கோவையில் தடையை மீறி மாட்டுக்கறி திருவிழா !
மோடியின் மதவெறியை அம்பலப்படுத்தும் முழக்கங்களை பொறுக்க முடியாத போலீசு அவசர அவசரமாக கைது செய்ய முயற்சித்தது, ஆனால் தோழர்கள் கட்டுக்கு அடங்காமல் தொடர்ந்து கைதாக மறுத்து முழக்கமிட்டனர்.
காக்கைக் குருவி போல விவசாயிகள் சுட்டுக் கொல்லும் மத்திய பிரதேச அரசு !
ரிசர்வ் வங்கி விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்ய முடியாது என அறிவித்தது. தமிழக விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்ய முடியாது என பா.ஜ.க. பினாமி தமிழக அரசு உச்சநீதிமன்றம் செல்கிறது. இதன் அடுத்தக்கட்டத்திற்கு சென்று விவசாயிகளைச் சுட்டுக் கொன்றுள்ளது சவுகான் அரசு.
கோவை : போலீசா – மக்களா? டாஸ்மாக்கை மூடிய போராளிகள் !
அன்றாடங்காய்சியான எங்கள் இடத்தில் டாஸ்மாக்கை திறக்கும் அரசு அதையே கலெக்டர் ஆபிசுலயோ அல்லது போலீஸ் ஸ்டேசன்லயோ கடைய திரக்கறது தானே எனக் கேட்டார். வயதில் முதியவர் என்று கூட பார்க்காது அவரை “என்ன லூசு மாதிரி பேசுற?” என போராடும் மக்களை அவமானப்படுத்தியது போலீசு.
டாஸ்மாக்கை மூடு : திருச்சி, போடி, கோத்தகிரி, ஓலையூர் போராட்டங்கள் !
பெண்களின் கலகக்குரலுடன் இணைந்த பறையிசையும், தோழர்களின் உணர்வுப்பூர்வமான முழக்கங்களும் மொத்தக்கூட்டத்தையும் டாஸ்மாக்கை நோக்கி முன்னேற வைத்தது. போராடும் மக்களை தடுக்க முடியாமல் தினறியது போலீசு !
தமிழகத்தை ஆள்வது டெல்லியா ? சென்னையா ?
உள்நாட்டு கால்நடை சந்தைகளை அழித்து அந்நிய கார்ப்பரேட் கம்பெனிகளின் மாட்டிறைச்சி, பால்பொருள்களை தாராளமாக இறக்குமதி செய்யவே மோடி அரசின் சதித்தனமான இந்த மாட்டு விற்பனை தடை உத்தரவு ஆகும்.
காஷ்மீர் : தெருக்களே வகுப்பறை ! கற்களே பாடநூல்கள் !!
"கணினியை ஏந்த வேண்டிய காஷ்மீர் இளைஞர்கள், கற்களைத் தூக்குவதா?" என முதலைக் கண்ணீர் வடித்த மோடிக்கு, "நாங்கள் புத்தகப் பையையும் சுமப்போம், கல்லையும் ஏந்துவோம்" என காஷ்மீர் மாணவிகள் பதிலடி கொடுத்துள்ளனர்.
ஓசூர் சப்படி – காமன் தொட்டி டாஸ்மாக் கடைகளை மூட வைத்த பெண்கள் !
"இவ்வளவு தூரம் வந்து விட்டோம், தாசில்தாரிடம் மனு கொடுத்து விடலாம்" என்று தாசில்தாரிடம் மக்கள் சென்றனர். மக்கள் அதிகாரம் தோழர்கள் சொன்னதை அப்படியே வார்த்தை மாறாமல், ''எனக்கு அதிகாரம் இல்லை எல்லாம் கலெக்டர் தான்" என்று தாசில்தார் மக்களுக்கு புரிய வைத்தார்.
மோடியின் இந்தியாவும் தொழிலாளர்களின் இந்தியாவும்
ஊதிய உயர்வு, பணிப் பாதுகாப்பு ஆகியவற்றுக்காக நாடெங்கும் தொழிலாளர்கள் போராடிவரும்போது, பா.ஜ.க. ஆளும் அரசுகளோ தொழிற்தகராறு சட்டத்தையே ஒழித்துவிட முயலுகிறார்கள்.
இந்துத்துவப் பிணந்தின்னிகளுடன் நாம் சேர்ந்து வாழ இயலுமா ?
“தென்னிந்திய கருப்பர்களுடன் நாங்கள் சேர்ந்து வாழவில்லையா?” என்று தருண் விஜய் சொன்னது உங்களுக்கு நினைவிருக்கும். இந்தக் காவி காட்டுமிராண்டிகளுடன் மனிதர்களாகிய நாம் சேர்ந்து வாழ இயலுமா?
சோமபானத்துக்கும் சுவயம் சேவக்குக்கும் போலீசு காவல் !
மக்களை சீரழிக்கும் மதவெறிப் போதைக்கும் சரி டாஸ்மாக் போதைக்கும் சரி பாதுகாப்பளிப்பது காவல் துறையே. இவை இரண்டுக்கும் தமிழ்கத்தில் கல்லறை எழுப்புவோம் !
போக்குவரத்துத் துறை நட்டம் யார் காரணம் ?
கைவிடப்பட்ட கட்டிடத்தின் ஜன்னல், கதவுகள், கம்பிகள், கற்கள் என அவரவருக்கு வேண்டியதை அகப்பட்டதை சுருட்டிக்கொண்டு ஓடுவதைப் போல இந்த அதிகாரிகள், அமைச்சர்கள் போக்குவரத்துத் துறையை சுருட்டியுள்ளனர்.
காரல் மாக்ஸ் பற்றி பேசினால் சட்டம் ஒழுங்கு கெடுமாம் !
கோவையில் காவலர் பணித் தேர்வுகள், ஐந்து கல்லூரிகளின் ஆண்டுவிழா, எஸ்.பி.பி பாட்டு கச்சேரி, இவை எல்லாவற்றையும் மீறி எங்கு மக்கள் டாஸ்மாக்கை உடைப்பார்கள் எனத் தெரியவில்லை. இதனால் தான் அனுமதி மறுக்கிறோம் எனக் கூறினர் காவல் துறையினர்.
எஸ்மா உருட்டுக் கட்டையால் மிரட்டும் நீதிமன்றம் !
தொழிலாளர்களின் போராட்டத்தை மட்டுமல்ல, பந்துக்குத் தடை, ஊர்வலம், பொதுக்கூட்டங்களுக்குக் கட்டுப்பாடுகள், ஆர்ப்பாட்டங்களை ஆள் அரவம் இல்லாத இடங்களுக்குத் தூக்கியடிப்பது எனக் குடிமக்களின் ஜனநாயக உரிமைகளை மறுப்பதில் போலீசைவிட தீவிரமாக இருப்பவர்கள் நீதிபதிகள்தான்.
யார் தீவிரவாதி ? தருமபுரி பாலக்கோட்டில் தூளான டாஸ்மாக் கடை !
உச்சநீதிமன்ற உத்தரவை மீறி டாஸ்மாக் கடை செயல்படுவதை அறிந்த மக்கள் 13.05.2017 அன்று காலை 10 மணியளவில் கடையின் பூட்டை உடைத்து மது பாட்டில்களை எடுத்து வெளியே வீசி உடைத்து போராட்டம் நடத்தினர்.
சத்தீஸ்கர் : பெண்களின் மார்பில் மின்சாரம் பாய்ச்சும் அரசு பயங்கரவாதம் !
அநீதிக்கு எதிரான வர்ஷா டோங்ரேயின் உறுதியைப் பாராட்டும் அதே வேலையில் அவர் இந்தக் கட்டமைப்பிற்குள்ளேயே இதற்கான தீர்வைத் தேடுகிறார், தீர்வு கிடைக்கும் என நம்புகிறார் என்பதை வருத்தத்தோடும் பார்க்க வேண்டியது இருக்கிறது.
























