Thursday, May 15, 2025
முகப்பு பதிவு பக்கம் 103

மதுரை: தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆதிக்க சாதி வெறியர்களின் கொலைவெறி தாக்குதல்! | புரட்சிகர அமைப்புகள் கண்டன அறிக்கை

05.06.2023

மதுரை திருமோகூரில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது அகமுடையார் ஆதிக்க சாதி வெறியர்களின் கொலைவெறி தாக்குதல்! பொருட்கள் சூறையாடல்!

புரட்சிகர அமைப்புகள் கண்டன அறிக்கை

மதுரை மாவட்டம், ஒத்தக்கடை அருகே திருமோகூர் கிராமத்தில் கடந்த ஜூன் 2 ஆம் தேதி அன்று கோவில் திருவிழா என்பதால் இரவு ஆடலுடன் பாடல் நிகழ்ச்சி நடந்துள்ளது. அந்த நிகழ்வில் தாழ்த்தப்பட்ட மக்களும் கலந்து கொண்டனர். வருடா வருடம் நடக்கும் திருவிழாவின்போதும் இதுபோன்ற நிகழ்வுகளில் தாழ்த்தப்பட்ட மக்கள் கலந்து கொள்வது வழக்கம்தான். இந்த முறை வெளியூரிலிருந்து வருகை தந்திருந்த தாழ்த்தப்பட்ட மக்களின் உறவினர் ஒருவரை ஆடலுடன் பாடல் நிகழ்ச்சி நடக்கும்போது தாக்கியுள்ளனர். “மொறைச்சு பாக்குறியா, நீ எதுக்கு இங்க எல்லாம் வர்ற டா” என்ற கேள்விகளுடன் சட்டையைக் கசக்கித் தாழ்த்தப்பட்ட மக்களின் மீது தாக்குதல் தொடுத்துள்ளனர்.

போலீசு வந்ததால் தற்காலிகமாக பிரச்சினையை முடித்துக் கொண்டதுபோல் சென்றுவிட்டனர். அதன் பிறகு தாழ்த்தப்பட்ட மக்கள் அனைவரும் கிளம்பி தங்களின் வீடுகளுக்குச் சென்று தூங்கிக் கொண்டிருக்கும்போது இரவு 11:30 மணிக்குமேல் மின்விளக்குகள் அனைத்தையும் நிறுத்தி விட்டு 50 பேர் கொண்ட ஆதிக்க சாதிவெறி கும்பல் திடீரென தாக்குதல் தொடுத்து பெரிய கொடூரத்தை அரங்கேற்றியுள்ளது.

தாழ்த்தப்பட்ட மக்களின் வீடுகளில் நிற்கும் ஒவ்வொரு இருசக்கர வாகனத்தையும் அடித்து நொறுக்கி தங்களின் சாதிய வன்மத்தை கக்கியுள்ளனர். இப்படி 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. ஒரு நான்கு சக்கர வாகனமும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.

படிக்க : மதுரை ஒத்தக்கடை அருகே திருமோகூரில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது அகமுடையார் சாதி வெறியர்களின் தாக்குதல்! || சுவரொட்டி

வாகனங்களை தாக்கிக் கொண்டு வரும்போது ஒரு வீட்டில் இருந்த தாழ்த்தப்பட்ட இளைஞரை கொலை வெறியோடு 50 பேரும் சேர்ந்து தாக்கி உள்ளனர். தலையில் அறிவாளால் இரண்டு இடத்தில் பலமான வெட்டுகள் வெட்டப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுபோக இவர்களை தட்டிக் கேட்க சென்ற இரண்டு நடுத்தரவயதினரையும் ஒரு ஊனமுற்ற இளைஞரையும் கொடூரமாக தாக்கி அறிவாளால் வெட்டியுள்ளனர். அவர்களும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இங்கு நடைபெறும் திருவிழா 10 நாள் நடைபெறும் திருவிழா என்பதால் எப்போதுமே பாதுகாப்புக்கு போலீஸ் இருப்பது வழக்கம். அதுபோக, ஏற்கனவே இங்கு தொடர்ந்து சாதிய முரண்பாடுகள் ஒவ்வொரு திருவிழாவின்போதும் ஏதோ ஒரு வகையில் வெளிப்படும். இது எல்லாம் போலீசுக்கு நன்றாகவே தெரியும். தாக்குதலில் ஈடுபட்ட ஆதிக்கச் சாதி வெறி கும்பலின் முக்கியமான குற்றவாளி பிரபாகரனை தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் பிடித்து வைத்துள்ளனர்.

அப்போதுதான் போலீஸ் ஊருக்குள் வந்துள்ளது. போலீஸ் துணை ஆய்வாளர் சேது என்பவரிடம் அந்த குற்றவாளியை ஒப்படைத்துள்ளனர். அந்த குற்றவாளியையும் சற்று தொலைவு கொண்டுபோய் தப்பித்து ஓட வைத்துள்ளனர். கேட்டால் என்னை அறிவாளால் கையை கிழித்துவிட்டு ஓடிப்போய் விட்டான் என போலீசு தரப்பு விளக்கம் கொடுக்கிறது.

ஆனால், இதுவரை போலீசின் கை அறுக்கப்பட்டதாக அந்த பிரபாகரன் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. ஒத்தக்கடை போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி தலைமையில்தான் குற்றவாளிகளை தப்பிக்க வைத்துள்ளனர். இதுபற்றி பேசும்போது தமிழ் புலிகள் கட்சியின் தலைவர் தோழர் நாகை திருவள்ளுவன் அவர்கள், “இதுவரை நான்கு பேரை மட்டுமே பிடித்துள்ளதாக சொல்கின்றனர். அதுவும் தாக்குதலில் ஈடுபட்ட 50 பேரில் வருவார்களா என தெரியவில்லை” என்று போலீசின் முகத்திரையை கிழித்தார்.

ஆடலுடன் பாடல் நிகழ்ச்சி நடக்கும்போதே ஏற்பட்ட பிரச்சினை, போலீசுக்கும் தெரியும் உளவுத்துறைக்கும் தெரியும். இப்படி ஒரு மோதல் நடக்கப்போகிறது என்பது உளவுத்துறைக்கு தெரியாதா? அதன் பின்பும் இவர்கள் கண்டு கொள்ளவில்லை என்றால் இவர்கள் தெரிந்தே தான் ஆதிக்கச் சாதி வெறியர்களுக்கு ஆதரவாக இருந்துள்ளார்கள் எனவும் அம்பலப்படுத்தினார்.

ஜூன் நான்காம் தேதி காலையிலிருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக அந்த பகுதியில் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது. இதில், பல்வேறு ஜனநாயக சக்திகளும் முற்போக்கு இயக்கங்களும் கலந்து கொண்டு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியுடன் சென்று மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, தமிழ் தேசிய குடியரசு இயக்கம் தோழர்கள் பாதிக்கப்பட்ட பகுதியை சென்று பார்வையிட்டோம்.

அதில், மக்கள் தங்கள் பாதிப்புகளையும் தங்கள் தரப்பு நியாயங்களையும் ஆதங்கத்துடன் வெளிப்படுத்தினர்.

ஒரு வயதான அம்மா என்னையையும் என் குடும்பத்தையும் விட்டுருங்கப்பா ஒன்னும் செய்யாதீங்கப்பா என கெஞ்சிய போதும் அவர் கண் முன்னே இருசக்கர வாகனத்தை அடித்து நொறுக்கியுள்ளனர் ஆதிக்கச் சாதி வெறியர்கள்.

வீடுகளுக்குள் இருந்த பெண்களை வெளிய வாங்கடி என சாதிப் பெயரைச் சொல்லி இழிவுபடுத்தி வன்முறை வெறியாட்டம் போட்டுள்ளனர்.

ஒரு பெண் தன்னுடைய கருத்தை சொல்லும்போது “இனிமேல் எந்த வேலைக்கும் எங்களை கூப்பிடாதீர்கள், சாவுக்கு வர சொல்வது அடிமை வேலைக்கு வர சொல்வது என அனைத்தையும் நிறுத்திக் கொள்ளுங்கள், நாங்க எங்க சொந்த உழைப்பில் ஏதோ கொத்தனார் வேலையோ சித்தாள் வேலையோ பார்த்து பிழைத்துக் கொண்டுதான் உள்ளோம். உங்களைப் போலவா தாத்தன் விட்டு சொத்தில் உட்கார்ந்து தின்று கொண்டு உள்ளோம், எங்கள் சொந்த உழைப்பில் நாங்கள் வண்டி வாங்குகிறோம் அது ஏன் உங்களுக்கு எரியுது” என ஆதிக்கச் சாதி வன்மத்தை தோலுரித்தார்.

சாதி ஒழிக்கப்பட வேண்டும். நாங்க என்ன மனுசங்க இல்லையா? சாதினு ஒன்னு இருக்கவேக் கூடாது என்று கேள்வி எழுப்பினர்.

இந்த பகுதியில் உள்ள ஆதிக்கச் சாதி வெறியர்களுக்கு இன்னும் அந்த பண்ணையார் மனோபாவம் மாறவில்லை. சாதி ஒழிப்பிற்கு எதிரான பாடல்களையும் அம்பேத்கர் பெரியார் பாடல்களையும் போட்டால் கூட சண்டைக்கு வருவார்கள். தாழ்த்தப்பட்ட மக்கள் உழைத்து குறைந்தபட்சம் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்வதைக் கூட இந்த கும்பலால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்ற எதார்த்தம் கண் முன்னால் விரிகிறது.

ஒத்தக்கடை போலீஸ் ஸ்டேஷன் கீழ் தான் காயாம்பட்டி கிராமமும் வருகிறது. அங்கும் கடந்த பொங்கல் தினத்தில் ஆதிக்கச் சாதி வெறியர்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தாக்குதல் தொடுத்தபோதும், தாழ்த்தப்பட்ட மக்கள் தொடுத்த வழக்கை ஒன்றும் இல்லாமல் செய்வதற்காக -ஆதிக்கச் சாதி வெறியினருக்கு ஆதரவாக- இதே ஒத்தக்கடை போலீஸ் ஸ்டேஷனும் இன்ஸ்பெக்டர் புகழேந்தியும் தான் நின்றார்கள்.

படிக்க : பாலியல் குற்றவாளிக்கு ஜாதகம் பார்க்க சொன்ன ‘கூமுட்டை’ நீதிமன்றம்!

போலீஸ் ஸ்டேஷன் என்பது ஆதிக்கச் சாதி வெறியர்களின் கூடாரமாகவே உள்ளது என்பதை திருமோகூர் சம்பவமும் நமக்கு பொட்டில் அறைந்தார்போல் உணர்த்துகிறது.

இத்தகைய ஜனநாயக விரோத கூடாரத்தை கலைக்காமல் சாதி ஒழிப்பு ஏது என்ற கேள்வி தான் எழுகிறது.

அந்தப் பகுதி மக்களின் கோரிக்கையாக தாக்குதலில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும். குறிப்பாக, முக்கிய குற்றவாளியான பிரபாகரன் கைது செய்யப்பட வேண்டும். பிரபாகரனுக்கு ஆதரவாக உள்ள போலீசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதுதான்.

இதுபோக, ஆதிக்கச் சாதி வெறியர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்! அதை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கு! ஆதிக்கச் சாதி சங்கங்களையும் மதவெறி சங்கங்களையும் தடை செய்! என்ற முழக்கங்களுடன் ஜனநாயக சக்திகள் ஒன்றுபட்டு ஆதிக்கச் சாதி வெறியையும், மதவெறியையும் ஒழித்துக் கட்ட போராட வேண்டிய கடமை நம் அனைவரின் முன் உள்ளது.

மக்கள் கலை இலக்கியக் கழகம்
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
மக்கள் அதிகாரம், மதுரை மண்டலம்.
தொடர்புக்கு :- 97916 53200, 78268 47268

மதுரை ஒத்தக்கடை அருகே திருமோகூரில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது அகமுடையார் சாதி வெறியர்களின் தாக்குதல்! || சுவரொட்டி

மதுரை ஒத்தக்கடை அருகே திருமோகூரில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது அகமுடையார் சாதி வெறியர்களின் தாக்குதல்!

நான்கு பேர் மீது கொலை வெறித்தாக்குதல், 50 இருசக்கர வாகனங்கள் மற்றும் பல வீடுகள் அடித்து நொறுக்கி சூறை! சாதி வெறியர்களைப் பாதுகாக்கும் போலீசு!

தமிழ்நாடு அரசே!

  • தாக்குதலில் ஈடுபட்ட ஆதிக்கச் சாதி வெறியர்கள் அனைவரையும் கைது செய்! கடுமையான தண்டனை வழங்கு!
  • சாதி வெறியர்களுக்கு ஆதரவாகச் செயல்படும் போலீசு துறையினர் மீது நடவடிக்கை எடு!
  • தாக்குதலில் ஈடுபட்ட ஆதிக்கச் சாதி வெறியர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்! அதைப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடாக வழங்கு! பாதுகாப்பு வழங்கு!

உழைக்கும் மக்களே, ஜனநாயக சக்திகளே!

  • ஜனநாயக சக்திகளின் ஒற்றுமையைப் பலப்படுத்துவோம்!
  • சாதி – மத ரீதியாக மக்களை பிளவுப்படுத்தும் ஆதிக்கச் சாதி – மதவெறியை ஒழித்துக் கட்ட களமிறங்குவோம்!

மக்கள் கலை இலக்கியக் கழகம்
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
மக்கள் அதிகாரம், மதுரை மண்டலம்.
தொடர்புக்கு :- 97916 53200, 78268 47268

தொழிற்சாலைகள் சட்ட திருத்தம் 2023: கார்ப்பரேட் சேவையில் பா.ஜ.க.வின் வழியில் தி.மு.க!

டந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் தேதி சட்டமன்றத்தில் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் வேலைநேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தும் தொழிற்சாலைகள் சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்றியது தி.மு.க அரசு. இச்சட்டத் திருத்தத்திற்கு தி.மு.க.வின் கூட்டணி கட்சியினரே கடும் எதிர்ப்பு தெரிவித்தபோதும், சட்டமன்றத்தில் தனக்கிருக்கும் பெரும்பான்மையைப் பயன்படுத்தி விவாதமே இல்லாமல் குரல் வாக்கெடுப்பின் மூலம் சில வினாடிகளில் மசோதாவினை நிறைவேற்றியது தி.மு.க.

வி.சி.க, சி.பி.ஐ, சி.பி.எம், ம.தி.மு.க, த.வா.க உள்ளிட்டு தி.மு.க.வின் கூட்டணிக் கட்சியினர் அனைவரும் இம்மசோதாவை திரும்பப் பெற வேண்டும் எனக் கண்டனக் குரல் எழுப்பியதாலும், மசோதாவைக் கண்டித்து பல்வேறு இடங்களில் தொழிற்சங்கங்கள் போராட்டங்களில் ஈடுபட்டதாலும், வேலைநிறுத்த அறிவிப்பை வெளியிட்டதாலும் வேறுவழியின்றி இம்மசோதாவை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக அறிவித்துள்ளார் மு.க.ஸ்டாலின்.

நிச்சயம் இம்மசோதாவிற்கு எதிர்ப்பு கிளம்பும் என்று தெரிந்துதான், சட்டமன்றக் கூட்டத்தொடரின் கடைசி நாளில் இம்மசோதாவை நிறைவேற்றியுள்ளது தி.மு.க. வழக்கமாக எல்லா சட்டமன்றக் கூட்டங்களிலும் பங்கேற்கும் மு.க.ஸ்டாலின், அன்று மட்டும் பங்கேற்காமல் தவிர்த்தார். ஆனால், தி.மு.க. எதிர்பார்த்ததைவிட எதிர்ப்புகள் மிகக் கடுமையாக இருந்தது. திராவிடர் கழகம் உள்ளிட்ட பெரியாரிய அமைப்புகளிடமிருந்தும், தி.மு.க.வின் தொழிற்சங்க அமைப்பிடமிருந்தும்கூட இம்மசோதாவிற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன.

தற்போதும் இம்மசோதாவை முழுமையாகத் திரும்பப் பெறும் எண்ணத்தோடு தி.மு.க. இல்லை; இந்த எதிர்ப்புகளை எல்லாம் எப்படியாவது சரிக்கட்டி, அச்சட்டமசோதாவை அமலாக்கிவிட வேண்டும் என்று கருதுகின்றது. அதனால்தான், இன்றுவரை எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை துளியும் பொருட்படுத்தாமல், “வேலைநேரத்தில் ஒரு நெகிழ்வுத்தன்மையை ஏற்படுத்ததான் அச்சட்டம்”, “தொழிலாளர்கள் விரும்பினால்தான் கூடுதல்நேரம் வேலை செய்யலாம்” என்று கூசாமல் புளுகிவருகின்றனர் தி.மு.க. அமைச்சர்கள். தி.மு.க.வின் கார்ப்பரேட் சேவைக்கு இது தெளிவானதொரு சாட்சியாகும்.

ஒரே மசோதா; மொத்த உரிமைகளும் காவு!

நாடாளுமன்றத்தில் எவ்வித விவாதமும் இன்றி, தன்னுடைய பெரும்பான்மையைப் பயன்படுத்தி அனைத்து மசோதாக்களையுமே குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றிக் கொள்ளும் பா.ஜ.க.வின் நடவடிக்கையை நாம் எப்படி பாசிச நடவடிக்கை என்று வரையறுக்கிறோமா, அதேபோலத்தான் தொழிற்சாலைகள் சட்ட திருத்த மசோதாவை தி.மு.க. நிறைவேற்றிய விதத்தையும் வரையறுக்க வேண்டும். ஜனநாயக விரோதமான பாசிசச் சட்டங்கள் இத்தகைய ஜனநாயக விரோதமான வழிமுறைகளில்தான் நிறைவேற்றப்படுகின்றன.

அந்தவகையில், தி.மு.க. கொண்டுவந்துள்ள இந்த சட்ட திருத்த மசோதா தொழிலாளி வர்க்கம் பல ஆண்டுகாலம் போராடிப் பெற்ற உரிமைகளை ஒருநொடியில் முடிவுக்கு கொண்டுவருவதோடு, தொழிலாளி வர்க்கத்தின் மீது கார்ப்பரேட்டுகளின் பாசிசத் தாக்குதலை சட்டப்பூர்வமாக்குவதும் ஆகும்.

தொழிற்சாலைகள் சட்ட திருத்தம் 2023 என்பது 1948 தொழிற்சாலை சட்டத்தில் தமிழ்நாட்டுக்கு மட்டும் சில விதிகளை தளர்த்திக் கொள்வதாகும். இச்சட்டத்திருத்தத்தின் மூலம் தொழிற்சாலை சட்டம் 1948-இல் உள்ள பிரிவு 65-ன் கீழ் 65ஏ என்ற புதிய விதி சேர்க்கப்பட்டுள்ளது. இந்த 65ஏ சட்டப்பிரிவானது, சட்டப்பிரிவுகள் 51, 52, 54, 56, 59 ஆகிய அம்சங்களில் உள்ள விதிகளை தமிழ்நாடு அரசு தளர்த்திக் கொள்வதற்கு அனுமதிக்கிறது. இதுதான் பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஏனெனில் மேலே குறிப்பிட்டுள்ள பிரிவுகள்தான் தொழிலாளர்களுக்கான பல அடிப்படை உரிமைகளை உத்திரவாதம் செய்கின்றன.


படிக்க: ஒப்பந்த செவிலியர்களின் மகப்பேறு விடுப்பு உரிமையை பறித்துள்ளது திமுக அரசு!


சான்றாக, எந்த ஒரு பணியாளரும் வாரத்தில் 48 மணி நேரத்திற்கு மேல் பணியாற்ற அனுமதிக்கக்கூடாது என்கிறது 51வது பிரிவு; ஒவ்வொரு ஊழியருக்கும் வாரத்திற்கு ஒரு நாள் கட்டாயம் விடுமுறை அளிப்பதை வலியுறுத்துகிறது 52வது பிரிவு; எந்த ஒரு ஊழியரும் ஒரு நாளில் 9 மணி நேரத்திற்கு மேல் பணியாற்ற அனுமதிக்கப்படக்கூடாது என்கிறது 54வது பிரிவு; இடைவெளி நேரம் எல்லாவற்றையும் சேர்த்தாலும்கூட, ஒரு நாளில் பத்தரை மணி நேரத்திற்கு மேல் வேலைநேரம் இருக்கக்கூடாது என்கிறது 56வது பிரிவு; 59வது பிரிவானது, ஒரு தொழிலாளி ஒரு நாளில் ஒன்பது மணி நேரத்திற்கு மேல் வேலை பார்த்தால், அவருக்கு ஒவ்வொரு மணி நேரத்திற்கும் இரட்டிப்புச் சம்பளம் தர வேண்டும் என்கிறது.

“நெகிழ்வுத்தன்மை” என்ற ஒற்றைச் சொல்லின் மூலம் இந்த எல்லா விதிகளையும் முடிவுக்கு கொண்டுவந்துள்ளது தி.மு.க. அரசு.

இதே சட்டத்தை கடந்த பிப்ரவரி மாதம் கர்நாடகாவிலும் நிறைவேற்றியது பா.ஜ.க அரசு. பா.ஜ.க. அல்லாத மாநிலங்களில் முதல் மாநிலமாக தமிழ்நாட்டில் இத்தொழிலாளர் விரோத சட்டத்தை நிறைவேற்றியுள்ளது தி.மு.க. அரசு.

பன்னாட்டு கார்ப்பரேட்டுகளுக்கு கொத்தடிமைகளாக்கும் திட்டம்!

இந்த சட்ட திருத்தம் மேற்கொள்ளப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, “தமிழ்நாட்டிற்கு வரக்கூடிய நிறுவனங்கள் வேலை நேரத்தில் ஒரு நெகிழ்வுத்தன்மை இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றன. இந்த நெகிழ்வுத்தன்மையின் மூலமாக புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும்” என்கிறார்.

இதை கேட்க ஏதோ தொழிற்துறை அறிவாளிகள் பேசுவதைப் போலத் தோன்றலாம். ஆனால் உண்மையில் “தொழிலாளர் உரிமை, தொழிலாளர் நலன் என்றெல்லாம் பேசக்கூடாது. பன்னாட்டு மூலதனம் தமிழ்நாட்டில் பாய வேண்டும் என்று சொன்னால் நீங்களெல்லாம் கார்ப்பரேட்டுகளுக்கு கொத்தடிமைகளாக வேலைசெய்ய வேண்டும்” என்பதை ‘நாகரிகமாகச் சொல்கிறார் தென்னரசு.

ஆப்பிள், ஃபாக்ஸ்கான் போன்ற பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்தியாவை தனது முதன்மையான உற்பத்தித் தளமாக மாற்றிக்கொள்ள முயற்சிக்கும் நிலையில், அந்நிறுவனங்களின் முதலீடுகளை தமிழ்நாட்டில் முதன்மையாக ஈர்த்துக் கொள்வதற்காகத்தான் இந்த சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

சீனாவை தனது முதன்மை உற்பத்தி நாடாக கொண்ட அமெரிக்க கைப்பேசி நிறுவனமான ஆப்பிள் தற்போது தனது உற்பத்தியை மெல்லமெல்ல இந்தியாவை நோக்கியும் வியட்நாமை நோக்கியும் மாற்றி வருகிறது. 2025 ஆம் ஆண்டுக்குள் குறைந்தது கால் பங்கு உற்பத்தியையாவது இந்தியாவிற்கு மாற்ற வேண்டும் மற்றும் அடுத்த இரண்டு ஆண்டுக்குள் உற்பத்தியை மூன்று மடங்கு அதிகரிக்க வேண்டும் என்ற இலக்கோடு ஆப்பிள் நிறுவனம் செயல்பட தொடங்கியுள்ளது. அண்மையில் மும்பையிலும் டெல்லியிலும் இந்தியாவின் முதல் ஆப்பிள் விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது.


படிக்க: தொழிற்சாலைகள் சட்டத்திருத்தம்: கார்ப்பரேட் சேவையில் தி.மு.க அரசு!


ஐஃபோன் உதிரி பாகங்களை தயாரிக்கும் முக்கிய நிறுவனமான ஃபாக்ஸ்கானும் இந்தியாவில் மும்முரமாக வேலைசெய்யத் தொடங்கியுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்குள் இந்தியாவில் அதன் பணியாளர்களை நான்கு மடங்காக உயர்த்துவதை இலக்காகக் கொண்டு அந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அதற்காக தமிழ்நாட்டில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் ஆறாயிரம் பேர் தங்கக் கூடிய மிகப்பெரிய தொழிலாளர் விடுதி ஒன்றைக்கட்டி வருகிறது. மேலும் கர்நாடகாவிலும் பல கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கவுள்ளது.

இப்படி திடீரென்று ஆப்பிள் நிறுவனம் தனது உற்பத்தியின் பெரும் பங்கை இந்தியாவிற்கு மாற்றியுள்ளதற்கு முக்கியக் காரணம் உள்ளது. சில ஆண்டுகளாக சீனாவில் ஆப்பிள் நிறுவனத்தின் தொழிலாளர் விரோத போக்குக்கு எதிராகவும் கொடூரமான உழைப்புச் சுரண்டலுக்கு எதிராகவும் தொழிலாளர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பல இடங்களில் தொழிலாளர்கள் போராட்டங்களை நடத்தியுள்ளனர். ராணுவ சர்வாதிகார ஆட்சிக்கு ஒப்பான சீன சமூக ஏகாதிபத்திய அரசின்கீழ் தொழிலாளர்கள் இவ்விதமான போராட்டங்களை நடத்தியுள்ளது மிகப்பெரிய விசயமாகும். அந்த அளவிற்கு ஆப்பிள் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் கசக்கிப் பிழியப்படுகின்றனர். தொழிலாளர்களின் எதிர்ப்புப் போராட்டங்கள் ஆப்பிள் நிறுவனத்தின் லாபவெறிக்கு அச்சுறுத்தலாக உள்ளன.

இவையன்றி சீன அரசின் பூஜிய விகித கோவிட் கட்டுப்பாட்டு முறைக்கு எதிராக சீனாவில் நடந்த மிகப்பெரிய மக்கள் போராட்டங்களும், அண்மை ஆண்டுகளாக தீவிரமடைந்து வரும் சீன அமெரிக்க முரண்பாடும், ஆப்பிள் நிறுவனம் தனது தொழிலை சீனாவிலிருந்து பிற நாடுகளுக்கு மாற்றிக் கொள்வதற்கு காரணங்களாக உள்ளன.

ஆப்பிள், ஃபாக்ஸ்கான் போன்ற பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனங்களின் லாப வேட்டைக்காக தொழிலாளர்களின் உரிமைகளைப் பறித்தெடுப்பதற்கு இந்தியாவிலுள்ள ஒன்றிய, மாநில அரசுகள் தயாராக உள்ளன.

சீனாவோடு ஒப்பிடும்போது இந்தியாவில் மக்கள்தொகையின் பெரும்பான்மையினர் இளைஞர்கள், எனவே அடிமாட்டுக் கூலிக்கு வேலை செய்ய இங்கு ஆட்கள் கிடைப்பார்கள். மேலும் எப்போது வேண்டுமானாலும் தொழிலாளர்களை நீக்கிவிட்டு இன்னும் குறைந்த சம்பளத்திற்கு புது ஆட்களை நியமிக்க முடியும்; பொதிமாட்டைக் காட்டிலும் கொடூரமாக தொழிலாளர்களை வேலை வாங்க முடியும்; தங்களின் வாழ்நிலை காரணமாக தொழிலாளர்களும் அதை ஏற்றுகொள்வார்கள். ஆப்பிள் நிறுவனம் தனது உற்பத்திக்கு இந்தியாவை தேர்ந்தெடுத்ததற்கு இப்படி பல புல்லுருவித்தனமான கரணங்கள் உள்ளன.

இதன்மூலம் தொழிலாளர்கள் கொடூரமான உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாக்கப்பட உள்ளனர். ஏற்கெனவே ஃபாக்ஸ்கானில் வேலை செய்யும் தொழிலாளர்கள் கொடூரமாக சுரண்டப்பட்டுகொண்டிருக்கும் நிலையில் இச்சட்டத்தின் மூலம் சுரண்டல் மேலும் தீவிரமடையும்.

கார்ப்பரேட் சேவையில் பா.ஜ.க வழியில் தி.மு.க!

இத்தகைய சுரண்டலைத்தான் “வளர்ச்சி” என்று மார்த்தட்டுகிறது தி.மு.க. சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் தொழில் தொடங்க நோக்கியா வந்தபோதும் இப்படித்தான் பேசப்பட்டது. ஆனால் நடந்தது என்ன? வளங்களையும் தொழிலாளர்களின் உழைப்பையும் சுரண்டிவிட்டு மூட்டையைக் கட்டிக்கொண்டு ஓடியது. அங்கு வேலைபார்த்த பல தொழிலாளர்கள் வேலையிழந்து நிர்கதியாய் நின்றனர்.

இவ்வளவு ஏன்? தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு ஃபாக்ஸ்கானின் தொழிலாளர் விரோத போக்கைக் கண்டித்து காஞ்சிபுரத்தில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தினார்கள் பெண் தொழிலாளர்கள். அந்த போராட்டத்தை ஒழித்துகட்டவே மும்முரமாக வேலை பார்த்தது ஃபாக்ஸ்கான். அப்போது ஃபாக்ஸ்கான் நிறுவனத்திற்கு சாதமாக நடந்துகொண்ட தி.மு.க, இச்சட்டத்தை அமல்படுத்துவதில் ஆச்சரியமில்லை.


படிக்க: சொத்துவரி உயர்வு : தி.மு.க. பேசும் மாநில உரிமையும் வெங்காயமும்!


பா.ஜ.க-வை எதிர்ப்பதில் தி.மு.க. காவி அம்சங்களை குறிப்பிட்ட அளவிற்கு எதிர்க்கும் அளவுக்கு கார்ப்பரேட் அம்சங்களை எதிர்ப்பதில்லை. ஏனெனில் இந்துத்துவ பாசிசக் கொள்கையில் தி.மு.க. உள்ளிட்டக் கட்சிகள், பா.ஜ.க.விடமிருந்து வேறுபட்டாலும் மறுகாலனியாக்கக் கொள்கைகளை அமல்படுத்துவதிலும் கார்ப்பரேட் சேவையிலும் பா.ஜ.க.வுடன் இக்கட்சிகளுக்கு எந்த பேதமும் இல்லை.

ஆட்சிக்கு வந்ததிலிருந்தே கார்ப்பரேட் நலத் திட்டங்களை மூர்க்கமாக அமல்படுத்தி வருகிறது தி.மு.க. மக்களின் எதிர்ப்புகளையும் மீறி கொண்டுவரும் பரந்தூர் விமான நிலையம், நான்குவழி சாலைத் திட்டம், போக்குவரத்துத்துறை தனியார்மயமாக்கம், சிங்கார சென்னை திட்டம், பாலியப்பட்டு சிப்காட், ஓசூர் உத்தனப்பள்ளி சிப்காட்,  வெவ்வேறு கவர்ச்சிகர பெயர்களில் அமலாகும் புதிய கல்விக் கொள்கை என பலவும் இதற்கு எடுத்துக்காட்டுகள்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் தொழிற்சாலைகள் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்ட அதே நாளில், நிலத்தோடு சேர்த்து நீர்நிலைகளையும் கார்ப்பரேட்டுகளுக்கு வாரிக்கொடுக்கும் நில ஒருங்கிணைப்பு சட்டமசோதாவும் கொண்டுவரப்பட்டுள்ளது. தொழிற்துறைத் திட்டங்கள் அமலாகவிருக்கும் 100 ஹெக்டேருக்கு குறையாத நிலத்தில், நீர்நிலைகள் ஏதேனும் இருந்தாலும் அதை அரசின் சிறப்பு அனுமதிபெற்று பயன்படுத்திக் கொள்ளலாம் என்று இம்மசோதா அனுமதிக்கிறது. இதன் மூலம் கார்ப்பரேட் திட்டங்களுக்கு சட்டப்பூர்வமாக இருந்த சிறு தடையும் கில்லி எறியப்பட்டுள்ளது.

அண்மையில் திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்டவற்றில் மதுபானம் பரிமாற அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டது தி.மு.க. அரசு. கடும் எதிர்ப்புக்குப் பிறகு, திருமண மண்டபங்களில் மது பரிமாறுவதற்கு அனுமதி வழங்கும் அரசாணையைத் திரும்பப்பெற்றாலும், வணிக நோக்கங்களுக்காக நடத்தப்படும் சர்வதேச நிகழ்ச்சிகள், கருத்தரங்கங்கள், விளையாட்டு நிகழ்வுகள் ஆகியவற்றுக்கு சிறப்பு அனுமதி வழங்கப்படும் என்று மறுஅரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

பன்னாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக என்னென்ன வகையில் புரோக்கர் வேலைகள் செய்ய முடியுமோ அவை எல்லாவற்றையும் திறம்படச் செய்துவருகிறது தி.மு.க. இதற்காகத்தான் கார்ப்பரேட்டுகளும் தி.மு.க.வை ஆதரிக்கிறார்கள். கார்ப்பரேட்டுகளிடம் அதிகமாக நிதி பெற்ற பிராந்திய கட்சிகளில் தி.மு.க முதலிடத்தில் இருப்பதாக அண்மையில் வெளியான செய்தி, இதனை மெய்ப்பிக்கிறது. பா.ஜ.க-விற்கு ஐந்து ட்ரில்லியன் டாலர் பொருளாதார இலக்கு என்றால், தி.மு.க-வுக்கு ஒரு ட்ரில்லியன் டாலர் இலக்கு. சுருக்கமாகச் சொல்வதெனில் கார்ப்பரேட் சேவையில் பா.ஜ.க. எவ்வழியோ தி.மு.க-வும் அவ்வழியே பயணிக்கிறது.


துலிபா

வேங்கைவயலைப் பற்றி பேசாதே! திமுக அரசை விமர்சனம் செய்யாதே! என்கிறார் மருதையன் | தோழர் மருது | பகுதி 4

வேங்கைவயலைப் பற்றி பேசாதே! திமுக அரசை விமர்சனம் செய்யாதே! என்கிறார் மருதையன் | தோழர் மருது | பகுதி 4

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

இந்தியாவை துயரத்தில் ஆழ்த்திய மிக மோசமான ஒடிசா ரயில் விபத்து | படக்கட்டுரை

0

ந்தியாவின் கிழக்கு ஒடிசா மாநிலத்தில் மூன்று ரயில்கள் விபத்துக்குள்ளானது. கடந்த 20 ஆண்டுகளில் நாட்டின் மிகவும் மோசமான ரயில் விபத்து இதுவாகும். இவ்விபத்தில் 288 பேர் கொல்லப்பட்டனர். 900-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்தியாவின் ரயில்வேத்துறை மிகவும் மோசமாக சிதிலமடைந்திருக்கிறது என்பதையே இந்த ரயில் விபத்து நமக்கு உணர்த்துகிறது. ரயில் கழிவறை முதல் தண்டவாளங்கள் வரை அனைத்து முறையான பராமரிப்பு இல்லாமல் சிதிலமடைய செய்திருக்கிறது அரசு. தனியார்மய – தாராளமய- உலகமய கொள்கையின் விளைவாக அரசு பொதுத்துறைகளை தனியாருக்கு தாரைவார்க்கும் நோக்கத்தின் விளைவாகவே பொதுத்துறை நிறுவனங்கள் திட்டமிட்ட சிதிலமடைய வைக்கப்படுகின்றன. அதன் விளைவாக ரயில்வே சிக்னல் முதல் தண்டவாளம் வரை அனைத்தும் பராமரிக்கப்படவில்லை என்பதே உண்மை.

இந்தியாவின் கிழக்கு ஒடிசா மாநிலத்தில் மூன்று ரயில்கள் விபத்துக்குள்ளானது. கடந்த 20 ஆண்டுகளில் நாட்டின் மிகவும் மோசமான ரயில் விபத்து இதுவாகும். இவ்விபத்தில் 288 பேர் கொல்லப்பட்டனர். 900-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
மாநிலத் தலைநகர் புவனேஸ்வரில் இருந்து 200 கிமீ (125 மைல்) தொலைவில் நடந்துள்ளது இந்த விபத்து. ஒடிசாவின் தீயணைப்புத் துறையின் இயக்குநர் சுதன்ஷு சாரங்கி கூறுகையில், “உடைந்த ரயில் பேட்டிகளுக்கு அடியில் மக்கள் சிக்கியிருக்கலாம், ஆனால் அவர்கள் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை.” என்றார்.
“இரவு 10 மணிக்கு எங்களால் உயிர் பிழைத்தவர்களை மீட்க முடிந்தது. அதன் பிறகு இறந்த உடல்களை எடுத்தோம், இது மிக மிக துயரமானது. என் பணியில் இதுபோன்ற எதையும் நான் பார்த்ததில்லை” என்றார்.
உருகுலைந்து கிடக்கும் ரயில் பெட்டிகள். மீட்புப்பணியில் தொழிலாளர்கள்
வெள்ளைத் துணிகளால் மூடப்பட்டிருக்கும் பல உடல்கள் ரயில் தண்டவாளத்தில் இருக்கின்றன. உள்ளூர் மருத்துவமனையில் ஏராளமானோர் ரத்த தானம் செய்ய வந்தனர்.
இரும்பு பொருட்களே சின்னாபின்னமாகி இருக்கும் நிலையில் உடல்கள் எப்படி சிதைந்திருக்கும் என்று நினைத்தாலே கொடூர மரண ஓலம் நம் மனதை உலுக்கும்

கல்பனா
நன்றி: அல்ஜசீரா

பாசிச எதிர்ப்பு இயக்கங்களை ஒழித்து கட்டுவதுதான் மருதையனின் வேலை | தோழர் மருது | பகுதி 3

பாசிச எதிர்ப்பு இயக்கங்களை ஒழித்து கட்டுவதுதான் மருதையனின் வேலை | தோழர் மருது | பகுதி 3

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

ஒரிசாவில் ரயில் தடம் புரண்டு 200-க்கும் மேற்பட்டோர் பலி! | மக்கள் அதிகாரம் பத்திரிகை செய்தி

03.06.2023

ஒரிசாவில் ரயில் தடம் புரண்டு 200-க்கும் மேற்பட்டோர் பலி!

பலியான மற்றும் படுகாயம் அடைந்த மக்களின் துயரத்தில்
மக்கள் அதிகாரம் பங்கு கொள்கிறது!

பத்திரிகை செய்தி

வுராவிலிருந்து ஒரிசா வழியாக சென்னை நோக்கி வந்த ரயில் ஒரிசாவில் தடம் புரண்டும் மூன்று ரயில்கள் விபத்துக்குள்ளாகியும் இருக்கின்றன.

ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பயணம் செய்த இந்த ரயிலில் இப்போது வரை 200-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பதாகவும் 900-க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான காட்சிகளைத் தொலைக்காட்சிகளிலும் ஊடகங்களிலும் பார்க்கும் பொழுதே நெஞ்சமெல்லாம் பதைபதைக்கிறது.

இந்த விபத்து குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

இந்த விபத்து நடந்த உடனேயே தமிழ்நாடு அரசு மீட்புப் பணிகளுக்காக அமைச்சர்கள் தலைமையில் குழுவை அமைத்துள்ளது. அக்குழுவானது ஒரிசாவுக்குச் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளது. தமிழ்நாடு அரசு சார்பில் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்பட உள்ளது. தமிழ்நாடு அரசின் சார்பில் மேற்கொள்ள உள்ள அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

படிக்க : ‘சிங்காரச் சென்னை’ மேட்டுக்குடிகளுக்கே!

இவ்விபத்து தொடர்பாகக் கட்டுப்பாட்டு அறையையும் தமிழ்நாடு அரசு துவக்கி உள்ளது. இது போன்ற தமிழ்நாடு அரசின் செயல்கள் வரவேற்புக்குரியன. விபத்துக்குள்ளான இடத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் தானாக முன்வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பது நெகிழ்ச்சியானது.

முன்பதிவு செய்யப்பட்டோரின் குடும்பங்களுக்கு முறையாகத் தகவல் தெரிவிக்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால், முன்பதிவு செய்யப்படாத மக்களின் நிலையை நினைத்தாலே அச்சமாக இருக்கிறது.

இந்த விபத்தில் உயிரிழந்த மற்றும் படுகாயமடைந்த மக்களின் துயரத்தில் மக்கள் அதிகாரம் பங்கு கொள்வதுடன் தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறது.

மீட்புப் பணிகளை விரைவாக மேற்கொள்வதற்கான எல்லா முயற்சிகளையும் ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் உயிரிழந்த குடும்பத்திற்கு தலா இருபது லட்ச ரூபாய் ஒன்றிய அரசு வழங்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உங்கள் பாதிப்புக்கு ஏற்ப நிதி வழங்க வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.


தோழமையுடன்
தோழர் மருது,
செய்தி தொடர்பாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை,
99623 66321.

ராஜஸ்தான்: ஹஜ் யாத்திரிகர்களைத் தாக்கிய இந்துத்துவ கும்பல்!

0

ராஜஸ்தானின் கோட்டா நகரில் கடந்த மே 24 இரவு ஹஜ் யாத்திரிகர்கள் சென்று கொண்டிருந்த பேருந்தின் மீது இந்துத்துவ கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியது. பேருந்து ஜெய்ப்பூர் விமான நிலையம் நோக்கி கோட்டா – பூண்டி சாலையில் சென்று கொண்டிருந்தபோது இந்துத்துவ கும்பலால் இடைமறிக்கப்பட்டது.

குடிபோதையிலிருந்த இந்துத்துவ கும்பல் தங்களைக் கடந்து சென்ற பேருந்தை வழிமறித்து கற்களை வீசித் தாக்கியதில் பேருந்து ஓட்டுநர், பெண்கள், குழந்தைகள் எனப் பலரும் காயமுற்றனர். இத்தாக்குதல் சம்பவம் குறித்து சமூக வலைத்தளங்களில் உலா வந்து கொண்டிருக்கும் காணொளி அச்சமூட்டுவதாக உள்ளது.

மே 25 அதிகாலையில் சவுதி அரேபியா செல்லவிருக்கும் விமானத்தைப் பிடிக்கச் சென்ற பேருந்தை இந்துத்துவ கும்பல் பின் தொடர்ந்து வழிமறித்தது. சுமார் 40 யாத்திரிகர்கள் பயணித்த இப்பேருந்தில் அத்துமீறி நுழைந்த இக்கும்பல் உள்ளே இருந்த இளம் பெண்களின் பெயர்களை விசாரித்தது. அனைவரும் இஸ்லாமியர்கள் என்று அறிந்தவுடன் அக்கும்பல் அவர்களை தாக்கத் தொடங்கிவிட்டது. ஜெய் ஸ்ரீ ராம் என்று முழங்குமாறு மிரட்டியுள்ளது. பேருந்தினுள் இருந்த பெண்களைக் கடத்தி விடுவோம் என்றும் மிரட்டியுள்ளது. பேருந்திற்குப் பலத்த சேதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


படிக்க: ராஜஸ்தான் : ரம்சான் அன்று கலவரத்தை நடத்திய காவி பாசிஸ்டுகள் !


முதலில் பெண்களை இழிவாகப் பேசியது அந்த இந்துத்துவ கும்பல். அதை மற்றவர்கள் தட்டிக் கேட்கத் தொடங்கியதும் இரும்பு கம்பி உருட்டுக்கட்டை போன்ற ஆயுதங்களைக் கொண்டு தாக்கியுள்ளது. கேள்வி கேட்ட அப்துல் கலாம் என்ற யாத்திரிகர் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். ஆறு தையல் போடும் அளவிற்கு இரும்புக் கம்பியைக் கொண்டு அவரைத் தாக்கியுள்ளது இக்கும்பல்.

இத்தாக்குதலால் தனது இடது காலில் கடுமையாகக் காயமுற்ற முகமது பர்தீன் (Mohammad Fardeen) என்ற 18 வயது இளைஞர் கூறியதாவது: இந்துத்துவ பயங்கரவாதிகள் குழந்தைகள் பெண்கள் என யாரையும் விட்டு வைக்கவில்லை; அனைவரையும் தாக்கினர். எனது 60 வயது பாட்டியின் துப்பட்டாவைப் பிடுங்கினர். அவர் வைத்திருந்த ₹30,000 பணத்தையும் பறித்துக் கொண்டனர்.

இது தொடர்பாகப் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து போலீசு வழக்குப் பதிவு செய்து 6 பேரைக் கைது செய்துள்ளது. சுமார் 25 – 30 பேர் கொண்ட கும்பலால் தாக்கப்பட்டதாகப் போலீசின் முதல் தகவல் அறிக்கையே கூறுகிறது.

கடந்த சில மாதங்களாகவே ராஜஸ்தான் மாநிலத்தில் இந்துத்துவ வெறியர்கள், இந்து சாமியார்கள் ஆகியோர் இஸ்லாமிய வெறுப்புப் பேச்சுகளை பேசி வருகின்றனர். இஸ்லாமியர்கள் மீது வன்முறையை ஏவும் வகையில் அவர்களது பேச்சுகள் அமைந்துள்ளன. சில இடங்களில் இஸ்லாமியர்களுக்கு எதிராக உறுதிமொழி எடுக்கும் நிகழ்வுகளும் நடந்துள்ளன.


படிக்க: ‘பசு பாதுகாப்பு’ எனும் ஆயுதத்தை சுழற்றும் பாசிஸ்டுகள்!


இவ்வாறு தொடர் இந்து மதவெறி ஊட்டப்பட்டதன் விளைவாகத்தான் இத்தாக்குதல் சம்பவம் அரங்கேறியுள்ளது. அண்மையில், ராஜஸ்தானின் ஜோத்பூரில் விஸ்வ இந்து பரிஷத் மற்றும் துர்கா வாகினி அமைப்புகள் இணைந்து 7 நாள் ஆயுதப் பயிற்சி வகுப்புகளை நடத்தின.

அரசு எந்திரத்தில் சங்கப் பரிவார் கும்பலின் ஊடுருவல் காரணமாக ராஜஸ்தானின் காங்கிரஸ் அரசாங்கம் செய்வதறியாது திகைத்து நிற்கிறது. இந்த காவி பாசிச கும்பலை எதிர்கொள்வதற்கு ஒரே வழி, மக்களை அமைப்பாக்கி அணி திரட்டுவது மட்டும்தான் என்பதை ராஜஸ்தானில் நடைபெற்று வரும் தொடர் சம்பவங்கள் நமக்கு உணர்த்துகின்றன.


பொம்மி

‘சிங்காரச் சென்னை’ மேட்டுக்குடிகளுக்கே!

டந்த 12-04-2023 ஆம் தேதி பட்டினப்பாக்கம் கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள லூப் சாலையை மறித்து நொச்சிக்குப்பம், பட்டினப்பாக்கம் மீனவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். சென்னை உயர்நீதிமன்றம் லூப் சாலையில் உள்ள மீன் கடைகளை அகற்ற உத்தரவிட்டதே அதற்கு காரணம். லூப் சாலையை ஆக்கிரமித்து மீன் கடைகள் அமைக்கப்பட்டிருப்பதாகவும், அதனால் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. ஆக்கிரமிப்புகளை அகற்றி ஏப்ரல் 18 ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய மாநகராட்சிக்கு உத்தரவிட்டு தீர்ப்பும் வழங்கியது.

லூப் சாலையில் மீனவர்களின் கடைகள் இருப்பது குறித்து கருத்து தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி (பொறுப்பு) டி.ராஜா, “இந்த மீனவர்களை பொதுச் சாலையில் குத்த வைத்து உட்கார ஏன் அனுமதிக்கிறீர்கள்? அவர்கள் அழகான இடத்தைக் கெடுக்கிறார்கள். அவர்களுக்கு அங்கு என்ன வேலை? அவர்களை அப்புறப்படுத்தி வேறு இடத்திற்கு அனுப்புங்கள்” என்று ஆண்டை மனப்பான்மையுடன் கட்டளையிட்டார்.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் பாலாஜி மற்றும் சுந்தர் தலைமையிலான அமர்வு, “பொதுச் சாலைகளில் ஆக்கிரமிப்புகளை ஏற்க முடியாது. ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் சிங்காரச் சென்னை இலக்கை மாநகராட்சி எப்படி அடைய முடியும்?” “சிங்கார சென்னை என்று பேசுகிறீர்கள். ஆனால் கடற்கரை அருகே உள்ள சென்னையின் மிக அழகிய சாலை வேறு விதமாக இருக்கிறது” என்று கூறினர்.

சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தீர்ப்பு வந்த அடுத்த நாளே துரிதமாக செயல்பட ஆரம்பித்துவிட்டனர். லூப் சாலையோரத்தில் உள்ள மீன் கடைகள், ஐஸ் பெட்டிகள், வலைகள் மற்றும் மேசைகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டனர்.


படிக்க: 1985 சென்னை துப்பாக்கிச்சூடு | வழக்குரைஞர் லிங்கன் நேர்காணல்


இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவ மக்கள் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். விற்பனைக்காக வைத்திருந்த மீன்கள், நண்டுகளை சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். மறுநாள் மக்களின் போராட்டம் அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி நகர்ந்தது. படகுகளை வைத்து சாலைகளை மறித்தனர். சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சாலையின் நடுவே கூடாரம் அமைத்து முழக்கமிட்டு தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மூதாட்டி ஒருவர் “மெரினாவை அழகுபடுத்துறோம்னு கட்டுமரங்களை அங்கே நிறுத்தக்கூடாதுன்னு சொல்லிட்டாங்க. இப்போ நொச்சிக்குப்பம் பகுதியை ஆக்கிரமிக்கிறோம்ன்னு எங்க பொழப்புல மண்ணள்ளிப் போடுறாங்க. இன்னையோட அஞ்சு நாள் ஆச்சு. கடை போடவிடலை. தினக்கூலி நாங்க. இப்படியே போச்சுன்னா பட்டினியாகத்தான் கிடக்கனும்” என வருந்தினார்.

மக்களின் போராட்டங்களை ஒரு பொருட்டாகக்கூட மதிக்காமல் போலீஸ் உதவியுடன் கடைகளை அகற்றும் பணியை அதிகாரிகள் மேற்கொண்டனர். “தனியாரின் பெரிய பெரிய ஆக்கிரமிப்புக் கட்டிடங்களை இதே வேகத்தில் இடிக்குமா அரசு?” என மிக எளிதான கேள்விகளால் மக்கள் அதிகாரவர்க்கத்தை எதிர்கொண்டனர். மேலும், லூப் சாலைதான் மீனவர்களின் பாரம்பரிய இடத்தை ஆக்கிரமித்து போடப்பட்டுள்ளது என்பதை அம்பலப்படுத்தினர். சாலையை விரிவாக்கம் செய்யக்கூடாது, நடைபாதைகள் அமைக்கக்கூடாது என தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய உத்தரவை மீறி போக்குவரத்து வசதிக்காக என்ற பெயரில் மாநகராட்சி சாலையை விரிவுபடுத்தி இருப்பதாக தெரிவித்தனர்.

லூப் சாலை போடப்பட்டுள்ள இடம் மீனவர்கள் பூர்வீகமாக வாழ்ந்து வந்த இடமாகும். சாலை அமைக்கும்போதே மக்கள் கடுமையாக எதிர்த்துள்ளனர். ஆனால் நீங்கள் நடைபாதைகளில் கடைகளை அமைத்துக்கொள்ளலாம் என நயவஞ்சமாக மீனவ மக்களை ஏமாற்றி இடங்களை பறித்துதான் அரசு அப்போது சாலை அமைத்தது. மேலும் லூப் சாலை என்பது  பொதுப் போக்குவரத்திற்கான சாலை அல்ல. மீனவர்கள் பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட சாலைதான். சாந்தோம் சாலையில் விரிவாக்கப்பணிகள் நடைபெற்று வருவதால் தற்காலிகமாக லூப் சாலையில் பொதுப்போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது அம்மக்களின் வாழ்வாதாரத்திற்கான கடைகளை ‘ஆக்கிரமிப்பு’ என்று கூறி அப்புறப்படுத்துகின்றனர்.

மீனவ மக்களின் தொடர் போராட்டங்களாலும், ஜனநாயக சக்திகளின் ஆதரவாலும் மீன் சந்தை கட்டப்படும் வரை, லூப் சாலையின் மேற்கு பக்கத்தில் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் கடைகளை அமைத்துக்கொள்ள நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதற்குப் பிறகு மீனவ மக்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதால் போராட்டமும் பின்வாங்கப்பட்டுள்ளது.


படிக்க: மீன் வளத்தையும் மீனவர்களையும் அழிக்க வரும் கடல் மீன்வள மசோதா !


“சிங்காரச் சென்னை” என்ற பெயரில் உழைக்கும் மக்கள் நகரத்தை விட்டு வெளியேற்றப்படும்போது, வாழ்வாதாரங்கள் அழிக்கப்படும்போது, இதுபோன்ற மக்கள் போராட்டங்கள் வெடித்துக்கொண்டுதான் இருக்கும்.

நீதிபதிகள், அதிகாரிகள் போன்ற மேட்டுக்குடி வர்க்கத்தின் பார்வையில் உழைக்கும் மீனவ மக்கள் சென்னையை விட்டு அப்புறப்படுத்தப்பட வேண்டியவர்களாகத் தெரிகிறார்கள். அம்மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக சாலையோரத்தில் வைத்திருக்கும் கடைகள் மற்றும் மீன்பிடி பொருட்கள் போக்குவரத்திற்கு இடைஞ்சலானவையாகத் தெரிகிறது. மீன் மற்றும் கருவாடுகளின் வாசனை கூட அவர்களுக்கு அறுவருக்கத்தக்கதாகத் தெரிகிறது.

இது தீண்டாமையின் நவீன வடிவமாகும். அதிகார வர்க்கத்திற்கே உள்ள வர்க்கத் திமிராகும். “சிங்காரச் சென்னை” என்ற அரசின் திட்டமும் சரி, அதிகாரவர்க்கம் மற்றும் நீதிபதிகளின் பார்வையும் சரி, இந்நகரம் உழைக்கும் மக்களுக்கானதல்ல, மேட்டுக்குடிகளுக்கும் கார்ப்பரேட் முதலாளிகளுக்குமானது என்பதில் ஒன்றாக உள்ளது.

இவர்கள் கூறும் சிங்காரச் சென்னையில், நகரத்தை அழகுப்படுத்துவது என்ற பெயரில் பூங்காக்கள், நீரூற்றுகள், அருங்காட்சியங்களுக்கு இடம் உண்டு. உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவது என்ற பெயரில் பாலங்கள், சுரங்கப் பாதைகள், மெட்ரோ ரயில்களுக்கு இடம் உண்டு. ஆனால், இக்கட்டுமானங்களை எல்லாம் இரத்தத்தை வியர்வையாக சிந்தி கட்டியெழுப்பும் உழைக்கும் மக்களுக்கு இடமில்லை.

கூவம், அடையாறு ஆற்றங்கரையில் வசிக்கும் உழைக்கும் மக்கள் ‘ஆக்கிரமிப்பு’ என்ற பெயரில் அகற்றப்பட்டு, கண்ணகி நகர், செம்மஞ்சேரி போன்ற புறநகர் பகுதிகளுக்கு விரட்டியடிக்கப்படுவதும் இதன் காரணமாகத்தான்.

ஆற்றின் பாதைகள், கால்வாய்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டிற்கும் கட்டிடங்கள் இவர்களின் கண்களுக்கு ஆக்கிரமிப்பாக தெரிவதில்லை. மதுரவாயல் எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகம் முதல் ராமாபுரம் மியாட் மருத்துவமனை வரை பல தனியார் கல்லூரிகளும், மருத்துவமனைகளும், ஷாப்பிங் மால்களும் ஆற்றின் பாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்டவைதான். ஆனால் இவைகளை அகற்றக்கோரி நீதிபதிகள் யாரும் தாமாக முன்வந்து பொதுநல வழக்கு தொடுப்பதில்லை. இதுதான் அவர்களுடைய வர்க்கப் பாசத்தின் வெளிப்பாடு!


குப்பு

‘மஹாமேதை’ மருதையன் அரசியலும், முதலைவாயில் மாட்டிக்கொண்ட யூடியூபர் கரிகாலனும் | தோழர் மருது | பகுதி 2

‘மஹாமேதை’ மருதையன் அரசியலும்,
முதலைவாயில் மாட்டிக்கொண்ட யூடியூபர் கரிகாலனும் | தோழர் மருது | பகுதி 2

காணொலியை பாருங்கள் ! பகிருங்கள் !!

புதிய ஜனநாயகம் – ஜூன் 2023 | மின்னிதழ்

ன்பார்ந்த வாசகத் தோழர்களே,

ஜூன் – 2023 மாத புதிய ஜனநாயகம் மின் இதழ் தேவையான நண்பர்கள், வாசர்கள் புதிய ஜனநாயகம் எண்ணிற்கு ஜிபே (G−Pay) முறையிலோ அல்லது வேறு வகையிலோ உரிய தொகையைச் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

எமது அலுவலக எண்ணிற்கு ஜிபே (G−Pay) மூலம் தொகையை அனுப்பிவிட்டு அதன் திரைப்பதிவை (ஸ்கிரீன் ஷாட்ஐ) எமது அலுவலக எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.

புதிய ஜனநாயகம் இதழுக்கு ஓராண்டு சந்தா, ஈராண்டு சந்தா என செலுத்தலாம்.

ஜிபே (G−Pay) முறையில் தொகை செலுத்த வேண்டிய புதிய ஜனநாயகம் இதழின் அலுவலகத் தொலைபேசி எண்: 94446 32561

தொடர்பு விவரங்கள் :

தொலைபேசி / வாட்சப் : 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

மின்னிதழ் விலை : ரூ.20

G-Pay மூலம் பணம் கட்ட : 94446 32561

வங்கி கணக்கு விவரம் :
Bank : SBI, Branch: Kodambakkam,
Account Name: PUTHIYA JANANAYAGAM,
Account No: 10710430715,
IFS Code: SBIN0001444

0-0-0

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் :

  • தலையங்கம்: நாடாளுமன்றத்திற்கு புதிய கட்டடம் திறப்பு: இந்துராஷ்டிரத்திற்கான கால்கோள்!
  • கர்நாடக தேர்தல் முடிவுகள்: தேர்தல் தோல்வி மட்டுமே பாசிசத்தை அளக்குமா?
  • மாநிலக் கல்விக் கொள்கை: மக்களுக்கு துரோகமிழைக்கும் தி.மு.க.!
  • எரிகிறது மணிப்பூர்: பற்றவைத்தது காவி!
  • டெல்லி அரசின் நிர்வாக அதிகாரம் பறிப்பு: மோடி அரசின் சட்டப்பூர்வ பாசிச நடவடிக்கை!
  • கருப்புப் பண ஒழிப்பு 2.0: மக்கள் சேமிப்பை சூறையாடும் சதித்திட்டம்!
  • சிறப்புப் பதிவு: “வீழாது தமிழ்நாடு! துவளாது போராடு!” – வெற்றிகரமாக நடைபெற்ற புரட்சிகர அமைப்புகளின் மதுரை மாநாடு
  • மே நாள் போராட்டங்கள்: புரட்சிகரக் கட்சிக்காக உலகம் காத்திருக்கிறது!

 

கோவனை ‘கோபாலபுரத்து நாயே’ என்று சொன்னது உண்மையா? | தோழர் மருது | பகுதி 1

கோவனை ‘கோபாலபுரத்து நாயே’ என்று சொன்னது உண்மையா? | தோழர் மருது | பகுதி 1

பாருங்கள்! பகிருங்கள்!!

போக்குவரத்துத் துறையில் கமுக்கமாக நடைபெறும் தனியார்மயம்: ஊடகங்களே மவுனம் கலைப்போம்!

கிக்கும் கோடைக்காலத்தில் காலையிலும் மாலையிலும் பேருந்துக்காக நீண்டநேரம் காத்திருக்க வேண்டிய அவலநிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள் சென்னை பெருநகர மக்கள். சென்னை மட்டுமல்ல தமிழ்நாடு முழுக்க அரசுப் பேருந்துகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளன. அவைதான் மக்கள் நெடுநேரம் பேருந்துக்காக காத்திருப்பதன் காரணம். இது ஏதோ சாதாரண விசயமல்ல. பேருந்து இயக்க எண்ணிக்கை குறைக்கப்பட்டதற்கு போக்குவரத்துத் துறையை தனியார்மயமாக்குவதில் தி.மு.க. அரசு மேற்கொள்ளும் அடுத்தடுத்த நடவடிக்கைகளே காரணமாகும்.

சென்ற மார்ச் மாதம் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள வழித்தடங்களில், ஒப்பந்த அடிப்படையில் தனியார் பேருந்துகளுக்கு அனுமதி அளிப்பதாக செய்திகள் வெளியாகின. அரசின் இந்த தனியார்மயாக்க முயற்சியை எதிர்த்து பல்வேறு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். தி.மு.க.வின் தொழிற்சங்கமான தொ.மு.ச.வும் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தது.

எதிர்ப்புகள் வலுப்பெற்ற பிறகு ஊடகங்களுக்கு பேட்டியளித்த போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், “சென்னையில் தனியார் பேருந்துகளை இயக்க டெண்டர் விடப்படவில்லை. உலக வங்கியின் அறிவுத்தல்படி கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் தனியார் பேருந்துகள் இயக்குவது குறித்து வெளியிடப்பட்ட அரசாணை மீதான சாதக பாதங்களை ஆராயவே டெண்டர் விடப்பட்டது” “… ஒருபோதும் போக்குவரத்துத்துறையை தனியார்மயாக்கும் திட்டம் இல்லை” என்று தெரிவித்தார்.

தனியார்மயமாக்கப் போவதில்லை என்பதுதான் கருத்தென்றால், அந்த டெண்டரில் ஆராய்வதற்கு என்ன இருக்கிறது?

அமைச்சர் ஊடகங்களுக்கு அளித்த அதே பேட்டியில், “டெல்லி போன்ற பெருநகரங்களில் இந்த திட்டம் நடைமுறையில் உள்ளது. ஏன் கம்யூனிஸ்டுகள் ஆட்சிசெய்யும் கேரளாவில் இந்த திட்டம் நடைமுறையில்தான் உள்ளது. ஒருவேளை இத்திட்டம் நடைமுறைப்படுத்தப் பட்டாலும் ஒரு பாதிப்பும் ஏற்படாது” என்று தெரிவித்திருந்தார். அமைச்சரின் இந்த முன்னுக்குப்பின் முரணான கருத்துக்களைப் பற்றி பெரும்பாலான ஊடகங்கள் வாய்திறக்கவே இல்லை.

தற்போது போக்குவரத்துத் துறையை தனியார்மயமாக்கும் நடவடிக்கையில் மெல்ல மெல்ல முன்னேறிவருகிறது தி.மு.க. அரசு. ஓட்டுநர்களை தனியார் நிறுவனங்களைக் கொண்டு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கும் வேலையை ஆங்காங்கே கமுக்கமாக செய்துவருகிறது.


படிக்க: திராவிட(கார்ப்பரேட்) மாடல் : தனியார்மயமத்தை நோக்கி தமிழ்நாடு போக்குவரத்து கழகம்!


கடந்த ஏப்ரல் மாதம், தமிழக அரசின் போக்குவரத்துத் துறையில் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. சென்னை, நாகை, கும்பக்கோணம் உள்ளிட்ட வழித்தடங்களில் ஒப்பந்த ஓட்டுநர்கள் 400 பேரை நியமிக்க இருப்பதாகவும், இவர்கள் 12 மாதங்கள் பணியில் இருப்பார்கள் எனவும் தெரிவித்துள்ளது.

அரசு விரைவு போக்குவரத்துக் கழகங்களில் 100க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டதை கண்டித்தும், தொழிலாளர் துறை ஆணையர் உத்தரவை மீறி ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர்களை நியமிக்கும் அதிகாரிகள் மீது நடவடடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கடந்த மே 5 அன்று சிஐடியு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் கடந்த 29ஆம் தேதி அரசின் இத்தனியார்மயமாக்கப் போக்கைக் கண்டித்து மாலை ஐந்து மணியளவில் சென்னையில் பல்வேறு இடங்களில் பேருந்து ஓட்டுநர்கள் தன்னெழுச்சியாக வேலைநிறுத்தம் செய்துள்ளனர். அதன்பிறகு அமைச்சர் மேற்கொண்ட சமாதனப் பேச்சுவார்த்தையால் பணியைத் தொடர்ந்தனர்.

ஓட்டுநர்களை ஒப்பந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கும் இதேவேளையில், சென்னை மாநகர பேருந்துகளில் ஓட்டுநர் பற்றாக்குறையை ஏற்படுத்தி நடத்துநர்களுக்கு பணி வழங்க மறுத்துவருவதாக அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியிருந்தார்.

ஓட்டுநர்கள் கணிசமான அளவு இருந்தும், ஒரு பணிமனையில் 15 பேர் வீதம், 24 பணிமனைகளில் 350க்கும் கூடுதலான ஊழியர்களுக்கு பணி மறுக்கப்பட்டுவருகிறது. இதனால் ஒவ்வொரு நாளும் குறைந்தது 350 பேருந்துகள் மக்களின் போக்குவரத்துக்காக இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பணி மறுக்கப்படும் ஊழியர்களுக்கு ஊதியமும் வழங்கப்படுவதில்லை.

ஓட்டுநர்கள் பற்றாக்குறையை ஏற்படுத்தி, அதையே காரணமாகக் காட்டி நடத்துநர்களை பணிக்கு எடுக்காததன் மூலம் ஒப்பந்தப் பணியை திணிப்பதுதான் அரசின் நோக்கமாக உள்ளது.


படிக்க: மக்களின் உழைப்பில் உருவான போக்குவரத்துத் துறையை விழுங்கவிருக்கும் கார்ப்பரேட்டுகள் | தோழர் பரசுராமன்


ஓட்டுநர்கள் பற்றாக்குறையால் பணிவழங்கப்படாத நடத்துநர்களிடம், ஒப்பந்தமயமாக்கலை எதிர்க்கும் ஓட்டுநர்களால்தான் தங்களுக்கு இந்த நிலைமை என்ற கருத்தை ஏற்படுத்தி தொழிலாளர்களை தங்களுக்குள் மோதவிடுவதும், மக்களிடையே போராடும் அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் மீது அதிருப்தியை ஏற்படுத்துவதும் திட்டமிட்டு நடைபெற்றுவருகின்றன.

பெரும்பாலான உழைக்கும் மக்களுக்கு அரசின் இந்த சதி நடவடிக்கைகளை ஊடகங்கள் கொண்டுசேர்க்கவில்லை. பேருந்துக்காக கால்கடுக்க நிற்கும் மக்கள், பேருந்துப் பற்றாக்குறையை ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களின் காலதாமதப் பிரச்சினையாகக் கருதி ஆங்காங்கே சண்டபோட்டு வருகிறார்கள். மைய ஊடகங்கள்தான் இப்பிரச்சினையை இருட்டடிப்பு செய்கின்றன என்றால், மக்கள் பிரச்சினைகள் விவாதிக்கப்படுவதாகக் கருதும் யூடியூப் சானல்களும் டிரெண்டிங்கான விசயத்தைப் பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருக்கின்றன.

ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. எதிர்ப்பு பேசும் பெரும்பான்மையான ஊடகங்களோ, தி.மு.க. மீது விமர்சனத்துக்குரிய விசயங்கள் ஏதேனும் வந்தால் அதைத் திட்டமிட்டே விவாதப் பொருளாக்காமல் தவிர்க்கின்றனர்.

இது ஆபத்தான போக்காகும். காவி மட்டுமல்ல, கார்ப்பரேட்டும் மக்களுக்கு எதிரானதாகும். தனியார்-கார்ப்பரேட்மயமாக்க சதியால் மக்கள் பாதிக்கப்படும்போது அதை எதிர்த்துக் குரல்கொடுப்பதுதான் மக்களுக்காக வேலைசெய்யும் ஊடகங்களது பணியாகும். இதை உணர்ந்து இப்பிரச்சினையை விவாதப் பொருளாக்க முன்வருமாறு மக்கள் மீது அபிமானமுள்ள அனைத்து ஊடகங்களைக் கேட்டுக்கொள்கிறோம்.

000

போக்குவரத்துத் துறையில் ஓட்டுநர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கும் இந்த திட்டம் என்பது சராசரியான ஒன்றல்ல. ஒட்டுமொத்த போக்குவரத்துத் துறையையும் கார்ப்பரேட்டுகளுக்கு தூக்கிக் கொடுக்கும் சதித்திட்டமாகும். இதுகுறித்து எமது மே மாத இதழில் “கார்ப்பரேட்மயம்: நேற்று பள்ளிக்கல்வித்துறை, இன்று போக்குவரத்துத் துறை, நளை?” என்ற தலைப்பில் கட்டுரை பிரசுரிக்கப்பட்டுள்ளது.

பாசிசத்திற்கு எதிரான கலகக் குரல்கள்!

றுமை, பசி, பட்டினி, வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவை நாடு முழுக்க தலைவிரித்தாடுகின்றன. வேலைவாய்ப்பற்ற இளைஞர்களும் சிறுதொழில் நசிவைச் சந்தித்த வணிகர்களும் தற்கொலை செய்துகொள்ளும் அவலம் நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. சாதிவெறியும் மதவெறியும் கோலோச்சுகின்றன. இஸ்லாமியர்கள், கிறித்தவர்கள், தலித்துகள் மீதான பாசிசத் தாக்குதல்கள், அம்மக்களை நான்காந்தரக் குடிமக்களாக மாற்றிவருகின்றன. அம்பானி-அதானி-வேதாந்தா வகையறா கார்ப்பரேட் முதலாளிகளின் வளர்ச்சிதான் பாசிஸ்டுகளால் தேசத்தின் வளர்ச்சியாக சித்தரிக்கப்படுகிறது. நாட்டு மக்களின் சொத்துக்கள் கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்க்கப்படுகின்றன.

நாட்டைப் பீடித்துள்ள இந்த அரசியல் சூழல், தொழிலாளர்களையும் விவசாயிகளையும் இன்ன பிற உழைக்கும் மக்களையும் எப்படி போராடத் தூண்டுகிறதோ, அதைப் போலவே, நாட்டுப்பற்றுள்ள கலை-இலக்கியவாதிகளையும், அறிவுத்துறையினரையும் நிலவும் பாசிசச் சூழலுக்கு எதிராக கலகக் குரலை எழுப்ப வைக்கிறது.

000

காவி பாசிஸ்டுகளின் கோட்டையான உத்தரப் பிரதேசத்தில் இருந்துகொண்டே, யோகியையும் மோடியையும் தனது பாடல்கள் மூலம் அம்பலப்படுத்திவருகிறார் 25 வயதே நிரம்பிய இளம் பெண் பாடகி நேஹா சிங் ரத்தோர். பல்வேறு தேசிய இனங்களின் மொழிகளை அழித்து, ஒற்றை ஆதிக்க மொழியாக இந்தியை நிலைநிறுத்த காவிக் கும்பல் வேலைசெய்துகொண்டிருக்கையில், இவர் தன் தாய்மொழியான போஜ்பூரியில் பாடுவது காவிகளுக்கு மேலும் ஒரு அடி.

கல்லூரி படிக்கும்போது நண்பர்களுடன் பாடல்களை எழுதி பாடிப் பழகியவர், கொரோனா காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் அனுபவித்த கொடுமைகளைப் பற்றி பாட ஆரம்பிக்கிறார். அதன்பிறகு, யோகி அரசை விமர்சித்தும் மக்கள் படும் துன்பங்களைப் பற்றியும் தொடர்ந்து பாடிவருகிறார்.

நேஹாவின் யூடியூப் சேனலுக்கு பத்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் சந்தாதாரர்களாக உள்ளனர். மேலும், லட்சக்கணக்கானோர் டிவிட்டரிலும், முகநூல் பக்கத்திலும் இவரை பின் தொடர்கிறார்கள். படித்தப் பெண்ணாக இருந்தாலும், கிராமத்துப் பெண் போல, சேலையை தலையில் முக்காடிட்டுக் கொண்டு, இயல்பாக நையாண்டி தொனியில் இவர் பாடல்களை பாடுகிறார். அவரது பாடல்கள் மக்களை வெகுவாக ஈர்க்கின்றது. அனைவராலும் எளிதில் பாடக்கூடியதாகும் உள்ளது.


படிக்க: மோடி அரசை அம்பலப்படுத்தி பாடல் பாடும் நேஹா சிங் ரத்தோர்! | தோழர் அமிர்தா | வீடியோ


பா.ஜ.க-வின் தேர்தல் வாக்குறுதிகளைப் பற்றி, “அவர்கள் நல்ல காலம் பிறக்கும் என சத்தியம் செய்தார்கள். ஆனால் நமக்கு கிடைத்ததோ தோளில் மாட்டுவதற்கு ஒரு பையும் பிச்சை எடுக்க ஒரு திருவோடும்தான்” என்று இவர் பாடிய வரிகள் மிகப் பிரபலமானவை. மேலும், லக்கிம்பூரில் பா.ஜ.க. அமைச்சரின் மகனால் விவசாயிகள் ஈவிரக்கமின்றி கார் ஏற்றிக் கொல்லப்பட்டதைக் கண்டித்தும், ஹத்ராஸ் கூட்டு பாலியல் வன்கொடுமையைக் கண்டித்தும் இவர் பாடிய பாடல்கள் மக்களால் வெகுவாக கேட்கப்பட்டதாகும்.

யோகி அரசுக்கு எதிராக மட்டும் இதுவரை கிட்டதட்ட 200-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். இவருடைய பாடல்களுக்கு மக்கள் ஆதரவு அதிகரிப்பதை பொறுத்துக்கொள்ள முடியாமல் யோகி அரசு, இவர் மீது ஒடுக்குமுறை செலுத்த ஆரம்பித்துள்ளது.

2023 பிப்ரவரி 16 ஆம் தேதி “யுபி மெய்ன் கா பா – 2” என்ற பாடலை வெளியிட்டார். அப்பாடலுக்கு எதிராக அவருக்கு போலீசு அனுப்பிய நோட்டீஸில், நேஹா சிங் ரத்தோர் தமது பாடல்கள் மூலம் வெறுப்பைத் தூண்டியதாகவும், சமூகத்தில் பகைமையையும் பதற்றத்தையும் உருவாக்கி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அவர் அப்படியென்ன சமூகத்தில் ‘வெறுப்பையும்’ ‘பதற்றத்தையும்’ தூண்டினார் என்பதை அப்பாடலின் சில வரிகளே உணர்த்தும். “ராமராஜ்ஜியம் என்ற பெயரில் வன்முறை அரங்கேறிவிட்டது. அடுத்து காசி, மதுராவில் இரத்தக்கறை படியப் போகிறது. சாமியார் முதலமைச்சரின் தொகுதியான கோரக்பூரில் இரத்தக்கறை படிந்துள்ளது. எதிர்த்துக் கேட்டால் காக்கிச் சட்டை போலீசு வந்து கஞ்சா கேசு போடுகிறது” என்று பாடியிருந்தார். தமது நிகழ்ச்சிரலை மக்கள் மத்தியில் துல்லியாக அம்பலப்படுத்திப் பாடியதுதான் காவிக் கும்பலுக்கு எரிச்சலைத் தந்திருக்கிறது.

நேஹா சிங் ரத்தோர் மீதான யோகி அரசின் ஒடுக்குமுறைகளுக்கு எதிர்க்கட்சிகளும் தங்கள் கண்டத்தைத் தெரிவித்துவருகின்றன. டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா “உத்தரப்பிரதேச காவல்துறையின் நடவடிக்கை வெட்கக்கேடானது” என்று கூறியுள்ளார். உத்தரப்பிரதேச எதிர்க்கட்சித் தலைவரான அகிலேஷ் யாதவ், “ஒரு நாட்டுப்புற பாடகரின் குரலுக்கு பா.ஜ.க இவ்வளவு பயப்படுகிறதா?” எனக் கூறியுள்ளார்.


படிக்க: பாடல்களை அரசியல் போராட்ட வடிவமாக்கும் வங்காள பாடகர் மௌசுமி போமிக்


மக்களிடத்தில் நேஹா சிங் ரத்தோருக்கு உள்ள ஆதரவாலும் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களாலும் நோட்டீஸ் அனுப்புவதைத் தவிர இதுவரை வேறெந்த தீவிர ஒடுக்குமுறைகளிலும் யோகி அரசு ஈடுபடவில்லை. அப்படியொரு நிலைக்குச் சென்றால், அவரது பாடல்கள் மேலும் மக்கள் ஆதரவைப் பெறும் என்று யோகி அரசு அஞ்சுகிறது.

சட்டப்படியான ஒடுக்குமுறை மட்டுமின்றி, இவருக்கு சமூகரீதியான அச்சுறுத்தலை ஏற்படுத்துவதற்கும் காவிக் கும்பல் முயன்றது. வாரணாசி விஸ்வநாதர் கோயிலில் சில காவி வானரங்கள் இவரை கல்வீசி தாக்க முற்பட்டுள்ளனர்.

நண்பர்கள் எச்சரித்தபோதும், தாய், தந்தை அச்சப்படும்போதும், இவர் யோகி அரசை விமர்சிப்பதில் அச்சங்கொள்ளவில்லை. யோகி அரசு எத்தகைய ஒடுக்குமுறை செலுத்தினாலும், மக்கள்படும் துன்பங்களைப் பற்றியும் யோகி அரசின் அயோக்கியத்தனங்களை விமர்சித்தும் தொடர்ந்து பாடுவதில் உறுதியாக உள்ளார்.

அண்மையில், 2024 நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி மோடி அரசை விமர்சித்து ஒரு பாடல் பாடியுள்ளார். அதில் அதானி, நீரவ் மோடி, லலித் மோடி ஆகிய கொள்ளையர்களை அம்பலப்படுத்தியுள்ளார். அதுவும் மக்கள் மத்தியில் வரவேற்புக்குள்ளாகி உள்ளது.

000

மகாராஷ்டிராவிலும் இரு ராப் பாடகர்கள் காவிக் கும்பலை விமர்சித்து பாடல்களை பாடி வருகின்றனர். வெளிப்படையாக பா.ஜ.க. தலைவர்களின் பெயர்களைக் குறிப்பிடாமல், சூசகமாக புரிந்துகொள்ளும்படி பாடிவருகின்றனர். இவர்களையும் யூடியூப் சேனலில் லட்சக்கணக்கான மக்கள் பின் தொடர்கிறார்கள். மகாராஷ்டிரா போலீசும் இவர்கள் மீது வழக்கு பதிவுசெய்து ஒடுக்க முயற்சிக்கிறது.

ராஜ் முங்காசே என்பவர், முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் அவரது அணியினரை விமர்சித்து பாடுகிறார். “50 கோடியுடன் திருடர்கள் வந்திருக்கிறார்கள் பாருங்கள்… பாருங்கள், திருடர்கள் நன்றாக இருக்கிறார்கள்!” என்ற விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

உமேஷ் காடே, அரசியல்வாதிகள் தங்கள் தனிப்பட்ட இலாபத்திற்காக வறுமையில் வாடும் மக்களை புறக்கணிப்பதாக விமர்சித்துப் பாடியுள்ளார். “பொதுமக்களை நிர்வாணமாக்கி விட்டீர்கள்” என்ற வரிகள் மூலம் அரசியல்வாதிகள் தனது குடிமக்களைப் பற்றி கவலைப்படாததை தாக்குகிறார்.

இவர்கள் மட்டுமல்ல, இவர்களைப் போன்ற இன்னும் எண்ணற்ற நபர்கள் அரசை விமர்சித்து தங்களுக்கு தெரிந்த வடிவங்களில் செயல்பட்டு வருகின்றனர். குறிப்பாக, கலை இலக்கியவாதிகளும், அறிவுத்துறையினரும் அரசை விமர்சிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது தற்போது அதிகரித்துள்ளது. மக்களின் அவலநிலையும் பாசிஸ்டுகளின் நடவடிக்கையும்தான், இவர்களின் செயல்பாடுகளுக்கு அடிப்படை.


படிக்க: யோகி, மோகன் பகவத்-ஐ விமர்சித்த ராப் பாடகர் மீது தேசத் துரோக வழக்கு !


ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பலின் பேயாட்சியில் மக்கள் சொல்லொணா துயரத்தை அனுபவித்து வருகின்றனர். அம்பானி – அதானி கார்ப்பரேட் கும்பல்களுக்கான புரோக்கர் வேலையையே அரசாட்சியாக செய்துவருகிறார்கள். இதைக் கண்டு சமூக அக்கறையுள்ள அறிவித்துறையினர் கொதித்தெழுகின்றனர். தங்களுக்கு தெரிந்த வடிவங்களில் அரசை விமர்சித்தும், மக்களின் அவலநிலையைப் பற்றியும் தங்கள் கருத்துகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்கின்றனர்.

உதாரணத்திற்கு, பத்திரிகையாளரான முகமது ஜூபைர் தனது ஆல்ட் நீயூஸ் இணையதளத்தின் மூலம் சங்கப் பரிவாரக் கும்பல்களின் போலிச் செய்திகளை அம்பலப்படுத்தி வருகிறார். “ஹிந்துத்துவா வாட்ச்” (Hindutva Watch) என்ற இணையதளம், காவி பாசிஸ்டுகளின் ஒவ்வொரு நடவடிக்கையையும் அம்பலப்படுத்தி வருகிறது. தி வயர், ஸ்காரல் போன்ற இணையதளங்களும் மோடி அரசையும் காவிக் கும்பலின் நடவடிக்கைகளையும் அம்பலப்படுத்திவருகின்றன. சமூக அக்கறை கொண்ட பல பத்திரிகையாளர்கள் கார்ப்பரேட் ஊடகங்களைவிட்டு வெளியேறி சுதந்திர ஊடகங்களை தொடங்கி ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.வினரை விமர்சித்துவருகின்றனர்.

இவர்களைப் போன்றோரின் வரிசையில்தான் நேஹா சிங் ரத்தோர் இந்துமதவெறியர்களின் கோட்டையான உத்தரப்பிரதேசத்தில் பயப்படாமல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அவரை மக்களும் ஆதரிக்கிறார்கள். இது, நாம் மக்கள் படும் துன்பங்களை பற்றி பேசும்போது, அவர்களுடைய மனக்குமுறல்களை வெளிப்படுத்தும்போது, மக்கள் நம்மை ஆதரிப்பார்கள் என்பதை நமக்கு உணர்த்துகிறது. ஆனால், உத்தரப்பிரதேசம் போன்ற காவிகள் ஆட்சிபுரியும் மாநிலங்களில் மக்கள் பிரச்சனைகளைப் பற்றி பேசதான் ஆள் இல்லை.

காவி பாசிஸ்டுகள் தங்கள் கனவான இந்துராஷ்டிரத்தை நிறுவதை நோக்கி வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க; அம்பானி-அதானி பாசிசம் தீவிரமாகிவருகிறது. பாசிஸ்டுகள் ஏறித்தாக்கி வரும் இச்சூழலில் நாம் அவர்களைக் கண்டு அஞ்சக்கூடாது. பாசிசக் கொடுமைகளை சகித்துக்கொண்டு அமைதியாக இருக்கக்கூடாது. பாசிசத்திற்கு எதிராக நாம் ஏதாவது ஒரு வடிவங்களில் வினையாற்ற வேண்டும். அது கடுகளவு சிறிதாயினும் சிறந்ததுதான். இதுதான் நேஹா சிங் ரத்தோர் போன்ற கலைஞர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது.


சிவராமன்

மூன்று அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான அங்கீகாரம் ரத்து! | பு.மா.இ.மு கண்டனம்

0

01.06.2023

மூன்று அரசு மருத்துவக் கல்லூரிகளில்
மாணவர் சேர்க்கைக்கான அங்கீகாரம் ரத்து!

தேசிய மருத்துவ ஆணையத்தின் ஓரவஞ்சனை!

கண்டன அறிக்கை!

டந்த மூன்று தினங்களுக்கு முன்பு எல்லா பத்திரிகைகளிலும் வந்த செய்தி தேசிய மருத்துவ ஆணையம் தமிழ்நாட்டின் ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி, திருச்சி கி.ஆ.பெ.விஸ்வநாதம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான அங்கீகாரத்தை ரத்து செய்தது. இதனால் 500 மாணவர் சேர்க்கைக்கான இடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாகத் தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஆண்டுக்கு 16,000 ரூபாய் செலவில் மருத்துவம் படிக்க முடியும்.அதிலும் ஏழை மாணவர்களுக்குத் தான் இது போன்ற வாய்ப்புகள் பெரும் பலனைக் கொடுக்கின்றன. அதில் விழுந்த பெரிய அடி தான் இது.

தேசிய மருத்துவ ஆணையத்தின் இந்த நடவடிக்கை வன்மம் நிறைந்தது என்பதை சமூக சமத்துவத்திற்கான டாக்டர் சங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் அவர்கள் அம்பலப்படுத்தியுள்ளார். அதாவது மூன்று அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் பயோமெட்ரிக் வருகை பதிவேட்டைச் சரிவர ஏற்பாடு செய்யவில்லை கண்காணிப்பு கேமராக்களை முறையாக வைத்துக் கொள்ளவில்லை போன்ற சிறிய விஷயங்களுக்கெல்லாம் அங்கீகாரத்தை ரத்து பண்ணுவது அதே வேலையில் தனியார் மருத்துவமனை கல்லூரிகளில் முறையான வசதிகள் இல்லை, உள் நோயாளிகள் இல்லை அதற்கெல்லாம் தேசிய மருத்துவ ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்காது இதெல்லாம் உள்நோக்கம் கொண்டது எனப் பதிவு செய்துள்ளார்.

ஸ்டான்லி அரசு மருத்துவமனை போன்ற பல துறைகளைக் கொண்டுள்ள 24 மணி நேரமும் இயங்கக்கூடிய சிக்கலான அமைப்பு கொண்ட கல்லூரிகளுக்குத் தேசிய மருத்துவ ஆணையம் குறிப்பிட்டுள்ள அம்சங்களைச் சரி செய்யச் சற்று காலம் எடுத்துக் கொள்ளும், அதனைக் கணக்கில் கொண்டு எந்திர கதியாக அணுகாமல் கால அவகாசத்தைக் கூடுதலாகக் கொடுத்திருக்க வேண்டும் என்பதையும் பதிவு செய்துள்ளார்.


படிக்க: கார்ப்பரேட் – காவிமயமாகும் மருத்துவத்துறை ! தமிழகமெங்கும் மாணவர்களின் போராட்டம் !!


தேசிய மருத்துவ ஆணையத்தின் பரிந்துரைகளை அமல்படுத்தாத தமிழ்நாடு அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சரிதான். ஆனால் அங்கீகாரத்தை ரத்து செய்வதென்பது வன்மம் நிறைந்ததே. அப்படிப் பார்த்தால்இன்னும் ஒரு செங்கல்லை கூட நட்டு வைக்காத எய்ம்ஸ் மருத்துவமனை கல்லூரிக்கு ஆள் சேர்க்கை நடத்த அனுமதித்த தேசிய மருத்துவ ஆணையத்தின் மீது யார் நடவடிக்கை எடுப்பது?

இந்திய மருத்துவ கவுன்சில்-இன் ஊழல் முறைகேடுகளுக்கு மாற்றாகக் கொண்டுவரப்பட்டது தேசிய மருத்துவ ஆணையம் என்பதெல்லாம் ஒரு அண்டப் புளுகு. ஏனென்றால் ஊழலும் முறைகேடுகளும் எல்லாம் இன்னும் பன்மடங்கு அதிகரித்துள்ளது.

தேசிய மருத்துவ ஆணையம் பொறுப்பேற்ற உடனே தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீத இடங்களுக்கு எந்த கட்டுப்பாடும் ஆணையம் விதிக்காது என கை கழுவிக் கொண்டது. இந்த 50 விழுக்காடு இடங்களுக்குத் தனியார் கல்லூரிகள் முடிவு செய்வது தான் கட்டணம் இன்னும் எல்லாம். இதேபோன்று 50% புதிய பாடப்பிரிவுகளைத் தனியார் மருத்துவக் கல்லூரிகளே உருவாக்கி நடத்திக் கொள்ளலாம் எனவும் அனுமதி அளித்துள்ளார்கள். இந்த சட்டத் திருத்தங்கள் எல்லாம் தனியார் மருத்துவக் கல்லூரிகள் கொள்ளை அடிப்பதற்கான ஏற்பாடு தான். இதுபோக மருத்துவக் கல்லூரிகள் புதிதாகத் திறக்கும் போதும் அந்த கல்லூரியை நேரில் ஆய்வு செய்யாமலேயே அனுமதி வழங்கலாம் எனவும் விதிகளைத் திருத்தி அமைத்துள்ளார்கள்.

முன்னாள் பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தேசிய மருத்துவ ஆணையத்தை வரவேற்றுப் பேசும்போது முந்தைய இந்திய மருத்துவ கழகம் இன்ஸ்பெக்டர் ராஜ் என்ற கண்காணிப்பை வைத்துள்ளது அது தேவையற்றது எனப் பேசினார். குறைந்தபட்ச கண்காணிப்பு இருக்கும்போதே இவ்வளவு ஊழல் என்றால் கண்காணிப்பே அற்றுப்போகும் இந்த தேசிய மருத்துவ ஆணையம் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கும் கார்ப்பரேட்டுக்கும் ஒரு வரப்பிரசாதம் தான். ஆகவே இவர்கள் கண்டிப்பாக நடந்து கொள்வது போல் நடிப்பதெல்லாம் ஏமாற்று வித்தைதான்.


படிக்க: சீரழிந்து வரும் அரசு மருத்துவ கட்டமைப்பு! பலியாகும் அப்பாவி உழைக்கும் மக்கள்!


இதுபோக தமிழக அரசின் மாநில பட்டியலில் தான் மருத்துவம் சுகாதாரம் போன்ற அனைத்து விவகாரங்களும் இருந்தன. அதெல்லாம் படிப்படியாக காலி செய்யப்பட்டு வந்தது இன்று தேசிய மருத்துவ ஆணையத்தின் மூலமாக அது ஒட்டுமொத்தமாக முடிவுக்கு வரும் நிலைக்கு வந்துவிட்டது. நீட் தேர்வு மூலமாக மருத்துவ இடங்கள் பறிபோனது. தேசிய மருத்துவ ஆணையத்தின் மூலமாக ஒட்டுமொத்த அரசு மருத்துவமனைகளும் பறிபோகப் போகிறது. நீட்டின் தொடர்ச்சி தான் தேசிய மருத்துவ ஆணையம்.

தனியார்மயத்தின் ஏஜெண்டு தான் தேசிய மருத்துவ ஆணையம்; நீட் கியூட் அனைத்தும் தனியார்மயப்படுத்தத்தான். கல்வியை மாநில பட்டியலுக்குக் கொண்டு வருவதற்கான போராட்டத்தையும் தனியார்மயத்தை ஒழித்துக் கட்டுவதற்கான போராட்டத்தைத் தீவிரப் படுத்தும்போது தான் மருத்துவம் என்பது தரமாகவும் சேவை அடிப்படையிலும் கிடைக்கப் பெறும். செங்கோல் நிறுவப்பட்டது போதும், வேறு என்ன மோடி நமக்குச் செய்ய வேண்டும் என்ற ஆதீனங்கள் வழியில் நாம் சென்றால் கழுத்தில் கத்தி வைக்கப் போவது நிதர்சனமான உண்மை.


தோழர் ரவி,
மாநில ஒருங்கிணைப்புக்குழு,
பு.மா.இ.மு, தமிழ்நாடு.
9444836642.