Thursday, June 11, 2026
முகப்பு பதிவு பக்கம் 10

பெட்ரோ டாலர் வீழ்ச்சியும் புதிய கனிமவளப் போரும்: அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மேலாதிக்கவெறி

ருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து, அமெரிக்க மேலாதிக்கத்தின் ஆணிவேராகவும், உலகப் பொருளாதார மற்றும் அரசியல் ஒழுங்கமைப்பைத் தீர்மானித்த ஒற்றை மையச் சக்தியாகவும் விளங்கியது “பெட்ரோ டாலர்”. தற்போது, பெட்ரோ டாலர் கட்டமைப்பு அதன் வரலாற்றிலேயே மிகப்பெரிய நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. சவுதி அரேபியா, ரஷ்யா, சீனா, ஈரான், வெனிசுலா போன்ற நாடுகள் யூரோ, யுவான் போன்ற நாணயங்களில் எண்ணெய் வர்த்தகத்தை நடத்தத் தொடங்கி, டாலரை அடிப்படையாகக் கொண்ட அமெரிக்க மேலாதிக்கத்திற்கு சவால் விட்டு வருகின்றன.

கண்கள் கட்டப்பட்டு போர்க் குற்றவாளியைப் போல நாடுகடத்தப்பட்ட வெனிசுலா அதிபர் மதுரோ.

இந்த நிதியியல் நிலநடுக்கம் ஒருபுறம் நிகழ்ந்து கொண்டிருக்கும் போதே, மறுபுறம் எரிசக்தித் துறையில் ஒரு அடிப்படை மாற்றம் நிகழ்ந்து வருகிறது. புதைபடிவ எரிபொருட்களிலிருந்து விலகி, பசுமை எரிசக்தி மற்றும் மின்னணு தொழில்நுட்பங்களை நோக்கி உலகம் நகரத் தொடங்கிவிட்டது. இதனால், உலக மேலாதிக்க அரசியலின் மையம் தவிர்க்கவியலாமல் “எண்ணெய் கிணறுகளிலிருந்து” “கனிமச் சுரங்கங்களை” நோக்கி நகர்கிறது. இந்தச் சூழலில், உலகின் மிகப்பெரிய எண்ணெய் இருப்புகளையும், மதிப்பிட முடியாத அளவிற்கு அருமண் தனிமங்கள் மற்றும் உத்திசார் கனிமங்களையும் கொண்டுள்ள வெனிசுலா, சரிந்துவரும் மேலாதிக்கத்தைத் தக்கவைக்கத் துடிக்கும் அமெரிக்காவின் வேட்டைக்களமாக மாறியுள்ளது.

பெட்ரோ டாலர் சாம்ராஜ்யம் – எழுச்சியும் வீழ்ச்சியும்

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலத்தில், உலகப் பொருளாதாரம் “பிரெட்டன் உட்ஸ்”  அமைப்பின் கீழ் இயங்கியது. ஆனால், வியட்நாம் போரினால் ஏற்பட்ட பொருளாதாரச் சுமை மற்றும் பணவீக்கம் காரணமாக, 1971-ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சன், டாலரைத் தங்கத்தோடு மாற்றிக்கொள்ளும் முறையை ஒருதலைப்பட்சமாக இரத்து செய்தார். இது டாலரின் மதிப்பை கேள்விக்குறியாக்கியது. அமெரிக்கப் பொருளாதாரத்தைக் காப்பாற்றவும், டாலருக்கான உலகளாவியத் தேவையைத் தக்கவைக்கவும், 1974-ஆம் ஆண்டு அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹென்றி கிஸ்ஸிஞ்சர் சவுதி அரேபியாவுடன் ஒரு இராஜதந்திர மற்றும் பொருளாதார ஒப்பந்தத்தை மேற்கொண்டார். இது பின்வரும் விளைவுகளை உருவாக்கியது:

டாலர்மயமாக்கல்: சவுதி அரேபியா தனது கச்சா எண்ணெயை சர்வதேச சந்தையில் விற்கும்போது, அதற்கான விலையை அமெரிக்க டாலரில் மட்டுமே நிர்ணயிக்க வேண்டும். பிற நாணயங்களை ஏற்கக்கூடாது.

பாதுகாப்பு உத்தரவாதம்: இதற்குப் பிரதிபலனாக, சவுதி அரேபியாவிற்கு, குறிப்பாக அல்-சவுத் அரச குடும்பத்திற்கு, நிபந்தனையற்ற இராணுவப் பாதுகாப்பையும் நவீன ஆயுதங்களையும் அமெரிக்கா வழங்கும்.

பெட்ரோ டாலர் மறுசுழற்சி: எண்ணெய் விற்பனை மூலம் சவுதி அரேபியா ஈட்டும் உபரி டாலர்களை, மீண்டும் அமெரிக்கப் பொருளாதாரத்திலேயே முதலீடு செய்ய வேண்டும். குறிப்பாக, அமெரிக்க கருவூலப் பத்திரங்களை வாங்குவதன் மூலம், அமெரிக்காவின் கடன் சுமையை நிர்வகிக்க உதவ வேண்டும்.

இந்தக் கட்டமைப்பு, உலக நாடுகள் அனைத்தும் எண்ணெய் வாங்க வேண்டுமானால், முதலில் டாலரை வைத்திருக்க வேண்டும் என்ற கட்டாயத்தை உருவாக்கியது. இதன் மூலம் தனது வர்த்தகப் பற்றாக்குறையைப் பற்றிக் கவலைப்படாமல், எவ்வளவு வேண்டுமானாலும் டாலரை அச்சடிக்கும் ‘அளவற்ற சலுகையை’ அமெரிக்கா உருவாக்கிக் கொண்டது.

ஜூன் 9, 2024 அன்று இந்த ஒப்பந்தம் 50 ஆண்டுகளை நிறைவு செய்தது. இந்நிலையில்,  இத்தனை ஆண்டுகளாக டாலரில் மட்டுமே எண்ணெய் வர்த்தகம் செய்துவந்த சவுதி அரேபியா, டாலரைத் தாண்டி சீன யுவான், யூரோ போன்ற மற்ற நாணயங்களில் வர்த்தகம் செய்யத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, “எம்-பிரிட்ஜ் திட்டம்” (Project m-Bridge) என்ற டிஜிட்டல் நாணயத் தளத்தில் சீனாவுடன் சவுதி அரேபியா இணைந்தது, டாலர் சாராத வர்த்தகத்திற்கான அதன் விருப்பத்தைக் காட்டுகிறது. இது அமெரிக்காவின் டாலர் மேலாதிக்கத்திற்கு சவாலாக அமைந்துள்ளதோடு, அமெரிக்கா வாங்கிக் குவித்துள்ள 34 டிரில்லியன் டாலர் கடன் சுமையை நிர்வகிப்பதிலும் பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என்பது உறுதி.

இன்னொரு பக்கத்தில் பெட்ரோலிய – இயற்கை எரிவாயுத் துறையில் ரஷ்யாவின் ஆதிக்கத்தை மட்டுப்படுத்தவும், ஈரானை முடக்கவும் அமெரிக்கா முயன்று வருகிறது. இந்த நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய், எரிவாயு இறக்குமதி செய்வதைத் தடுக்கும் வகையில் வரிகளை உயர்த்தி ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகளை அடிபணிய வைத்துள்ளது. ரஷ்யா, ஈரானின் இடத்தை நிரப்பும் நோக்கில், பல நாடுகளுக்கு கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவை தானே ஏற்றுமதி செய்வதாக அண்மைக்காலத்தில் ஏராளமான ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது அமெரிக்கா.

இந்த ஒப்பந்தங்களை எல்லாம் நிறைவேற்றும் அளவுக்கு, தங்களது சுத்திகரிப்பு நிலையங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெயை அமெரிக்காவால் உற்பத்தி செய்ய முடியாது என்பதே உண்மை. அதை ஈடுகட்டும் வகையில்தான், வெனிசுலாவின் எண்ணெய் வளங்களைக் கொள்ளையிட அந்நாட்டின் மீது தாக்குதல் தொடுத்திருக்கிறது அமெரிக்கா. இதன் மூலம் சரிந்து கொண்டிருக்கும் தனது டாலர் மேலாதிக்கத்தைத் தக்கவைக்க முடியுமென நம்புகிறது.

லெனினியப் பார்வையில் ஏகாதிபத்தியமும் நவீன தொழில்நுட்ப ஆதிக்கமும்

உற்பத்திக் கருவிகளின் தொடர்ச்சியான முன்னேறிய வளர்ச்சி, ஆரம்பகாலப் போட்டி முதலாளித்துவத்தை ஒழித்து, முதலாளித்துவத்தின் உச்சக்கட்டமான ஏகாதிபத்தியமாக வளர்ச்சியடைந்தது. உற்பத்திக் கருவிகளின் வளர்ச்சியால் ஏற்பட்ட உற்பத்தி ஒன்றுகுவிப்பு, வங்கி மூலதனமும் ஆலை மூலதனமும் இணைந்து நிதி மூலதனம் உருவாதல், உற்பத்திக்கான மூலப்பொருட்களின் தேவைக்காக செல்வாக்கு மண்டலங்களை (காலனி) உருவாக்குதல் ஆகியவையே ஏகாதிபத்தியத்திற்கான அடிப்படை என்று 1916-இல் மாமேதை லெனின் வரையறுத்தார்.

லெனின் காலத்திய ஏகாதிபத்திய நாடுகளும், அந்நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களும் அன்றைய உற்பத்திக்குத் தேவையான மூலப் பொருட்களான இரும்பு, நிலக்கரி ஆகியவற்றைத் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கு உலக நாடுகளைக் காலனிகளாக்கின. 1990-களில், கச்சா எண்ணெய் முக்கிய மூலப்பொருளாக இருந்தது. அவ்வளத்தைத் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டுவர ஏகாதிபத்தியங்கள் போட்டியிட்டன. ஒற்றைத் துருவ மேலாதிக்கமாக உருவெடுத்த அமெரிக்கா, எண்ணெய் வள நாடுகளான மத்திய கிழக்கு நாடுகளைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது. இதற்கான பிராந்தியங்களில் தனது அடியாட்களாகப் பிராந்திய வல்லரசுகளை உருவாக்கியது. 30 ஆண்டுகாலம், அமெரிக்காவின் டாலர் மேலாதிக்கமே உலகை ஆட்டி வைத்தது.

அதேசமயம் புதிதாக உருவாகி வந்த தகவல் தொழில்நுட்பப் புரட்சியும், அதன் பாய்ச்சலான செயற்கை நுண்ணறிவும் இன்றைய உற்பத்திக்கான அடிப்படையாக மாறியுள்ளன. செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்திற்குத் தரவுகள்தான் அடிப்படையானவை. சுருங்கச் சொன்னால் “தரவுகளே” இன்றைய காலகட்டத்தின் “புதிய எண்ணெய்”. இத்தரவுகளைச் செயல்முறைப்படுத்த “குறைகடத்திச் சில்லுகள்” (Semiconductor Chips) மிக முக்கியமானவை. மருத்துவம், இராணுவம், தகவல் தொழில்நுட்பம், இ-வணிகம் என அனைத்தும் செயற்கை நுண்ணறிவுமயமாகி வரும் சூழலில், அதற்கேற்ற “சில்லு”களை (Chip) உற்பத்தி செய்வது அதிமுக்கியமானது.

மறுபக்கத்தில் புதைபடிவ எரிபொருட்களின் பற்றாக்குறை, புவிவெப்பமயமாதல் போன்றவற்றால் பசுமை எரிசக்தியை நோக்கி உலகம் சென்று கொண்டிருக்கிறது. எனவே, மின்சார வாகனங்களுக்கான உற்பத்தி அதிகரித்து வருகிறது. இந்த வாகனங்களுக்கான மின்கலன்கள் உருவாக்குவது, திறன் பேசிகள், இராணுவத் தளவாடங்கள், விண்கலன்கள் என அனைத்தும் இந்த அரியவகைத் தனிமங்களை நம்பியே இருக்கின்றன.

லெனின் காலத்திய உற்பத்திக்கு இரும்பும், நிலக்கரியும் உயிர்நாடி என்றால், இன்றைய செயற்கை நுண்ணறிவு உலகிற்கு அரியவகைக் கனிமவளங்கள் உயிர்நாடியாகும். ஆகையால், இன்றைய முன்னேறிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சார்ந்த உற்பத்திக்கும், அதில் மேலாதிக்கம் செலுத்துவதற்கும் அவற்றிற்குத் தேவையான கனிமவளங்களைத் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டியது ஏகாதிபத்தியங்களுக்கு அவசியமாக இருக்கிறது. ஏகாதிபத்தியமாகத் தொடர்ந்து நீடிப்பதற்கும் இது அவசியமாகும்.

அந்தவகையில் உலக நாடுகளில், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் முன்னணியில் சீனா இருக்கிறது. அதுமட்டுமின்றி, இத்தொழில்நுட்பத்திற்கு அடிப்படையாக உள்ள அருமண் தனிமங்களை வெட்டியெடுப்பது மற்றும் சுத்திகரிப்பது ஆகியவற்றில் கடந்த முப்பது ஆண்டுகளில், சீனா மிகவும் திட்டமிட்டு, அரசு மானியங்கள் மற்றும் குறைவான சுற்றுச்சூழல் கட்டுப்பாடுகளைப் பயன்படுத்தி, இத்துறையில் ஒரு முழுமையான ஏகபோகத்தை உருவாக்கியுள்ளது. உலக அளவில், அருமண் தனிமங்களுக்கான மூலப்பொருட்களை வெட்டியெடுப்பதில் 60-70 சதவிகிதமும், தனிமங்களைச் சுத்திகரித்து பிரித்தெடுப்பதில் 90 சதவிகிதமும் சீனாவின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன.

அமெரிக்காவின் “எம்.பி. மெட்டீரியல்ஸ்” (MP Materials) என்ற நிறுவனம் அந்நாட்டில் அருமண் தனிமங்களை வெட்டியெடுத்தாலும், அவற்றைச் சீனாவில்தான் சுத்திகரிக்கிறது. ஏனெனில், இந்த சுத்திகரிப்பு தொழில்நுட்பம் சிக்கலானதும், அதிக செலவு பிடிப்பதும், சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தக் கூடியதுமாகும். சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் கதிரியக்கக் கசிவு காரணமாக கலிபோர்னியாவின் மவுண்ட் பாஸ் பகுதியில் செயல்பட்டுவந்த அருமண் சுரங்கத்தை 1980-களில் அமெரிக்கா மூடிவிட்டது. அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகள், இத்தகைய தொழில்களை எல்லாம் அன்றைய காலகட்டத்தில் வளர்ந்துவரும் மற்றும் பின்தங்கிய நாடுகளுக்குத் தள்ளிவிட்டன என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.

எனவே, சீனாவுடன் ஒப்பிடும்போது, தொழில்நுட்ப ரீதியாக அமெரிக்கா பன்மடங்கு பின்தங்கியிருக்கிறது. அதுமட்டுமல்ல, இன்றைய நிலையில் அருமண் தனிமங்களுக்காக அமெரிக்கா, சீனாவையே பெரிதும் நம்பியிருக்கிறது. 2024 மற்றும் 2025-ஆம் ஆண்டுகளில், அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தகப் போர் முற்றிய நிலையில், சீனா தனது கனிம வள ஆதிக்கத்தை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தத் தொடங்கியது.

சீனா, சில்லுத் தயாரிப்பிற்குத் தேவையான காலியம் மற்றும் ஜெர்மானியம் ஆகியவற்றின் ஏற்றுமதியைக் கடுமையாக்கியது. மேலும், அருமண் தனிமங்களைச் சுத்திகரிக்கும் தொழில்நுட்பத்தை ஏற்றுமதி செய்யவும் தடை விதித்தது. ஒரு எஃப்-35 ரக போர் விமானத்திற்கு 417 கிலோ அருமண் தனிமங்கள் தேவைப்படும் நிலையில், சீனாவின் இந்தத் தடை அமெரிக்கப் பாதுகாப்புத் துறைக்கு ஒரு “இருப்பு சார் நெருக்கடியை” ஏற்படுத்தியது.

எனவே வேறுவழியின்றி, அமெரிக்க அதிபர் டிரம்ப், சீன அதிபரைச் சந்தித்து ‘பேச்சுவார்த்தை நடத்தி’ வர்த்தகப் போரைத் தற்காலிகமாக முடிவுக்குக் கொண்டு வந்தார். இதன்விளைவாக, அருமண் தனிம ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையைத் தற்காலிகமாகச் சீனா நீக்கியிருக்கிறது. இதை வர்த்தகப் போர் என்று டிரம்ப் குறிப்பிட்டாலும், அமெரிக்கா-சீனா இடையேயான செயற்கை தொழில்நுட்பத்திற்கான மேலாதிக்கப் போட்டி என்பதும், இப்போட்டியில் சீனாவிடம் அமெரிக்கா தோற்றுவிட்டது என்பதுமே இப்போதைய உண்மை. இந்தச் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப மேலாதிக்கமானது, உலகை மறுபங்கீடு செய்வதற்கான சூழலை உருவாக்கியிருக்கிறது.

வெனிசுலா மீதான தாக்குதல் –
தோல்வியுற்ற மிருகத்தின் பாய்ச்சல்

சீனாவிடம் தோற்ற அமெரிக்கா, வெறி கொண்ட மிருகம் போலப் பிற நாடுகளின் மீது பாய்ந்து வருகிறது. தனது கட்டுப்பாட்டில் இருக்கின்ற நாடுகள் ரஷ்ய-சீனக் கட்டுப்பாட்டிற்குள் சென்றுவிடுமோ என்ற அச்சமே அமெரிக்காவின் பாய்ச்சலுக்குக் காரணம்.

எனவே, ரஷ்ய-சீன நாடுகளுடன் வர்த்தகம் மற்றும் நெருக்கம் காட்டுகிற நாடுகளின் மீது அதிகப்படியான வரி விதிப்பை மேற்கொண்டார் டிரம்ப். இந்தியா, கனடா நாடுகளின் மீது அதிகப்படியான வரி விதிப்பு, இஸ்ரேலைத் தக்கவைக்க காசா மீதான போர், ரஷ்யாவைப் பலவீனப்படுத்த உக்ரைன் போர் என அனைத்தும் சரிந்துவரும் தனது மேலாதிக்கத்தைத் தூக்கி நிறுத்த அமெரிக்கா எடுத்த நடவடிக்கைகளாகும்.

இதன் தொடர்ச்சிதான், வெனிசுலா மீதான போர் தயாரிப்பு. தென்னமெரிக்காவில் அர்ஜென்டினா, சிலி, பொலிவியா போன்ற நாடுகள் நேரடியாகவோ மறைமுகமாகவோ அமெரிக்கக் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. இந்நாடுகளுடன் வெனிசுலாவும் அமெரிக்கக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டால், மூலவளங்கள் அனைத்தும் தங்களது கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடுமென்று அமெரிக்கா கருதுகிறது.

வெனிசுலா மீதான அமெரிக்காவின் பயங்கரவாதத் தாக்குதலில் குறைந்தது 100 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

அமெரிக்கா வெனிசுலாவைத் தாக்குவதற்கு அங்கிருக்கும் எண்ணெய் வளம் மட்டும் காரணமல்ல; அதைவிட ஆழமான காரணம் அங்கு கொட்டிக் கிடக்கும் கனிம வளங்கள். வெனிசுலாவிடம் சுமார் 303 பில்லியன் பேரல்கள் நிரூபிக்கப்பட்ட எண்ணெய் இருப்பு உள்ளது. அமெரிக்காவின் ஷேல் எண்ணெய் உற்பத்தி இன்னும் 15 ஆண்டுகளுக்கு மட்டுமே நீடிக்கும் என்ற நிலையில், வெனிசுலாவின் எண்ணெய் அமெரிக்காவிற்குத் தேவைப்படுகிறது.

அதைவிட முக்கியமாக, வெனிசுலாவின் தெற்கே அமைந்துள்ள “ஆர்கோ மினெரோ” (Orinoco Mining Arc) என்ற பகுதியில், சுமார் 2 டிரில்லியன் டாலர் மதிப்புள்ள கனிமங்கள் புதைந்துள்ளன. தங்கம், கோல்டான், தோரியம், மற்றும் அருமண் தனிமங்களான நியோடைமியம், லாந்தனம் ஆகியவை டன் கணக்கில் புதைந்துக் கிடக்கின்றன. அமெரிக்கத் தளபதி ஜெனரல் லாரா ரிச்சர்ட்சன், “இந்த வளங்கள் நம் எதிரிகள் (சீனா, ரஷ்யா) கைகளுக்குச் செல்வதை நாம் அனுமதிக்க முடியாது. இது நமது தேசியப் பாதுகாப்புப் பிரச்சினை” என்று நாடாளுமன்றத்தில் வெளிப்படையாகப் பேசியதே, இது வளங்களுக்கான போர் என்பதற்கான நேரடிச் சாட்சியம்.

தென்னமெரிக்கக் கண்டத்தில் ரஷ்ய-சீன ஆதிக்கத்தைத் தடுக்கவும், வளங்களைக் கைப்பற்றவும் அமெரிக்கா 2025-இன் இறுதியில் “ஆபரேஷன் சதர்ன் ஸ்பியர்” என்ற போரைத் துவக்கியது. இதன் தொடர்ச்சியாகத்தான், ஜனவரி 3, 2026 அன்று, போதைப்பொருள் கடத்தல் என்ற பொய்க் குற்றச்சாட்டின் பேரில், வெனிசுலா தலைநகர் கராகஸில் புகுந்த அமெரிக்கப் படைகள் அதிபர் மதுரோவைக் கடத்திச் சென்றன. ஈராக் மீது படையெடுக்க “பேரழிவு ஆயுதங்கள்” என்ற பொய்யை அமெரிக்கா பயன்படுத்தியது போல, வெனிசுலாவைச் சூறையாட “போதைப்பொருள் பயங்கரவாதம்” என்ற புதிய பொய்யைக் கட்டமைத்துள்ளது.

செல்வாக்கு மண்டலங்களுக்கான அமெரிக்காவின் வெறி

வெனிசுலா அதிபரைக் கடத்தியதில் வெற்றிபெற்ற ஆணவத்தில், டிரம்ப் தனது ஏகாதிபத்திய – மேலாதிக்க வெறியின் உச்சத்துக்கே சென்று மற்ற நாடுகளை எல்லாம் மிரட்ட ஆரம்பித்து விட்டார்.

வெனிசுலா மீதான டிரம்ப்பின் தாக்குதலை, கொலம்பியாவின் அதிபரான குஸ்டாவோ பெட்ரோ கடுமையாகக் கண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த டிரம்ப், ஒரு நாட்டின் அதிபர் என்றும் பாராமல், பெட்ரோவை “போதைப்பொருள் கடத்தல்காரர்” என்று தரம் தாழ்ந்து விமர்சித்ததோடு, “அவரும் கவனமாக இருக்க வேண்டும்” என்று பகிரங்கமாகவே மிரட்டல் விடுத்தார். அத்துடன் நிற்காமல், கொலம்பியாவை “போதைப்பொருள் ஒழிப்பில் ஒத்துழைக்காத நாடு” என்று சான்றளித்து, பொருளாதாரத் தடைகளை விதிப்பதாகவும் அச்சுறுத்தினார். ஆனால், அமெரிக்காவின் இந்த மிரட்டலுக்குப் பணியாத பெட்ரோ, “நாங்கள் ஆக்கிரமிப்புகளை ஏற்க மாட்டோம்; தேவைப்பட்டால் தாய்நாட்டைக் காக்க மீண்டும் ஆயுதம் ஏந்துவேன்” என்று ஏகாதிபத்தியத்திற்கு எதிராகச் சூளுரைத்துள்ளார்.

இதேபோல, மெக்சிகோ மீதான அமெரிக்காவின் அழுத்தமும் அதிகரித்துள்ளது. 2022-ஆம் ஆண்டில் மெக்சிகோ தனது லித்தியம் வளங்களைத் தேசியமயமாக்கி, “லிட்டியோ எம்.எக்ஸ்.” (LitioMX) என்ற அரசு நிறுவனத்தை உருவாக்கியது அமெரிக்க நிறுவனங்களுக்குப் பேரிடியாக அமைந்தது. உடனே, இந்நடவடிக்கை “அமெரிக்க-மெக்சிகோ-கனடா ஒப்பந்தத்திற்கு” (USMCA) எதிரானது என்று கூச்சலிட்ட அமெரிக்கா, லித்தியம் துறையைத் தனியாருக்குத் திறந்துவிடுமாறு மெக்சிகோவை நெருக்கி வருகிறது. இதன் உச்சக்கட்டமாக, 2025-இல் மெக்சிகோவிற்கு எதிராகச் சர்வதேச நடுவர் நீதிமன்றங்களில் வழக்குகளைத் தொடுத்து நெருக்கடியை உருவாக்கி வருகிறது.

வடக்கே, ஆர்க்டிக் பகுதியிலும் அமெரிக்காவின் கழுகுக் கண்கள் பதிந்துள்ளன. கிரீன்லாந்தின் தெற்கே உள்ள “குவானேஃப்ஜெல்ட்” சுரங்கத்தில், மிகப்பெரிய அளவுக்கு அருமண் தனிமங்கள் மற்றும் யுரேனியம் போன்றவை புதைந்து கிடக்கின்றன. இதைக் கைப்பற்றத் துடிக்கும் டிரம்ப், கிரீன்லாந்தை ஒரு ரியல் எஸ்டேட் சொத்தைப் போல ‘விலைக்கு வாங்க’ விரும்புவதாகக் கூறினார். அது நடக்காத பட்சத்தில், “இராணுவ நடவடிக்கை எப்போதும் ஒரு விருப்பத் தேர்வாக உள்ளது” என்று வெள்ளை மாளிகை மூலம் தனது நேட்டோ கூட்டாளியான டென்மார்க்கையே மிரட்டும் அளவிற்கு அமெரிக்காவின் வள வேட்டை எல்லை மீறிச் சென்றுள்ளது.

அமெரிக்காவை எதிர்க்கும் ரஷ்ய – சீன நிலை என்ன?

வெனிசுலா அமெரிக்க மேலாதிக்கத்தை எதிர்க்கும் அதே நேரத்தில், அமெரிக்காவின் எதிரிகளான ரஷ்யா மற்றும் சீனாவுடன் மிக நெருக்கமான அரசியல்-பொருளாதார உறவுகளை மேற்கொண்டுள்ளது. வெனிசுலாவின் மிகப்பெரிய கடன் வழங்குநராகத் திகழும் சீனா, தமது மேலாதிக்கத்திற்கான “பெல்ட் அண்ட் ரோடு” திட்டத்தில் வெனிசுலாவையும் இணைத்துள்ளது.

குறிப்பாக, 2024-25 காலகட்டத்தில் சீனாவின் “சி.சி.ஆர்.சி.” (CCRC) மற்றும் “அன்ஹுய் குவாங்டா” போன்ற நிறுவனங்கள், வெனிசுலாவின் மரக்காய்போ ஏரி மற்றும் ஒரினோகோ மண்டலப் பகுதிகளில் பில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்துள்ளன. மேலும், வெனிசுலாவின் எண்ணெய் ஏற்றுமதியில் சுமார் 80 சதவிகிதம் சீனாவிற்கே செல்கிறது. இந்த சட்டப்பூர்வமான ஒப்பந்தங்கள் மட்டுமன்றி, ஒரினோகோ சுரங்கப் பகுதியில் நடைபெறும் சட்டவிரோதச் சுரங்கத் தொழிலிலும் சீனா மறைமுகப் பங்கு வகித்து, தங்கம் மற்றும் கோல்டானைப் பெறுகிறது.

மறுபுறம், வெனிசுலாவை அமெரிக்காவின் கொல்லைப்புறத்தில் உள்ள தனது இராணுவக் கோட்டையாகவே ரஷ்யா பார்க்கிறது. ரோஸ்நெஃப்ட் நிறுவனம் மூலம் எண்ணெய் துறையில் ஆழமாக காலூன்றியுள்ள ரஷ்யா, 2025-இல் எஸ்-300 வான் பாதுகாப்பு அமைப்புகளையும், சுகோய் போர் விமானங்களையும் வழங்கி வெனிசுலாவின் இராணுவப் பலத்தை உயர்த்தியுள்ளது. தனது இராணுவ அதிகாரிகளை அனுப்பி இராணுவத்திற்குப் பயிற்சி கொடுப்பதிலும் ஈடுபட்டு வருகிறது. இதேபோல, துருக்கியும் வெனிசுலாவின் தங்கத்தைச் சுத்திகரித்து, அமெரிக்கத் தடைகளை மீறி அந்நியச் செலாவணியைப் பெற உதவுகிறது.

இந்த ஒப்பந்தங்கள் மற்றும் நகர்வுகள் அனைத்தும் வெனிசுலாவின் வளமிக்க ஆர்கோ மினெரோ கனிமப்படுகையைக் குறிவைத்தே நடக்கின்றன. அமெரிக்கத் தடைகளை மீறி நடக்கும் இந்த ரஷ்ய-சீனக் கூட்டுறவும், சீனாவின் கனிம வேட்டையும் அமெரிக்காவிற்குப் பெரும் எரிச்சலூட்டுகிறது. மேலும், தென்னமெரிக்கப் பகுதியில் சீனாவின் ஆதிக்கத்தை வேரறுக்க வேண்டுமானால், வெனிசுலாவைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டும் என்ற மேலாதிக்கக் கண்ணோட்டத்திலிருந்துதான் வெனிசுலா மீது போர் நடவடிக்கையைத் தொடங்கியிருக்கிறது அமெரிக்கா.

ரஷ்யாவும் சீனாவும் இதைக் கண்டித்தாலும், அமெரிக்காவின் மீதான தமது பொருளாதாரத் தாக்குதல் குறித்து இன்னும் மௌனமாகவே உள்ளன. இவ்விரு நாடுகளில் இருந்தும் அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் அருமண் தனிமங்கள், யுரேனியம், இரசாயன உரங்கள் ஆகியவற்றைத் தடுத்து நிறுத்துவோம் என மிரட்டாமல், பொருளாதாரத்தைக் காத்துக்கொள்ளும் நோக்கிலேயே இதுவரை அணுகிக் கொண்டிருக்கின்றன.

என்ன செய்யப் போகிறோம்?

மேற்கண்ட தரவுகள் யாவும் அமெரிக்க ஏகாதிபத்தியம் தற்போது ஒரு ஆழமான நெருக்கடியில் சிக்கியுள்ளதைக் காட்டுகின்றன. பெட்ரோ டாலர் வீழ்ச்சியால் ஏற்பட்டுவரும் பொருளாதார நெருக்கடியும், தொழில்நுட்பப் போரில் சீனாவிடம் பின்தங்கிக் கிடக்கும் விரக்தியுமே அமெரிக்காவை இத்தகைய வெறிபிடித்த இராணுவ நடவடிக்கைகளுக்குத் தள்ளியுள்ளன.

ஐ.நா-வின் உறுப்பு அமைப்புகள் உட்பட 66 சர்வதேச அமைப்புகளில் இருந்து வெளியேறும் முடிவில் டிரம்ப் கையெழுத்திட்டு இருப்பதும், இராணுவச் செலவை 50 சதவிகிதம் அதிகரிக்க இருப்பதாகக் கூறுவதும், அமெரிக்க மேலாதிக்கவெறி தீவிரமடைவதைக் காட்டுகின்றன. கனிமவளக் கொள்ளைக்காக இராணுவமயமாக்கும் போக்கினைத் தீவிரமாக்கினால், அது நிச்சயமாக பெரும் அழிவுமிக்க போர்களை உருவாக்கும் என்பது உறுதி.

இச்சூழலில், சர்வதேச பாட்டாளி வர்க்கத்தின் ஒரு பகுதியாக, நாம் வெனிசுலா நாட்டின் இறையாண்மையைச் சிதைக்கும் அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறோம். அதேசமயம், அமெரிக்காவை எதிர்ப்பதற்காக ரஷ்யா மற்றும் சீனாவின் காலடியில் தஞ்சம் புகுவது உண்மையான விடுதலையைப் பெற்றுத் தராது. வெனிசுலாவில் ரஷ்யாவும் சீனாவும் மேற்கொண்டுள்ள முதலீடுகள் அந்நாட்டு கார்ப்பரேட்டுகளின் நலன்களுக்கானவையே தவிர, சோசலிச நோக்கங்களுக்காக அல்ல.

எனவே, ஒரு ஏகாதிபத்தியத்திடம் (அமெரிக்கா) இருந்து தப்பிக்க, போட்டியில் ஈடுபடும் இன்னொரு ஏகாதிபத்தியத்திடம் (சீனா-ரஷ்யா) உறவாடுவது தற்காலிகப் பலன்களையும் நீண்டகால நெருக்கடிகளையும் உள்ளடக்கியது. இது தேசிய இறையாண்மை கொண்ட தற்சார்பான நாட்டை உருவாக்க உதவாது என்பதே வெனிசுலா ஆட்சியாளர்களும் மக்களும் உணர வேண்டிய உண்மை.

உழைக்கும் மக்களின் உண்மையான விடுதலை, அனைத்து வகையான ஏகாதிபத்தியச் சுரண்டல்களையும் முறியடிப்பதில் மட்டுமே உள்ளது. அத்தகைய ஏகாதிபத்திய எதிர்ப்புப் போரை முன்னெடுக்கும் வெனிசுலா மக்களுக்கும், இதர நாடுகளின் மக்களுக்கும் துணைநிற்போம்! மேலாதிக்க வெறிபிடித்த அமெரிக்க ஏகாதிபத்தியத்தை வீழ்த்துவோம்!


அப்பு

(புதிய ஜனநாயகம் – ஜனவரி 2026 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



மங்காத்தா – திரை விமர்சனம் | மீள்பதிவு

மங்காத்தா வினவு

(செப்டம்பர் 5, 2011 அன்று வினவு வலைத்தளத்தில் வெளியான கட்டுரையை மீள்பதிவு செய்கிறோம்)

***

மங்காத்தா: அண்ணா ஹசாரேவை ‘என்கவுண்டர்’ செய்த தல!

“மனதினை மாற்றடா ஒகே
மகிழ்ச்சியை ஏற்றடா ஒகே
குறைகளை நீக்கடா ஹேஹே
தடைகளை தூக்கிப்போட்டு போடா
உடலுக்குள் நெருப்படா ஹொஹொ
உணர்வுகள் கொதிப்படா ஹஹ
புதுவிதி எழுதடா ஹேஹே
புரட்சியை செய்து காட்ட வாடா…”

– மங்காத்தா பாடல் வரிகள்….

கண்ணில் தெரியும் காட்சிகளை எல்லாம் தனித்தனியாக இரசிப்பதே நமக்குச் சொல்லித் தரப்பட்டிருக்கும் பழக்கம். அந்தக் காட்சிகளினிடையே ஊடாடியும், ஊடுறுவியும், வேர்விட்டும் நிற்கும் அந்த மாய இழையை கண்டுபிடிக்கும் போது மட்டுமே, தனித்தனிக் காட்சிகள் இணைந்து எழுப்பும் விரிந்த அந்த பிரம்மாண்டமான ஓவியத்தின் முப்பரிமாணத்தை தொட்டுணர்ந்து உள்ளிழுக்க முடியும். ‘ஆன்மீக’ மொழியில் வருணித்தால் அதுதான் தன்னையே பரப்பிரம்மமென உணரும் தெவிட்டாத பரவச தருணம். எங்கள் மொழியில் சொன்னால் அதுதான்……………? அது என்ன என்று சொல்லிவிட்டால் ஒரு ஆக்சன் த்ரில்லர் பட விமரிசனத்திற்கு செய்யப்படும் அநீதியாக இருக்கும். ஆனால் இந்தப் படத்தின்படி இது ஒன்றும் அநீதியல்ல. ஆனாலும்……

நாத்திகத் தமிழினவாதிகள் கோபித்துக் கொண்டாலும் கூட எந்த கட்டுரையும், விசயமும் பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பிப்பதுதான் தமிழ் மரபு. இந்து மரபும் கூட. ஆகவே…………

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ், விநாயகர் சதுர்த்தி – ஸ்பெசல் டின் பாக்ஸ், நெய் அப்பம், இனிப்பு கொழுக்கட்டை, கார கொழுக்கட்டை, திரட்டி பால், முள்ளு முறுக்கு, கடலை உருண்டை, லட்டு, மனோகரம், தேன் குழல்……. விலை ரூ.279 மட்டுமே. அன்புப் பரிசாக விநாயகர் சிலை, விநாயகர் சி.டி இலவசம்.

ரம்ஜான் தினத்தன்று தினமலரில் வந்த விளம்பரம். அப்துல் காதரும் அம்மாவாசையும் போல் மங்காத்தாவுக்கும் கொழுக்கட்டைக்கும் என்ன தொடர்பு?

ஒரு தேசத்தின் ஊடக விளம்பரங்களை காட்டுங்கள், அந்த தேசத்தின் சமூகத் தரத்தைக் கூறுகிறோம்.…எனும் பொன்மொழிக்கேற்ப….

கவனியுங்கள், கொழுக்கட்டையின் விலை ரூ.279, கொழுக்கட்டையுடன் கூட விநாயகர் சிலை இலவசம். பிள்ளையாருக்கு கொழுக்கட்டை பிடிக்கும். அதனால் அவரது நைவேத்தியத்தில் தொந்தி, தும்பிக்கையருகே தரையில் இருக்கும் கொழுக்கட்டை பிரதானம். ஆனால் கிருஷ்ணா ஸ்வீட்சைப் பொறுத்தவரை கொழுக்கட்டை கடவுளாகவும், கடவுள் இனாமாகவும் மாறிய விந்தையின் பொருள் என்ன? நைவேத்தியத்திற்கு விலை, அந்த நைவேத்தியம் படைக்கப்படும் ஆண்டவன் இலவசம் என்றால் உண்மையான ஆண்டவன் யார்?

தின்று செரித்து மலமாகப் போகும் ஒரு கொழுக்கட்டையின் மதிப்பு கூட அதை விரும்பி முழுங்கும் இறைவனுக்கு இல்லை எனில்? ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்சின் விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் பாக்சை விலை கொடுத்து வாங்கிச் செல்லும் பார்ப்பன மேட்டுக்குடி பக்தர்களின் தரம் இதுதான் என்றால்?

இங்கே பக்தி ஒரு முகாந்திரம் மட்டுமே. அந்த பக்தியின் பின்னிருந்து இயக்கி முக்தியளிக்கும் கடவுள் பணம், பணம் மட்டுமே. இதைத்தான் மங்காத்தா படத்தில் விநாயக் என்ற பெயரில் வரும் அஜித் ஆங்காங்கே உணர்ச்சிப் பாவத்துடன் கூவுகிறார். ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஸ்பான்சராக நடத்தும் காலச்சுவடு கூட்டமாகட்டும், கர்நாடக கச்சேரியாகட்டும்……எல்லாம் அந்த நிறுவனத்தின் இனிப்பு கார வகைகளை காசு கொடுத்து வாங்கிச் செல்லும் பக்தர்களின் ‘பண்பாட்டு’ தூண்டில். பெப்சி அருந்திக் கொண்டே டோனி அடிக்கும் சிக்சரை சோனி எல்.சிடியில் பார்ப்பதும், கிருஷ்ணா ஸ்வீட்சின் கொழுக்கட்டையை விழுங்கியவாறே விநாயகனை துதிப்பதும் வேறு வேறா என்ன?

மதமோ, விளையாட்டோ எதுவும் வர்த்தகக் கடவுளின் தயவினால் மட்டும் நடக்கும் சமாச்சாரங்கள். சற்று குறிப்பாக பாருங்கள், பெப்சி விற்பதற்காக கிரிக்கெட்டில் தேவைப்படும் சிக்சர், கொழுக்கட்டை விற்பதற்காக கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி. பெப்சி அருந்தினால் மட்டுமே சிக்சரின் மதிப்பு புரியும். கொழுக்கட்டையை வாங்கினால் மட்டுமே பக்தியின் மதிப்பு அளவிடப்படும்.

விநாயகர் சதுர்த்தி நாளில், விநாயக் என்ற பெயரில் அஜித் நடிக்க, விநாயகர் ஊர்வலங்களுக்கு பிரபலமான மும்பையில் நடக்கும் மங்காத்தாவின் கதை என்ன? பணம், பணம், பணம். காதல், நட்பு, பாசம், குடும்பம் எல்லாவற்றையும் விட பணம். எந்த வழியிலாவது, என்ன செய்தாவது, எப்படியாவது பணம். ஏன்?

ஆனால் மங்காத்தாவின் பலம் அது மட்டுமல்ல. அது சமகாலத்தின் பணம் குறித்த உணர்ச்சியை, உண்மையை, அரசியலை, பண்பாட்டை, புனிதங்களை வெள்ளேந்தியாக விறுவிறுப்பான காட்சிகளால் உணர வைக்கிறது. அல்லது போட்டுடைக்கிறது. எனினும் நுனிச்சீட்டில் இழுக்கும் வலுவான திரைக்கதை அளிக்கும் பேரின்ப வெள்ளத்தில் திளைக்கும் ரசிக பக்தர்கள் அதை உணர முடியாது என்பது ஒரு யதார்த்தம். ஆனால் பழகிப்போன சமரசங்களும், மரத்துப்போன நீதிகளும், இற்றுப்போன மதிப்பீடுகளும் கொண்ட சூழலை விரும்பி ஏற்றுக் கொள்ளும் ஒரு இரசிகன் அதை தனித்துப் பிரித்து உணர வேண்டிய அவசியமில்லையே?

கால ஓட்டத்தில் நமது விருப்பம், தெரிவு, இரசனை, கொள்கை அனைத்தும் மாறித்தான் போகிறது. ஆனால் அந்த கால ஓட்டத்தை நெறிப்படுத்துவது எது?

மூவர் தூக்கிற்காக தமிழகம் துடித்தெழுந்த போது இந்தியாவில் அதன் மாநகரங்களில் படித்த நடுத்தர, மேட்டுக்குடி வர்க்கம் அண்ணா ஹசாரேவின் தலைமையில் ஊழலை எதிர்த்து முழங்கிக் கொண்டிருந்தது. இங்கும் நமது தமிழக நகரங்களில், தலை நகராம் சென்னையில் மேன்மக்கள் கொதித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஐ.டி துறையினர், பன்னாட்டு நிறுவனங்களில் பசையான சம்பளத்தை வாங்குவோர், செலிபிரிட்டிகள், திரைத்துறையினர் என்று பலரும் உண்டு.

இந்த மெழுகுவர்த்தி கனவான்களின் அடுத்த சென்சேஷன் எது? ஐ.டி துறை நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்த போது அது மங்காத்தா என்றார்கள். அதிலும் பல நிறுவனங்களில் உள்ள H.R.களே ஏற்பாடு செய்து அலுவகம் அலுவலகமாக கூட்டம் கூட்டமாக மங்காத்தா முதல் காட்சிக்கு சென்றிருக்கிறார்கள் என்பதைக் கேட்ட உடன் ஆவல் பிறந்தது.  படம் பார்த்த நண்பர்களிடம் கதை கேட்டால், “எல்லாம் பணம்” என்றார்கள். ஊழல் ஒழிப்பிற்கு மெழுகுவர்த்தி ஏந்திய கையோடு எல்லாம் பணம்தான் என்றால் எங்கோ இடிக்கிறதே?

_______________________________________

” இன்னும் எத்தனை நாள் நான் நல்லவனாக நடிப்பது “
– மங்காத்தாவில் வினாயக்

நல்லவனாக இருப்பது ஒரு நோக்கம் மட்டுமே. நிறைவேற்றவோ, அதை ஏன் நிறைவேற்றவில்லை என்று கேட்கவோ முடியாத போது நடிக்க மட்டும்தான் முடியும். ஆனாலும் நடிப்பது சிரமமில்லையா? நல்லவனாக இருப்பது வேடிக்கையான கேலிப்பொருளான நிலையில் அஜித்தின் வசனத்திற்கு திரையரங்கு ஆர்ப்பரிக்கிறது. அது இயல்பாக தன்னையே கேலி செய்யும் சுய எள்ளல் என்பதை உறுதி செய்ய நீங்கள் மங்காத்தாவை பார்த்திருக்க வேண்டும். இந்த விமரிசனத்திற்கு மங்காத்தாவின் கதை தெரிந்திருப்பது அவசியமா?

எனினும் உங்களுக்காக கதைச் சுருக்கம்……

இந்தியாவின் கிரிக்கெட் சூதாட்டத்தில் கட்டப்படும் பணமெல்லாம் மும்பைக்கு டாலராக 500 கோடி ரூபாய் மதிப்பில் வருகிறது. சூதாடிகள் அந்த சூதாட்டப் பணத்தை ஐ.பி.எல் பைனலுக்கு பின்னர் முறையாக பிரிப்பதற்கு முன் அதை ஒரு செட்டியாரிடம் பாதுகாக்குமாறு அனுப்புகிறார்கள். கிளப் சூதாட்டத்தை தொழிலாக நடத்தும் செட்டியார் அதன் பொருட்டு ஒரு திரையரங்கையும் நடத்துகிறார். இடையில் செட்டியாரிடம் வேலை செய்யும் ஒருவனோடு இன்னும் மூவர் சேர்ந்து அந்த சூதாட்டப் பணம் 500 கோடியை திருட  திட்டமிடுகிறார்கள்.

தற்காலிக வேலை நீக்கம் செய்யப்பட்ட ஐ.பி.எஸ் அதிகாரியான அஜித் அந்த நால்வர் கும்பலின் முயற்சியை கண்டறிந்து தானும் சேர்ந்து கொள்கிறார். அவரது திறமையால் பணம் கொள்ளையடிக்கப்படுகிறது. ஆனாலும் பின்னர் அந்த நால்வர் கும்பலுக்குள் ஏற்படும் துரோகம் காரணமாக சண்டை. இடையில் குடியரசுத்தலைவருக்கு மட்டும் பதில் சொல்லும் அதிகாரம் படைத்த ஒரு போலீசு குழு அர்ஜூன் தலைமையில் இந்தியாவெங்கும் கிரிக்கெட் சூதாட்டப் பணத்தை கைப்பற்றி, சூதாடிகளை கைது செய்கிறது. அவர்களும் இந்த 500 கோடி கொள்ளையை துரத்துகிறார்கள்.

இறுதியில் அர்ஜூனும், அஜித்தும் சந்திக்கிறார்கள். சண்டையில் அஜித் சாவது போல தோன்றினாலும் பின்னர் அவர் கொள்ளைப் பணத்தோடு தாய்லாந்தில் வாழ்வது தெரிகிறது. மேலும் அவரோடு அர்ஜூனும் சேர்ந்து இந்தக் கொள்ளையில் ஈடுபட்டிருப்பதும் தெரிகிறது. அஜித் கொள்ளையர்களோடும், அர்ஜூன் போலீசோடு இணைந்தும் பணிபுரிகிறார்கள். பணத்தை பங்கு போடும் போட்டியில் அந்த நால்வர் அணியினர் கொல்லப்படுகிறார்கள். சூதாட்ட மையமான செட்டியாரை நெருங்குவதற்குகாவே அஜித் அவரது மகள் த்ரிஷாவை காதலிக்கிறார். காரியம் கை கூடியவுடன் காதலை தூக்கி எறிகிறார். கதை போதுமா?

____________________________________________

” இது அம்பானி பரம்பரை, அஞ்சாறு தலைமுறை, ஆனந்தம் வளர்பிறை….
ஆடாம ஜெயிச்சோமடா, ஓடாம ரன்னெடுத்தோம், சும்மா உக்காந்து வின்னெடுத்தோம்….

– மங்காத்தா பாடல் ஒன்றிலிருந்து….

மங்காத்தா குறித்த பதிவுலக விமரிசனங்கள் எல்லாம் ஒரே மாதிரிதான் இருக்கின்றன. விறுவிறுப்பான படம், முன்பாதி கொஞ்சம் நீளம், பின்பாதி நறுக், ஐம்பாதாவது படம் வெற்றிப்படமாக அமைவது பலருக்கு நடக்கவில்லை, தல ஜெயித்திருக்கிறார், இளந்தொந்தி, நரை முடி, நாற்பது வயதை பகிரங்கமாக அறிவித்திருக்கிறார்,…………இவைதான் அவற்றின் சாரம். இமேஜைப் பற்றி கவலைப்படாமல் நடித்திருக்கும் அஜித்திற்கு பாராட்டு மழைகள் குவிகின்றன. இதில் இமேஜை தியாகம் புரிந்திருப்பது எங்கே வருகிறது?

திரைக்குள்ளே பிடரியில் வழியும் முடி, பீடி, பன்ச் டயலாக் என புகழடைந்த ரஜினி திரைக்கு வெளியே வழுக்கை, நரை, தாடியுடன்தான் நடமாடுகிறார். 60 வயது பிறந்த நாட்களை கொண்டாடியபடிதான் இன்றும் சினிமாவில் நடிக்கிறார். இவையெல்லாம் ரஜினியின் மாகமித்யங்கள் என்று சொல்லுவதை விட ஆண்மையின் அடையாளம் என்று சொல்லுவதே பொருத்தம். ஆனால் இத்தகைய வாய்ப்புகள் ஒரு நடிகைக்கு இல்லவே இல்லை. அஜித்தின் ஜோடி த்ரிஷா இது போல தனக்கு 35 வயது என்று ஒரு பேச்சுக்கு அறிவிப்பதாக வைத்துக் கொள்வோம். என்ன நடக்கும்?

நடிகைகள் திருமணம் புரிந்தாலே அவர்களது சந்தையும், நடிப்பும் ஒரு முடிவுக்கு வந்துவிடும். ஆனால் நடிகர்களோ அவர்கள் திருமணம் புரிந்தாலும், பிள்ளைகள் பெற்றுக் கொண்டாலும், நடுத்தர வயதில் டீன் வயது நாயகிகளோடு டூயட் பாடுவதும், கல்லூரிக்கு போவதும் சாதாரணம். வேறு வார்த்தையில் சொன்னால் ஒரு ஆண் எந்த வயதிலும் பெண்டாளுவதற்கு தயாராக இருக்கிறான். அப்படி இருப்பதுதான் அவனது அடையாளம் எனும் ஆணாதிக்க சமூக மனோபாவத்தில்தான் அஜித்தின் நாற்பது வயது பிரகடனம் மாபெரும் தியாகமாக போற்றப்படுகிறது. சரி, அண்ணா ஹசாரேவின் உண்ணாவிரதம் 2வது சுதந்திரப் போராட்டமாக போற்றப்படும் போது அஜித்தின் தியாகத்தையும் நாம் ஏற்றுக் கொள்ளத்தானே வேண்டும்?

50 படங்களை முடித்திருக்கும் அஜித் மங்காத்தாவைத் தவிர மீதி படங்களில் வழமையான நீதி பேசும் நாயகனாகவே நடித்திருக்கிறார். வாலி, பில்லா போன்ற படங்களில் அவர் இரட்டை வேடங்களில் ஒன்றில் மட்டும் வில்லனாக நடித்திருந்தாலும் அவைகளின் தீமையை நன்மை வேட அஜித் விஞ்சி விடுகிறார். ஆனால் மங்காத்தாவில் ஒரு முற்றிலும் வில்லத்தனமான பாத்திரத்தில் அவர் நடிக்கத் துணிந்திருப்பது முதலில் ஒரு பாரிய மாற்றம் என்று தோன்றினாலும்…..

சில விதிவிலக்குகளைத் தவிர தமிழ் ஹீரோக்கள் அனைவரும் தீமையினை வென்று நன்மையை நிலை நாட்டும் வீரர்களாகவே நடித்திருக்கிறார்கள். அப்படித்தான் இரசிகர்களும் போற்றுகிறார்கள். எம்.ஜி.ஆர், ரஜினி ஃபார்முலாவின் இலக்கணமே அப்படித்தான். ஆனால் மங்காத்தாவில் இந்த இலக்கணம் சுக்கு நூறாக உடைத்தெறியப்படுகிறது. இது நடிகர், இயக்குநரின் புரட்சி என்பதை விட வில்லத்தனமே இனி வாழ்வின் கொண்டாட்டங்களுக்கு அடிப்படை என்று தெளியும் நடுத்தர வர்க்கத்தின் சமூக உணர்ச்சிக்கு பொருத்தமான கதை என்று சொல்லலாமா? இந்த பண்பு மாற்றத்தினை விமரிசனம் எழுதிய பதிவர்கள் யாரும் கவனிக்கவில்லை என்பதை விட அப்படி கவனித்து பார்க்குமளவு இது ஒன்றும் அந்நியமானதல்ல என்றும் சொல்லலாமல்லவா?

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் தாய்க்குலம் மீதான செண்டிமெண்ட்தான் தமிழ் சினிமாவை காலந்தோறும் தாங்கி வந்த அஸ்திவாரம். அதை காதல், பாசம், நட்பு, தேசபக்தி என்று கிளை விரித்துப் பார்த்தாலும் எல்லாவற்றிலும் தாய்க்குலத்தின் மேன்மை போற்றப்பட்டிருக்கும். திரையங்குகளில் தாய்மார்களின் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதைப் பொறுத்து ஒரு படத்தின் வெற்றி தீர்மானிக்கப்படும் நிலை.

பார்க்காமலேயே காதல் என்று காதலுக்கு புதிய பரிமாணம் படைத்த காதல் கோட்டை, மிரட்டி காதலிக்க வைத்த அமர்க்களம் என்று பல்வேறு காதல் படங்களில் நடித்துப் புகழடைந்த அஜித் இங்கே காதலை இரசிகர்களின் பேராதரவுடன் கதறக் கதறக் ‘கற்பழிக்கிறார்’.

லட்சுமிராயுடன் படுத்துவிட்டு அவரை தந்திரமாக வெளியேற்றிவிட்டு, காதலி த்ரிஷாவை அப்பாவி போல வரவேற்கிறார். கண்மூடி முத்தமிடுகிற இடைவேளையில் த்ரிஷாவுக்குத் தெரியாமல் லட்சுமிராயின் பர்சை வெளியே நிற்கும் அவரிடம் கொடுத்து விட்டு “என்னாச்சு” என்று கேட்கும் த்ரிஷாவிடம் பல் விளக்கிவிட்டு வரவா என்று இந்தப்பூனையும் பால் குடிக்குமா என்பது போல் சொல்லும்போது இரசிகர்களின் நகைப்பு ஆரவாரத்துடன் மயிர் கூச்செரிகிறது. பணம் கொள்ளையடிக்கப்பட்டவுடன் இனி காதலுக்கு வேலையில்லை என்றவுடன் த்ரிஷாவின் முன்னே அவரது தந்தை செட்டியாரை ஓடும் காரிலிருந்து தள்ளிவிடுகிறார். அப்போது காட்டும் அஜித்தின் முகபாவம் ” போங்கடி நீங்களும் உங்கள் காதல் மசுரும்” என்பது போல அபிநயிக்கிறது. இதை எப்படிப் புரிந்து கொள்வது?

சேர முடியாமல் தவிக்கும் காதல் உணர்ச்சிப் படங்களுக்கு அடிமையாயிருந்த இரசிகர்கள் இங்கே படத்தின் துவக்கத்திலேயே காதலை செருப்பில் போட்டு மிதிக்கும் காட்சிகளில் மனதை பறி கொடுத்த மர்மம் என்ன? ஆம் நண்பர்களே அந்த தலைமுறை மாறிவிட்டது என்ற உண்மையினை நாம் ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும். அதனால்தான் சின்னத்தம்பியின் அந்த பாடிகார்டு காதல் சென்டிமெண்டை வைத்து பி.வாசு அரைத்திருக்கும் புலி வேஷம், புளித்துப் போய் தவளை வேடமாய் இரசிகர்களால் புறக்கணிக்கப்படும்போது மங்காத்தா சீறும் சிறுத்தை போல பட்டயைக் கிளப்புகிறது. இது பெரிய பட்ஜெட், சிறிய பட்ஜெட் என்ற வேறுபாட்டால் நடக்கவில்லை. எந்தக் கதை சமூகத்தின் உணர்ச்சியோடு பொருந்திப் போகிறது என்பதோடு தொடர்புடையது. எனில் அந்த உணர்ச்சி எது?

படத்தில் பல ஆண் நண்பர்களோடு பழக்கமுடைய காமக்கிழத்தியாக வரும் லட்சுமி ராய்தான் இரசிகர்களின் மனதை அள்ளுகிறார். அடக்க ஒடுக்கமாகவும், ஒரு பிறந்தநாள் பார்ட்டியில் கொஞ்சம் மதுவருந்தும் அல்ட்ரா மாடர்ன் காதலியாக த்ரிஷா இருந்தாலும், ராயின் இருப்பே இரசிகர்களுக்கு விருப்பமானதாக இருக்கிறது. இதை லக்கிலுக் போன்ற ஃபார்முலா விமரிசன பதிவர்கள் கவர்ச்சியின் அளவுகோலால் வரையறுக்கிறார்கள். ஆனால் உடல் தோற்றம் தரும் கவர்ச்சியை விட மனம் விரும்பி ஒட்டும் கருத்து உணர்ச்சிதான் இந்த வேறுபாட்டை புரிந்து கொள்ளவதற்கான அளவுகோல். அந்த நவீன உணர்ச்சிதான் என்ன?

காலம் முழுவதும், வாழ்க்கை முழுவதும் ஒரு பெண்ணை மட்டும் நினைத்து இராமன் போல ஏகபத்தினி விரதனாக இருப்பது ஒரு இலட்சியம் என்ற அளவில் கூட இன்று மதிப்பற்றது. முன்பு கூட அப்படி ஒரு யதார்த்தம் நிறைவேறக் கடினமானது என்றாலும் மதிப்பீடு என்ற அளவிலாவது அது நினைக்கப்பட்டு வந்தது. அதனால்தான் அத்தகைய காதல் படங்கள் கட்டற்று ஓடி திரையுலகை ஆக்கிரமித்து வந்தன. இனியும் கூட அத்தகைய படங்கள் வரும் என்றாலும் அது முந்தைய காதல் போன்று புனிதக் காதலாக இருக்க வாய்ப்பில்லை. சமூக வாழ்க்கை மாறுவதற்கேற்ப காதலும் கூட மாறித்தானே ஆக வேண்டும்?

செட்டியாரிடம் வேலை செய்து பின்னர் அவரது பணத்தை கொள்ளையடிக்க முனையும் வைபவ் தனது காதல் மனைவி அஞ்சலியுடன் அன்பாக அன்னியோன்யமாக வாழ்கிறார். அர்ஜூனும் தனது மனைவியை காதல் பாசத்துடன் பராமரிக்கிறார். ஆனால் கதையின் திருப்பங்களுக்குத் தேவை என்ற அளவில் வரும் இந்தக் காதல் காட்சியின் உணர்ச்சிகளை இரசிகர்கள் பொருட்படுத்தவில்லை. பின்னர் தனது மனைவியைக் காப்பாற்றுவதற்காக வைபவ் மற்றவர்களை காட்டிக் கொடுக்கத் துணியும் போது கூட அவர் மேல் இரசிகர்கள் அனுதாபம் கொள்ளவில்லை. அவரை ஒரு வில்லனாகவே பார்க்கிறார்கள். இந்த உலகின் நம்பர் ஒன் காதலியாக பணம் இருக்கும் போது இந்த மனிதப்பிண்டமான ஒருவருக்கு ஒருவர் எனும் காதல் தனது புனிதத்தை முன்வைப்பது பொருத்தமாக இல்லை என்பது வேறு விசயம். “பணம் இருந்தால் நமக்கு ஆயிரம் பெண்கள் கிடைப்பார்கள்” என்று அஜித் பேசும்போது இரசிகர்கள் கைதட்டி வரவேற்பதின் பொருள் அதுதானோ?

வேறு வழியின்றி ஒரு மனைவி, ஒரு காதலி, ஒரு கேர்ள் பிரண்டுடன் வாழ்பவர்களும் கூட தொட்டறியத்தக்க தவறுகளை செய்யாதவர்களாகவே இருந்தாலும், அவர்கள் மனது அப்படி வாய்ப்பிருக்கும்போது பலரை அனுபவிக்கவே நினைக்கிறது. வாழ்வின் இன்பச் சிகரங்களை எட்டுவதற்கு பணம்தான் ஏணி எனும் போது ஏற ஏற துய்க்க வேண்டிய இன்பங்களின் எண்ணிக்கை கூடி விடுகின்றன. காதலும் இல்லையில்லை காதல்களும் அதில் அடக்கம்தானே?

மேலதிக ஐந்திலக்கச் சம்பளத்தில் வாழப் பழகிவிட்ட இன்றைய படித்த தலைமுறையினர் காதலுக்காக முன்பு போல போராடுவதில்லை. “ஜாலிக்காக காதல், செட்டிலாவதற்காக திருமணம்” என்பதே அவர்களது சமூக முழக்கமாக இருக்கும் போது லட்சுமிராய் மட்டும் கிளுகிளுப்புடன் இரசிக்கப்படுவதில் வியப்பில்லை. ஆனால் பணத்தை எடுத்துக் கொண்டு நால்வர் கும்பலில் இருவர் மட்டும் போகும் போது லட்சுமிராயும் இணைந்து கொள்கிறார். அதில் ஒருவனை அவர் சுட்டுக் கொல்ல பணத்தின் பங்கு இருவருக்கு மட்டும் என்றாகிறது. அந்த நேரத்தில் அஜித் வரும்போது அவருடன் சேர்ந்து கொள்வதாக கூறி அவரைக் கொல்ல முனைகிறார். ஆனால் அஜித் அதை முன்னறிந்து லட்சுமி ராயை கொல்கிறார். கொல்லும் போது “தேவடியா முண்டை” என்று திட்டுவது சென்சாரில் மியூட் செய்யப்பட்டாலும் தெளிவாக புரிகிறது. இரசிகர்கள் ஆர்ப்பரிக்கிறார்கள், அந்த வசனத்திற்கு. அனுபவித்து விட்டு மட்டும் போக வேண்டிய ஒரு காமக்கிழத்தி வாழ்க்கையை அதாவது பணத்தை பங்கு கேட்டால்?

_________________________________________________________

“தி இஸ் மை Fucking மணி, தி இஸ் மை Fucking கேம்”
மங்காத்தாவில் வினாயக்கின் பஞ்ச் டயலாக்.

பஞ்ச் டயலாக் என்றால் எதுகை, மோனை, சந்தத்துடன் மட்டும் வருவது அல்ல. கல்லூரி மாணவர்கள் தலைமுறை தலைமுறையாக தங்களது கலாட்டாக்களுக்கேற்ற பழமொழிகளை புதுப்பிக்கிறார்கள். அவை அந்தந்த கால இளையோரது மன ஓட்டத்தை பிரதிபலிக்கிறது. பணம் குறித்த அஜித்தின் கர்ஜனை முழக்கம் வாக்கியமென்ற வகையில் சாதாரணமாக இருந்தாலும் வாழ்க்கை என்ற வகையில் முக்கியமான ஒன்று.

ஹாலிவுட்டில் கொள்ளை, திருட்டு குறித்து ஏராளமான படங்கள் வந்திருக்கின்றன. அவற்றில் சில மங்காத்தா எனும் மசாலாவை விட காத்திரமான முறையில் அழுத்தமாக வந்திருக்கின்றன. தமிழ் இயக்குநர்கள் சுட்டுப் படமெடுப்பது தினசரி குடிக்கும் சரக்கு போல சாதாரணம் என்றாலும் இயக்குநர் வெங்கட் காலத்துக்கேற்ற கதைக்களத்தினையும், உணர்ச்சியையும் மீட்டிருக்கிறார் என்பதே முக்கியமானது. அந்தக் காலம் எது?

அண்ணா ஹசாரே திகார் சிறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த போது டைம்ஸ் நௌ தனது பிரச்சாரத்தினை சூடு பறக்க ஆரம்பித்திருந்த நேரம். அப்போது டைம்ஸ் ஆஃப் இந்தியாவில்படித்த செய்தி ஒன்று. ஹாங்காங்கில் இருக்கும் மார்கன் ஸ்டான்லி எனும் நிதி மூலதன ஆலோசனை நிறுவனத்தின் உயர் பதவியில் இருக்கும் சேட்டு அம்பி ஒருவன் இந்த இரண்டாவது சுதந்திரப் போராட்டத்திற்காக விடுமுறை எடுத்துக் கொண்டு மும்பை வந்து சேர்கிறான். இந்தியாவில் இருக்கும் போது வருமானவரியை ஏமாற்றியதையெல்லாம் ஹாங்காங்கில் தன்னால் நினைத்துப் பார்க்க முடியாது என்று கூறுபவன் அது போன்று இந்தியாவிலும் வரவேண்டுமென்று இந்த போராட்டத்தில் பங்கேற்பதாக கூறுகிறான்.

மார்கன் ஸ்டான்லி எனும் நிதி மூலதன ஆலோசனை நிறுவனம் பங்குச் சந்தை சூதாட்டங்களையே தொழிலாக கொண்டு நடத்தப்படும் நிறுவனம். தனியார் மயத்திற்காக பொதுத்துறைகளை விற்க வேண்டுமென்பதையே தொழில் முறை ஆலோசனைகளாக அமல்படுத்தும் நிறுவனம். இப்படி சூதாட்டத்தையே தொழிலாகக் கொண்டு வாழும் அந்த சேட்டுப்பையன் இங்கே ஊழலை எதிர்க்கிறான் என்பதை என்னவென்று சொல்வீர்கள்? இதுதான் இந்தக் காலத்தின் உணர்ச்சி என்றால் ஏற்பீர்களா?

ஹாலிவுட்டின் கொள்ளையடிக்கும் படங்கள் ராபின் ஹூட்டில் துவங்கி ஒரு நீண்ட மரபினைக் கொண்டிருக்கிறது. திருட்டின் மீது மக்களுக்கு ஒரு கவர்ச்சி இருக்கக் காரணம் சொத்துடமையின் ஏற்றத்தாழ்வான சமூக யதார்த்தம்தான். நேர்மையாக வாழ்ந்து அரை வயிற்றுக் கஞ்சி குடிக்கும் எளியோரும் தாம் அதிகம் பணம் சம்பாதிப்பதை ஒரு கனவாகவோ, இல்லை சினிமாவாகவோ நினைத்துப் பார்த்து மகிழ்வதை நாம் புரிந்து கொள்வது கடினமல்ல. அநீதியான இந்த சமூக அமைப்பு தான் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு ஆயிரம் தடைகள் ஏற்படுத்தியிருக்கும் போது அந்த தடைகளை ஒரு கொள்ளையன் தகர்த்தெறிவதை மக்கள் விரும்பாமலில்லை.

ஆனால் இந்த விருப்பம், கனவு வர்க்க ரீதியாக மேலே செல்லச் செல்ல வேறு பரிமாணத்தை எடுக்கிறது. பசையான சம்பளத்துடன் வாழும் படித்த நடுத்தர வர்க்கம் இந்தக் கனவினை நனவாக்க பங்குச் சந்தை, சிட் பண்ட், தங்க முதலீடு, ரியல் எஸ்டேட் என்று தன்முன் விரிந்திருக்கும் ராஜபாட்டையில் வேகமாக ஒடுவதற்கு விரும்புகிறது. சொந்த வீடு, சில பல இலட்சங்களில் வாரிசுகளுக்கு இன்ஜினியர், மருத்தவர் சீட், தொடர்ந்து விலையேறும் நிலம் எல்லாம் அவர்களுக்கு இருந்தே ஆக வேண்டிய நிர்ப்பந்தங்கள். தனது அலுவலகத்திற்கு வாங்க வேண்டிய ஸ்டேசனரி பொருட்களுக்காக கமிஷன் வாங்கும் தனியார் நிறுவன அதிகாரியோ, தனியார் நிறுவனங்களை கவனிப்பதற்காக லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரியோ இப்படித்தான் ஓடுகிறார்கள். ஊழலின் ஊற்று மூலம் முதலாளித்துவம் என்றாலும் ஊழலின் சமூக அடிப்படை இவர்களைக் கொண்டே தன்னை நியாயப்படுத்திக் கொள்கிறது. கூடவே இவர்கள்தான் ஊழல் ஒழிப்பிற்காகவும் தங்களை அர்ப்பணித்துக் கொள்கிறார்கள். எனில் இது என்ன வகை முரண்?

படத்தில் அஜித்து புகை பிடிப்பதிலும், குடிப்பதிலும் அப்படியே கிழக்கு மகாபலிபுரம் சாலையின் வார இறுதிக் கொண்டாட்டத்தினை நினைவுபடுத்துகிறார். மகாபலிபுரம் செல்ல முடியாதவர்கள் டாஸ்மாக்கை மொய்க்கிறார்கள். அன்றாடம் அளவாகவோ, அளவு கடந்தோ, வார இறுதியில் அசுரத்தனமாகவோ குடிக்க வேண்டுமென்றால் வாழ்க்கையை இன்பமென பருகி நுகர பல்வேறு பொருட்களும், வசதிகளும், ஆடம்பரங்களும், சேவைகளும் வேண்டும். அவற்றை அடைய குறுக்கு வழியில் பணம். பணத்தை அடைந்தால் கொண்டாட மது.

மங்காத்தா படத்தை இரசிப்பவர்களெல்லாம் உடனே திருடி சம்பாதித்து கொண்டாடப் போகிறவர்கள் அல்லதான். ஆனால் அப்படி திருடாவிட்டாலும் ஏதாகிலும் குறுக்கு வழியில் பணம் வரவேண்டும் என்ற விருப்பமுடையவர்கள். இப்படி பொங்கி வழியும் நுகர்வுக் கலாச்சார மதத்தின் ஒரே கடவுளான பணத்தை அதை சம்பாதிப்பதை அல்லது கொள்ளையடிப்பதை ஒரு தேர்ந்த ரசனையுடன், திறமையுடன், வெறியுடன் செய்யும் அஜித்தின் காட்சிகளில் இரசிகர்களின் மனம் அவர்களையறியாமலேயே ஒன்றுகிறது. அந்த மாபெரும் பணம் என்ற உணர்ச்சிதான் காதலை கத்திரிக்காய் போல தூக்கி எறிவதை ஏற்றுக் கொள்கிறது. படித்த நடுத்தர வர்க்கத்தின் சமூக உணர்ச்சி இந்தப் பணத்தோடு தொடர்புடையது என்பதை யார் மறுக்க முடியும்? பணத்திற்காக வெறி கொண்டவனாக அஜித் கத்தும் முகபாவனைகளும், வீடியோ கேமில் வென்றே ஆக வேண்டுமென்று ஒரு மேட்டுக்குடி சிறுவன் காட்டும் வன்முறை முகபாவனைகளும் வேறு வேறு அல்ல.

அண்ணா ஹசாரேவுக்காக சென்னை ஐ.ஐ.டி மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏந்திய படங்கள் வெளியாகியிருந்தன. படத்தில் ஐ.ஐ.டி கோல்டு மெடலிஸ்ட்டாக வரும் பிரேம்ஜி கொள்ளையடிப்பதற்கான சாப்ட்வேர் வேலைகளை திறமையுடன் செய்கிறார். 65.000 ரூபாய் சம்பளத்தில் பெங்களூரு போக வேண்டியவர் இங்கே நூறு கோடி சம்பாதிப்பதற்கு வாய்ப்பிருப்பதை ஒரு கேரியர் முன்னேற்றமாக எடுத்துக் கொள்கிறார், பேசுகிறார். நிஜத்தில் இந்தியாவில் ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம்மில் படித்துவிட்டு நாசாவில் உலகநாடுகளை ஒழிப்பதற்கு வேலை செய்பவர்களும், கோல்டு மேன் சாசில் கள்ளக்கணக்கு எழுதுபவர்களும் சொல்லும் சலித்துப்போன விசயம் என்ன? “இந்தியாவில் தகுதி, திறமைகளுக்கு வாய்ப்பில்லை, எங்கள் திறமைகளுக்கு மதிப்பளிப்பது அமெரிக்காதான்”. ஆனால் இந்த பச்சையான தேச துரோகிகள் அமெரிக்காவிலும் அண்ணா ஹசாரேவுக்காக போராடாமல் இல்லை. இது முரணா, இல்லை முரணை மறைக்கும் மயக்கமா ?

ஐ.ஐ.டி மாணவர்களை இயக்குநர் வெங்கட் பிரபு இழிவுபடுத்தி விட்டதாக அவர்கள் யாரும் சண்டைக்கு வரப்போவதில்லை. அவர்களைப் பொறுத்தவரை இப்படி ‘சாகசங்கள்’ செய்து பணம் அள்ளுவது ஒரு தவறல்ல. ஆனால் ஒரு தலித் மாணவன் அங்கே நுழைந்தால் கோட்டா என்று கேலிசெய்வதும், இந்தியாவில் மெரிட்டுக்கு மதிப்பில்லை என்று போராடவும் செய்வார்கள். இவர்கள்தான் அண்ணா ஹசாரேவின் போர்ப்படைத் தளபதிகள் எனில் இந்தப் போர் யாரை எதிர்த்து?

அஜித், அர்ஜூன் இருவரும் ஆந்திர கேடரைச் சேர்ந்த ஐ.பி.எஸ் அதிகாரிகள். 500 கோடியைக் கொள்ளையடிக்க ஒருவர் போலீசு துறையின் உள்ளேயும், ஒருவர் வெளியேயும் வேலை செய்கிறார்கள். அதிலும் அர்ஜூன் குடியரசுத் தலைவரின் நேரடி அதிகாரம் பெற்ற சூப்பர் போலீசு. இதுவரை அர்ஜூன் எத்தனை தேசபக்திப்படங்களில் சூப்பர் காப்பாக நடித்திருக்கிறார், எத்தனை பாக்கிஸ்தான் தீவிரவாதிகளை கொன்றிருப்பார், தீவிரவாதிகளின் அபாயத்திலிருந்து எத்தனை முறை தேசத்தையும், பிரதமரையும் காப்பாற்றியிருப்பார்? அத்தகைய டிரிபிள் எக்ஸ்-எல் தேசபக்தி எக்ஸ்பர்ட் இங்கே ஒரு அல்ட்ரா மாடர்ன் கொள்ளையின் சூத்திரதாரி என்றால்?

எனில் அர்ஜூனும் தனது இமேஜைத் துறந்து விட்டார் என்று பொருளா? இல்லை. ஒருவேளை இந்தப்படத்தில் அவரை ஐ.எஸ்.ஐ உளவாளியாக நடிக்க கேட்டிருந்தால் நிச்சயம் மறுத்திருப்பார். ஏனெனில் பாக்கிஸ்தானை ஆதரிப்பதுதான் தேச துரோகமே அன்றி பணத்தை குறுக்கு வழியில் சம்பாதிப்பது அல்ல. இப்போது யாரும் திகார் சிறையில் ஊழல் வழக்களுக்காக சிறை வைக்கப்பட்டிருக்கும் அரசியல் வாதிகள், அதிகாரிகளை அப்படி கசாப் போன்று தேசவிரோதிகளாக கருதவில்லையே?

போலீசு அதிகாரிகளின் கடமை, நேர்மைகளைப் பற்றி விடாது பேசி பொளந்து கட்டும் நம்ம ஆக்ஷன் கிங்கை இப்படி பீரோ புல்லிங கொள்ளையன் போல இல்லாமல் கொஞ்சம் மாடர்னாக காட்டியிருந்தாலும் இதற்காகவே இயக்குநருக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். ஏனெனில் சி.பி.ஐ டயரிக் குறிப்பு துவங்கி, விஐயகாந்த் வரை இவர்கள் போலீசுக்கு போற்றிப் பாடிய தூபங்களையெல்லாம் மங்காத்தா அடித்துக் காலி செய்திருக்கிறது. எனினும் XXXL  தேசபக்தி அர்ஜூன் இமேஜ் ஆத்மா சாந்தியடையும் வண்ணம் செட்டியாரின் அடியாளாக முசுலீம் அடையாளத்துடன் வரும் நடிகர் பின்னர் நால்வர் கும்பலைச் சேர்ந்த திருட்டு போலீஸ் இன்ஸ்பெக்டரால்  கொல்லப்படுவது படத்தில் இருக்கிறது.

ஆனாலும் பணத்தை காலம் அளிக்கும் தருணத்தில் கைப்பற்றும் வாய்ப்பை யாரும் இழக்கக் கூடாது என்பது ஒரு சமூக உணர்ச்சியாக கோலேச்சும் காலத்தில் இந்த நல்ல அதிகாரி இமேஜ் மாறியிருப்பது குறித்து இரசிகர்கள் அவ்வளவாக அலட்டிக் கொள்ள மாட்டார்கள் என்றுதான் தோன்றுகிறது. திருட்டு வேறு, தீவிரவாதம் வேறு என்ற லாஜிக்படியும் அது அப்படித்தான் இருக்கிறது.

வார நாட்களில் கடுமையாக ‘உழைத்து, சிந்தித்து’ பணத்தை திருடி விட்டு வார இறுதியில் குடியும் கூத்துமாக கொண்டாடலாம் என்பதே மங்காத்தா நமக்குச் சொல்லும் நீதி. ஒரு மசாலா படத்துக்கு இவ்வளவு வலிந்து கட்டி விமரிசனமா என்று பலர் ஐயுறலாம். ஆனால் மங்காத்தாவின் கதை தற்செயலாக எடுக்கப்பட்டிருப்பினும் அது ஜஸ்ட் லைக் தட் கடந்து செல்லும் கதையாக இருப்பினும், அது ஆங்காங்கே இயல்பாக தெரிவிக்கும் வாழ்க்கை குறித்த யதார்த்தங்கள் நமக்கு முக்கியமானவை. அதை முற்றும் உணர வேண்டுமென்றால் சமகால இந்தியாவின் அரசியல், பொருளாதார, சமூக யதார்த்தத்தினை புரிந்திருக்க வேண்டும்.

மங்காத்தா படத்தை அழகிரி மகன் தயாரித்திருந்தாலும் சில ‘பிரச்சினைகள்’ காரணமாக சில சுற்றுக்களுக்குப் பின்னர் சன்.டி.வியால் வெளியிடப்பட்டிருக்கிறது. மங்காத்தா படம் ஏன் இப்படி ஓடுகிறது என்ற காரணம் தெரியாத இயக்குநர் வெங்கட் பிரபு திருப்பதி சென்று மொட்டை அடித்திருக்கிறார். கருப்புப் பணத்தை காணிக்கையாக அள்ளும் கடவுளுக்கு அவர் பக்தராக இருப்பதும் பொருத்தமானதுதான். ஆனால் தான் ஒரு மொக்கை, தன் படமும் ஒரு மொக்கை என்பதில் அவருக்கு கருத்து வேறுபாடு இருக்காது. இருப்பினும் வரலாற்றின் சில காட்சிகளில் மொக்கைகள் கூட அறிந்தோ அறியாமலோ இப்படி ஒரு படத்தை தரலாம். இது அவர்களது அறிவு குறித்த பிரச்சினை அல்ல, அவர்களின் சமூக உணர்வு அல்லது ட்ரெண்ட் குறித்த எச்சரிக்கை உணர்வு என்றும் சொல்லலாம்.

படத்தில் கிரிக்கெட் சூதாடிகளை அர்ஜூன் குழுவினர் பிடிக்கும் செய்திகள் காட்டப்படும் போது அருகில் அண்ணா ஹசாரேவின் போராட்டச் செய்திகளும் காட்டப்படுகின்றன. ராமலீலா போராட்டத்திற்கு முன்னரேயே மங்காத்தா படம் எடுக்கப்பட்டிருப்பினும், போஸ்ட் புரடக்ஷனில் சென்சேஷன் கருதி படக்குழுவினர் இதை சேர்த்திருக்கிறார்கள். எனினும் இரண்டும் ஒன்றுதான் என்று இயக்குநர் காட்ட முனைந்திருப்பார் போலும். உண்மைதான். நாமும் அதைத்தான் சொல்கிறோம்.

அண்ணா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்புப் போராட்டத்தில் மெழுகுவர்த்தி பிடித்த கையோடு அடுத்த நாள் மங்காத்தாவை முதல் காட்சிக்கு சென்று இரசிக்க முடியுமென்றால் இரண்டில் எது உண்மை? முன்னது ஒரு தர்ம சேவை வீக் எண்ட் என்றால் பின்னது பொழுது போக்கு வீக் எண்ட் என்றும் சொல்லாம். முன்னது அவர்களின் அரசியல் பார்வை என்றால் பின்னது அவர்களின் கலைப்பார்வை என்றும் சொல்லலாம். அதனால்தான் அண்ணா ஹசாரேவின் அரசியலுக்கு பொருத்தமான கலை உணர்ச்சி மங்காத்தாவில்தான் வெளிப்படுகிறது என்பதை நாம் உறுதியாகச் சொல்கிறோம். ஊழல் எதிர்ப்பும் ஒரு ஃபேஷன், பணம் சம்பாதிப்பதும் ஒரு பேஷன். முன்னது நாட்டுக்காக, பின்னது தனக்காக.

இதற்கு மேலும் புரியாதவர்களுக்குத்தான் இந்தத் தலைப்பு:

அண்ணா ஹசாரேவை என்கவுண்டர் செய்த ‘தல’ யின் மங்காத்தா!

அல்லது

IF I AM ANNA, I AM MANKATHA TOO !

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram


புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | அக்டோபர், 2011 இதழ் | PDF

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 26, இதழ் 12 | அக்டோபர், 2011 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: வாச்சாத்தி வன்கொடுமை: அரசு பயங்கரவாதம்
  • காக்கை குருவிகளா விவசாயிகள்?
  • பரமக்குடி துப்பாக்கிச் சூடு: பார்ப்பன ஜெயா அரசின் வன்கொடுமை வெறியாட்டம்!
  • உள்ளாட்சித் தேர்தல்கள்: உள்ளூரைக் கொள்ளையடிக்க ஒரு ஏற்பாடு!
  • கூடங்குளம் மக்கள் போராட்டம்: அணு மின்நிலையத்தை மூடு!
  • ரேஷன் கடையை ஒழிப்பதற்கே உணவுப் பாதுகாப்புச் சட்டம்!
  • மோடிக்கு எதிரான வழக்கு: உச்ச நீதிமன்றத்தின் இரட்டை நாக்கு!
  • லிபியா: ஐரோப்பிய எண்ணெய்க் கழகங்கள் ஏலத்தில் எடுத்த ஆட்சி!
  • வங்க தேசம்: கொத்தடிமை தேசம்!
  • நோவார்ட்டில் வழக்கு: மக்களின் உயிர் குடிக்கும் மருந்து கம்பெனிகளின் காப்புரிமை!
  • பரமக்குடி தலித் படுகொலை!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய அணுசக்தி சட்டம்: மோடி அரசின் தேச துரோகம்!

ந்திய அணுசக்திதுறையை கார்ப்பரேட்மயமாக்குவதற்கான சட்ட மசோதாவை, நடந்துமுடிந்த நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத்தொடரில் பாசிச மோடி அரசு நிறைவேற்றியுள்ளது.

ஏற்கெனவே அணுசக்திதுறையில் குறைந்தபட்ச பாதுகாப்பை வழங்கி வந்த “அணுசக்தி சட்டம், 1962” மற்றும் “அணுசக்தி சேதத்திற்கான சிவில் பொறுப்புச் சட்டம், 2010” ஆகிய இரண்டு சட்டங்களையும் நீக்கிவிட்டு, “மாறிவரும் இந்தியாவிற்கான நிலையான பயன்பாடு மற்றும் முன்னேற்றத்திற்கான அணுசக்தி” என்ற சட்ட மசோதாவை (SHANTI Bill) பாசிச மோடி அரசு எதேச்சதிகாரமாக நிறைவேற்றியுள்ளது. குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் இம்மசோதா சட்டமாக்கப்பட்டுள்ளது.

இப்புதிய சட்டமானது, நாட்டின் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, எரிசக்தி இறையாண்மை ஆகியவற்றை எல்லாம் காலில் போட்டு மிதித்துவிட்டு, அந்நிய – உள்நாட்டு மூலதனங்களை ஈர்ப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அணுசக்திதுறை பன்னாட்டு கார்ப்பரேட்டுகளின் வேட்டைக்காடாக மாற்றப்படுவதுடன், இந்திய நாட்டு மக்கள் மீது பேரழிவுத் தாக்குதலை கட்டவிழ்த்து விடுவதாகவும் அமைந்துள்ளது.

கார்ப்பரேட்டுகளின் வேட்டைக்காடாகும் இந்திய அணுசக்திதுறை

ஏற்கெனவே இருந்த சட்டத்தின்படி, அணு உலை விபத்துகள் நேர்ந்தால் அதன் பாதிப்புகளுக்கும், அதற்கான இழப்பீடுகள் வழங்குவதற்கும் அணு உலையை இயக்கும் நிறுவனமும், உலையை இறக்குமதி செய்த நிறுவனமும்தான் பொறுப்பேற்க வேண்டும்; அணுசக்தி நிலையத்தை இயக்கும் நிறுவனத்தின் மீது வழக்குத் தொடர்வதற்கான அதிகாரமும் வழங்கப்பட்டிருந்தது.

ஆனால், மோடி அரசு நிறைவேற்றியுள்ள புதிய சட்டம், அணு உலைகளின் வடிவமைப்பு குறைபாடுகள் அல்லது உற்பத்தி குறைபாடுகளால் விபத்துகள் ஏற்பட்டால் கூட, அதற்கு அணு உலைகளை இறக்குமதி செய்த நிறுவனம் பொறுப்பேற்க வேண்டியதில்லை என்ற நிலையை உருவாக்கியுள்ளது.

மேலும், விபத்துகள் நேர்ந்தால் அணு உலைகளை இயக்கும் நிறுவனங்கள், பெரிய உலைகளுக்கு ரூ.3,000 கோடி, நடுத்தர உலைகளுக்கு ரூ.1,500 கோடி மற்றும் சிறிய உலைகளுக்கு ரூ.100 கோடி என்ற அற்ப தொகையை இழப்பீடாக வழங்கினால் போதும் என்று நிர்ணயித்துள்ளது.

உலகையே அதிர்ச்சியூட்டிய ஜப்பானின் ஃபுக்குஷிமா அணு உலை விபத்தின் போது ஒரு லட்சம் கோடி ரூபாயும், சோவியத் யூனியனின் ஷெர்னோபில் அணு உலை விபத்தின் போது ஆறு லட்சம் கோடி ரூபாயும் பாதிப்பை சரிசெய்ய செலவழிக்கப்பட்டுள்ளது. பல பத்தாண்டுகள் கடந்த பின்னும் இன்று வரை அதன் கதிர்வீச்சு பாதிப்புகள் முழுமையாக சரிசெய்யப்படவில்லை. ஆனால், மோடி அரசு சில கோடி ரூபாய்களை இழப்பீடாக நிர்ணயித்திருப்பது மக்களை திட்டமிட்டே வஞ்சிப்பதாகும்.

அதேபோல், முன்னர், பாதிக்கப்பட்ட மக்கள் இழப்பீடு கோருவதற்கு 10 முதல் 20 ஆண்டுகள் வரை அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், புதிய சட்டத்தின்படி, இழப்பீட்டு விண்ணப்பங்களை தாக்கல் செய்வதற்கு மூன்று ஆண்டுகள் மட்டுமே அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இரசாயன தொழிற்சாலை விபத்தான போபால் விசவாயு படுகொலையிலேயே பத்தாண்டுக்கு பிறகு உடல் ஊனம், புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்புகள் வெளியாகின. எனில், அணுசக்தி கதிர்வீச்சுகளின் பாதிப்பு 20-30 ஆண்டுகளுக்குப் பிறகும் அடுத்தடுத்த தலைமுறையை பாதிக்கக்கூடியது. இதற்கு இழப்பீடு கோர மூன்று ஆண்டுகளுக்கு மட்டுமே அவகாசம் வழங்கியிருப்பது அப்பட்டமான அயோக்கியத்தனமாகும்.

மேலும், புதிய சட்டத்தின்படி அணு உலையை இயக்கும் நிறுவனத்தின் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க முடியாது. பாதிக்கப்பட்ட மக்கள், குடிமை சமூக அமைப்புகள், ஏன் அரசு கூட நிறுவனத்தின் மீது வழக்குத் தொடர முடியாது; ஒன்றிய அரசால் நியமிக்கப்படும் அதிகாரிக்கு (கைகூலி) மட்டுமே அந்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அணுசக்திதுறை கண்காணிப்பு அமைப்பான அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் அதிகாரங்களும் வெட்டி சுருக்கப்பட்டு அது ஒன்றிய அரசின் பொம்மையாக மாற்றப்பட்டுள்ளது.

அனைத்திற்கும் மேலாக, அணு உலைகளை இயக்குவதற்கு மட்டுமின்றி, சுரங்கங்கள் அமைத்து அணு கனிமங்களை வெட்டியெடுப்பது, எரிபொருள் உற்பத்தி, உலை கட்டுமானம், செயல்பாடு உள்ளிட்ட அனைத்து மட்டங்களிலும் கார்ப்பரேட்டுகள் திறந்துவிடப்பட்டுள்ளன. இவை அனைத்திற்கும் ஒரே உரிமத்தின் கீழ் அனுமதி அளிக்கப்படுகிறது.

மேலும், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வு, மக்கள் கருத்துகேட்பு கூட்டங்களிலிருந்து கார்ப்பரேட்டுகள் தப்பித்துக்கொள்ளும் வகையில் விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன. அணுசக்தி கழிவு மேலாண்மை, தொழிலாளர் பாதுகாப்பு ஆகியவற்றிற்கான நெறிமுறைகள் வகுக்கப்படாமல், சுற்றுச்சூழலையும் தொழிலாளர்களையும் கேள்விக்கிடமின்றி சுரண்டுவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மொத்தத்தில், கார்ப்பரேட்டுகள் எந்தவித தங்குதடையுமின்றி ஒட்டுமொத்த அணுசக்தி மதிப்புச் சங்கிலியையும் கைப்பற்றி ஆதிக்கம் செலுத்துவதற்கான ஏற்பாடாகவே இச்சட்டத்தை நிறைவேற்றியுள்ளது பாசிச மோடி அரசு.

அடிமை மோடியின் அமெரிக்க சேவை

இச்சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் அதுகுறித்து கருத்து தெரிவித்த மோடி, அணுசக்திதுறையில் தனியாருக்கு அனுமதி வழங்குவதன் மூலம் புதிய முதலீடுகள், மேம்பட்ட தொழில்நுட்பங்கள், புதிய கண்டுபிடிப்புகளின் வளர்ச்சியை துரிதப்படுத்த முடியும் என்று பேசினார். சங்கி கும்பலும் இச்சட்டம் இந்தியாவின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்றே கதையளந்து வருகிறது. ஆனால், இச்சட்டமானது முழுக்க முழுக்க அமெரிக்க வல்லரசின் மிரட்டலுக்கு அடிபணிந்து கொண்டுவரப்பட்டது என்பதே நிதர்சனம்.

கடந்தாண்டு ஜனவரியில் பாசிஸ்ட் டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபரானது முதல், அணுசக்திதுறை உள்ளிட்ட இந்தியாவின் பல துறைகளை அமெரிக்க ஏகபோக கார்ப்பரேட்டுகளுக்கு திறந்துவிடுமாறு இந்திய அரசை நிர்பந்தித்து வருகிறார். குறிப்பாக, அணுசக்திதுறையில் குறைந்தபட்ச கட்டுப்பாடுகளை விதிக்கும் அணுசக்தி சட்டம், 1962 மற்றும் அணுசக்தி சேத தடுப்புச் சட்டம், 2010 ஆகிய இரண்டு சட்டங்களையும் திருத்த வேண்டுமென்று அமெரிக்க கார்ப்பரேட்டுகள் நீண்டநாட்களாக கூச்சலிட்டு வருகின்றன. டிரம்ப் ஆட்சிக்கு வந்ததும் இந்த மிரட்டல் தீவிரமடைந்தது.

முதுகெலும்பற்ற மோடி அரசு டிரம்பின் மிரட்டலுக்கு அடிபணிந்து, மேற்குறிப்பிட்ட இரண்டு சட்டங்களையும் திருத்த உள்ளதாக 2025 நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடரில் அறிவித்தது. 2025 பிப்ரவரியில் வெளியான இந்திய அடிமை சாசனமான “அமெரிக்க – இந்திய காம்பாக்ட்” திட்ட அறிக்கையில் மோடியின் இந்த அடிமை சேவகம் பாராட்டப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, இச்சட்டங்களை திருத்துவதற்கு குழு அமைக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இந்நிலையில், அச்சட்டங்களை ஒட்டுமொத்தமாக நீக்கி புதிய சட்டத்தை கொண்டுவந்திருப்பதன் மூலம் தனது அமெரிக்க விசுவாசத்தை காட்டியிருக்கிறது மோடி அரசு. மோடியின் இச்சேவையை டிரம்ப்பும் கார்ப்பரேட்டுகளும் உச்சிமுகர்ந்து பாராட்டியுள்ளனர்.

மேலும், இச்சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்னர் இந்திய அணுசக்திதுறையில் அதானி நிறுவனம் கால்பதிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகின. சட்டம் நிறைவேற்றப்பட்ட உடன் 200 மெகாவாட் திறன்கொண்ட 8 சிறிய அணு உலைகளை அமைப்பது தொடர்பாக உத்தரப்பிரதேச அரசுடன் அதானி குழுமம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது அம்பலமானது. இது மோடி அரசின் அதானி சேவை வெட்டவெளிச்சமாக்கியது. இந்தியாவிலுள்ள பிற கார்ப்பரேட்டுகளும் அணுசக்திதுறையில் முதலீடு செய்யும் என்று எதிர்பர்க்கப்படுகிறது.

இவற்றின் மூலம் இச்சட்ட நிறைவேற்றமானது அப்பட்டமான அதானி – அமெரிக்க சேவைதான் என்பது நிரூபணமாகியுள்ளது.

எதிர்க்கட்சிகளின் சந்தர்ப்பவாதம்

இந்தியாவின் மீது பேரழிவை கட்டவிழ்த்துவிடும் இந்த நாசகர சட்டத்திற்கு எதிராக தொழிற்சங்கங்கள், விவசாய சங்கங்கள் போராட்டங்களை அறிவித்துள்ளன. ஆனால், பாசிச பா.ஜ.க-வை எதிர்ப்பதாக சொல்லிக்கொள்ளும் எதிர்க்கட்சிகள் இச்சட்டத்திற்கு எதிராக பெயரளவிலான போராட்டங்களைக் கூட கட்டியமைக்கவில்லை.

இது எதிர்க்கட்சிகளின் வழக்கமான சந்தர்ப்பவாதம், கையாலாகாத்தனம் அல்ல. மாறாக, அணுசக்திதுறையை கார்ப்பரேட்டுகளுக்கு திறந்துவிடுவதில் இந்தியாவில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் ஒத்தக்கருத்துதான் என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

குறிப்பாக, 1998-இல் இந்தியா அணுகுண்டு சோதனைகளை நடத்தியதைத் தொடர்ந்து, அமெரிக்கா, இந்தியா மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது. அப்போதைய பிரதமாராக இருந்த வாஜ்பாய் அமெரிக்காவிற்கு அடிபணிந்ததுடன், அணு ஆயுத சோதனைத் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போடக் கூடத் தயாராக இருந்ததாகக் கூறப்பட்டது. இதனை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட அமெரிக்கா, இந்திய அணுசக்திதுறையை அமெரிக்க கார்ப்பரேட்டுகளுக்கு திறந்துவிடுவதற்கான பேச்சுவார்த்தையில் இறங்கியது. இதனைத் தொடர்ந்தே அணுசக்தி கூட்டுறவு ஒப்பந்தம் என்ற அடிமை சாசனம் மன்மோகன் சிங் ஆட்சிக்காலத்தில் கையெழுத்தானது. தற்போது மோடி அரசு நிறைவேற்றியிருக்கும் புதிய அணுசக்தி சட்டத்திற்கு இந்த ஒப்பந்தமே மூலவேர் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்த அடிமை சாசனத்தை அப்போதைய எதிர்க்கட்சிகள் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆதரித்தன என்பதே உண்மை. அச்சமயத்தில் ஒப்பந்தத்தை எதிர்ப்பதாக பா.ஜ.க. பேசியதெல்லாம் வெற்று நாடகம் மட்டுமே. இந்திய அணுசக்திதுறையை அமெரிக்காவின் அடிமாடாக்குவதற்கான ஏற்பாடுகளை காங்கிரஸ்-பா.ஜ.க. இரண்டு கட்சிகளும் பல பத்தாண்டுகளாக மேற்கொண்டு வருகிறது என்பதே நிதர்சணம். இந்த வர்க்கப் பாசத்தின் காரணமாகவே இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சிகள் தற்போதும் கள்ளமௌனம் சாதித்து, இந்திய மக்கள் மீதான தாக்குதலுக்கு துணைபோகின்றன.

கட்டவிழ்த்துவிடப்படும் பேரழிவு

சோவியத் யூனியனின் ஷெர்னோபில் அணு உலை விபத்து (1986), ஜப்பானில் ஃபுக்குஷிமா அணு உலை விபத்து (2011) உள்ளிட்ட அணு உலை விபத்துகளுக்கு பிறகு பல நாடுகள் அணுசக்தி ஆற்றலிலிருந்து பின்வாங்கத் தொடங்கின. அணுசக்தி கழிவு மேலாண்மை சவால் நிறைந்ததாகவும் அபாயகரமானதாகவும் உள்ளதாலும், கழிவுகளில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு கதிர்வீச்சு வெளிவருவதாலும், அதீத கட்டுமான செலவாலும், பல நாடுகள் சூரிய ஒளி, காற்றாலை மின்சாரம் உள்ளிட்ட மாற்று ஆற்றல்களை நோக்கி நகர்ந்துக் கொண்டிருக்கின்றன.

இதனால் எரிசக்தித்துறையில் ஆதிக்கம் செலுத்திவந்த அணுசக்தி கார்ப்பரேட்டுகளின் லாபமும் பிடியும் சரியத் தொடங்கியது. இதனை ஈடேற்ற எரிசக்தியில் தன்னிறைவு அடையாத மூன்றாம் உலக நாடுகளில் அணு உலைகளை திணிப்பது என்ற திட்டத்தின் அங்கமாகவே அமெரிக்க – இந்திய அணுசக்தி ஒப்பந்தம் போடப்பட்டு இந்தியாவில் அணு உலைகளை திறக்க கார்ப்பரேட்டுகள் திட்டமிட்டன.

இந்தியாவின் இறையாண்மை மற்றும் சுயாதிபத்தியத்தை அமெரிக்காவின் காலடியில் சமர்ப்பித்த இந்த ஒப்பந்தத்திற்கு எதிராக அச்சமயத்தில் தமிழ்நாட்டில் புரட்சிகர, ஜனநாயக சக்திகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தியா முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்த எதிர்ப்பின் விளைவாக அணு உலைகளைகளில் முதலீடு செய்யும் நிறுவனங்களே சேதத்திற்கு பொறுப்பேற்க வேண்டும் என்ற வகையில் அணுசக்தி சேதத்திற்கான சிவில் பொறுப்பு சட்டம், 2010 நிறைவேற்றப்பட்டது. ஆனால், இச்சட்டத்தின் குறைந்தபட்ச கட்டுப்பாடுகளுக்கு கூட கார்ப்பரேட்டுகள் இணங்க மறுத்ததால் அதன் பிறகு அணு உலைகளை தொடங்குவதற்கான ஒப்பந்தம் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. இதுவே கார்ப்பரேட்டுகளின் யோக்கியதையைக் காட்டுகிறது.

தமிழ்நாட்டின் கூடங்குளம் அணுமின் நிலையமும், குறுக்குவழியில் இச்சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டே தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கெதிராக தீவிரமான போராட்டங்கள் தமிழ்நாட்டில் முன்னெடுக்கப்பட்டன. இன்றளவும் மக்கள் அணு உலையின் பாதிப்புகளுக்கு எதிராகப் போராடி வருகின்றனர். மேலும், உலகெங்கும் 136 அணு உலைகளைச் சுற்றி வாழும் மக்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், அவர்கள் புற்றுநோய் உள்ளிட்ட தீவிரமான உடல்நல பாதிப்புகளுக்கு உள்ளாகியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஆனால், பாசிச மோடி அரசோ புதுப்பிக்கத்தக்க ஆற்றலை நோக்கி நகர்வது என்ற பெயரில், 2047-ஆம் ஆண்டுக்குள் அணுசக்தியிலிருந்து 100 ஜிகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது. இது, உள்நாட்டு, பன்னாட்டு கார்ப்பரேட்டுகளின் லாபவெறிக்காக மக்களை பேரழிவிற்குள் தள்ளும் பயங்கவாத நடவடிக்கையாகும். நாட்டின் வளர்ச்சிக்காக அணுசக்திதுறையில் சீர்திருத்தத்தை மேற்கொள்கிறோம் என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் அப்பட்டமான தேச துரோகமாகும்.

நாடு எதிர்கொண்டுள்ள இப்பேரழிவை தடுப்பதற்கு இந்த தேச துரோக கும்பலுக்கு எதிராக ஒட்டுமொத்த மக்களும் வீதியில் இறங்கி போராட்டத்தைக் கட்டியமைக்க வேண்டியது இன்றையக் கட்டாயமாகும்!


துலிபா

(புதிய ஜனநாயகம் – ஜனவரி 2026 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | செப்டம்பர், 2011 இதழ் | PDF

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 26, இதழ் 11 | செப்டம்பர், 2011 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: லிபியா: அமெரிக்காவின் மறுகாலனியாகிறது!
  • ராஜீவ் கொலை வழக்கு: தூக்கு மேடையில் நிற்கிறது அரசியல் நியாயம்
  • அண்ணா ஹசாரே: கார்ப்பரேட் மீடியா கண்டெடுத்த கோமாளி!
  • ராம்லீலா மைதானத்தின் சென்னை அவதாரம்
  • அமெரிக்கக் கடன் நெருக்கடி: மைனரின் சாயம் வெளுத்தது!
  • நார்வே படுகொலைகள்: நவீன நாஜிசத்தின் கோரத் தாண்டவம்
  • காஷ்மீர்: அம்பலமானது இந்திய அரசின் இனப்படுகொலை
  • ‘தற்குறிகளின்’ கலகமும் கனவான்களின் கலக்கமும்
  • தமிழக பட்ஜெட்: வருமானத்திற்கு வரி, சாராயம் கவர்ச்சிக்கு இலவசத் திட்டங்கள்
  • ‘புரட்சித் தலைவி’யின் புரட்டுத் திட்டம்!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஆகஸ்ட், 2011 இதழ் | PDF

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 26, இதழ் 10 | ஆகஸ்ட், 2011 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: பா.ஜ.க.-வின் ஊழல் எதிர்ப்பு: ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை!
  • “சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்து! பாடநூல்களை உடனே வழங்கு!”
    -கல்வி தனியார்மயத்துக்கு எதிராகத் தமிழகமெங்கும் பரவும் போராட்டம்
  • இம்சை அரசி செல்வி 24-ஆம் புலிகேசி!
  • “வணிகமயமாகும் கல்விக் கொள்ளைக்கு முடிவு கட்டுவோம்! இலவசக் கட்டாயக் கல்வி உரிமையை நிலைநாட்டுவோம்!!”
    -புதியதொரு மாணவர் எழுச்சிக்கு வித்திட்ட பு.மா.இ.மு.-ம.க.இ.க.வின் கருத்தரங்கம்.
  • 2-ஜி அலைக்கற்றை ஊழல் விசாரணை: குற்றவாளி ராசா அம்பலப்படுத்தும் உண்மைகள்
  • இந்தியா வல்லரசாகவில்லை, அமெரிக்காவின் அடியாளாகிறது!
  • நிலம் கையகப்படுத்தும் சட்டத் திருத்தம்: நரியைப் பரியாக்கும் காங்கிரசின் மோசடி!
  • சல்வாஜூடும் கலைப்பு: உச்ச நீதிமன்றத்தின் கோணல் பார்வை!
  • குஜராத்: கார்ப்பரேட்மயமாகும் விவசாயம்! ஓட்டாண்டிகளாகும் விவசாயிகள்!!
  • வர்க்க ஒற்றுமைக்குக் கிடைத்த வெற்றி!
  • சர்வாதிகார எதிர்ப்பில் அமெரிக்காவின் இரட்டை வேடம்
  • போலீசு பாசறைகளாக பள்ளிக்கூடங்கள்! போராளிகளாக மாணவர்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



இந்துத்துவத்தின் எழுச்சியும் பெருகும் செல்வக் குவிப்பும்

(கேம்பிரிட்ஜ் யுனிவர்சிட்டி பிரஸ் வெளியிட்ட “The Politics of Corporations in ‘New’ India” என்ற நூலிலிருந்து ஒரு பகுதி “தி வயர்” (The Wire) இணையதளத்தில் “How the Rise of Hindutva and the Rise of Wealth Concentration Are Linked” என்ற தலைப்பில் வெளியானது. அதன் தமிழ் மொழியாக்கத்தை வாசகர்களுக்கு வழங்குகிறோம்.)

***

இந்துத்துவத்தின் எழுச்சியும் பெருகும் செல்வக் குவிப்பும்:
ஓர் அரசியல் – பொருளாதார ஆய்வு

மேல்தட்டு எதிர்ப்பு எனும் பாசிச வேடம்

சங் பரிவார் தன்னை “மேல்தட்டு வர்க்கத்திற்கு” எதிரானதாக (Anti-elite) காட்டிக்கொண்டு பெருந்திரளான மக்களின் ஆதரவைத் திரட்டியுள்ளது. இது, அன்றைய பாரம்பரிய ஜெர்மன் மேல்தட்டு வர்க்கத்தை வீழ்த்தப்போவதாகக் கூறி மக்களிடம் ஆதரவு திரட்டிய நாஜி கட்சியின் உத்தியைப் போன்றதேயாகும்.

அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகளை எடுத்துக்கொண்டால், அங்குள்ள கோடீஸ்வரர்களின் நிதியில் இயங்கும் தீவிர வலதுசாரி இயக்கங்கள், பாசிச சிந்தனைகளை எதிர்க்கும் அறிவுஜீவிகளைத் தாக்குவதற்கு “எலைட்” (மேல்தட்டு வர்க்கம்) என்ற சொல்லைப் பயன்படுத்துகின்றன. ஆனால், அச்சொல்லை அவர்கள் சம்பந்தப்பட்டவர்களின் பொருளாதாரப் பின்னணியைக் குறிக்கப் பயன்படுத்துவதில்லை; மாறாக, தங்கள் அரசியல் எதிரிகளை முத்திரை குத்தவே பயன்படுத்துகின்றனர்.

இதே பாணியில், தாராளவாத அறிவுஜீவிகள், சர்வதேசத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் முற்போக்கு ஊடகங்கள் ஆகியோரை “லுட்யன்ஸ் டெல்லி கும்பல்” (Lutyens’ Delhi elite) என்று சங் பரிவார் ஏளனப்படுத்துகிறது. (டெல்லியின் அதிகார மையமான ‘லுட்யன்ஸ்’ பகுதியில் வசிக்கும் ஆங்கிலம் பேசும் பழைய அதிகார வர்க்கத்தினர், சாமானிய மக்களிடமிருந்து துண்டிக்கப்பட்டவர்கள் என்று முத்திரை குத்துவதே இதன் நோக்கம்). இப்படி ஒரு மேல்தட்டு எதிர்ப்புச் சொல்லாடலை கட்டமைப்பதன் மூலமே இந்துத்துவா தனது செல்வாக்கை வளர்த்துக்கொள்கிறது. ஆனால் மறுபுறம், உண்மையான பொருளாதார மேல்தட்டு வர்க்கமான உள்நாட்டுப் பணக்கார முதலைகள் மற்றும் கார்ப்பரேட்டுகளுடன் மிக இணக்கமான கள்ளக்கூட்டினைப் பேணுகிறது.

சுருக்கமாகச் சொல்வதானால், இந்துத்துவா என்பது மேல்தட்டு மற்றும் அடித்தட்டு மக்கள் என இரு தரப்பினரையும் ஈர்ப்பதில் வெற்றி கண்டுள்ளது. தற்போதைய இந்துத்துவா ஆட்சி மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட மேல்தட்டு வர்க்கத்தின் நலன்களைத் தீவிரமாக முன்னெடுக்கும் அதே வேளையில், வெறுப்புப் பிரச்சாரங்கள் மற்றும் இலவச ரேஷன் போன்ற அற்பச் சலுகைகள் மூலம் அடித்தட்டு மக்களின் வாக்குகளை அறுவடை செய்கிறது.

வறுமையும் பாசிச உளவியலும்: ‘கட்டமைக்கப்பட்ட திரள்’

ஒரு பாசிச ஆட்சிக்கு மக்கள் அளிக்கும் ஆதரவானது, அவர்கள் தங்கள் சொந்த உரிமைகளையும் பொருளாயத நலன்களையும் (material interests) புறக்கணிப்பதைக் காட்டுகிறது என்று ஹன்னா அரெண்ட் வாதிட்டார். இக்கருத்தாக்கத்தை நாங்கள் இன்னும் சற்று நுட்பமாகப் பரிசீலிக்கிறோம். இந்துத்துவ ஆதிக்கம் குறித்த எங்களது பார்வையில், அடித்தட்டு மக்கள் தங்கள் பொருளாயதச் சூழலைப் புறக்கணிப்பதாக நாங்கள் கருதவில்லை.

மாறாக, கடுமையான வறுமை, சாதிய ஏற்றத்தாழ்வுகள், ஆணாதிக்கம் மற்றும் வேர்மட்ட அளவில் ஜனநாயகம் அற்ற நிலை ஆகியவை அவர்களது எதிர்பார்ப்புகளையே சுருக்கி விடுகின்றன. அரசால் வழங்கப்படும் குறைந்தபட்ச சலுகைகளுக்கு (உதாரணமாக, இப்போது வழங்கப்படும் 5 கிலோ இலவச உணவு தானியம்) அப்பால் அவர்களால் சிந்திக்க முடிவதில்லை.

ஜெய்ரஸ் பனாஜி குறிப்பிடுவதைப் போல, இங்கு மக்கள் திரளானது “செயற்கையாகக் கட்டமைக்கப்பட்ட உதிரிகளின் தொகுப்பாக” உள்ளது. அதாவது, மக்கள் தாமாக ஒன்றிணைந்த ஒரு வர்க்கமாக இல்லாமல், செயலற்ற, மந்தமான, சிதறுண்ட தனிநபர்களாகவே உள்ளனர். இந்தச் சிதறுண்ட நிலையில்தான், பாசிஸ்டுகள் அந்தத் தொகுப்பின் மீது வேலை செய்து, தங்களுக்குத் தேவையான முடிவுகளை உருவாக்குகிறார்கள். இதன் மூலம், சிதறிய மக்கள் கூட்டம் ஒழுங்கமைக்கப்பட்ட இந்துத்துவக் குழுக்களின் கையாளுதல்களுக்கு எளிதில் பலியாகிறது. தனிநபர்களாகச் சுருக்கப்பட்ட இந்த (ஒழுங்கமைக்கப்படாத) மக்கள் திரளின் மீது, அரசு எந்திரத்தைக் கைப்பற்றியதன் மூலம் சங் பரிவார் தனது ஆதிக்கத்தை மேலும் வலுப்படுத்திக்கொள்கிறது.

கார்ப்பரேட் – இந்துத்துவக் கூட்டணி: அதிகாரத்தின் இயல்பு

ஆர்.எஸ்.எஸ்-ன் அரசியல் என்பது அடிப்படையில் சாதியமும், ஆணாதிக்கமும், ஜனநாயக விரோதமும் கொண்டது. அரசு இயந்திரங்கள் மீதான கட்டுப்பாடு, நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட பெருமூலதனத்தின் இறுக்கமான பிடியை வலுப்படுத்த இந்துத்துவத்திற்கு உதவுகிறது. இப்பெருமூலதனத்தின் நலன்கள், சமூகத்தில் உள்ள மேல்தட்டு வர்க்கங்கள் மற்றும் ஆதிக்கச் சாதிகளின் நலன்களோடு ஒன்றிணைந்துள்ளன.

குஜராத் முதல்வராகவும், நாட்டின் பிரதமராகவும் மோடி மேற்கொண்ட நடவடிக்கைகள், ஆதிக்கச் சாதிகளும் வர்க்கங்களும் இந்திய அரசியலைக் கட்டுப்படுத்தவே வழிவகை செய்துள்ளன. இப்போக்கு, சமத்துவமின்மையை மேலும் விரிவுபடுத்தியுள்ளது. தற்போதைய ஆட்சி, மேல்தட்டு வர்க்கத்தின் பிடியை மேலும் வலுப்படுத்தியுள்ளது. எந்த அதிகாரச் சமத்துவமின்மையை எதிர்ப்பதாக சங் பரிவார் பறைசாற்றுகிறதோ, அதே சமத்துவமின்மையால் கட்டமைக்கப்பட்ட இந்துத்துவ அதிகார வர்க்கத்தின் அங்கமே இப்புதிய ஆட்சியாளர்கள்.

பழைய அதிகார வர்க்கத்தின் தொடரும் கட்டுப்பாடு நமக்கு ஒன்றை நினைவூட்டுகிறது: பாசிச அரசியல் புதிய வழிகளில் அரக்கத்தனமானதாகவும் வன்முறையானதாகவும் இருந்தாலும், அதில் பல விசயங்கள் யாவும் விதிவிலக்கற்றதாகவும் (unexceptional) மற்றும் அன்றாட நடைமுறையாகவும் (routinized) உள்ளன.

ஊடகப் பிரச்சாரமும் காவி அடியாட்களும்

இந்துத்துவப் பிரச்சாரத்தைத் தக்கவைப்பதில் கார்ப்பரேட் ஊடக நிறுவனங்கள் மிக முக்கியப் பங்காற்றியுள்ளன. தற்போதைய இந்துத்துவப் பிரச்சாரம் நவீனக் கருவிகளைப் பயன்படுத்துவதோடு, ‘பயங்கரவாத எதிர்ப்பு’, ‘ஏகாதிபத்திய எதிர்ப்பு’, ‘டிஜிட்டல்மயமாக்கல்’ மற்றும் ‘வளர்ச்சி’ ஆகியவற்றின் உத்திகளையும் சொல்லாடல்களையும் கையாள்கிறது. அதேசமயம் ஓவியங்கள், காலண்டர் கலை, நாட்டுப்புற நாடகம் மற்றும் சினிமா ஆகியவற்றில் உள்ள இந்து மதத்தின் பழைய பிம்பங்களையும் அது பயன்படுத்திக் கொள்கிறது.

ஸ்ட்ரீமிங் சேவைகளைத் தணிக்கை வரம்பிற்குள் கொண்டுவருவது போன்ற தொடர்ச்சியான கொள்கைகள் மூலம், டிஜிட்டல் கண்காணிப்புக்கான ஒரு கட்டமைப்பை அரசாங்கம் திட்டமிட்டு உருவாக்கியுள்ளது. இணையத்திலும் வீதிகளிலும் சட்டத்தைக் கையில் எடுத்துக்கொள்ளும் வன்முறைக் கும்பல்கள், டிஜிட்டல் உள்ளடக்கத்தை உருவாக்குபவர்களைக் குற்றவாளிகளாக்கத் தண்டனைச் சட்டங்களை வரம்புமீறிப் பயன்படுத்துவது ஆகியவை இக்கொள்கைகளுக்குத் துணைநிற்கின்றன.

தகவல் தொடர்பு நுட்பங்கள் மீதான இந்தக் கட்டுப்பாடு, இந்துச் சடங்குகளை ஆக்ரோஷமான வெகுஜன – அரசியல் வெறியாட்டங்களாக மாற்றியுள்ளது. இவை மதம் மற்றும் தேசியவாதத்தின் பெயரில் ‘மற்றவர்களை’ (சிறுபான்மையினரை) அச்சுறுத்தப் பயன்படுத்தப்படுகின்றன. உதாரணமாக, இந்துத்துவ சக்திகள் தங்கள் செய்தியைப் பரப்பப் பிரபலமான இசை வடிவங்களைத் திட்டமிட்டுப் பயன்படுத்துகின்றன.

பண்பாட்டுப் போர்: வரலாற்றை அழித்தல்

ஏற்கனவே உள்ள பண்பாட்டுப் படிமங்கள் (Cultural imagery) அமைந்திருக்கும் இடங்களை மாற்றியமைப்பதன் மூலமும், புதியவற்றை உருவாக்குவதன் மூலமும், இந்துத்துவம் தனது கருத்துக்களைப் பரப்ப நினைவுச் சின்னங்களைப் பயன்படுத்துகிறது. பல நூற்றாண்டுகளாக மசூதி இருந்த இடத்தில், அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படுவது அத்தகைய கருத்தை நிறுவுவதற்கு ஒரு முதன்மையான சான்றாகும்.

குடியரசுத் தலைவர் மாளிகை, நாடாளுமன்றக் கட்டடம் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பிற நினைவுச் சின்னங்களை உள்ளடக்கிய ‘சென்ட்ரல் விஸ்டா’ திட்டம் மற்றொரு உதாரணமாகும். டெல்லியைப் பெரும்பான்மைவாத இந்துத்துவ வரலாற்று வரைவியலின் அடிப்படையில் மறுவடிவமைப்பதற்கான ஒரு முயற்சியே இத்திட்டம் என்று செயற்பாட்டாளர்களும் எழுத்தாளர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இத்தகைய குறியீட்டு அரசியல் வெகுஜனப் பண்பாட்டுக் களத்திலும் நீள்கிறது; அகமதாபாத்தில் உள்ள கிரிக்கெட் மைதானத்திற்கு நரேந்திர மோடி மைதானம் என்று பெயர் மாற்றப்பட்டது இதற்குச் சான்றாகும். இந்தியாவின் முஸ்லிம் பாரம்பரியத்தை அழிக்கும் முயற்சிகளாக நகரங்கள் மற்றும் ரயில் நிலையங்களின் பெயர்கள் மாற்றப்படுவதிலும் இதே போக்கு தெரிகிறது. உதாரணமாக: அலகாபாத் – பிரயாக்ராஜ், குர்கான் – குருகிராம், முகல்சராய் சந்திப்பு – பண்டிட் தீன் தயாள் உபாத்தியாய சந்திப்பு.

“எதிரி”யை உருவாக்குதல்: ஹிட்லரின் வழியில்…

“பாசிஸ்டுகளுக்குத் தங்கள் ஆதரவாளர்களைத் திரட்ட, பேயுருவம் கொடுக்கப்பட்ட ஓர் எதிரி (Demonized enemy) தேவை”. இதில், முஸ்லிம்களை இந்துத்துவா ‘அன்னியர்களாக’ (Othering) கட்டமைப்பது, நாஜி கட்சியின் யூத வெறுப்பை ஒத்திருக்கிறது. தேசியம், நவீனமயமாக்கல் மற்றும் ஜனநாயகம் என்ற போர்வையில் வன்முறையான அன்னியப்படுத்தலை வெற்றிகரமாகப் பயன்படுத்துவதால் இந்துத்துவா மிகவும் நயவஞ்சகமானதாக உள்ளது. அது கடந்தகாலத் தப்பெண்ணங்களைக் கையகப்படுத்தி, அவற்றை புதியவற்றுடன் இணைக்கிறது. ‘பழைய உண்மைகளைப் போலத் திறமையாக வேடமணிந்து, மிகவும் நவீன ஊடக நுட்பங்கள் மூலம் அந்தக் கலவையை ஒளிபரப்புவதன்’ வழியாக அது செயல்படுகிறது. இந்தச் சூழல்களும் உத்திகளும், சங் பரிவார் தனக்கான ஒரு ‘வன்முறை அடியாள் படையை’ (ஜெர்மன் நாஜிக்கள் உருவாக்கிய Storm Troopers போன்றது) திரட்டிக்கொள்ள உதவியுள்ளன; முஸ்லிம்களே இவர்களின் முதன்மை இலக்காக உள்ளனர்.

சமீபத்தில் இயற்றப்பட்ட குடியுரிமைத் திருத்தச் சட்டம் (CAA), முஸ்லிம்களை இரண்டாம் தரக் குடிமக்களாகக் கீழ்ப்படுத்தும் இக்கட்டமைப்பிற்கு ஒரு முக்கிய உதாரணமாகும். அண்டை நாடுகளான ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷில் இருந்து 2014-க்குள் வந்த இந்து, பௌத்த, சமண, கிறிஸ்தவ, சீக்கிய மற்றும் பார்சி சமூகத்தினரை ‘துன்புறுத்தப்பட்ட சிறுபான்மையினர்’ என்று இந்தச் சட்டம் அடையாளப்படுத்துகிறது. ஆனால் இது முஸ்லிம்கள், யூதர்கள், பஹாய்கள் மற்றும் நாத்திகர்களை அதன் வரம்பிலிருந்து விலக்கி, இந்திய அரசியலமைப்பில் பொறிக்கப்பட்டுள்ள மதச்சார்பற்ற கொள்கைகளை மீறும் ஒரு மத ரீதியான பிரிவினையை அறிமுகப்படுத்துகிறது.

ஒழுங்குமுறை அரசு அல்ல, ‘தரகர்’ அரசு

நியோ-லிபரலிசத்தின் (தனியார்மய – தாராளமயம்) உண்மையான பயங்கரத்திலிருந்து மக்களைத் திசைதிருப்பவே, முஸ்லிம்களைப் பற்றிய பீதியூட்டும் மாயத்தோற்றங்கள் உருவாக்கப்படுகின்றன. இதன் மூலம், மேல்தட்டு வர்க்கத்திற்குச் செல்வம் மாற்றப்படுவதையும், அதிகரித்து வரும் சமத்துவமின்மையையும் மறைக்க இந்துத்துவா முயற்சிக்கிறது. மக்கள் இத்தகைய அடையாளப் போட்டிகளிலும் காட்சிகளிலும் மும்முரமாக இருக்கும் வேளையில், அரசாங்க ரீதியான இந்துத்துவா அதன் கார்ப்பரேட் ஆதரவாளர்களுக்கு உரிய வெகுமதி அளிக்கப்படுவதை உறுதி செய்துள்ளது.

2004-க்குப் பிறகு, காங்கிரஸ் ஆட்சி பெருவணிகத்தை ஆதரிக்கும் ஒரு ஒழுங்குமுறை அரசாக செயல்பட்டது என்றால், பாஜக அரசு அரசை ஒரு தரகர்-அரசாக மாற்றியுள்ளது. அதாவது, அரசு மக்களுக்கும் முதலாளிகளுக்கும் பொதுவான நடுநிலையாளராகச் செயல்படாமல், ஒரு தரகரைப் போலச் செயல்பட்டு, கார்ப்பரேட்டுகளுக்கு ஒப்பந்தங்களை முடித்துக் கொடுக்கும் ஏஜென்ட்டாக மாறிவிட்டது.

தொழிலாளர் விரோதச் சட்டங்கள்:

2014-க்குப் பிறகு, வணிகங்களுக்கு உதவும் வகையில் பல தொழிலாளர் சட்டங்கள் மாற்றப்பட்டுள்ளன.

  • உதாரணமாக, ஜூலை 2017-இல் குழந்தைத் தொழிலாளர் (தடை மற்றும் ஒழுங்குமுறை) சட்டம், 1986-இல் ஒரு திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இத்திருத்தம், ‘ஆபத்தானவை’ என்று பட்டியலிடப்பட்டிருந்த தொழில்களின் எண்ணிக்கையை 83-லிருந்து வெகுவாகக் குறைத்துவிட்டது. சுரங்கம், வெடிபொருட்கள் மற்றும் தொழிற்சாலைகள் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவை மட்டுமே இனி ஆபத்தானவை என்று அப்பட்டியல் சுருக்கப்பட்டுள்ளது.
  • செப்டம்பர் 2020-இல், மக்களவை மூன்று தொழிலாளர் மசோதாக்களை நிறைவேற்றியது. இவை முதலாளிகளுக்கு விரிவான அதிகாரத்தை வழங்குவதன் மூலம் முறைசாரா தொழிலாளர்களின் பாதிப்பை அதிகரிக்கின்றன.
  • இந்தியத் தொழிலாளர் சட்டங்களில் ஏற்பட்ட இந்த மாற்றம் நாஜி ஜெர்மனியுடன் சில வரலாற்று ஒற்றுமைகளைக் கொண்டுள்ளது:

“இதில் கவனிக்கத்தக்க முக்கிய அம்சம் என்னவென்றால், லாபம் செங்குத்தாக உயர்ந்துகொண்டிருந்த அதே நேரத்தில், கூலியோ சரிந்து கொண்டிருந்தது. பெருநிறுவனங்கள், வங்கிகள் எனத் தங்கள் கூட்டாளிகளின் லாபம் விண்ணைத் தொடுவதற்காக, நாஜிக்கள் திட்டமிட்டே கூலியை அடிமட்டத்தில் முடக்கி வைத்தனர். நாஜிக்கள் ஆற்றிய இந்தச் சேவையின் பலனாக, சமூக உற்பத்தியின் பெரும்பகுதியை, தொழிலாளர்களின் இழப்பில் ஜெர்மன் மூலதனம் அபகரித்துக் கொண்டது.”

இயற்கை வளங்களைக் கொள்ளையடித்தல்:

கூடுதலாக, சுரங்கத் துறையில் பெருநிறுவனங்களை ஆதரிக்க பாஜக அரசால் பல சட்டங்கள் மாற்றப்பட்டுள்ளன.

  • மார்ச் 2015-இல், நிலக்கரிச் சுரங்கங்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டம் கொண்டுவரப்பட்டது. இது, தேசியமயமாக்கப்பட்டிருந்த நிலக்கரித் துறையைத் தனியார் நிறுவனங்களுக்குத் திறந்துவிட்டதோடு, நிலக்கரிச் சுரங்கங்கள் மற்றும் தொகுப்புகளை ஏலம் விடுவதற்கும் விற்பனை செய்வதற்குமான விதிமுறைகளையும் வகுத்தது.
  • மே 2016-இல், சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டத் திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இது, ஏலத்தில் விடப்பட்ட சுரங்கக் குத்தகைகளைத் தனிநபர்களுக்கு மாற்றுவதற்கு (மாநில அரசுகளின் ஒப்புதலுக்கு உட்பட்டு) அனுமதி அளித்தது.
  • 2014-இல் பதவியேற்ற முதல் மூன்று மாதங்களுக்குள், மோடி அரசு 41 திட்டங்களில் 33 -க்கு சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கியது; இதன் மூலம் சுரங்கம், கட்டுமானம் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக 7,000 ஹெக்டேருக்கும் அதிகமான வன நிலங்கள் தாரை வார்க்கப்பட்டன. இந்த நிலங்களின் பெரும்பகுதி தனியார் பெருநிறுவனங்களுக்கே ஒதுக்கப்பட்டது.

வனங்களை அழிக்கும் சட்டங்கள்:

பெருநிறுவனங்களின் நலன்களை முன்னெடுக்கும் வகையில் பிற மசோதாக்களின் வரிசையும் அமைந்தன.

  • உதாரணமாக, ஜூலை 2016-இல், நாடாளுமன்றத்தில் ‘இழப்பீட்டு காடு வளர்ப்பு நிதிச் சட்டம்’ (CAMPA Act) நிறைவேற்றப்பட்டது. இச்சட்டம், கிராம சபைகள் மற்றும் பிற காடுவாழ் மக்களிடம் ஒப்புதல் பெற வேண்டிய தேவையைத் தந்திரமாகப் புறக்கணிப்பதோடு, பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகளில் தோட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அனுமதிக்கிறது.
  • மார்ச் 2018-இல், சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்ட வரைவு தேசியக் கொள்கையானது, ‘வளம் குன்றிய வனப் பகுதிகளை’ (40 சதவீதத்திற்கும் குறைவான மர அடர்த்தி கொண்ட பகுதிகள்) தனியார் தோட்டங்களுக்கும், பொது-தனியார் கூட்டாண்மை (PPP) திட்டங்களுக்கும் வழங்க முன்மொழிந்தது. இத்திட்டத்தின் மூலம் 34 மில்லியன் ஹெக்டேருக்கும் அதிகமான வன நிலங்கள் இம்முறையில் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டது

தனியார்மயமாக்கல் மற்றும் வரிச்சலுகைகள்:

  • இதே பாணியில், ஜூலை 2019-இல் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பொதுத்துறை நிறுவனங்களில் அரசின் பங்குகளை 51%-க்கும் கீழாகக் குறைக்க விரும்புவதாகவும், 1.05 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான தனியார்மயமாக்கல் (பங்கு விற்பனை) இலக்கையும் அறிவித்தார். ஏர் இந்தியா, ஓ.என்.ஜி.சி, பாரத் பெட்ரோலியம், பி.எஸ்.என்.எல் மற்றும் எல்.ஐ.சி ஆகியவை இதில் அடங்கும்.
  • வணிக நடவடிக்கைகளை அதிகரிப்பதற்காக, இந்தியாவின் கடற்கரைகளைத் திறந்துவிட டிசம்பர் 2019-இல் கடலோர ஒழுங்குமுறை மண்டல (CRZ) அறிவிக்கையை அரசாங்கம் வெளியிட்டது. கிராமப்புற கடலோரப் பகுதிகளில், முன்பு பாதுகாக்கப்பட்ட பகுதியாக இருந்த 200 மீட்டர் ‘கட்டுமானத் தடை மண்டலத்தில்’ கட்டிடங்கள் கட்ட இது அனுமதிக்கிறது.
  • 2019-இல், பா.ஜ.க அரசு அடிப்படை கார்ப்பரேட் வரியை 30 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாகக் குறைத்தது. இது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கார்ப்பரேட் வரியின் விகிதத்தை வெகுவாகக் குறைத்துவிட்டது.

ரயில்வே துறையிலும் தனியார்மயம்:

  • டிசம்பர் 2019-இல், தனியார் நிறுவனங்கள் ஆண்டுக்கு 150 பயணிகள் ரயில்களை இயக்குவதற்காக 100 ரயில் தடங்களை அரசாங்கம் அடையாளப்படுத்தியது.
  • ஜனவரி 2020-இல், இந்திய ரயில்வே அதன் உற்பத்தி அலகுகள் தனியார்மயமாக்கப்படும் என்றும், நாடு முழுவதும் 750 ரயில் நிலையங்களை நிர்வகிக்கத் தனியார் நிறுவனங்கள் அனுமதிக்கப்படும் என்றும் அறிவித்தது.

பெருவணிகக் கும்பலுக்கு வாரி வழங்கப்பட்ட மற்றொரு சலுகை, 2020-இல் கொண்டுவரப்பட்ட இழிப்புகழ் பெற்ற மூன்று வேளாண் சட்டங்களாகும்:

  1. விவசாய விளைபொருள் வர்த்தகம் மற்றும் வணிகம் (ஊக்குவித்தல் மற்றும் எளிதாக்குதல்) சட்டம்.
  2. விவசாயிகள் (அதிகாரம் மற்றும் பாதுகாப்பு) விலை உறுதிப்பாட்டு ஒப்பந்தம் மற்றும் பண்ணை சேவைகள் சட்டம்.
  3. அத்தியாவசியப் பொருட்கள் (திருத்தச்) சட்டம்.

விவசாயிகளின் கடுமையான போராட்டங்கள் காரணமாகவும், தீர்மானகரமான உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டும் இச்சட்டங்கள் இறுதியில் திரும்பப் பெறப்பட்டன.

ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்

“2023, டிசம்பர் 12 அன்று, ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் மூன்று புதிய மசோதாக்களை அறிமுகப்படுத்தியது. இவை, ஏற்கனவே நடைமுறையில் இருந்த இந்தியத் தண்டனைச் சட்டம் – 1860, குற்றவியல் நடைமுறைச் சட்டம் – 1973 மற்றும் இந்திய சாட்சியச் சட்டம் – 1872 ஆகியவற்றை நீக்கிவிட்டு, அவற்றுக்குப் பதிலாக முறையே பாரதிய நியாய சன்ஹிதா (BNS), பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS) மற்றும் பாரதிய சாக்ஷ்ய மசோதா (BSB) ஆகியவற்றைத் திணித்துள்ளன.

ஜனநாயகத்தை வெற்றுக்கூடாக்கிச் சிதைப்பதற்குத் தேவையான முழுமையான அதிகாரத்தை இம்மசோதாக்கள் அரசாங்கத்திற்கு அளிக்கின்றன. ஜனநாயகவாதிகள் (Democratic opponents), மாற்றுக் கருத்துடையோர் மற்றும் சமூகச் செயல்பாட்டாளர்கள் மீதான கைது, தடுப்புக்காவல், வழக்குத் தொடுத்தல் மற்றும் சிறைப்படுத்துதல் ஆகியவற்றை அசுர வேகத்தில் அதிகரிக்க இப்புதிய சட்டங்கள் அரசிற்கு அதிகாரமளிக்கின்றன.

சட்ட அமைப்பை காலனிய ஆதிக்கத்திலிருந்து விடுவிப்பதாகச் சொல்லிக்கொண்டாலும், உண்மையில் குடிமக்கள் மீதான அரசின் பிடியை இறுக்குவதன் மூலம், இச்சட்டங்கள் காலனியத் தன்மையையே மீண்டும் சட்டப்பூர்வமாக்குகின்றன.

மோடி அரசின் ஆதரவும் புதிய ஏகபோகங்களும்

“பா.ஜ.க அரசு பெருநிறுவனங்களை ஆதரிக்கப் புதிய சட்டங்களை இயற்றியுள்ள போதிலும், மிகக்குறிப்பாக, மோடி அரசுக்குத் தீவிர ஆதரவளிக்கும் அதானி மற்றும் அம்பானி ஆகிய புதிய ஏகபோகக் குழுமங்களின் நலன்களை அது முன்னெடுத்துள்ளது.

உதாரணமாக, வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (DRI) அதானி குழும நிறுவனங்களுக்கு எதிராகத் தொடுத்திருந்த அனைத்து நடவடிக்கைகளையும் ரத்து செய்து, DRI-இன் தீர்ப்பளிக்கும் அதிகாரி கே.வி.எஸ். சிங் உத்தரவிட்டார். மின்சாரம் மற்றும் உள்கட்டமைப்புத் தலைப்புகளின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பை உயர்த்திக் காட்டியதாக இந்நிறுவனங்கள் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. அப்பொருட்களுக்கு 0 அல்லது 5 சதவீதத்திற்கும் குறைவான வரியே உள்ள நிலையில், ஏறத்தாழ 3,974 கோடி ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பு நடந்ததாகக் கூறப்பட்டது.

அக்டோபர் 2018-இல், நாடு முழுவதும் குழாய் வழி இயற்கை எரிவாயு வலைப்பின்னல்கள் மற்றும் எரிபொருள் நிலையங்களை அமைக்கத் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட 126 ஒப்பந்தங்களில், அதானி குழுமம் 25-ஐக் கைப்பற்றியது. ஏல நடைமுறையில் ஒரு தனி நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட அதிகபட்ச எண்ணிக்கை இதுவாகும்.

அதேபோல, அகமதாபாத், குவஹாத்தி, ஜெய்ப்பூர், லக்னோ, மங்களூரு மற்றும் திருவனந்தபுரம் ஆகிய ஆறு விமான நிலையங்களை நவீனமயமாக்குவதற்கான அனைத்து ஒப்பந்தங்களும் (மார்ச் 2019-இல்) அதானி குழுமத்திற்கே வழங்கப்பட்டன.

கூட்டாளி முதலாளித்துவம் அல்ல – இது பாசிச ஏகபோகம்

இருப்பினும், இச்சலுகைகளை வெறும் ‘கூட்டாளி முதலாளித்துவம்’ (Crony capitalism) என்று மட்டும் சுருக்கிப் பார்த்துவிடக் கூடாது. அப்படிப் பார்ப்பது, ஏகபோக மூலதனத்திற்கும் பாசிசத்திற்கும் இடையே உள்ள உறவின் தனித்துவத்தைத் தவறவிடுவதாகும். சொல்லப்போனால், எல்லா முதலாளித்துவமுமே கூட்டாளி முதலாளித்துவம்தான். ஏனெனில், கார்ப்பரேட்டுகளுக்கு ஒப்பந்தங்களை வாரி வழங்குவதிலும், அவர்களுக்கு ஆதரவாகச் சட்டங்களை வளைப்பதிலும் அரசு எப்போதும் தனது விருப்பத் தேர்வை பயன்படுத்தவே செய்கிறது.

‘கூட்டாளி முதலாளித்துவம்’ என்ற பதத்தைப் பயன்படுத்துவதில் உள்ள கோளாறு என்னவென்றால், குறிப்பிட்ட வணிக நிறுவனங்களுக்குச் சாதகமாக இல்லாத ஒரு ‘தூய’ முதலாளித்துவம் இருக்க முடியும் என்று அது நம்ப வைக்கிறது. மேலும், முதலாளித்துவம் இயல்பாகவே ஒரு ‘தீங்கற்ற பாதையில்’ (Benign path) செல்லக்கூடியது என்றும், கூட்டாளி முதலாளித்துவம் என்பது அதிலிருந்து விலகிய ஒரு விதிவிலக்கு என்றும் அது தவறாகக் கட்டமைக்கிறது.

இந்தக் கண்ணோட்டம், முதலாளித்துவத்தின் அடிப்படைப் பண்பாக இருக்கும் ஏகபோகப் போக்கை (Monopoly tendency) மறைக்கிறது. உண்மையில், இந்த ஏகபோகப் போக்குதான் பாசிசத்தை ஆதரிப்பதிலும், அதிலிருந்து பயனடைவதிலும் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. ஏகபோக முதலாளித்துவத்தின் கீழ், பெருமுதலாளிகளுக்கும் அரசுக்கும் இடையிலான உறவு மிகவும் நெருக்கமானதாக மாறுகிறது. இது இன்றைய ‘கார்ப்பரேட் – இந்துத்துவக் கூட்டணியில்’ (Corporate-Hindutva nexus) மிகத் தெளிவாகத் தெரிகிறது.

ஏழைகளின் அவலம்

இந்தக் கார்ப்பரேட் – இந்துத்துவக் கூட்டணியின் விளைவாக, அடித்தட்டு வர்க்கங்கள் பெரும் இழப்புகளைச் சந்தித்துள்ளன. அவர்களின் வாழ்க்கை, அதிகரித்து வரும் வறுமையாலும் பசியாலும் சூழப்பட்டுள்ளது. 2011-12 மற்றும் 2017-18 ஆண்டுகளுக்கு இடையில், கிராமப்புற இந்தியாவில் அனைத்துப் பொருட்களின் மீதான தனிநபர் நுகர்வுச் செலவு, அதன் உண்மையான மதிப்பில் 9 சதவீதம் சரிந்துள்ளது என்று தரவுகள் காட்டுகின்றன. சுதந்திர இந்தியாவின் சாதாரண காலங்களில் இதுபோன்றதொரு நிகழ்வு எப்போதும் நடந்ததில்லை.

ஏழைகள் தேக்கமடைந்திருக்கும் அல்லது மேலும் ஏழ்மையடைந்திருக்கும் அதே வேளையில், பணக்காரர்கள் முன்னெப்போதையும் விடப் பெரிய லாபத்தை ஈட்டுகின்றனர். சமீபத்திய ஆக்ஸ்ஃபாம் (2023) அறிக்கையின்படி:

‘மிகப்பெரிய பணக்காரர்களான 10 சதவீதத்தினர் மொத்த செல்வத்தில் 72 சதவீதத்திற்கும் அதிகமாக வைத்திருக்கிறார்கள்; முதல் ஐந்து சதவீதத்தினர் மொத்த செல்வத்தில் கிட்டத்தட்ட 62 சதவீதத்தையும், முதல் ஒரு சதவீதத்தினர் மொத்த செல்வத்தில் கிட்டத்தட்ட 40.6 சதவீதத்தையும் வைத்திருக்கிறார்கள். 228.9 மில்லியன் ஏழைகளுடன் உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான ஏழைகளைக் கொண்ட நாடாக இந்தியா உள்ளது. மறுபுறம், இந்தியாவில் உள்ள மொத்த கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 2020-ல் 102-லிருந்து 2022-இல் 166-ஆக அதிகரித்துள்ளது.’

எப்போதெல்லாம் அதிக சமத்துவமின்மையும், ஆழமான மற்றும் எளிதில் தூண்டி விடக்கூடிய சமூகப் பிளவுகளும் ஒரே நேரத்தில் நிகழ்கின்றனவோ, அப்போதெல்லாம் பாசிசம் செழித்து வளர்கிறது; இந்தியாவின் நிலையும் அதுவே.

கட்டுரையாளர்: ரோஹித் வர்மன்

தமிழாக்கம்: சந்திரசேகர்

disclaimerசமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram


புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஜூலை, 2011 இதழ் | PDF

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 26, இதழ் 9 | ஜூலை, 2011 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: சட்டமன்றத் தீர்மானம்: ஜெயாவின் கபட நாடகம் புலி ரசிகர்களின் விசில்
  • “வியாபாரக் கல்விக் கொள்கையைத் தீவிரமாக்கும் பாசிச ஜெயா அரசின் திட்டங்களை முறியடிப்போம்!”
    -தமிழகமெங்கும் புரட்சிகர அமைப்புகளின் பிரச்சாரம்-ஆர்ப்பாட்டம்
  • சமச்சீர் கல்வி ரத்து: தனியார் பள்ளி கட்டணக் கொள்ளைக்கு ஜே! ஜே!!
  • லோக்பால்: ஊழல் சாக்கடைக்கு ஞானஸ்நானம்
  • போஸ்கோ எதிர்ப்புப் போராட்டம்: திணறிப் போனது ஆளும் கும்பல்!
  • நிகமானந்தா: பா.ஜ.க.வின் முகத்திரையைக் கிழித்த தியாகச் சாமியார்
  • கிருஷ்ணா-கோதாவரி எண்ணெய் வயல் கொள்ளை: உமி கொண்டு வந்தான் அவல் தின்றான்
  • வழக்குரைஞர் சங்கரசுப்பு மகன் கொலை: போலீசு கொடூரம்
  • மும்பை பத்திரிகையாளர் டே படுகொலை: போலீசு-தாதாக்களின் கூட்டுச் சதி
  • சாலை கேட்டால் கொலை: இதுதான் நிதிஷ்குமாரின் சிறந்த ‘அரசாளுமை’!
  • தில்லி விமான நிலைய ஊழல்-கொள்ளை: தனியார்-பொதுத்துறை கூட்டு பல்லாயிரம் கோடி வேட்டு
  • ஒரு நாடகம் நடக்குது
  • இலவச-கவர்ச்சித் திட்டங்கள்: திராவிடக் கட்சிகளைச் சாடும் அதிமேதாவிகளின் அவதூறுகள்
  • விவசாயிகள் மீது தடியடி: பேயாட்சி!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஜூன், 2011 இதழ் | PDF

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 26, இதழ் 8 | ஜூன், 2011 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: ஜெயா திருந்திவிட்டாராம்! நரியைப் பரியாக்கும் கோயபல்சுகள்
  • “போர்க்குற்றவாளி ராஜபக்சேவைத் தூக்கிலிடு!”
    -தமிழகமெங்கும் புரட்சிகர அமைப்புகளின் எழுச்சிமிகு ஆர்ப்பாட்டம்
  • மறுகாலனியாதிக்கத்தை முறியடிப்போம்! கார்ப்பரேட் கொள்ளையர்களைத் தண்டிப்போம்!!
    -நக்சல்பாரி புரட்சிகர அமைப்புகளின் மே தின அறைகூவல்
  • கொலை வாளினை எடு! கொடியோர் செயல் அறு!
  • சமச்சீர் கல்வி ரத்து: சமூக அநீதி!
  • மே.வங்கத் தேர்தல் முடிவுகள்: ‘மார்க்சிஸ்டு’கள் மண்ணைக் கவ்வியது ஏன்?
  • கனிமொழி கைது: காங்.-சி.பி.ஐ. கூட்டணியின் கண்ணாமூச்சி ஆட்டம் தொடர்கிறது
  • ஒசாமா பின்லேடன் படுகொலை: அமெரிக்க பயங்கரவாதம்!
  • தீண்டாமை தலைவிரித்தாடும் தமிழகம்: தேவை, புதிய பாதை!
  • போபால் விஷவாயுப் படுகொலை: மீண்டும் அநீதி!
  • புருலியா ஆயுதக் கடத்தல்: “ரா”வின் சதிச்செயல் அம்பலமாகியது
  • சிரிய மக்களின் போராட்டமும் அமெரிக்க ஓநாய்களின் அழுகையும்
  • “மதிப்பில்லாத சரக்குகள்!”
  • இந்திய நீதிமன்றங்கள்: கார்ப்பரேட் பயங்கரவாதிகளின் அடியாட்கள்!
  • குஜராத்தின் வளர்ச்சிக்குப் பலியாகும் பழங்குடியின் மக்கள்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | மே, 2011 இதழ் | PDF

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 26, இதழ் 7 | மே, 2011 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: ராஜபக்சேவின் போர்க்குற்றங்கள்: ஏகாதிபத்தியங்களின் இரட்டை வேடம்
  • ஊழல் ஒழிப்பு: ஹஸாரேவின் நாடகமும் நக்சல்பாரிகளின் போராட்டமும்
  • ஓட்டுப் பொறுக்குவதில் எதிரெதிர் அணி! கார்ப்பரேட் சேவையில் ஓரணி!!
  • ஒட்டுண்ணிக் கட்சிகளின் கையறு நிலை
  • உடுக்கையடிக்கும் பத்திரிகைகள் சாமியாடும் தேர்தல் ஆணையம்
  • டௌ கெமிக்கல்ஸுக்கு சி.பி.எம்.-இன் ஆராதனை!
  • ஊழல் தடுப்பு ஆணைய மக்கள் வரைவுச் சட்டம்: புண்ணுக்குப் புனுகு!
  • சட்டிஸ்கர்: இந்திய அரசின் போர்க்குற்றங்கள்
  • அணு மின் உற்பத்திக்குத் தொழிலாளர் பலிகிடா!
  • அரபு சர்வாதிகாரிகளைத் தாங்கும் அமெரிக்க ஜனநாயகம்
  • பஞ்சாப்: பிணக்காடாகும் கோதுமைக் களஞ்சியம்
  • ‘வல்லரசின்’ மரணப் பொந்துகள்!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஏப்ரல், 2011 இதழ் | PDF

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 26, இதழ் 6 | ஏப்ரல், 2011 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: அணு உலை வெடிப்பு: பேரழிவில் ஜப்பான்! மரணவாயிலில் இந்தியா!
  • கல்விக் கொள்ளையர்களை உலுக்கிய முற்றுகைப் போராட்டம்!
  • விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தும் வெள்ளைமாளிகையின் விசுவாசி!
  • தமிழக சட்டமன்றத் தேர்தல்: கார்ப்பரேட் கொள்ளைக்கு ஜனநாயக மூடுதிரை
  • “ஸ்பெக்ட்ரம் என்பது வெறும் ஊழல் இல்லை; இது கார்ப்பரேட் முதலாளிகளின் பகற்கொள்ளை!”
  • லிபியா மீதான ஆக்கிரமிப்புப் போர்: அமெரிக்கப் பயங்கரவாதத்தின் நீட்டிப்பு
  • தேர்வாய் கண்டிகை – காகரப்பள்ளி: அரசின் நிலப்பறிப்புக்கு எதிராக ஆர்த்தெழுந்த உழைக்கும் மக்கள்!
  • தண்ணீர் கொள்ளையர்களின் படையெடுப்பு!
  • சென்னை – பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீதான தாக்குதல்: போலீசின் அவதூறு ஊடகங்களின் பக்கமேளம்
  • பட்ஜெட் 2011-12: அதே செக்குமாட்டுப் பாதையில்…
  • பட்ஜெட்டின் நரபலி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | மார்ச், 2011 இதழ் | PDF

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 26, இதழ் 5 | மார்ச், 2011 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: கல்லுளிமங்கன்!
  • தனியார்மயம்… தாராளமயம்… ஊழல்மயம்!
  • தேசத் துரோகிகளின் தேசபக்தி
  • தமிழக மீனவர் படுகொலை: எல்லை தாண்டுவதுதான் பிரச்சினையா?
  • மதுரை அருகே ஒரு போபால்: மாடுகளைப் பலி கொண்ட நச்சு ஆலை
  • தமிழகச் சட்டமன்றத் தேர்தலும் தமிழினவாதிகளின் பிழைப்புவாதமும்
  • அமெரிக்க அநீதி!
  • விழலுக்கு இறைத்த நீரானதேன்?
  • தெற்கு சூடான் விடுதலை: ஏகாதிபத்தியங்களின் பகடைக்காயானது
  • போஸ்கோவிற்கு அனுமதி: கார்ப்பரேட் பகற்கொள்ளைக்குப் பட்டுக் கம்பளம்
  • ஜெய்தாபூர் அணுமின் திட்டம்: ஏகாதிபத்திய சேவைக்கு மக்கள் பலிகிடா!
  • மருந்தின் விலையும் இனி கசக்கும்!
  • குஜராத் இனப்படுகொலையில் மோடியின் பங்கு: புஸ்வானமானது புலன் விசாரணை
  • “பிரசாத லட்டு பிடிப்பதையும் அவாள்தான் செய்ய வேண்டும்!”

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | பிப்ரவரி, 2011 இதழ் | PDF

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 26, இதழ் 4 | பிப்ரவரி, 2011 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: விலைவாசி உயர்வு: மறுகாலனியாதிக்கக் கொள்கையின் விளைவு!
  • துனிசியா: சர்வாதிகார ஆட்சியை வீழ்த்திய உழைக்கும் மக்களின் பேரெழுச்சி
  • மாலேகான், அஜ்மீர், மெக்கா மசூதி, சம்ஜவ்தா குண்டு வெடிப்புகள்: இந்து பயங்கரவாதத்தின் நிரூபணங்கள்
  • சேலம் ஜி.டி.பி. நிறுவனத்தின் அட்டூழியத்துக்கு எதிராக தொழிலாளி வர்க்கத்தின் அதிரடிப் போராட்டம்!
  • ஸ்டெயின்ஸ் பாதிரியார் கொலை வழக்குத் தீர்ப்பு: நீதிமன்றமா? காவிமன்றமா?
  • கே.ஜி.கண்ணபிரான் (1929 – 2010) மனித உரிமைகளுக்கான போரின் கலங்கரை விளக்கம்
  • பிநாயக் சென் மீதான வழக்கும் தண்டனையும்: காட்டு வேட்டையின் நீட்டிப்பு!
  • அமெரிக்கா கோலெடுத்தது இந்தியா ஆடியது
  • வங்கதேசம்: பன்னாட்டு நிறுவனங்களின் கொத்தடிமைத் தேசமா?
  • ஆதர்ஷ் ஊழல்: அம்பலமாகும் உண்மைகள்
  • உ.பி. உணவு ஊழல்: ஏழைகளின் பெயரால் நடந்த பகற்கொள்ளை!
  • ஆளில்லா விமானத் தாக்குதல்கள்: அமெரிக்கப் பயங்கரவாதிகளின் போர்க்குற்றங்கள்
  • விக்கிலீக்ஸ்: உண்மை சுடுகிறது! அமெரிக்கா அலறுகிறது!
  • ஆதிதிராவிடர் – பழங்குடியினர் நல மாணவர் விடுதிகள்: அரசின் வதைமுகாம்கள்!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



“விபி-ஜி ராம் ஜி”: நூறு நாள் வேலைத் திட்டத்தை ஒழித்துக்கட்டும் பாசிச சட்டம்

பாசிச மோடி அரசு “மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தை” நீக்கிவிட்டு, அதற்கு பதிலாக, “விக்சித் பாரத்-ரோஜ்கர் மற்றும் அஜீவிகா மிஷன் (கிராமின்)” (வளர்ந்த பாரத கிராமிய வேலை மற்றும் வாழ்வாதாரத் திட்டம் – VB-G RAM G) என்ற மசோதாவை நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றியுள்ளது.

வழக்கம் போல, நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத்தொடரின் இறுதி நாட்களில், போதிய விவாதங்களின்றி, எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை மீறி, மசோதாவை நாடாளுமன்றக் குழுவிற்கு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையை புறக்கணித்து, குரல் வாக்கெடுப்பு என்ற பாசிச முறையின் மூலமே இப்பாசிச மசோதாவை நிறைவேற்றியுள்ளது. மேலும், மசோதாவிற்கு இந்தியில் பெயர் வைத்து தனது பாசிச திமிரைக் காட்டியுள்ளது. மசோதா நிறைவேற்றப்பட்ட இரு நாட்களில் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததால் இம்மசோதா சட்டமாகியுள்ளது.

நூறு நாள் வேலைத் திட்டத்தை நிதி ரீதியாகவும், நிறுவன ரீதியாகவும் சிதைத்து அதனை இல்லாதொழிக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே இச்சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இப்புதிய சட்டத்தின் மூலம் மோடி அரசானது நூறு நாள் வேலைத் திட்டத்திற்காக ஒதுக்கப்படும் நிதியில் ஒன்றிய அரசின் பங்கைக் குறைத்து மாநிலங்களின் நிதிப்பங்கீட்டை அதிகரித்துள்ளது. மேலும், இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் வேலையின்மை உதவித்தொகை மற்றும் இழப்பீடு ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீட்டை மாநில அரசுகளின் தலையில் ஏற்றி கைகழுவியுள்ளது.

பழைய சட்டத்தின்படி, இத்திட்டத்திற்கான மொத்த செலவினத்தில் சுமார் 90 சதவிகிதத்திற்கும் மேல் ஒன்றிய அரசு நிதி ஒதுக்கி வந்தது. ஆனால், புதிய சட்டத்தில், 60 சதவிகிதம் நிதியையே ஒன்றிய அரசு ஒதுக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த 60 சதவிகித நிதிப்பங்கீட்டையும் மோடி அரசு ஆண்டுதோறும் முறையாக ஒதுக்குமா என்றால் அதுவும் கேள்விக்குறியே.

ஏற்கெனவே, மோடி அரசின் ஜி.எஸ்.டி. உள்ளிட்ட பல்வேறு பாசிச நடவடிக்கைகளால் மாநில அரசுகள் நிதி நெருக்கடியில் தள்ளாடிக் கொண்டிருக்கின்றன. கடன் சுமை அதிகரித்த போதிலும் மக்களின் அடித்தளத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக கவர்ச்சிவாதத் திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கின்றன. மறுபுறம், தங்களுடைய கார்ப்பரேட் ஆதரவுக் கொள்கைகளால் அரசுத்துறைகளில் கார்ப்பரேட்-காண்டிராக்ட்மயத்தை தீவிரப்படுத்திக் கொண்டிருக்கின்றன. இச்சூழலில் மாநில அரசுகள் இத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்க மறுக்கவே செய்யும். இதனை அறிந்தே, இத்திட்டத்தை படிப்படியாக ஒழித்துக்கட்டுவதற்காக ஒன்றிய அரசின் நிதிப்பங்கீட்டை குறைத்து மாநில அரசுகளின் நிதிப்பங்கீட்டை மோடி அரசு அதிகரித்துள்ளது.

மேலும், இப்புதிய சட்டத்தில் ஒன்றிய அரசு பரிந்துரைக்கும் புறநிலை அளவுருக்களின் (objective parameters) அடிப்படையில், ஒவ்வொரு நிதியாண்டிற்கும் மாநில வாரியான நெறிமுறை ஒதுக்கீட்டை (State-wise normative allocation) ஒன்றிய அரசு தீர்மானிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. சான்றாக, “பல பரிமாண வறுமை குறியீடு” புறநிலை அளவுருவாக நிர்ணயிக்கப்படும் பட்சத்தில், பா.ஜ.க. கும்பல் ஆளும் வடமாநிலங்களை விட வறுமைக் குறியீட்டில் முன்னேறியுள்ள தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா போன்ற தென்னிந்திய மாநிலங்களுக்கு குறைவான நிதியே ஒதுக்கப்படும்.

அதாவது, ஜி.எஸ்.டி. வரிப் பகிர்வு, ரயில்வே நிதி ஒதுக்கீடு போன்ற திட்டங்களில் தென்னிந்திய மற்றும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு குறைவான நிதி ஒதுக்கி வஞ்சிக்கும் நிலை இத்திட்டத்திற்கும் ஏற்படும்.

அதேபோல், புதிய சட்டமானது ஊரக வேலை வாய்ப்பு திட்டம் எந்தெந்த பகுதிகளில் செயல்படுத்தப்பட வேண்டும் என்பதை தீர்மானிக்கும் அதிகாரத்தை மாநில அரசுகளிடமிருந்து பறித்து ஒன்றிய அரசிற்கு வழங்குகிறது. அதாவது, ஒன்றிய அரசு அறிவிக்கும் பகுதிகளில் மட்டுமே இனி இத்திட்டம் செயல்படுத்தப்படும். இதன் மூலம் மாநில அரசுகளின் பெயரளவிலான கூட்டாட்சி உரிமையை மோடி அரசு குழித்தோண்டி புதைத்திருக்கிறது.

மேலும், பழைய சட்டத்தின் படி, இத்திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பை கோரும் எந்தவொரு கிராமப்புற வயது வந்தவர்களுக்கும் 15 நாட்களுக்குள் வேலைவாய்ப்பு வழங்கப்பட வேண்டும். ஆனால், புதிய சட்டத்தின்படி, ஒன்றிய அரசு தீர்மானிக்கும் பகுதிகளுக்கு மட்டுமே இத்திட்டம் செயல்படுத்தப்படுவதால் மற்ற பகுதிகளில் உள்ளவர்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பித்தாலும் அங்கு வேலை வழங்க இயலாது. எனவே, இத்திட்டத்திற்கு விண்ணப்பிப்பவர்களுக்கு 15 நாட்களுக்குள் வேலை வழங்க வேண்டும் என்ற உரிமை புதிய சட்டத்தில் பறிக்கப்பட்டுள்ளது. அதாவது, தேவைக்கேற்ப செயல்படுத்த வேண்டிய நூறு நாள் வேலைத் திட்டத்தை வரம்புக்குட்பட்ட திட்டமாக சுருக்கி, கிராமப்புற மக்களின் வேலைவாய்ப்பை பறிக்கிறது.

மேலும், புதிய சட்டத்தின்படி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்காக ஒன்றிய அரசால் வழங்கப்பட்ட நிதியின் பயன்பாட்டில் ஏதேனும் புகார்கள் எழுந்தால் மாநிலங்களுக்கு வழங்கப்படும் நிதியை நிறுத்தி வைப்பதற்கான அதிகாரமும் ஒன்றிய அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, மேற்குவங்க மாநிலத்தில் நிதி முறைகேடுகள் நடந்ததாகக் கூறி இத்திட்டத்திற்கான நிதியை மூன்று ஆண்டுகளாக நிறுத்திவைத்து பழிவாங்கி வருகிறது மோடி அரசு. இந்நிலையில், இச்சட்டமானது எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு நிதியை நிறுத்திவைத்து மிரட்டுவதற்கு மோடி அரசிற்கு சட்டப்பூர்வ வாய்ப்பை வழங்குகிறது.

அதுமட்டுமின்றி, புதிய சட்டமானது விவசாய வேலைகள் நடைபெறக்கூடிய பருவங்களில், 60 நாட்கள் வரையில் இத்திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு வழங்குவதை நிறுத்திவைக்க பரிந்துரைக்கிறது. இந்தியாவில் விவசாயப் பணிகள் பல்வேறு பருவங்களில் ஆண்டு முழுவதும் நடைபெறுகின்றன. எனவே, இச்சட்டத்தின் கீழ் மாதக்கணக்கில் வேலை வழங்கப்படாமல் கிராமப்புற மக்கள் வஞ்சிக்கப்படுவர்.

இதனால், கிராம மக்கள் வாழ்வாதாரத்திற்காக ஆதிக்கச்சாதி மற்றும் பண்ணை வர்க்கங்களை சார்ந்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள். மேலும், விவசாயத்தில் இயந்திரங்களின் பயன்பாடு அதிகரித்து வருவதால், அற்பக் கூலிக்கு மக்கள் உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாக்கப்படுவார்கள். “நூறு நாள் வேலைத்திட்டத்தால் மக்கள் சோம்பேறியாக்கப்படுகின்றனர், விவசாயத்திற்கு ஆட்கள் கிடைப்பதில்லை” என்று தமிழ்நாட்டில் சீமான் வெறுப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்ததன் நோக்கம் இதுவே.

இவ்வாறு, புதிய சட்டத்தில் உள்ள சரத்துகள் நூறு நாள் வேலைத் திட்டத்தில் உள்ள மாநில அரசுகளின் அதிகாரங்களைப் பறித்து, அதனை படிப்படியாக சட்டமுறைக்குட்பட்ட வகையிலேயே ஒழித்துக்கட்டுவதையே நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஆனால், பா.ஜ.க. கும்பலானது புதிய சட்டத்தில் வேலை நாட்கள் 125-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதை மட்டும் ஊதிப்பெருக்கி பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறது. ஆனால், 2018-19 நிதியாண்டில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை பெற்றவர்களில் 7.4 சதவிகிதம் பேருக்கு மட்டுமே 100 நாட்களுக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது. உண்மை நிலை இவ்வாறிருக்க, பொய் பிரச்சாரங்களின் மூலம்  இச்சட்டத்தின் பாசிச நோக்கங்களை மறைக்க முயற்சிக்கிறது பா.ஜ.க. கும்பல்.

மேலும், தன்னுடைய 11 ஆண்டுகால பாசிச ஆட்சிக்காலத்திலும் ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை ஒழிக்கும் வகையிலேயே மோடி அரசு செயல்பட்டு வந்துள்ளது. இத்திட்டத்தில் ஊழல் மற்றும் முறைகேடுகளை தடுப்பதாகக் கூறிக்கொண்டு “கட்டாயமாக்கப்பட்ட ஆதார் அடிப்படையிலான கட்டண முறை” (ABPS) மற்றும் ஆன்லைனில் வருகையை நிர்வகிப்பதற்கான “தேசிய மொபைல் கண்காணிப்பு அமைப்பு” (NMMS) ஆகிய டிஜிட்டல்மயமாக்க முறைகளை திணித்துள்ளது. இதன் மூலம் இத்திட்டத்தை அணுகுவதை கடினமாக்கியும், கிராமப்புற மக்களை இத்திட்டத்திலிருந்து வெளியேற்றியும் வருகிறது.

மேலும், ஆண்டுதோறும் இத்திட்டத்திற்கு சொற்ப நிதியை மட்டுமே ஒதுக்கும் மோடி அரசு அதனையும் முறையாக வழங்காமல் இழுத்தடிக்கிறது. இதன் மூலம் மக்களை விரக்தியடையச் செய்து இத்திட்டத்திலிருந்து விரட்டியடிக்கிறது.

இந்த ஊரக வேலைவாய்ப்பு திட்டமானது கொரோனா பெருந்தொற்று காலத்தில் கிராமப்புற மக்களுக்கு பொருளாதார அரணாக அமைந்ததாக முதலாளித்துவப் பத்திரிகைகளே தெரிவிக்கின்றன. மேலும், இத்திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பு பெறுபவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்களாகவும் சுமார் 40 சதவிகிதம் பேர் பட்டியலின மற்றும் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர்களாகவுமே உள்ளனர்.

குறிப்பாக, 1990-களுக்குப் பிறகு இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட மறுகாலனியாக்கக் கொள்கைகளால் வாழ்வாதாரம் பறிக்கப்பட்ட மக்களின், அரசுக் கட்டமைப்பின் மீதான கோபத்தை தணிப்பதற்காகவே நூறு நாள் வேலைத்திட்டம் அமல்படுத்தப்பட்டது. கிராமப்புற மக்களின் பட்டினிச் சாவுகளைத் தவிர்த்து அவர்கள் ஒருவேளை கஞ்சி குடிப்பதற்காகவாவது இத்திட்டம் உதவிகரமாக இருந்தது.

முதலாளித்துவப் பொருளாதார அறிஞர்கள் உட்பட பலரும் இத்திட்டத்திற்கான வேலை நாட்களையும் ஊதியத்தையும் அதிகரிக்க வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். விவசாயிகளும் இக்கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். நாடாளுமன்ற நிலைக்குழுவும் ஊதிய உயர்வு குறித்து பரிந்துரைத்துள்ளது. ஆனால், புதிய சட்டத்தில் ஒரு நாள் ஊதியமாக ரூ.240 என்ற அற்ப தொகையையே மோடி அரசு நிர்ணயித்துள்ளது.

நாட்டு குடிமக்கள் அனைவருக்கும் கண்ணியமான வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமையாகும். ஆனால், மோடி அரசானது அதற்கு நேர்மாறாகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. பொருளாதாரத்தில் அம்பானி-அதானி போன்ற கார்ப்பரேட் கும்பல்களின் ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்கு அரசின் சேவை மற்றும் நலத்திட்டங்களை கைகழுவ வேண்டும் என்ற மறுகாலனியாக்கக் கொள்கையிலிருந்தே நூறு நாள் வேலைத்திட்டத்தை ஒழித்துக்கட்டி வருகிறது.


சிவராமன்

(புதிய ஜனநாயகம் – ஜனவரி 2026 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஜனவரி, 2011 இதழ் | PDF

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 26, இதழ் 3 | ஜனவரி, 2011 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: ஸ்பெக்ட்ரம்: கொள்ளையே கொள்கை!
  • ஸ்பெக்ட்ரம் வெறும் ஊழல் இல்லை! கார்ப்பரேட் முதலாளிகள் பகற்கொள்ளை!!
  • சுக்ராம் முதல் ராசா வரை… அம்பானி முதல் டாடா வரை… டெலிகாம் ஊழலின் வரலாறு
  • கமாஸ் வெக்ட்ரா ஊதிய ஒப்பந்தம்: தொழிலாளர் வர்க்க ஒற்றுமையின் வெற்றி!
  • தனியார்மயம்: ஊழலை உற்பத்தி செய்யும் சாக்கடை
  • கார்ப்பரேட் கொள்ளைக்கேற்ற அரசின் கொள்கைகள்!
  • ராடியா விவகாரம்: “லாபியிங்” சட்டபூர்வமாகிறது! ஊழல் ஒழிகிறது!!
  • உச்ச நீதிமன்றம்: ஆளும் வர்க்கம் அணைத்துப் போட்ட பீடி!
  • கார்ப்பரேட் கொள்ளை – ஊழல்
    மறைந்துள்ள உண்மைகள்!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram