ரேஷன் கடையை ஒழிப்பதற்கே உணவுப் பாதுகாப்புச் சட்டம்!
உணவு மானியத்தைக் குறைக்க வேண்டும் என மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்லிக் கொண்டு திரியும் கொள்கைக் குன்றான மன்மோகன் சிங் அரசு உணவுப் பாதுகாப்பிற்கெனத் தனியொரு சட்டத்தைக் கொண்டு வரப் போகிறதென்றால்...? எலி தேவையில்லாமல் அம்மணமாக ஓடாதே!
நோவார்ட்டிஸ் வழக்கு : மக்களின் உயிர் குடிக்கும் மருந்து கம்பெனிகள்!
புற்றுநோய், எய்ட்ஸ், காசநோய், மலேரியா முதலான பல நோய்களுக்கான மருந்துகளின் விலையைத் தற்போது உள்ளதைவிடப் பத்து, பதினைந்து மடங்கு அதிகமாக உயர்த்திக் கொள்ளையிட விரும்புகின்றன பன்னாட்டு மருந்துக் கம்பெனிகள். அத்தகையதொரு வழக்குதான் இந்திய அரசின் காப்புரிமைச் சட்டத்துக்கு எதிராக நோவார்ட்டிஸ் நிறுவனம் தொடுத்திருக்கும் வழக்கு.
கூடங்குளம் மக்கள் போராட்டம்: அணு மின்நிலையத்தை மூடு!
அணு மின் உற்பத்தியில் குதிக்க காத்திருக்கும் டாடா, அம்பானிகளின் இலாப வெறி, அணு மின்நிலையங்களை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் துடித்துக் கொண்டிருக்கும் இந்திய அணுசக்தி அதிகாரவர்க்கம், அணுசக்திக் கனவுடன் இணைந்த இந்தியாவின் வல்லரசுக் கனவு, அதற்குத் தேவைப்படும் அமெரிக்காவின் தயவு... போன்ற பல விசயங்கள் அணுவுக்குள் புதைந்திருக்கின்றன
கவுன்சிலருக்கு மல்லையா பீரு! மினிஸ்டருக்கு மங்காத்தா பாரு!
கூட்டிப் பெருக்கிப் பாத்தா சில்லறைங்களுக்கு உள்ளாட்சி! நோட்டுக்கு மத்த ஆட்சி ! கவுன்சிலருக்கு மல்லையா பீரு! மினிஸ்டருக்கு மங்காத்தா பாரு !
அண்ணா ஹசாரே – கார்ப்பரேட் மீடியா கண்டெடுத்த கோமாளி!
ஊடக முதலாளிகள் நினைத்தால் தாங்கள் எண்ணிய வண்ணம் இந்த தேசத்தின் நிகழ்ச்சி நிரலைத் தீர்மானிக்கலாம், தாங்கள் விரும்பும் நபரை தேசத்தின் நாயகனாக்கலாம், வெறுக்கும் நபரையோ கட்சியையோ தனிமைப்படுத்தலாம் என்பதற்கு ஹசாரே நாடகம் ஒரு சான்று.
கோடிகளில் கொழிக்கும் மத்திய அமைச்சரவை ! பி.சாய்நாத் !!
2009 தேர்தலின் போது நமது மத்திய அமைச்சர்கள் அளித்த சொத்துக் கணக்கு இரண்டே ஆண்டில் பன்மடங்கு அதிகரித்திருக்கிறது. இந்த பிரம்மாண்ட 'வளர்ச்சி' குறித்து கேள்வி எழுப்புகிறார் சாய்நாத்
குண்டுவெடிப்பு குறித்து நிரபராதி அப்சல் குருவின் அறிக்கை!
திகார் சிறையில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் காஷ்மீரத்து அப்பாவி அப்சல்குருவின் வழக்கறிஞர் அனுப்பிய ஊடகச் செய்தி அறிக்கையை இங்கு மொழிபெயர்த்து தருகிறோம்
ஸ்பெக்ட்ரம் ஊழல்: வழக்கு நீர்த்துப் போகும் காரணம் என்ன?
ஒருலட்சத்து எழுபத்தாறாயிரம் கோடிகள் எனும் பிரம்மாண்டம் அளித்த அதிர்ச்சி மயக்கத்திற்கு இப்போது சி.பி.ஐ விசாரணையின் பித்தலாட்டங்கள் தண்ணீர் தெளித்து எழுப்பி விட்டுக் கொண்டிருக்கிறது.
தூக்கு மேடையில் நிற்பது அரசியல் நியாயம் – தோழர் மருதையன்
ஒரு சாதாரண கொலைவழக்கை பயங்கரவாதமாக சித்தரிக்கும் இந்த அரசியல் மோசடியின் அடிப்படையில்தான் மூவருக்கும் எதிரான மரண தண்டனை மட்டுமின்றி, புலிகள் இயக்கத்தின் மீதான தடையும் மக்கள் மத்தியில் நியாயப்படுத்தப்பட்டிருக்கின்றது.
“ரிலையன்சோடு பாத்து நடந்துக்கங்க!” – பிரணாப் முகர்ஜி
ரிலையன்ஸ், சஹாரா உள்ளிட்ட கார்பப்ரேட் நிறுவனங்களின் முறைகேடுகள் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் 'பார்த்து பக்குவமாக' நடந்து கொள்ளுமாறு நிதியமைச்சர் பிரணாப் அழுத்தம் கொடுத்துள்ளார்.
மூவர் தூக்கு நிறுத்தி வைப்பு! மக்கள் போராட்டம் வென்றது!
இறுதி வெற்றி பெறவேண்டுமானால் மக்கள் அரங்கிலும், அரசியல் அரங்கிலும் போராட்டங்கள் தீவிரமாக தொடர்ந்து நடைபெற வேண்டும். அதை எள்ளி நகையாடும் அரசியலற்ற கோமான்களின் கையில் இந்தப் போராட்டம் சிக்கிவிடக்கூடாது. தற்போதைய நிலைமை அத்தகைய அபாயத்தைக் கொண்டிருக்கிறது என்பதை மட்டும் இங்கே சுட்டிக் காட்டுகிறோம்.
கருணாநிதி அவர்களே, நீங்கள் வாய் திறக்கவில்லை என்று யார் அழுதார்?
ஜெயாவை எதிர்ப்பதற்குத்தான் துப்பில்லை என்றால், செத்துப் போன ராஜிவ் காந்தி ஆவிக்காக இப்படியா பயப்பட வேண்டும்? ஈழத்தின் வில்லி ஜெயாவிடமே தூக்குத் தண்டனையை ரத்து செய்யக்கோருவதுதான் தமிழினித் தலைவரின் இத்தனை ஆண்டு அரசியல் சாதனையா?
தீக்குளித்த செங்கொடி மூட்டிய தீ! நெஞ்சை உலுக்கும் நேரடி ரிப்போர்ட்!! படங்கள்!!!
செங்கொடி தீக்குளிப்பினால் நடந்தது தற்கொலை மட்டுமல்ல. சரியான திசைவழியில் போராடத் துணியாத தமிழகத்தின் மீது தொடுக்கப்பட்ட ஒரு விமரிசனம். ஆனால் விலை மதிப்பற்ற விமரிசனம். அந்த விமரிசனத்தின் மதிப்பறிந்தவர்கள் தங்கள் மீது சுயவிமரிசனம் செய்து கொள்ளட்டும்.
டீம் அண்ணா: உப்பிப் பெருக்கப்படும் ஒரு போலிப் புரட்சி!- அருந்ததிராய்
தரகு வேலை செய்யும் பத்திரிகையாளர்களின் முகத்திரை கிழிந்ததுடன் கார்ப்பரேட் இந்தியாவின் முக்கிய தலைவர்களும் தண்டிக்கப்படக்கூடிய ஒரு தருணம் நெருங்கி இருந்தது. ஊழலுக்கெதிரான போராட்டத்துக்கு இதைவிட சரியான நேரம் கிடைக்குமா என்ன?
கருணையினால் அல்ல!
பேரறிவாளன் , சாந்தன் , முருகன் - தூக்குமேடையில் நிற்பது மூன்று பேரின் உயிர்கள் மட்டுமல்ல, ஈழப் போராட்டத்தின் நியாயமும்தான். நாம் இரண்டையும் காப்பாற்ற வேண்டும். ஒன்றுக்கெதிராக ஒன்றை நிறுத்துவதன் மூலம் நாம் ஈழத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை ஏற்றுக் கொள்வதாக மாறிவிடும். அதனால்தான் நமது கோரிக்கை கருணையினால் அல்ல, அரசியல் நீதியால்.