இயக்குநர் சராசரி சினிமா லாஜிக் படிதான் கதையை அமைத்திருக்கிறார். அதனால் தனம் திரைப்படம் விபச்சாரியையும் காட்டவில்லை, பார்ப்பனர்களையும் அம்பலப்படுத்தவில்லை.
வருடந்தோறும் காந்தி ஜெயந்தியும், நேரு ஜெயந்தியும் டெல்லி அரசியலில் தொழில் செய்யும் அரசியல்வாதிகள் கடைபிடிக்க வேண்டிய கர்மங்களாகும். அதே போல தமிழக அரசியலில் அண்ணா, பெரியார், காமராஜர் நினைவு நாட்களில் சமாதிகளுக்கு செல்லும் தலைவர்கள் எல்லோரும் சமீப ஆண்டுகளில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் சமாதிக்கும் செல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். மற்ற ஜெயந்திகளுக்கும் தேவர் ஜெயந்திக்கும் முக்கியமான...
கருணையும் நிதியும் ஒன்றாய் சேர்ந்தால் கருணாநிதியாகும். எங்கள் கருணா... நிதியாகும்'' இது நாகூர் ஹனீபாவின் திமுக "கொள்கை'ப் பாடல். போர் நிறுத்தம் ஆயுத உதவி நிறுத்தம் என்று தொடங்கி பத்தே நாளில் அரிசி பருப்பு வசூலில இறங்கிவிட்டார் அண்ணன் கலைஞர்.
சந்திராயன் இன்று ஏவப்படுகிறது. அமெரிக்க டவுசர் கிழிந்ததையும் பங்குச் சந்தை விழுந்ததையும் உற்சாகம் கொப்பளிக்க விவரிக்க முடியாமல் செய்தி ஊடகங்கள் திணறிய நிலையில் கிடைத்தது சந்திராயன்.
வைரஸை நுண்ணோக்கி மூலம்தான் பார்க்க முடியும் என்று அறிவியல் சொல்கின்றது. என் கண்ணிற்கு முன்னால் ஐந்து அடி, இரண்டு சென்டிமீட்டரில் ஒரு வைரஸ் அலட்டிக் கொள்ளாமல் நழுவிச் செல்வதைப் பார்த்து வியந்து நின்றேன்.
சுப்பிரமணியபுரம் ஏன் வெற்றி பெற்றது என்பதைப் பற்றி இந்நேரம் கோடம்பாக்கத்து முதலாளிகள் நிச்சயமாக ‘ரூம் போட்டு’ யோசித்துக் கொண்டிருப்பார்கள். ரசிகர்களின் மனதுக்கு நெருக்கமாக இருப்பதை உத்திரவாதப்படுத்தும் வகையில் திட்டமிட்டுத் தயாரிக்கப்பட்டிருக்கும் படம் இது.
இது வழக்கமான நாத்திகம் பேசும் கட்டுரையல்ல. நாத்திகத்தை அறிவியலுடன் இணைக்கும் கட்டுரை. ஆன்மீக அன்பர்கள் மற்றும் கடவுளை நம்பிக்கொண்டிருக்கும் நண்பர்களுக்கு இக்கட்டுரையை அறிமுகப்படுத்தவும்.
பார்ப்பனிய நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு ஜனநாயக விழுமியங்கள், சோசலிச அபிமானம், ஒடுக்கப்பட்ட வர்க்கத்தின் கலக மனோபாவம், அலங்காரமற்ற பெரியாரின் எளிய எள்ளல் மொழி இவற்றுடன் ஒரு விதமான நிலப்பிரபுத்துவ தோரணையும் கலந்த ஆளுமைதான் ராதா.
"ஒரு மனிதனை நாய் கடித்து விட்டது" என்பது நியூஸ் இல்லை. மனிதன் நாயைக் கடித்து விட்டான் என்றால் அதுதான் நியூஸ் என்பது பத்திரிகை உலகிலற்கு வழிகாட்டும் ஒரு பிரபலமான முதுமொழி.
ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதத்தையும் இதன் எதிர் விளைவாய் குண்டுகளை வெடிக்கச் செய்யும் இசுலாமிய தீவிரவாதத்தையும் தெரிந்து வைத்திருக்கிறோம். ஆனால் படித்தவர்களின் பயங்கரவாதம்?
தமிழகத்து தேனீர்க் கடைகளில் வாங்கப்படும் தினத்தந்தியில் தினமும் கள்ளக்காதல் குறித்த செய்தியும் ஒரு கொலையும் வாசகர்களால் அதிகம் படிப்பதற்கென்றே இடம் பெற்றிருக்கும்.
எல்லாம் நடந்தும் எதுவும் நடக்காதது போல நெருக்கிச் செல்லும் வாழ்க்கையின் கண்களில் சில தழும்புகள் மட்டும் பதிந்து விடுகின்றன. அப்படித்தான் அந்த இளைஞனின் தற்கொலையை நேற்று அறிந்து அதிர்ச்சியடைந்தேன்
திடீரென்று கருத்துரிமையின் பால் காலச்சுவடுக்கு காதல் வந்த மர்மம் என்ன?
நடிகையின் விஜயம் நகைக்கடையைப் பிரபலமாக்குவதற்கும், நாசரேத் ஆயரின் வருகையின் மூலம் தேவனின் கிருபை கிடைப்பதற்கும் ஹென்றி விரும்பியிருக்கிறார்.
வீரத்தளபதி ஜே.கே.ரித்தீஸ் என்ற கந்து வட்டிக்காரர், வடபழனியின் மூத்திரச் சந்துகளிலெல்லாம் கட் அவுட்டுகளாக நின்று அள்ளிக் கொடுக்கும் வள்ளல் நடித்திருக்கும் நாயகன் திரைப்படம், ஹவுஸ்புல்லாக ஓடிக்கொண்டிருக்கிறதாம்.