Sunday, September 19, 2021
முகப்பு ஆசிரியர்கள் Posts by மக்கள் அதிகாரம்

மக்கள் அதிகாரம்

மக்கள் அதிகாரம்
386 பதிவுகள் 1 மறுமொழிகள்

பத்ம சேஷாத்திரி பள்ளி நிர்வாகத்தை குற்றம் சொல்ல முடியுமா ? சங்கிகள் தர்க்கம் || நெல்லை மக்கள் அதிகாரம்

அரசியலமைப்புச் சட்டம் ஆள்வதாகச் சொல்லப்படும் நாட்டில், மனுநீதிதான் ஆண்டு கொண்டிருக்கிறது என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கிறது தற்போது பத்ம சேஷாத்ரியில் நடந்துள்ள பாலியல் குற்றம் !

தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராளிகளின் அனைத்துக் கோரிக்கைகளையும் நிறைவேற்று || மக்கள் அதிகாரம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளும் ரத்து செய்யப்படுவதுடன் அவர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராடியவர்களின் மீதான வழக்குகளும் ரத்து செய்யப்பட வேண்டும்.

உசிலம்பட்டி தோழர் திசை கர்ணனுக்கு சிவப்பஞ்சலி || மக்கள் அதிகாரம்

உள்ளூர் சாதிவெறியர்களுக்கு எதிரான போராட்டங்கள், பார்ப்பன மதவெறிக் கும்பலுக்கு எதிரான போராட்டங்கள் துவங்கி, மறுகாலனியாக்கக் கொள்ளைக்கு எதிரான போராட்டங்கள் வரை நக்சல்பாரி பாரம்பரியத்தை உயர்த்திப் பிடித்து போராடியவர் திசை கர்ணன்

தமிழகம் முழுவதும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகளுக்கு நினைவஞ்சலி

2021 மே 22 தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டின் 3ஆம் ஆண்டு நினைவஞ்சலி தமிழகம் முழுவதும் மக்கள் அதிகாரம் தோழர்களால் அனுசரிக்கப்பட்டது. ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் போன்ற பல்வேறு முழக்கங்கள் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக முன்வைக்கப்பட்டுள்ளது.

மே 22 : ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகள் 3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

சிறப்பு சட்டம் இயற்று ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக அகற்று என்று தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகள் கொலைகார அரசால் சுட்டுக்கொல்லப்பட்டு 3 ஆண்டுகள் கடந்தும் தூத்துக்குடி மக்களின் வீர முழக்கம் இன்னும் ஓயவில்லை.

மருத்துவ கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் நிகழும் கொரோனா மரணங்கள் || மக்கள் அதிகாரம்

தனியாரமயம்-தாராளமயம், உலகமயக் கொள்கைகள் நடமுறைப் படுத்தப்பட்ட பின்னால், திட்டமிட்டு அனைத்து அரசு நிறுவனங்களும் தனியாருக்கு தாரைவார்க்கப்பட்டும், பொது சுகாதாரக் கட்டமைப்பு சீரழிக்கப்பட்டதால் ஒரு பெருந்தொற்றை எதிர்கொள்ள முடியாமல் தவித்துக் கொண்டு இருக்கிறது இந்தியா.

கொரோனா பேரிடர் : பொதுச் சுகாதாரக் கட்டமைப்புக்காகப் போராடுவோம் || மக்கள் அதிகாரம்

கொரோனா பேரிடரில் பொதுச் சுகாதாரக் கட்டமைப்புகளை பற்றிய எந்த அக்கறையும் இல்லாமல் மக்களை சாகடிக்கிறது மோடி அரசு. இந்த கொரோனா தொற்றில் இருந்தும் மோடி அரசின் பாசிச நடவடிக்கைகளில் இருந்து உழைக்கும் மக்களை காப்பதற்காக மக்கள் அதிகாரம் அமைப்பு மக்களுக்கும் அரசுகளுக்கு பல்வேறு முழக்கங்களை முன்வைக்கிறது.

தோழர் சம்பூகன் அவர்களுக்கு மக்கள் அதிகாரம் சிவப்பு அஞ்சலி

40 ஆண்டுகளுக்கு மேலாக பாட்டாளி வர்க்க விடுதலைக்காக தன் குடும்பத்தையும் தன் வாழ்வையும் அர்ப்பணித்த தோழர் சம்பூகன் அவர்களுக்கு மக்கள் அதிகாரம் தலைமைக்குழு சிவப்பு அஞ்சலி செலுத்துகிறது !

கொரோனாவில் மக்கள் செத்து கொண்டிருக்கிறார்கள் மூடு டாஸ்மாக்கை || மக்கள் அதிகாரம்

அரசுக்கு உண்மையாகவே கொரோனாவைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் முதலில் செய்ய வேண்டியது டாஸ்மாக்கை மூடுவதைத் தான் ! அக்கோரிக்கை மறுக்கப்படும் பொழுது அதற்கு எதிரானப் போராட்டங்களையும் தடுக்க முடியாது.

ஸ்டெர்லைட்டை  நிரந்தரமாக அகற்றுவோம் || மக்கள் அதிகாரம்

ஸ்டெர்லைட்டுக்கு எதிராகப் போராடக் கூடாது என்பதற்காகவே தூத்துக்குடி மக்களை நம்ப வைத்து கழுத்தறுத்த அரசும் கட்சிகளும் சேர்ந்து உருவாக்கிய குழுதான் கண்காணிப்புக் குழு. இது கண்கணிப்புக்குழு அல்ல; கங்காணி குழு.

கொரோனா தடுப்பூசிக்கான காப்புரிமையை ரத்து செய் || வீடியோ

கொரோனா இரண்டாவது அலையில் மத்திய மாநில அரசுகளின் கார்பரேட் சேவையை அம்பலப்படுத்துகிறார்கள் மக்கள் அதிகாரம் தோழர்கள்.

உசிலை : ஆக்கிரமிப்பிற்கும் ஆதிக்கத்திற்கும்தான் சாதிவெறி || மக்கள் அதிகாரம்

“எங்களை மீறி எப்படி வாழ்வீர்கள்; ஆடு, மாடுகளை எங்கள் வயலில் எப்படி மேய்க்கப் போகிறீர்கள் என்று பார்ப்போம்” என்று மிரட்டுவது ; காலனிக்குள் சில கருங்காலி விட்டு போலீஸ் கேஸ் போடுவது ; காலனியை அழித்து விடுவோம் என்று சவால் விடுவது என காலனியையே அச்சுறுத்தி இருக்கிறார்கள் ஆதிக்க சாதி வெறியார்கள்.

புறவாசல் வழியாக ஸ்டெர்லைட்டை திறக்காதே || மக்கள் அதிகாரம்

ஆக்சிஜன் பற்றாக்குறையை சாக்காக வைத்துக்கொண்டு மீண்டும் ஸ்டெர்லைட்டை திறக்கும் முயற்சிகளுக்கு எதிராக தூத்துக்குடியே போர்க்களமாகி இருக்கிறது.

கொரோனா கால அடக்குமுறைகளுக்கு முடிவுகட்டுவோம் || தோழர் வெற்றிவேல் செழியன்

கொரோனா கட்டுப்பாடுகளைக் காரணம் காட்டி நடத்தப்படும் அதிகாரவர்க்க ஒடுக்குமுறைகளை அம்பலப்படுத்தி கேள்வி எழுப்புகிறார், ம்க்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் வெற்றிவேல் செழியன் .

மக்கள் அதிகாரம் தேர்தல் புறக்கணிப்பு ஏன்? || தோழர் மருது

மக்கள் அதிகாரம் அமைப்பு தேர்தல் புறக்கணிப்பு பற்றி பல்வேறு கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் செய்தி தொடர்பாளர், தோழர் மருது.