நெல்லை மாவட்டம் நாங்குநேரி – பெரும்பத்து, இந்திரா காலனியில் நடைபெற்ற சாதிவெறி, கொலைவெறி தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை உரிய நிவாரணம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட எந்த கோரிக்கைகளும் நிறைவேற்றப்படவில்லை.
இதை முன்வைத்து மக்கள் அதிகாரக் கழகம் ஒருங்கிணைப்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழ் புலிகள் கட்சி, திராவிட தமிழர் கட்சி மற்றும் ஜனநாயக சக்திகளுடன் இணைந்து நாங்குநேரி பெரும்பத்து கிராம மக்கள் கோரிக்கையை நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் கீழ்கண்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது.
1.கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட அனைத்து குற்றவாளிகளுக்கும் தண்டனை வழங்கும் வரை ஜாமீன் வழங்கக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறோம்.
2.இந்த கொலை வழக்கில் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளையும், இதனை தூண்டிவிட்ட நபர்களையும் உடனடியாக கைது செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம்.
3.பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அரசு சார்பாக இதுவரை எந்த நிதியுதவியும் வழங்கப்படவில்லை. தாங்கள் அதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.
4.எங்கள் ஊர் பிரதான சாலையில் மின் விளக்கு மற்றும் சி.சி.டி.வி பாதுகாப்பு கேமரா வசதிகள் செய்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
5.கால்நடைகள் எங்களது விவசாய நிலங்களை தொடர்ந்து சேதப்படுத்தி வருகிறது. இதனால் இரு கிராமங்களுக்கும் பிரச்சினை வருகிறது. இதற்கு நிரந்தரமாக நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.
6.எங்கள் கிராமத்தில் குடிநீர் சரியாக வரவில்லை. அதற்கு தேவையான ஆழ்துளைக்கிணறு(போர்) மற்றும் மின் மோட்டார் அமைத்து தரும்படி கேட்டுக்கொள்கிறோம்.
7.எங்கள் ஊருக்கும் மஞ்சங்குளத்திற்க்கும் அடிக்கடி பிரச்சினை வருவதால், எங்களுக்கு தனியாக நியாய விலை கடை அமைத்து தரும்படி கேட்டுக்கொள்கிறோம்.
8.எங்கள் ஊர் தெருக்களில் உள்ள சாலைகள் எல்லாம் பழுதடைந்து உள்ளது. அதை புதுப்பித்து தரும்படி கேட்டுக்கொள்கிறோம்.
9.சாதி மோதல் வராமல் தடுப்பதற்கு தெற்கு நாங்குநேரி பஞ்சாயத்தில் உள்ள மஞ்சங்குளம் கிராமத்தை தனியாக பிரித்து அருகில் உள்ள பஞ்சாயத்தில் மஞ்சங்குளத்தை இணைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
10.நாங்குநேரி சுற்று வட்டாரப் பகுதியில் பல சாதி வன்கொடுமை சம்பவங்கள் நடைபெறுகிறது. வரும் காலங்களில் இத்தகைய சம்பவங்கள் நடைபெறாதாவாறு இதற்கு காரணமானவர்களின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.
11.எங்கள் ஊரில் தற்போது உள்ள புறக்காவல் நிலையத்தை நிரந்தரமாக ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பதிவு
மக்கள் அதிகாரக் கழகம்,
நெல்லை தூத்துக்குடி மாவட்டங்கள்.
9385353605
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











