Sunday, July 21, 2024
முகப்புவாழ்க்கைபெண்ஷகீலா - கவர்ச்சி சுதந்திரமா ? பர்தா கண்ணியமா ??

ஷகீலா – கவர்ச்சி சுதந்திரமா ? பர்தா கண்ணியமா ??

-

“ஒரு மனிதனை நாய் கடித்து விட்டது” என்பது நியூஸ் இல்லை. மனிதன் நாயைக் கடித்து விட்டான் என்றால் அதுதான் நியூஸ் என்பது பத்திரிகை உலகிலற்கு வழிகாட்டும் ஒரு பிரபலமான முதுமொழி. அந்த வகையில் தமிழ்நாட்டில் இந்த வாரம் வெளியாகியிருக்கும் முக்கியமான நியூஸ்: “பர்தாவில் ஷகீலா!”
“எந்த ஷகீலா?”ன்னு அப்பாவி மாதிரி கேட்கக்கூடாது. எந்த ஷகீலாவை எதிர்பார்த்து உள்ள வந்தீங்களோ, அந்த ஷகீலாவே தான்!

2003ஆம் ஆண்டு பாளையங்கோட்டைக் கலைவாணி திரையரங்கில் ஓடிய ‘இளமைக் கொண்டாட்டம்’ என்ற திரைப்படத்தில் சென்சார் செய்யாத காட்சிகளில் ஷகீலா நடித்துள்ளார் என்பதற்காக அவர் மீதும், அவருடன் நடித்துள்ள நடிகர் வினோத் மீதும், திரையரங்க நிர்வாகிகள், ஊழியர்கள் மீதும் தணிக்கை செய்யப்படாத படத்தைத் திரையிடுதல் மற்றும் ஆபாசமாக நடித்துக் கூட்டம் கூட்டுதல் ஆகிய குற்றப்பிரிவுகளின் கீழ் வழக்கு நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கின் வாய்தாவுக்காக நெல்லை வந்த ஷகீலா பர்தாவில் மறைந்து கொண்டு வந்த போதிலும் நீதிமன்ற வளாகத்தையே மக்கள் கூட்டத்தால் நிரப்பி விட்டார். நீலத்திரையில் பார்த்த கனவுக் கன்னி கருப்புத் திரைக்குள் ஒளிந்து வந்த போதிலும், தமது கனவுக் கன்னியை நேரில் தரிசிக்கும் பரவசமான வாய்ப்பை அங்கிருந்த மக்கள் இழக்க விரும்பவில்லை. ஷகீலாவின் வாய்தா என்றைக்கு என்ற தேதியை முன்கூட்டியே மோப்பம் பிடித்து, அந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செய்தியைக் கவர் பண்ண காமிராவோடு நிருபர்களும் வந்து விட்டார்கள்.வழக்கை அக்டோபர் மாதம் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்து விட்டார் நீதிபதி. தேதியை ஷகீலா குறித்துக் கொண்டாரோ இல்லையோ, நிருபர்களும் ரசிக மகாஜனங்களும் நிச்சயம் குறித்துக் கொண்டிருப்பார்கள்.

நியூஸ் இனிமேல்தான் ஆரம்பிக்கிறது. பர்தாவில் ஷகீலா என்ற சேதியைக் கேள்விப்பட்டுக் கொதிப்புற்றுப் போன தமிழக முசுலீம் முன்னேற்றக் கழகத்தின் (த.மு.மு.க) நெல்லை மாவட்டத் தலைவர் பாளை ரஃபீக் பத்திரிகைகளிடம் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:

“அன்றைக்கு வெள்ளிக்கிழமை நான் தொழுகைக்கு கிளம்பிய நேரம்தான் நடிகை ஷகீலா பர்தா அணிந்து கோர்ட்டுக்கு வந்திருப்பதாக போன் வந்தது. நான் அன்றைக்குத் தொழுகைக்கு மட்டும் போகவில்லை என்றால் அவரை செருப்பால் அடித்து கோர்ட்டில் இருந்து ஓட ஓட விரட்டியிருப்பேன். பர்தா என்பது முஸ்லீம் பெண்களின் கண்ணியம், கலாச்சாரத்துக்குரிய ஆடை. அந்த ஆடையை இப்படிப்பட்ட ஒரு பெண்மணி தன்னை பிறர் கண்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக அணிந்து வருவதென்பது முஸ்லீம்களின் கோபத்தைக் கிளறியிருக்கிறது. திரையில் பலர் கண் முன்பு பச்சை கொச்சையாக நடிக்கும் ஒரு நடிகை, நீதிமன்றத்திற்க்கு மட்டும் யோக்கியமாய் பர்தா அணிந்து வருவது என்ன நியாயம்? அடுத்த முறை இதே பாளை கோர்ட்டிற்கு ஆஜராக வரும்போது அவருக்குப் பாடம் கற்பிப்போம். எங்கள் மகளிரணிப் பெண்கள் திரண்டு வந்து ஷகீலாவிற்கு மறக்க முடியாத பாடத்தைப் புகட்டுவார்கள். அது என்ன என்பதைப் பொறுத்திருந்து பாருங்கள்”

இதற்கு ஷகீலாவின் பதில் வருமாறு:
” நான் உருது பேசும் ஒரு முஸ்லீம் பெண். நான் பர்தா அணிந்து வருவதில் ஒன்றும் தப்பில்லையே. வறுமை காரணமாகத்தான் சினிமாவில் நடிக்கப் போனேன். கிளாமராக நடிக்க வேண்டும் என்பதற்காக நான் போகவில்லை. படமெடுக்கும்போது டீசண்டாகத்தான் எடுப்பார்கள். படத்தை தியேட்டரில் ஓட்டும்போது இடையில் பிட்டை ஓட்டி விடுவார்கள். அதனால்தான் 2002க்குப் பிறகு மலையாளப் படங்களில் நடிப்பதையே விட்டுவிட்டேன். நான் பர்தா அணிவது தப்பு என்று சொல்பவர்கள் நான் பணத்துக்காக கஷ்டப்பட்ட போது எங்கே போயிருந்தார்கள்?”

இரு தரப்பு வாதங்களும் முடிந்து விட்டன. அடுத்த வாய்தாவுக்காக ஷகீலா கோர்ட்டுக்கு வருவதற்கு முன்னாலேயே இதற்குத் தீர்ப்பு என்ன என்று கண்டுபிடித்தாக வேண்டுமே! வழக்கிற்க்கு உள்ளே போவோம்.

“தேவ்டியாளுக்கு பர்தா எதுக்கு?” என்பது ரபீக் எழுப்பும் முதல் பிரச்சினை. “கண்ணியமான முஸ்லிம் பெண்கள் அணியும் ஆடையான பர்தாவை கண்ணியமற்ற ஷகீலா அணிந்து வருவதால், பர்தா போட்ட பெண்களின் கண்ணியம் காற்றில் பறந்து விடும்” என்பது இரண்டாவது பிரச்சினை. “இது முஸ்லிம் பெண்களின் உடை என்பதால் ஷகீலாவின் நடவடிக்கை முஸ்லிம்களின் மத உணர்வை புண்படுத்தியிருக்கிறது” என்பது மூன்றாவது பாயிண்ட்.

ரபீக்கின் கோபத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது. சமீப காலமாக பலான வழக்குகளில் கைதாகும் மேட்டுக்குடிப் பெண்கள், காமெராவிலிருந்து தப்பிக்கத் தோதான கோர்ட் சீன் டிரஸ்ஸாக பர்தாவைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இந்து மதவெறியர்களின் தாக்குதல், அரசின் அடக்குமுறை, முஸ்லிம் என்றாலே பயங்கரவாதி என்று ஊடகங்கள் உருவாக்கியிருக்கும் சித்தரிப்பு ஆகியவற்றால் குமுறிக்கொண்டிருக்கும் இசுலாமிய சமூகத்தினருக்கு, இந்த பர்தா விவகாரம் புண்ணில் உப்பு தேய்த்தது போல இருந்திருக்கும் என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது.

ஆனால் முஸ்லிம் பெண்களுடைய கண்ணியத்தின் அடையாளம் பர்தா என்ற விளக்கத்தை எப்படி ஒப்புக் கொள்ள முடியும்? ஆண்களின் கண்ணியமற்ற காமவெறிப் பார்வையைச் சமாளிப்பதற்காகப் பெண்களின் மீது இஸ்லாம் போட்டிருக்கும் கவசம்தானே பர்தா? அப்படிப் பார்த்தால் அதனை ஆண்களுடைய பொறுக்கித்தனத்தின் அடையாளம் என்று அழைப்பதுதானே பொருத்தமாக இருக்கும்!

ஷகீலாவை விடுங்கள். எவ்வளவு ‘கண்ணியமான’ முஸ்லிம் பெண்ணாக இருந்தாலும் பர்தா போடவில்லை என்றால் “அவளும் கண்ணியமற்றவள்தான்’ என்பதுதானே மதவாதிகள் வழங்கும் தீர்ப்பு! பெண்களின் கண்ணியம் ஒழுக்கம் கற்பு போன்ற எல்லாவற்றையும் கண்காணிக்கும் அதிகாரத்தை ஆண்கள் எடுத்துக் கொள்வதை அசிங்கம் என்பதா அயோக்கியத்தனம் என்பதா? ஷகீலா பிரச்சினை இருக்கட்டும். பர்தா போடாத இசுலாமியப் பெண்களளைக் கொலை செய்த தலிபான்கள் கூட, இசுலாமியப் பெண்களின் கண்ணியத்தைக் காக்கும் கொலையாகத்தானே அதனை சித்தரித்துக் கொண்டார்கள்? சென்ற ஆண்டு கோவையிலும் மேலப்பாளையத்திலும் ‘நடத்தை சரியில்லாதவர்கள்’ என்று குற்றம் சாட்டி மூன்று முஸ்லிம் பெண்களைக் கழுத்தை அறுத்துக் கொலை செய்தார்கள் சில முஸ்லிம் அடிப்படைவாதிகள். பாகிஸ்தானிலோ, இத்தகைய சம்பவங்கள் கணக்கில்லாமல் நடக்கின்றன. கேட்டால் “எம் பொண்ட்டாட்டிய நான் அடிப்பேன் நீ யார்டா கேக்க?” என்ற பாணியில் “என் மதத்தைச் சேர்ந்த பெண்ணை நான் கொல்லுவேன். நீ யார் கேக்க?” என்று பதில் சொல்லக் கூடும்.

கேட்பவன் பாதிக்கப் பட்டவனாகவே இருந்தால்? பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த சாரா என்ற ஏழைச் சிறுமி, குவைத்துக்கு வீட்டு வேலை செய்யப் போனாள். வீட்டுக்கார ஷேக் அந்தச் சிறுமியைக் கசக்கி நாசமாக்கினான். பொறுக்க முடியாத சாரா ஷேக்கை குத்திக் கொன்றாள். ஏன் கொலை நடந்தது என்று தெளிவாக நிரூபிக்கப்பட்டது. இருந்தாலும் தீர்ப்பு என்ன? சாராவுக்குத் தூக்கு தண்டனை! இந்த அநீதியை எதிர்த்து பிலிப்பைன்சில் போராட்டமெல்லாம் நடந்த பிறகு அது ஆயுள் தண்டனையாக ஆக்கப்பட்டது.
கண்ணியத்துக்கு ஆயுள் தண்டனை!

“ஷகீலா பர்தா போட்டுக் கொண்டு வந்தால் விரட்டி விரட்டி அடிப்போம்” என்கிறார் ரபீக். இதே நெல்லையில் ஷகீலா படம் பார்க்கப் போன முஸ்லிம் ஆண்களை இவர்கள் எப்போதாவது விரட்டி அடித்ததுண்டா? ஆபாசம் ‘பிட்’ படத்தில் மட்டுமா இருக்கிறது. தணிக்கைச் சான்றிதழ் பெற்ற அதைவிடக் கேவலமான படங்களை முஸ்லிம் ஆண்கள் பார்ப்பதில்லையா? முஸ்லிம்கள் யார் வீட்டிலும் டிவி இல்லையா? யாருமே ‘மானாட மயிலாட’ பார்ப்பதில்லையா? அவர்களுக்கெல்லாம் என்ன தண்டனை கொடுப்பது? கேட்டால் “சொல்லத்தான் முடியும். இதுக்கெல்லாம் தண்டிக்கவா முடியும்?” என்பார்கள். அந்த நியாயம் பெண்களுக்கு மட்டும் பொருந்தாது போலும்!

ஒரு பெண் அரை அம்மண நடனம் ஆடி, அதனை ஆண்கள் பார்த்தால் அது தண்டனைக்குரிய குற்றம் அல்ல. ஏனென்றால் ஆண்கள் இறைவனாலேயே ‘ஜொள்ளு பார்ட்டிகளாக’ படைக்கப்பட்டவர்கள். ஆனபடியினாலே, அவர்கள் ஜொள்ளு விடும் சூழ்நிலையை உருவாக்காமல் இருக்க வேண்டியது, (அதாவது பர்தா அணிய வேண்டியது) பெண்களின் கடமை. மீறினால் தண்டனை!

“ஷகீலா பர்தா அணிந்து வரக்கூடாது” என்ற கோரிக்கைக்கு முஸ்லிம் பெண்களையெல்லாம் திரட்ட வேண்டியதில்லை. விசயத்தை சொன்னால் போதும்! சர்வ மதங்களைச் சேர்ந்த ஆண் ரசிகர்ளும் உற்சாகமாகத் திரண்டு வந்து ஷகீலாவின் பர்தாவைக் கிழித்து எறிந்து விடுவார்கள். அவ்வளவு ஏன், இந்த விசயத்தில் மட்டும் இந்து முன்னணி ஆட்கள் கூட ‘மத நல்லிணக்க உணர்வுடன்’ ஆதரவும் கொடுப்பார்கள்.

இனி ஷகீலா தரப்பு வாதத்துக்கு வருவோம். பிட் படங்களில் நடித்ததற்கு ஷகீலா சொல்லும் நொண்டி சமாதானங்களான ‘வறுமை’, ‘எனக்கு தெரியவே தெரியாது’ என்ற பொய்களுக்கெல்லாம் நாம் பதில் சொல்லத் தேவையே இல்லை. அந்தம்மாளின் வாதத்தை ஒரே பாயிண்டில் சுருக்கி விடலாம். “தேவையின்னா நான் பர்தா போடுவேன். தேவையில்லைன்னா அவுத்தும் போடுவேன். இரண்டுமே என்னுடைய ஜனநாயக உரிமைகள்.”

அப்படியா? ஜனநாயக உரிமை என்பதைப் பலரும் இப்படித்தான் புரிந்து கொண்டிருக்கிறார்கள். அவர் வீட்டின் குளியலறைக்குள் அவர் அவுத்துப் போடுவது அவருடைய ஜனநாயக உரிமை. லட்சக்கணக்கான மக்கள் முன் அவுத்துப் போடுவது எதற்காக? சம்பாதிப்பதற்காக என்று ஒரு வார்த்தையில் சொல்லி விடலாம்.

அது ஆண்களின் காமவெறியைக் காசாக்கும் சம்பாத்தியம். கேரளாவில் மம்முட்டி, மோகன்லால் படங்களையெல்லாம் தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு ஷகீலா படம் வசூலைக் குவித்திருக்கிறது. இத்தகையப் படங்கள் ஆண்களின் “மொழியில்’ எடுக்கப் படுவதால், டப்பிங்கே தேவைப்படாமல் எல்லா மாநிலங்களிலும் ஓடியிருக்கிறது. ஷகீலாவின் படங்களால் பாதிக்கப்பட்டவர்கள் யார்? ‘இளைஞர்களைக் கெடுத்து விட்டது’ என்று பொதுவாகச் சொல்லிவிடலாம். உண்மையில் அது பெண்களைத்தான் கெடுத்திருக்கிறது.

பெண்களின் அங்கங்களை ரைட் ராயலாக மேயும் இளைஞர்களின் பார்வை, அவர்களைக் கூசி ஒதுங்கச் செய்யும் கொச்சையான கமென்டுகள், பேருந்தின் உரசல்கள், மாணவிகளைத் தின்னும் ஆசிரியர்கள், விசுவாசிகளை வதைக்கும் பாதிரிகள், சிறுமிகளைக் குதறும் அண்டை வீட்டு அங்கிள்கள், பெண்களை வலையில் வீழ்த்த வேண்டிய பட்சிகளாகவும், ரூட் போட்டு மடக்கி ருசிக்க வேண்டிய கறித்துண்டுகளாகவும் கருதும் மாணவர்கள்.. இப்படிப் பலவிதமான மிருகங்களை உருவாக்கி வளர்த்து விட்டிருப்பதில் ஷகீலா படங்களின் பங்கு மகத்தானது. இரைக்கு அலையும் நாயைப் போலவும், கூச்ச நாச்சமற்ற மிருகங்களைப் போலவும் நெல்லை கோர்ட்டில் ஷகீலாவுக்கு கூடிய கூட்டமே, அவரது குற்றத்தின் பரிமாணத்தை விளக்கப் போதுமானது.

ஷகீலாவின் மீது ஏதோ ஒரு போண்டா கேஸ் போடப்பட்டிருக்கிறது என்பது உண்மைதான். ஆனால் அவருடைய படங்கள் எல்லாம் சென்சார் போர்டு முத்திரையோடுதானே வெள்ளி விழா கொண்டாடியிருக்கின்றன? அவை அனுமதிக்கப்பட்டது ஏன்? அரசியல் சட்டத்தின் மொழியில் சொல்வதென்றால் அது அந்தப் படத்தை இயக்கிய படைப்பாளியின் கருத்துரிமை; ஷகீலாவுடைய கருத்துரிமை. Right to free expression!

அந்த உரிமையைப் பயன்படுத்தி அவர் என்ன ‘கருத்தை’ சொன்னார் என்பது அன்று கோர்ட்டில் கூடிய ரசிகர்களுக்குத் தெரியும். அந்தக் ‘கருத்தை’ காணத்தான் அவர்கள் அங்கே ஓடோடி வந்தார்கள். எனினும் “தன்னுடைய கருத்தை வெளிப்படுத்துவதோ பர்தாவால் மறைப்பதோ தனது தனி நபர் உரிமை என்றும் அதில் யாரும் தலையிட முடியாது” என்றும் கூறுகிறார் ஷகீலா.

அந்தப் பக்கம் ரபீக்கின் மத உரிமை. இந்தப் பக்கம் ஷகீலாவின் தனிநபர் உரிமை. இரண்டு உரிமைகளுமே தத்தம் வழியில் ஆணாதிக்கத்தை வெறி கொண்டு ஆடவைக்கின்றன. இவற்றுக்கிடையில் நடக்கும் மோதலில் ‘ஷகீலாவின் பர்தா’ கிழிந்து சின்னாபின்னமானாலும் ஆகாவிட்டாலும், ஒரு உரிமை ஏற்கனவே சிக்கிச் சின்னாபின்னமாகிவிட்டது.
அதன் பெயர் பெண்ணுரிமை!

 

 1. ‘ஷகீலாவின் துணிப் பற்றாக்குறைக்கு காரணம் அவரின் வறுமை மட்டுமல்ல. குறைந்த பட்ஜட்டில் ’பாலியல் கல்வி விழிப்புணர்வு’ படம் எடுப்பதற்காக, உடைச்செலவை மிச்ச்ப்படுத்தும் உயர்ந்த எண்னத்துடன் ’அத்தியாவசிய’ ஆடைகளை மட்டும் அவருக்கு அணிவித்த தயாரிப்பாளரின் வறுமை கூட காரணமாக அமைந்திருக்கலாம் அல்லவா?

  ஷகிலா புர்கா அணிந்து ‘புர்காவின்’ கண்ணியத்தை கெடுத்துவிட்டதாக குரல் எழுப்புபவர்கள் – ஷகீலா அவர் ’பாணி’ உடையில் நீதிமன்றத்திற்கு வந்திருந்தால், நீதிபதி ஸ்தம்பித்திருக்க மாட்டார், சட்டம் தன் கடமையை செய்ய மறந்திருக்கும் என்பதை கருத்தில் கொள்ளாதது ஏன்?

  நீதிபதி பற்றாக்குறை காரணமாக விசாரனையே முடியாமல் தமிழக நீதிமன்றங்களில் தேங்கிகிடக்கும் ஆயிரக்கணக்கான வழக்குகளின் நிலையை கருத்தில் கொண்டு, அதன் எண்ணிக்கை அதிகரிக்க ‘தன் பாணி’ ஆடை ஒரு போதும் காரணமாக இருக்கக்கூடாது என்பதற்காக ’பரந்த’ மணப்பான்மையோடு தமிழக மக்களின் நலனில் கொண்ட அக்கறைக் காரணமாக, ‘புர்கா’ அணிந்து, நீதிமன்றம், நீதிபதி, நீதித்துறை, சட்டம், காவல், அரசாங்கம் ஆகியவைகளின் கண்ணியத்தை காக்க – களங்கத்தை நீக்க அணிந்த ’புர்கா’வை பற்றி விமர்சனம் செய்வதை தேசப்பற்று, மாணம் மற்றும் ஈணமுள்ள எவரும் பொறுக்கமாட்டார்கள்.

  ஷகீலாவின் ‘புர்காவை’ எதிர்ப்பவர்கள், தாங்கள் அனைவரும் பிறந்தபோது ’ஆடை’ அணிந்து கொண்டுதான் பிறந்தார்களா என்று சற்று சிந்திக்கவேண்டும். ஆடை அணிந்து உடலை மூடி இருக்கவேண்டுமென்று வற்புறுத்துபவர்கள், பாவடைக்கு – நாடாவும், ஜாக்கெட்டுக்கு ‘ஹூக்கு’ம், சட்டைக்கு – பட்டனும், பேண்டுக்கு – ஜிப்பும் எதற்காக வைத்து தைக்கப்பட்டது என்று என்றைக்காவது சற்று சிந்தித்ததுண்டா?. அவயங்களை மூடிகொள்வதற்காகத்தான் ’அவையனைத்தும் என்று நிணைத்துக்கொள்ள உங்களுக்கு எவ்வளவு உரிமை இருக்கிறதோ – அவற்றின் மூலம் ‘ஆடை’ என்ற விலங்கிலிருந்து – உடலை சுதந்திரமாக்க வைக்கப்பட்டதாக மாற்றுக் கருத்துள்வர்களையும் மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்.

  ஆடை ’களைந்து’ – ’குறைத்து’ ஷகீலா நடித்ததற்கு வறுமை மட்டும் காரணமல்ல – ஆடைகளின் ‘அமைப்பும்’ மற்றொரு காரணம் என்று கருதுகிறேன்.

  (படித்துவிட்டு ஏசாதீர்கள் – சீரியசான ஒரு பதிவு பற்றி – ஒரு சிரிப்பு ‘கும்மியாக’ எடுத்துக்கொள்ளுங்கள்.:))

 2. சகீலா “புர்கா” அல்லது “பர்தா” அணிந்து வந்ததில் மிகப் பெரும் தத்துவமே அடங்கியுள்ளது.

  புர்கா போட்டவளெல்லாம் யோக்கியமானவளும் இல்லை. புர்கா போடாதவலெல்லாம் கெட்டவளும் அல்ல – திருக்குரான் 42:57

  இஸ்லாத்தில் யோக்கியமான பெண்கள்தான் புர்கா போடணும்னு சொல்லலை. புர்கா என்பது பெண்ணாய் பிறந்தாலே அவளோட அண்ணன், தம்பி, அப்பா, சித்தப்பா,பெரியப்பா, மாமன், மச்சான், எதிர்த்த வீட்டுக்காரன், பக்கத்து வீட்டுக்காரன் பக்கத்து தெருவில் வசிக்கும் ஆண்களின் காமுகப் பார்வையில் இருந்து தப்புவதற்காக அல்லாவால் தூதர் நபி( ஸல்) அவர்களின் மேல் இறக்கப் பட்டது.

  இஸ்லாத்திற்கு எதிராக இது போன்ற செருப்படி போராட்டம் நடத்தும் இஸ்லாத்திற்கு எதிரானவர்கள் மீது பத்வா கொடுத்து இஸ்லாமிய சமூகத்தை விட்டு விலக்க வேண்டும். இதே இஸ்லாமிய விரோதிகள் ஜட்டி தெரிய, இன்ன பிற உறுப்புகளை உலகுக்கே தெரிய காட்டி டென்னிஸ் ஆடி காபிர்களின் நாடான இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் சானியா மிர்சா வெளியிடங்களில் புர்கா அணிந்து பொய் வேஷம் போடுகிறாரே அவரைச் செருப்பால் அடிப்பார்களா?

  • //புர்கா போட்டவளெல்லாம் யோக்கியமானவளும் இல்லை. புர்கா போடாதவலெல்லாம் கெட்டவளும் அல்ல – திருக்குரான் 42:57//

   திரு அல்லா பணக்க்காரன் அவர்களே,

   நீங்கள் சுட்டிக்காட்டிய குரான் வசனங்கள் 42:53 என்ற எண்ணோடு முடிந்து விட்டது. 42:57 என்ற வசனமே இல்லை. இல்லாத வசனங்களை கூறி இஸ்லாத்தை இழிவுபடுத்த வேண்டாம். நீங்கள் கூறியது போல் ஒரு வசனமும் குரானில் இல்லை. புர்கா மட்டும் தான் இஸ்லாமும் சொல்லும் ஹிஜாப் என்னும் மறைத்தல் என்று சிலர் தவறாக என்னுகிறார்கள். நாம் ஆண்கள் முழு கை சட்டை, கால் சட்டை அணிந்து இருக்கிறோம். அதுவும் இஸ்லாமும் கூரும் ஹிஜாப் என்று பலருக்கும் தெரியவில்லை.

   பிரதீபா பட்டேலும், ஜெயலலிதாவும் கூட இஸ்லாம் கூறும் மறைத்தலை கடைபிடிக்கிறார்கள். மூட வேண்டிய பாகங்களை, மூடினால் அது ஹிஜாப். எல்லோரும் பர்தா என்னும், புர்காவை தான் எதிர்க்கிறார்களே தவிற மூட வேண்டிய பாகங்களை மூடாமல் விட்டால் சரி என்று யாரும் சொல்வதில்லை. உதாரணத்திற்க்கு ஒரு பெண் தன்னுடைய இடுப்பு தெரிவது போல் சேலை அணிந்து செல்கிறார், இன்னொருவர் எல்ல்வற்றையும் மறத்து செல்கிறார் என்றால், யாரை ஆண்கள் பார்ப்பார்கள். பதில் சொல்லுகின்ற ஆண்கள் அந்த இடுப்பு தெறியும் பெண் இடத்தில் தங்களுடைய வீட்டுப் பெண்களை நினைத்து பதில் கூறவும்.

   • பார்த்துக்கோன்னு காட்டுற இடுப்பே இப்படி இருக்கே மூடிட்டு போறாளே அவ இடுப்பு எப்படி இருக்கும்ணு நாக்கெ தொங்கபோட்டுக்குட்டு அலைவான் ஆம்பளை. முதல்ல ஆம்பளைய திருத்தற வேலையைப் பாரு. 

    • முதல உங்க வீட்டுல உழவன்கள காட்டிட்டு போக
     சொல்லுங்க பிறகு மற்றவங்களுடயாத
     compair பன்னுவோம்..

   • 1500 ஆண்டுகளுக்கு முன்பாக அரேபியப் பாலைவனத்தில் வாழ்ந்த பழங்குடியினரைக் கட்டுப் படுத்த உருவாக்கப்பட்ட விதிமுறைகள் இந்தக் கால சமூகத்திற்கு, அதுவும் பல்வேறு கலாச்சாரங்கள் அடங்கிய முழு உலகிற்கு, பொதுவான விதியாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பதும், அந்த விதிகள் தெரியாதவர்கள் அதைக் கற்றறிய வேண்டும் என்று கூறுவதும் ஏற்புடையன அல்ல.

    மாறாத உண்மைகள் அறிவியல் விதிகளே. உலக வரலாற்றில் எந்தக் காலத்திலும் மேலே எறியப் பட்ட பொருள் 9.8 மீ/விநாடி* விநாடி என்ற விகிதத்தில் கீழே விழுந்திருக்கும். எதிர் காலத்திலும் விழும். ஒளியின் வேகம் எப்போதும், எங்கும் ஒரு விநாடிக்கு 3 லட்சம் கி.மீ. ஆகத்தான் இருக்கும். இரு விகிதம் ஹைட்ரஜனும் ஒரு விகிதம் ஆக்ஸிஜனும் சேர்ந்தால் தண்ணீர்தான் உருவாகும்.

    மற்றபடி பெண் உடலை மூட வேண்டும், விதவையை இறந்த கணவனோடு சேர்த்து எரிக்க வேண்டும், பக்கத்து வீட்டுக்காரன் மனைவியோடு படுத்தால் தவறு, உன் கடவுளை நிந்திப்பவனை தண்டிக்க வேண்டும் என்பன போன்ற மனித விதிகள் எக்காலத்துக்கும் பொருந்தும் உண்மைகள் அல்ல. அவை, நான் மேலே சொன்னது போல, அரேபியாவில் உருவானாலும் சரி, போதி மரத்தடியில் தோன்றினாலும் சரி, சிந்து நதிக்கரையில் எழுதப்பட்டாலும் சரி. மாறிக் கொண்டேதான் இருக்கும்.

 3. ஷகீலா புர்கா போட்டால் உதைப்போம் என்பவர்கள் தான் வீட்டில் தங்கள் மனைவி, தங்கைகள் புர்கா போடாவிட்டால் உதைக்கிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன்புவரை புர்கா இங்கு கிடையாது. முஸ்லீம் பெண்கள் புர்காவை விரும்புவதில்லை என்பதற்கு அந்த புர்காவிலிருக்கும் டிசைன் வேலைப்பாடுகளே சாட்சி. ஆனால் விரும்பி அணிவதாக கதையளக்கிறார்கள். இதற்கெல்லாம் மூலகாரணம் பெண்களை நிர்வகிப்பவர்களாகவே ஆண்களை படைத்துள்ளோம் எனும் குரான் வசனம் தான். கலகக்குரல் பெண்களிடமிருந்து எழுந்து கொண்டுதானிருக்கிறது, நிச்சயம் ஓர் நாள் ஒன்று சேரும்.

  தோழமையுடன்,
  செங்கொடி.

  • நீங்கள், உங்களை சார்ந்தவர்கள் உண்மை பேசுபவர்களாக இருந்தால், உங்களால் முடிந்தால் பெண்களுக்கு ஒரு நாடு நிலையான ஆடையை உருவாக்குங்கள் பாப்போம்.

   பெண்கள் எதை மறைக்க வேண்டும் என்று நடுநிலையோடு கூறுங்கள் பாப்போம். இதற்கு பதில் சொள்ளமுடியவில்லை எனில் வாயை மூடிக்கொண்டு இருந்து விடுங்கள். இணைய தல விவாதத்திற்கு நான் தயார்.

   காசு வாங்கிக்கொண்டு பொய் பிரச்சாரம் வேண்டாம்.

 4. தோழரே,

  ‘விளக்கெண்ணைய்யால் குண்டி கழுவினாற் போல’ என்றொரு அருமையான சொற்பிரயோகத்தை ராஜநாயகத்தின் பதிவில் படித்தேன். மன்னிக்கவும். உங்களின் இந்தப் பதிவும் அப்படித்தான் உள்ளது. உங்கள் கோணத்தின் மையம் என்பது தெளிவுபடவில்லை.

  “உங்களில் யோக்கியமானவர் முதல் கல்லை எறியுங்கள்’ என்கிறது விவிலியம். ஷகிலா படத்தில் ஆபாசமாக நடித்ததற்காக வழக்கு போட்டிருக்கும் இந்த கலாச்சார காவலர்களை நினைத்தால் அதைத்தான் சொல்லத் தோன்றுகிறது. ஜொள்ளிட்டுக் கொண்டு அந்தப் படத்தை பார்க்கப் போய்த்தானே அதில் ஆபாசம் இருக்கிறது என்பது இந்த மடையர்களுக்குத் தெரிந்திருக்கிறது. இவர்களின் கோணத்தின்படியே பார்த்தால் தமிழ்த் திரைப்படங்களின் பெரும்பாலான பாடல்காட்சிகளும் அதைவிட ஆபாசமாகத்தானே இருக்கின்றன. எல்லாவற்றிற்கும் வழக்கு போடுவார்களா?

  பாலியல் வறட்சி கொண்ட நம் இந்திய கலாசாரத்தில் இம்மாதிரியான படங்களின் மூலமாக நமககொரு வடிகால் கிடைப்பதால்தான் பாலியல் குற்றங்களின் விகிதம் சற்றே குறைவதற்காவாவது வழி ஏற்படுகிறது என்பதே என் பார்வை.

  புர்கா சமாச்சாரத்திற்கு வருவோம். மற்ற ஆண்களின் காமப் பார்வையிலிருந்து பெண்களின் புனிதத்தைக் (?) காக்க ஆணாக்கவாதிகளால் உருவாக்கப்பட்டது இந்த உடை. ஒரு பெண் – அவள் இன்னொரு மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் – பாதுகாப்பற்ற ஒரு சூழ்நிலையை எதிர்நோக்க இந்த உடையை தற்காலிகமாக பயன்படுத்திக் கொள்வதில் என்ன தவறு? நம் வாழ்வியில் சூழ்நிலையில் இசுலாமியர்களின் எந்தவொரு அம்சத்தையும் அதில் உள்ள வசதிக்காக நாம் பயன்படுத்திக் கொள்வதில்லையா? இசுலாமியப் பெண்ணாக நடிக்கும் சினிமா கதாபாத்திரங்களும் புர்கா பயன்படுத்தினால் அதையும் இவர்கள் எதிர்ப்பார்களா?

 5. (படித்துவிட்டு ஏசாதீர்கள் – சீரியசான ஒரு பதிவு பற்றி – ஒரு சிரிப்பு ‘கும்மியாக’ எடுத்துக்கொள்ளுங்கள்.:))

  dont disturb the discussion.

  பாலியல் வறட்சி கொண்ட நம் இந்திய கலாசாரத்தில் இம்மாதிரியான படங்களின் மூலமாக நமககொரு வடிகால் கிடைப்பதால்தான் பாலியல் குற்றங்களின் விகிதம் சற்றே குறைவதற்காவாவது வழி ஏற்படுகிறது என்பதே என் பார்வை.

  ungal uravu pen nadithalum ithaithan solveergala?

  தமிழ்த் திரைப்படங்களின் பெரும்பாலான பாடல்காட்சிகளும் அதைவிட ஆபாசமாகத்தானே இருக்கின்றன. எல்லாவற்றிற்கும் வழக்கு போடுவார்களா?

  neengal enna seitheergal?

 6. அல்லா பிச்ச, அடி தூள்!
  இதே மாதிரி எழுதுங்க, அகில இந்திய அல்லா பிச்சை ரசிகர் மன்றம் ஆரம்பிச்சு நான் கொஞ்சம் ஆட்டய போட்டுக்கறேன்…..அந்த ஜிப்பு மேட்டர்…தெய்வமே..கும்மியா இது யப்பா, ரூம் போட்டு யோசிப்பாங்களோ!

  சரி சானியாவுக்கும் சகீலாவுக்கும் என்ன வித்யாசம்? சானியாவுக்கு கொஞ்சமா டென்னிஸ் ஆட தெரியும், சகீலாவுக்கு கொஞ்சமா நடிக்க தெரியும் மத்தபடி ரெண்டு பேருமே கவர்ச்சிய மூலதனமா போட்டு பிசினஸ் பன்ற professionals. இதுல சானியாவ புர்கா போடுன்னும் சகீலாவ போடாதேன்னும் சொல்றது எந்த வகை நாயம். கடசியா கேள்விப்பட்டபடி நெறய கவர்ச்சிப் காமிச்சு கொஞ்சமா டென்னிஸ் ஆடற சானிய மிரிச்சாவ விரட்டி விரட்டி புர்கா போட வச்சதனால ஸ்பான்ஸர்ஷிப் கொரஞ்சு போச்சாம்! நல்லவேள சகீலாவுக்கு அந்த பிரச்சனை இல்ல.

  சுரேசு நம்ம இதுக்கு முன்னாடி பரங்கிமல ஜோதில மீட் பண்ணியிருக்கோமா? எதுக்கு கேக்கறன்னா சகிலா ரசிகர தவிர வேற யாரும் இப்படி ஜொல்ல முடியாது பாருங்க…தவிர அந்த கமல் டயலாக்க உடுங்கய்யா இப்ப அந்தாளே அத சொல்றதில்ல…அது சரி நீங்க எப்படி யாராவது பொம்பள புர்கா போடாம வந்தா பாஞ்சிருவீங்களோ?

  மாணவா நீங்க யார வேனுமின்னாலும திட்டுங்க எங்க தலிவர் அல்லா பிசசய எதுவும் சொல்லாதீங்க…

  மத்தபடி வினவு உங்க பதிவு சூப்பர் தொடர்ந்து எளுதுங்க…

 7. //பாலியல் வறட்சி கொண்ட நம் இந்திய கலாசாரத்தில் இம்மாதிரியான படங்களின் மூலமாக நமககொரு வடிகால் கிடைப்பதால்தான் பாலியல் குற்றங்களின் விகிதம் சற்றே குறைவதற்காவாவது வழி ஏற்படுகிறது என்பதே என் பார்வை.//

  நண்பரே பாலியல் வன்முறையை குறைக்க இப்பொழுது புதிய கருவி ஒன்று உள்ளதாம்… அது ஆண்களின் பிறப்பு உறுப்புக்கு போடப்படும் திறக்க முடியாத கவசம்… அதை திறக்கும் ரகசிய எண் உங்கள் மனைவிக்கு மட்டுமே தெரியுமாம்… நீங்கள் வாங்க தயாரா…?

  ஒரு பெண் எந்த உடையை அணிய வேண்டும் என்பது நீங்களோ , நானோ தீர்மானிக்கக்கூடாது அது அவளின் தனிப்பட்ட சுதந்திரம்.. ஆனால் இந்த ஆணாதிக்க சமூகத்தில்.. பேஷன் சோக்களும் , சினிமாவும் , மதங்களும், ஆண்களும் பெண்ணை ஒரு நுகர்வு பொருளாகவே பார்க்கின்றனர்..
  ஒரு பெண் திறந்த மார்போடு இருந்தாலும், பர்தாவோடு இருந்தாலும் அவளை பாலியல் ரீதியாக கொடுமை படுத்த யாருக்கும் உரிமை இல்லை..

 8. கும்மிப்போட்ட என்ன இப்படி கும்முறது ஞாயமா..

  சிந்திக்கதூண்டும் பதிவு தந்த விணவுக்கு நன்றி..

  கும்மிப் போட்டவுடன் – உடனடியாக என் சீரியசான பின்னூட்டத்தை எழுதவேண்டும் என்றிருந்தேன்..பனிப்பழு முடியவில்லை..அதற்குள் இவ்வளவும் நடந்துவிட்டது..

  சரி சீரியசா ஒரு பின்னூட்டம் போட்டு பிரயசித்தம் தேடிக்கிறேன்..

  புர்கா என்பது ஒரு ஆடை அவ்வளவுதான். ‘கன்ணியமோ’ ’புனிதமோ’ அந்த ஆடைக்கு இருப்பதாக கூறுவது அடிமுட்டாள்தனம். குறிப்பிட்ட எந்த மததத்வருக்கும் ‘உரிமம்’ பெறவில்லை. அதனால் புர்காவை ஷகீலாவும் போடலாம் – சகலரும் போடலாம். ஏன் நமீதா கூட போடலாம்..

  உலகத்தின் கவர்ச்சிப் பெண்மணி எனப் பேரெடுத்த ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலி , ஐ.நா.சபையின் சிறப்புத் தூதுவராகப் பாகிஸ்தான் வந்தபோது புர்கா அணிந்து சென்றிருந்தார்.

  சமீபத்தில் ஸவூதி சென்ற புஷ் மனைவியும் புர்கா அணிந்தே சென்றிருந்தார்.

  அப்பொழுதெல்லாம் புர்கா மீது இவர்களுக்கு வராத அக்கறை ஷகீலா போட்டவுடன் வரக்காரணம் என்ன?

  செங்கொடி கவனத்திற்கு:

  ஷகீலா புர்கா அணிந்து இஸ்லாத்திற்கு எதிராக கலகக்குரல் எதுவும் எழுப்பவில்லை, தான் ஒரு முஸ்லிம் பெண் என்று கூறியிருக்கிறார் (குமுதத்தில் ஷகீலா பேட்டியில் கூறியது:
  “சார், நான் உருது பேசும் ஒரு முஸ்லிம் பெண். தமிழ்ப் பெண். முஸ்லிம் பெண்ணான நான் பர்தா அணிந்து வருவதில் ஒன்றும் தப்பில்லையே. நான் வேறு மதத்தைச் சேர்ந்தவள் என்று நினைத்து அந்த சகோதரர் அப்படிச் சொல்லியிருக்கலாம். மற்றபடி, நான் முகத்தைக் காட்ட வெட்கப்பட்டு பர்தா அணிந்து கோர்ட்டுக்கு வரவில்லை” என்றாராம்) http://www.kumudam.com/magazine/Reporter/2008-10-05/pg2.php–

  அர டிக்கட்டு, உங்களப் போலவே ’தொண்டனாகவே’ இருக்க ஆசப்படுறேன்..மெய்யாலுமே, பதவி ஆச தம்மாத்துண்டு கூட கெடயாது..

 9. புர்கா அணிந்து வந்த ஷகீலாவுக்கு எதிர்ப்பு என்ற பெயரில் அறிக்கை விடுவதெல்லாம் – மலிவு விளம்பரத்திற்காகத்தான்.

  புர்காவை ஒரு குறிப்பிட்ட மதத்தினர்தான் அணியவேண்டும் – அந்த மதக்கோட்பாட்டிற்கு முரனாக நடப்பவர்களுக்கெதிராக நடப்பவர்கள் அணியக்கூடாது என்ற இஸ்லாமிய மதக்கட்டளை எதுவும் கிடையாது.

  அல்லா பிச்சை சொன்ன மாதிரி, புர்கா ஒன்றும் ‘பூநூல்’ மாதிரி ‘புனிதம்’ நிறைந்தது கிடையாது. குறிப்பிட்ட சாதியினர்தான் அணியவேண்டும் மற்றவர்கள் அணியக்கூடாது என்று எவரும் தடுக்க முடியாது. யார் வேண்டுமானாலும் அணிந்துக் கொள்ளலாம்.

  எது எப்படியோ, சப்புக் கொட்டிக் கொண்டு ஊடகங்களும், மலிவு விளம்பரம் தேடி மத அமைப்புகளும் காத்திருக்கின்றன. இறுதியில் அசிங்கப்பட்டு நிற்கப் போவது….?

 10. எலேய்…! யாருலே அது ஷகீலா டிரஸ் பத்தி பேசுறது…
  பிச்சுபுடுவேன் பிச்சு…
  என்னா… இது சின்னப்புள்ளத் தனமா இல்ல இருக்கு.

  அது சனியா மிர்சாவோ அல்லது ஷகீலாவோ, யாருக்கும் எந்த உடையும் போட உரிமை உண்டு…
  இது அவர்கள் உணர்வுகள் சம்பந்தப்பட்ட விஷயம்.

 11. நண்பர் அல்லாபிச்சை கவனத்திற்கு:

  நானும் ஷகீலா இஸ்லாத்திற்கு எதிராக கலகக்குரல் எழுப்புவதாக கூறவில்லை. ஆனால், ஷகீலாவுக்கு எதிர்ப்பு போன்ற கத்தல்களில் புர்காவுக்கு எதிரான முஸ்லீம் பெண்களின் கலகக்குரல் மறைந்துவிடவேண்டும் என எதிர்பார்ப்பதைத்தான் சுட்டிக்காட்டியுள்ளேன்.

  தோழமையுடன்,
  செங்கொடி.

 12. பிறைநதிபுரத்தான்,
  உங்கள் தளத்தை பார்த்தேன்.
  நல்லா இருக்குய்யா உங்க மதவெறி எதிர்ப்பு இந்துமதத்தை எதிர்க்க மட்டும் பெரியாரை பயன் படுத்துகிறீர்கள் இஸ்லாத்தை பற்றி வாயே திறப்பதில்லையே அது ஏன்? இந்துமதவெறியை எதிர்க்க மட்டும் தான் உங்களுக்கு பெரியார் வேண்டுமா ?

 13. என்ன நடக்குதிங்க..ங்க..ங்க..ங்க,

  அவனவன் கஷ்டப்பட்டு பதிவபோட்டா,
  குந்த வச்சு கும்மியா அடிக்கறது!
  அதுவும் என்ன வுட்டுட்டு!

  உரிமை பிரச்சனை இருக்கட்டும்,
  1) படத்துக்கு படம் ஷகிலா குளிக்குற ஸீன வச்சு கேரளாவுல தண்ணி பிரச்சன!
  2) ஒரு செவுரு உடாம போஸ்டர் ஒட்டி அச்சடிக்க இல்லாம பேப்பர் பிரச்சன!
  3) போஸ்டர பாத்து வண்டி ஒட்டி பள்ளத்துல உடர ஆக்ஸிடன்ட பிரச்சன!
  4) மிட் நைட்டு கண்ணு முழிச்சு சூர்யா டீவிய பாத்து மறுநாள் வேலைல பிரச்சன!
  5) கட்ட்டிச்சு சினிமா போக அப்பா பாக்கட் அடிக்குற பணப் பிரச்சன!
  6) 5நிமிச சீனுக்காக 2அவர் புரியாத படத்த பாக்குற மொழிப் பிரச்சன!

  இன்னும் எத்தனயோ பிரச்சன இருக்கறப்போ பர்தா வுல என்னய்யா பிரச்சன

 14. superlink..

  இஸ்லாம் பற்றி பெரியாரின் கருத்து என்னவென்று ‘எந்த’ திரித்தலும் இல்லாமல் ’மீள்பதிவு’ செய்திருக்கிறேன் அவ்வளவுதான்.

  என் தளத்தில் இனிய பெருநாள் வாழ்த்து என்கிற பதிவில்.

  மதவெறி கற்பித்தவன் முட்டாள்
  மதவெறி பரப்புகிறவன் அயோக்கியன்
  மதவெறி போற்றுகிறவன் காட்டுமிராண்டி

  மதவெறி ஒழிப்போம்..
  மனித நேயம் காப்போம்..என்ற வாசகங்கள தங்களுக்கு ஏன் தெரியவில்லை.?

  மதங்களின் பெயரில் – மதவெறி வளர்க்கும் முட்டாள்- அயோகிய – காட்டுமிராண்டிகளுக்கு ‘தனித்தனி’ அளவுகோல் கிடையாது..

  மதவெறி வளர்ப்பவர்கள் ’பச்சை’ நிறம் பூசி வந்தாலும் ’காவி’ நிறம் பூசி வந்தாலும்- எதிர்த்து ’கறுப்புக்’ கொடி காட்டுவதுதான் என் பணி..

 15. அய்யா பிறைனதி புரம்..

  //மதவெறி கற்பித்தவன் முட்டாள்
  மதவெறி பரப்புகிறவன் அயோக்கியன்
  மதவெறி போற்றுகிறவன் காட்டுமிராண்டி
  //

  தந்தை பெரியார் நீங்க சொல்லியிருக்கபடி மதவெறி அப்பிடின்னு சொல்லலை.

  கடவுள் என்பது கற்பிதம்
  கடவுளை கற்பித்தவன் முட்டாள்
  கடவுளை பரப்புகிறவன் அயோக்கியன்
  கடவுளை போற்றுகிறவன் காட்டுமிராண்டி

  அப்படின்னு தான் சொல்லியிருக்கார்.
  இதிலெ நீங்க எந்த வகை?

  எல்லா மத வியாபாரிக்கும் கறுப்புக் கொடி காட்டுபவன் தான் பெரியார் வழி நடப்பவன். அவர் பேச்சை திருத்தி தனது மதத்தை பரப்புவதற்காக பயன்படுத்தும் மத வியாபாரிகள் எல்லாம் திருட்டு ****** சமம்.

  மதங்களை ஒழிப்போம், மனிதனை நேசிப்போம்..

  எங்கே இன்னொரு வாட்டி சொல்லு பார்ப்போம்.

  மதங்களை ஒழிப்போம், மனிதனை நேசிப்போம்..

 16. Hey! I’m back…
  My laptop got busted and I just replaced it.
  Seems Vinavu is going places…very happy about that.
  Just finished reading all the articles since Elain kangal…
  All were good. Will send individual comments later.
  Let me join the hot debate.

  It is generally believed and partly true that suppression of the female is more in Islam. I don’t understand wether is it because they are economically suppressed or is their religion or any phobia… I expect our islamic friends here at the blog to voice out their opinions.

  On the issue of pornography, i fully agree with the author that it is one of the main reasons for violence against women. But i also feel that this society is neither open nor closed, it treats sex as a taboo at the same time glorifying it too. This makes the youth confused and people are cashing on it. Since we have Doctor.Rudharan here on debate I expect some inputs from him on this society.

  On the other hand i request the participants not to use harsh words or language as we are not here to hurt each other.

 17. அய்யா அனானி,

  மதங்களை ஒழிப்போம், மனிதனை நேசிப்போம்..அப்படின்னு அய்யா பெரியார் சொன்னார், ஆனால அதே பெரியார்தான் ‘இன ஒழிவு நீங்க இஸ்லாமே மருந்துன்னார்’ – நான் அந்த வகை..

  இன இழிவு நீங்க இஸ்லாம் மருந்துன்னு பெரியார் ஏன் சொன்னார்? எதை அடிப்படையாக வைத்து சொன்னார் என்று புரிந்துக்கொள்ள விரும்பினால் கீழே உள்ள சுட்டிகளை தயவு செய்து படியுங்கள்.
  http://www.keetru.com/rebel/periyar/12.php
  http://www.keetru.com/rebel/periyar/10.php

  மதவியாபாரிகள் யார், காட்டு மிராண்டிகள் யார், என்று அய்யா பெரியார் தெளிவாக சொல்லியிருக்கிறார். படிச்சு பாருங்க..அதுக்கு பிறகு ‘அனானியான்’ நீங்களே சொல்லுவீங்க ‘இன ஒழிவு நிங்க இஸ்லாம்தன்’ மருந்துன்னு

  தமிழ் மொழியிலுள்ள பெரியாரின் கட்டுரைகள் படித்தும் புரியலன்னா..பெரியாரின் கொள்கையான பகுத்தறிவும் – தன்மானமுள்ள- வீரமுமுள்ள ’அனானியான’ நீங்க என் பதிவுகளை பற்றி – என் தளத்துக்கு வந்து கேள்வி கேளுங்க.

  தயவு செய்து தோழர் ’வினவின்’ விவாதததை – வாசகர்களின் பொன்னான் நேரத்தையும் திசை திருப்ப வேண்டாம்..

  தோழர் வினவு,
  என் பதிவு சம்பந்தமாக – அனானி எழுப்பிய வினாக்களுக்கு – உங்கள் தளத்தின் மூலம் அளிக்கும் – இறுதியான பதில் இதுதான். அதையும் மீறி ‘அனானி’ வந்தால் – என் தளத்துக்கு போகச்சொல்லி அறிவுறுத்துங்கள்..கேட்கவில்லையென்றால் அடித்து துரத்துங்கள்..உண்மையான பெரியார் தொண்டனாக இருக்கும் எவரும் ‘அனாமத்துகளாக’ வரமட்டார்கள்..

  • பெரியார் இஸ்லாம செல்லத்தட்டு தட்டிட்டு விட்டுட்டார். பெரியார் எங்களுக்கு முகமது அல்ல. அவர யாரும் எதுவும் சொல்லீட்டா எங்களுக்கு கோவம் வராது. எதையும் எவரையும் விமர்சிக்கலாம் அது தான் பகுத்தறிவு

   • சகோதரர் Bharathi /// பெரியார் எங்களுக்கு முகமது அல்ல. அவர யாரும் எதுவும் சொல்லீட்டா எங்களுக்கு கோவம் வராது./// முஹமது நபியை பற்றி சொன்னாலும் எங்களுக்கும் தான் கோபம் வராது முறையாக சொன்னால். விமர்சனம் என்பது வேறு இழிவுபடுத்துதல் என்பது வேறு இழிவுபடுத்தினால் யாராக இருந்தாலும் கோபம்தான் வரும் பெரியாரை இழிவுபடுத்தினாலும் கோபம் வரத்தான் செய்யும் அதுவே இயல்பான பகுத்தறிவு மனித உணர்வு. அதனால் தான் சீமானின் தம்பிகள் பெரியாரை வடுக வந்தேறி எனச் சொல்லும் போது பல திக கழக தோழர்கள் எதிர்வினை ஆற்றுகிறார்கள் முகநூலில் கண்டவை.

 18. அய்யா வினவு,
  தங்களின் பின்னூட்ட வசதியில் முகவரியற்ற அனாமதேய பேர்வழி – பயந்தாங்கொள்ளி – ‘அனானி’களுக்கன option இல்லையே.அப்படியிருந்தும் அனாமத்துகளால் எப்படி பின்னூட்டமிடமுடிகிறது.. தயவு செய்து விளக்குங்கள்..

 19. It is generally believed and partly true that suppression of the female is more in Islam.-Anand

  Dear Mr.Anand,

  This statement looks without rational. Could you please specifically elaborate with some important issues which substantiate the claim of ‘suppression of female is more in Islam’ – so that Muslim brothers can answer/explain your doubts.

  Why do you want to focus only on Muslim women? Don’t you feel that comparative study of women status by major religion will enlighten the readers?

  இந்தப்பதிவின் பின்னூட்டமாக உங்களின் வினா அடிப்படையிலான ‘புதிய விவதம்’ தொடர்வதை விட – தனிப்பதிவாக இடப்பட்டு விவாதிப்ப்பது நலம் என கருதுகிறேன்.

  தமிழர்களான நமக்குள் – விவாதம் தமிழில் இருத்தல் நம் புரிதலுக்கு நல்லது என கருதுகிறேன்.

  I hope Anand can read, speak and write in Tamil. ஆனந்த தமிழ் தெரியுமல்லவா?

  Last request, Moderator of this blog should not allow ‘anonymous’ fellows who can divert the discussion.

  தோழமையுடன்..

 20. நல்ல பதிவு.
  //செங்கொடி- முஸ்லீம் பெண்கள் புர்காவை விரும்புவதில்லை என்பதற்கு அந்த புர்காவிலிருக்கும் டிசைன் வேலைப்பாடுகளே சாட்சி. ஆனால் விரும்பி அணிவதாக கதையளக்கிறார்கள்.//
  அவர்கள் பாவம் வேறு வழியில்யாமல் அப்படி சொல்கிறார்கள்.

 21. அய்யா பிறைனதி புரம்..

  ரொம்ப உணர்ச்சிவசப் பட்டிருக்கீங்க.. என்ன செய்ய உண்மை சுடும்.

  // இஸ்லாம் பற்றி பெரியாரின் கருத்து என்னவென்று ‘எந்த’ திரித்தலும் இல்லாமல் ’மீள்பதிவு’ செய்திருக்கிறேன் அவ்வளவுதான்.//

  அப்படினு ஒரு அண்டப் புழுகை இங்கேயே வந்து அவுத்து விட்டா எப்பிடினு தான் என்னோட கேள்வியிலெ கேட்டேன். நீங்க பெரியார் கருத்தை திரித்து வெளியிட்டது உண்மையா? இல்லையா?
  உண்மைதான் அப்பிடிக்கிற்து படிக்கிற எல்லாருக்கும் தெரியும்.இதைச் சுட்டிக் கட்டினால் உணர்ச்சிவசப் பட்டால் எப்பிடி. கொல்லன் பட்டறையிலேயெ வந்து ஊசி வித்தால் எப்பிடி.

  எனக்கும் இந்த பதிவின் நோக்கத்தைத் திசை திருப்பும் எண்ணம் கிடையாது. இதைத் தொடரும் எண்ணமும் இல்லை. ஆனால் என்ன செய்ய இந்த மத வியாபாரிகள் தொல்லை.

  //உண்மையான பெரியார் தொண்டனாக இருக்கும் எவரும் ‘அனாமத்துகளாக’ வரமட்டார்கள்..//

  சொந்தமாக இணையதளம் வச்சிருக்கவங்க மட்டும் தான் பெரியார் தொண்டனாக இருக்கணும் அப்பிடினு குரான்ல சொல்லியிருக்காங்களா?

  அதுக்கப்புறம் பெரியார் கொள்கைகளை பரப்பவும்,நடைமுறை செய்யவும் தாங்கள் நடாத்தி வரும் இணைய தளம் பார்த்தேன். மிகவும் அருமை. பார்க்கிற மனிதர்களிலெல்லாம் முதுகைத் தொட்டு தடவிப் பார்த்து பூனூல் இருக்கிறதா என்று சோதிக்கிற பாப்பானுக்கும் உஙளுக்கும் என்ன வேறுபாடு. ஒரு ஆர்.எஸ்.எஸ் காரன் ஒரு இணைய தளம் துவங்கினால் எப்படி மதவெறியப் பரப்புவானோ அதனினும் கேடுகெட்ட ஒரு வலைப் பக்கத்தினை உருவாக்கி, மதப் பிரச்சாரம் செய்வதற்கு ஒரு வலைத் தளம். அதற்கு தப்பான இடத்தில் வந்து விளம்பரம். இப்பிடி ஒரு வலைத்தள்ம் எனக்கு இல்லை என்று வசவு வேறு.

  நல்ல உத்தி. பதில் இல்லைனா பெரியார் தொண்டனை பெரியார் தொண்டனை விட்டே அடிக்க வச்சிரலாம் இல்லையா?

  பெரிய தப்பு. தப்பான இடத்திலெ வந்து தப்பு தப்பா பேசி, உங்களைக் கேள்வி கேட்டவுடன் அடி, புடி அப்பிடினு தப்பான இடத்திலெ வந்து ஆள் சேர்க்கும் போது அதுக்கு பதில் சொல்லலையின்னா என்னையும் உங்களை மாதிரி நெனைச்சிற கூடாதுங்கிறதுக்காகத்தான் இந்த பதில்.

  பொதுவா நீங்க எல்லாரையும் தோழர், தோழர் அப்பிடினு தான் அழைப்பீங்களா? அல்லது இப்பிடி எங்கையாவது சூடு வாங்கும் போது தோழர் ஞாபகம் வருமா தோழர் ;-). ஏன்னா வேற எந்த இடத்திலேயும் நீங்க தோழர் அப்பிடினு சொல்லலையே அதனால கேட்டேன். எங்களுக்கு அது பால பாடம்.

  பெரியார் தொண்டர்கள் ஒன்றும் மதவெறியர்களுக்கு அடியாள்கள் அல்ல. மத வெறி எங்கிருந்தாலும் அதற்கு சவுக்கடி கொடுத்து சவக்குழியில் இறக்குவோம்.

 22. அய்யா வினவு,

  அனானியாக பிறர் வந்து ‘பின்னூட்டமிடும் போது மட்டும், பிற விவரங்களை தாருங்கள்’ என்று கூறும் – தங்களின் தளம்..அனாமத்துகளை அனுமதிக்கிறதன் பின்னனி என்ன?

  எனக்கு எதிராக இடுகிற பின்னூட்டத்தில் தனியாளாக ’அது’ வந்து ஊளையிடும்போது தன்னை ஏன் பன்மையில் ‘எங்களுக்கு’ ‘இறக்குவோம்’ என்று அழைத்துக்கொள்கிறதோ தெரியவில்லை, ‘அனாதை’ ஊளையிடுறத மறைத்து அதுக்கு’ பின்னாடி பெரிய ‘பேக்ரவுண்ட்’ இருக்கிறது என்று காட்டிக்கொள்ளவா.. யாருமே அதை மதிக்காததால் -பொருட்படுத்தாதால் ‘சுயமாக மரியாதை’ கொடுத்துக்கொள்கிறதா..?

  ’உண்மைதான் அப்பிடிங்கிற்து படிக்கிற எல்லாருக்கும் தெரியும்’ அப்படின்னு படித்தவர்களின் பிரதிநிதியாக தன்னை காட்டிக்கொள்கிறது?.

 23. அய்யா வினவு,

  அனானியாக வந்து ‘பின்னூட்டமிடும் போது, பிற விவரங்களை தாருங்கள்’ என்று கூறும் – தங்களின் தளம்..அனாமத்துகளை அனுமதிக்கிறதன் பின்னனி என்ன? தயவு செய்து விளக்குங்கள்..

  எனக்கு எதிராக இடுகிற பின்னூட்டத்தில் தனியாளாக ’அது’ வந்து ஊளையிடும்போது தன்னை ஏன் பன்மையில் ‘எங்களுக்கு’ என்றும் ‘இறக்குவோம்’ என்று அழைத்துக்கொள்கிறதோ தெரியவில்லை,

  ‘அனாதையா’ வந்து தான் ஊளையிடுறத மறைப்பதற்காக அதுக்கு’ பின்னாடி பெரிய ‘பேக்ரவுண்ட்’ இருக்கிறது என்று ’ஷோ’ காட்டிக்கொள்வதற்காக தன்னை பன்மையில் அழைத்துக்கொள்கிறதா.அல்லது. அதன் உண்மையான ’அந்தஸ்து’ தெரிந்து அதை மதிக்காமல் அஃறிணையாக அழைப்பதால், தன்னை பன்மையில் அழைத்து ‘சுயமாக மரியாதை’ கொடுத்துக் கொள்கிறதா.?

 24. மத வெறியர்களின் முகமூடியை கிழிக்கும் விதமாக எனது பின்னூட்டங்களை வெளியிட்ட அய்யா வினவு அவர்களுக்கு நன்றி. யாருக்கோ பதில் கூறி பதிவின் நோக்கத்தை திசை திருப்ப விரும்பவில்லை. பிறை நதி புரத்திற்கு “நோ கமெண்ட்ஸ்”

 25. அப்பாடி,

  அனாமதேயம் Vs பிறைநதி பிரச்சினை முடிவுக்கு வந்துவிட்டது. மகிழ்ச்சி..

  ஆனால் ‘பிறைநதி’ எழுப்பிய முக்கியமான வினாவுக்கு – ’வினவு’ இன்னும் விடையே தரவில்லை..ஏன்? நானும் அதே கேள்வியை வைக்கிறேன்

  அய்யா வினவு,

  அனானியாக வந்து ‘பின்னூட்டமிடும் போது, பிற விவரங்களை தாருங்கள்’ என்று கூறும் – தங்களின் தளம்..அனாமத்துகளை அனுமதிக்கிறதன் பின்னனி என்ன? தயவு செய்து விளக்குங்கள்.

  தோழரே, அனானி பின்னூட்டமிடும் வசதியை தங்களின் தளத்தில் – நீக்கியிருந்தும் முகவரியற்றவரகளால் (மின்னஞ்சல்) ’திருட்டுத்தனமாக’ பின்னூட்டம் எழுதுவது எப்படி சாத்தியமாகிறது?

  ஒருவேளை wordpress ன் தொழில் நுட்ப கோளாறா? அல்லது பின்னூட்ட option ’கட்டுப்பாடுகளை’யும் மீறி ’பின்னூட்டமிடும்’ அளவிற்கு ‘அனாமத்துகள்’ – ’அம்புட்டு’ மூளை வளர்ச்சி உள்ள்வர்களா இருக்கிறார்களா?

  wordpress ல் வலைப்பூ வைத்திருக்கும் தோழர்கள் யாராவது விளக்குங்களேன்….

  ’[

 26. நன்றி ஆனந்த்.

  இவ்வளவு சுலபமாக இருப்பதால்தான் இந்த வசதியை பயன்படுத்தி மூளைவளர்ச்சி குன்றிய ஒரே ‘அனாமத்து’ பல பெயர்களீல் பின்னூட்டம் – இட்டு ‘பெரு மகிழ்ச்சி’ அடைந்து கொள்கிறது போலிருக்கிறது..

 27. நண்பர்களே தாமதமாக பதிலளிப்பதற்கு மன்னிக்கவும்
  வோர்ட் பிரஸிஙல் வரும் பின்னூட்டங்கள் மின்னஞ்சல் முகவரிகளுடன்தான் வருகின்றன. அது தள பொறுப்பாளர் மட்டும் பார்க்க முடியும். பொது வாசகருக்கு தெரியாது. அடுத்து, முதல் முறையாக வரும் பின்னூட்டங்கள்தான் தள பொறுப்பாளரின் அனுமதியோடு வரும். அடுத்த முறை அதே பெயரில் வரும் பின்னூட்டங்கள் தானாகவே பிரசுரமாகிவிடும். இவையெல்லாம் டெக்னிக்கல் விசயங்கள்.

  அல்லா பணக்காரன் என்ற பெயரில் வந்த நண்பரும், நண்பர் பிறையும் உணர்ச்சி வசப்படாமல் கருத்துக்களை பகிர்ந்து கொண்டால் ஆரோக்கியமாக இருக்கும்.

  இசுலாம் மதத்தை விமரிசிப்பவர்கள் எல்லோரும் முதலில் ஒரு விசயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். முதலில் அம்மதம் இந்தியாவில் ஆட்சியை பிடித்து மற்றவர்களை ஆளும் பலத்தில் இல்லை என்பதோடு இந்து மதவெறியர்களின் சகல தாக்குதலுக்கும் ஆளாகி அவஸ்தைப்படும் நிலையில் உள்ளது. இந்நிலைமையில் இக்கட்டுரை குறித்து நண்பர்கள் பிறையும், அல்லா பிச்சையும் தெரிவித்த கருத்துகளை நிச்சயம் ஒரு தீவிர இசுலாமிய மதத்துக்காரரர் தெரிவித்திருக்க மாட்டார். எங்களுக்கே ஆச்சரியமாக இருந்த்து. நிறைய திட்டி வரும் என்றுதான் எதிர்பார்த்திருந்தோம். இதை இசுலாத்தை விமரிசிக்க நினைக்கும் தோழர்களும் நண்பர்களும் கணக்கில் கொள்ள வேண்டும். மேலும் இவ்வளவு ஒத்த கருத்து உள்ளவர்களோடு கருத்து வேறுபாடுகளை உணர்ச்சிவசப்படாமல் நட்புடன் செய்வதுதான் சரியாக இருக்கும். வார்த்தைகளில் வெறுப்பைக் கொட்டாமல் பேசுவதையே முயற்சிக்குமாறு கோருகிறோம். எல்லோரையும் ஒரிரு சந்திப்புகளில் நமது கருத்துக்கு ஆதரவாக வென்றெடுத்துவிட முடியாது. அதற்கு நிறைய பொறுமையும் அக்கறையும் விடாமுயற்சியும் வேண்டும்.

  நண்பர் பிறை முழுமையாக பெரியாரை பின்பற்றவில்லை என்று நீங்கள் கருதினால் அதற்கு பொறுமையாக போராடுங்கள். அவருடன் ஒன்றுபடும் கருத்திலிருந்து உங்கள் விவாதத்தை ஆரம்பிக்கலாம்தானே. அதே போல நண்பர் பிறையும், அனானியாகவே வரும் நபரிடம் அதே போன்று விவாதிக்கலாமே. வார்த்தைகள் நம்மை விவாதத்திற்கு அழைத்துச் செல்லவேண்டுமே ஒழிய விரிசலுக்கு வித்திடக்கூடாது.

  இந்துமதவெறியும் கூடபெரும்பான்மை மக்களை சுலபத்தில் வசப்படுத்திவிடுகிறது. இதை விளக்கவும் நாம் பொறுமையாகத்தான் பல்வேறு முறைகளில் போராட வேண்டும். நண்பர் அல்லா பிச்சை அவரது தளத்தில் ஒரு கவிதை எழுதியிருக்கிறார். தனிமைப் படுத்தப்பட்ட வலியைப் பேசும் அந்தக் கவிதை அப்போதும் கூட தோழமையை நாடி நிற்கிறது. அந்த தோழமையைப் பற்றிக்கொண்டுதான் அவருடன் மதம் குறித்து பேசமுடியுமே அன்றி அதை உதறி அல்ல. நாத்திகர்கள், கம்யூனிஸ்ட்டுகளுக்கு மத நம்பிக்கை இல்லாமல் இருப்பதில் ஆச்சரியமல்ல. அதே போல எளிய மக்கள் அனைவரும் மத நம்பிக்கையுடன்தான் வாழ்கிறார்கள். அதை சரி செய்வது எப்படி? நாம் சாபம் கொடுப்பதினாலோ, முத்திரை குத்துவதினாலோ பிரச்சினை தீருமா?

  நண்பர்களும், தோழர்களும் பரிசீலிக்க்க கோருகிறோம். நன்றி!

 28. அய்யா வினவு,

  அது என்னுடைய கவிதை அல்ல.
  அது என்னுடைய கவிதை அல்ல.
  அது என்னுடைய கவிதை அல்ல.

  ஒழுங்கா கும்மியே அடிக்க தெரியாத எனக்கு ‘கவிதையா’ எழுத வரும்..

  என்னுடைய தளத்தில் வெளியிடப்பட்ட அந்தக் கவிதை அனுஜன்யா வால் எழுதப்பட்டு ‘கீற்று’ இணையத்தளத்தில் – வெளியிடப்பட்டுள்ளது.

  http://www.keetru.com/literature/poems/anujanya_1.php

  தவறான புரிதலை தந்ததற்காக – மன்னித்துக்கொள்ளவும்.

  என் வலைப்பூவில் அந்தப்பதிவையும் திருத்திவிட்டேன்..

  மிகச்சமீபத்தில் சொந்தமாக ’வலைப்பூ’ உருவாக்கி – இணையத்தில் வெளியாகும் அறிவை புகட்டும் – கவிதை – கட்டுரைகளை தேடி வாசிக்க ஆரம்பித்திருக்கிறேன்..

  அடுத்து, ஷகீலா வின் புர்கா தொடர்பாக – இஸ்லாமிய பிற்போக்குவாதிகள் உணர்ச்சி வசப்பட்டு தெரிவித்திருக்கும் ’கருத்து’ ‘எதிர்ப்பு’ ‘ஆர்ப்பாட்டம்’ போன்றவைகள் ‘விளம்பரம்’ தேடிக்கொளத்ததான் என்பது மறுக்கமுடியாத உண்மை.

  தாடி வள்ர்ந்த அளவிற்கு ..மூளை வளராத முல்லாக்கள்..தங்களின் குறைகளை ’ஷ்கீலாவின் புர்கா’ செய்தி கொண்டு மூடிமறைக்க பார்க்கிறார்கள்,

  தங்களின் இருப்பைக் காட்டிக்கொள்வதற்காக இது போன்ற ‘தலிபான்’ தன்மான செயல்களை செய்யவேண்டும் என்பது அவர்களின் சூழ்நிலை..

  கவிதை தொடர்பாக தவறான புரிதலை தந்ததற்காக – மன்னித்துக்கொள்ளவும்.

 29. தோழர் வினவு அவர்களுக்கு,
  புரிதலுக்கும், ஆலோசனைகளுக்கும் நன்றி.

  தொழில் நுட்ப விளக்கங்களை நண்பர் ஆனந்த் அளித்த பின்னும் மோதலைத் தொடர நினைக்கும் அல்லா பிச்சைக்கு கடும் கண்டணங்கள்.

  உங்கள் மூளை எவ்வளவு வளர்ந்துள்ளது என்பது நீங்கள் கேட்கும் கேள்விகளில் இருந்தே தெளிவாகும். உங்கள் மத வெறி உங்கள் அறிவு வளர்ச்சியை தடுக்கிறது. உங்கள் சிந்தனைகள் மழுங்கடிக்கப் பட்டுள்ளன.

  இன்னும் கடுமையாக சாடவே நீங்கள் என்னைத் தூண்டுகிறீர்கள். தோழர் வினவு கேட்டுக் கொண்டதற்கிணங்கவே இத்துடன் முடிக்கிறேன்.

 30. தோழர் வினவு,

  தங்களின் புரிதலுக்கு மிக்க நன்றி.

  வார்த்தைகள் நம்மை விவாதத்திற்கு அழைத்துச் செல்லவேண்டுமே ஒழிய விரிசலுக்கு வித்திடக்கூடாது என்ற தனக்களின் வார்த்தைகளை கவனத்தில் கொள்வேன்.

  அடுத்து கட்டுரைக்கான என் மற்றும் அல்லாபிச்சையின் பின்னூட்டங்களைக் கண்டு, ’எங்களுக்கே ஆச்சரியமாக இருந்த்து. நிறைய திட்டி வரும் என்றுதான் எதிர்பார்த்திருந்தோம்’..என்று நீங்கள் எழுதியிருப்பது கொஞ்சம் சிந்திக்க வைத்தது..

  தொழில் நுட்ப விளக்கங்களை தந்த நண்பர் ஆனந்திற்கு நன்றி.

  அல்லாபிச்சைக்கு வேண்டுகோள் – வார்த்தைகள் நம்மை விவாதத்திற்கு அழைத்துச் செல்லவேண்டுமே ஒழிய விரிசலுக்கு வித்திடக்கூடாது என்ற வினவின் வார்த்தைகளை கவனத்தில் கொள்ளுங்கள். இப்பதிவுக்கு முதல் பின்னூட்டமாக வந்த தங்களின் ‘கும்மியை’ படித்து சிரித்து – நன்பர்களுடன் பகிர்ந்து கொண்டேன்.

 31. தோழர் வினவு – விளக்கத்திற்கு நன்றி.

  விரிசலுக்கு வித்திடும் வார்த்தைகளை நிச்சயம் தவிர்ப்பேன்.

  ஆனந்த – தொழில் நுட்பத் தகவலுக்கு நன்றி.

  பிறைநதி – என் ‘கும்மி’க்கான தங்களின் பாராட்டுக்கு நன்றி..

 32. சகோதரர்களே,

  உங்கள் வீட்டில் உள்ளப் பெண்கள் சேலையும் பாவாடையும் அணிவது உங்கள் வீட்டிலுள்ள ஆண் அதிக்கத்தினாலா? அல்லது மானத்தை மறைத்து கண்ணியத்தைக் காக்கவா? தெருவில் உள்ளப் பெண்கள் சேலையும் பாவாடையும் அணிவது தெருவிலுள்ள ஆண் அதிக்கத்தினாலா? அல்லது மானத்தை மறைத்து கண்ணியத்தைக் காக்கவா? எதார்த்ததில் (அறிவியல் கண்டுபிடிப்பின் படி) ஆண்களுக்குப் பெண்களைப் பார்த்தலே தீய எண்ணம் உண்டாகும். காசை பிறர்கண்ணில் படாமல் ஏன் பாதுகாக்கின்றோம்? நீங்கள் வேன்டுமென்றால் வாதம் செய்யலாம். இது காசுக்கு செய்யும் அநீதி என்று!!!

  உங்களுக்கு இன்றுள்ள முஸ்லிம்களின் வாழ்க்கையில் மீடியாக்கள் கொச்சைப்படுத்தும் விஷயம் மட்டும்தான் கண்ணுக்குத் தெரியும். ஆனால் உண்மையிலேயே இஸ்லாம் எவ்வாறு ஆரம்பித்தது? அது மக்களை எவ்வாறு ஒருங்கிணைத்து மனிதர்களிடையே ஏற்றத்தாழ்வுகளைப் போக்கியது? நசுக்கப்பட்டு கேவலமாக கருதப்பட்ட பெண்ணினத்தை எவ்வாறு உயர்த்தியது? குறிப்பாக பெண் குழந்தைப் பிறந்தால் உயிரோடு புதைத்த கொடுமையை மாற்றியது. அவர்களுக்கும் சொத்தில் உரிமையைக் கொடுத்தது. குடிக்காரர்களாகவும், விபச்சாரம் புரிபவர்களாகவும் திரிந்த மக்களை நேர்வழிப்படுத்தி உயர்குணம் மிக்கவர்களாகவும் ஆளுகின்ற திறமைமிக்க அரசர்களாகவும், வீரர்களாகவும் எவ்வாறு செம்மைப்படுத்தியது. கருப்பன் வெள்ளையன் என்ற முரண்பாடு நீக்கி, பணக்காரன் ஏழை என்ற பேதம் போக்கி ஆண்டியும் அரசனும் ஒரே வரிசையில் நின்று இறைவணக்கம் புரியவைத்து பற்பல மூடநம்பிக்கைகளை தகர்த்தெறிந்தது என்பதெல்லாம் தெரியாமல் போனது ஏனாம்.

  இந்த நவீன காலத்தில் மீடியாக்கள் மற்றும் வேறு எல்லா வசதிகளையும் பெற்றுக்கொண்டு நீங்கள் அனைவரும் சேர்ந்து செய்யமுடியாததையெல்லாம் நவீனம் இல்லாத, விஞ்ஞானம் வளராத, கொடுஞ்செயல் புரிந்த காலக்கட்டத்தில் செய்து காட்டி, ஏழைகளின் மீதும் ஒடுக்கப்பட்டவர்களின் மீதும் இரக்கம் காட்டி அவர்களை மேம்படுத்தி அரசராயிருந்தும் எளிய வாழ்வு வாழ்ந்து ஏழையாகவே மரணித்த அந்த தூய நபியவர்களின் வாழ்வும், அவரையும் அவரது தோழர்களையும் வழி நடத்திச்சென்ற இறைவனால் சன்னம் சன்னமாக மக்களின் தேவைக்கேற்ப்ப 1400 வருடங்களுக்கு முன்னால் இறக்கி வைக்கப்பட்டு இன்றளவும் கோடி கணக்கான மனித இதயங்களினால் பாடம் செய்யப்பட்டு எத்தனை முயற்சித்தும் எந்த மாற்றமும் செய்யமுடியாத அறிவியலினால் போற்றப்படுகின்ற வரலாறு, புவியியல், வானசாஸ்திரம், சமூகவியல், அரசியல் மற்றும் ஆன்மீகம் என்று அனைத்தும் உள்ளடக்கிய வாழ்க்கைப் புத்தகமாக வந்த திருக்குர்-ஆனும் உங்களுக்குத் தெரியாது. அதை ஆராயும் மனப்பான்மையும் உங்களுக்கு கிடையாது. உரசிப் பார்த்தால் தான் தெரியும் அது தங்கமா அல்லது பித்தளையா என்று. உரசாமல் (நாக்கூசாமல்) சூரியனை நோக்கி சேற்றை வீசுவதுதானா உங்கள் பகுத்த்றிவு?

  வினவு அன்ட் கோ, குர்-ஆனை அராய்ந்தப்பின் வினவவும்.

  • அட பாவமே
   தோழன் னு பேரு வச்சுக்குட்டு இப்படி பேசறீங்களே! ஒன்னை இன்னொன்டு ஒப்பிடும் போது உயர்திைணை அஃறிணை அப்படின்னு பாகுபாடு பாத்துதான் ஒப்பிடுமுன்று எங்க தமிழ் வாத்தியாரு சொல்லியிருக்காரு. நீங்க என்னடன்னா காசையும் மனுஷிையும் ஒன்ன சொல்லிங்களே!? நீ நியாயமா? காசு எப்பவாச்சும் உங்கிட்ட பேசுச்சா? தோழரே சொல்லூங்க?
   –புதியவன்—

 33. This is very wrong what shakila did, vinavu first you tell shakila to stop to act the sex films, then advise our goverment to stop to play in theatre, then we will not see that kind of films, i want to say onething, bardha is only for safety not for others

 34. சகோதரர்களே,

  உங்கள் வீட்டில் உள்ளப் பெண்கள் சேலையும் பாவாடையும் அணிவது உங்கள் வீட்டிலுள்ள ஆண் அதிக்கத்தினாலா? அல்லது மானத்தை மறைத்து கண்ணியத்தைக் காக்கவா? தெருவில் உள்ளப் பெண்கள் சேலையும் பாவாடையும் அணிவது தெருவிலுள்ள ஆண் அதிக்கத்தினாலா? அல்லது மானத்தை மறைத்து கண்ணியத்தைக் காக்கவா? எதார்த்ததில் (அறிவியல் கண்டுபிடிப்பின் படி) ஆண்களுக்குப் பெண்களைப் பார்த்தலே தீய எண்ணம் உண்டாகும். காசை பிறர்கண்ணில் படாமல் ஏன் பாதுகாக்கின்றோம்? நீங்கள் வேன்டுமென்றால் வாதம் செய்யலாம். இது காசுக்கு செய்யும் அநீதி என்று!!!

  உங்களுக்கு இன்றுள்ள முஸ்லிம்களின் வாழ்க்கையில் மீடியாக்கள் கொச்சைப்படுத்தும் விஷயம் மட்டும்தான் கண்ணுக்குத் தெரியும். ஆனால் உண்மையிலேயே இஸ்லாம் எவ்வாறு ஆரம்பித்தது? அது மக்களை எவ்வாறு ஒருங்கிணைத்து மனிதர்களிடையே ஏற்றத்தாழ்வுகளைப் போக்கியது? நசுக்கப்பட்டு கேவலமாக கருதப்பட்ட பெண்ணினத்தை எவ்வாறு உயர்த்தியது? குறிப்பாக பெண் குழந்தைப் பிறந்தால் உயிரோடு புதைத்த கொடுமையை மாற்றியது. அவர்களுக்கும் சொத்தில் உரிமையைக் கொடுத்தது. குடிக்காரர்களாகவும், விபச்சாரம் புரிபவர்களாகவும் திரிந்த மக்களை நேர்வழிப்படுத்தி உயர்குணம் மிக்கவர்களாகவும் ஆளுகின்ற திறமைமிக்க அரசர்களாகவும், வீரர்களாகவும் எவ்வாறு செம்மைப்படுத்தியது. கருப்பன் வெள்ளையன் என்ற முரண்பாடு நீக்கி, பணக்காரன் ஏழை என்ற பேதம் போக்கி ஆண்டியும் அரசனும் ஒரே வரிசையில் நின்று இறைவணக்கம் புரியவைத்து பற்பல மூடநம்பிக்கைகளை தகர்த்தெறிந்தது என்பதெல்லாம் தெரியாமல் போனது ஏனாம்.

  இந்த நவீன காலத்தில் மீடியாக்கள் மற்றும் வேறு எல்லா வசதிகளையும் பெற்றுக்கொண்டு நீங்கள் அனைவரும் சேர்ந்து செய்யமுடியாததையெல்லாம் நவீனம் இல்லாத, விஞ்ஞானம் வளராத, கொடுஞ்செயல் புரிந்த காலக்கட்டத்தில் செய்து காட்டி, ஏழைகளின் மீதும் ஒடுக்கப்பட்டவர்களின் மீதும் இரக்கம் காட்டி அவர்களை மேம்படுத்தி அரசராயிருந்தும் எளிய வாழ்வு வாழ்ந்து ஏழையாகவே மரணித்த அந்த தூய நபியவர்களின் வாழ்வும், அவரையும் அவரது தோழர்களையும் வழி நடத்திச்சென்ற இறைவனால் சன்னம் சன்னமாக மக்களின் தேவைக்கேற்ப்ப 1400 வருடங்களுக்கு முன்னால் இறக்கி வைக்கப்பட்டு இன்றளவும் கோடி கணக்கான மனித இதயங்களினால் பாடம் செய்யப்பட்டு எத்தனை முயற்சித்தும் எந்த மாற்றமும் செய்யமுடியாத அறிவியலினால் போற்றப்படுகின்ற வரலாறு, புவியியல், வானசாஸ்திரம், சமூகவியல், அரசியல் மற்றும் ஆன்மீகம் என்று அனைத்தும் உள்ளடக்கிய வாழ்க்கைப் புத்தகமாக வந்த திருக்குர்-ஆனும் உங்களுக்குத் தெரியாது. அதை ஆராயும் மனப்பான்மையும் உங்களுக்கு கிடையாது. உரசிப் பார்த்தால் தான் தெரியும் அது தங்கமா அல்லது பித்தளையா என்று. உரசாமல் (நாக்கூசாமல்) சூரியனை நோக்கி சேற்றை வீசுவதுதானா உங்கள் பகுத்த்றிவு?

  வினவு அன்ட் கோ, குர்-ஆனை அராய்ந்தப்பின் வினவவும்.

 35. வினவு>

  எதுவும் இல்லான, இப்படி தான் கோவத காமிகிறதா.. நீ சரியான ஆளா இருந்தா பதில சொல்லு. என்ன டிரெஸ் பொண்ணுங்க போடணும், எப்டி போட்ட சரி.

  நான் பல கேள்வி கேட்டு நீ பதில் தரள அதுலயே தெறிது உன்னோட மொள்ளமாரி தனம்.

 36. entha udai udutha vendum..engu entha udai therivu seiya vendum.. entha uNavu uNNa vendum enbathellam thani manitha virupugal..innum kuripaga thani manitha suthanthiram.. aaN peN enRa entha vithiyasamamum irruka koodathu…veru oruvar thalaiyidum pothu thaan adimaithanam thodangukirathu…ippadi padda adakku muRaiku ore kaaraNam.. so called ‘god delusion’…
  yen ingu entha pennudaiya pinnudamum illai…

 37. உங்கள் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்

  ஷகீலா புர்க்கா அணிந்தது சரியா தவறா என்பது இருக்கட்டும் இந்த கட்டுரையில் பெண்ணுரிமை சின்னா பின்னமாகி விட்டதாக சொல்லி இருக்கிறார் அவர் சொல்வது சரிதான் ஷகீலா புர்க்கா அணிவதும் அணியாமல் இருப்பதும் அவரது விருப்பம் அதில் யாரும் தலை நுழைக்க கூடாது ஆனால் ஷகீலா புர்க்கா அணிந்து கொண்டு அதை இஸ்லாம் கூருவதால்தான் அணிகிறேன் என்று சொன்னால் ஏற்று கொள்ள முடியாது ஏன் என்றால் இஸ்லாம் கூறும் எதையும் அவர் கடை பிடிப்பது இல்லை

  கட்டுரையாளருக்கு

  இஸ்லாம் கட்டாயப்படுத்தி யாரையும் புர்க்கா அணிய சொல்லவில்லை உங்களுக்கு இஸ்லாத்தில் இருக்க விருப்பம் என்றால் அதன் கொள்கையை ஏற்றுக்கொண்டு இருங்கள் இல்லை உங்கள் இஷ்டம் எப்படி வேண்டுமானாலும் இருங்கள் இஸ்லாம் யாரையும் நிர்பந்திக்க வில்லை இஸ்லாம் மதம் மட்டும் தான் பெண்களுக்கு அணைத்து உரிமைகளையும் ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பே கொடுத்து விட்டது பெண்களுக்கு கல்வி சொத்துரிமை உட்பட அணைத்து உரிமைகளும் உள்ளது இந்து மதம் தான் பெண்கள் திருமணம் முடியும்வரை தகப்பனையும் திருமணத்திற்கு பிறகு கணவனையும் சார்ந்து வாழ சொல்கிறது இஸ்லாம் திருமணத்தில் கூட பெண்ணின் அனுமதி பெற்றுதான் செய்ய சொல்கிறது அதுவும் உடன் படிக்கைதான் பெண்ணிற்கு விருப்பம் இல்லை எனில் உடன் படிக்கையை முறித்து கொள்ள உரிமையையும் கொடுத்துள்ளது

  நீங்களே சொல்லுங்கள் நீங்கள் அநேகமாக இறை மறுப்பு கொள்கையில்தான் இருப்பீர்கள் உங்கள் கொள்கையை சேர்ந்தவர் கோவிலுக்கு சென்று கும்பிட்டு விட்டு வந்தால் நீங்கள் அவரை ஏற்று கொள்வீர்களா அவரை விமர்சனம் செய்ய மாட்டீர்களா?
  அதை நாங்கள் செய்தால் தவறு என்கிறீர்கள் இது எப்படி நியாயமாகும் ? மீண்டும் வலியுறுத்தி கூறிக்கொள்கிறேன் இஸ்லாம் உங்களை நிர்பந்திக்க வில்லை இஸ்லாத்தில் இருப்பதும் வெளியேறுவதும் உங்களுடைய சொந்த விருப்பம்

  மேலும் யாரும் கட்டாயப்படுத்தி புர்க்கா அணிய சொல்லவில்லை அவர்கள் (பெண்கள்) தாமாக விரும்பியே அணிகிறார்கள் வேண்டுமானால் நீங்கள் சர்வே எடுத்து கொள்ளுங்கள்
  ஆப்கனிஸ்தானில் அமெரிக்காவால் திட்டமிட்டு எடுக்கப்பட்ட போட்டோவை வைத்து இஸ்லாத்திற்கு எதிரான பிரசாரத்தை செய்ய வேண்டாம் இஸ்லாம் அப்படி புர்க்கா அணியாதவர்களை கொள்ள சொல்ல வில்லை அப்படி ஒருவர் செய்தால் அது அவருடைய அறியாமையே காரணம் அன்றி இஸ்லாத்தின் தவறு இல்லை

 38. //ஒரு உரிமை ஏற்கனவே சிக்கிச் சின்னாபின்னமாகிவிட்டது.
  அதன் பெயர் பெண்ணுரிமை!//

  அருமை.. வரிக்கு வரி சிறப்பான கருத்துகள்.. ஷகீலா வை அடிக்க நினைப்போரெல்லாம் முதலில் தங்களையும் , தங்கள் மதத்தில் சினிமாவிலோ எங்கோ பெண்ணை அவள் உடம்பை அவள அனுமதியில்லாமல் பார்த்து ரசித்தமைக்கு அடித்துக்கொள்ளட்டும்..

 39. பார்க்கிறவன் பார்வை நேர்மையாயிருந்தால், யாரும் எதையும் மறைக்க வெண்டுவதில்லை! ஒவ்வொரு காலகட்டத்திலும், அந்தந்த சமூதாய ஒழுக்கத்தின் அடிப்படையில், ஆடையும் மாறுபடும்! கற்காலத்தில் வெயில், குளிருக்கு பாதுகாப்பாகவே ஆடை தேவைப்பட்டது! போராட்ட காலத்தில் கொள்ளீக்ண்களிடமிருந்து தப்ப ஆடை தேவைப்பட்டது! சமாதான காலத்தில் கவர்ச்சிக்காக சிறிது ஆடையே தேவைப்படுகிறது! யோக்கியர்கள் மத்தியில் எந்த ஆடையும் கண்ணியமானது தான்! ஜொல்லர்களுக்கு வெறும் ஆடை மட்டுமே போதும் ஜொள்ளூ விடுவதற்கு!

  • //இரைக்கு அலையும் நாயைப் போலவும், கூச்ச நாச்சமற்ற மிருகங்களைப் போலவும் நெல்லை கோர்ட்டில் ஷகீலாவுக்கு கூடிய கூட்டமே, அவரது குற்றத்தின் பரிமாணத்தை விளக்கப் போதுமானது//
   அமெரிக்க போர்னோவில் பெண்கள் நடிப்பதற்கு காரணம் முதலாளித்துவம் எனும் வினவு, ஷகீலா மீது மட்டும் ஏன் குற்றம் சுமத்துகிறது?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க