பிட்டுப்பட தியேட்டர்களில் தேசிய கீதம் – கொல்கத்தா வழிகாட்டுகிறது !
“எனது தேசத்தை நான் நேசிக்கிறேன் – அதை பிட்டுப்படம் பார்க்க வந்த நேரத்தில் எல்லாம் நான் வெளிப்படுத்திக் கொண்டிருக்க வேண்டியதில்லை” என்கிறார் பிட்டுப்பட ரசிகர் ஒருவர்.
குமரி மாவட்ட பெண்கள் சாதனை : 2-ஆவது டாஸ்மாக் கடை மூடப்பட்டது !
சாதி, மதம், ஊர் வேற்றுமைகளை கடந்து பொதுவான கோரிக்கையின் கீழ் சரியான அரசியல் கண்ணோட்டத்துடன் அமைப்பாக திரண்டு போரடியதால் கிடைத்த வெற்றி இது
மோடியின் ராஜகுரு சோ ராமசாமி : சில குறிப்புகள்
எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவை அவர் எப்போதுமே விட்டுக் கொடுக்காமல் ஆதரித்தற்கும், திராவிட இயக்கம் – தி.மு.கவை விட்டுக் கொடுக்காமல் தொடர்ந்து விமரிசித்தத்ற்கும் பார்ப்பனியத்தால் ஊறிப்போன திமிரெடுத்த கொழுப்புதானே காரணமன்றி வேறு அறமோ குறமோ எதுவுமல்ல.
விருதை பு.மா.இ.மு தோழர் மணிவாசகன் கைது ! களச்செய்திகள்
தோழர் மணிவாசகனை 6 போலிசு (அதில் இருவர் மது குடித்திருந்தனர்) கொலை குற்றவாளியை மடக்கி பிடிப்பதை போல் பிடித்து சட்டை, செருப்பு கூட போடவிடாமல் விருதை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
துறையூர் வெடிமருந்து விபத்து – அரசு நடத்திய நரபலி ! நேரடி ரிப்போர்ட்
சிதறிய சதைத்துண்டுகளை இரண்டாவது நாளாக 1 கி.மீ சுற்றளவில் பொறுக்கி எடுத்த வண்ணம் இருகின்றனர்.இறந்து போன தங்கள் குடும்ப உறுப்பினரின் ஒரு பாகத்தைக் கூட கண்டறிய முடியாத மக்கள் செய்வதறியாது அந்த இடத்தின் மண்ணை அள்ளிச்சென்று இறுதிச்சடங்கு செய்யுதுள்ளனர்.
அமெரிக்க அரசு ஒடுக்குமுறையை எதிர்க்கும் பழங்குடிகள் – படங்கள்
இரவு, பகல் என்று கூட பாராமல் மக்கள் மேல் தீவிரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டனர் அமெரிக்க அரசின் சட்ட அமலாக்கப் பிரிவு போலீசு அதிகாரிகள். கடுங்குளிரையும் பொருட்படுத்தாது மக்கள் அங்கே போராடி வருகின்றனர்.
தேசிய கீதம் மறுத்தால் சிறை – கேலிச்சித்திரம்
திரையரங்குகளில் கட்டாயமாக தேசிய கீதம் இசைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு
டாஸ்மாக் பாரில் தேசிய கீதம் – காளமேகம் அண்ணாச்சி
ரேசன் கடையில தேசிய கீதத்த பாடிக் காமிச்சாத்தான் இலவச அரசின்னு ஒரு அறிவிப்பு போட்டீங்கன்னா அடடே மானியத்த வெட்டுறுதக்கு இப்புடி ஒரு ரோசனையான்னு உலக வங்கிக்காரனே ஒரு ஆச்சரியக்குரியோட வாயப் பொளப்பானுகல்லா!
நல்ல நோட்டு அடிக்க முடியாதவன் கள்ள நோட்ட எப்படி பிடிப்பான் ?
ரிசர்வ் வங்கி சொந்தமாக இரண்டு அச்சகங்களை அங்கே தொடங்கி 2000 ரூபாய் பணத்தாள்களை அச்சடிக்கிறது. ஆனால் அச்சில் தரம் இல்லை. பணத்தாள் காய்வதற்குக் கூட எங்களுக்கு அவர்கள் நேரம் கொடுக்கவில்லை.
பள்ளிக்கரணை சாலை விபத்து : போலீசு – அதிகாரிகளை பணிய வைத்த பெண்கள் !
ஒவ்வொரு தெருவையும் கடக்கும் போதும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த பெண்களிடம், தினம் தினம் உயிர்பலி கொடுக்கப்போகிறோமா? அல்லது போராடி இரண்டில் ஒன்று பார்க்கப்போகிறோமா? வண்டியில் அடிபட்டு சாவதை விட போராட்டத்தில் போலீசிடம் அடிவாங்குவது மேல்.
சிறப்புக் கட்டுரை : தமிழகத்தின் நீர்வளமும் – விவசாயத்தின் எதிர்காலமும் !
நம்மை வாழவைப்பார்கள் என்று நம்பித்தான் இவர்கள் சொல்வதையெல்லாம் பயிரிட்டோம்! உணவுப் பொருள்களை கைவிட்டு பணப்பயிர்களை, வீரிய ரகங்களை பயிரிடச் சொன்னார்கள்! அதற்குப் பிறகுதான் நம் நிலத்தடி நீர் வற்றிப்போனது!
பா.ஜ.க தலைவர்கள் : 120 கோடியிலே 100 பேர் செத்தால் என்ன ?
மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் செய்தியாளர்களிடம் பேசும் போது, வங்கிகளின் முன் நிற்பவர்கள் எல்லாம் 'அசுர சக்திகள்' எனவும், கள்ளப் பணத்தை மாற்றிச் செல்ல மாறுவேடமிட்டு வந்திருப்பார்கள் எனவும் தெரிவித்திருக்கிறார்.
இந்த தீண்டாமைக் குற்றத்தின் மதிப்பு 2.8 லட்சம் கோடி ரூபாய் !
பட்ஜெட்டுகளில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மக்களின் நலத் திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை, அம்மக்களுக்காகப் பயன்படுத்தாமல், வெவ்வேறு இனங்களுக்குக் கடத்திக் கொண்டு போவதும், நிதியைச் செலவழிக்காமல் கிடப்பில் போடுவதும் சர்வசாதாரணமாக நடைபெற்று வருகிறது.
நத்தம் விசுவநாதன் ஒரு அன்னிய முதலீட்டாளர் – தோழர் மருதையன் உரை !
"சசிகலாவின் கணவர் நடராஜன் அடிக்கடி கேமன் தீவுகளுக்குச் சென்று வருவாராம். கேமன் தீவு என்பது வரியில்லா சொர்க்கம். அந்தத் தீவுகளுக்கு இவர் ஏ.டி.எம்-ல் பணம் எடுக்கப் போவது போல சென்று வருகிறார்." - வீடியோ உரை
மோடி என்ன பெரிய பருப்பா ? மக்கள் கருத்துக்கள் !
ஆயிரம் ஐநூறு செல்லாதுன்னு அரசுதானே அறிவிச்சுச்சு அவங்களுதுதானே கேஸ் கம்பெனி, ரேசன் கடை, ரயில்வே ஸ்டேசன், பஸ்சு இங்கல்லாம். அங்க 500 1000 ரூபாய வாங்கலாமில்ல!























