privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

ஓடு தலைவா ஓடு !

-

லங்காரங்களால் சவடால் அடிக்கும் பொய்கள், தங்களை உண்மைகளுக்கும் மேலானவை என்று எப்போதும் காட்டிக் கொண்டாலும், அவற்றின் ஆயுள் அற்பமென்பதால், அவை சிதறி விழும் போது மீண்டும் மீண்டும் அவலத்திற்கு தள்ளப்படுவது இயற்கை. இது பஞ்ச் டயலாக்கிற்கு போட்டியாகச் சொல்லப்படும் பஞ்ச் தத்துவமென்றாலும் “காவலனி”ல் முறைத்து, பிறந்த நாளில் தடுமாறி, “தலைவா”வில் தள்ளாடுகிறது விஜயின் சினிமா மேக்கப். “Time to lead” எனும் தலைவா படத்தின் ‘கம்பீர’ முழக்கம் இப்போது “Time to run” என்பதாக சரிந்து விழுந்திருக்கிறது.

டெரர் ஃபேஸ்
“Time to lead” எனும் தலைவா படத்தின் ‘கம்பீர’ முழக்கம் இப்போது “Time to run” என்பதாக சரிந்து விழுந்திருக்கிறது.

சென்ற தேர்தலில் விஜய் அன் கோ தமக்கு நேரடியாக பிரச்சாரம் செய்யவில்லை என்பதிலிருந்து ஜெ-வுக்கும் வி-வுக்குமான முரண்பாடு ஆரம்பிக்கிறது. பிறகு தமிழ்நாட்டில் ரஜினி, விஜயகாந்த், சரத்குமார், அந்தக் காலத்தில் பாக்யராஜ், டிஆர் (இவர் இப்போதும் களத்தில் உள்ளார் என்றாலும் அதன் பரப்பளவு 2க்கு 2 அடி) துவங்கி பிறகு விஜய் வரைக்கும் ஆளாளுக்கு அடுத்த முதல்வர் என்று பிளக்ஸ் வைப்பது ஜெவுக்கு பிடிக்கவில்லை. ஒரு கட்டவுட்டுக்கு மற்ற உருவங்களெல்லாம் வித்தவுட்டாகத்தான் தெரியும் என்பது பாசிசத்தின் பாலபாடம்.

இதில் ரஜினி அரசியல் ஆட்டத்துக்கு வரவில்லை என்று ஓட, சரத்குமார் காலில் விழ, விஜயகாந்த் போயஸ் தோட்டத்திலிருந்து தனது வாழ்வைத் துவக்கி தற்போது அங்கேயே முடிக்குமளவு விரக்திக்கு தள்ளப்பட்டுள்ளார். மீதமிருப்பவர் விஜய். இதில் இளைய தளபதியே சும்மா இருந்தாலும் அவரை உசுப்பி விட்டு, அவரது படத்தைக் காட்டி அரசியல் ஆசைகளை ரசிகர்களுக்கு வளர்த்து விட அப்பா சந்திரசேகர் முயல்வதால் ஜெவின் கண்கள் கோபத்தில் சிவப்பானது.

கருணாநிதி காலத்தில் தமிழ்த் திரையுலகம் எந்த படமெடுத்தாலும் அதில் அரசியல் கலந்தோ, இல்லை முதலமைச்சரை கிண்டல் செய்வது மட்டுமல்ல, வில்லனாகவே காண்பித்தாலும் அவர் கண்டு கொள்வதில்லை. கருணாநிதியைப் பொறுத்தவரை ஆறுமாதத்திற்கு ஒரு முறை ஏதாவது சால்ஜாப்பில் ஒரு பாராட்டு விழாவை திரையுலகினர் நடத்தினால் அங்கே சென்று முழு நிகழ்வையும், குத்தாட்டங்களையும் உள்ளிட்டு ரசித்து, தன்னைப் பாராட்டும் பரிதாபமான வார்த்தைகளில் மூழ்கி திக்கு முக்காடுவார். அதைத் தவிர வேறு ஆசைகள் அவருக்கில்லை. தமிழ் சினிமாக்காரர்களும் முகவிற்காகவே இந்த ஜால்ரா சங்கீதத்தை அவ்வப்போது நிகழ்த்துவர். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு போதை. கருணாநிதிக்கு புகழ் போதை.

ஆனால் அவரது வாரிசுகளின் வாரிசுகள் படத்தயாரிப்பாளர்களாக அவதரித்ததால் அவர்களுக்கு நட்சத்திர நடிகர்கள் கால்ஷீட் கொடுத்தே ஆகவேண்டுமென்று கட்டாயம் ஆயிற்று. அப்படி சில முரண்பாடுகள் உருவானாலும் பெரிய அளவில் யாரும் பகைத்துக் கொள்ளுமளவு சிக்கல்கள் உருவாகவில்லை. ஆனால் விஜயக்கு ஏதோ கொஞ்சம் மனஸ்தாபம் ஏற்பட்டிருந்தது போலும்.

கூடவே அவரது படங்களில் சில வரலாற்று விபத்தாக சகல சென்டர்களிலும் ஓட (பல ஓடவில்லை என்பது வேறு விசயம்) அப்பா சந்திரசேகரது மனதில் அடுத்த முதல்வர் எனும் நோய் பெருங்கனவாக உருவெடுத்திருக்கலாம். இடையில் சட்டமன்ற தேர்தல் வந்த போது, உடன் கட்சி ஆரம்பிப்பது சாத்தியமில்லை எனுமளவுக்கு விவரம் இருந்ததால் விஜய் தரப்பு நிதானித்தது. அதிலும் திமுக எதிர்ப்பு மேலோங்கிய நிலையில் அதில் கலந்து கொள்ளும் பொருட்டு போயஸ்தோட்டத்துக்கு தூது விட்டார்கள். ஆனானப்பட்ட புரட்சித் தளபதி விஜயகாந்தே கூட்டணியில் சரணாகதி அடைந்த நிலையில் ஜூனியர் தளபதியெல்லாம் ‘அம்மா’ முன் எம்மாத்திரம்?

பச்ச புள்ள
இதற்கு மேல் இந்தப் பச்சப்பிள்ளை என்ன செய்ய முடியும்?

அதனால் தேர்தலில் நேரடியாக பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று தோட்டம் உத்திரவிட இவர்கள் கதிகலங்கினார்கள். நோகாமல் அரசியலில் நொங்கெடுக்கலாம் என்ற அவர்களது ஆசை அப்படித்தான் யதார்த்தத்தை கண்டு கதறியது. ஏதோ சமாளித்து அறிக்கை என்பதாய் நிறுத்திக் கொண்டாலும், ‘அம்மா’ இவர்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டுமென்பதில் உறுதி கொண்டார்.

அதன்படி விஜயின் பிறந்தநாள் கொண்டாட்டம் போலிசால் நிறுத்தப்பட்டது. அதில் சில நூறு பேருக்கு சில நூறு ரூபாயில் செலவு செய்து நலத்திட்டம் வழங்கும் விழாதானே அன்றி அரசியல் ஏதும் இல்லை என்று விஜய் சத்தியம் செய்தாலும் அம்மன் இரங்குவதாக இல்லை. அப்போதே அரசியலுக்கும் தனக்கும் காத தூரம், கட்சி கிட்சி எதுவும் தனது ஆழ்மனதில் கூட இல்லை என ஜூனியர் தளபதி தலையால் சத்தியம் செய்து ஊடகங்களில் நேர்காணல் கொடுத்தார். இதற்கு மேல் இந்தப் பச்சப்பிள்ளை என்ன செய்ய முடியும்? ஆனால் ஆத்தா, தான் குறித்த கருவறுப்புத் திட்டத்தில் இருந்து பின்வாங்குவதாய் இல்லை.

இந்த சூழ்நிலையில் தலைவா படம் வெளியாக இருந்தது. படத்தின் பெயர், முத்திரை முழக்கம், பஞ்ச் டயலாக், கதை அனைத்திலும் விஜயின் அரசியல் ஆசை குறித்த சித்திரம் நேரடியாகவும், இலைமறையாகவும் வருகிறது என்று உளவுத்துறை போலிசு தோட்டத்தில் கொளுத்திப் போட்டிருக்கும் போலும். உடனே திரையரங்குகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வருகிறது. அதுவும் தலைவா படத்தை விலைக்கு வாங்கியிருக்கும் பச்சமுத்துவின் கல்லூரிகளில் பணத்தை பறிகொடுத்த மாணவர்கள் வைத்திருக்கும் சங்கமாம். கேழ்வரகில் நெய் வடியவில்லை, அமுதமே வடிகிறது என்ற இந்த உண்மையை ஊடகங்கள் உண்மை போல செய்திகளாக வெளியிட்டன. விஸ்வரூபம் படத்திற்கு  பகடைக் காய்களாக பாய்கள் பயன்பட்டது போல தலைவாவிற்கு எவரும் சிக்கவில்லை போலும்.

ஏற்கனவே துப்பாக்கியில் இசுலாமியர்களின் கோபத்திற்கு ஆளான விஜய் தரப்பு விசுவரூபம் படத்திற்கு கிடைத்த நெருக்கடியைப் பார்த்து பல நாட்கள் தூக்கமில்லாமல் கழித்திருக்கும். இதனால்தான் என்னவோ இல்லை பிராயச்சித்தமாகவோ தலைவா படத்தை ரம்ஜான் அன்று ரிலீஸ் செய்வதாக ஊடகங்களில் விளம்பரம் கொடுத்திருந்தார்கள். எதிர்ப்பதற்கு பாய்கள் இல்லை என்பதால் வேறு காரணங்கள் கிடைக்காது என்று இவர்கள் தப்புக் கணக்கு போட்டார்கள்.

தலைவா ஷூட்டிங்
வேறு வழியின்றி தலைவா திரைப்படம் வெளிமாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் மட்டும் வெளியானது.

எஸ்.ஆர்.எம் கல்லூரிகளில் சில பல இலட்சங்களை தாரை வார்த்து விட்டு படிக்கும் நடுத்தர வர்க்க மாணவர்கள், சிறுநீர் கழிக்கும் போது கூட பச்சமுத்துவை நினைத்து கோபம் அடையக் கூடியவர்கள் அல்ல. எந்தப் பிரச்சினைக்கும் மூச்சு கூட விடக் கூடாது என எல்கேஜி பள்ளிகளையும் விஞ்சும் பயமும், கட்டுப்பாடும் கொண்ட இந்த கைப்புள்ளைகள் வெடிகுண்டு வைக்க கிளம்புகிறார்கள் என்றால், அதையும் செய்தியாக ஊடகங்கள் வெளியிடுகின்றன என்றால் இங்கே அம்மா பயம் எத்தகைய அதிகாரத்தைக் கொண்டிருக்கிறது என்பதறியலாம்.

மேலும் பச்சமுத்து இதற்கு முன் வெளியிட்ட படங்களுக்கெல்லாம் இந்த கைப்புள்ள மாணவர் வெடிகுண்டு கடிதம் வரவில்லை. இதெல்லாம் உளவுத்துறை திட்டத்தின் லாஜிக் மீறல் என்றால் அதையெல்லாம் இங்கே பேசுவதற்கு எவரும் தயராக இல்லை. தங்களுக்கு பாதுகாப்பு இல்லாத பட்சத்தில் திரையரங்க முதலாளிகள் படத்தை வெளியிட மாட்டோம் என கைவிரிக்க வேறு வழியின்றி தலைவா திரைப்படம் வெளிமாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் மட்டும் வெளியானது.

ஜூனியர் தளபதியின் கிச்சன் கேபினட் கூடி பேசியதில் கொடநாடு சென்று அம்மாவை உடன் சந்தித்து ஒரு போட்டோ வந்தால் கூட படங்களை வெளியிட முடியும் என்று முடிவு செய்தது. உடன் விஜயும் படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர் சகிதம் கொடநாடு சென்று அம்மாவிற்கு மனுக் கொடுக்க முயன்றார்கள். ஆனால் அவரது உதவியாளரைக் கூட பல கெஞ்சல்களுக்கு பிறகே பார்க்க முடிந்ததே அன்றி அம்மாவை அல்ல. வெறுங்கையுடன் சென்னை திரும்பினார்கள்.

திரைப்படங்களுக்கு தமிழ்ப்பெயர்கள் இருந்தாலே கேளிக்கை வரியில்லை என்று கருணாநிதி தனக்கு அவ்வப்போது கிடைத்த ஜால்ரா சங்கீதத்திற்காக கொண்டு வந்த சிறப்புச் சலுகை, சினிமா உலக முதலாளிகள் வரியின்றி கொள்ளையடிக்க உதவியது. தலைவா படத்திற்கு இந்த வரிவிலக்கும் கிடையாது என்று கொளுத்திப் போட்டார்கள். கேளிக்கை வரிவிலக்கை முடிவு செய்யும் குழு படத்தை பார்த்து இந்தப் படத்திற்கு வரிவிலக்கு கொடுக்க முடியாது என்று சொல்ல என்ன காரணம்?

படத்தின் உரையாடலில் ஆங்கில கலப்பு நிறைய வருகிறது என்பதால் அந்த முடிவாம். அடப்பாவிகளா, இதனால் ஏனைய படங்கள் அக்மார்க் தமிழில் வருகிறது என்றா சொல்கிறீர்கள்? இதுவும் உளவுத்துறையின் லாஜிக் மீறல் என்றாலும் தட்டிக் கேட்பதற்கு யாருமில்லை. இந்த கால இடைவெளியில் வெளி மாநிலங்களில் வெளியான தலைவா திரைப்படம், திருட்டு விசிடிகளாக தமிழகத்தில் படையெடுத்து விட்டனவாம். இதற்கும் ஒரு கோரிக்கையை தயார் செய்திருக்கிறார்கள்.

தற்போது ஜெயலிலதா கொடநாட்டிலிருந்து சென்னைக்கு திரும்பி விட்ட படியால் அம்மாவை உடன் சந்தித்து பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று தலைவா தரப்பினர் மனுப்போட்டு காத்திருக்கின்றனர்.

ஒரு சினிமாவை வெளியிடுவதற்கு இவ்வளவு தடைகளை ஒரு மாநில அரசு ஏற்படுத்தியிருக்கிறது என்றால் அதைத் தட்டிக் கேட்பதற்கு கூட இங்கே எந்த சினிமாக்காரனுக்கும் வக்கில்லை என்பதே உண்மை. படங்களில் கையை, காலை ஆட்டி வில்லன்களை பந்தாடும் இந்த நாயகர்கள் நிஜவாழ்வில் தொடை நடுங்கி கோழைகளாக இருக்கிறார்கள் என்பதே யதார்த்தம். ஆனாலும் இந்த இலட்சணத்தில் இவர்களுக்கு அடுத்த முதல்வர் ஆசை வராமல் இல்லை. தனது ரசிகர் பட்டாளத்தை வைத்து இந்த ஆசைகளை அவர்களே காசு கொடுத்து முழங்கச் சொல்லி கேட்டு ரசிக்கிறார்கள்.

விஜய்
ஜெயலிதாவின் காலில் விழுந்து கதறிய விஜய் என்ற செய்தியை எதிர்பார்க்கலாமா?

தலைவா படத்திற்கு பிரச்சினைகள் வந்த பிறகு இத்தகைய முழக்கங்கள் எதுவும் போடக்கூடாது என்று விஜய் தரப்பு தனது பட்டாளத்திற்கு சுற்றறிக்கை அனுப்பி, அப்படி எழுதப்பட்ட பேனர்களை அகற்றியதாம். அடுத்து இன்று விஜய் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் ஜெயலலிதாவின் சாதனைகளை பட்டியிலிட்டு, அப்பேற்பட்ட அம்மா தலைவா படப்பிரச்சினைகளை தீர்ப்பார் என்று கூறப்பட்டிருக்கிறது. இனி அடுத்தகட்டமாக என்ன செய்வார்கள்? ஜெயலிதாவின் காலில் விழுந்து கதறிய விஜய் என்ற செய்தியை எதிர்பார்க்கலாமா?

திமுகவிற்கு பிரச்சாரம் செய்த காரணத்தால் தனது படவாய்ப்புகளை இழந்த வடிவேலு கூட ஒரு பிரஸ்மீட் வைத்து அம்மா காலில் விழுகிறேன், என்னை வாழவையுங்கள் என்று அழுது அரற்ற வில்லை. அப்படியே அவர் அழுதாலும் அதை ஒரு சறுக்கலாக யாரும் நினைக்கப் போவதில்லை. மக்களை சிரிக்க வைப்பதற்காக தன்னை இழிவுபடுத்திக் கொள்ளும் நகைச்சுவை நடிகனுக்கு இருக்கும் சுயமரியாதை கூட ஹீரோவிற்கு இல்லையே!

சொந்த வாழ்வில் ஒரு பிரச்சினை அநீதியாக வந்தால் அதற்கு நீதி கேட்டு பேசுவது, சண்டை போடுவது எல்லாம் உழைக்கும் மக்களிடம் சகஜமாக காணப்படும் பண்பாடு. ஆனால் பண முதலைகளாகவும், கருப்பு பணத்தில் வயிறு வளர்க்கும் இந்த சினிமா நட்சத்திரங்கள் தமது சொந்தப் பிரச்சினைகளுக்கே கூட அப்படி போராட மாட்டார்கள் என்பது தலைவா பட பிரச்சினையிலும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

பல கோடி பட்ஜெட் தயாரிப்பில் பல கோடி சம்பளத்தில் பல கோடி விளம்பரத்தில் இவர்கள் ஒரு படத்தின் இலாபத்தை சடுதியில் பார்த்து விடுகிறார்கள். அதனால்தான் இவர்களால் அரசையோ இல்லை ஜெயலலிதாவையோ பகைத்துக் கொள்ள முடியவில்லை என்பது ஒரு பாதிதான். அன்றும் இன்றும் தமிழ் சினிமா என்பது ஆள்பவர்களை அண்டிப்பிழைத்து வாழும் ஒரு ஒட்டுண்ணிக் கூட்டம் என்பதை வரலாறு நிரூபித்திருக்கிறது.

தமிழக மக்களுக்கு எந்தப் பிரச்சினை வந்தாலும் இவர்கள் பயத்தாலும், அந்தஸ்தாலும் வாயே திறப்பதில்லை. அப்படி மீறி காவிரி, ஈழம் என்று சிலவற்றுக்கு வாய் திறந்தாலும் அது ஆளும் கட்சியின் நலனுக்கு உட்பட்டதாகவே இருக்கும். இதைத்தாண்டி திமுக, அதிமுக கட்சிகளின் மக்கள் விரோத ஆட்சித் திட்டங்கள், பிரச்சினைகளை எல்லாம் இவர்கள் தனிப்பட்ட பேச்சில் கூட கண்டிப்பவர்கள் இல்லை. ஆகவே ஜனநாயக உணர்வோ, இல்லை ஜனநாயக உணர்வுக்கான போராட்டமோ இவர்களிடத்தில் முளை விடும் வாய்ப்பு கூட இல்லை. மற்றவர்களுக்காக, மக்களுக்காக போராட விரும்பாதவர்கள் தங்களுக்காக மட்டும் போராட முடியுமா என்ன?

ஜெயலலிதாவின் பாசிச அணுகுமுறையால் தமிழ் சினிமாவுக்கு ஜனநாயக உணர்வு வந்து விடாது. ஏனெனில் தமிழ் சினிமா நட்சத்திர நடிகர்கள் என்பவர்கள் அதிகாரம் இல்லாத பாசிஸ்டுகள். இவர்களுக்கிடையே நடக்கும் சண்டை ஒரு விதத்தில் நாம் வேடிக்கை பார்த்து ரசிக்க மட்டுமே அருகதை உள்ளது.

பாசிச ஜெயவை எதிர்த்துப் போராடும் பணியை தமிழக மக்கள் தமது சொந்த அனுபவத்திலேயே பெறுவார்கள். அதற்கு தமிழ் சினிமாவின் தயவு தேவையில்லை. அதனால் தலைவாவின் சிக்கலுக்கு நம்மிடம் இரக்கமும் இல்லை.

  1. அரசியலுக்கு வருவதும் – வராததும், விஜயின் தனிப்பட்ட விருப்பம். தன்னுடைய அரசியல் களத்திற்கான அடித்தளத்தை உருவாக்குவதற்காக, அவரது படங்களில் அரசியல் சார்ந்த காட்சிகளையும் – வசனங்களையும் வைப்பதும் கூட விஜய் உள்பட அந்தெந்த படக்குழுவினரின் தனிப்பட்ட விருப்பம். இதைப்போலவே எம்.ஜி.ஆரும் – ரஜினியும் – விஜயகாந்தும், சினிமாவில் தங்களது அரசியலை நுழைத்திருக்கிறார்கள் என்பது கடந்தகால வரலாறு. குறிப்பிட்ட சிலர் மட்டுமே அரசியலை கையில் எடுக்க வேண்டுமென்ற, எந்தவித கட்டுப்பாடும் இங்குள்ள அரசியலுக்கு இல்லை. இன்னும் சொல்லப்போனால், தமிழகத்தின் பெரும்பாலான ஆட்சியை சினிமாத்துறையை சார்ந்தவர்களே கைப்பற்றி உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது. எனவே, விஜயை அரசியல் ரீதியாக ஒடுக்க நினைப்பதும், அவரது தொழில் சார்ந்த வருமானத்தையும், அவரை நம்விய தொழிலாளர்களின் பொருளாதாரத்தையும் சீர்குலைக்க நினைப்பது கூட, மனம்பிறழ்ந்த மனநிலையின் உச்சக்கட்டமே.

    ‪#‎விஜயை ஆதரிக்கிறேன்‬!

    • /// அவரது தொழில் சார்ந்த வருமானத்தையும், அவரை நம்விய தொழிலாளர்களின் பொருளாதாரத்தையும் சீர்குலைக்க நினைப்பது கூட, மனம்பிறழ்ந்த மனநிலையின் உச்சக்கட்டமே.//// முதலாளிகளுக்கு ஆபத்து வரும் போது தான் தொழிலாளர் நிலை பற்றி நினைப்பு வரும். அதே முதலாளிகளுக்கு லாபம் வரும் போது தொழிளார்கள் பற்றிய நினைப்பே வருவதில்லை……

    • நீங்க விஜயை ஆதரிங்க இல்ல, ஆதரிக்காம இருங்க, பிரச்சினை அது இல்ல.
      “ஏன் இ… தளபதி தனக்கு நியாயம் கிடைக்க போராடாமல் அம்மையின் காலில் விழுந்து கிடக்கிறார்?” அரசியலுக்கு வரணும்னா துணிச்சலா, வெளிப்படையா ஒரு அரசியல் படம் எடுத்து எந்த பிரச்சினை வந்தாலும் வெளியிட்டு நான் பெரிய அரசியல்வாதி என்று நிருபிக்கலாம். அத விட்டு இப்படி காமெடி பண்ணினா எல்லாரும் சிரிக்கத்தான் செய்வாங்க.

    • நீங்கள் வடிவேலுவை ஆதரித்திருந்தால் அதில் கொஞ்சமாவது நியாயம் இருக்கும், போயும் போயும் இந்த பயலயா?

      இந்த புடிங்கிளெல்லாம் என்ன திமிர் இருந்தால் மக்களை ஏமாளியாக நினைத்து முதலமைச்சர் ஆக நினைப்பானுங்க?

      துப்பாக்கி படத்துக்கு இஸ்லாமியர்கள் எதிர்ப்பு வந்ததும் அதற்கு பிறகு நடந்த பத்திரிக்கை சந்திப்பில், பச்சை சட்டை அணிந்து வந்தது, இன்று ரம்ஜானுக்கு படத்தை வெளியிடு செய்வது, ‘உழைத்திடு உன்னால் முடியும்’ என்று மக்களைப்பார்த்து சொல்வது, etc., இப்படி நாடகம் ஆடுரானே இவனோட வாழ்க்கையெல்லாம் எவ்வளவு இழிவாக இருக்கும், தூ!

    • குறிப்பிட்ட சிலர் மட்டுமே அரசியலை கையில் எடுக்க வேண்டுமென்////அரசிய்லை கையில எடுப்பதோட மக்கள் வாழ்க்கையை சீரழிக்க விசயகாந்,விசய் மாதிரி யார் வேணா வரலாம்

  2. These people are all leg shakers when they see someone powerful than them. In real life, they can’t even do anything normal to save their own life and face. These people are not worth our money, time. Time to time, it has proved that people are only obsessed with delusion of grandeur. They want to become, C.M., P.M, President, Obama all those crap. They can never lead anybody. Thaliva…. Alla vidu..Time to run.. Escape…

  3. ஜனநாயக உணர்வோ, இல்லை ஜனநாயக உணர்வுக்கான போராட்டமோ இவர்களிடத்தில் முளை விடும் வாய்ப்பு கூட இல்லை. மற்றவர்களுக்காக, மக்களுக்காக போராட விரும்பாதவர்கள் தங்களுக்காக மட்டும் போராட முடியுமா என்ன? good lines

  4. அரசியலில் இதெல்லாம் சகஜம் என்பது நாடு அறிந்த உண்மை.விஜய் அரசியலுக்கு வரட்டும்,,அது அவர் உரிமை,விருப்பம்.அதிகாரம் ,தன் கையில் உள்ளதால்,சினிமா தூண்டுதலைஅதிகாரம் கொண்டு அடக்குகிரார்.விஜய் எப்படி அடுதவன் பணம் மூலம் அரசியல் அஸ்திவாரம் போடுகிறாரோ,அதே போல் பொது ம்க்கள் கொடுத்த அதிகாரம்,அந்த அஸ்திவாரத்தை அசைக்க ப்யன் ப்டுகிறது.
    விஜய் நேர் வ்ழியில் ஆசை ப்டட்டும்!!!!

  5. மற்றவர்களுக்காக, மக்களுக்காக போராட விரும்பாதவர்கள் தங்களுக்காக மட்டும் போராட முடியுமா என்ன?

    excellent !

  6. சினிமா துறை சங்கங்கள் என்ன செய்கின்றன நடிகர் ஜாம்பவான்கள் (ரஜினி கமல் சத்தியராஜ் போன்றவர்கள்) இதற்க்கு என்ன கருத்து சொல்லப் போகிறார்கள் இது விஜயின் விளம்பர யுக்தி இல்லை ஏனென்றால் கலெக்டர் முன் நின்று விளம்பர பேனர்களை அகற்றும் போதே தெரிந்தது விட்டது அரசை பகைத்ததால் வந்த வினை என்று என்று போகுமோ இந்த சர்வாதிகார போக்கு

  7. ஜாபகம் உள்ளதா?
    இனிமேல் மீனவனின் மேல் விழும் ஒவ்வொரு அடியும் என்மேல் விழுவதுபோல்….”தலைவர்” 2 வருடத்திர்க்கு முன்பு நாகப்பட்டினத்தில் வீர விசனம் பேசியது…..தோல் தடிப்பானதால்,வலியை உணர முடியவில்லை போலும்…..

  8. ஒரு சினிமாவை வெளியிடுவதற்கு இவ்வளவு தடைகளை ஒரு மாநில அரசு ஏற்படுத்தியிருக்கிறது என்றால் அதைத் தட்டிக் கேட்பதற்கு கூட இங்கே எந்த சினிமாக்காரனுக்கும் வக்கில்லை என்பதே உண்மை. படங்களில் கையை, காலை ஆட்டி வில்லன்களை பந்தாடும் இந்த நாயகர்கள் நிஜவாழ்வில் தொடை நடுங்கி கோழைகளாக இருக்கிறார்கள் என்பதே யதார்த்தம். ஆனாலும் இந்த இலட்சணத்தில் இவர்களுக்கு அடுத்த முதல்வர் ஆசை வராமல் இல்லை. தனது ரசிகர் பட்டாளத்தை வைத்து இந்த ஆசைகளை அவர்களே காசு கொடுத்து முழங்கச் சொல்லி கேட்டு ரசிக்கிறார்கள்.—- இவர்கள் முதல்வராக வந்தால்………… ஏற்கனவே முதல்வராக வந்தவர்களின் வரலாற்றை பார்த்தால் புரியும்…

  9. People are no more fools to elect any one as leader by his presence as a leader as a movie. People are more intelligent than they think of. Movie is a movie so if its released nothing is going to change.

  10. ”தமிழ் சினிமா நட்சத்திர நடிகர்கள் என்பவர்கள் அதிகாரம் இல்லாத பாசிஸ்டுகள். ”
    மறுக்க முடியாத உண்மை.

  11. ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படப்பிடிப்புக்குக் கிளம்பிய எம்.ஜி.ஆரை வழி அனுப்பி வைக்க விமான நிலையத்துக்கு வந்தார் அன்றைய முதலமைச்சர் கருணாநிதி. ஆனால், படம் வெளியானபோது இருவரும் இரு வேறு துருவத்தில் இருந்தார்கள். ‘நடிகை ஒருவரை மதுரை மாநாட்டுக்கு அழைத்து வர அனுமதி கேட்டார். அதனை மாவட்டச் செயலாளர் மதுரை முத்து சம்மதிக்கவில்லை’ என்று கருணாநிதி ஆட்கள் பொய் பிரச்சாரம் பரப்பினார்கள். ‘இது திராவிட இயக்கமப்பா… இங்கு இது தாங்காது’ என்று கருணாநிதி அன்று சொன்னாராம். (பிற்காலத்தில் குஷ்புவைக் கொண்டு வரும் அளவுக்கு கருணாநிதி மனப்பக்குவம் பெற்றது திராவிட இயக்கத்தின் பாவம்) இந்த மன வேற்றுமைகள் எம்.ஜி.ஆரைத் தனிக் கட்சி ஆரம்பிக்கத் தூண்டின. சமாதானம் பேச கருணாநிதியிடம் அனுமதி பெற்று, நாஞ்சில் மனோகரனும் மாறனும் எம்.ஜி.ஆரிடம் போன நேரத்துக்கு இடையில் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ கட் அவுட் கொளுத்தப்பட்டது. சமாதானத்தை நிராகரித்து, சண்டையை அறிவித்தார் எம்.ஜி.ஆர். அதற்கு எதிர்வினையாக, கட்சியை விட்டு நீக்குவார்கள் என்று எம்.ஜி.ஆர். நினைக்கவில்லை. முதலில் அதிர்ச்சி அடைந்தார். ஆனால், ஊரெங்கும் ரசிகர்கள் வந்து கொந்தளிக்க ஆரம்பித்தார்கள். ‘தூக்கி எறிந்த சர்வாதிகாரம்… வாரி அணைத்த மக்கள் கூட்டம்’ என்று பேனர் போட்டு, தன்னுடைய கட்சியை எம்.ஜி.ஆர். தொடங்க… கருணாநிதி இக்கு ஆப்பு

    போத்தி கோபாலகிருஷ்ணன்(ஸ்ரீமீனாட்சி பாரடைஸ் தியேட்டர் உரிமையாளர்): அரசியல் பிரச்னையால் உலகம் சுற்றும் வாலிபன் படத்தை வெளியிட தடை விதித்தனர். எதிர்ப்பை மீறி வெளியிட முடிவு செய்தோம். எம்.ஜி.ஆர்., எங்கள் வீட்டிற்கு வந்து படப்பெட்டியை கொடுத்தார். தியேட்டருக்கு மின் சப்ளை துண்டித்தனர். முதன் முதலாக ஜெனரேட்டர் வாங்கி படத்தை திரையிட்டோம். எங்கள் தியேட்டரில், 217 நாட்கள் ஓடியது. வேறெங்கும் வெளியிடாததால், வெளியூரிலிருந்து உணவு பொட்டலங்களுடன் வந்து, பல நாட்கள் தங்கி படம் பார்த்து சென்றனர்.

    • இப்போ என்ன சொல்ல வாற? விஜய் படமும் ஓடும்னு சொல்றிய? பகல் கனவு காண்றத விட்டுட்டு போயி பொழப்பப் பாரு!

      • அது ஓடுனா என்ன .. ஓடலன்ன என்னோட மயித்துக்கு என்ன ? கருணாநிதிய வெரல் சப்புற பாப்பானு சொல்லுறானே .. அவனுக்கு வரலாற்ற சொன்னேன் ..

  12. [“அலங்காரங்களால் சவடால் அடிக்கும் பொய்கள், தங்களை உண்மைகளுக்கும் மேலானவை என்று எப்போதும் காட்டிக் கொண்டாலும், அவற்றின் ஆயுள் அற்பமென்பதால், அவை சிதறி விழும் போது மீண்டும் மீண்டும் அவலத்திற்கு தள்ளப்படுவது இயற்கை”
    “ஒரு கட்டவுட்டுக்கு மற்ற உருவங்களெல்லாம் வித்தவுட்டாகத்தான் தெரியும் என்பது பாசிசத்தின் பாலபாடம்”.
    “படங்களில் கையை, காலை ஆட்டி வில்லன்களை பந்தாடும் இந்த நாயகர்கள் நிஜவாழ்வில் தொடை நடுங்கி கோழைகளாக இருக்கிறார்கள் என்பதே யதார்த்தம்”.
    “அப்படி மீறி காவிரி, ஈழம் என்று சிலவற்றுக்கு வாய் திறந்தாலும் அது ஆளும் கட்சியின் நலனுக்கு உட்பட்டதாகவே இருக்கும்”.]

    பின்னிட்டீங்க போங்க..

  13. 1. Nothing wrong in cine actors coming to politics. Even JJ used to dance half naked in MGR movies. But the question is, will actors establish good rule in the state? Answer is No.

    2. Vijay and SAC unncessarily went and met JJ and wanted to provide outside support in last election. They are paying for their stupidity now.

    3. Can JJ be trusted? No. Almost all who supported JJ are eliminated by her. She is a typical fascist and narcisst Brahmin.

    4. Film actors will never join together to fight against Govt. Because they deal in black money and need political support to protect their investments.

    5. Vijay has 15 crores riding on each of his movies. Vadivelu has much less to loose. Moreover Vadivelu made few personal wrong decisions and he has reconciled to his fate.

    6. Vijay is like a person living in glass house. He cannot openly fight against JJ because he will loose the crores in business. And JJ is not fighting on principle, she is as usual using the police rowdies for her political arrogance.

    7. Anyone who has read any of the false FIR criminal cases filed by police will declare that tamilnadu police has no brain. So its not a surprise that police came up with strange reasons to stop the movie.

    8. More than 2000 files are pending in Secretariat because no Minister or IAS officer can make decisions on their own. All these files are pending for JJ decisions.
    Now this arrogant lady is spending time in stopping an useless movie which anyway only Vijay fans will watch.

    9. JJ is known to make wrong choices. She toppled Vajpayee Govt in 1 vote. For the next 15 years, DMK is maintaining a strong hold in Centre.
    She allowed Muslims to agitate against Viswaroopam and Thuppaki and Internet movie. This has made Muslim terrorists bold enough to openly kill Hindu leaders.
    Why should JJ stop a movie which was cleared by Censor? Cheap and childish.

  14. JJ is a very educated woman and is better than 97% of the politicians including Muka/Murasoli Maran and co.

    her & Vaiko are the two best rajya Sabha MPs from TN of those times.

    It is necessary that some actors need to be shown their place.They cant mix business and politics,they have to make the choice and enter politics giving up cinema.

    She empowers the Bureaucracy and Cops to run the state unlike DMk which allows its rowdies to do atrocities on the ground.

    She has good policies and saved the state from LTTE/DMK more than once.

    AIADMK is the opposition to DMK’s manipulative politics involving government staff and state machinery.

    Most secular/progressive groups are guilty of encouraging muslims blindly and this includes periyar also,this tradition goes back to eating nonbu kanji and putting mokkai during ramzan.

    JJ ll try to match this because otehrwise Thatha ll say that JJ is a brahmin,thus she is not helping Muslims.

    She has solved the Food security with the canteens,she got the central tribunal to provide white paper on cauvery water sharing instead of opening sarvagnar statue and such stunts.

    She upset the government because they were not helping her in survival,she has her sweet revenge in more ways than one.

    1.getting absolute majority while facing election in the opposition
    2.Winning enough seats even while facing election as the government

    This proves that anti incumbency is much less for her.

    I see her doing even better this time.

    • இது பொதுவா பாப்பார புல்லைஙக பரப்பி விடுர கருத்துக்கல் தான.ஜெயா ஒரு முட்டால் யென்பதும்,தன் காலில் அல்லக்கைகலை விழ வைத்து ரசிக்கும்,ய் ஒரு மனநொயாலி யென்பதும் அனைவரும் அரிந்ததெ.செயல்படாத அரசு. ஒரு அமைச்சன் பெயர் கூட மக்கலுக்கு தெரியாது.

      • yeah,correct.You are the most intelligent one on earth and your judgement is amazing.

        We need the government to deliver on issues,it doesn’t matter if i can remember a minister’s name or not.

        whats the point of remembering names like Durai Murugan/Arcot Veerasamy/Kn Nehru etc etc?

        She has every right to keep a power hierarchy in her party,we know what happened to a person like Vaiko,when he was removed from the party to make way for a road side porikki like Stalin.

        • யோவ் ஹரிகுமாரு என்னய்யா பேசுறீரு.உனக்கு புடிக்குதோ இல்லையோ ஸ்டாலின் தமிழ்நாட்டின் பெரிய கட்சிகள் இரண்டில் ஒன்றின் தலைவர்களில் ஒருத்தர்.துணை முதல்வர்,சென்னை மேயர்,எம்.எல்.எ இப்படி பல பதவிகள் வகித்தவர்.அவரை பத்தி பேசுறப்ப குறைந்த பட்ச நாகரீக வார்த்தைளை பேசு. நீ இங்க குலைக்கிறதுனால ஸ்டாலினுக்கு ஒரு ஹேரும் போவப்போரதில்லை.சூரியனை பாத்து ஏதோ ஒன்னு உர்ர் உர்ர் ன்ன மாதிரிதான் அது.

          அவர பொறுக்கின்னு சொல்றியே.அவர் எங்கே பொறுக்கித்தனம் பண்ணுனார்னு சொல்லு.அதுனால உனக்கு சொந்த பாதிப்பு ஏதும் உண்டாயிருந்தா சொல்லு.நீ திட்டுறது நாயமாயிருக்கும்.

          ஜெயலலிதாவை விழுந்து விழுந்து சப்போர்ட் பன்றியே.அவுங்கள பத்தி ஏதாவது தப்பா சொல்றோமா.ஒரு மனிதனின் தனிப்பட்ட வாழ்க்கையை பத்தி புரணி பேசுறவன் மிக மிக அற்ப புத்தி கொண்டவன்.நாலு பேரு இருக்குற சபையில அவன போல அற்பனுக்கு எல்லாம் பேசுறதுக்கே தகுதி கிடையாது.அரசியல்வாதிகளின் கொள்கைகள் செயல்பாடுகளை விமரிசிக்கலாம்.அதற்காக தரம் தாழ்ந்து கெட்ட வார்த்தைகள் பேசுறியே நீயெல்லாம் என்னய்யா மனுஷன்.

          • why should i?

            If you become MP/MLA today, doesn your past life become redundant,so Jeppiar was not a rowdy before?

            I know it makes no difference to him what i think but what about you?

            I think you didn’t have people living in Chennai in the 70s,there are too many stories about his atrocities.

            and what argument is this,did u suffer personally because of him?

            So,you should act only if u suffer personally?

            And many many people have spoken more than necessary about Jayalalitha,her relationship with MGR,Sasikala etc etc in public speeches and even Murasoli Maran has spoken/written about it.

      • தமிழ்னாட்டின் அமைச்சர்களின் பெயர்களை வரிசையாக எழுது:
        சரியாக எழுதும் ” அம்பிக்கு” 1000 பொற்காசுகள்…..

    • //This proves that anti incumbency is much less for her//

      just think what happened in 1996 (she herself lost is Bargoor) and 2006, dont blindly support her..just speaking in a convent english dosent show-cast her as a bureaucrat..she is an aristocrat in mind and fascist by nature ……..

      • How long are you going to play this personality cult?

        1996 was her big lesson and everyone including the peruchaali of your street and my street were against her.

        But we are discussing almost 20 years since then.

        Most of her high handed actions are the same thing that happened to MGR,MK controls the governement servants and institutions and they often conspire against the ruling party like those strikes.

        It is not just about convent English,Dayanidhi Maran also speaks convent English,so what?

    • “JJ is a very educated woman and is better than 97% of the politicians including Muka/Murasoli Maran and co..”

      படிப்பு ஒரு தகுதி என்றால், மும்பையில் சிவப்பு விளக்கு பகுதியில் தொழில் (?) செய்யும் ஒருவரின் மகள் மேல் படிப்பிற்காக அமெரிக்கா செல்கிறார். மீதத்தை நீங்களே பூர்த்தி செய்து கொள்ளுங்கள்.

        • அதானே பார்த்தேன்!! தேவதாசி முறையை ஆதரிக்கும் —– சேர்ந்தவராகிய நீங்கள் இவரை விட்டுக்கொடுப்பீர்களா? இங்கு இவர் என்று நான் குறிப்பிட்டிருப்பது அமெரிக்காவிற்கு படிக்கச் சென்ற பெண்ணை அல்ல.

          • I was referring to the kid,and regarding prostitution,i am against it and i dont believe in paying money for doing it.

            But i am against organized whore houses/forced prostitution and slave trade,but if a woman does it for money privately,even though i wont indulge and discourage it,i dont see it as a crime even though i feel bad about the person using her services.

            And again,not every ________ supported devadasi system or indulged in it.

  15. 1967 முதல் இன்றுவரை சினிமா தொடர்பில்லாத எவரும் தமிழக முதல்வராக ஆனதில்லை….[ மன்மோகன் சிங் தான் இந்தியாவின் ”உண்மையான ” பிரதமர் என்று நீங்கள் நம்பும் பட்சத்தில் ஓ. பன்னீர் செல்வத்தை தமிழக முதல்வர் என்று எண்ணிக்கொள்வதில் எனக்கு ஆட்சேபமில்லை………. ]…..முதல் படத்தில் நடிக்கும் போதே முதல்வர் கனவில் மிதக்கும் தறுதலைகளுக்கு ஒரு செக் வைப்பதற்கேனும் ஜெ.வின் இந்த அராஜகத்தை நான் வரவேற்கிறேன்….

    அப்படியேனும் மண்டையில் குறைந்தபட்சம் ஒரு கிராம் மூளையாவது உள்ள எவரேனும் பதவிக்கு வர வாய்ப்பு கிட்டுமே?

    • ஜெ -விற்கு மூளை இல்லை என்று சொல்ல வருகிறீர்கள். அப்படித்தானே? ஏனெனில் ஜெ-வும் அதே குட்டையில் ஊறிய மட்டைத்தானே!

      • அதுதான்1967 ல் இருந்து …என்று ஆரம்பித்துவிட்டேனே…….. ?சா

  16. கட்டுரை மிகநன்றாக இருந்தது. அவர் ஒரு தொழில் செய்கிறார். அதில் வரும் சிக்கல்களுக்கு அவர் மட்டும் பொறுப்பாகிறார். அவர் சினிமாநடிகராய் இருப்பதால் அது ஒரு பொதுப் பிரைச்னை போன்று ஒருந்தோற்றத்தை கொண்டு வந்து மக்களை உணர்ச்சி வசப் பட வைத்து உசுப்பி விடும் கீழ்த் தரமான நிலை உருவாகக் கூடும். அது வரப் போகும் காலக் கட்டங்களில் தெரியும். பவுடர் டப்பாவை கையில் எடுத்தவுடன் கோட்டை பற்றி கனவு காணும் அட்ட கத்திகள் இருக்கும் வரை இந்த நிலை நீடிக்கும்.மக்கள்தான் தெளிவாய் இருகக வேண்டும். மக்களும் தெளிவாய் இருக்கிறார்கள் என்பதை அட்ட கத்திகளும் புரிந்து கொள்ளட்டும்.

  17. தமிழகத்தில் திரையிடா விட்டால் விஜய் வட்டாரம் கலங்கி விடும் என்ற மாயையில் வினவும் சிக்கிக் கொண்டது ஆச்சரியம் தான்.

    அருகில் உள்ள கேரளாவில் மட்டும் 145 தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ளது. கடந்த 9 ஆம் தேதி முதல் திரையிடப்பட்ட வளைகுடா மற்றும் பிற நாடுகளிலும் டிக்கட் முன்பதிவுகள் முதல் வாரம் விற்பனையாகி விட்டன. எனவே, செலவு செய்த 60 கோடி பட்ஜெட்டில் லாபத்தை ஏற்கனவே பார்த்து விட்டனர்.

    ஆக, விஸ்வரூபம் படத்திற்காக பிரஸ் மீட் வைத்து நீலிக் கண்ணீர் வடித்து 100 கோடியைத் தாண்ட வைத்த நடிகர் கமல்ஹாஸனை விஜயும் பின்பற்றுகிறார் என்று சொல்லலாம்.

    இந்த போலிநாடகங்கள், சினிமா அரசியலின் சமீபத்திய ட்ரெண்ட். மக்கள் உணர்ந்து கொள்ளும் வரை இது இப்படித்தான் போகும்

  18. ஏன் இவ்வளவு நாள் கொண்டாடப்பட்ட விஜய் அனைத்து தரப்பிலும் புறக்கணிக்கப் படுகிறார்..

    விஜய் மற்ற நடிகர்ளினின்று எங்கே மாறுபடுகிறார்.

    இப்போது இவ்வளவு பிரச்சனைகளை சந்திக்கும் விஜய் முன்பு இதே தரப்பில் இருந்தும் இதன் எதிர் தரப்பில் இருந்தும் ஆதரவு பெற்று பிழைப்பு நடத்தி வந்தவரே..

    ஆனாலும் எப்போதும் அவர்கள் இடத்தில் தன்னை நினைத்துப் பார்த்துப் பூரித்துப் போபவர்.

    இப்போது ஒரு புதுமுக நடிகரருக்கு கிடைக்கும் அடிப்படை ஆதரவு கூட அவரருக்கு எந்த சங்கங்களில் இருந்தும் கிடைக்கவில்லை.

    திமுக முதலில் முன்னிலைப் படுத்தியது. அதன்மூலம் டெல்லியில் தபால்தலை வெளியிட்டு, தன் படங்களில் சம்பந்தமே இல்லாத இடங்களில் புகுத்தி பெருமை கொண்டார் விஜய்.

    திமுகவுடன் இருக்கும் போதே ராகுல் காந்தியை பார்த்து வந்தார். திமுகவுடன் பகையை வளர்த்தார்.

    திமுக படத்தை தடை செய்ய முயல அம்மாவிம் தஞ்சம் புகுந்தார்.

    தற்போது பல்வேறு இடங்களில் கூட்டம் போட்ட விஜய் அம்மாவின் பெயரை மறந்தும் எங்கும் உச்சரித்தாரில்லை.

    படம் வெளியிட தடை யாரென தெரிந்ததும் அதிமுக அமைச்சர்களே பொறாமை கொள்ளும் வண்ணம் பாராட்டிக் குளிர்விக்க முயன்றார்.

    விஜயின் மக்கள் செல்வாக்கோ அல்லது இருப்பதாக சொல்லப்படும் இன்ன பிறவோ இந்த பிரச்சனைக்குக் காரணம் அல்ல.

    காரணங்கள் – துரோகம் இழைத்தல் மற்றும் தன்னிலை மறந்தல்

  19. Vinavu,You have printed certain rules to be followed by readers when they write their comments.But it seems you are not following your own guidelines.How you have published the nasty description about TN”s former Dy Chief Minister by one reader by name Harikumar?I am referring to the comment under serial number 18.1.1.1.Or you are also enjoying such comments?I earnestly and seriously request you to answer this question.If you think you are fair,remove the comment referred immediately.We frequent Vinavu site not for reading these type of comments please.Do not lower your standard and principals.

  20. அன்றும் இன்றும் தமிழ் சினிமா என்பது ஆள்பவர்களை அண்டிப்பிழைத்து வாழும் ஒரு ஒட்டுண்ணிக் கூட்டம் என்பதை வரலாறு நிரூபித்திருக்கிறது.

  21. முன்பு, ஆத்தாவின் பாசிச அரசியலுக்கு பயந்து வடிவேலுவை இதே திரைப்பட கலைஞர்கள் கை விட்டார்களே? கமலுக்கு இதே மாதிரி பிரச்சனை ஏற்பட்ட போது இதே திரைப்பட கலைஞர்கள் முதலில் கை விரித்தார்கள். கமலுக்கு ஊடகம், மக்கள், நீதிமன்றம் எல்லாம் கை கொடுத்த பிறகு கடைசியில் தான் திரைப்பட கலைஞர்கள் ஒப்புக்கு அடக்கி வாசித்து ஆதரவு கொடுத்தார்கள். இதே விசய், வடிவேலுவுக்கும் கமலுக்கும் ஆதரவு கொடுத்தாரா? கலைஞர் ஆட்சியில் சவுண்டு விட்ட ”தலயும்” கை தட்டிய குஜினியும் எங்கே?

  22. ***** மக்களை சிரிக்க வைப்பதற்காக தன்னை இழிவுபடுத்திக் கொள்ளும் நகைச்சுவை நடிகனுக்கு இருக்கும் சுயமரியாதை கூட ஹீரோவிற்கு இல்லையே!***********.
    சுய மரியாதை பொது சொத்து. ” நகைச்சுவை நடிகனுக்கு இருக்கும் சுயமரியாதை கூட” சற்று பொருந்தாத வார்த்தை. உண்மையில் நகைச்சுவை நடிகர் நன்கு சிந்திக்கும் அளவுக்கு அறிவுடையவர். மற்றவரை சிந்திக்க வைக்க வினவு தளம் நடத்துபவர் எவ்வளவு சிந்திக்க வேண்டுமோ அதைப்போல சிரிக்க வைக்கவும் சிந்திக்க வேண்டும். விரல் வித்தை கட்டவோ, அருகில் ஒரு சதை பிராணியை நிற்க வைத்து தன்னை உயர்த்திக் காட்டும் கழிசடை கதா நாயகர்கள் போல அல்ல. அவர்கள் சுய மரியாதையை மிக அதிகம் என்பது என் கருத்து

  23. […] நம் பாசமிகு அம்மா இளைய தளபதி விஜய்யின் தலைவாவுக்கு வைக்கும் ஆப்பின் முன்னால் இது ஒன்றும் பெரிய ஆப்பில்லை தான்.  (மேலும் விவரங்கள் தெரிய வினவு இணைய தளத்தில் வந்திருக்கும் ஓடு தலைவ…படிங்க) […]

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க