14.12.2024
அணுக் கனிமச் சுரங்கத் திட்டம் – எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்க ஏலம்
கார்ப்பரேட்டுக்களுக்காக தமிழ்நாட்டைச் சூறையாடும் பாசிச பாஜக அரசு!காவல்காக்கும் திமுக அரசு!
பத்திரிக்கைச் செய்தி
கன்னியாகுமரியில் 1,144 ஏக்கர் பரப்பளவில் அணுக்கனிமச் சுரங்கம் அமைக்க ஒன்றிய பாசிச பாஜக அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் கன்னியாகுமரியில் சுற்றுச்சூழல் மிகவும் முக்கியத்துவம் பெற்ற படுகைக் கரையில் 32,485 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கவும் ஒன்றிய பாசிச பாஜக அரசு திட்டமிட்டுள்ளது.
ஏற்கெனவே கூடங்குளம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அணுமின் நிலையத்துக்கு எதிராக மக்கள் போராடிவரும் நிலையில் அங்கே அணுக்கழிவு மையத்தை அமைக்கவும் பாசிச மோடி அரசு முடிவு செய்துள்ளது .
மதுரையில் டங்ஸ்டன் எடுக்க ஒப்பந்த புள்ளிக்கு அனுமதி அளித்த பாசிச மோடி அரசுக்கு எதிராக அப்பகுதி மக்கள் நடத்திய போர்க்குணமிக்க போராட்டத்தின் விளைவாக தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் டங்ஸ்டன் எடுப்பதற்கான திட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றியது. டங்ஸ்டன் எடுப்பதற்கு தடை விதித்து சிறப்பு சட்டம் இயற்றி அதன் மூலமாக பாசிச பாஜக அரசுக்கு எதிராக தமிழ்நாட்டில் ஒரு எழுச்சியை உருவாக்குவதை திமுக அரசு தவிர்த்துவிட்டது.
கன்னியாகுமரியில் இயற்கை வளத்தை சூறையாடும் அணுக்கனிமச் சுரங்கம் மற்றும் எண்ணெய் – எரிவாயு எடுப்பு தொடர்பாக எவ்விதமான தீர்மானத்தையும் இயற்றாமல், அத்திட்டத்தை பற்றி எதுவும் பேசாமல் தமிழ்நாடு சட்டசபையின் கூட்டத்தொடர் முடிவுற்றது.
அணுக்கனிம சுரங்கத் திட்டத்திற்கு எதிரான கருத்துகேட்புக் கூட்டமானது மக்களின் எதிர்ப்பின் காரணமாக மட்டுமே ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஏற்கெனவே எண்ணூர் அனல் மின்நிலைய விரிவாக்கம், காட்டுப்பள்ளித் துறைமுகம், பரந்தூர் விமான நிலைய விரிவாக்கம் என கார்ப்பரேட்டுகளின் காவலாளியாக செயல்படும் திமுக அரசு, அணுக்கனிம சுரங்கம் மற்றும் எண்ணெய் – எரிவாயு திட்டத்தை ஒருபோதும் தடுத்து நிறுத்தாது.
ஆகவே டங்ஸ்டன் எதிர்ப்பு போராட்டம், அணுக்கனிமச் சுரங்க எதிர்ப்புப் போராட்டம், எண்ணெய் மற்றும் எரிவாயு எடுப்புக்கு எதிரான போராட்டங்கள், தமிழ்நாட்டில் நடைபெறும் இதர கார்ப்பரேட் எதிர்ப்பு போராட்டங்களோடு ஒன்றிணைய வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.
ஆர்எஸ்எஸ் – பாஜக ;அம்பானி – அதானி பாசிசம் முழக்கம் ஒழிக என்ற முழக்கம் விரைவில் தமிழ்நாட்டின் ஒற்றை முழக்கமாக மாறும்!
அப்போது ஆர்எஸ்எஸ் – பாஜக; அம்பானி -அதானி பாசிச கும்பல் காணாமல் போகும்!
தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
9962366321
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram