Thursday, May 15, 2025
முகப்பு பதிவு பக்கம் 102

ஒடிசா ரயில் விபத்து – பொய்ப் பிரச்சாரத்தை கட்டவிழ்த்துவிடும் காவி வானரப் படைகள்!

டந்த ஜூன் 2 ஆம் தேதி, ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பாஹாநகா பஜார் ரயில் நிலையம் அருகே மாலை 6.30 மணி அளவில் மூன்று ரயில்கள் ஒன்றோடொன்று மோதிக் கொண்டன. ஒன்று சரக்கு ரயில். மற்ற இரண்டும் பயணிகள் ரயில். இதுவரை அரசுத் தரவுகளின்படி 288 பேர் உயிரிழந்துள்ளனர்; ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த நூற்றாண்டில் இது ஒரு கோரமான ரயில் விபத்து ஆகும்.

ஒடிசா ரயில் விபத்து நடந்த இடத்தில் உடல்கள் நசுங்கி, சிதறிக் கிடக்கும் கொடூரத்தை காணும் போது நம் நெஞ்சு கணக்கிறது. விபத்து ஏற்படுத்தி இருக்கும் தாக்கத்தில் இருந்து நாட்டு மக்கள் இன்னும் மீண்டபாடில்லை. சடலங்களை மரபணு பரிசோதனை மூலம் தான் அடையாளம் கண்டு உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற அவலநிலையே நிலவுகிறது. இதுவரை 205 சடலங்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த கோர விபத்து மோடி அரசின் ஒன்பது ஆண்டு கால ஆட்சியில் இரயில்வே துறை திட்டமிட்டு சீரழிக்கப்பட்டதும், தீவிரமாக தனியார்மயக் கொள்கை புகுத்தப்பட்டதன் விளைவே ஆகும்.

படிக்க : முசாஃபர்நகர் கலவரம்: “எனது போராட்டம் இன்னும் ஓயவில்லை!”

ரயில் விபத்துகளைத் தடுக்கக்கூடிய “கவச்” (கவசம்) தொழில்நுட்பம் இரண்டு சதவிகித ரயில் பாதைகளில் மட்டும் பொருத்தப்பட்டுள்ளதும்; சிக்னல் மற்றும் தடம் மாற்றும் மின்னணு அமைப்பு முறையில் (எலக்ட்ரானிக் இண்டர்லாக்கிங் சிஸ்டம்) உள்ள குறைபாடுகள் குறித்து மூன்று மாதங்களுக்கு முன்பே ரயில்வே தெற்கு மண்டல அதிகாரி எச்சரித்தும் அதை ரயில்வே துறை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாததும்; 3.12 இலட்சம் ஊழியர் பணியிடங்கள் காலியாக இருப்பதும்; ரயில்வே துறைக்கு ஒதுக்கும் நிதி படிப்படியாக குறைக்கப்பட்டு வருவதும் அதற்கான சான்றுகளாகும்.

ரயில்வே துறை திட்டமிட்டு சீரழிக்கப்பட்டதை காங்கிரஸ், சிபிஎம் போன்ற எதிர்க்கட்சிகளே பிரச்சாரம் செய்து வருகின்றன. இதன் மூலம் மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு நாறி வருகிறது மோடி கும்பல். ஹிண்டன்பர்க் அறிக்கை, பிபிசி ஆவணப்படம், கர்நாடக தேர்தல் தோல்வி, நாடாளுமன்ற புதிய கட்டடத் திறப்பை எதிர்க்கட்சிகள் புறக்கணித்து இருப்பது, மணிப்பூர் கலவரம் ஆகியவற்றைத் தொடர்ந்து இந்த ரயில் விபத்தினாலும் மோடி பிம்பம் சரிந்து வருகிறது

ரயில் விபத்திற்கு பொறுப்பேற்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதற்கு எதிர்வினையாக மோடி கும்பல், அரசியல் ஆதாயம் தேடுவதாக எதிர்க்கட்சிகளை குற்றம் சாட்டியுள்ளது. மேலும் ஜனநாயக சக்திகள் பலரும் மோடி அரசை சமூக ஊடகங்களில் விமர்சித்து வருகின்றனர். துயரத்தில் அரசியல் செய்யாதீர்கள் என பா.ஜ.க-வை விமர்சிக்கும் ஜனநாயக சக்திகளுக்கு காவிகள் அறிவுரை வழங்கி வருகின்றனர்.

மோடி கும்பல் மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு நாறி வருவதை தடுப்பதற்காக சமூக ஊடகங்களில் பொய்ப் பிரச்சாரங்களை கட்டவிழ்த்து விட்டுள்ளது காவிக் கும்பல். “ரயில் ஜிகாத்” என்ற பெயரில் ரயில் விபத்திற்கு முஸ்லிம்களை குற்றவாளிகளாக சித்தரிக்கும் நயவஞ்சக பிரச்சாரங்களை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன சங்கி வானரப் படைகள்.

தி ரேண்டம் இந்தியன் (The Random Indian) என்ற டிவிட்டர் பக்கம் விபத்து நடந்து இடத்திற்கு அருகில் உள்ள வெள்ளைக் கட்டிடத்தை நோக்கி அம்புக்குறியிட்டு காட்டி “நேற்று வெள்ளிக்கிழமை” என்று பதிவிட்டு இருந்தது. அதாவது வெள்ளைக் கட்டிடத்தை மசூதி என்று கூறுகிறது; நேற்று வெள்ளிக் கிழமை என்று கூறுவதன் மூலம் வெள்ளிக்கிழமை முஸ்லிம்கள் கட்டாயம் தொழுகைக்கு வந்து இருப்பார்கள் என்பதை நமக்கு உணர்த்துகிறது. இதன் மூலம் இந்த ரயில் விபத்திற்கு முஸ்லிம்கள் தான் காரணம் என்று மறைமுகமாக கூறுகிறது.

இந்த பதிவு டிவிட்டரில் வைரலாகி 40 லட்சம் பார்வைகளையும் 4,500 மறுபதிவுகளையும் பெற்றது. மேலும் மற்றொரு பதிவில் விபத்து நடந்த பாலசோர் பகுதி என்பது சட்டவிரோதமாக குடியேறிய ரோங்கியா முஸ்லிம்களின் மையமாக உள்ளது என்றும் பதிவிட்டு இருந்தது. இப்பதிவும் வைரலாகியது. இந்த நச்சுப் பிரச்சாரத்தை உண்மை சரிபார்ப்பு இணைய தளமான “ஆல்ட் நீயூஸ்” அம்பலப்படுத்தியது. வெள்ளைக் கட்டிடம் கிருஷ்ணா உணர்வுக்கான சர்வதேச சங்கம் (Iskcon) நடத்தும் ஜெயின் கோயில் என்பதை கண்டறிந்து வெளியிட்டது.

ஆனால் “ரயில் ஜிகாத்”, “நாசவேலை”, “சதி” என சங்கி வானரப் படைகள் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். ரயில்வே சிக்னலை தவறாக கொடுத்தது ஷாரிப் என்ற முஸ்லிம் இளைஞர் என்ற பொய்ச் செய்தியையும் சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றனர்.

மேலும் சங்கிக் கும்பல், ரயில் விபத்து குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்க வேண்டும் என்றும்; “ஸ்டாப்ரிசர்வேஷன்இன்ரயில்வே” (#Stopreservationinrailway) என்ற ஹேஷ்டேக் பெயரில் ரயில் விபத்திற்கு இடஒதுக்கீடு மூலம் ரயில்வேயில் பணிபுரியும் தகுதியற்ற நபர்கள் தான் காரணம் என்றும்; இதுபோன்ற விபத்துகளை தவிர்க்க வேண்டும் ரயில்வேயை தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் பிரச்சாரம் செய்துவருகிறது.

மேற்கூறிய நச்சுப் பிரச்சாரத்தில் குறிவைத்து தாக்கப்படுவது முஸ்லிம் மக்கள்தான். அதற்கு உதவி செய்யும் விதமாக தான் ரயில்வே அமைச்சரின் கூற்றும் அமைந்துள்ளது. ரயில் விபத்துக்கு சிக்னல் மற்றும் தடம் மாற்றும் மின்னணு அமைப்பு முறையில் செய்யப்பட்ட மாற்றமே காரணம் என்றும் இதன் பின்னணியில் சதி இருக்கலாம் என்று கூறியுள்ளார். அந்த கோணத்தில்தான் போலீசின் முதல் தகவல் அறிக்கையும், சிபிஐ விசாரணையும் அமைந்துள்ளது.

ஒருபுறம் முஸ்லிம் மக்களை குற்றவாளிகளாக சித்தரிக்க முயலும் பிரச்சாரம் என்றால், மறுபுறம் ரயில்வே அமைச்சர் பதவி விலக வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கு எதிராக “ஸ்டாண்ட்வித்அஸ்வினிவைஷ்ணவ்” (#Standwithashwinivaishnaw) என்ற ஹேஷ்டேக்கில் ரயில்வே அமைச்சர் மற்றும் மோடி அரசாங்கத்தின் துதிபாடி வருகிறது காவிக் கும்பல்.

அந்த பதிவுகள் வைஷ்ணவின் கீழ் இரயில்வே துறையின் கடந்த கால சாதனைகளை எடுத்துக்காட்டுகின்றன. விபத்து நடந்த இடத்தில் இருந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டதற்காக அவரை பாராட்டுகின்றன. விபத்தால் சேதமடைந்த ரயில் தண்டவாளங்கள் 51 மணி நேரத்திற்குள் மறுசீரமைக்கப்பட்டு ரயில்கள் மீண்டும் இயக்கப்பட்டதாக பெருமை கொள்கின்றன. கடந்த காங்கிரஸ் ஆட்சியில் ரயில் விபத்துகளுக்கு பொறுப்பேற்று பதவி விலகிய அமைச்சர்களை கேலி செய்கின்றன.

காலங்காலமாக பொய்ப் பிரச்சாரத்தின் மூலம் முஸ்லிம் மக்களை எதிரிகளாகக் காட்டுவதையும், திட்டமிட்டு கலவரங்களை தூண்டுவதையும் ஒரு வழிமுறையாக கையாண்டு வருகின்றனர், காவி பாசிஸ்டுகள். இப்பிரச்சாரங்கள் பிரச்சனையின் உண்மையான காரணத்தை மூடி மறைப்பதோடு மட்டுமல்லாமல், முஸ்லிம் மதவெறியை தூண்டி இந்து மக்களை தன் பக்கம் திரட்டிக் கொள்வதற்கு காவிக் கும்பலுக்கு வழியேற்படுத்தி கொடுக்கிறது.

படிக்க : புதிய நாடாளுமன்ற கட்டடம்: இந்து ராஷ்டிரத்தின் மடம்!

கொரோனா ஊரடங்கு காலத்தில், கொரோனா நுண்கிருமியை தப்லீக் ஜமாத்தை சேர்ந்த முஸ்லிம் மக்கள் பரப்பியதாக மேற்கொள்ளப்பட்ட காவிகளின் நச்சுப் பிரச்சாரம் அதற்கு சான்றாகும்.

இத்தகைய நச்சுப் பிரச்சாரங்கள் தமிழக மக்கள் மத்தியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஏனென்றால் தமிழகத்தில் உள்ள புரட்சிகர, முற்போக்கு, ஜனநாயக சக்திகளால் அவை முறியடிக்கப்படுகின்றன. ஆனால், வட இந்திய மாநிலங்களில் உள்ள மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகளே அதிகம் உள்ளன.

எனவே சங்கிகளின் திட்டமிட்ட பொய்ப்பிரச்சாரங்களை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி முறியடிக்க வேண்டியது மோடி- அமித்ஷா பாசிசக் கும்பலை முறியடிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட ஒவ்வொருவரின் கடமை ஆகும். காவிகளின் கோட்டைகளான உத்தரப்பிரதேசம், குஜராத் போன்ற மாநில மக்களை சென்றடையும் வகையில் அப்பிரச்சாரங்கள் அமைய வேண்டும்.

குயிலி

ஆளுநர் ஆர்.என்.ரவி திமிர் பேச்சு | தோழர் அமிர்தா

ஆளுநர் ஆர்.என்.ரவி திமிர் பேச்சு | தோழர் அமிர்தா

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

பாசிசத்தை வீழ்த்த ஜனநாயக சக்திகளே ஒன்றுபடுவோம் வாருங்கள்! | தோழர் ஆ.கா.சிவா

பாசிசத்தை வீழ்த்த ஜனநாயக சக்திகளே ஒன்றுபடுவோம் வாருங்கள்! | தோழர் ஆ.கா.சிவா

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

‘வளர்ச்சி’யின் பெயரால் குறி வைக்கப்படும் விவசாய நிலங்கள்!

டலூர் மாவட்டத்தில் என்.எல்.சி விரிவாக்கப் பணிகளுக்காக, பாலியப்பட்டு மற்றும்  உத்தனப்பள்ளியில் சிப்காட் அமைக்க, பரந்தூரில் விமான நிலையம் அமைக்க என தொடர்ந்து விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது தி.மு.க அரசு.  இதன் தொடர்ச்சியாக நாமக்கல் மாவட்டம் வளையப்பட்டி, நா.புதுப்பட்டி, நா.அரூர், பரளி, லத்துவாடி உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 2500 ஏக்கர் நிலம்,சிப்காட் அமைக்க கையகப்படுத்தப்பட இருக்கிறது என்ற செய்தி வெளியாகியுள்ளது. சிப்காட்டிற்காக இப்பகுதியில் உள்ள புறம்போக்கு நிலங்கள் மற்றும் விவசாய நிலங்களைக் கையகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இது அப்பகுதி சிறுகுறு விவசாயிகளைக் கொதிப்படையச் செய்திருக்கிறது.

கடந்த 2021 சட்டமன்றக் கூட்டத்தொடரில், அறிவிக்கப்பட்டதுதான் இந்த சிப்காட். தொடக்கத்தில்,  மொத்த நிலத்தில் 79 சதவீதம் புறம்போக்கு நிலம் என்றும், 21 சதவீதம் பட்டா நிலங்களை எடுப்பதாகவும்  அறிவிக்கப்பட்டிருந்தது.  தற்போது, தி.மு.க அரசின் இரண்டாண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில், 2500 ஏக்கரில் சிப்காட் அமைக்கப்படும் என்று எம்.பி பேசியது விவசாயிகளை உடனடியாகப் போராடத் தூண்டியிருக்கிறது.

படிக்க : விழுப்புரம் – மேல்பாதி திரௌபதி அம்மன் கோயிலை பூட்டாதே! || மக்கள் அதிகாரம் பத்திரிகை செய்தி

“சிப்காட் அமைக்கப்படும் இப்பகுதியானது தொடர்ச்சியாக பலன் தரும் விவசாயப் பகுதியாகும். வெங்காயம், காய்கறிகள், சோளம், கரும்பு, மக்காச் சோளம், மரவள்ளிக் கிழங்கு போன்றவை இங்கு விளைகின்றன. இங்கு விளையும் சின்ன வெங்காயத்தை பல்லடம், மைசூர் வரை விற்பனைக்கு அனுப்பி வருகிறோம். விவசாயம் மட்டுமல்லாது, ஆடு, மாடு வளர்ப்பதும் முக்கிய தொழிலாக இருக்கிறது. எங்கள் பகுதியை ஒட்டியியிருக்கும் கரடும், புறம்போக்கு நிலங்களும்தான் ஆடு, மாடுகளுக்கான மேய்ச்சல் பகுதியாக இருக்கிறது. மேலும், இக்கரட்டை நம்பிதான் எங்களது குடிநீர் ஆதாரமும் இருக்கிறது. ஏரி, சுனைகள்  உள்ள இப்பகுதியில்தான் சிப்காட் அமைய இருக்கிறது.  ஏரி, சுனைகள், கரட்டையும் உள்ளடக்கி சிப்காட் அமைத்துவிட்டால், பல குக்கிராமங்களின் வாழ்வாதாரமும், குடிநீர் ஆதாரமும் அழிக்கப்படும் என்பதால்தான் சிப்காட் அமைக்க வேண்டாம் என்கிறோம்” என்கிறார் சிப்காட் எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் திரு.ராம்குமார்.

மேலும்,  “ஏற்கனவே சிப்காட்டுகள் அமைந்த எந்தப் பகுதியிலும் மக்களுக்கு நன்மை கிடைக்கவில்லை. சிப்காட்டில் அமைக்கப்படும் ஆலைகள் லாப நோக்கத்திற்காக மட்டுமே இயங்கும் என்பதால் சுற்றுச்சூழல் பாதிப்புகள்தான் மக்களுக்கு மிஞ்சும்.  வேலைக்கும் வெளிமாநிலத் தொழிலாளர்களைத்தான் வேலைக்கு எடுக்க வாய்ப்பிருக்கிறது. ஆகையால் இங்கு சிப்காட் அமைப்பதால் எந்தப் பயனும் எங்களுக்கு இல்லை.  அதனால்தான் சிப்காட் அமைப்பதற்கு எதிராக தொடர்ச்சியாக  மக்களும், பல்வேறு கட்சிகளும் போராடி வருகிறோம். எங்களின் தொடர்ச்சியான, உறுதியான போராட்டத்தின் விளைவாகத்தான் வளையப்பட்டி ஊராட்சியில் சிப்காட் அமைப்பதற்கு எதிராகத் தீர்மானம் போடப்பட்டிருக்கிறது. அதேசமயம், நா.புதுப்பட்டி ஊராட்சியில் அத்தீர்மானம் போடப்படவில்லை” என்கிறார்.

“இங்கிருக்கும் நிலத்தை, ஒவ்வொரு வரப்பாய் செதுக்கி விளைநிலங்களாக மாற்றியிருக்கிறோம். வெங்காயம், மரவள்ளி போன்றவை பயிரிடுவதால் ஓரளவு கஞ்சி குடிக்கிறோம். தற்போது அதையும் கெடுப்பதற்காக சிப்காட் வருகிறது.  எனக்கு 60 வயதாகிறது. மூன்று ஏக்கர் நிலத்தை வைத்துதான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த நிலத்தை விட்டுட்டு போகணும்னா எங்க போவோம்? நிலத்திற்கு அரசு கொடுக்கிற காசை வைத்து என்ன செய்ய முடியும்? அந்தப் பணத்தை வைத்து வேறு நிலம் வாங்க முடியுமா? 60 வயதுக்கு மேல் என்ன செய்ய முடியும்? எங்களால் முடிந்தவரை போராடுகிறோம்” என்று வேதனையுடன் பேசுகிறார் விவசாயி  ஒருவர்.

ஏற்கனவே,  விவசாய உள்ளீட்டுப் பொருட்களின் விலையேற்றம், விளைபொருட்களுக்கு  உரிய விலை கிடைக்காமை, நீர்ப்பற்றாக்குறை ஆகியவற்றால் குற்றுயிரும், குலையுயிருமாக இருக்கும் விவசாயத்தையும், விவசாயிகளையும்,  ‘வளர்ச்சி’ என்ற பெயரில் ஒழித்துக் கட்டத் துடிக்கின்றன மத்திய, மாநில அரசுகள். விவசாய நிலங்களை சிப்காட் என்ற பெயரில் கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்த்து வருகின்றன.

தி.மு.க அரசால் கடந்த ஏப்ரல் மாதம் கொண்டு வரப்பட்ட நில ஒருங்கிணப்பு (சிறப்புத் திடங்களுக்கான) சட்டம் 2023, விவசாய நிலங்களைக் கார்ப்பரேட்டுகளுக்குத் தாரை வார்ப்பதற்கான ஒரு சட்டப்பூர்வ ஏற்பாடாகும். அரசின் பல்வேறு துறைகளின் கீழ் உள்ள அரசு நிலங்களையும், அந்நிலங்களில் உள்ள நீர்நிலைகளையும் சேர்த்து ஒருங்கிணைத்து கையகப்படுத்திக் கொள்வதற்கு வழிவகுக்கிறது இச்சட்டம். 250 ஏக்கருக்கு மேல்  தேவைப்படும் திட்டங்களுக்கு இச்சட்டம் பொருந்தும்.

இச்சட்டத்தின்படி, வளையப்பட்டி, நா. புதுப்பட்டி , பரளி, லத்துவாடி பகுதிகளில் அமையவுள்ள சிப்காட் சிறப்புத் திட்டமாக அறிவிக்கப்பட்டு விவசாய நிலங்களும், புறம்போக்கு நிலங்களும், அதில் உள்ள நீர்நிலைகளும் கார்ப்பரேட்டுகளுக்குத் தாரை வார்க்கப்படும் வாய்ப்பை மறுக்க முடியாது. அதேசயம், ஏற்கனவே, நாமக்கல் மாவட்டம் வேட்டாம்பாடி பகுதியில், 78 நிறுவனங்களுக்கென கையகப்படுத்தப்பட்ட நிலமே புதர்மண்டிக் கிடக்கிறது. மேலும், இதே மாவட்டம் ராசாம்பாளையம் பகுதியில், கிட்டத்தட்ட 37 ஏக்கர் நிலத்தில் சிட்கோ அமைப்பதற்கான அறிவிப்பை கடந்த 2022 ஆம் ஆண்டு  தமிழக முதல்வர் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. இங்கும் எந்த முன்னேற்றமும் இல்லை.

படிக்க : ஒடுக்கப்படும் மல்யுத்த வீரர்கள் போரட்டம் | ஜனநாயகம் எங்கே இருக்கு? | தோழர் வெற்றிவேல் செழியன்

ஏற்கனவே கையகப்படுத்தப்பட்டநிலங்களே புதர் மண்டிக் கிடக்கின்ற சூழலில், சிப்காட்  என்ற பெயரில் என்ன நிறுவனம் அமைக்கப்படுகிறது என்று அறிவிக்காமலும், பாதிக்கப்படும் பகுதி மக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டங்களை நடத்தாமலும் நில அளவீடு செய்யப்படுவதானது ‘சமூக நீதி’ பேசுகிற தி.மு.க அரசின் ஜனநாயக விரோதமான சர்வாதிகார நடவடிக்கையாகும். ‘வளர்ச்சி’ என்ற பெயரில், விவசாயத்தை ஒழித்துக் கட்டி, விவசாய நிலங்களைக் கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்ப்பதை எதிர்ப்பதும், போராடும் விவசாயிகளுக்கு துணை நிற்பதும் நம் அனைவரின் கடமையாகும்.

அதேசமயம், மக்களின் வாழ்வாதாரத்திற்கான போராட்டங்களையும் – போராடும் மக்களையும், நாட்டிற்கு எதிரானவர்களாகவும், வளர்ச்சிக்கு எதிரானவர்களாகவும் இழிவுபடுத்துகிற பா.ஜ.க வும், அதன் அடிவருடியான அ.தி.மு.க-வும், வருகின்ற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் ஓட்டு வாங்குவதற்காகவும், தி.மு.க எதிர்ப்பு என்ற வகையிலும், இப்பகுதி மக்களின் சிப்காட் எதிர்ப்புப் போராட்டத்தை ஆதரிக்கின்றன. எனவே தங்களின் வாழ்வாதாரத்திற்காக போராடும் மக்கள் இக்கார்ப்பரேட் சேவைக் கட்சிகளிடம் எச்சரிக்கையாக இருப்பதும், தங்களது நியாயமான போராட்டத்திற்காக இதர உழைக்கும் மக்களின் ஆதரவைத் திரட்டுவதும் அத்தியாவசியமானதாகும்.

வாகை சூடி

விழுப்புரம் – மேல்பாதி திரௌபதி அம்மன் கோயிலை பூட்டாதே! || மக்கள் அதிகாரம் பத்திரிகை செய்தி

08.06.2023

விழுப்புரம் – மேல்பாதி திரௌபதி அம்மன் கோயிலை பூட்டாதே!
தாழ்த்தப்பட்ட மக்களின் வழிபாட்டு உரிமையை நிலைநாட்டு!

தமிழ்நாடு அரசே!

தடுக்கும் ஆதிக்க சாதி வெறியர்களை கைது செய்! ஊருக்குள் நுழைய விடாதே!
தமிழ்நாடு முழுவதும் அனைத்து கோயில்களிலும் தாழ்த்தப்பட்ட மக்களின் வழிபாட்டு உரிமையை நிலைநாட்டு!

பத்திரிகை செய்தி

விழுப்புரம் மாவட்டம், கோலியனூர் அடுத்த தர்மராஜா திரவுபதி அம்மன் கோயில்  1978 ஆம் ஆண்டு முதல் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தக் கோயிலுக்கான வரியை தாழ்த்தப்பட்ட மக்கள் உட்பட அனைத்து சாதியினரிடமும் வசூலிக்கிறது ஆதிக்க சாதியினரிடம் கட்டுப்பாட்டில் உள்ள ஊர் நிர்வாகம்.

இந்தக் கோயில் தங்களுக்கு சொந்தம் என்று வன்னியர் சாதியினர் தரப்பில் தொடுக்கப்பட்ட வழக்கில், இந்தக் கோயில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமானது என்று தீர்ப்பு வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம்.அதற்குப் பிறகும் தாழ்த்தப்பட்ட மக்கள் திரௌபதி அம்மன் கோயில் கோயிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை.

படிக்க : மாநாட்டுத் தீர்மானங்கள் | அச்சுப் பிரதி

கடந்த ஏப்ரல் ஏழாம் தேதி திரௌபதி அம்மன் கோயில் திருவிழாவின்போது கூட்ட நெரிசல் காரணமாக தவறுதலாக  தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த இருவர் கோயிலுக்குள் சென்று விட்டனர் .இதனைக் காரணமாக வைத்துக் கொண்டு தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆதிக்க சாதியினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தாக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் ஆம்புலென்ஸில் ஏறிய போதும் , ஆம்புலன்ஸ் செல்ல விடாமல் ஆம்புலன்ஸ் – இன்உள்ளே புகுந்து அந்த மக்களை ஆதிக்க சாதி வெறியர்கள் தாக்கினர்.

தாழ்த்தப்பட்ட மக்களை தாக்கிய ஆதிக்க சாதி வெறியர்கள் கைது செய்யப்பட்டார்கள்.

இதன் தொடர்ச்சியாகவே தாழ்த்தப்பட்ட மக்களின் ஆலய வழிபாட்டு உரிமையை இன்று வரை ஆதிக்க சாதி வெறியர்கள் மறுக்கின்றனர் .இப் பிரச்சனை தொடர்பான பேச்சுவார்த்தையில் சுமூகத் தீர்வு ஏற்படாததால் விழுப்புரம் மாவட்டம் நிர்வாகமானது தர்மராஜா திரௌபதி கோயிலுக்கு சீல் வைத்துள்ளது.

கோயிலுக்கு சீல் வைப்பதன் மூலம் இப் பிரச்சனையை ஒருபோதும் தீர்க்க முடியாது. தாழ்த்தப்பட்ட மக்களின் கோயில் வழிபாட்டு உரிமையை தமிழ்நாடு அரசு முன் நின்று நடத்த வேண்டும் என்றும்  தாழ்த்தப்பட்ட மக்களின் வழிபாட்டு உரிமையை தடுக்கக்கூடிய ஆதிக்க சாதி வெறியர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் ஊருக்கு  நுழைவும் தடை விதிக்க வேண்டும் என்றும் மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

மேலும் தமிழ்நாடு முழுவதும் இதேபோன்று தாழ்த்தப்பட்ட மக்களின் வழிபாட்டு உரிமையை மறுக்கக்கூடிய அனைத்து கோயில்களும் உடனே கணக்கெடுக்கப்பட வேண்டும்.  அந்தக் கோயில்களில் தமிழ்நாடு அரசே தாழ்த்தப்பட்ட மக்களின் வழிபாட்டு உரிமையை முன்நின்று நடத்த வேண்டும் என்றும் மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.


தோழமையுடன்
தோழர் சி.வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை
9962366321

ஒடுக்கப்படும் மல்யுத்த வீரர்கள் போரட்டம் | ஜனநாயகம் எங்கே இருக்கு? | தோழர் வெற்றிவேல் செழியன்

ஒடுக்கப்படும் மல்யுத்த வீரர்கள் போரட்டம் | ஜனநாயகம் எங்கே இருக்கு?
தோழர் வெற்றிவேல் செழியன்

ஜூன் 5-ஆம் தேதிசென்னையில் நடைபெற்ற SKM ஆர்ப்பாட்டத்தின் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் வெற்றிவேல்செழியன் அவர்கள் ஆற்றிய உரை!

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!

முசாஃபர்நகர் கலவரம்: “எனது போராட்டம் இன்னும் ஓயவில்லை!”

2013 ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசம், முசாஃபர்நகரில் இந்துத்துவக் குண்டர்களால் நடத்தப்பட்ட கலவரத்தில் 60-க்கும் மேற்பட்ட முஸ்லீம் மக்கள் கொல்லப்பட்டனர். இஸ்லாமிய மக்கள் பலர் உயிருக்கு அஞ்சி தங்களது பகுதிகளை விட்டே வெளியேறுமளவுக்கு இஸ்லாமிய மக்கள் கடுமையாகத் தாக்குதலுக்குள்ளானார்கள். இக்கலவரத்தின்போது இஸ்லாமியப் பெண்கள் பலர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானார்கள். பாலியல் குற்றவாளிகளுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. குற்றவாளிகளில் ஒருவர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில், தற்போது இரண்டு பேருக்கு 20 ஆண்டுக்கால சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இவ்வழக்குக்காக எட்டு ஆண்டுகளாக விடாப்பிடியான போராட்டத்தில் ஈடுபட்டுவந்த பாலியல் வன்கொடுமைக்குள்ளான 35 வயதான அஃப்ரீன், குற்றவாளிகளுக்கு எதிரான தீர்ப்பு வழங்குவதற்கு முன்பிருந்ததைவிட தற்போது பெரும் அச்சத்திற்குள்ளாகியிருப்பதாகக் கூறுகிறார். முன்பின் தெரியாதவர்களும் வழக்கு சம்பந்தமாகத் தனது கணவருக்கு போன் செய்து “அந்த வழக்கில் உனது மனைவி இருக்கிறார் என்று ஏன் சொல்லவில்லை” எனக் கேள்வி எழுப்புவதாகக் கூறுகிறார் அஃப்ரீன். இதனால் அவரது கணவர் சில நாட்கள் போனை அணைத்து வைத்திருக்கிறார்.

பாலியல் வன்கொடுமைக்குப் பிறகு தான் சந்தித்த இன்னல்களையும் அதற்கெதிரான போராட்டத்தையும் விவரிக்கிறார் அஃப்ரீன்.

“செப்டம்பர் 8, 2013 ஆம் ஆண்டு, இரு மகன்களுக்கும் உடல்நிலை சரியில்லாததால் எனது கணவர் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருந்த நேரம். நான் எனது கைக்குழந்தையுடன் வீட்டில் இருந்தேன். அப்போது வீட்டிற்குள் நுழைந்த இந்துத்துவ குண்டர்கள் எனது குழந்தையைக் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டி ஒருவர் பின் ஒருவராக என்னை பாலியல் வன்கொடுமை செய்தனர்”.


படிக்க: பாஜகவினர் மீதான முசாஃபர்நகர் கலவர வழக்கை வாபஸ் வாங்க யோகி அரசு முடிவு !


அஃப்ரீனை பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் வேறு யாருமல்ல. அவரது கணவரின் தையல்கடைக்கு வாடிக்கையாக வருபவர்கள்; அஃப்ரீனுக்கு நன்கு தெரிந்தவர்கள்தான். அக்கொடூரமான சம்பவத்திற்குப் பிறகு அவரது வீடு தீக்கிரையாக்கப்பட்டது உடைமைகள் அனைத்தும் சூறையாடப்பட்டன. வீட்டை இழந்த அவர்கள் கிட்டத்தட்ட 8 மாதங்கள் நிவார முகாமில் தஞ்சமடைந்தனர்.

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பலர் தனக்குத் தனது குடும்பத்தினருக்கு ஆபத்து நேர்ந்துவிடுமோ என்று அஞ்சி, வழக்கைத் தொடரவில்லை. ஆனால் அஃப்ரீன் வழக்கினை தொடர்ந்தார். இச்சூழலில் அஃப்ரீனுக்கு பெரும் துணையாக இருந்தது அவரது கணவர்தான். தனது மனைவிக்கு நியாயம் வேண்டி குற்றவாளிகளுக்கு எதிராகப் புகாரளிக்க போலிஸ் நிலையத்திற்கு அஃப்ரீனின் கணவர் சென்றபோது, ஒரு மாதத்திற்குப் பிறகு புகார் அளிக்க வந்ததாகவும் புகாரில் உண்மைத் தன்மை இல்லை என்றும் கூறி புகாரை எடுக்க மறுத்தது உ.பி போலிசு.

2014 பிப்ரவரி அஃப்ரீனை பாலியல் வன்கொடுமை செய்த மூன்று குற்றவாளிகள் மீது வழக்குப் பதிய போலிசுக்கு உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். அஃப்ரீன் வழக்குத் தொடுத்ததற்குப் பிறகு பாலியல் வன்கொடுமைக்குள்ளான 6 பெண்கள் வழக்கினை தொடர்ந்தார்கள். வழக்குத் தொடுத்த பிறகு, தான் அதிகளவில் அச்சுறுதல்களைச் சந்திக்க வேண்டியதாக இருந்தது என்கிறார் அஃப்ரீன். இவருடன் வழக்குத் தொடுத்த 7 பெண்களும், கொலை மிரட்டல்களால் அப்போதே வழக்கில் இருந்து பின் வாங்கிவிட்டனர்.

பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் கணவர், நாட்டில் அமைதியை நிலைநாட்டக் குற்றவாளிகளுடன் சமரசமாகச் செல்வது அவசியம் எனக் கூறியிருக்கிறார் என்று கூறும் அஃப்ரீன், தான் சிறு வயதில் இருந்து ஒன்றுக்கொன்றாகப் பழகி வந்த அக்கம் பக்கத்தினர், இந்து நண்பர்களாலே வெறுத்தொதுக்கப்பட்டபோதும், வழக்கில் இருந்து பின்வாங்கவில்லை இனியும் பின்வாங்கப் போவதுமில்லை எனத் தெரிவிக்கிறார்.

நெருக்கடிகள் அதிகரித்த போது, அஃப்ரீன் தனது குடும்பத்துடன் 15 கிலோ மீட்டருக்கு அப்பால் சென்று குடிபெயர்ந்துள்ளார். “அங்கும் நிம்மதி இல்லை பலரும் தொந்தரவு செய்வார்கள். அங்கு நான் சகஜமாக இருக்கப் பல வருடங்கள் பிடித்தன. ஆனால் அங்கேயும் தன்னை பின் தொடர்ந்து மிரட்டல் விடுத்தார்கள்” என்கிறார் அஃப்ரீன். இதனால் தனது கணவரின் அன்றாட வாடிக்கையாளர்களையும் இழந்ததாகக் கூறுகிறார் அஃப்ரீன்.


படிக்க: முசாஃபர் நகரில் மோடி – ஆர்.எஸ்.எஸ்-ன் உண்மை முகம்


பின்னர் சமூக செயற்பாட்டாளர்களின் சிலரின் உதவியுடன் அஃப்ரீனும் அவரது கணவரும் டெல்லிக்குக் குடிபெயர்ந்தார்கள். “இங்கு யாருக்கும் என்னைத் தெரியவில்லை” என்று பெருமூச்சுவிடுகிறார் அஃப்ரீன்.

இதுகுறித்து அஃப்ரீனின் வழக்கை மேற்கொண்டுவரும் வழக்கறிஞர், “பாலியல் வழக்குத் தொடுத்த 7 பேரில் இன்றுவரை அஃப்ரீன் மட்டுமே வழக்கில் உறுதியாக நிற்கிறார். மற்றவர்கள் அனைவரும் மிரட்டப்பட்டு வழக்கில் இருந்து பின்வாங்கப்பட்டனர். அஃப்ரீனுக்கும்ம் கொலை மிரட்டல்களால் பல வந்தன. அப்போது ஊரைவிட்டு வெளியேறவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்” என்கிறார் அவர்.

இருப்பினும் டெல்லியில் தனது குடும்பத்தினை பராமரிக்க ஏற்பட்ட நிதி நெருக்கடியால் உத்தரப் பிரதேசத்திற்குத் திரும்பியிருக்கிறார் அஃப்ரீன். “நாங்கள் மீண்டும் எங்கள் சொந்த ஊருக்குச் சென்றபோது மிகுந்த நெருக்கடிக்குள்ளானோம். எனது கணவர் வழக்குக்காக நீதிமன்றத்திற்குச் சென்றபோது பல முறை தாக்கப்பட்டிருக்கிறார். அவர் உயிருடன் திரும்பி வருவாரா என அச்சத்தில் பல நாட்கள் இருந்திருக்கிறேன்” என்கிறார்.

இந்தியாவில் மதக் கலவரங்களின்போது நடக்கும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளைத்தான் அஃப்ரீனின் வழக்கிலும் பிரதிபலித்திருக்கிறது என்கிறார் சமூக உரிமை ஆர்வலர் ஃபரா நக்வி. ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரைத் தாக்கும் சமூகம், தாக்கப்படும் சமூகத்தின் பெண்களை (பாலியல் ரீதியாக) குறிவைக்கிறது என்கிறார்.

இத்தகைய கலவரங்களின் போது அரசாங்கம் குற்றவாளிகளுக்குச் சாதகமாக நடந்து கொள்கிறது எனக் குற்றம் சாட்டும் நக்வி, ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர்மீது திட்டமிட்டு நடத்தப்படுகின்ற வகுப்புவாத வன்முறைகள் அனைத்தும் அரசாங்கத்தின் உதவியில்லாமல் நடந்தேறுவதில்லை; ஆகவேதான் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி கிடைப்பதில் அத்தகைய சிரமங்கள் உள்ளன என்கிறார்.

“பாலியல் வன்கொடுமையில் இருந்து மீண்டவர்களுக்கு விடாப்பிடியான போராட்டமே அவசியம். தற்போது என் தொடர்பாக வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு 20 ஆண்டுக்கால சிறைத் விதிக்கப்பட்டிருக்கிறது எனினும் தண்டனை வழங்கப்பட்ட குற்றவாளிகள் எனக்கும் எனது குழந்தைகளுக்கு எப்போதுமே ஆபத்தானவர்கள். அவர்களுக்கு எதிரான எனது போராட்டம் இன்னும் ஓயவில்லை; தொடரும்! ” என்கிறார் அஃப்ரீன்.


ஆதிலா

புதிய நாடாளுமன்ற கட்டடம்: இந்து ராஷ்டிரத்தின் மடம்!

ர்.எஸ்.எஸ் – பா.ஜ.க சங் பரிவார கும்பல் இந்தியாவின் பல்வேறு வரலாறுகளைத் திரித்து வருகிறது. கோழைகளில் வரலாறுகளையும், புராண புரட்டுகளையும் வரலாற்றுடன் இணைந்து வருகிறது. அதன் உச்சக்கட்டமாக புதிய நாடாளுமன்ற கட்டடமே இந்து ராஷ்டிரத்தின் மடமாகக் கட்டப்பட்டிருக்கிறது. இது பல்வேறு விமர்சனங்களுக்குள்ளாகியுள்ளது.

விடுதலை போராட்டத்தைப் பற்றியும், தியாகிகள் பற்றியும் உருவகப்படுத்தும் எவ்வித பொருட்களும் நாடாளுமன்ற கட்டடத்தில் இல்லை. அங்கு நிறைந்திருக்கும் ஓவியங்கள் சிலைகள் முழுவதும் சங் பரிவாரத்தின் புராண புரட்டுகளாகவே இருக்கிறது. இந்த இந்து ராஷ்டிரத்தின் மடமான புதிய நாடாளுமன்றத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சி.பி.எம் கட்சியின் மக்களவை உறுப்பினர் தோழர் சு.வெங்கடேசன் அவர்கள், நாடாளுமன்ற கட்டடம் பற்றி விவரித்து சன் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியை வினவு வாசகர்களுக்கான பதிவிடுகிறோம்.

நன்றி : சன் நியூஸ்

ஒடிசா இரயில் விபத்து: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட மோடி அரசின் கோமாளித்தனம்

ஒடிசா இரயில் விபத்து: சிபிஜ விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறது மோடி அரசு!

புல்வாமா சர்ஜிக்கல் ஸ்டைர்கை போல ஒடிசா இரயில் விபத்தை பயன்படுத்த முயற்சிக்கும் மோடியின் இந்நடவடிக்கை கோமாளித்தனமாக இருக்கிறது.

குற்றவாளியாக மோடி அரசு பகிரங்கமாக அம்பலமாகியுள்ள நிலையில் இது அவருக்கெதிரான வெறுப்பை அதிகரிக்க மட்டுமே செய்கிறது.

தன் பிம்பம் சரிந்து வருவதை உணராமல், துக்கமான இந்த நேரத்தில் இந்த கோமாளித்தனத்தைக் கண்டு சிரிக்க முடியவில்லை, அருவருப்பாக இருக்கிறது!

நன்றி : புதிய ஜனநாயகம்

ஒடிசா ரயில் விபத்து: உருக்குலைந்த உடல்கள் – மீளமுடியாத துயரம் | படக்கட்டுரை

டந்த வாரம் நிகழ்ந்த ஒடிசா இரயில் விபத்து நாட்டையே உலுக்கியது. மோடி – அமித்ஷா கும்பலின் இரயில்வே துறையினை தனியார்மயமாக்கும் நடவடிக்கையாலும் அலட்சியத்தாலும் எண்ணிலடங்கா உயிர்கள் காவு வாங்கப்பட்டன. மிக கோரமாக நடந்த இவ்விபத்தில் 288 மேற்பட்டோர் உயிரிழந்தனர். விபத்தில் சிக்கி தங்களது கை, கால்களை இழந்தவர்கள், விபத்தில் இருந்து மீண்டாலும் அதன் அதிர்ச்சியில் இருந்து மீளமுடியாமல் ஆயிரக்கணக்கானோர் தவிக்கின்றனர்.

உயிரிழந்தவர்களையும் படுகாயமடைந்தவர்களையும் அவர்களது உறவினர்கள், நண்பர்கள் தேடி அலையும் மிக மோசமான நிலை. உயிரிழந்தவர்களின் உடல்களை அவர்களது உறவினர்களே அடையாளம் காண முடியாத அளவுக்கு உடல்கள் நசுங்கி போயுள்ளன.

உயிரிழப்புகள் அதிகமாக நிகழ்ந்தது முன்பதிவில்லாத பெட்டிகளில்தான். மொழித் தெரியாத மாநிலங்களுக்கு பிழைப்புத் தேடி சென்றவர்களை இழந்து பல ஏழை குடும்பங்கள் மீள முடியாத பெருந்துயரத்திற்கு தள்ளப்பட்டுள்ளன. பீகாரில் இருந்து சென்னைக்கு கூலி வேலைத்தேடி சென்ற தனது 17 வயதான மகனை தேடி அலைந்த பீகார் கூலித் தொழிலாளிக்கு, ஒருநாள் தேடலுக்கு பிறகு தனது மகனின் நசுங்கிய உடல்தான் கிடைத்தது. இப்படி தனது அன்பிற்குரியவர்களைப் பறிகொடுத்த பிள்ளைகளும் பெற்றோர்களும் தேடி அழையும் துயரக் காட்சிகள் நமது நெஞ்சை கனக்க வைக்கிறது.

இக்கோர சம்பவம் தொடர்பாக அல்ஜஸீரா இணையதளம் வெளியிட்ட படங்கள்:

இரயில் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டு, உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மக்கள்.

000

சிக்கியவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள மீட்புக்குழுவினர்.

000

விபத்தில் உயிரிழந்த தனது மகனின் புகைப்படத்திற்கு கனத்த இதயத்துடன் முத்தமிடும் தாய்.

000

உயிரிழந்த தனது உறவினரின் உடல் கிடைக்காததால், புகைபடங்களில் தேடும் ஒருவர்.

000

குடும்ப கஷ்டத்திற்காக சென்னைக்கு கூலி வேலை தேடி சென்ற தனது மகனின் உடலைப் பெற கையெழுத்திடுகிறார் தந்தை.

000

பிணவறையில் சிதைந்த தனது மகனின் உடலைக் கண்டு, நிலைக்குலைந்து வெளியேறும் தாய்.

தாரகை
நன்றி: அல்ஜசீரா

ஒடிசா ரயில் விபத்து: அரசே முதல் குற்றவாளி!

0

டிசா மாநிலம் பாலசோரில் மூன்று ரயில்கள் மோதிக்கொண்ட இரயில் விபத்தினால் 275 பேர் உயிரிழந்துள்ளனர் (ஒடிசா மாநிலத் தலைமைச் செயலர் பிரதீப் ஜனா வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி); 800-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நூற்றாண்டின் மாபெரும் இரயில் விபத்து இது. 800-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த 1981-ஆம் ஆண்டு பீகார் இரயில் விபத்திற்கு பிறகு இந்தியாவில் நடைபெற்றுள்ள பெரிய இரயில் விபத்து இது என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்விபத்தைக் கண்டு நீலிக்கண்ணீர் வடித்த பிரதமர் மோடி விபத்து குறித்து அனைத்துக் கோணங்களிலும் விசாரணை நடத்தப்படும் என்றும் விபத்துக்குக் காரணமானவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவர் என்றும் கூறினார். விபத்து நடைபெற்ற உடனேயே ‘இரயில்வே துறையை மேம்படுத்த அரசு செய்த பணிகள்’ என வரிசையாகத் தரவுகளை வெளியிடத் தொடங்கியது மோடி அரசு.

ஆனால் கடந்த 2022-ஆம் ஆண்டு மத்திய கணக்காய்வு மற்றும் தணிக்கை துறை (CAG – சி.ஏ.ஜி) இரயில்கள் தடம் புரள்வது குறித்து வெளியிட்ட அறிக்கை (Derailment in Indian Railways) மோடி அரசின் பொய்களைத் தோலுரிக்கும் வண்ணம் அமைந்துள்ளது.

அவ்வறிக்கையின்படி, ஏப்ரல் 2017 – மார்ச் 2021 காலகட்டத்தில் மட்டும் மொத்தம் 2017 விபத்துகள் நடைபெற்றுள்ளன. அதில் 69 விழுக்காடு, அதாவது 1392 விபத்துகள், ரயில் பெட்டிகள் தடம் புரளும் விபத்துகளாகும். இன்னும் குறிப்பாக, விளைவுகளை ஏற்படுத்தும் விபத்துகளை (consequential train accidents) மட்டும் எடுத்துக்கொண்டால், 80 விழுக்காடு விபத்துகள் பெட்டிகள் தடம் புரளுதல் மற்றும் நேரடி மோதல் தொடர்பானவை ஆகும்.


படிக்க: இந்திய ரயில்வேத் துறையில் நிரப்பப்படாத காலிப்பணியிடங்கள்!


ஒவ்வொரு முறையும் விபத்துகள் நடைபெறும் போது தனிமனித தவறுகளால் மட்டுமே அவை நடைபெற்றதாக சித்தரிக்கப்படுகின்றன. ஆனால், சி.ஏ.ஜி அறிக்கை பெரும்பாலான விபத்துகள் இரயில்வே கட்டமைப்பின் குறைபாடுகளால் நடைபெற்றுள்ளதை வெளிப்படுத்துகிறது.

சி.ஏ.ஜி அறிக்கையின்படி இரயில் தடம் புரளும் சம்பவங்கள் பொறியியல் துறையின் குறைபாடு காரணமாக 422 முறையும், தண்டவாளத்தை முறையாகப் பராமரிக்காததால் 171 முறையும் நடந்துள்ளன. அதேபோல், மெக்கானிக்கல் துறையின் குறைபாடு காரணமாக 182 முறையும், லோகோ பைலட்களின் தவறு காரணமாக 154 முறையும் இரயில் தடம் புரளும் சம்பவங்கள் நடந்துள்ளன. ஆபரேட்டிங் துறையின் தவறு காரணமாக 275 முறை ரயில் விபத்துகள் நடைபெற்றுள்ளன.

விபத்துக்கள் தொடர்பான 63 விழுக்காடு சம்பவங்களில், இன்னும் ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை. விபத்துகள் தொடர்பான முறையான ஆய்வுகள் நடத்தப்படுவதில்லை; பல்வேறு துறைகள் இடையேயான தொடர்பில் உள்ள கோளாறுகள் ஆகியவையும் தடம் புரளும் சம்பவங்களுக்கு காரணமாக அமைவதாக அவ்வறிக்கை மேலும் கூறுகிறது.

ரயில் தண்டவாளம் புனரமைப்பு பணிக்கு 2018 – 2019ஆம் ஆண்டில் ₹9607.65 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், 2019- 2020ஆம் ஆண்டில் ₹7,417 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. ஒதுக்கப்பட்ட தொகையைக் குறைக்கப்பட்டுள்ளது; அவ்வாறு குறைத்து ஒதுக்கப்பட்ட தொகையையும் முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை என்பதையும் சி.ஏ.ஜி அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.


படிக்க: ஒரிசாவில் ரயில் தடம் புரண்டு 200-க்கும் மேற்பட்டோர் பலி! | மக்கள் அதிகாரம் பத்திரிகை செய்தி


முக்கியமாக, சி.ஏ.ஜி அறிக்கை விபத்துகளுக்கான காரணமாகப் பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பான பணிகளில் ஆள் பற்றாக்குறை இருப்பதை சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பரில் மாநிலங்கள் அவையில் கேள்வி ஒன்றிற்குப் பதில் அளித்த மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், டிசம்பர் 1, 2023 நிலவரப்படி, மொத்தமுள்ள 18 ரயில்வே மண்டலங்களில் 3.12 லட்சம் காலிப் பணியிடங்கள் (non-gazetted posts) இருப்பதாகத் தெரிவித்தார். அதில் பல காலிப் பணியிடங்கள் பாதுகாப்பு தொடர்பான பணிகள். குறிப்பாக, மத்திய இரயில்வேயில் உள்ள 28,650 காலிப் பணியிடங்களில் 14,203 பாதுகாப்புப் பணிகள் தொடர்பானவை.

“விபத்துக்கு காரணமானவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவர்” எனத் தனி நபர்களை குற்றவாளிகள் ஆக்குவதன் மூலம், விபத்துக்கான காரணம் பாசிச பா.ஜ.க அரசாங்கமோ முறையான பராமரிப்பு இல்லாமல் சிதிலமடைந்துள்ள இரயில்வே கட்டமைப்போ அல்ல என்பதை மோடி நிறுவ முயல்கிறார். ஆனால் ரயில்வே நிர்வாகத்தில் இருக்கும் பாதுகாப்பு குறைபாடுகள் தான் ரயில்கள் தடம் புரண்டு விபத்து ஏற்படுவதற்குக் காரணம் என்பதை சி.ஏ.ஜி அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

அதேபோல, ஒடிசா ரயில் விபத்துக்குக் காரணம் ‘எலக்ட்ரானிக் இன்டர்லாக்’ அமைப்பில் ஏற்றப்பட்ட கோளாறு என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று (ஜூன் 4, 2023) கூறியிருந்தார். ஆனால், கடந்த பிப்ரவரி மாதமே தென்மேற்கு ரயில்வே மண்டலத்தின் தலைமை இயக்க மேலாளர் சிக்னல் அமைப்பில் உள்ள குறைபாடுகள் குறித்து இரயில்வே துறைக்குக் கடிதம் எழுதி எச்சரித்துள்ளார். ஆனால், பாசிசம் மோடி அரசாங்கம் அதைக் கண்டு கொள்ளவில்லை.


படிக்க: இந்தியாவை துயரத்தில் ஆழ்த்திய மிக மோசமான ஒடிசா ரயில் விபத்து | படக்கட்டுரை


தினமும் 2.2 கோடி மக்கள் இரயில் போக்குவரத்தை பயன்படுத்தி வரும் நிலையில், இரயில்வே துறை ஏன் முறையாகப் பராமரிக்கப்படாமல் இருக்கிறது என்ற கேள்வி எழுகிறது. இரயில்வேவை மொத்தமாக தனியார்மயப்படுத்துவது தான் அரசின் நோக்கம் என்பதுதான் அதற்கான விடை. காலிப் பணியிடங்களை முறையாக நிரப்பாமல், குறைந்த ஊழியர்களைக் கொண்டு இயக்குவது விபத்துக்கள் ஏற்படுவதற்கு முக்கியமான காரணமாகிறது. எனவே, ஒடிசா ரயில் விபத்தில் அரசே முதல் குற்றவாளி!

விபத்துகள் ஏற்பட்டு மக்கள் உயிரிழப்பது குறித்து பாசிச மோடி அரசிற்குக் கவலை இல்லை. இரயில்வே துறையை முறையாகப் பராமரிக்காமல் விட்டுவிட்டு, அரசால் பராமரிக்க முடியவில்லை; பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்படுகிறது; தனியாரிடம் ஒப்படைத்துவிட்டால் அனைத்துப் பிரச்சினைகளும் சரியாகிவிடும் என்று கூறி தனியாருக்கு தாரைவார்ப்பதே மோடி அரசின் திட்டம்.


பொம்மி

ஒடிசா ரயில் விபத்து; இடிந்து விழுந்த பீகார் பாலம் | தோழர் மருது வீடியோ

மோடி ஒரு பேட்டியில் இந்த ரயில் விபத்திற்கு காரணமானவர்களை சும்மா விட மாட்டேன் என்று கூறுகிறார். நாங்கள் கூறுகிறோம் இந்த விபத்திற்கு காரணமானவர் பிரதமர் மோடி தான். கவாச் தொழில்நுட்பத்திற்கு செலவு செய்தது என்னவாயிற்று. இரு ரயில்கள் இனிமேல் நேருக்கு நேர் மோதவே மோதாதே என்று கூறினார்கள். அது என்ன ஆயிற்று…

மேலும்..

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

இந்திய ரயில்வேத் துறையில் நிரப்பப்படாத காலிப்பணியிடங்கள்!

0

ந்திய ரயில்வேவின் சிக்னல் மற்றும் தொலைத்தொடர்பு மற்றும் போக்குவரத்துத் துறைகளில் 77,000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இந்த காலிப்பணியிடங்கள் குறித்து ரயில்வே துறை அமைச்சர் அஷிவினி வைஷ்னாவ்-விடம் மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த புள்ளிவிவரங்களே இவை.

டிசம்பர் 23, 2022 நிலவரப்படி, இந்திய ரயில்வேயில் நாடு முழுவதும் 3.12 லட்சத்திற்கும் அதிகமான காலிப் பணியிடங்கள் (Non-Gazetted Posts) நிரப்பப்படாமல் உள்ளன. சிக்னல் மற்றும் தொலைத்தொடர்பு, போக்குவரத்து துறை ஆகியவற்றில் கணிசமான எண்ணிக்கையிலான பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இதில், சிக்னல் மற்றும் தொலைத்தொடர்புத் துறையில் 14,815 பணியிடங்களும், போக்குவரத்துத் துறையில் 62,264 பணியிடங்களும் நிரப்பப்படாமல் உள்ளன.

சிவில் இன்ஜினியரிங் பிரிவில் 87,654 பணியிடங்களும், மெக்கானிக்கல் பிரிவில் 64,346 பணியிடங்களும், எலக்ட்ரிக்கல் துறையில் 38,096 பணியிடங்களும் நிரப்பப்படாமல் இருப்பதாக அமைச்சர் வைஷ்ணவ் தெரிவித்தார்.


படிக்க: இந்தியாவை துயரத்தில் ஆழ்த்திய மிக மோசமான ஒடிசா ரயில் விபத்து | படக்கட்டுரை


தென்கிழக்கு ரயில்வே, ஜூன் 2 மாலை ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹானாகா பஜாரில் மூன்று ரயில்கள் மோதிக்கொண்ட ஒரு மிகப்பெரிய ரயில் விபத்து ஏற்பட்டது. இம்மாநிலத்தில் பிப்ரவரி 3, 2023 நிலவரப்படி, 17,811 பணியிடங்களும் (Non-Gazetted Posts) 150 அதிகாரிகளுக்கான (Non-Gazetted officer) பணியிடங்களும் நிரப்பப்படாமல் மிகவும் சிரமத்தில் இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், வடக்கு ரயில்வே மண்டலத்தில் 39,226 பணியிடங்களும், மேற்கு ரயில்வே மண்டலத்தில் 30,785 பணியிடங்களும், கிழக்கு ரயில்வே மண்டலத்தில் 30,735 பணியிடங்களும், மத்திய ரயில்வே மண்டலத்தில் 28,876 பணியிடங்களும் மறுபுறம், தென்மேற்கு ரயில்வே மண்டலத்தில் 6,638 பணியிடங்களும் நிரப்பப்படாமல் இருப்பதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

இந்திய ரயில்வேத் துறையில் குரூப் ஏ, பி மற்றும் சி ஆகிய பிரிவுகளில் மொத்தம் 3,15,780 காலிப்பணியிடங்கள் இருந்து வருகின்றன.

2021-22 ஆம் ஆண்டில் குரூப் ஏ மற்றும் சி ஆகிய இரண்டு காலியிடங்களுக்கும் நாடு முழுவதும் 4,625 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. 2021-22ல் 4,625 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டன. அதே நேரத்தில் 44,847 ஊழியர்கள் ஓய்வு பெற்றுள்ளனர்.


படிக்க: ஒடிசா ரயில் விபத்து: ரயில்வேத் துறையை ஒழித்த பாசிச மோடி கும்பலே முதல் குற்றவாளி! | தோழர் மருது


மத்திய ரயில்வே மண்டலத்தில் மட்டும் காலியாக உள்ள குரூப் சி (Non-Gazetted Posts) பணியிடங்களின் எண்ணிக்கை 28,650. இதில், 14,203 பாதுகாப்புப் பிரிவு பணிகள் மற்றும் 14,447 இதர பணியிடங்கள் என அமைச்சர் தெரிவித்தார்.

2020–21 காலகட்டத்தில், 1,923 காலியிடங்களுக்கு 440,000 பேர் விண்ணப்பித்தனர். தொழில்நுட்பம் அல்லாத 35,281 காலியிடங்களுக்கு 1.26 கோடி பேர் விண்ணப்பித்தனர். எத்தனை பணியிடங்கள் காலியாக இருந்தாலும் இந்த மோடி அரசு காலிப்பணியிடங்களை நிரப்பப்போவதில்லை என்பது உறுதி. ஏனெனில் பணமாக்கல் திட்டம், தனியார்மய கொள்கையின் விளைவாக ரயில்வே துறையைத் திட்டமிட்டே சிதிலமடையச் செய்து அதானி-அம்பானிகளுக்கு தாரைவார்க்க வேண்டும் என்பதே மோடி அரசின் திட்டம்.


கல்பனா

மதுரை: திருமோகூர் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆதிக்கச் சாதி வெறியர்கள் தாக்குதல் | நேரடி ரிப்போர்ட்

மதுரை: திருமோகூர் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆதிக்கச் சாதி வெறியர்கள் தாக்குதல்
– நேரடி ரிப்போர்ட்

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

ஒடிசா ரயில் விபத்து: ரயில்வேத் துறையை ஒழித்த பாசிச மோடி கும்பலே முதல் குற்றவாளி! | தோழர் மருது

ஒடிசா ரயில் விபத்து: ரயில்வேத் துறையை ஒழித்த பாசிச மோடி கும்பலே முதல் குற்றவாளி!

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!