Monday, August 8, 2022
முகப்பு கட்சிகள் காங்கிரஸ் டிசம்பர் 6: பாபர் மசூதி இடிக்கப்பட்ட கருப்பு தினம்!

டிசம்பர் 6: பாபர் மசூதி இடிக்கப்பட்ட கருப்பு தினம்!

-

இந்துமதவெறியர்களால் 1992 டிசம்பர் ஆறு அன்று பாபர்மசூதி இடிக்கப்பட்டு தாசப்தங்கள் கடந்து விட்டன. இடிக்கப்பட்ட உடன் புதிய ஜனநாயகம் இதழில் வெளிவந்த ஒரு கட்டுரையை இங்கு வெளியிடுகிறோம்.

இந்தக் கட்டுரை குறிப்பிடும் பல விசயங்கள் இன்று நடந்திருப்பதைப் பார்க்கிறோம். ஆட்சியைப் பிடித்த இந்துமதவெறியர்கள் 2002 இல் குஜராத்தில் இசுலாமிய மக்களை இனப்படுகொலை செய்தும், அதையே இந்துத்வாவின் பரிசோதனைச் சாலை என்று பெருமை பேசுவதையும் பார்த்திருக்கிறோம்.

பாபர்மசூதி இடிக்கப்பட்ட பின்தான் எத்தனை கலவரங்கள், குண்டு வெடிப்புக்கள்! இந்து மதவெறியர்கள் அதிகார அமைப்புகளின் உதவியோடு கலவரம் செய்வதோடு இன்று அவர்களே குண்டு வைக்குமளவு முன்னேறி விட்டார்கள். இத்தகைய இந்துமதவெறி பாசிஸ்டுகளை இந்த நாட்டின் நீதி நிர்வாக அமைப்புகள் தண்டிக்காது என்ற உண்மையே சில இசுலாமிய இளைஞர்களை தீவிரவாத பாதையில் தள்ளியிருக்கிறது.

கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளாக தேசத்தின் விவாதப் பொருளாக இருந்து வரும் இந்து மதவெறி பல பிரச்சினைகளை திசை திருப்புவதற்கும் பயன்படுகிறது. காங்கிரசுக்குப் போட்டியாக ஏகாதிபத்திய விசுவாசத்தில் கொடிகட்டிப் பறக்கும் இந்து மதவெறியர்கள் மறுகாலனியாக்கத்தை அவர்களது ஆட்சியின் போது தீவிரமான அமல்படுத்தினர்.

பாபர் மசூதி தொடர்பாக அலகாபாத் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு இந்துமதவெறியருக்கு ஆதரவாகவே இருந்தது நீதியின் அடிப்படையில் அல்ல. மறுபுறம் மதச்சார்பின்மை பேசும் காங்கிரசு முதலான கட்சிகள் மிதவாத இந்துத்வத்தை பின்பற்றுவதையும் நாம் கண்டிருக்கிறோம்.

வெறுமனே மசூதியை இடிப்பது மட்டுமல்ல அனைத்து துறையிலும் இந்து ராஷ்டிர திட்டத்தை வைத்திருக்கும் இந்து மதவெறியர்கள் இன்றும் அரசியல் ரீதியான செல்வாக்கோடுதான் உள்ளனர். இதையெல்லாம் அன்றே சொன்னது புதிய ஜனநாயகம். படித்துப் பாருங்கள், இந்துமதவெறியை நிர்மூலமாக்க தோள் கொடுங்கள்!

வினவு

இந்து மதவெறி பாஸிஸ்டுகளால் இடிக்கப்படும் பாபர் மசூதி
இந்து மதவெறி பாஸிஸ்டுகளால் இடிக்கப்படும் பாபர் மசூதி

அயோத்தி நாசகார கும்பலின் இலக்கு இந்துமத பாசிச பயங்கரவாத ஆட்சி!

அயோத்தி பாபரி மசூதியை இடித்துத் தரைமட்டம் ஆக்கியதோடு நாடு முழுவதும் மதவெறிப்படுகொலைக் கலவரத்தைக் கட்டவிழ்த்துவிட்டதன் மூலம் தங்களது நயவஞ்சகச் சதித் திட்டத்தை வெற்றிகரமாகத் துவக்கி விட்டார்கள், இந்துமதவெறி பார்ப்ன-பனியா பாசிசக் கூட்டத்தினர்.

பாபரி மசூதியை இடித்ததானது, “இந்துமத-வகுப்புவாதத் தீவிரவாதிகளது வெறிச்செயல்” “வக்கிரமான கோழைத்தனம்” “மத்திய கால மதவெறிக் குரூரம்” “தேசிய அவமானம்-துரோகம்” “மன்னிக்க முடியாத கிரிமினல் குற்றம்” – என்று சித்தரிப்பது எல்லாம் இந்து மதவெறி பாசிஸ்டுகளின் நாசகரமான கடப்பாரைச் சேவையை மட்டும் குறிக்கின்றன.

ஆனால், இந்த இழிசெயல், இந்துமதவெறி பாசிச பயங்கரவாத ஆட்சியை நிறுவுவது என்கிற மிகவும் அபாயகரமான, நயவஞ்சகமான, கொடிய சதித்திட்டத்தைப் பகிரங்கமாக அரங்கேற்றுவதைத்தான் குறிக்கிறது.

பாபரி மசூதியின் கவிகைகளை உடைத்து நொறுக்கி வீழ்த்தியவுடன் இந்து மத “சந்நியாசினிகள்” என்று பட்டஞ் சூட்டிக் கொண்டுள்ள உமா பாரதியும், ரிதம்பராவும் ஒலிபெருக்கி மூலம் அலறினார்கள், “இதோ, இந்து ராஷ்டிரம் பிறக்கிறது!” – இதுதான் அவர்கள் இலட்சியம். இந்து மதவெறி பாசிச பயங்கரவாதம் – இதுதான் அவர்களின் இராம ராஜ்ஜியம்!

இந்துமதவெறியின் குருபீடமாகிய ஆர்.எஸ்.எஸ்ஸோ அதன் கள்ளக் குழந்தைகளான பாரதீய ஜனதா, விசுவ இந்து பரிஷத், சிவசேனா, பஜ்ரங்கதள், இந்து முன்னணி முதல் தமிழ்நாடு பிராமணம் சங்கம் வரை அவர்கள் யாருமோ, “இந்துராஷ்டிரம்”தான் தமது இலட்சியம் என்பதை மறைக்கவில்லை.

பாபர் மசூதியை இடித்து, அந்த இடத்தில் ராமனுக்கு கோவில் கட்டுவது ஒரு மத நம்பிக்கையை நிறைவேற்றுவது என்பதெல்லாம் பாமர ராம பக்தர்களைத் திரட்டுவதற்க்காகச் செய்த பிரச்சாரம்தான்! “இசுலாமிய ஆட்சியாளர்கள், ஆக்கிரமிப்பாளர்களால் இந்துக் கோவில்கள் இடிக்கப்பட்டன; இந்துக்கள் இழிவுப்படுத்தப்பட்டனர்; இந்துமதத் துறவிகள் கொல்லப்பட்டனர்; இந்த தேசிய அவமானத்தின் சின்னமாக விளங்குவதுதான் பாபரி மசூதி; அதை அகற்றி ராமன் பிறந்த பூமியில் ராமனுக்குக் கோவில் கட்டுவது அன்று நேர்ந்த அவமானங்களுக்குப் பழிவாங்குவது, இந்துக்களின் கௌரவத்தை நிலை நாட்டுவது” என்கிற விளக்கங்கள் கூட இந்துமதவெறி பாசிஸ்டுகள் தமது “இந்து ராஷ்டிரம்” என்கிற அரசியல்பேராசைக்கு மதச் சாயம் பூசுபவைதான்.

“இராமன் ஒரு மதத்தின் கடவுள் மட்டுமல்ல; தேசிய ஒருமைப்பாட்டின் சின்னம் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். போலியான மதச்சார்பின்மை, தேசிய ஒருமைப்பாட்டிற்கு எதிராக இந்துத்துவம், இராமராஜ்ஜியம், இந்து ராஷ்டிரம் அடிப்படையிலான தேசியத்தை நிர்மானிப்பது எங்கள் நோக்கம்” என்று இந்து மதவெறி பாசிஸ்டுகள் அனைவரும் திரும்பத் திரும்பக் கூறி வருகின்றனர்.

ஆகவே, பாபர் மசூதியை இடித்த சம்பவம் உண்மையில் அரசியல் அதிகார ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கையைப் போன்றது. பாரதீய ஜனதா அல்லாத எதிர்க்கட்சிகள் கூறுவதைப்போல ஓட்டுப் பொறுக்கும் தேர்தல் ஆதாயம் மட்டும் அதன் குறிக்கோள் அல்ல. ஆட்சியைப் பிடிப்பதற்குத் தேர்தல்களையும் ஒரு வழியாக இந்துமதவெறி பாசிஸ்டுகள் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், நாட்டின் நீதி-நிர்வாக-அரசியல் அமைப்புமுறை எதன் மீதும் அவர்களுக்கு நம்பிக்கை கிடையாது என்பதை நிரூபித்துவிட்டார்கள். மதவெறி பாசிச பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிட்டு இரத்த ஆறில் நீந்தி அதிகாரத்தைக் கைப்பற்றுவதுதான் அவர்கள் தெரிந்தெடுத்துக் கொண்டுள்ள வழி. அதன் ஒரு பகுதிதான் அயோத்தியில் அவர்கள் புரிந்த அராஜக வெறியாட்டம்.

இந்துமதவெறி பாசிஸ்டுகளின் அயோத்தி நாசவேலையைத் தொடர்ந்து கட்டவிழ்த்து விட்டுள்ள அராஜக வெறியாட்டத்தில் இப்போதைய, உடனடித் தாக்குதல் இலக்கு என்னவோ இசுலாமிய சமுதாயத்தினர்தான்! ஆனால், நாட்டின் மதச்சார்பற்ற, ஜனநாயக, தேசபக்த சக்திகளுக்கெதிராக அவர்கள் தமது தாக்குதலைத் திருப்பிவிடும் நாள் வெகுதொலைவில் இல்லை. இன்றைய சம்பவங்கள் அதற்கான எச்சரிக்கை – முன்னறிவிப்புதான்!

ஜெர்மனியின் ஆரிய – நாஜிக்கள் ஆட்சியைப் பிடிப்பதற்குப் பின்பற்றிய தந்திரங்கள் பலவும் இந்து மதவெறி பாசிஸ்டுகளின் நடவடிக்கைகளில் காணமுடிகிறது. தேசிய அவமானத்துக்கு பழிவாங்குவது; தேசிய கௌரவத்தை நிலைநாட்டுவது; தேசிய ஒருமைப்பாட்டை காப்பது; நாட்டின் இழிநிலைக்குக் காரணமானவர்கள் என்று ஒரு குறிப்பிட்ட (யூத) சமுதாயத்தினர் மீது பழிபோட்டு அவர்களைக்க ஒன்று குவிப்பது; நாட்டின் வரலாற்றையே திரித்துப் புரட்டி மத-இன ரீதியில் நாட்டையே பிளவுபடுத்துவது – ஆகிய அதே தந்திரங்களை இந்துமதவெறி பாசிஸ்டுகளும் பின்பற்றுகிறார்கள்.

இப்போது பாபரி மசூதியை இடித்து ராமன் கோவிலைக் கட்டியதைப் போல காசியில் உள்ள மசூதியை இடித்துக் காசி விசுவநாதன் கோவிலையும்,மதுரா மசூதியை இடித்து கிருஷ்ணன் கோவிலையும் கட்டும் திட்டத்தை நிறைவேற்றி அடுத்தடுத்து இசுலாமிய மதத்தினருக்கு ஆத்திரமூட்டுவது; சொல்லப்படும் மதச்சார்பற்ற அரசியல் அமைப்பின் மீது நம்பிக்கை இழந்து இசுலாமிய மதவாத – தீவிரவாத அமைப்புகளில் தஞ்சமடையும்படியும் எதிர் தாக்குதல் தொடுக்கும் படியும் இசுலாமியர்களைத் தள்ளுவது; அதற்கு எதிராக இந்து மதவெறியை நியாயப்படுத்துவதுடன் நாட்டின் பெரும்பான்மையினரான இந்துக்களின் ஏகப்பிரதிநிதியாகத் தம்மை முன்னிறுத்தி மதவெறி – வகுப்புவாதக் கலவரங்களை மூட்டி இரத்த ஆறு ஓடச் செய்து பார்ப்பன-பனியா சாதிய ஆதிக்க அடிப்படையிலான இந்து ராஷ்டிரம் அமைப்பது – இதுதான் இந்து மதவெறி பாசிஸ்டுகளின் அரசியல் பாதையாக உள்ளது.

முதலாவதாக, இவர்கள் நாட்டின் பெரும்பான்மையினரான இந்துக்களின் பிரதிநிதிகளும் அல்ல; இரண்டாவதாக, தேசிய நலன்கள் எதுவும் இவர்களது குறிக்கோளாக இல்லை.

ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி, வி.எச்.பி, பஜரங்தள், சிவசேனா, இந்து முன்னணி போன்ற இந்த இந்துமதவெறி பாசிச அமைப்புகள் அனைத்திற்கும் தலைமையேற்று வழி நடத்துபவர்கள் பெரும் தரகு அதிகார முதலாளிகளின் குடும்பத்தினர். தொழில் முறை அரசியல்வாதிகளாகவும், சாமியார்களாகவும், முன்னாள் அதிகாரிகளாகவும் உள்ள பார்ப்பன – பனியா சாதியக் கும்பலைச் சேர்ந்தவர்கள். இந்தச்சாதிகளும் அமைப்புகளும் நாட்டின் பெரும்பான்மையான இந்துக்கள் எனச்சொல்லப்படும் பெண்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட,பழங்குடி மக்களை ஒரு போதும் இந்துக்களாகவும் சமமான சமூக – மத உரிமை உடையவர்களாவும் நடத்தியதே கிடையாது. சதி முதலிய பெண்ண்டிமைத்தனமும், பார்ப்பனிய சநாதன வருணாசிரம – சாதிய தர்மமுமே இந்தக் கும்பலின் கண்ணோட்டமாக உள்ளது.

இந்து ராஷ்டிரம் எத்தகையாத இருக்கும் என்பதை இந்தும வெறி பாசிஸ்டுகள் இப்போதே நிரூபித்துவிட்டார்கள். பத்திக்கையாளர்கள் மீதான் தாக்குதலும் நாடு முழுவதும் சிறுமான்மையினர் உயிரோடு எரிப்புதும் சான்றுகளாக விளங்குகின்றன. ஆட்சியாளர்கள் என்ன நினைக்கிறார்களோ அதுதான் உண்மை என்று எழுதவும் பேசவும் முடியும்; அதுதான் இராம ராஜ்ஜியத்தில் கருத்துச் சுதந்திரம். சிறுபான்மையினருக்கு சமூக, மத, பண்பாட்டு உரிமைகள் மட்டுமல்ல, வாழும் உரிமையே மறுக்கப்படும் என்று காட்டி விட்டார்கள்.

அது மட்டுமல்ல, இந்து மதவெறி பாசிச ஆட்சியை நிறுவி தங்களது ஆதிக்கம், சுரண்டல் நலன்களைத் தக்க வைத்துக் கொள்ள,நீடித்துக் கொள்ள தரகு அதிகார முதலாளிகளும் ஏகாதிபத்தியங்களும் பழைய – புதிய நிலப் பிரபுக்களும் ஊட்டி வளர்த்து வருகின்ற நச்சுப் பாம்புகளே இந்த பார்ப்பன – பனியா அமைப்புகள்.

ஏகாதிபத்தியங்களுக்கு நாட்டை மறு அடகு வைக்கும் நரசிம்மராவ் அரசின் புதிய பொருளாதாராக் கொள்கைகளால், உழைக்கும் மக்கள் என்றும் இல்லாத அளவு சுரண்டலுக்கும், விலையேற்றத்திற்கும், வேலை இல்லாத் திண்டாட்டத்திற்கும் ஆளாகி ஆலையில் சிக்கிய கரும்பாக அவதிப்பட்டு வருகின்றனர். மதவெறியைத் தூண்டி இப்பிரச்சினைகளில் இருந்து மக்களைத் திசை திருப்பி அவர்கள் ஒருவரை ஒருவர் வெட்டிப் படுகொலை செய்து கொள்ளும் பாதையில் தள்ளிவிடுவது; இதன் மூலம் புதிய பொருளாதாரக் கொள்கையின் ஆதாயங்களை உறுதிப்படுத்திக் கொள்ள ஏகாதிபத்தியங்கள், தரகு அதிகாரமுதலாளிகள் பழைய – புதிய நிலப்பிரபுக்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுப்பது இதுதான் இந்த இந்து மதவெறி பாசிஸ்டுகளின் உடனடி நோக்கமாகும்.

இதுவரை தேசவிரோத – பயங்கரவாத – பிரிவினைவாத பீதியூட்டி நியாயமான தேசிய இன, ஜனநாயக உணர்வுடைய சக்திகளை அடக்கி ஒடுக்கும்படி கோரி அரசியல் ஆதாயம் அடைந்து வந்தது இந்த பார்ப்பன – பனியா பாசிச கும்பல். இப்போது இந்த நாட்டின் நீதி – நிர்வாகம், அரசியல் அமைப்பு, சட்டத்திட்டங்கள், மரபு – நியதிகள் எதையுமே மதியாத தமது வெறிச் செயல்கள் மூலம் இவர்கள் தாம் உண்மையான வன்முறையாளர்கள், பயங்கரவாதிகள், தேசதுரோகிகள், பிரிவினைவாதிகள், சமூகவிரோதிகள், தீவிரவாதிகள், வகுப்புவாதிகள் என்று நாட்டுக்குத் தம்மை அடையாளங் காட்டிக் கொண்டு விட்டனர்.

பாபரி மசூதியை இடித்து, நாடெங்கும் மதவெறிப் படுகொலை வெறியாட்டத்தைக் கட்டவிழ்த்து விட்டதன் மூலம் இசுலாமிய மக்களின் மத உணர்வைப் புண்படுத்தி ஆறாத வடுவை ஏற்படுத்தி விட்டார்க்கள். இந்து – இசுலாமிய மக்களிடையே நிலவி வந்த சகோதரத்துவ உணர்வு – ஒருமைப்பாட்டின் மீது திரிசூலத்தைப் பாய்ச்சி அவ நம்பிக்கையையும், பிளவையும் ஏற்படுத்தி விட்டார்கள்.

பாரதீய ஜனதா கட்சி மத்தியில் ஆட்சியைப் பிடிக்கும் வரை மசூதியை இடிக்க மாட்டார்கள்; பிரச்சினையை உயிருள்ளதாக இழுத்தடித்து அரசியல் ஆதாயம் அடைய முயலுவார்கள் என்றுதான் நாம் உட்பட அரசியல் நோக்கர்கள் கருதினோம். இந்த முறையும் மசூதியை முற்றாக இடித்துவிடக்கூடாது; தடைகளை மீறி மசூதியை இடிக்கும்போது மத்திய போலீசு துப்பாக்கிச்சூடு நடத்தும்; கணிசமான கரவேகர்கள்சுட்டுக் கொல்லப்படுவார்கள்; அவர்களுக்குத் தியாகிப் பட்டங்கட்டி, மீண்டும் அஸ்திகலச ஊர்வலங்கள் நடத்த அனுதாப அலையைக் கிளப்பி ஆதாயம் அடையலாம் என்பதுதான் ஒரு பிரிவினரது நோக்கநம். ஆனால் பா.ஜ.க ஆளும் நான்கு மாநிலங்களிலும் லஞ்ச ஊழல் பதவிச்சண்டையிலும் கோஷடித் தகராறிலும் சிக்கியதால் அதன் ‘தூய்மை’ வேடம் கலைந்து அம்பலப்பட்டுப் போனது. அதோடு சமசரப் பேச்சு,நீதிமன்ற முடிவு ஆகிய எதையாவது ஏற்கும்படியான நிர்பந்தம் அதிகரித்து வருவதைக் கண்டார்கள். எனவே முந்திக் கொண்டு தமது சதித் திட்டத்தை அமுலாக்கிவிட்டார்கள்.

ஆதிக்கத்தை, அதிகாரத்தை கைப்பற்றவும் காப்பாற்றிக் கொள்ளவும் பஞ்சமா பாதகங்களைச் செய்வது குற்றமல்ல என்று இந்த இந்துமதவெறி பாசிஸடுகளின் மூதாதையர்களும் ஆசான்களுமான மனுவும், கௌடில்யனும் போதித்தார்கள். அதையே அவர்களின் சந்ததியினர் இப்போது கடைப்பிடித்துள்ளனர். நாட்டின் சட்டம் ஒழுங்கையும், நீதியையும் வழுவாது கடைப்படிப்போம் என்று வாக்களித்து, நாட்டையும் மக்களையும் நம்பவைத்துக் கழுத்தறுத்து விட்டார்கள். வேறெதையும் விட இந்த நம்பிக்கைத் துரோகத்துக்காவது தண்டிக்கப்பட வேண்டிய, இல்லை, இல்லை பழிவாங்கப்பட வேண்டிய கொடிய எதிரிகளாக இவர்களை நாடும் மக்களும் கருத வேண்டும்.

__________________________________________________

– புதிய ஜனநாயகம், ஜனவரி – 1993
___________________________________________________

 1. அவமானத்தினாலும், வெட்கத்தினாலும் தலைக்குனிந்து சிறுத்து போய் உள்ளேன் இன்று….. என் நண்பனுக்கு, சகோதரனுக்கு ”இனிய காலை வணக்கம்” என்று சொல்ல முடியாமல் போனதற்காக… அவன் பிறப்பினால் முஸ்லிம் என்பதற்காக.. என் நட்பையும், தோழமையும் எப்படி வெளிப்படுத்துவது….

  • நடராஜன், 19 வருசமா சிறுத்து போய்ட்டிங்க, ஆனால் எம் ஹிந்து சகோதரர்கள் தினம் தினம் சிறுத்து போவதற்கு என்ன சொல்கிறீர்?, ஏன் அப்படியென்றால் உங்கள் நண்பர் இந்தியாவில் குண்டுவெடிக்கும் நாட்களில் உங்களிடம் “குட் மார்னிங் நடராஜன்” சொல்வதிலையா?, இதுதான் ஒரு உண்மையான ஹிந்து. அவர்கள் எவளோ அடித்தாலும் நாம்தான் குனிகுருகுகிறோம்.

   • பாபர் மசூதியை இடிப்பதற்கு முன் இந்தியாவில் ஒரு குண்டாவது வெடித்திருக்கிறதா இந்து தீவிரவாதி?போய் புள்ளைங்களை படிக்கவை.

    • மிதவாதி, நீ மூடு, நேற்று ஆப்கானிஸ்தானில் குண்டு வெடித்தது ஆண்டு யார் எந்த மசூதியை இடித்தார்கள்?

     • பதில் இருந்தால்தானே அவர்கள் சொல்வார்கள்!தெரியாத பதிலை எப்படி சொல்வார்கள்?

     • ஆப்கானீஸ்தானில் அவர்கள் தங்களின் வாழ்வுரிமைக்காக போராடுகிறார்கள்.நம்நாட்டை வெள்ளையன் ஆக்ரமித்தபோது நம்முன்னோர்கள் போராடியது போல்.

  • வாயால்தான்!இது என்ன கேள்வி?முகலாய மன்னர்கள் இடிக்காத கோவில்களா?ஏன் இப்போது சமீப காலமாகவே பாகிஸ்தானில் அவர்கள் இடித்து தள்ளத கோவில்களா?

 2. சிரிப்பு வருது!
  பாபர் மசூதி இடித்தால் தான் இந்தியாவில் குடுவேடிக்குதோ?
  இஸ்லாமியர்கள், திருபரங்குன்றம் அவர்களுக்கு வேண்டும் என்று பொய் கேஸ் போடுவது சரியா?, அதனால் ஏற்பட்ட கலவரத்தில் கொலப்பட்ட ஹிந்துக்களுக்கு வெறி இல்லையா?
  ஏன் ஒரு ஹிந்து, அரேபியாவில் கோவில் கட்டமுடியுமா?, இல்லை ரோம் கோவில் கட்டமுடியுமா?, எங்களுக்கு இருப்பது ஒரே தேசம், ஹிந்துக்கள் உலகளவில் சிறுபான்மையினரே.இன்னும் எத்தனை வருடங்களுக்கு இதையே சொல்லி அவர்களை துண்டிவிடுகிரிகள். எல்லா குண்டுவெடிப்புக்கும் ஹிந்துக்கள் கோபபட்டால்?

  • சரியான கேள்விகள்!மற்ற இந்துக்களும் வாங்க!இங்கே விவாதிப்போம்!பதில் சொல்லாம இருந்தா இவுங்க மாட்டுக்கு அடுக்கிகிட்டே போவாங்க!இதே நாம் இவர்கள் பாணியில் பதில் சொல்ல எத்தனித்தால் கமண்டுகள் மாடரேட் செய்யப்படும்!

 3. I have been expecting this type of article since from morning. Now only has come. Reason for delay? May be they must have searched any other “Hindu” related article and could not found. One more thing, why you have not written about the temples those were demolished after Dec 6? why you have not written about the hindus who have been killed after Dec 6? why you have not written about the problem ordinary citizens have been facing on every year Dec 6?

 4. அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?

  ராமன் பிறந்தது தசரதனுக்கா? குதிரைக்கா? பார்ப்பன குருக்களுக்கா?

  ராமனின் தந்தை தசரதன் நடத்திய அசுவமேத யாகம்.

  அறுபதாயிரத்து மூன்று மனைவிமார்கள் தசரதனுக்கு இருந்தும் குழந்தை மட்டும் இல்லை. அதற்காக அசுவமேத யாகம் ஒன்றை நடத்தினான் தசரதன். இந்த யாகத்தை நடத்துவதற்காக கலைக்கோட்டு (ருசிய சிருங்கர்) முனிவர் அழைத்து வரப்பட்டார்.

  இதுபற்றி பண்டித மன்மத நாததத்தயர் பின்வருமாறு மொழி பெயர்த்து எழுதுகிறார்.

  Kausalya with three strokes slew that horse experiencing great glee.
  Kausalya with an undisturbed heart passed one night with that horse.

  The Hotas, Adhwaryus and the Ugatas joined the king’s wives.

  இதன் பொருள் வருமாறு: தசரதனின் மூத்த மனைவியாகிய கோசலை மூன்று வெட்டில் அக்குதிரையை மிக உற்சாகத்தோடு கொன்றாள். அவள் கலங்கா நெஞ்சோடு ஒரு நாளிரவை அக்குதிரையோடு கழித்தாள்.

  ஹோதா, அத்வர்யு முதலிய இருத்துவிக்குகள் இராச பாரியைகளைப் (தசரதனின் மனைவிகளை) புணர்ந்தார்கள்.

  இதன் காரணமாக தசரதனின் ராஜபத்தினிகள் கர்ப்பம் தரித்தார்கள் என்று வால்மீகி தெளிவாகவே கூறியுள்ளார்.

  ஆனால் வால்மீகி இராமாயணத்தைத் தமிழில் மொழிபெயர்த்த கம்பனோ என்ன எழுதுகிறான்? யாகசாலையில் புகுந்து கலைக்கோட்டு மாமுனி தீ வளர்த்து ஆகுதி வழங்கினான். உடனே பூதமொன்று தீயினின்று எழுந்தது. பூதம் தோன்றி தந்த பாயசத்தைத் தசரதன் தன் மனைவியர் மூவருக்குப் பங்கிட்டுக் கொடுத்தான். அதன் காரணமாக கவுசலை, கைகேயி, சுபத்திரை ஆகியோர் கர்ப்பம் தரித்தனர் என்று புளுகுகிறார்.

  ஆரியக் கலாச்சாரம் விபச்சாரத்தைக் கலையாகப் போற்றுவது; அந்தக் காவியத்தை மொழிபெயர்க்க வந்த கம்பனுக்கு ஏனிந்த திரிபு வேலை? – – பா.வே. மாணிக்கவேலர் . SOURCE: விடுதலை
  *********

  click the link and read.

  >>>>ராமன் பிறந்தது தசரதனுக்கா? குதிரைக்கா? பார்ப்பன குருக்களுக்கா? <<<<>>>
  இராமனா கடவுள்?? *
  <<<<<

  .

  • இதே போல முகமது நபி ஆறு வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டது பற்றியும் பேசுவேங்களா?சாராவுக்கு மெனோபாஸ் வந்தப்புறம் பிறந்த ஐசக் பற்றி பேசுவோமா?மத மருப்புன்னா எல்லா மதங்களையும் பற்றி பேச வேண்டும்!பெரியாரின் காமெடி கனிகளை இங்கே யூஸ் பண்ண வேண்டாம்!

   • //இதே போல முகமது நபி ஆறு வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டது பற்றியும் பேசுவேங்களா?சாராவுக்கு மெனோபாஸ் வந்தப்புறம் பிறந்த ஐசக் பற்றி பேசுவோமா?மத மருப்புன்னா எல்லா மதங்களையும் பற்றி பேச வேண்டும்!பெரியாரின் காமெடி கனிகளை இங்கே யூஸ் பண்ண வேண்டாம்!

    // வினவிலேயே இஸ்லாம், கிருத்துவ மதங்களின் அயோக்கியத்தனங்களை விமர்சித்து கட்டுரைகள் வந்துள்ள்ன. இவ்வளவு வீறாப்பு பேசுற நீ இந்து மதத்தின் அயோக்கியத்தனத்தை ஒத்துக்கிவியா? இதுக்கு பெரியார் கருத்தை பேசுபவனா இருக்கனும்னு அவசியமில்லை. கொஞ்சமே கொஞ்சம் சூடு சொரனை சுய புத்தி இருந்தா போதும். இருக்கா?

    • அகமது, யாரோ சிலர் பண்ற கூத்துக்கு ஒட்டுமொத்த ஹிந்துக்களும் பொறுப்பா?

    • இந்துமதத்தின் ‘அயோக்கியத்தனம்’ எல்லா இந்துக்களின் தலையிலும் இன்னும் முழுதாக அடித்து இறக்கப்படவில்லை. முஸ்லீம்கள் அந்த வசதியை RSS க்கும் செய்து கொடுக்க வேண்டாம். இந்துமதத்தை விமர்சிக்கும்போது மார்க்சிசமும், குரான்/ஹதிதுகள் தொடப்பட்டால் மார்க்க விசுவாசமும் மாறி மாறி வருவதேன்?

    • கொஞ்சமே கொஞ்சம் சூடு சொரனை சுய புத்தி இருந்தா போதும்////
     .
     .
     எனக்கு இருக்கு ஸ்டாலின் பத்தி கமன்ட் போட்டாலே அதை மட்டறுத்தல் செய்யும் உங்களின் நேர்மையில் சூடு சுரனை தெரிகிறது!இதே போல நானும் சூடு சுரனைன்னு கமன்ட் போட்டா வருமா?

     • //ஸ்டாலின் பத்தி கமன்ட் போட்டாலே அதை மட்டறுத்தல் செய்யும்//

      ஏம்பா நல்லுவங்களா நாங்கள் மதங்களை விமர்சிக்கும்போது நீங்க புனிதம்னு எழுதியிருப்பதிலிருந்துதான் விமர்சிக்கிறோம். நீங்க ஸ்டாலின விமர்சிக்க ஏன் கண்ட கண்ட நாய்ங்க எழுதுன அவதூறுலர்ந்து எழுதுறீங்க.

  • சாரி யார்க்கு பிறந்தா உமக்கேன்ன?உமக்குத்தான் ஸ்டாலின் லெனின் மார்க்ஸ் மும்மொர்த்திகள் உள்ளார்களே!அவர்களை வழிபாட்டு பொ!

 5. இதே போல பழைய முகலாய ஆட்சிகளில் இடிக்கப்பட்ட கோவில்கள் எத்தனை?என்பதையும் சொல்வீங்களா?

 6. இஸ்லாமிய நாடுகளில் அவர்கள் தனகளுக்குள் ஒற்றுமையாக உள்ளனரா?ஷியா சன்னி மோதல் காரணமாக முகரம் நிகழ்ச்ச்சியிலேயே குண்டு வைக்கப்பட்டுள்ளது
  http://tamil.oneindia.in/news/2011/12/06/world-suicide-blast-at-shia-shrine-kabul-more-than-30-killed-aid0091.html
  ஆனால் இந்தியாவில் அமைதியாக நடந்தது!பாகிஸ்தானில் பளுச்,சிந்தி பிரிவு மக்களை எப்படி நடத்துகிறது பாகிஸ்தான் அரசு?அதையும் சொல்லுங்க!

  • //இஸ்லாமிய நாடுகளில் அவர்கள் தனகளுக்குள் ஒற்றுமையாக உள்ளனரா?ஷியா சன்னி மோதல் காரணமாக முகரம் நிகழ்ச்ச்சியிலேயே குண்டு வைக்கப்பட்டுள்ளது
   http://tamil.oneindia.in/news/2011/12/06/world-suicide-blast-at-shia-shrine-kabul-more-than-30-killed-aid0091.html
   ஆனால் இந்தியாவில் அமைதியாக நடந்தது!பாகிஸ்தானில் பளுச்,சிந்தி பிரிவு மக்களை எப்படி நடத்துகிறது பாகிஸ்தான் அரசு?அதையும் சொல்லுங்க!

   // நல்லவன், அயோக்கியத் தறுதலை இரண்டு பேரிடமும் ‘நீ ஒரு அயோக்கியனா?’ என்ற கேள்வியக் கேட்டா ரெண்டு விதமா பதில் வரும். அதை வைத்து சொல்லிவிடலாம் எவன் நல்லவன் எவன் தறுதலை நாய் என்று. அயோக்கியன் சொல்லுவான்: ‘அடுத்த தெரு ரவுடி கூடத்தான் பொறுக்கித்தனம் செய்யுறான். அதையும் சொல்லு என்று’.

   இந்து வெறியர்களின் பதில் எப்போதுமே இப்படித்தான் இருப்பதை பார்த்திருப்பீர்கள். அயோக்கியன் யாரென்று தெரிகிறதா?

   • முஸ்லிம் வெறியர்கள் இருக்கும் வரை ஹிந்து வெறியர்கள் இருப்பார்கள்.
    நீ அயோக்கியன் என்றால் நான் உன்னை விட பெரிய அயோக்கியன். இதில் தவறில்லையே, நாங்க சும்மா இருப்போம் என்று என்னவேண்டாம்.

    • ///முஸ்லிம் வெறியர்கள் இருக்கும் வரை ஹிந்து வெறியர்கள் இருப்பார்கள்.
     நீ அயோக்கியன் என்றால் நான் உன்னை விட பெரிய அயோக்கியன். இதில் தவறில்லையே, நாங்க சும்மா இருப்போம் என்று என்னவேண்டாம்.

     // இந்து வெறியன் அயோக்கியன் என்று ஒத்துக் கொண்டதற்கு நன்றி. நாங்கள் இஸ்லாம் வெறியர்கள் அல்ல. எனவே அயோக்கியர்கள் அல்ல.

     • அகமது, எப்போது உன் மதத்துக்காக மற்றவர்களை அவமதிக்கிறாய் அப்போது நீ இஸ்லாம் வெறியன், அயோக்கியன்.

    • உங்களுக்குத் தில் இருந்தா குண்டு வச்சிட்டு நாங்கதான் வச்சோம்னு சொல்லவேண்டியதுதானே. ஏன் பாய்ங்க மேல போடறிங்க கோழைகளா.

   • ‘அடுத்த தெரு ரவுடி கூடத்தான் பொறுக்கித்தனம் செய்யுறான். அதையும் சொல்லு என்று’. ////…ஆமா இந்தியாவுல அமைதியாத்தான நடந்தது முகரம் ஊர்வலம்?எங்க குண்டு வெடிச்சுது?உலகிலயே இந்தியா தவிர வேறு எந்த நாட்டில் இஸ்லாமியர்கள் அமைதியாக வாழ முடிகிரது என்பதை அய்யா சொல்லுங்க!

    *
    *
    இந்து வெறியர்களின் பதில் எப்போதுமே இப்படித்தான் இருப்பதை பார்த்திருப்பீர்கள். அயோக்கியன் யாரென்று தெரிகிறதா?////…முல்சிம் வெறியகளிடம் இருந்து வரும் பதிலையும் என்னால் சொல்ல இயலும்(உங்களுக்கு அரபி மொழி தெரியாது!ஆகையால் குரான் பத்தி பேச தகுதியில்லை!இதான வழக்கமான பதில்?)!பிரச்னையை ஒட்டி பேசவும்!

    • //!பிரச்னையை ஒட்டி பேசவும்!//
     நீ முதல்ல அதச் செய்யு. மசூதி இடிக்கப்பட்டத பேசுன்னா அங்க கருப்பு காக்கா பறக்குது இங்கதான் வெள்ளக் காக்கா பறக்குதுன்னு ஏன் உளறுற.

  • //இஸ்லாமிய நாடுகளில் அவர்கள் தனகளுக்குள் ஒற்றுமையாக உள்ளனரா?ஷியா சன்னி மோதல் காரணமாக முகரம் நிகழ்ச்ச்சியிலேயே குண்டு வைக்கப்பட்டுள்ளது
   // இந்துக்கள் என்று நீங்கள் சொல்லும் கூட்டம் மட்டும் எப்படி உள்ளதாம்? ஆர் எஸ் எஸ் குஞ்சாமணிகளீன் ஆதரவுடன் ஆதிக்க சாதி வெறியர்கள் நாளும் கொலை, கொள்ளை, கற்பழிப்புகளை நாடு முழுவதும் அரங்கேற்றி வருகிறார்கள்தானே? அதைப் பேச வக்கற்ற மூளையற்ற முண்டங்கள் 40 வயதான பின்னும் அரை டவுசர் போட்டு அலைகின்றன. ஆர் எஸ் எஸ்ன் உடை அரை டவுசராக இருப்பது ஏன் இன்று இப்போது புரிகிறதா?

 7. The muslims started it all again. This has been happening even before independence in INDIA. The mughals demolised hundreds of temples and religious places all over the world (even the heritage buddha statue in Afghan). They are moving towards barbaric period. This mosque was constructed after demolishing the Ram temple and we have enough scientific evidence to prove this. A truly educated muslim will understand this. However, to make some money and for the sake of shouting (juz because they don’t have any other material work), some people celebrate this as a martyrs day without knowing the fact that what will happen if 100 crore Hindus uprise against these minorities?? WIll IT TAKE MUCH TIME TO DEMOLISH ALL THE MOSQUES IN INDIA?? CAN’T WE DEMOLISH TAJMAHAL (ACTUALLY A BURIAL PLACE) IN LESS THAN TWO MINUTES?? MUSLIMS SHOULD REALISE THE GROUND REALITY.. ALL ACROSS THE GLOBE, INDIA IS THE ONLY COUNTRY WHERE WE PEOPLE LIVE IN HARMONY AND WE ARE NOT HARMING THEM. EXCEPT 20 MUSLIMS GOVERNED NATIONS, THEY DON’T HAVE SECURITY AND THEY ARE ALMOST TREATED LIKE PIGS GLOBALLY. Let them first behave like educated, and let them put their religion behind and put mankind forward.. Rest will follow and they’ll get the love they need and blessing of Allah!!

 8. those who put up comment here (shamelessly alleging that their comments are moderated) should dare to come for a honest debate. the same terrorist ferver comes out with the helpless cry caused by the exposed crimes and barbaric tradition of this the most shabby religious institution. when one says U r a criminal, u say there are criminals elsewhere too, which implies your obvious acceptance of your crime. and to that we and the article add, it was u who started the cycle of autrocities with the very purpose of continuing that cycle. and now u call your fello hindus using, cheating and decieving whom u make your political survival. u hindu terrorists! try to see things sensibly. otherwise, u will surely be rooted out.

 9. றஜன் / ஸுரெஷ் / ஈன்டிஅன் / இன்டு ட்கேவிரவட்கியெ !!

  1992 இல் இருந்து இன்று வரை 19 வருடங்களில் உங்கள் இந்து வீரம் என்னவென்று தெரிந்து விட்டது !!! 1. மேலைத்தேய கிறிஸ்துவர்களுக்கு காசுக்கு கடல் கடந்தும் போய் சேவகம் செய்வீர்கள் 2. பாபர் மசூதிக்கு முன்பு எங்கு எத்தனை குண்டு வெடித்தது 3. காழ்மீரில் இந்திய அரசு செய்யும் படுகொலைகள் இப்போது வெளிப்படையாக அம்பலமாகி புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டனவே – அதற்கான எதிர்வினைகளாக காழ்மீரில் முஸ்லிம் தீவிரவாதம 1992 முன்பு இருந்து இருக்கலாம் 4. இஸ்லாம் பற்றியும் வினவுல் வந்த பல கட்டுரைகளைப் படியுங்கள் – செங்கொடி, பறையோசையில் தொடராகவே வந்து உள்ளது.

 10. முகமது நபியின் குரானும் ஒரு புரட்டுதான் – வியாபாரியின் தந்திரவித்தைகள் தான் என்பதற்கு செங்கொடி, பறையோசையிலும், வினவிலும் படித்துப் பாருங்கள். இந்து பயங்கரவாதிகள் உங்களிடம் இருந்தும், முஸ்லிம், கிறித்துவ மற்றும் எல்லா மத பய்ங்கரவாதிகளையும் வினவு கண்டித்தே வந்து உள்ளது.

  சும்மா உளர வேன்டாம்.

  • அல் குரான் புரட்டு என்று நிருபிக்கவந்த பெரியார் திகவினரின்நிலையை ஆன் லைன் பீஜே.காம்.ல்பார்த்துகொள்ளுங்கள்

 11. \\அறுபதாயிரத்து மூன்று மனைவிமார்கள் தசரதனுக்கு இருந்தும் குழந்தை மட்டும் இல்லை\\

  விளக்கு புடிச்ச மாதிரியே எழுதுறானுங்களே…

  போலி வினவு தோழர்களே, அப்படியே காஷ்மீரில் இடிக்கபட்ட சைவ, வைணவ வன்வாசி கோயில்களை பற்றியும் நீங்கள் ஏன் ஒரு கட்டுரை எழுத கூடாது….

 12. //அப்படியே காஷ்மீரில் இடிக்கபட்ட சைவ, வைணவ வன்வாசி கோயில்களை பற்றியும் நீங்கள் ஏன் ஒரு கட்டுரை எழுத கூடாது….
  // கூடவே சமண கோயில்களை ஆட்டயப் போட்டு பெருமாள், விஷ்ணு எழுந்தருளிய கதைகள், பொன்னையும்-நகையையும் கொள்ளையிட கோயில் கோயிலாக படையெடுத்த ‘இந்து’ மன்னர்கள் இவற்றையும் சேர்த்தே எழுதலாம், எழுதியிருக்கிறார்கள். இவற்றுக்கு பதில் சொல்ல பயந்து ஆர் எஸ் எஸ் பன்னிகள் ஓடி ஒளிந்திருக்கிறார்கள்.

  • கூடவே சமண கோயில்களை ஆட்டயப் போட்டு பெருமாள், விஷ்ணு எழுந்தருளிய கதைகள், பொன்னையும்-நகையையும் கொள்ளையிட கோயில் கோயிலாக படையெடுத்த ‘இந்து’ மன்னர்கள் ///….அது பழைய கதைன்னு சொன்னாலும் முகலாய மன்னர்கள் சிறப்பை சொல்ல ஆரம்பித்தால் யாரும் இருக்க மாட்டீங்க!இஸ்லாம் தவிர மற்றவர்கள் மீது வரி போட்டது யார்?அதையும் சொல்லுங்கள் சிகப்பு சிங்கங்களே! பாகிஸ்தான் ஆப்கன் போன்ற நாடுகளில் இன்றும் அது(மற்ற மத மக்களை கொள்வது,வழிபாட்டு தளங்களை அழிப்பது) நடந்து கொண்டிருப்பதையும் சிகப்பு சிங்கங்கள் சொல்லலாமே?

 13. //கூடவே சமண கோயில்களை ஆட்டயப் போட்டு பெருமாள், விஷ்ணு எழுந்தருளிய கதைகள், பொன்னையும்-நகையையும் கொள்ளையிட கோயில் கோயிலாக படையெடுத்த ‘இந்து’ மன்னர்கள் ///….அது பழைய கதைன்னு சொன்னாலும் முகலாய மன்னர்கள் சிறப்பை சொல்ல ஆரம்பித்தால் யாரும் இருக்க மாட்டீங்க!இஸ்லாம் தவிர மற்றவர்கள் மீது வரி போட்டது யார்?அதையும் சொல்லுங்கள் சிகப்பு சிங்கங்களே! பாகிஸ்தான் ஆப்கன் போன்ற நாடுகளில் இன்றும் அது(மற்ற மத மக்களை கொள்வது,வழிபாட்டு தளங்களை அழிப்பது) நடந்து கொண்டிருப்பதையும் சிகப்பு சிங்கங்கள் சொல்லலாமே?

  // அது பழைய கத இல்ல தம்பி. நாட்டார் தெய்வங்களை இன்னைக்கும் ஆர் எஸ் எஸ் பாப்பன குஞ்சுகள் கிராஸ் பெல்ட் பாடுகள் ஆட்டயப் போட்டுக் கொண்டுதான் உள்ளனர். சிதம்பரம் கோயிலில் சூத்திர தமிழ் ‘இந்து’க்களின் வழிபாட்டு உரிமையை ஆர் எஸ் எஸ் ஆதரவுடன் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளவர்கள் முஸ்லீம்கள் அல்ல. இஸ்லாம் அடிப்படைவாதம் ஒழித்து கட்டப்பட வேண்டியது என்பதை வினவின் பல பதிவுகள் எழுதியுள்ளன. நீ நேர்மையானவன், சூடு சொரனையுள்ளவன் எனில் இந்து அடிப்படைவாதமும், பயங்கரவாதமும் ஒழித்துக்கட்டப்பட வேண்டியது என்றுதானே சொல்லனும்? மாறாக இஸ்லாமைப் பார் என்று அங்கு கை காட்டி உனது அசிங்கத்தை மறைக்க முயல்வதற்கு என்ன பெயர்?

 14. //அது பழைய கதைன்னு சொன்னாலும் முகலாய மன்னர்கள் சிறப்பை சொல்ல ஆரம்பித்தால் யாரும் இருக்க மாட்டீங்க!இஸ்லாம் தவிர மற்றவர்கள் மீது வரி போட்டது யார்?அதையும் சொல்லுங்கள் சிகப்பு சிங்கங்களே! பாகிஸ்தான் ஆப்கன் போன்ற நாடுகளில் இன்றும் அது(மற்ற மத மக்களை கொள்வது,வழிபாட்டு தளங்களை அழிப்பது) நடந்து கொண்டிருப்பதையும் சிகப்பு சிங்கங்கள் சொல்லலாமே?
  //பாகிஸ்தான் வரை செல்லும் காவி பன்னிகள் இங்கே பக்கத்து ஊர்களில் தீண்டாமை, ஆதிக்க சாதி பெருமிதம் என்ற பெயரில் இவர்களுக்கு அடியாட்படையாக மட்டும் செயல்பட பயன்படுத்திக் கொள்ளும் தாழ்த்தப்பட்ட ‘இந்துக்கள்’ கொல்லப்படுவதையும், அவர்களின் வழிபாட்டு தளங்கள் ஆக்கிரமிக்கப்படுவதையும், அவர்களின் வழிபாட்டு உரிமைகள் பறிக்கப்படுவதையும், பண்பாட்டு ரீதியாக, பொருளாதார ரீதியாக ஒடுக்கப்படுவதையும் எதிர்த்து குரல் கொடுப்பார்களா? இந்தியா பார்ப்பனிய-சாதிய பயங்கரவாதத்தில் மூழ்கடித்து சுரண்டும் பார்ப்பனியத்தை, ஆதிக்க சாதி வெறியை ஒழிக்க முன் வருவார்களா?

   • எல்லாரையும் இந்துன்னு அல்வா மாறி பேசுறீங்கள்ல, பரமக்குடில சுட்டு கொன்னுங்கீள்ள அவங்களோட நிலைமை என்ன? தண்டகாருண்ய பழங்குடி மக்களின் நிலை என்ன?

  • //பாகிஸ்தான் வரை செல்லும் காவி பன்னிகள் இங்கே பக்கத்து ஊர்களில் தீண்டாமை, ஆதிக்க சாதி பெருமிதம் என்ற பெயரில் இவர்களுக்கு அடியாட்படையாக மட்டும் செயல்பட பயன்படுத்திக் கொள்ளும் தாழ்த்தப்பட்ட ‘இந்துக்கள்’ கொல்லப்படுவதையும், அவர்களின் வழிபாட்டு தளங்கள் ஆக்கிரமிக்கப்படுவதையும், அவர்களின் வழிபாட்டு உரிமைகள் பறிக்கப்படுவதையும், பண்பாட்டு ரீதியாக, பொருளாதார ரீதியாக ஒடுக்கப்படுவதையும் எதிர்த்து குரல் கொடுப்பார்களா? இந்தியா பார்ப்பனிய-சாதிய பயங்கரவாதத்தில் மூழ்கடித்து சுரண்டும் பார்ப்பனியத்தை, ஆதிக்க சாதி வெறியை ஒழிக்க முன் வருவார்களா?
   // பதில் சொல்லாம பாதியிலேயே எஸ்கேப்பாயிட்டாரே ராஜன்? அவரோட உளக்கொதிப்பு அவ்வளவுதான் போல

 15. //இஸ்லாமிய நாடுகளில் அவர்கள் தனகளுக்குள் ஒற்றுமையாக உள்ளனரா//

  உன் …———- கழுவுடா. ஒரே இனம், ஒரே மதம், ஒரே மொழி பேசுனாலும் எல்லா இந்துவும் ஒன்னாவா இருக்கீங்க. இதுல வேற தலையில பொறந்த ஸ்பெஷாம். பொறப்புலேயே ஏற்றத்தாழ்வு பாக்குற ஒரே மதம் ஒங்க மதம்தான். நாதாரி, குடிக்க தண்ணி கொடுக்கறதுல கூட சாதி பாக்குறீங்களடா. தூ வெக்கங்கெட்டவைங்களா.

  • ஒரே இனம், ஒரே மதம், ஒரே மொழி பேசுனாலும் எல்லா இந்துவும் ஒன்னாவா இருக்கீங்க///
   .
   .
   பிணத்தை கூட சகிக்காத முசல்மான்கள்!
   https://www.vinavu.com/2009/08/24/ahmadiyya/
   நீ மொதல்ல ______ கழுவு!அசிங்கமா பேசத்தான் அல்லா சொல்லி கொடுத்தாரா?நாங்கள் அமைதியாக பேசி கொண்டிருக்கிறோம்!

 16. ஏண்டா மசூதிய இடித்து மதவெறியாட்டம் போடுறீங்கன்னு பாப்பார பண்ணாடைகளிடம் கேட்டால்… அவன் அதை இடிச்சான்… நா இதை இடிக்கிறேன்… திமிரோடு சொல்கிறான்…

  ஈழத்தில் உங்க கோயிலை இடிச்ச… இடிக்கும் சிங்களவனோடு சேர்ந்துதானேடா தமிழ் மக்களை கொலை செய்கிறீர்கள்? அப்படின்னா… ஈழ படுகொலைக்கு துணை போன எம்.கே.நாராயணனும், சிவசங்கர மேனனும், சூ சாமியும், ஹிந்து ராமும், ஜெயலலிதாவும், சோ மாறியும், பிரனாபும், வாஜ்பாயும், அத்வானியும், ப.சிதம்பரமும் யாருடா?

  ஈழ கோயில் இடிப்புகளுக்கும், படுகொலைக்கும்… ஆர்.எஸ்.எஸ். என்ன சொல்றான்னு எவனாவது கேட்டானா?

  இவனுவ கடவுள் ராமன் முதல் ராகுல் வரை பேடி பொட்டை பசங்கதானே? முதுகில் குத்தும் துரோகிகள்… இதில் பார்ப்பார ——————————-குடிக்கும் அடிவருடிகள் வேற… ஹிந்து… பொந்து… சந்து கிளம்பிறானுவ…

  • பார்ப்பார ——————————-குடிக்கும் அடிவருடிகள் வேற… ஹிந்து… பொந்து… சந்து கிளம்பிறானுவ…///
   .
   .
   இந்த அசிங்கமான மொழிகளை அனுமதித்தான் மூலம் வினவு தனது நடுநிலை வாதத்தை தெளிவாக காட்டியுள்ளது!திரும்ப இதே மொழியில் பதில் அளிக்க எங்களுக்கும் தெரியும்!ஆனால் அவற்றை வினவு அய்யா மாடரேட் செய்து விடுவார்!வேஸ்ட் ஆப டைம்!அதான் டிசம்பர் ஆறு முடிஞ்சு போச்சில்ல!ஆ ஆ எல்லாரும் மூட்டிய கட்டுங்க!அடுத்த வருஷம் கடைய விரிக்கலாம்!இப்போ போய் எங்கனா பூட்டு போடும் போராட்டம் நடத்தி போட்டோ எடுத்து இங்கே போடவும்!

  • ப.சிதம்பரமும் யாருடா?///
   .
   .
   ப,சிதம்பரம் பார்பனன் இல்லை செட்டியார்!!ஹீ ஹீ ஹீ!

   • //ப,சிதம்பரம் பார்பனன் இல்லை செட்டியார்!!ஹீ ஹீ ஹீ!//

    இதுதான் நீ சொல்லுற இந்து மதத்தோட யோக்கியதை. முதல்ல நீ இந்துக்கள்னு சொல்றவங்க எல்லாருடனும் ஒத்துமையா இருக்க கத்துக்க அப்புறமா பக்கத்து இலைக்கு பாயாசம் கேக்கலம். அப்புறம் அம்பேத்காரின் சாதிய ஒழிக்க வ்ழின்னு ஒரு புத்தகம் எழுதியிருக்காரு அதப்படிச்சு திருந்தபாரு.

 17. அடிப்படையில் மதமே அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணம். இடிக்க வேண்டியது கோவில்களை / மசூதிகளை அல்ல . மதவுணர்வை மட்டுமே. என்று மதங்கள் இந்த பூமியை விட்டு அழிகின்றனவோ அன்றுதான் மனிதனுக்கு விடுதலை. அப்பப்பா எத்தனை மதங்கள்? எத்தனை உட்பிரிவுகள்?..

 18. Unhappy Muslims
  The Muslims are not happy!
  They’re not happy in Gaza.
  They’re not happy in Egypt.
  They’re not happy in Libya.
  They’re not happy in Morocco.
  They’re not happy in Iran.
  They’re not happy in Iraq.
  They’re not happy in Yemen.
  They’re not happy in Afghanistan.
  They’re not happy in Pakistan.
  They’re not happy in Syria.
  They’re not happy in Lebanon.
  So, where are they happy?
  They’re happy in Australia.
  They’re happy in England.
  They’re happy in France.
  They’re happy in Italy.
  They’re happy in Germany.
  They’re happy in Sweden.
  They’re happy in the USA.
  They’re happy in Norway.
  They’re happy in every country that is not Muslim.
  And who do they blame?
  Not Islam.
  Not their leadership.
  Not themselves.
  THEY BLAME THE COUNTRIES THEY ARE HAPPY IN!
  AND THEY WANT TO CHANGE THEM TO BE LIKE THE COUNTRY THEY CAME FROM
  WHERE THEY WERE UNHAPPY.

  • மூன்றாவது கண் என்றால் நெற்றி கண்ணா ?இருப்பினும் அவரது வாய் மொழி குற்றமே !
   முஸ்லிம்கள் காசா ,எகிப்து,லிபியா,மொரோக்கோ,இரான்,இராக்,யேமன்,ஆப்கானிஸ்தான் ,பாகிஸ்தான் ,சிரியா,லெபனான்.போன்ற நாடுகளில் துயரத்தில் இருப்பதாகவும் ,ஆஸ்ட்ரேலியா ,இங்க்லாந்து,ஸ்வீடன்,ஜெர்மனி,பிரான்ஸ் ,இத்தாலி,நார்வே ,அமேரிக்கா போன்ற நாடுகளில் மகிழ்ச்சியாக இருபதாகவும் அங்கலாய்த்துள்ளர்.
   இந்தியா ,இந்தோனேசியா ,மலேசியா,சவூதி அரபியா,யு.எ.ஈ ,இலங்கை,துருக்கி,சூடான்,சவுத் ஆப்ரிக்கா போன்ற நாடுகளில் முஸ்லிம்கள் இல்லையா?
   துயர் வரிசையில் உள்ள அனைத்து நாடுகளிலும் மொரோக்கோ பற்றி தெரியவில்லை மற்ற அனைத்து நாடுகளிலும் முஸ்லிம்களை துயரப்படுத்திக் கொண்டிருப்பது யார்?
   வினவு விலும் மற்றைய இணைய தளங்களிலும் படிக்காத மக்களா இதை வாசிக்கின்றனர்.உலகம்முழுவதும் அமைதியை ஏற்படுத்த தன்னைத்தானே லீடராக நியமித்துக் கொண்ட அமெரிக்கா நசுங்கினாலே உலகம் அமைதியாகிவிடும்.பாகிஸ்தானிலும் குண்டு வெடிக்காது. இந்தியாவிலும் குண்டு வெடிக்காது.மும்பை தாக்குதல் இருக்காது.
   ஒருவேளை வளைகுடா நாடுகளில் பெட்ரோல் வற்றிவிட்டால் அந்த நாட்டு முஸ்லிம்களுக்கு அமைதி ஏற்பட்டுவிடும்.
   காருண்யாகடல்,ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டுங்கள் என்று சொன்ன ஒரே மாமனிதர் ,இயேசுவை சித்திர வதைப்படுத்தி சிலுவையில் அறைந்து கொன்றது பயங்கரவாதிகள் முஸ்லிம்களா?
   உலக அமைதி திலகம் அமெரிக்காவை ஆட்டி படைக்கும் யூதர்கள் அல்லவா?
   பார்ப்பதெற்கே பாவம் போல் தோன்றும் இந்தியாவின் ஏழ்மையை தனது உடையில் உலகுக்கு காட்டிய சத்திய சோதனை காந்திஜியைக் கொன்றதும் பயங்கரவாதிகள் முஸ்லிம்களா?
   செத்த பசுவை அறுத்ததற்காக ஐந்து தலித்களை கொன்று மிருகங்கள் மீதும் இரக்கம் வைத்துள்ள சங்ககுடும்ப கூட்டம் அல்லவா? [பசு கன்றுக்காக தன மகனை தேர்க்காலில் கொன்ற நீதிகளை படித்து செய்தார்களோ?]
   நிறத்தால் மனித பேதம் இல்லை என்று போரிட்ட ஆப்ரகமை கொன்றதும் முஸ்லிம்களா?
   லட்சக்கணக்கான ஜப்பானியர்களை கொன்றதோடு,இன்றளவும் அம்மக்களை காயப்படுத்தியது பேரழிவு ஆயுதம்களை வைத்து இருந்த?சதாம் ஹுசைனா?
   ஆயிரக்கணக்கான யூதர்களை கொன்றது யார்? இல்லை ஹிட்லர் முஸ்லிமா?மனித நேய கிறித்தவரா?
   லெபனானில் ஆயிரகணக்கான 1971பலஸ்தின்களை கொன்றதோடு மட்டுமல்லாமல் இன்றுவரை அவர்களை கருவறுத்துக் கொண்டிருக்கும் கண்ணியவான்கள் யூதர்களா? அல்லது பயங்கரவாத முஸ்லிம்களா?
   அந்நிய நாட்டில் புகுந்து அம்மக்களை சிறைபிடித்து எண்ணெய் மற்றும் உலோக திருட்டுக்காக இராக்,ஆப்கானிஸ்தானில் கலக காடாக மாற்றியது ரஷ்ய ,அமேரிக்கா முஸ்லிம் பயங்கரவாதிகளா?
   மீடியாக்களின் நேர்மைக்கு ஒரு சான்று.;
   ஆப்கானிஸ்தானில் புத்தர் சிலை தகர்க்கப் பட்டதை உலகம் முழுவதும் காட்டி கொண்டே இருந்தார்கள் .முஸ்லிம் பயங்கரவாதாம் என்றார்கள்.
   ஆனால் அவர்கள் அதற்கு சொன்ன காரணத்தை சொன்னார்களா?
   முந்தய ஆட்சியில் குழந்தை மருந்துகள் ஆப்கானிஸ்தானுக்கு சப்ளை செய்ய போடப்பட்ட ஒப்பந்தத்தை தாலிபான் ஆட்சியில் அமெரிக்காவின் சொல்லை கேட்டு நிறுத்தியது.எங்கள் குழந்தைகள் மருந்தின்றி அன்றாடம் செத்துக் கொண்டிருக்கும் வேளையில் புத்தருக்கு சிலை எதற்கு ? என்பதேதாலிபான் கேள்வி.
   அதே கால கட்டத்தில் நம் தமிழகத்தில் கண்ணகி சிலையை இரவோடு இரவாக லாரியால் மோதச்செய்து கீழே விழ வைத்து அதன் பின்னர் போக்குவரத்துக்கு இடையுறு என்று அப்புறப் படுத்தினார்கள்.ஆனால் ஜெயாவின் ராசிநலன் பார்த்து ஜோசியரின் கருத்துப்படியே இவ்வாறு நடந்தது எனபது அனைவருக்கும் தெரிந்த விசயமே .இதை எத்தனை தடவை காட்டினார்கள் மீடியவாலாக்கள
   இந்த இரு சம்பவங்களையும் ஒப்பிட்டு பாருங்கள்.
   புத்தமதத்தினர் இல்லாத நாட்டில் ,உள்நாட்டு குழந்தைகளுக்கு உயிர்காக்கும் மருந்துகள் ஒப்பந்தபடி அனுப்பாமல் நிறுத்திய காரணத்திற்காக சிலை அகற்றப்பட்டது.
   ஆனால் இங்கே தமிழர்கள் வாழும் நாட்டில் ,தமிழர்களால் கற்பு தெய்வமாக வணங்கப்படும் கண்ணகி சிலையை ,ஒரு தனிநபரின் ஜோதிட நலனுக்காக ஓசையின்றி அப்புறப் படுத்தப் படுகிறது
   புத்தர் சிலை அப்புறப்படுத்தியது பயங்கரவாத செயலாக காட்டப்பட்டது.
   ஆனால் கண்ணகி சிலை போக்குவரத்து இடையுறாக காட்டப்பட்டது.
   உலகமும் அதன் மீடியாக்களும் முஸ்லிம்கள் விசயத்தில் இப்படித்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது.

 19. மதம் மக்களுக்கு அபினி, மதங்கள் மற்றும் மத தீவிரவாதம் இல்லாத நிலைமை உருவாகவேண்டும்.

 20. அருமை இப்ராகிம்.. உங்களுக்கு ஒருவரும் பதில் சொல்ல மாட்டார்கள். முஸ்லிம்கள் பயங்கர வாதிகள் என்று மீண்டும் ஆரம்பிப்பார்கள்.
  ஆணவம் பிடித்த பெண்ணை கொஞ்சமும் வெட்கம் இன்றி அம்மா என்பார்கள்…

 21. Viyaki, 90% of comments from true hindus was not published by Waste Vinavu. So, you all could not see what is exactly going on.

  Hello Ibrahim, till last you mentioned only about the other religions mistakes and asking what sin did by muslims, hahahah nice. Obviously, all religions have had some bad things which other religion people dont accept.

 22. அருமையாக விளக்கம் கூறியுள்ள சகோதரர் இப்ராஹிமுக்கு வாழ்த்துக்கள்…. அப்படியே இந்தியாவில் அஜ்மீர் தர்கா, ஹைதராபாத் மக்கா மஸ்ஜித்,மாலேகான் 1 ,மாலேகான் 2 ,கோவா, நந்தித், சம்ஜௌதா ரயில் குண்டுவெடிப்பு போன்ற 14 இடத்தில் குண்டு வைத்து பல அப்பாவி மக்களை கொன்றவர்கள் முஸ்லிம்களா?… அவர்கள் இந்திய தேசிய விடுதலையை தனது உயிரினும் மேலாக மதித்த நமது தேசத் தந்தை காந்தி அவர்களை கொன்ற கோட்சேவின் குழந்தைகள் அல்லவா?… அணைத்தையும் ஹிந்துத்வா வெறியர்கள் செய்துவிட்டு குண்டுகள் வெடிக்கும் போதெல்லாம் முஸ்லிம் இளைஞர்களை கைது செய்து பின் மூக்கு அறுபட்டு போகும் ஆசாமிகள் யார் முஸ்லிம்களா?….. இன்று ஆந்திர மாநிலம் முஸ்லிம் இளைஞர்களின் கைதுக்கு மன்னிப்பு கோரி 70 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குவது விளையாட்டுக்கா?….. சவாமி அசீமானத், பிரக்யாசிங் தாகூர், கர்னல் ப்ரோகித்,சுனில் ஜோஷி, ஹரேன் பாண்டியா, இன்டிரேஷ் குமார் இவர்கள் எல்லாம் முஸ்லிம்களா?….. சாந்தி பூஷன், அருந்ததி ராய் போன்ற சமூக ஆர்வலர்கள் மீது தாக்குதல் நடத்துவது முஸ்லிம்களா?…….பதில் சொல்வார்களா இந்த ஹிந்துத்வா வெறியர்கள்? ஒருநாள் வரும் இவர்கள் அனைவரும் அன்று தனது தவறுக்காக மன்னிப்பு கோருவர் அன்று இவர்களுக்கு இறக்கம் காட்டப்பட மாட்டாது. இவர்கள் அநியாயம் செய்து கொண்டு இருப்பதால் அழிந்து போவர்… அன்று இந்த தேசம் நிச்சயம் நலன் பெரும்…..

 23. யார் தீவிரவாதி?

  1) தீவிரவாதத்தை இந்த நாட்டில் அரங்கேற்றுவது யார் ?

  2) சம்ஜயோதா எக்ஸ்ப்ரஸில் குண்டு வைத்தவன் யார் ?

  3) சபர்மதி எக்ஸ்ப்ரஸில் குண்டு வைத்தவன் யார் ?

  4) மக்கா மஸ்ஜிதில் குண்டு வைத்தவன் யார் ?

  5) அஜ்மீர் தர்காவில் குண்டு வைத்தவன் யார் ?

  6) கோவாவில் குண்டு வெடிப்பு நடத்தியவன் யார் ?

  7) மாலேகானில் குண்டு வைத்தவன் யார் ?

  8) நாடெங்கும் குண்டு வைத்து விட்டு அந்த பழியை முஸ்லிம்கள் மீது போடுபவன் யார் ?

  9) குஜராத்தில் 3000 முஸ்லிம்களை கொன்று குவித்தவன் யார் ?

  10) நாடு முழுவதும் கலவரத்தை நடத்துபவன் யார் ?

  11) நம் தேசத்தந்தை மகாத்மா அவர்களை கையில் இஸ்மாயில் என்று பச்சை குத்திக் கொண்டு காந்தியை கொன்றவன் யார் ?

  12) விநாயக சதுர்த்தி ஊர்வலத்தின் போது தலித்,மற்றும் முஸ்லிம் மக்கள் வாழும் பகுதியில் கலவரத்தை துண்டுபவன் யார் ?

  13) பெங்களூரில் பாகிஸ்த்தான் கொடியை ஏற்றி தேச துரோக செயலை செய்து விட்டு முஸ்லிம்கள் மீது பழியை போட்டு பிறகு மாட்டி கொண்டவன் யார் ?

  14) மாவீரன் கார்க்ரேவை கொன்றவன் யார் ?

  16) ஆந்திராவில் மாட்டு தலையை வெட்டி போட்டு கலவரத்தை தூண்டியவன் யார்?

  16) பாபர் மஸ்ஜித்தை இடித்து தரைமட்டமாக்கி உலக அரங்கில் இந்தியாவை தலை குனிய வைத்தவன் யார் ?

  17) இந்த நாட்டின் இறையாண்மையை இல்லாமல் ஆக்குபவன் யார் ?

  2003 மார்ச் 13:- மும்பை ரெயிலில் நடந்த குண்டு வெடிப்பில் 11 பேர் பலி.

  2003 ஆக 25:- மும்பையில் 2 கார் குண்டுகள் வெடித்து 60 பேர் பலி.

  2005 அக் 29:- டெல்லியில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 60 பேர் பலி.

  2006 மார்ச் 7:- காசியில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 15 பேர் பலி.

  2006 ஜூலை 11:- மும்பை ரெயில்களில் 7 குண்டுகள் வெடித்தன. 180 பேர் பலி.

  2006 செப் 8:- மலேகானில் நடந்த குண்டு வெடிப்பில் 35 பேர் பலி.

  2007 பிப் 19:- பாகிஸ்தானுக்கு சென்ற ரெயிலில் குண்டு வெடித்து 66 பயணிகள் பலி.

  2007 மே 18:- ஐதராபாத் மசூதியில் குண்டு வெடித்து 11 பேர் பலி.

  2007 ஆக 25:- ஐதராபாத்தில் நடந்த தொடர்குண்டு வெடிப்பில் 40 பேர் கொல்லப்பட்டனர்.

  2008 மே 13:- ஜெய்ப்பூரில் 7 இடங்களில் குண்டு வெடித்தது. 63 பேர் பலி.

  2008 ஜூலை 25:- பெங்களூரில் 8 இடங்களில் குண்டு வெடித்தது. 1 பெண் பலி.

  2008 ஜூலை 26:- ஆமதாபாத்தில் 16 இடங்களில் குண்டு வெடித்தது. 45 பேர் பலி.

  2008 செப் 13:- டெல்லியில் அடுத்தடுத்து 5 இடங்களில் குண்டு வெடித்தது. 23 பேர் பலி.

  1983 பிப்ரவரி 18: அஸ்ஸாம் மாநிலம் கவுஹாத்தியிலிருந்து சுமார் 40 கி.மீ. தூரத்திலுள்ள நெல்லி எனும் கிராமத்தில் 1983, பிப்ரவரி 18 அன்று ஹிந்துத்துவா பயங்கரவாதிகளால் திட்டமிட்ட இனப்படுகொலை ஒன்று நடத்தப்பட்டது. இதில் 2,191 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். 370 குழந்தைகள் அநாதையாக்கப்பட்டனர். 16 கிராமங்களிலிருந்த முஸ்லிம்களின் வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டன.

  1989 பாகல்பூர் கலவரம்: பீகார் மாநிலம் பாகல்பூரில் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிராக ஹிந்துத்துவ தீவிரவாதிகளால் 1989 ல் கலவரம் நடத்தப்பட்டது. இதில் முஸ்லிம்கள் 116 பேர் கொல்லப்பட்டனர்.

  இந்த கலவரத்தை ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கமும் அதன் துணை அமைப்புகளும் திட்டமிட்டு நடத்தின. ஜக்தீஷ்பூர் காவல்நிலையத்தின் ஆய்வாளர் ராமச்சந்திர சிங் மற்றும் கிராமத்தலைவர் தாக்குர் பாஸ்வான் ஆகியோர் இந்த படுகொலைக்கு உறுதுணையாக இருந்து செயல்பட்டனர்.

  இதன் மூலம் சொந்த நாட்டில் 30,000 பேரை அகதிகளாக்கி, 3000க்கும் மேற்பட்ட வீடுகளைச் சூறையாடி, ஒரு பெரும் இன அழிப்பை நடத்தினர் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள்.

  இந்து தீவிரவாதிகள் பட்சிலம் குழந்தைகளை வெட்டி கிழித்து இரு கூராக்கினார்கள். மேலும் நெருப்பு குண்டம் வளர்த்து அதில் பெண்களின் கைகளில் இருந்த குழந்தைகளை பறித்து போட்டனர். அந்த குழந்தைகள் தீயில் கருகி சாவதை பார்த்து ரசித்து பேரானந்தம் அடைந்தனர்.

  மறக்கப்பட்ட நெல்லி இனப்படுகொலை இந்தியாவில் ஹிந்துதுவாவினர் நடத்திய தொடர் இனப்படுகொலைகளின் ஒரு முன்னோட்ட மாகவே பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்தே டெல்லியில் 1984லும், பாகல்பூரில் 1989லும், மும்பையில் 1993லும் நாடு தழுவிய இனப்படுகொலைகள் நடைபெற்றன.

  இதனுடைய உச்சகட்ட நிகழ்வுதான் குஜராத் இனப்படுகொலை (2002 பிப்ரவரி 28).

  அதன் தொடர்ச்சிதான் இப்போது இந்தியா முழுவதும் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்புகள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க