கிரானைட் கொள்ளை : ஒரு பயங்கரவாத நடவடிக்கை !
இது மக்கள் அதிகாரத்தின் பரப்புரை அல்ல. கிரானைட் கொள்ளை குறித்து விசாரணை நடத்திய சட்ட ஆணையர் சகாயம், தனது அறிக்கையில் கூறியிருக்கும் ஒப்புதல் வாக்குமூலம்.
வங்கிக் கடன் : நிலம் விற்றால் யோக்கியன் ! மறுத்தால் நாணயமற்றவன் !!
“கட்டுனா உங்களுக்குதான் நல்லது. இப்போல்லாம் தினம் ஒரு ரூல்ஸ் போடுறாங்க. நீங்க சொன்ன மாதிரி பெரிய ஆளுங்களுக்கு எந்த ஆபத்தும் இல்ல. உங்கள மாதிரி சம்சாரிகளுக்குதான் சிக்கல்வருது.”
இந்திய நீதிமன்றம் அந்நிய முதலீட்டாளர்களின் கைக்கூலிப்படையா ?
ஜப்பானிய நிறுவனமான சுசுகியைத் திருப்திபடுத்துவதற்காகவும், தொழிலாளி வர்க்கத்தை எச்சரிப்பதற்காகவுமே மாருதி தொழிலாளர் வழக்கில் 13 தொழிலாளர்களுக்கு ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டிருக்கிறது.
மக்களாட்சியா சாராய முதலாளிகளின் ஆட்சியா?
நெடுஞ்சாலை ஓரத்திலுள்ள மதுக்கடைகளை அகற்றச் சொன்ன உச்ச நீதிமன்ற உத்தரவை, மைய அரசும், மாநில அரசுகளும் குறுக்கு வழியைப் பயன்படுத்தி முறியடிக்கின்றன.
கருத்துச் சுதந்திரம் பயங்கரவாதக் குற்றமாம் !
கருத்துரீதியாக மாவோயிஸ்டுகளை ஆதரிக்கிறார்கள் என்ற ஒரே காரணத்துக்காக பேராசிரியர் சாய்பாபாவுக்கும் அவரது தோழர்களுக்கும் ஆயுள் தண்டனை அளித்திருக்கிறது, நீதிமன்றம்.
இந்திய இராணுவத்தின் ஊழலைப் பார்க்காதே கேட்காதே பேசாதே !
இந்திய இராணுவத்தில் நடந்துவரும் ஊழல், முறைகேடுகளை அம்பலப்படுத்தத் துணியும் சிப்பாய்களும் அதிகாரிகளும் பைத்தியக்காரப் பட்டம் கட்டப்பட்டு துரத்தப்படுகிறார்கள்.
இந்திய போலி ஜனநாயகத்தின் முகத்தில் காறி உமிழ்ந்த காஷ்மீர் மக்கள் !
காஷ்மீரின், ஸ்ரீநகர் பாராளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த ஏப்ரல் 9, 2017 அன்று நடைபெற்றது. முன்னதாக, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே காஷ்மீர் பள்ளத்தாக்கில் இந்திய இராணுவத்தின் அத்துமீறல்களைக் கண்டித்து தேர்தலை புறக்கணிக்கப் போவதாக காஷ்மீர் மக்கள் அறிவித்தனர்.
திருத்துறைப்பூண்டி : டாஸ்மாக்கை மூடச் சொல்வது வன்முறையாம் !
மக்கள் போர்கோலம் பூண்டு சாலைகளில் அணிதிரள்வது மிகச்சாதாரண நிகழ்வுகளாக மாறிக் கொண்டுள்ள சூழ்நிலையில் மக்கள் அதிகாரம் போன்ற அமைப்பைக் கண்டு அதிகார வர்க்கம் அஞ்சுவது வழமையான ஒன்றுதான்.
சொத்துக் குவிப்பு வழக்கு : உச்ச நீதிமன்றத்தில் இரண்டு குமாரசாமிகள் !
நாலும் மூணும் எட்டு என்று கணக்கு போட்டு ஜெயலலிதாவை விடுதலை செய்த நீதிபதி குமாரசாமியின் கணக்கையும் தீர்ப்பையும் பார்த்து நாடே கைகொட்டிச் சிரித்தது. மேல் முறையீட்டை விசாரித்த உச்ச நீதிமன்றமோ 4+3= 0 என்று தீர்ப்பளித்து ஜெயாவை விடுவித்திருக்கிறது.
ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து : அதே ஆம்பூர் பிரியாணி அதே தேர்தல் ஆணையம் !
சகாரா-பிர்லா பேப்பர்ஸுக்கும் விஜயபாஸ்கர் பேப்பர்ஸுக்கும் உள்ள வேறுபாடு என்ன? அது மோடி உள்ளிட்ட மந்திரிகளுக்குக் கொடுத்ததாக முதலாளி எழுதிய கணக்கு. இது மக்களுக்கு கொடுத்ததாக மந்திரி எழுதிய கணக்கு.
கடலூர் – அரியலூரில் டாஸ்மாக் முற்றுகை ! மக்கள் அதிகாரம்
கடையை திறந்த மூன்று நாட்களுக்குள்ளே 30 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள உளுத்தூர் பேட்டையில் இருந்து கூட வந்து மது பாட்டில்களை வாங்கி செல்வது வேதனை அளிக்கிறது என மக்கள் தங்கள் குமுறலை வெளிப்படுத்தினர்.
களச்செய்திகள் : விவசாயிகள் கூட்டத்திற்கு மூன்றாவது முறையாக தடை !
தமிழக விவசாயிகளை மோடி அரசு மட்டுமல்ல தமிழக அரசும் இணைந்தே வஞ்சித்து வருகிறது. டெல்லியில் விவசாயிகளை பார்க்க மறுக்கிறார் மோடி. தமிழகத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக பொதுக்கூட்டம் நடத்த அனுமதி மறுக்கிறது போலீசு.
இஸ்ரேல் மோடியைக் கொஞ்சுவது ஏன் ?
ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் இரண்டாவது தலைவரான செத்துப் போன கோல்வல்கர் உருகி உருகி எழுதியது யூதர்களின் இஸ்ரேலைப் பற்றித்தான்.
காஷ்மீர் : ஊரடங்கு மட்டுமல்ல உள்ளத்தையும் அடக்கும் இந்திய அரசு !
சுமார் 11.3 சதவீத காஷ்மீரிகள் மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருக்கிறார்கள் என்கிறது இப்புதிய ஆய்வு. இது நாட்டின் பிற பகுதிகளை ஒப்பிடும் போது அசாதாரணமான அளவில் அதிகமாக உள்ளதென ஆய்வு நடத்திய தன்னார்வக் குழுக்கள் தெரிவித்துள்ளன.
டாஸ்மாக் கடைகளை மூடு – தமிழக மக்கள் போர்க்கோலம் !
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை அகற்றக் கோரி மக்கள் தன்னெழுச்சியாக நடத்தும் போராட்டங்கள் பற்றிய செய்தித் தொகுப்பு!
























