நீட் தேர்வை எதிர்த்துப் போராட மாணவர்களுக்கு அனுமதி மறுப்பு !
அன்று காளைக்காக கூடிய மாணவர்கள் விவசாயிகளுக்காகவும், ஒட்டுமொத்த தமிழக மக்களின் உரிமைகளுக்காகவும் கூட வேண்டும் என்ற அடிப்படையில்தான் இன்று நாங்கள் போராடுகிறோம்.
மோடியை எதிர்த்து ஆளில்லா இடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தச் சொல்லும் போலீசு !
சாப்பிட அரிசியும் இல்லை! சமைப்பதற்கு சிலிண்டரும் இல்லை! யாரை வாழ வைப்பதற்கு இந்த திட்டம்? மக்களை பட்டினிக்கு தள்ளுவதற்கு பெயர் உணவு பாதுகாப்பு சட்டமா?
தொழிலாளிகளின் நெஞ்சை சுடும் வேல் பிஸ்கட்ஸ் !
தொழிலாளர்களின் உரிமையை மறுக்க லட்ச லட்சமாக செலவு செய்து வழக்கை நடத்தத் தயாராக இருக்கும் முதலாளி, தொழிலாளிக்குச் சட்டப்படி சேர வேண்டிய குறைந்தபட்ச தொகையைக் கூட தருவதில்லை
ரேசன் – கேஸ் மானிய வெட்டு ! புதுச்சேரியில் திரண்ட தொழிலாளி வர்க்கம் !
கேஸ் மானியம், ரேசன் பொருட்கள் ரத்து மட்டுமல்ல பிரச்சினை; தொழிலாளர் சட்டத்திருத்தம், நீட் தேர்வு, நெடுவாசல், கதிராமங்கலம் விவசாயிகளின் போராட்டம் என இந்த அரசு அனைத்து தரப்பு மக்களுக்கும் எதிராகிப் போயுள்ளது.
சிறப்புக் கட்டுரை : விவசாயிகளை ஒழிக்கப் போகும் கார்ப்பரேட் சந்தை !
விவசாயிகள் உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் வேளாண் மின்னணுச் சந்தை ஆகியவை சிறு, குறு விவசாயிகளைக் கவ்விப்பிடிக்கும் கிடுக்கியின் இரண்டு முனைகள்.
அம்பானி, அதானி, மிட்டல்தான் இனி குத்தகை விவசாயிகள் !
அன்று விவசாயிகள் சுரண்டப்படுகிறார்கள் என்ற நிலையில் அந்த சட்டங்கள் தேவைப்பட்டன. இன்று காலம் மாறிவிட்டது. கிராமப்புற ஏழைமக்கள் அரசியல் ரீதியில் வலிமையானவர்களாக மாறிவிட்டார்கள்.
அரசு ஊழியர்கள் – ஆசிரியர்கள் போராட்டம் வெல்லட்டும் !
தொழிலாளர்களின் சம்பளத்திலிருந்து மாதாமாதம் பிடிக்கப்படும் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புமிக்க வருங்கால வைப்பு நிதியைப் பங்குச் சந்தையில் போட்டுச் சூதாடத் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு உரிமை அளிப்பது தான் அரசின் நோக்கம்.
நமக்கு மட்டும் ஏம்ப்பா நாள் முழுக்க சோளச்சோறு !
நெற்கதிர்களை நேர்த்தியாக அறுப்பதில் அப்பா லாவகமானவர் ஏதோ ஒரு சிந்தனையில் கதிர்களை இழுத்து அறுத்தபோது விரல்களையும் சேர்த்து அறுத்துக்கொண்டார் அன்று - அறுவடை நிலத்தில் சிந்திய அந்த குருதித்துளிகள் மண்ணுக்கு உரமாகிப்போனது.
வெள்ளாற்றை பாதுகாப்போம் ! கூடலையத்தூர் மணல் குவாரி முற்றுகை !
வெள்ளாற்றை காக்க விவசாயத்தை காக்க மக்கள் தானே களத்தில் இறங்கி போராட முடியும். அதற்கு போலீசு பாதுகாப்பு கொடுக்காமல், ஏன் மக்களை அச்சுறுத்துகிறது? நடப்பது சுதந்திர ஆட்சியா? ஆங்கிலேய காலனி ஆட்சியா?
ஐடி துறை ஆட்குறைப்பு தொடர்பாக முத்தரப்பு பேச்சு வார்த்தை !
காக்னிசன்ட், விப்ரோ நிறுவனங்களில் பெருமளவில் ஆட்குறைப்பு நடப்பதாக வணிக நாளிதழ்களில் செய்தி வெளியான முதலே பு.ஜ.தொ.மு - ஐ.டி ஊழியர்கள் பிரிவு அதற்கு எதிரான தீவிர போராட்டத்தை முன்னெடுத்து வருகிறது.
பிரதம மந்திரி பயிர்க் காப்பீடு திட்டம் : கார்ப்பரேட்டுகளுக்கு நேரடி மானியம் !
தனியார் காப்பீட்டு நிறுவனங்களிடம் ஒப்படைப்பதன் மூலம், அவர்களை இயற்க்கச் சீற்றம், விலை வீழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு இடர்பாடுகளிலிருந்து காக்க வேண்டிய தனது கடமையைத் தட்டிக் கழிக்கிறது இந்திய அரசு.
மானியங்களை வெட்டும் அரசு யாருக்கானது ? புஜதொமு ஆர்ப்பாட்டம்
உனக்கு எதுவுமே செய்ய மாட்டேன் என்று திமிராக, உறுதியாகப் பேசும் அரசிடமே, அய்யா எங்களைப் பாருங்கள், ஏதாவது செய்யுங்கள் எனக் கெஞ்சுவதால் என்ன பலன் கிடைக்கப் போகிறது?
பகுதி 2 : வானதி சீனிவாசன் ஊழலுக்கு ஆர்.எஸ்.எஸ் பாதுகாப்பு !
இந்திய சுதந்திரப் போராட்டத்தையே காட்டிக்கொடுத்த துரோக வரலாற்றைக் கொண்ட ஆர்.எஸ்.எஸ் -சுடன் துரோகமும் வஞ்சகமும் ஒட்டிப்பிறந்தவை. அதனால் ஜீக்கு ஜீ சரியாப் போச்சு ஜீ என்கிறார்கள் போலும்.
விவசாயக் கடன் தள்ளுபடி – மருமகள் உடைத்தால் பொன்குடம் !!
கார்ப்பரேட் முதலாளிகளுக்குத் தரப்படும் கடன் த்ள்ளுபடியைக் கைதட்டி வரவேற்கும் முதலாளித்துவ நிபுணர்கள், விவசாயக் கடன் தள்ளுபடியைப் பொருளாதாரச் சீர்கேடு என நரம்பின்றிச் சாடுகிறார்கள்.
தொழிலாளிகளை பணி செய்யவிடாமல் தடுக்கும் ஜேப்பியர் கல்லூரி நிர்வாகம் !
திருமதி. ரெஜினா அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ள கல்வி நிறுவனத்தில் பணி புரியும் பேருந்து ஒட்டுநர்கள் தொழிற்சங்கம் துவங்கி உள்ளதை ஏற்காத நிர்வாகம் தொழிலாளரை மிரட்ட சட்டவிரோத நடவடிக்கைகளைக் கையாள்கிறது.

























