268

***

மதுரை கிழக்கு மாவட்ட தீர்மானங்கள்:

1. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டம், காக்காவேரியில் செயல்படும் இரண்டு அங்கன்வாடி மையங்கள் சாதி அடிப்படையில் பிரிக்கப்பட்டுச் செயல்படுகின்றன. 47 வருடங்களாக தீண்டாமையின் வடிவமாக செயல் பட்டு வருகிறது. அரசும் இந்த தீண்டாமையைப் பாதுகாத்து வருகிறது. இதனை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது. இந்த தீண்டாமை அங்கன்வாடிகள் உடனே அகற்றப்பட வேண்டும்.

2. குஜராத்தில் கொண்டுவரப்பட்டிருக்கும் பொது சிவில் சட்டத்தை மக்களுக்கு எதிரானது, மக்களைப் பிளவுபடுத்தி மதவெறியை வளர்ப்பதற்கானது. இதனை கழகம் வன்மையாகக் கண்டிப்பதுடன். அச்சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என கழகம் கேட்டுக்கொள்கிறது.

3. மானாமதுரை இளைஞர் ஆகாஷ் லாக்கப்படுகொலை செய்யப்பட்டுள்ளார். நீதிமன்றம் கொலை வழக்கு மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டும். சிபிசிஐடி விசாரணை என இழுத்தடித்து இதுவரை வழக்கில் குற்றவாளிகளான 16 போலீஸ்காரர்கள் பெயர் சேர்க்கப்படவில்லை. இதனை கழகம் வன்மையாகக் கண்டிப்பதுடன், குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறது. 70 நாட்களுக்கும் மேலாக உடலை வாங்காமல் போராடி வரும் மானாமதுரை மக்களின் போராட்டத்திற்கு கழகம் துணை நிற்கும்.

4. மானாமதுரை சிப்காட் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலையை நிரந்தரமாக அகற்ற கழகம் வலியுறுத்துகிறது.

5. மதுரை மாவட்டம் யா. ஒத்தக்கடை அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தில் 2017 ன் படி 47 ஆயிரம் மக்கள் இந்த ஒரு ஆரம்பச் சுகாதார நிலையத்தில் தான் மருத்துவம் பார்த்து வருகின்றனர்.

இந்தப் பகுதியில் எவர்சில்வர் பட்டறை தொழிலாளிகள், ஷேர் ஆட்டோ தொழிலாளிகள், பேசஞ்சர் ஆட்டோ தொழிலாளிகள், கட்டிடத் தொழிலாளிகள், ஒத்தக்கடை அருகில் உள்ள சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை மற்றும் மீனாட்சி ஆஸ்பத்திரியில் வேலை செய்யக்கூடிய தொழிலாளிகள் மற்றும் ஒத்தக்கடை சுற்றியுள்ள விவசாயிகள் இந்த மருத்துவமனையில் தான் மருத்துவம் பார்க்கிறார்கள்.

மருத்துவமனையில் போதுமான இடம் வசதி இல்லாததாலும் போதுமான மருத்துவர் செவிலியர் மருந்தாளுநர் ஊழியர் பற்றாக்குறை இட வசதி இல்லாததாலும் இங்கு வரும் குழந்தைகள் கர்ப்பிணிப் பெண்கள் முதியவர்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுகின்றன இதனால் ஒத்தக்கடை அரசு மருத்துவமனையை தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்து.

6. சிவகங்கை அரசு மருத்துவமனை அருகே நகராட்சியின் குப்பை கொட்டும் அவலம் தொடர்கிறது. இங்கு குப்பைகள் எரிக்கப்படுவதும் அரசு மருத்துவமனையின் அருகிலேயே நடக்கிறது. இது நோயாளிகளைப் பாதிக்கும் அபாயமும் உள்ளது.

ஆதலால் இங்கு உள்ள குப்பைக் கிடங்கை உடனடியாக அகற்ற வேண்டும் என கழகம் கேட்டுக்கொள்கிறது.

7. மேலூர் கருங்காலக்குடி அருகில் கல்லாங்காடு சிப்காட் திட்டத்தை அரசு முன்னெடுத்து வருகிறது. இது அங்குள்ள அமைச்ச நிலங்களையும் விவசாய நிலங்களையும் பண்பாட்டு எச்சங்களையும் அளிக்கக் கூடியதாக உள்ளது. அதனால் இந்த கல்லாங்காடு சிப்காட் திட்டத்தைக் கைவிடும் படி மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக்கொள்கிறது.

8. டங்ஸ்டன் கனிம வளம் எடுப்பதற்கான திட்டத்தை மக்கள் போராட்டத்தின் காரணமாக நிறுத்தி வைத்துள்ளது ஒன்றிய அரசு. இத்திட்டத்தை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என கழகம் கேட்டுக்கொள்கிறது.

9. திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்றுவது என்ற பெயரில் கலவரம் நடத்த முயலும் இந்து முன்னணி பி.ஜே.பி கும்பலை கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது. இந்த கலவரக் கும்பலைத் தடை செய்ய மக்கள் அதிகாரக் கழகம் வலியுறுத்துகிறது.

10. மதுரை மாவட்டம் கிழக்கு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட யா நரசிங்கம் கிராமத்திற்கு உட்பட்ட தட்டான் குளம் கிராம மக்கள் 150 ஆண்டுகளுக்கு மேலாக வசிக்கக் கூடிய இடத்திற்கு தமிழ்நாடு அரசே உடனே பட்டா வழங்கு!

11. மதுரை மாவட்டம் மேலூர் ஒன்றியத்திற்குட்பட்ட தெற்கு தெரு கிராமத்தில் குரங்குகளால் மக்களுடைய உயிருக்கும் உடைமைக்கும் ஆபத்து ஏற்படுகிறது மற்றும் குரங்குகள் ஊருக்கு வருவதால் பல தொற்று நோய்கள் உருவாக வாய்ப்புள்ளது. மாவட்ட நிர்வாகமே வனத்துறை அதிகாரிகளை உடனடியாக நடவடிக்கை எடு!

12. திருப்பரங்குன்றம் பகுதி மக்கள் ரயில் பாதையைக் கடக்கும் போது ஏற்படும் விபத்தைத் தடுக்க அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ரயில்வே சுரங்கப்பாதை திட்டத்தை உடனே நிறைவேற்று!

13. மாடக்குளம் நிலையூர் கூத்தியார்க்குண்டு ஆகிய கண்மாய்களுக்கு வரும் நீர் வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்று!

விவசாயிகளை வாழவிடு!

14. மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் ஒரு போகும் விவசாயம் நடப்பதற்கு முக்கியமான காரணமாக இருக்கும் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய பென்னிகுயிக் சிலையை மேலூர் பேருந்து நிலையத்தில் நிறுவு.

15. மதுரை மாவட்டம் தேத்தான் குளம் கிராமத்தில் 180 ரேஷன் கார்டு இருந்தும் இன்னும் பகுதி நேர ரேஷன் கடை அமைக்கவில்லை

உடனே பகுதி நேர ரேஷன் கடை அமைத்துக் கொடு.

16. மதுரை மாவட்டம் மேலூர் தாலுகாவில் உள்ள தெற்குத் தெரு கிராமத்தில் போதுமான குடிநீர் தேக்கத் தொட்டி இல்லாததால் மக்கள் குடிதண்ணீருக்குச் சிரமப்படுகின்றன

தமிழ்நாடு அரசே உடனே குடிநீர் தேக்கத் தொட்டியை அமைத்துக் கொடு!

17. மதுரை மாவட்டம் யா ஒத்தக்கடை ஊராட்சியில் குப்பைகளைக் கொட்டுவதற்கு முறையான குப்பைத்தொட்டி இல்லாததால் ஊரே குப்பை காடாக மாறி வருகிறது இதனால் மக்களுக்குப் பலவிதமான தொற்று நோய்கள் உருவாக வாய்ப்பு இருக்கிறது.

மாவட்ட நிர்வாகமே ஊராட்சி நிர்வாகமே
உடனே குப்பைகளை அகற்று!

18. மதுரை மாவட்டம் வேலூர் ஒன்றியத்திற்குட்பட்ட தெற்கு தெரு கிராமத்தில் உள்ள கக்கன் ஜி தெரு மக்களுக்கு மயான கட்டிடம் அமைத்துக் கொடு.

19. மேலூர் ஒன்றியத்திற்குட்பட்ட சூரப்பட்டு முதல் கொட்டாம்பட்டி வரை 18 கிராம மக்களுக்கு முல்லைப் பெரியாறு கால்வாயை நீட்டித்துக் கொடு!

இவண்
மக்கள் அதிகாரக் கழகம்,
மதுரை கிழக்கு மாவட்டம்.
8438631587

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க