கடந்த 21.05.2017 அன்று கோவை ஒண்டிபுதூர் சுங்கம் மைதானத்தில் பேராசன் காரல் மார்க்சின் 200 -ஆம் ஆண்டு பிறந்த தினத்தை நினைவு கூறும் வகையில் தெருமுனைக் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்காக முன் அனுமதி கேட்டு காவல் துறையிடம் கடிதம் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் காவல்துறையானது, நமது தெருமுனைக் கூட்டத்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் எனக் கூறி அனுமதி மறுத்தது.
காரல் மார்க்சைப் பற்றி பேசினால் மக்கள் கம்யூனிசத்தின் பால் அணிதிரண்டு வந்து விடுவார்கள் என்று பயமா? அப்படிப் பார்த்தால் மார்க்ஸ் குறித்த நூல்கள், பேச்சுக்கள், எழுத்துக்கள், படங்கள் இலட்சக்கணக்கில் உள்ளன. இவற்றையெல்லாம் தடை செய்வார்களா? உலக மனித குலத்தின் விடுதலைக்கு பாடுபட்ட ஒரு மகத்தான தலைவரைப் பற்றி பேசினாலே சட்டம் ஒழுங்கு பிரச்சினை என்றால் இது அடிமை நாடு இல்லாமல் வேறு என்ன? இந்தத் தடையைத் தாண்டி தெருமுனைக் கூட்டம் நடத்த உள்ளோம். அதனடிப்படையில் வருகின்ற 28.05.2017 அன்று தெருமுனைக் கூட்டத்தை நடத்தத் திட்டமிட்டுள்ளோம். இக்கூட்டத்துக்கு பொதுமக்கள், மாணவர்கள், ஜனநாயக சக்திகள் என அனவரும் திரண்டுவரக் கோருகிறோம்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் :
மக்கள் கலை இலக்கியக் கழகம்.
கோவை – 94879 16569.