படிக்கட்டுப் பயணப் படுகொலைகள் !
சென்னையில் தினந்தோறும் 5,000 பேருந்துகளை இயக்குவதற்குத் அரசு உரிமம் பெற்றிருந்தாலும், 3,300 பேருந்துகளை மட்டுமே இயக்குகிறது. இதிலும் 600 பேருந்துகள் தொழிலாளர் பற்றாக்குறையால் அடிக்கடி நிறுத்தப்படுகின்றன.
இளந்தளிர்களை பலி கொண்ட வன்னிய சாதிவெறி
கோபாலகிருஷ்ணனின் கொலைக்குக் காரணமான, ராமதாஸ், காடுவெட்டி குரு மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்படி வழக்கு பதிவு செய்யப்படவேண்டும். கொலைக் குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்படவேண்டும்.
அறிவை விடுதலை செய் ! ஆரன் ஸ்வார்ட்ஸ் தற்கொலை !!
கணினி நிபுணர், இணைய அறிவாளி, இணைய போராளி என்று பன்முகம் கொண்ட ஸ்வார்ட்ஸை, கார்ப்பரேட் அமெரிக்காவின் வெறிபிடித்த கணினி தொடர்பான குற்றங்கள் சட்டம் கொன்றே விட்டது.
திறந்தவெளி சிறைச்சாலையாகும் தமிழகம் !
'அம்மா திருந்திவிட்டார்'என்று பார்ப்பன கோயபல்சு பத்திரிகைகள் ஒளிவட்டம் போட்டன. ஆனால் பாசிச ஜெயாவோ, தான் ஒரு பார்ப்பன பாசிஸ்டுதான் என்பதை மீண்டும் நிரூபித்துக் காட்டிக் கொண்டிருக்கிறார்.
வால்மார்ட்டை ஆதரிப்பதில் ஆளும்கட்சி எதிர்க்கட்சி பேதமில்லை !
சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு நுழைவதைத் தடுக்க எதிர்த்தரப்பை நம்புவது, மண்குதிரையை நம்புவதற்கு ஒப்பானதாகும்
பாலியல் வன்முறை : சட்டத்திருத்தம் தீர்வாகுமா ?
வெறுமனே சட்டத்தைக் கடுமையாக்கி பாலுக்குப் பூனையைக் காவல் வைப்பதுபோல போலீசிடம் அதிகாரத்தை ஒப்படைப்பது பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் குறைக்குமா?
மக்களுக்கு கட்டண உயர்வு! முதலாளிகளுக்கு வரி விலக்கு!!
மக்களுக்கு புத்தாண்டு பரிசாக ரயில் கட்டண உயர்வை அளித்த மத்திய அரசு அன்னிய முதலாளிகளுக்கு பல லட்சம் கோடி ரூபாய் வரிகளை ஏய்ப்பதற்கான அனுமதியை வழங்கியிருக்கிறது.
தமிழகத்தின் நெற்களஞ்சியம் பிணக்காடாகிறது!
இறந்த போலீசார் குடும்பங்களுக்கு ஐந்து லட்சம் ரூபாய் வரை நிவாரணமாகத் தரும் ஜெயா அரசு, காவிரியில் நீரின்றி சாகுபடி செய்ய முடியாமல் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளுக்குக் கருணை அடிப்படையில்கூட நிவாரணம் அளிக்கவில்லை.
கோவையில் காட்டாட்சி – நெல்லையில் தீண்டாமை!
நியாயத்தைக் கேட்ட சல்மாவின் மீது வழக்கும் சிறையும் பாயுமென்றால், பொய் வாக்குறுதி அளித்துத் தமிழக மக்களை நம்பிக்கை மோசடி செய்த ஜெயாவை எந்தக் காராகிரகத்தில் அடைப்பது?
தமிழ்நாட்டுக்கு சிறப்புக் காவல் இளைஞர் படை!
ஜெயலலிதா ஆட்சிக்கு வரும்போதெல்லாம் பார்ப்பனர்கள் மட்டுமல்ல, தமிழ்நாடு போலீசும் இது நம்ம ஆட்சி எனக் குதூகலிக்கத் தொடங்கிவிடுகிறது.
கிருஷ்ணகிரி: மலை முழுங்கி கொள்ளையனை கைது செய்!
பி.ஆர்.பி போன்ற கிரானைட் கொள்ளையர்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எந்த பிரச்சினையும் இன்றி அரசு ஆதாரவோடு ஆட்சி நடத்துகிறார்கள்.
என்ன கொடுமை சார் இது?
நாட்டுக்கும்,நாட்டு மக்களுக்கும் சிறப்பாக சேவை செய்த, செய்துகொண்டிருக்கிற தியாகிகள் பி.ஆர்.பி-துரை தயாநிதி வகையறா-தொகையறாவுக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது!தியாகிகள் தங்கள் கொள்ளையை வழக்கம் போல் தொடரலாம்!
இணையத்தை ஒடுக்க பாசிச ஜெயாவின் குண்டர் சட்டம் !
பாசிச ஜெயாவின் குண்டர்கள் சட்ட அறிவிப்பில் அடுத்து வரும் அணுகுண்டு அறிவிப்பு என்னவென்றால் "சைபர் கிரைம் குற்றம் செய்தவர்கள் மீதும் குண்டர் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்பதாகும்
சிறுமி ஸ்ருதி படுகொலை: விரிவான ஆய்வறிக்கை!
சிறுமி ஸ்ருதியின் படுகொலை ! சீயோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிப் பேருந்தில் இருந்த ஓட்டையின் பின்னணி என்ன ? உண்மை அறியும் குழுவின் அறிக்கையும், பரிந்துரைகளும் !
சட்டிஸ்கர் பழங்குடியினர் படுகொலை: உண்மைக்குக் குழிவெட்டும் அரசு !
வறிய நிலையில் வாழும் பழங்குடியினரின் உயிர்களைப் புழு-பூச்சிகளைவிட அற்பமாகக் கருதும் திமிர்த்தனமும், இவர்களைக் கொன்றால் யார் கேள்வி கேட்கமுடியும் என்ற ஆணவமும் அரசு பயங்கரவாதத்தின் பின்னணியில் உள்ளன.
















