எதிர்கொள்வோம் !
இணையத்தின் மூலமாகவும் நேரடியாகவும் எமது தோழர்களிடம் எழுப்பப்படும் கேள்விகள், வைக்கப்படும் விமர்சனங்களைத் தொகுத்து அவற்றுக்குத் தக்க பதிலளிக்கும் பகுதி.
அமெரிக்க ஓநாயின் ஈழ அக்கறை !
இலங்கையின் போர்க்குற்றவாளிகளை தண்டிக்கும் நேர்மையான கோரிக்கை என்பது அந்த குற்றத்தோடு தொடர்புடைய அனைவரிடமிருந்து விலகி, சுயேச்சையாக ஒலிக்க வேண்டும்.
வேதாந்தாவுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றத்தின் சந்தர்ப்பவாதம் !
பொதுச் சொத்துக்களைத் தரகு முதலாளிகளுக்கு வாரிக் கொடுப்பதில் நடக்கும் ஊழல்கள் குறித்துத் தீர்ப்பு அளிப்பதில் உச்ச நீதிமன்றம் இரட்டைவேடம் போடுகிறது.
நெய்வேலியை தனியார் மயமாக்கும் சதியை முறியடிப்போம் !
நெய்வேலியின் நிலம், கனிம வளம், மின் உற்பத்தி அனைத்தும் தமிழக மக்களுக்குச் சொந்தம் எனும் போது நெய்வேலி நிறுவனத்திலிருந்து மத்திய அரசு வெளியேற வேண்டும் என்று சொல்வதுதான் சரியான கோரிக்கை.
1.57 லட்சம் கோடி ரூபாயை அமுக்கியது யார்?
பங்குச் சந்தை வீழ்ச்சியின் மூலம் ஆதாயம் ஈட்டியது வெற்று டாலர்களை போட்டு சூதாட்டம் நடத்திய அன்னிய நிதி நிறுவனங்கள். இந்த இழப்பை மறைமுகமாக ஏற்கப்போவது இந்திய மக்கள்தான்.
மணிப்பூர் : 64 ஆண்டுகளாகத் தொடரும் ஆக்கிரமிப்பு !
மணிப்பூரை ஆக்கிரமித்திருக்கிறது இந்திய இராணுவம். அங்கே கடந்த ஐந்தாண்டுகளில் 1,500 பேர் இந்திய இராணுவத்தால் போலி மோதலில் கொல்லப்பட்டிருக்கின்றனர்.
மோடி கடையில் துண்டு போடும் குமுதம் !
மோடி நமக்கு வாய்த்த தமிழக ஊடக அடிமைகள் ஜால்ரா அடிப்பதில் திறமையானவர்கள் என்று தொடையை தட்டியிருப்பார். இதிலிருந்தே குமுதம் ஜந்துக்கள் எவ்வளவு திறமையாக பேசியிருப்பார்கள், அல்லது பாடியிருப்பார்கள் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
அமெரிக்க உளவாளிகளே, மன்மோகனையெல்லாம் ஒட்டுக் கேட்கணுமா ?
அமெரிக்க - பிரிட்டிஷ் உளவுத் துறை அதிகாரிகள் மன்மோகன் சிங்கின் டிஎன்ஏவை 'பிரிட்டன்ஸ் டிஎன்ஏ' நிறுவனத்துக்கு அனுப்பி அவர் எங்கிருந்து வந்தவர் என்று கண்டு பிடிக்கச் சொல்லியிருக்கிறார்களாம்.
7 கோடி ரூபாயை மறைக்கும் புதிய தலைமுறை டிவி !
'கணக்கில் காட்டாமல் நன்கொடை வாங்கினால் அதற்கு வருமான வரி கட்டியிருக்க மாட்டார்களே' என்று நான்கு மாதங்கள் கழித்து புரிந்து கொண்ட வருமான வரித் துறை 'வேகமான' தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது.
விகடனை ஏமாற்றிய வீரப்ப மொய்லி !
வீரப்ப மொய்லி குறித்து தலையங்கம் எழுதினால் அதில் அவர் அம்பானி அடியாளாக இருப்பது குறித்தும், அபராதமாக வரவேண்டிய மக்கள் பணம் 5000 கோடி ரூபாயை அம்பானி ஆட்டையைப் போட்டது குறித்தும் எழுத வேண்டும்.
அந்த ஒரு சீட்டு !
ராஜ்ய சபை தேர்தலில் கட்சிகள் போட்டு வரும் மனக்கணக்கு, பணக்கணக்கு, அரசியல் கணக்குகளை வைத்து ஆறாவது உறுப்பினர் யார் என்பதை கண்டு பிடித்தால் உங்கள் குழந்தை கணிதத்தில் நிபுணத்துவம் பெற்று விடும்.
வீரப்ப மொய்லி – அமைச்சரா, அம்பானியின் அடியாளா ?
ரிலையன்ஸ் இயற்கை எரிவாயுவை எடுப்பதில் உற்பத்தி இலக்குகளை தொடர்ந்து தவற விடுவதோடு, மேலும் மேலும் செலவுக் கணக்கை அதிகரித்து நாட்டை கொள்ளை அடித்து வருகிறது என்பதுதான் தனியார் மயத்தின் நிகர விளைவு.
ஐரோப்பிய பகற்கொள்ளைக்குப் பச்சைக்கொடி !
ஏகாதிபத்தியங்களின் சூறையாடலுக்காக நாட்டை மேலும் அடிமையாக்கும் சதியை மூர்க்கமாகவும் இரகசியமாகவும் செய்து வருகிறது ஆளும் கும்பல்.
குஜராத்: மோடியின் அமைச்சருக்கு 3 ஆண்டு சிறை !
சவுராஷ்டிரா வட்டாரத்தில் காவிக் கட்சி வெற்றி பெறுவதற்கு பாபு பொக்கிரியாவின் சேவை தேவையாக இருப்பதால் அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்குவதற்கு தயக்கம் காட்டுகின்றனர்.
இளவரசர் வில்லியமும் இந்திய மரபணுவும் !
தனது சாதி புனிதமானது, வேறு சாதி ரத்தம் கலக்காதது என்று நம்பிக் கொண்டிருக்கும் அனைவரிடமும் இத்தகைய சோதனையை மேற்கொண்டால் நிறைய கலவரங்கள் பிறப்பது உறுதி.








