இந்தோனேசிய நாடாளுமன்றம் முற்றுகை: மக்கள் போராட்டத்துக்குப் பணிந்தது ஆளும் கும்பல்
ஆளும் அதிபரின் பரம்பரை ஆட்சிக்கான சதி நடவடிக்கைகள் சமூக ஊடகங்களில் பெரும் விமர்சனத்திற்கு உட்படுத்தப்பட்டு வைரலாகப் பரவியது. இவற்றால் பெரும் கோபமுற்ற மக்களும் பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் ஒன்றாகத் திரண்டு நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டனர்.
வி.சி.க கொடிக்கம்பங்கள் அகற்றம் உணர்த்துவது என்ன?
விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக் கொடியேற்றுவதற்கு ஆதிக்கச் சாதியினர் எதிர்ப்பு தெரிவிப்பதும், ஆதிக்கச் சாதியினருக்குத் துணையாகப் போலீசும் அரசு அதிகாரிகளும் ஒவ்வொரு முறையும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொடிகளை அகற்றுவதும், கொடி ஏற்றியவர்கள் மீது வழக்குகளைப் போடுவதும் தொடர்ந்து நடந்துவரும் ஒன்றாக இருக்கிறது.
ஜே.என்.யூ.வில் 13 நாட்களாகத் தொடர்ந்த மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டம்!
ஆகஸ்ட் 23 அன்று பல்கலைக்கழக வளாகத்திலிருந்து கல்வித்துறை அமைச்சகத்தை நோக்கி பேரணியாக செல்லவிருந்த மாணவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது டெல்லி போலீசு.
ராணிப்பேட்டை ஆணவப் படுகொலை – என்ன செய்யப் போகிறோம்?
கதிர்வேலின் சாவிற்கு காரணமான சுரேஷை உடனடியாக வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி கதிர்வேலின் உறவினர்கள் சோளிங்கர் - வாலாஜா செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து பெண்களை ஒடுக்கும் தாலிபான் அரசு!
பெண்கள் தங்களது உடலையும் முகத்தையும் முழுமையாக மறைக்கும் ஆடைகளை அணிய வேண்டும் என்றும் ஆண்கள் தாடியை எடுப்பதற்கும், பிரார்த்தனை மற்றும் மத விரதங்களைத் தவிர்ப்பதற்கும் தடை என்றும் புதியதாக விதிகளை-கட்டுப்பாடுகளை தாலிபான் அரசு விதித்துள்ளது.
கொல்கத்தா பாலியல் வன்கொலை வழக்கு: உச்ச நீதிமன்றத் தலையீட்டை எப்படிப் பார்ப்பது?
தாங்கள் இந்த வழக்கை கையில் எடுத்தவுடன் அனைத்தும் சரியான திசையில் செல்வதாக ஒரு கண்துடைப்பு நாடகத்தை நடத்தி போராட்டத்தை முடித்து வைத்துள்ளது உச்ச நீதிமன்றம்.
ராஜஸ்தான்: பள்ளி மாணவர்கள் பிரச்சினையை முஸ்லீம்களின் மீதான கலவரமாக மாற்றிய காவிக் கும்பல்
கத்தியால் தாக்கியதாக கூறப்படும் மாணவர் சிறுபான்மை முஸ்லீம் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் பள்ளி மாணவர்களுக்கிடையேயான பிரச்சினைக்கு திட்டமிட்டு மதச்சாயம் பூசப்படுகிறது.
பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகப் போராடிய மாணவர்களை ஒடுக்கும் அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள்
ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகம், போராட்டத்தில் கலந்துகொண்டு கைதான மாணவர்கள் சட்டரீதியான நடவடிக்கைகளை எதிர் கொண்டாக வேண்டும் என்று கூறி, அவர்களை இக்கல்வியாண்டில் மீண்டும் சேர்த்துக் கொள்வதற்கு அபராத தொகையுடன் சில நிபந்தனைகளையும் விதித்துள்ளது.
ஆந்திர மருந்து ஆலை வெடி விபத்து: கார்ப்பரேட் லாபவெறியின் பச்சைப் படுகொலை
இந்நிறுவனங்கள் தங்களது லாப வெறிக்காக முறையான சட்ட விதிமுறைகளை பின்பற்றாததால் அடிக்கடி விபத்துகள் நிகழ்வது வழக்கமான ஒன்றாக மாறியுள்ளது.
கிருஷ்ணகிரி பள்ளி மாணவிகள் பாலியல் வன்கொடுமை – தொடரும் பாலியல் வன்கொடுமைக் குற்றங்கள்!
சிவராமன் பாலியல் பொறுக்கி என்று தெரிந்தும் நாம் தமிழர் கட்சியில் சேர்க்கப்பட்டு நிர்வாகியாக ஆக்கப்பட்டுள்ளான். இதுதான் நாம் தமிழர் கட்சியின் யோக்கியதை.
மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள்: கார்ப்பரேட் சர்வாதிகாரத்திற்கான காவி + போலீசின் கும்பலாட்சி | சிறு வெளியீடு
வாங்கிப் படியுங்கள்! | நன்கொடை: ₹10 | G-Pay No: 97916 53200
காஞ்சிபுரம்: தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் எஸ்.எச் எலக்ட்ரானிக்ஸ் ஆலைத் தொழிலாளர்கள்
போராட்டம் 65 ஆவது நாளை தொட்ட நிலையில் ஆலை வாயிலில் தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் திரண்டு தர்ணா போராட்டத்தை நடத்தினர். நூற்றுக்கணக்கில் ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு ஆலை வாயிலை முற்றுகையிட்டனர்.
கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொலை: கிரிமினல்மயமான மருத்துவத்துறையும் அரசுமே குற்றவாளிகள்!
மேற்கு வங்கத்தின் மம்தா அரசு இந்த படுகொலையை மூடி மறைக்க முயற்சி செய்ததுடன், மருத்துவமனை நிர்வாகத்தினரையும் காப்பாற்றி இருக்கிறது என்பதே உண்மை.
யு.பி.எஸ்.சி நியமனங்களில் ஆர்.எஸ்.எஸ் ஆட்களை நிரப்பத் துடிக்கும் ஒன்றிய பாஜக கும்பல்!
ஒவ்வொரு அரசுத்துறையின் தலைமைப் பொறுப்புகளிலும் ஆர்.எஸ்.எஸ் - பி.ஜே.பி - கார்ப்பரேட் கும்பல் யாரைத் தீர்மானிக்கின்றதோ அவர்களைப் பணியமர்த்துவதற்கான ஏற்பாடு இதுவாகும்
ஒரத்தநாடு: இளம்பெண் கூட்டுப் பாலியல் பலாத்காரம்
பள்ளி, கல்லூரி, வீடு, பணியிடம் என ஒட்டுமொத்த சமூகச் சூழலுமே பெண்களுக்குப் பாதுகாப்பற்ற இடமாக மாறியுள்ளது.