Wednesday, July 24, 2024
முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்பாரதமாதவின் தலைசிறந்த சுயம்சேவக் எடியூரப்பா!

பாரதமாதவின் தலைசிறந்த சுயம்சேவக் எடியூரப்பா!

-

பாரதமாதவின் தலைசிறந்த சுயம்சேவக் எடியூரப்பா!
எப்பூடி........

ஆர்.எஸ்.எஸ் – பெயர் சொன்னால் போதும்; தரம் எளிதில் விளங்கும். உங்களுக்கு அதன் தரமோ தராதரமோ போதுமான அளவுக்கு விளங்கவில்லையா? கவலையை விடுங்கள், சுயம்சேவகர்களைப் பார்த்துப் புரிந்து கொள்ளுங்கள். ஆர்.எஸ்.எஸின் கடமை, கட்டுப்பாடு, ஒழுக்கம், நேர்மை மற்றும் இன்னபிற யோக்கியதைகளை மக்களுக்குத் துலக்கமாக விளக்கும் வாழும் உதாரணம் தான் சுயம்சேவகர்கள். அதில் முதன்மையானவர் தான் சுயம்சேவக் எடியூரப்பா.

பல்வேறு சிறப்பான குணாம்சங்களைக் கொண்டவரும், ஆர்.எஸ்.எஸ் காக்கி டவுசர்கள் சொல்லும் சுய சேவையில் கரைகண்டவருமான எடியூரப்பாவுக்கு பல சிறப்புகள் இருக்கின்றன. அதில் சமீபத்திய சிறப்பு அவர் வழங்கிய ராஜினாமாக் கடிதம். உலகிலேயே நல்ல நேரம் பார்த்து ராஜினாமாக் கடிதம் கொடுத்த ஒர்ர்ரே முதலமைச்சர் அனேகமாக இவராகத் தான் இருக்க முடியும். நல்ல விஷயங்கள் நல்ல நேரத்தில் தான் நடக்க வேண்டும் என்று நினைத்துத் தான் இப்படிச் செய்தாரா தெரியவில்லை.  ஆனால், இந்த சாதனையை இனிமேல் ஜெயலலிதாவால் கூட மிஞ்ச முடியாது என்பது மட்டும் திண்ணம்.

மேலும் விஷயத்துக்குள் போகும் முன் விவரங்களுக்குள்ளும் கொஞ்சம் உலாத்தி விட்டு வரலாம் நண்பர்களே!

அதாகப்பட்டது, ‘கம்யூனிஸ்ட்டு’ செஞ்சீனம் மேன்மேலும் உயர்வதைத் தடுத்து பரதவர்ஷத்தின் புகழ்க் கொடி பாரில் பட்டொளி வீசிப்பறக்க ஆர்.எஸ்.எஸ் காக்கி டவுசர்கள் தீவிரமாக சிந்தித்து ஒரு திட்டத்தைத் தயாரித்தார்கள். அதன்படி, கருநாடக மாநிலம் பெல்லாரியில் கிடைக்கும் இரும்புத் தாதுவை சல்லிசான விலைக்கு சீனத்துக்கு அனுப்பி, அதன் மூலம் உண்டாகும் இரும்புக் குவியலாலேயே சீன தேசத்தை அழுத்திக் கீழே தள்ளி விட வேண்டும்  என்பது தான் அந்தத் திட்டம். இதற்காகவே ரெட்டி சகோதரர்கள் என்கிற மூன்று முத்தான சுயம்சேவகர்களிடம் பெல்லாரி மாவட்டத்தையே தூக்கிக் கொடுத்துள்ளார்கள்.

ரெட்டிகளின் நேரடிக் கம்பெனிகளும் பினாமிக் கம்பெனிகளுமாகச் சேர்ந்து  இரும்புத் தாதுக்களால் அழுத்தப்பட்டுக் கிடக்கும் பாரதமாதாவின் சுமையைக் குறைக்க வேண்டுமே என்கிற நல்லெண்ணத்தில் பெல்லாரி மாவட்டத்தையே தோண்டித் துருவியதற்கு பெற்ற அற்ப கூலி மட்டுமே 16,000 கோடிகளுக்கும் மேல் இருக்கும் என்று தனது விசாரணை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் கருநாடக லோக் அயுக்தா தலைவர் சந்தோஷ் ஹெக்டே. சந்தோஷ் ஹெக்டே ஒரு நல்லவர் என்பதை தில்லியில் உள்ள பா.ஜ.க தலைவர்களே சான்றிதழ் அளித்திருப்பதால் நாம் அவரின் கூற்றை சந்தேகிக்க வேறு காரணங்களில்லை.

மேற்படி திட்டம் நல்ல முறையில் இயங்கி வந்ததை அடுத்து, தென்னிந்தியாவின் முதல் இராம இராஜ்ஜியத்தின் மாமா மன்னர் எடியூரப்பா அவர்களின் ஆட்சிக்கு உட்பட்ட784 அதிகாரிகளுக்கு அப்பாவி இரும்பு யாவாரிகள் பல்வேறு பரிசில்களைக் கொடுத்துள்ளனர். மேலும், மன்னரின் புதல்வர்களுக்கும் சில பத்து கோடிகள் கப்பமாகக் கட்டப்பட்டுள்ளது. இதன் விவரங்களும் சந்தோஷ் ஹெக்டேவின் விசாரணை அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.

ஏற்கனவே தேசிய அளவில் பாரதமாதாவைக் கூறு போட்டு விற்பதில் சிறப்புப் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியே பொறாமை கொள்ளும் அளவிற்கு ஆர்.எஸ்.எஸ் டவுசர்களின் சாதனை அமைந்துள்ளதே அதற்குக் கிடைத்துள்ள பெருமைகளில் தலையாயது. ஓரிரு மாநிலங்களில் ராம ராஜ்ஜியத்தை அமைப்பதில் வெற்றி ஈட்டியுள்ள நிலையிலேயே தமது கீர்த்தி மிக்க செயல்பாடுகளால் பாரத மாதாவின் புகழ்க் கொடியைப் பட்டொளி வீசிப் பறக்க விட்டுள்ள டவுசர்கள், மத்திய அரசின் அதிகாரத்தையே கைப்பற்றி விட்டார்கள் என்றால் பாரத மாதாவின்  கோவணத்தைக் கூற சிறப்பாகப் பறக்க விடுவார்கள் என்பதில் யாருக்கும் ஐயம் இருக்க முடியாது.

ஏற்கனவே இவர்கள் மத்தியில் அதிகாரத்தில் இருந்த போது உலகிலேயே யாரும் சிந்தித்திராத வண்ணம், அரசுத் துறைகளை தனியாருக்கும் அந்நியர்களுக்கும் விற்பதற்காக தனி இலாக்காவே வைத்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தனது மாமா வேலைக்கு இந்துத்துவக் காவிகள் ஒரு போட்டியாக உருவெடுத்து விடக் கூடாது என்பதில் குறிப்பாக இருக்கும் காங்கிரசு, சந்தோஷ் ஹெக்டேவின் அறிக்கையை வைத்து கடந்த மாதம் பஞ்சாயத்தைக் கூட்டியது. கருநாடக பாரதிய ஜனதாவிலேயே புறங்கையை நக்க வாய்ப்புக் கிடைக்காத பிற கோஷ்டிகளும் எடியூரப்பாவிற்கு எதிராய் போர்க் கொடியை உயர்த்தினர்.

குரங்குக் கூட்டத்தில் மரத்திலிருந்து தவறி விழும் குரங்கு கீழே விழுந்தவுடன் கையில் அகப்பட்ட உடைந்த கம்பை தூக்கி மற்ற குரங்குகளுக்குக் காட்டுமாம். ஏனெனில், கிளை தாவும் போது கீழே விழுவது குரங்குகளிடையே அவமானகரமானதாகக் கருதப்படுகிறது. அப்படிக் கீழே விழுந்த குரங்கை மற்ற குரங்குகள் கூட்டத்தை விட்டு விலக்கி விடுமாம். அதைத் தவிர்க்கத் தான் கீழே விழுந்த குரங்கு ‘நானாக விழவில்லை; இதோ இந்தக் கிளை முறிந்ததால் தான் கீழே விழுந்தேன்’ என்பதை உணர்த்தும் விதமாக அவ்வாறு செய்யுமாம்.

காங்கிரசு, பா.ஜ.க மற்றும் போலி கம்யூனிஸ்டு கட்சிகளைப் பொருத்தவரையில் சிறப்பான முறையில் ஒரு ஊழலில் இருந்து இன்னொரு ஊழலுக்கு மாட்டிக் கொள்ளாமல் தாவும் வரை பிரச்சினையில்லை. மாட்டிக் கொண்டால் மற்றவர்கள் இன்ஸ்டன்ட் யோக்கியர்களாகி விடுவார்கள். எனவே இப்போது கீழே விழுந்த குரங்கான எடியூரப்பாவைப் பார்த்து கீழே விழாத பா.ஜ.க குரங்குகள் கடந்த மாதத்திலிருந்து எக்காளமிடத் துவங்கின. எடியூரப்பாவும் லேசுப்பட்டவர் இல்லையென்பதால், குப்புற விழுந்து மூஞ்சியே மண்ணில் புதைந்து போன நிலையிலும் ‘ மீசையில் மண் ஒட்டலையே’ என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

எப்படியாவது இவர் கையில் காலில் விழுந்தாவது பதவியை ராஜினாமா செய்ய வைத்து விட்டால் ஆர்.எஸ்.எஸின் கட்டுக்கோப்பை நிலைநாட்டி விடலாம் என்று கருதிய தில்லி மேலிடம், எடியூரப்பாவிற்குத் தூது மேல் தூது அனுப்பிக் கொண்டிருந்தது. இந்த விஷயமாக நடந்த சமரசக் கூட்டங்களில் எடியூரப்பா வெங்கைய்யா நாயுடுவின் லேப்டாப்பை விசிறி அடித்தார் என்றும், இன்னொரு அமைச்சரை பளார் என்று கன்னத்தில் அறைந்தார் என்றும் செய்திகள் வந்தவண்ணம் இருந்தன.

காங்கிரஸ்காரனுக்கு அரசியலில் அதிக பட்ச பயிற்சியே வேட்டி உருவச் சொல்லிக் கொடுப்பது தான். எனவே அவர்களின் கூட்டங்களில் கலந்து கொள்ளும் செயல் வீரர்கள் பட்டாபட்டியை பேண்டு நீளத்துக்குத் தைத்துப் போட்டுக் கொண்டால் பிரச்சினை தீர்ந்தது. ஆனால், இவர்களோ ஆர்.எஸ்.எஸ் பயிற்சி முகாம்களில் குஸ்தி பயின்றவர்கள். எனவே மூடிய அறைக்குள் குத்துச் சண்டையே நடந்திருந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. ஆர்.எஸ்.எஸின் நேர்மை, ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாடு பற்றியெல்லாம் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள பா.ராகவன், அவர்களின் குத்துச் சண்டைத் திறமையையும் சேர்த்தே குறிப்பிட்டிருக்கலாம்.

இதற்கிடையே தில்லியில் நடந்த பாரதிய ஜனதா உயர் நிலைக் கூட்டத்தில் தனது படை பரிவாரங்களோடு கலந்து கொள்ளச் சென்றிருந்த எடியூரப்பா யாருக்கும் சொல்லாமல் கொள்ளாமல் ராவோடு ராவாக அங்கிருந்து எஸ்கேப்பாகி கருநாடகத்திற்குத் திரும்பி  ஆர்.எஸ்.எஸில் கற்றுக் கொண்ட கட்டுப்பாட்டை சிறப்பாக நிலைநாட்டி விடுகிறார். பாரதிய ஜனதாவின் தேசியத் தலைவர்கள் எடியூரப்பா சொந்தமாகக் கிண்டிக் கொடுத்துச் சென்ற அல்வாவைக் கையில் வைத்துக் கொண்டு தேசிய ஊடகங்களின் முன் பேந்தப் பேந்த முழித்துக் கொண்டிருந்தார்கள்.

அடுத்து எடியூரப்பா இராஜினாமா செய்வாரா மாட்டாரா என்று புரியாமல் பாரதிய ஜனதா தலைமை தலையைச் சொறிந்து கொண்டிருந்த நிலையில் கருநாடகம் வந்த எடியூரப்பா, தனது ஆஸ்தான அரசியல் வழிகாட்டிகளான பில்லி சூனிய மந்திரவாதிகளிடம் விவாதித்தாரா இல்லை அரசியல் குரு குட்டிச்சாத்தானிடம் விவாதித்தாரா தெரியவில்லை. ஆனால், ஒருவழியாக இராஜினாமா செய்வேன் என்று தீர்மானித்து அறிவித்தார். அதிலும் பீடை மாதமான ஆஷாட மாதம் ஜூலை 30ம் தேதி தான் முடிகிறது என்றும் அதன் பின் புனித நாளான ஜூலை 31ம் தேதியன்று தான் பதவி விலக முடியும் என்றும் அறிவித்த எடியூரப்பா, தனக்கு அடுத்து தனது அடிப்பொடியான சதானந்தா தான் முதல்வராக வேண்டும் என்றும் தன்னிச்சையாக அறிவிக்கிறார்.

இதற்கிடையே, ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளாக காங்கிரசு குரங்குக் கூட்டத்திலிருந்தும் பல குரங்குகள் கிளை தாவும் போது கீழே விழுந்து கிடக்கின்றன. எனவே அவர்களும் ‘நீ மட்டும் யோக்கியமா’ என்கிற அறிவியல்பூர்வமான அரசியலைக் கையில் எடுக்கிறார்கள். பாராளுமன்றம் வேறு விரைவில் கூடுகிறது; ஆ. ராசா வேறு பிரதமரின் கோவணத்தில் இருக்கும் பொத்தல்களை நீதிமன்றத்தில் வைத்து அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்துக் காட்டிக் கொண்டிருக்கிறார் – அவர்கள் கவலை அவர்களுக்கு.

எடியூரப்பா முதல்வர் பதவிக்கான தனது வாரிசு யார் என்று அறிவித்து விட்ட நிலையில் பாரதிய ஜனதாவைச் சேர்ந்த தன்னலமற்ற சுயம் சேவகர்களுக்குள் குடுமிப்பிடி சண்டை துவங்குகிறது. இந்தச் சண்டைகளெல்லாம் யார் தொடர்ந்து பாரத மாதாவுக்கு செய்யப்பட்டு வரும் சேவையைத் தொடர்ந்து தங்கு தடையில்லாமல் செய்வது என்பதற்காகத் தான் என்பதை நாம் வாசகர்களுக்கு நினைவூட்டத் தேவையில்லை என்று நினைக்கிறோம்.

ஒருவழியாக குருக்ஷேத்திரத்தில் வெற்றியீட்டும் எடியூரப்பா தனது அணியைச் சேர்ந்த சதானந்தாவை ஆகஸ்ட் 3ம் தேதி முதல்வர் பதவியில் அமர்த்துவதில் வெற்றி கண்டுள்ளார். எடியூரப்பாவை இராஜினாமா செய்ய வைத்ததன் மூலம் தனது அமைப்பு ஒரு இராணுவக் கட்டுப்பாடு கொண்ட அமைப்பு என்கிற பெயரை பாரதிய ஜனதா தக்கவைத்துக் கொண்டதாக நினைத்துக் கொண்டிருக்கிறது. ‘அவளும் பத்தினியில்லை’ என்று நிறுவ முடிந்ததில் காங்கிரசுக்குப் பேரானந்தம்.

பெல்லாரியிலிருந்து தோண்டியெடுக்கப்பட்ட பாரதமாதாவின் அங்கங்களோ கப்பலில் சீனத்தை நோக்கித் தடையின்றிப் பயணிக்கின்றன. ஆர்.எஸ்.எஸ் காரர்கள் சாகாவில் பாடிக் கொண்டிருக்கிறார்கள் ‘பரம் வைபவன்யே துமே தத்ஸ்வராஷ்ட்ரம்’ – அதாவது, “பரம வைபவமான நிலைக்கு உன்னை உயர்த்துவேன் உன்னதமான ஸ்வராஷ்ட்ரமே” என்று இதற்குப் பொருள். பீகிங்கின் வானுயர்ந்த பாலங்களும் கட்டிடங்களும் தான் அந்த ‘பரம வைபவமான’ நிலை என்று சொல்கிறார்கள் இந்துத்துவ யோக்கியர்கள். இந்தப் பரம வைபவத்தை நோக்கிய பயணம் ஒவ்வொன்றிற்கும் துறைமுக அதிகாரிகளுக்குக் கொடுக்கப்படும் லஞ்சம் 50 ஆயிரம் என்று கண்டறிந்து சொல்லியிருக்கிறார் சந்தோஷ் ஹெக்டே.

ஓரிரு மாநிலங்களில் அதிகாரத்தில் இருக்கும் போதே ராம ராஜ்ஜியம் இந்தப் போடு போடுகிறதே, மொத்த நாட்டுக்கும் அதிகாரம் செலுத்தும் நிலைக்கு இவர்கள் வந்தால் என்ன போடு போடும் என்பதை நாங்கள் புதிதாக விளக்க வேண்டுமா என்ன?

__________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்:

 1. தலைவா சூப்பேர் ,

  கம்யூனிஸ்ட் தப்பு பண்ணா அவன் போலி கம்யூனிஸ்ட் ( அப்போ கம்முநிசம் தப்பு சொல்ல கூடாது ) ஆனா rss காரன் தப்பு பண்ணா அவன் போலி rss கெடையாது …rss மொத்தமும் தப்பா??

  • //கம்யூனிஸ்ட் தப்பு பண்ணா அவன் போலி கம்யூனிஸ்ட் ( அப்போ கம்முநிசம் தப்பு சொல்ல கூடாது ) ஆனா rss காரன் தப்பு பண்ணா அவன் போலி rss கெடையாது …rss மொத்தமும் தப்பா??//

   இந்த கேள்விய யார்கிட்ட கேட்கனும்ங்கிற அறிவு கூட இல்லாம இங்க வந்து கேக்குறாய்ங்க. வினவு தன்னை கம்யுனிஸ்டுனு சொல்லுது அதனால சிபிஎம் போலின்னு சொல்றாங்க.

   அப்போ போலி ஆர்எஸ்எஸ்னு சொல்ல வேண்டியவன் யாரு? தன்னை உண்மையான ஆர்எஸ்எஸ்னு சொல்றவன்தானே? அவன் எடியூரப்பாவை அப்படி சொல்லலியே ஏன்? அவன் எடியூரப்பாவை இன்னும் சுயம்சேவக்னு முன்னாடி நிறுத்துறானே ஏன்?

   இதோ அரை டவுசர் போட்டு கிழட்டு காவிப் பன்னி எடியுரப்பா கொடுக்கும் போஸ்

   http://www.thehindu.com/multimedia/dynamic/00739/SS_YEDDYURAPPA_RSS_739117g.jpg

   http://www.thehindu.com/news/states/karnataka/article2311114.ece

   • இது போன்ற ஒரு பதிவை வெளியிட்டு மீண்டும் நான் வெள்ளை பாவாடைகளின் கூலிப்படை என்று நிறுபணம் செய்த போலி கம்யூனிஸ்டு வினவிற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். மறந்து கூட உங்கள் தலைவி சோனியாவை பற்றீ எதுவும் பேசாமல் இருந்ததற்கு வாழ்த்துக்கள்.

    காங்கிரஸ் தரம்சிங் ஆட்சியில் வழங்கப்பட்ட உரிமம்: 43 / 33
    ஜனதா தளம் ஆட்சியில் வழங்கப்பட்ட உரிமம்: 47 / 22
    …கவர்னர் ஆட்சி அதாவது காங்கிரஸின் ஆட்சி இருந்த பொழுது வழங்கப்பட்ட உரிமம்: 22 /14
    எடியுரப்பா ஆட்சியில் வழங்கப்பட்ட உரிமம் : 22 / 2

    இரண்டு உரிமம் வழங்கிய எடியுரப்பாவை பற்றி வாய் கிழிய பேசிய ஆங்கில ஊடகம் சோனியா வழங்கிய 14 உரிமத்தை பற்றி வாயே திறக்கவில்லையே ஏன்?

    இதற்கு எல்லாம் மூல காரணமாக விளங்கிய உங்கள் தூதர் சாமூவேல் ராஜ சேகர ரெட்டியை பற்றி வாயே திறக்கவில்லை. ஒரு வேலை வாயை திறந்தால, முகமுடி போட்டு கொண்டு ஞாயிற்று கிழமை செல்லும் பொழுது அங்கு செறுப்பால் அடிப்பார்களோ ? அது சரி இதை பற்றி மேலும் கிளரி வினவின் உணவில் மண்ணை போட நான் தயாராக இல்லை.

    என்றைக்காவது, ஒமர் அப்துல்லா செய்த உழலை பற்றி யாரேனும் வாய் திறந்துளீர்களா?

 2. இருக்கிற கோவணமும் கிழிந்து போனால் என்ன?
  இருக்கவே இருக்கிறது இத்தாலி தாவணி- கலைஜர் துவைத்து துவைத்து
  நன்றாகவே வெள்ளாவி வைத்து…. அடபோங்கப்ப …நாம nakkavillai என்றால் சீனாக்காரன் நக்கிவிடுவான்…

 3. Dear Vinavu,
  Refreshed and clear information article. unforunately I could not read this simple starigh forward article in national news papers. In this u have written that our precious iron ore are being exported cheaply to china and other nations. that is 100 percent right.

 4. என்னடா காலேலேவா…

  ஸ்டேட்டுக்கு ஸ்டேட்டு ஊருக்கு ஊரு காஙிரஸ் ஊழல் நாறுது…

  எடியூரப்பா ஊழல் பண்ணியதால் தான் ராஜினாமா பண்ணிட்டு போயிட்டாருல்லா..

  அப்பறமென்ன ஒரு மததுவேசக்கட்டுரை..
  ஸ்டேட்டுக்கு ஸ்டேட்டு ..ஊருக்கு ஊரு காஙிரஸ் ஊழல் நாறுது…ஒரு கட்டுரையக் கூட கானோமே…

 5. ராஜினாமா பன்னிட்ட மட்டும் போதுமா… அந்த பனம் எங்க…. ரென்டு பேருமெ மோசம் தான்…. காங்ரசோ ஊழல் மட்டும் தான் ஆனா சங் பரிவாரம் கொலை கொல்லை கர்பழிப்பு கலவரம் எல்லாம்.

  • இன்னைக்கு 1000 கோடி ரூபா ஊழல் செஞ்சாலும் யாரு ராஜினாமா பண்ணத்தயாரா இறுக்கா சான்..காங்கிரஸ் ஆளும் மானிலங்களில் ஊழலும்நிற்வாக சீர்கேடும் தலைவிறித்து ஆடுகின்றன…டில்லி முதல் ஆந்திரா வரை காங்கிரஸூக்கு ஊழலும்நிற்வாக சீர்கேடும் மிகப்பெரும் பிரச்சனை…ஆந்திராவை ஆளும் காங்கிரஸ் தெலுங்கானா பிரச்சனையினைநமது காரக்குடிக்காரரும், பிரணாப் முகர்ஜியும் என்ன கொழப்பு கொழப்புறாங்க…அஙக காங்கிரஸ் ஆட்சி தான்நடக்குது…

   //காங்ரசோ ஊழல் மட்டும் தான்//இந்திரா காந்தி இரு சீக்கியர்களால் கொல்லப்பட்டவுடன், 4நாளில் ஆயிரக்கனக்கான அப்பாவி சீக்கியர்கள் கொல்லப்பட்டடும் காங்கிரஸ் செய்த இனப்படுகொலையே..இது இரு சீக்கியன் செய்த தவறால், இந்தநாட்டினை உன்மையாகநேசிக்கும் சீக்கியர்களூக்கு னடந்த கொடுமை..அவரகள் திட்டமிட்டு கும்பலாகச் சேர்ந்து யாரையும் கொள்ளவில்லை..இந்தியாவினை உயிராகநினைது வாழும் இந்தியர்கள் அவ்ர்கள்…

 6. ஆர்.எஸ்.எஸ் (ராஷ்ட்ரிய ஸ்வயம்ஸேவக் ஸங்கம்):

  • ஆர்.எஸ்.எஸ். 1925-ஆம் ஆண்டு டாக்டர்.கேஷவ் பலிராம் ஹெட்கேவார் என்பவரால் நாக்பூரில் தொடங்கப்பட்ட தேசிய கலாசார சமூக சேவை இயக்கம். தன்னுடைய 85வது ஆண்டில் மாபெரும் தேசிய சேவை இயக்கமாக பீடுநடை போட்டு வருகிறது.

  • ராஷ்ட்ரிய சேவிகா சமிதி, விஸ்வ ஹிந்து பரிஷத், சேவா பாரதி, வனவாசி கல்யாண் ஆசிரமம் போன்ற தன்னுடைய பல கிளை அமைப்புகளின் மூலம் பலவிதமான சேவைகளை எந்த விதமான விளம்பரமும் இன்றி செய்து வருகின்றது ஆர்.எஸ்.எஸ்.

  • நாடு முழுவதும் லட்சக்கணக்கான ஸ்வயம்சேவகர்கள் அடங்கிய 50,000க்கும் மேற்பட்ட இடங்களில் ‘ஷாகாக்கள்’ (கிளை முகாம்கள்) நடத்தி நன்னடத்தையும், ஒழுக்கமும், தேசபக்தியும், சேவை மனப்பான்மையும் மிக்க மனிதர்களை உருவாக்குகிறது. ஜாதி ஒழிப்பை வெறும் பேச்சோடு நிறுத்திக்கொள்ளாமல், பூரணமாக நிறைவேற்றி வருகிறது. இயக்கத்தில் உள்ள அனைவரும் தங்களுடைய ஜாதிப் பெயரை சொல்லிக்கொள்வதோ, உபயகப்படுத்துவதோ கிடையாது.

  • சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்ட்து மட்டுமல்லாமல், நாடு பிரிவினையானபோது பாகிஸ்தான் எல்லையில் ஏற்பட்ட கலவரத்தில் மக்களுக்குப் பெரும் பாதுகாவலானக இருந்து சேவை செய்த்து ஆர்.எஸ்.எஸ்.

  • 1962-ல் இந்திய-சீன போரின்போது சிறந்த சேவை செய்த்தற்காக பிரதமர் நேருவிடம் பாராட்டு பெற்றது. பின்னர் 1963-ல் பிரதமர் நேரு ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைக் குடியரசு தின அணிவகுப்பில் கலந்துகொள்ளச் சொல்லி அழைப்பு விடுத்தார். இந்திய ராணுவத்திற்கு அடுத்தபடியாக சீருடை அணிந்து அற்புதமாகப் பீடுநடை போட்டு தன் தேசபக்தியை பறைசாற்றிய இயக்கம் ஆர்.எஸ்.எஸ். 1965திலும் 1971றிலும் பாகிஸ்தானுடனான போரில்கூட பல சேவைகளைச் செய்து பாராட்டு பெற்றது.

  • நாட்டின் எந்த மூலையில், எந்தவிதமான இயற்கைச் சீற்றங்கள் (வெள்ளம், புயல், பூகம்பம், சுனாமி, பயங்கரவாதம், குண்டு வெடிப்புகள், விமான/ரயில் விபத்துக்கள் போன்றவை) ஏற்பட்டு மரணங்களும், அவலங்களும், பெருந்துன்பமும் ஏற்பட்டாலும், அங்கே உடனடியாகச் சென்று பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் ஜாதி மத பேதமின்றி வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்து காப்பாற்றும் மாபெரும் இயக்கம். சில முக்கிய உதாரணங்களாக 1971 ஒடிஸா புயல், 1977 ஆந்திரா புயல், 2004 சுனாமி, 2001 குஜராத் பூகம்ப்ம், 2009 பீகார் வெள்ளம், 2010 ஒடிஸா புயல் ஆகியவற்றை சொல்ல்லாம்.

  • எந்த மூலையில் எந்த விபத்து ஏற்பட்டாலும் அவ்விடத்தின் மருத்துவ மனைகளில் முதலில் ஆஜராவது ஸ்வயம்சேவகர்கள்தான். மருத்துவமனைக்குத் தேவைபட்ட அளவு ரத்த தானம் செய்பவர்கள் அவர்கள்தான். சொல்லப்போனால் இன்று நாட்டில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு, அவர் எந்த ஜாதி மதத்தவர்களாக இருந்தாலும், ஆர்.எஸ்.எஸ் ரத்தம் ஓடுகிறது என்றால் அது மிகையாகாது.

  • சமீபத்தில் ஈழம்-4ம் போரில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழ் மக்களுக்கு ஜாதி மத பேதமின்றி மாபெரும் சேவை செய்து வருகிறது ஆர்.எஸ்.எஸ். பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழ் மக்களாலும் இலங்கை அரசாலும் ஏகமனதாகப் பாராட்டப் பட்டுள்ளது.

  • நாடெங்கிலும் உள்ள மலைவாழ் மக்களுக்கும் வனவாசிகளுக்கும் கல்வி போதிப்பதில் முதலில் இருக்கும் இயக்கம் ஆர்.எஸ்.எஸ் தான். அதோடு மட்டுமல்லாமல் மத்திய அரசின் நலத் திட்டங்களை மலைவாழ் மக்களிடம் விரைவாகவும் சிறப்பாகவும் எடுத்துச் செல்வது ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தான். ”வனவாசிகளுக்குச் சிறந்த சேவை செய்யும் குறிப்பிட்ட 14 தன்னார்வ தொண்டு அமைப்புகளில் மூன்றில் ஒரு பங்கு அமைப்புகள் சிறந்த முறையில் சேவை செய்கின்றன. அவை அனைத்தும் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தைச் சார்ந்தவை தான்” என்று 2006-ஆம் ஆண்டு மன்மோகன் சிங்கின் காங்கிரஸ் அரசே (பழங்குடியினர் நலவாழ்வு அமைச்சகம்) குறிப்பிட்டுள்ளது.

  • 1934-ல் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் வர்தா முகாமுக்க்ச் சென்ற காந்திஜி, “இங்கு உள்ள சேவகர்களின் ஒழுக்கமும், கட்டுப்பாடும், இங்கே ஜாதி வேற்றுமையும் தீண்டாமையும் இல்லாததும் எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது” என்று கூறி, பின்னர், தனியாக சில ஸ்வயம்சேவகர்களிடம் விசாரணை செய்து அவர்கள் அனைவரும் ஒற்றுமையாக ஒருவருக்கு அடுத்தவர் ஜாதி தெரியாமல் ஒரே இடத்தில் ஒன்றாக உண்டு உறங்கி வாழ்கின்றனர் என்று உறுதி செய்து கொண்டார்.

  • 1936-ல் பூனா முகாமுக்க்குச் சென்ற டாக்டர் அம்பேத்கர், “நான் இப்போது தான் முதல் முறை ஆர்.எஸ்.எஸ் முகாமிற்கு வருகிறேன். நீங்கள் அனைவரும் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற ஜாதி வித்தியாசம் ஏதுமின்றி ஒன்றாக இயங்குவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார். முகாமில் தீண்டாமை இருக்கிறதா என்று அவர் ஆர்.எஸ்.எஸ் தலைவரிடம் கேட்ட போது, “இங்கு தீண்டத் தகாதவர்களும் இல்லை, தீண்டத் தக்கவர்களும் இல்லை. அனைவரும் ஹிந்துக்கள்” என்று பதிலுறைத்தார் டாக்டர் ஹெட்கேவார்.

  • 1975-ல் இந்திரா காந்தி அராஜகமாக நெருக்கடி நிலைப் பிரகடனம் செய்த போது, அதை எதிர்த்து ஆயிரக்கணக்கான ஸ்வயம்சேவகர்கள் சிறை சென்றனர். பின்னர் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர் ரகசியமாக இயங்கி நாட்டின் எதிர் கட்சியினர் அனைவருக்கும் பாலமாக விளங்கி மாபெரும் சேவை செய்து நாட்டில் மீண்டும் ஜனநாயகத்தை நிலநாட்டினர்.

  • அது வரைக்கும் ஆர்.எஸ்.எஸ் என்றாலே முகம் சுளித்துக் கொண்டிருந்த திரு.ஜெயப்பிரகாஷ் நாராயணன் அவர்கள் 1977-ல் புது தில்லியில் நடந்து கொண்டிருந்த ஆர்.எஸ்.எஸ். முகாமிற்குச் சென்று இரண்டு மணி நேரங்களுக்கும் மேலாக அவர்களை கவனித்து அவர்களுடன் உரையாடிவிட்டு, பின்னர், “இது ஒரு புரட்சிகரமான இயக்கம். வேறு எந்த இயக்கமும் இதற்கு இணையாகாது. இங்கு ஒழுக்கமும் படிப்பும் நிறைந்த இளைஞர்கள் ஏராளமானவர்கள் இருக்கின்றனர். ஜாதி வேற்றுமையை ஒழித்து, ஏழை மக்களின் கண்ணீரைத் துடைத்து, சமூகத்தை மாற்றியமைப்பது இந்த ஒரே இயக்கத்தினால்தான் முடியும்” என்றார்.

  • 1984-ல் இந்திரா காந்தியின் கொலைக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியினர் நாடெங்கும் உள்ள சீக்கியர்களைக் கொன்று குவித்தபோது, பல சீக்கிய குடும்பங்களைக் காப்பாற்றி, அச்சமூகத்தினருக்குக்ப் பாதுகாப்பு அளித்தது ஆர்.எஸ்.எஸ்.

  • கேரளாவின் அலுவா என்னும் பகுதியில் புனித ஜோஸஃப் சர்ச்சைச் சேர்ந்த ஃபாதர் வின்ஸெண்ட் குண்டுகுலம் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைப் பற்றி ஒரு பி.ஹெச்.டி படிப்புக்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டு டாக்டர் பட்டம் பெற்றார். அவர் தன்னுடைய “ஆர்.எஸ்.எஸ். – எந்து? எங்கோட்டு?” (ஆர்.எஸ்.எஸ். – என்ன? எங்கே செல்கிறது?) என்னும் ஆராய்ச்சிப் புத்தகத்தில், “ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தவரின் ஒழுக்கமும், ஈடுபாடும், எளிமையான வாழ்க்கை முறையும், இயற்கைச் சீற்றங்கள் மற்றும் பேராபத்துக்களின் போது அவர்கள் செய்யும் சேவைகளும் மிகவும் பாராட்ட்த் தக்கன. ஆர்.எஸ்.எஸ். ஒரு மதவாத இயக்கம் அன்று. மத்த்தின் பேரில் மக்கள் அனைவரையும் ஜாதி வித்தியாசமின்றி ஒருங்கிணைத்து சேவை செய்ய ஊக்கமளிக்கும் இயக்கம்தான்” என்று தெளிவாகக் கூறுகிறார்.

  • ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை காங்கிரஸ் மூன்று முறை தடை செய்ய முயன்றது. காந்திஜியை சுட்டுக் கொன்ற கோட்சே ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர் என்று சொல்லி நேரு அரசங்கம் 1948-ல் இயக்கத்தைத் தடை செய்தது. ஆனால் உச்சநீதிமன்றம் காந்திஜி கொலைக்கும் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தீர்ப்பு சொல்லி தடையை நீக்கியது. இந்திரா காந்தி அரசும் நெருக்கடிநிலை காலத்தில் ஆர்.எஸ்.எஸ்ஸைத் தடை செய்தது. நெருக்கடிநிலை தகர்க்கப்பட்டபோது ஆர்.எஸ்.எஸ் மீதிருந்த தடை நீங்கியது. மீண்டும் மூன்றாவது தடவையாக பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது காங்கிரஸ் அரசு இயக்கத்தைத் தடை செய்ய முயன்று தோற்றுப்போனது.

   • Shajahan

    ஆ ஊ ன்னு கத்திக்கிட்டு மேடைக்கி வந்த போலி வித்தக்காரனே
    ஒரே அடியில் செருப்பால் அடிச்சு வீழ்த்தியது மாதிரி இருந்தது
    நீங்க கொடுத்த லிங்க் தலைவரே

    லிங்கே இப்பதான் படித்தேன் சூப்பருப்பு

  • இதுக்கு மேல விளக்கினாளும் இந்த மாக்களுக்கு விளங்காது ?
   சபாஷ் திரு.பையா அவர்களே !

  • இதுவும் ஆர்.எஸ்.எஸ். வரலாறு தான்!

   என் பெயர் R.S.S.

   பிறக்கும் பொழுது
   எல்லாக் குழந்தைகளும்
   நல்ல குழந்தைகள். அப்படியா?
   நான் அந்த ரகம் இல்லை.
   நஞ்சு கொண்டுநான் பிறந்தேன்.

   நான்
   செம்டம்பர் 27, 1925
   விஜயதசமி நாளில்
   உயர்குடியில்
   வீர சிவாஜி பிறந்த
   மராட்டிய மண்ணில்
   பிறந்தவன்.

   என் அப்பா கேசவ பல்ராம் கெட்கேவர்
   இனம் – இட்லர் இன்மான ஆரிய இனம்
   சாதி – சித்பவன் பார்ப்பான் சாதி.

   ‘இந்துயிசமே எங்கள் தேசியம்’ – என
   கொள்கை வழி பிறந்தவன் நான்.
   இதில் எந்தவித சம்ரசமற்றவன்.
   காந்தியைக் கொன்ற
   நாதுராம் கோட்சே
   என்னைத் தூக்கி வளர்த்தவர்.

   அறியாமை இருள்
   எங்கெல்லாம் இருந்ததோ
   அங்கெல்லாம் தழைத்து வளர்ந்தேன்.
   சாதி, மதம் எவ்விடத்தில் இருந்ததோ
   அவ்விடத்தில்
   காட்டுத் தீயாய்ப் பற்றிக் கொண்டேன்.
   எனக்கு உணவு குருதி.
   இரத்தம் குடிக்காமல்
   என்னால்உயிர் வாழமுடியாது.
   இள ரத்தமெனில்
   இன்னும் ருசி.

   நான் எந்த மண்ணில்
   தவழ்ந்தேனோ, வளர்ந்தேனோ
   அந்த மண் கலவர பூமியானது.
   எனக்கு மறதி அதிகம்.
   நான் குடித்தஉயிர்களின்
   எண்ணிக்கையைக்
   கணக்கு வைத்துக்கொள்ளவில்லை.
   ஏனென்றால்
   கணக்கிடலங்காது.

   கடந்த 82 ஆண்டுகளில்
   பெரிய மரமாய், மண்ணில்
   ஆழப் பதிந்து நிற்கிறேன்.
   உலகமெங்கும், இன்னும்
   என் வேர்களை
   விரிவுபடுத்திக் கொண்டிருக்கிறேன்.

   இந்து முன்ணணி, இந்து மஸ்தூர் சங்,
   பஜ்ரங்தள், A.B.V.P.,
   விஸ்வ இந்து பரிசத் – என
   என் விழுதுகள் என்னைப்
   பலப்படுத்துகின்றன.

   எனக்கு விரோதிகள் உண்டு.

   முதல் விரோதி – கம்யுனிஸ்ட்,
   2வது விரோதி – முஸ்லீம்.
   3வது விரோதி – கிறித்துவன்.
   4வது விரோதி – ஜனநாயகவாதி.

   எனக்கு வலிமையான மகன் உண்டு.
   பெயர் – பாரதீய ஜனதா.
   எனக்கு ஆபத்து வருகிற பொழுதெல்லாம்
   துடித்து, காப்பாற்றுவன் அவனே.

   என்னை அழிக்கும் முயற்சியில்
   தோற்றுப் போனவர்கள் ஏராளம்.

   தமிழகத்தில்
   என் தளபதிகள்
   மடாதிபதி சங்கராச்சாரியா,
   வீரத்துறவி இராமகோபலன்,
   அறிவுசீவி துக்ளக் சோ,
   பா.ஜ.க பிரமுகர் இல. கணேசன்.

   உங்களிடத்திலும் சாதி, மதம்
   இருக்கிறதா?
   எனக்கு பசிக்கிறது.
   ரத்தம் வேண்டும்.
   இளரத்தம் வேண்டும்.
   இதோஎன் படை பரிவாரங்களோடு
   புறப்பட்டுவிட்டேன்.
   முடிந்தால்,
   என் முதல் எதிரியான கம்யுனிஸ்களிடம்
   அடைக்கலம் தேடிக் கொள்ளுங்கள்.

   பின்குறிப்பு :
   கம்யுனிஸ்டுகள் என்றால்
   C.P.I., C.P.I (M) என அப்பாவித்தனமாய்
   நினைக்கமாட்டார்கள் என நம்புகிறேன்.
   நான் சொல்வது நக்சல்பாரிகளை.

   http://socratesjr2007.blogspot.com/2007/05/rss.html

   • தமிழகத்தில் என் தளபதிகள்……அம்முவை[ஜெயா]உட்டுட்டேலே….?

  • பையா,
   ஆர்.எசு.எசு.வின் ”அருமை பெருமைகளை” அள்ளிவிடும் உங்களுக்கு சில வினாக்கள்.

   1 .குசராத் இனப்படுகொலையின் போது சங் பரிவார் காலிகள் மூன்றே நாட்களில் மூவாயிரம் முசுலிம்களை கொன்றது குறித்து என்ன சொல்கிறீர்கள்.[கோத்ரா தொடர்வண்டி எரிப்பை காட்டி விவாதத்தை திசை திருப்ப வேண்டாம்.அது குறித்து வினவில் நடந்த விவாதங்கள் தனியாக உள்ளன.விரும்பினால் அங்கு சென்று விவாதிக்கலாம்]
   2.அரியானா மாநிலம் லச்சார் நகரத்தில் செத்த பசு மாடு ஒன்றின் தோலை உரித்த ”கொடிய பாவத்திற்காக” ஐந்து தலித் இளைஞர்களை சங் பரிவார் காலிகள் அடித்தே கொன்றார்களே.அது குறித்து என்ன சொல்கிறீர்கள்.

   3.லச்சார் நிகழ்வு குறித்து வி.இ.பரிசத் தலைவர் அசோக் சிங்கால் தெரிவித்த கருத்து. ”கோமாதாவின் உயிர் எங்களுக்கு புனிதமானது”.இதன் பொருள் என்ன.தோலுரிக்கப்பட்ட அந்த மிருகத்தின் உயிர் ஐந்து தலித் மனித உயிர்களை விட மேலானது.இந்த கூற்றுக்காக அசோக் சிங்காலை கண்டிக்கிறீர்களா.பாராட்டுகிறீர்களா.

   4. சிடைன்சு பாதிரியாரை அவரது குழந்தைகளோடு சேர்த்து எரித்து கொன்றானே தாராசிங் என்ற அயோக்கியன்.பாதிரியார் வேண்டுமானால் சாவுத்தண்டனைக்குரிய மதப்பரப்புரை என்ற ”குற்றத்தை” செய்தார்.[நல்வாய்ப்பாக அரசியல் அமைப்பு அவை உறுப்பினர்கள் யாரும் உயிரோடு இல்லை.இருந்திருந்தால் ”ஏண்டா மதப்பரப்புரை உரிமையை அரசியல் சட்டத்தில் வழங்கினீர்கள்”என்று அவர்களையும் போட்டு தள்ளி இருப்பார்கள் உங்கள் பெரு மதிப்பிற்குரிய சங் பரிவார் காலிகள்]. பாதிரியாரின் குழந்தைகள் என்ன பாவம் செய்தார்கள்.அவர்களையும் கொன்றார்களே. இந்த கொடூர செயல் குறித்து என்ன சொல்கிறீர்கள்.

   5.மத்திய பிரதேசத்தில் கிறித்துவ கன்னித் துறவிகள் மீது பாலியல் வன்முறையை ஏவிய சங் பரிவார் குண்டர்களின் மாபாதகத்தை ”கோபம் கொண்ட இந்து இளைஞர்களின் நாட்டுப்பற்று மிக்க நடவடிக்கை” என்று நியாயப்படுத்திய சங் பரிவார் கும்பலின் திமிர்வாதம் குறித்து என்ன சொல்கிறீர்கள்.

   பெண்களை தெய்வமாக போற்றுவதாக சொல்லிக்கொண்டே இப்படி பாலியல் வன்முறையை ஏவும் அயோக்கியர்களை நாட்டு பற்றாளர்கள் என சொல்வது உண்மையான நாட்டுபற்றாளர்களை அவமதிப்பது ஆகாதா.

   6.மாலேகான்,அச்மீர்,ஐதராபாத்,சம்சத தொடர்வண்டி குண்டுவெடிப்பு என சங் பரிவார் நடத்திய குண்டு வெடிப்பு தாக்குதல்கள் குறித்து என்ன சொல்கிறீர்கள்.

   7.சுவாமி அசீமானந்தா ஆர்.எசு.எசு.இயக்கத்தின் பயங்கரவாத நடவடிக்கைகள் குறித்து கொடுத்துள்ள ஒப்புதல் வாக்குமூலம் அவ்வியக்கம் ஒரு பயங்கரவாத இயக்கம்தான் என தெள்ளதெளிவாக காட்டுகிறதே.அது குறித்து என்ன சொல்கிறீர்கள்.

   8.விநாயகர் சிலை ஊர்வலங்களை பள்ளிவாசல்கள் முன்பாக நிறுத்தி வைத்து கொண்டு முசுலிம்களை ஆத்திரமூட்டும் வகையில் ”பத்து பைசா முறுக்கு பள்ளிவாசலை நொறுக்கு” ”துலுக்கனை வெட்டு துலுக்கச்சியை கட்டு” என்று முழக்கங்கள் எழுப்புவதுதான் உங்களுக்கு நாட்டு பற்றாக தெரிகிறதா.

   அவ்வளவு ஏன்,சங்க பரிவார் கும்பல் நடத்தும் ஒரு பொதுக்கூட்டத்திற்கு உங்கள் வீட்டு பெண்களை அழைத்து சென்று அவர்களது ஆபாச சொற்பொழிவுகளை கேட்க வைத்து பாருங்கள்.”இப்படி பேசும் ஒரு காட்டுமிராண்டி கும்பலை ஆதரிக்கிறாயே ” என அந்த சகோதரிகளே உங்களை காறி உமிழ்வார்கள்.

 7. ராமேஸ்வரத்தில் ராம ராஜ்ஜியம் ஆட்டம் காணலியோ? அதற்கு முன்னோடியாகத்தான்
  (தமிழகத்தில்) கோகுலத்தில் சீதை.அடுத்து தமிழகத்தில் ராமராஜ்ஜியம்தான்

 8. //அவ்வளவு ஏன்,சங்க பரிவார் கும்பல் நடத்தும் ஒரு பொதுக்கூட்டத்திற்கு உங்கள் வீட்டு பெண்களை அழைத்து சென்று அவர்களது ஆபாச சொற்பொழிவுகளை கேட்க வைத்து பாருங்கள்.”இப்படி பேசும் ஒரு காட்டுமிராண்டி கும்பலை ஆதரிக்கிறாயே ” என அந்த சகோதரிகளே உங்களை காறி உமிழ்வார்கள்.//

  குஜராத இனப் படுகொலை வழக்கு விசாரணை விவரங்கள் அனைத்தும் ஆர்எஸ்எஸ் குற்றவாளிகளுக்கு அனுப்பியுள்ளது சிறப்பு புலனாய்வுக் குழு. அது மட்டுமல்ல நம்ம தமிழ்நாட்டு பயங்கரவாதி குருமூர்த்திக்கும் ஒரு காப்பி அனுப்பியுள்ளனர் . இதனை என் டிடிவி அம்பலப்படுத்தியுள்ளது. நாட்டை ஆள்வது ஆர்எஸ்எஸ் என்பதைத்தான் இந்த விவரங்கள் சொல்லுகின்றன. அப்படியானால் பன்னாட்டு நிறுவனங்களுக்கு காங்கிரசும், பாஜகாவும் போட்டி போட்டு பாரத மாதாவை கூட்டிக் கொடுப்பதை தடுக்க இந்த அரைடவுசர் குரங்குகள் கர சேவ நடத்துவதில்லயே ஏன்?

  விசாரணை விவரங்களை வீட்டிலிருந்தபடியே படிக்கும் பேறு பெற்ற ஆர்எஸ்எஸ் பயங்கரவாதிகளுக்கு பன்னாட்டு நிறுவனங்களுக்கு பாரத மாதவை கூட்டிக் கொடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் புரியாமலா போய்விட்டது? பாரத மாதாவை அமெரிக்காவிற்கு போட்டு(கூட்டிக்)க் கொடுத்ததே காவி அரை டவுசர் தேசத் துரோகிகள்தானே பிறகெப்படி அவர்களே எதிர்ப்பார்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க