Wednesday, December 11, 2024
முகப்புஅரசியல்ஊடகம்டீம் அண்ணா: உப்பிப் பெருக்கப்படும் ஒரு போலிப் புரட்சி!- அருந்ததிராய்

டீம் அண்ணா: உப்பிப் பெருக்கப்படும் ஒரு போலிப் புரட்சி!- அருந்ததிராய்

-

டீம் அண்ணா: உப்பிப் பெருக்கப்படும் ஒரு போலிப் புரட்சி!- அருந்ததிராய்

தொலைக்காட்சிகளில் நாம் பார்ப்பதுதான் புரட்சி என்றால், அதுதான் சமீபத்தில் நடந்தவற்றிலேயே தர்மசங்கடமான, தெளிவற்ற புரட்சியாக இருக்க முடியும். ஜன் லோக்பால் மசோதா குறித்த எப்படிப்பட்ட கேள்விகள் உங்களுக்குள் இப்போது எழுந்தாலும், அதற்கான விடைகள், இப்படியாகத்தான் கிடைக்கும். பெட்டிக்கு நேராக டிக் செய்து கொள்ளுங்கள், அ) வந்தே மாதரம். ஆ) பாரத் மாதாகீ ஜெய். இ) அண்ணாதான் இந்தியா, இந்தியாதான் அண்ணா. ஈ) ஜெய் ஹிந்த்.

முழுக்க முழுக்க வெவ்வேறு காரணங்களுக்காக, வெவ்வேறு வழிமுறைகளில் போராடி வரும் மாவோயிஸ்ட்டுகளுக்கும், ஜன் லோக்பால் மசோதாவுக்கும் ஒரு விஷயம் பொதுவாக இருக்கிறது – அது, இந்திய அரசியல் அமைப்பை தூக்கி எறிவது. இதற்காக ஒருதரப்பினர் கீழிருந்து மேலாக, இழப்பதற்கு ஏதுமற்ற வறியவர்களிலும் வறியவர்களான ஆதிவாசி மக்களை இராணுவமயப்டுத்தி ஆயுதமேந்தி போராடுகிறார்கள். மறுதரப்பினர் மேலிருந்து கீழாக, ரத்தம் சிந்தாத காந்திய வழியில், புதிதாக வார்தெடுத்த புனிதரின் தலைமையில், நகர்புற – முக்கியமாக மேட்டுக்குடியினரில் பெரும்பாலானவர்களை உள்ளடக்கிய படையைக் கொண்டு  போராடுகிறார்கள். (இந்த விஷயத்தில் அரசாங்கம்மும் தன்னை தூக்கியெறிவதற்கு இயன்ற அனைத்தையும் செய்து துணை நிற்கிறது)

ஏப்ரல் 2011ல் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை அண்ணா ஹசாரே முதல்முறையாக ஆரம்பித்த காலகட்டத்தில், அடுத்தடுத்து வெளியாகிவந்த மிகப்பெரிய ஊழல் செய்திகளால் தனது நம்பகத்தன்மை ஆட்டம் கண்டு வந்ததை உணர்ந்திருந்த இந்திய அரசாங்கம், மக்களின் அதிருப்தியை திசை திருப்ப, அண்ணாவின் குழுவை (டீம் அண்ணா) – இந்த ‘சிவில் சமூக’ குழுவால் தேர்வு செய்யப்பட்ட வணிகச் சின்னம் இது – ஊழலுக்கு எதிரான புதுச்சட்டத்தின் வரைவுக்குழுவில் இணைந்து கொள்ளும்படி அழைப்பு விடுத்தது. ஆனால், சில மாதங்களிலேயே இந்த கூட்டு வரைவுக் குழுவை கைவிட்டுவிட்டு, எவ்வகையிலும் பயனில்லாத,  ஓட்டைகள் நிரம்பிய தனது சொந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது.

பிறகு, ஆகஸ்ட் 16ம் தேதி காலையில், அண்ணா ஹசாரே இரண்டாவது முறையாக தனது காலவறையற்ற உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பிப்பதற்கு முன்னரே, சட்டத்துக்கு புறம்பான எந்த நடவடிக்கையிலும் அவர் ஈடுபடுவதற்கு முன்னரே, கைது செய்து சிறையில் அடைத்தது. இதனையடுத்து ஜன் லோக்பால் மசோதாவை அமல்படுத்துவதற்கான போராட்டம் என்பது, போராடுவதற்கான உரிமை தொடர்பான போராட்டமாகவும், ஜனநாயகத்துக்கான போராட்டமாகவும் உருமாறியது. இந்த ‘இரண்டாவது சுதந்திர போராட்டம்’ தொடங்கிய சில மணித்துளிகளில் அண்ணா விடுதலை செய்யப்பட்டார். ஆனால், தந்திரமாக சிறையை விட்டு செல்ல மறுத்த அவர், திகார் சிறைச்சாலையின் மரியாதைக்குரிய விருந்தினராக தங்கி, உண்ணாவிரதத்தை ஆரம்பித்து, பொது இடங்களில் உண்ணாவிரதம் இருப்பதற்கான கோரிக்கையை முன்வைத்தார். மூன்று நாட்களுக்கு மக்கள் கூட்டமும், தொலைக்காட்சிகளின் வாகனங்களும் சிறைக்கு வெளியே குழுமியிருக்க, அனைத்து தேசிய தொலைக்காட்சிகளிலும் ஒளிப்பரப்புவதற்காக ஹசாரேவின் வீடியோ செய்திகளை ஏந்தியபடி அண்ணாவின் குழுவினர் உயர் பாதுகாப்பு வசதி கொண்ட அச்சிறைக்கு உள்ளும் வெளியிலுமாக மின்னலென பறந்துக் கொண்டிருந்தனர். (வேறு யாருக்கேனும் இந்த பேரின்ப வாழ்வு கிடைக்குமா?)

இதற்கிடையில், தில்லி மாநகராட்சி ஆணையத்தை சேர்ந்த 250 தொழிலாளர்களும், 15 லாரிகளும் (டிரக்குகள்), 6 கனரக மண் சீராக்கும் வாகனங்களும் கடிகாரத்துக்கு ஓய்வு தராமல் வாரயிறுதியில் நடைபெறவிருக்கும் கண்கவர் காட்சிக்காக ராம்லீலா மைதானத்தை சீர்படுத்திக் கொண்டிருந்தன.

இப்போது உள்ளங்கையும், உள்ளங்காலும் பரபரக்க, பக்தி முற்றிய நிலையில் அண்ணாவின் பெயரை உச்சரிக்கும் கூட்டம் குழுமியிருக்க, வானுயர்ந்த கேமராக்கள் கண்சிமிட்டியபடி படம் பிடிக்க, இந்தியாவின் விலைமதிப்பில்லாத மருத்துவர்கள் பராமரிக்க, மூன்றாவது முறையாக அண்ணா ஹசாரேவின் காலவறையற்ற உண்ணாவிரதம் தொடங்கியது. ‘காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, இந்தியா ஒன்றே’  தொலைக்காட்சி தொகுப்பாளர்கள் நமக்கு சொல்கிறார்கள்.

அண்ணா ஹசாரேவின் போராட்ட வழிமுறைகள் காந்திய வழியாக இருக்கலாம், ஆனால், அவரது கோரிக்கைகள் நிச்சயம் அப்படியானதல்ல. அதிகாரத்தை ஒன்றுகுவிக்காமல் பகிர்ந்தளிக்கச் சொல்லும் காந்தியின் கருத்துகளுக்கு முரணாக ஜன் லோக்பால் மசோதா அரக்கத்தனமான, எதேச்சதிகார, ஒருமுகப்படுத்தப்பட்ட அதிகார மையத்தை கோரும் ஊழல் தடுப்பு மசோதாவாக இருக்கிறது. இதில், கவனத்துடன் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் பூதாகரமான ஜனநாயகத்தை நிர்வகிக்க, ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணிபுரிய, காவல்துறையின் அதிகாரத்துடன் பிரதமர் முதல் நீதிபதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அனைத்துத் துறை அதிகாரிகள், அரசாங்கத்தின் கடைநிலை ஊழியர்கள் வரை அனைவரை குறித்தும் துப்பு துலக்கி விசாரிக்கவும், கண்காணிக்கவும், தண்டிக்கவும் அதிகாரம் உள்ளது. இதற்கென்று சொந்தமாக சிறைச்சாலைகள்தான் இருக்காது. மற்றபடி சுதந்திர நிர்வாக அமைப்பாக இயங்கி ஏற்கனவே வரைமுறையில்லாமல் ஊதிப் பெருகி, மக்களுக்கு பதில் சொல்லும் கடமையற்று இருக்கும் இப்போதைய ஊழல் அமைப்பை எதிர் கொள்ளும் இன்னொரு நிர்வாக அமைப்பாக செயல்படும். அதாவது கட்டுப்படுத்த முடியாத ஒரு விலங்காக இதுநாள்வரை இருந்த ஜனநாயகமற்ற அமைப்பு, இனி இரண்டாக பெருகியிருக்கும்.

இந்த ஜன் லோக்பால் மசோதா மூலம் ஊழல் ஒழியுமா இல்லையா என்பது ஊழலை நாம் எப்படி பார்க்கிறோம் என்பதை பொறுத்தது. ஊழல் என்பது வெறும் சட்ட ரீதியான நிதி ஒழுங்கின்மை – லஞ்சம் சார்ந்ததா அல்லது வெளிப்படையாக பளிச்சென்று தெரியும் ஏற்றத் தாழ்வுமிக்க சமூகத்தில் நடைபெறும் பணப் பரிமாற்றம் வழியாக அதிகாரமானது தொடர்ந்து சிறுபான்மையிலும் சிறுபான்மையாக இருப்பவர்களின் கரங்களில் குவிந்து வருவதை குறிக்கிறதா?

உதாரணமாக வணிக வளாகங்கள் நிரம்பிய நகரத்தில் தெருவில் கூவிக் கூவி விற்பது தடை செய்யப்பட்டுள்ளதாக கற்பனை செய்து கொள்வோம். தெருவில் கூவி விற்பவர்களின் வாடிக்கையாளர்கள் வணிக வளாகங்களில் விற்கப்படும் பொருட்களை வாங்கும் அளவுக்கு ‘தகுதி’ படைத்தவர்கள் அல்லர். எனவே அவர்களுக்கு தேவையான பொருட்களை தெருவில் விற்பவர்களிடமிருந்து அவர்கள் வாங்கிக் கொள்கிறார்கள். இந்த ‘சட்டப்புறம்பான’ வியாபாரத்துக்காக தெருவில் கூவிக் கூவி விற்பவர், நடைபாதை காவலருக்கும் நகராட்சியை சேர்ந்தவருக்கும் ஒரு தொகையை லஞ்சமாக கொடுப்பார். இது அவ்வளவு பெரிய கொடுமையா? எதிர்காலத்தில் ஜன் லோக்பாலின் பிரதிநிதிக்கும் சேர்த்து அவர் ஒரு தொகையை கொடுக்க வேண்டியிருக்குமா? அடித்தட்டு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கான தீர்வுகள், அமைப்பு ரீதியாகவே உறைந்துள்ள ஏற்றத்தாழ்வுகளை களைவதில் அடங்கியிருக்கிறதா அல்லது ஏற்றத்தாழ்வுகளுக்கு கட்டுப்பட்டு இணங்கிப் போகச் செய்யும் இன்னொரு அதிகார அமைப்பை உருவாக்குவதில் இருக்கிறதா?

அண்ணா ஹசாரேவின் போராட்டத்தில் இடம் பிடித்திருக்கும் முழக்கங்கள், சைகைகள், நடன அமைப்புகள், தேசிய வெறி, காற்றில் அழகாக அசைந்தாடும் தேசியக்கொடிகள் ஆகியவை அனைத்தும் இட ஒதுக்கீடு எதிர்ப்பு போராட்டங்கள், உலககோப்பை வெற்றி ஊர்வலம், மற்றும் அணுகுண்டு சோதனை வெற்றிக் கொண்டாட்டங்களிலிருந்து கடன் வாங்கப்பட்டவை; அவற்றை நினைவுபடுத்துபவை. இவையெல்லாம் அண்ணாவின் உண்ணாவிரதத்தை ஆதரிக்கவில்லையென்றால் நாம் உண்மையான இந்தியர்கள் இல்லையென்று நம்மை நோக்கி எச்சரிக்கின்றன. நாட்டில் இதைத்தவிர வேறு எதுவும் உருப்படியான செய்தி இல்லை என்பதாக 24 மணி நேர செய்தி ஊடகங்கள் முடிவு செய்துவிட்டன போலும்.

‘இந்த உண்ணாவிரதம்’ சர்வநிச்சயமாக மணிப்பூரில் ஒருவரை சந்தேகப்பட்டாலே இராணுவத்துக்கு அவரை கொல்ல அனுமதியளிக்கும் AFSPA   என்ற அடக்குமுறைச் சட்டத்தை திரும்ப்ப் பெற வலியுறுத்தி 10 வருடங்களுக்கும் மேலாக உண்ணாவிரதம் இருக்கும் ஜரோம் சர்மிளாவின் போராட்டத்தைப் போன்றதல்ல. (இன்றும் ஐரோம் சர்மிளாவுக்கு பலவந்தமாக உணவு செலுத்தப்படுகிறது). கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்து பத்தாயிரக்கணக்கில் கிராம மக்கள் தொடர்ந்து வரிசையாக நடத்தி வரும் உண்ணாவிரதம் போன்றதும் அல்ல.

(ஹசாரேவின் உண்ணாவிரதத்தை ஆதரித்து ராம்லீலா மைதானத்தில் குழுமியிருக்கும்) ‘மக்கள்’, ஐரோம் சர்மிளாவின் உண்ணாவிரதத்தை ஆதரிக்கும் மணிப்பூர் மக்களின் உணர்வுகளை கொண்டவர்களல்ல. ஜெகத்சிங்பூர் அல்லது கலிங்காநகர் அல்லது நியாம்கிரி அல்லது பாஸ்டர் அல்லது ஜெய்தாபூரில் ஆயுதமேந்திய காவலர்களையும், சுரங்கக் கொள்ளையர்களையும் அன்றாடம் எதிர்கொள்ளும் ஆயிரக்கணக்கான சாதாரண மக்கள் போன்றவர்களுமல்ல. போபால் விஷவாயு கசிவினால் பாதிக்கப்பட்ட மக்களோ அல்லது நர்மதா அணையினால் இடம்பெயர்ந்த மக்களோ கூட அல்ல. அல்லது நொய்டாவின் விவசாயிகள் போலவோ அல்லது பூனா/அரியானா அல்லது நாட்டின் எந்தபகுதியிலாவது தங்கள் நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிராக போராடி வரும் விவசாய மக்களும் அல்ல.

‘இந்த மக்கள்’, ரசிகர் பட்டாள மக்கள். தனது ஜன் லோக்பால் மசோதாவை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்து சட்டமாக்கவில்லை என்றால் உண்ணாவிரதம் இருந்து உயிரை மாய்த்துக்கொள்வேன் என்று ஒரு 74 வயது முதியவர் மிரட்டுவதை கண்குளிர பார்க்கும் கண்களுடன் வந்திருக்கும் ‘மக்கள்’. இயேசு கிறிஸ்து, அப்பத்தையும் மீனையும் பன்மடங்கு பெருக்கி பசித்தவர்களுக்கு உணவளித்தது போல், பல ஆயிரக்கணக்கான மக்கள் நமது தொலைக்காட்சி ஊடகங்களால் பெருக்கி காட்டப்படுகிறார்கள். ‘லட்சக்கணக்கான குரல்கள் ஒலித்தன’ என்கிறார்கள் நம்மிடம். ‘அண்ணாதான் இந்தியா’வாம்.

மக்களின் குரல் என்றும் புதிதாக வார்த்தெடுத்த புனிதர் என்றும் சித்தரிக்கப்படும் இந்த மனிதர் உண்மையில் யார்? விசித்திரம் என்னவென்றால் இதுவரை இவர் இந்த நாட்டில் பற்றி எரியும் எந்தப் பிரச்னை குறித்தும் கருத்து சொல்லி நாம் கேட்டதில்லை. அவரது ஊருக்கு அருகாமையில் நிகழும் விவசாயிகளின்  தற்கொலைகளைப் பற்றியோ அல்லது சற்று தொலைவில் நடக்கும் பசுமை வேட்டைப் பற்றியோ இவர் எதுவும் பேசியதில்லை. சிங்கூரைப் பற்றியோ, நந்திகிராம், லால்கர் அல்லது போஸ்கோ விவசாயிகளைப் பற்றியோ அல்லது சிறப்பு பொருளாதார மண்டலங்களால் எதிர்காலம் சூன்யமானவர்களைப் பற்றியோ இவர் முணுமுணுத்தது கூட இல்லை. மத்திய இந்தியாவின் வனப் பகுதிகளில் இராணுவத்தை பரவி நிறுத்த அரசு திட்டமிட்டிருந்த நேரத்தில், இந்திய அரசின் நோக்கம் குறித்தெல்லாம் அவர் எந்த கவலைகளும் வெளியிட்டதில்லை.

ஆனால், ராஜ் தாக்கரேவின் இனவெறிக் கொள்கையான ‘மராட்டியம் மராட்டியர்களுக்கே’ என்ற மாராத்திய பாசத்தை ஆதரிக்கிறார். குஜராத்தை ‘வளர்ச்சி மாநிலம்’ என்று வியந்தோதியவர், 2002ல் இஸ்லாமிய மக்கள் கொன்றொழிக்கப்பட்டது குறித்து எதுவும் சொல்லவில்லை. (இதையொட்டி சில கண்டனக் குரல்கள் எழுந்ததும் தனது வார்த்தைகளை அண்ணா திரும்பப் பெற்றுக் கொண்டாரே தவிர, உண்மையான தனது பாராட்டு மனநிலையை அல்ல)

இவ்வளவு இரைச்சல்களுக்கு இடையிலும் அறிவுத் தெளிவுடைய பத்திரிக்கையாளர்கள் தங்கள் கடமையை எப்படி உணர்ந்து செய்வார்களோ அப்படியே உண்மையான சில பத்திரிகையாளர்கள் பணியாற்றுகிறார்கள். அதனால்தான் ஆர்எஸ்எஸ் உடனான அண்ணாவின் பழைய பாசப்பிணைப்புக் கதையை நாம் அறிய முடிகிறது. அண்ணாவின் கிராம சமூகமான ‘ராலேகான் சித்தி’யில் கடந்த 25 வருடங்களாக கிராம பஞ்சாயத்துகளோ அல்லது கூட்டுறவு சங்க தேர்தல்களோ நடைபெற்றதேயில்லை என்று அக்கிராமத்தை ஆய்வு செய்த முகுல் ஷர்மா சொல்வதை கேட்க முடிகிறது. ‘ஹரிஜன்’களை குறித்து அண்ணாவின் மனபாவத்தை அறிய முடிகிறது: ‘ஒவ்வொரு கிராமமும் ஒரு சக்கிலியனை, கொல்லனை, குயவனைக் கொண்டிருக்க வேண்டும் என்பது மகாத்மா காந்தியின் கனவு. அவர்கள் தத்தமது கடமையை செய்துகொண்டிருக்க வேண்டும். அப்போதுதான் ஒரு கிராமம் தன்னிறைவு பெறும். இதைத்தான் ராலேகான் சித்தியில் நாங்கள் நடைமுறைபடுத்தியிருக்கிறோம்’.

‘அண்ணாவின் குழுவினர்’ (டீம் அண்ணா), இட ஒதுக்கீடு திட்டத்தை எதிர்ப்பவர்களான யூத் ஃபார் ஈக்வாலிட்டி என்ற அமைப்பினருடன் இணைந்திருக்கிறார்கள் என்பது ஆச்சரியமாக இருக்கிறதா? கோகோ – கோலாவினாலும் லேமான் பிரதர்சாலும் மிக தாராளமாக நிதியுதவி செய்யப்பட்ட பல தன்னார்வக் குழுவினர்தான் இந்த பிரச்சார போராட்டத்தை முன்னின்று நடத்துகிறார்கள். ‘அண்ணா குழு’வின்  புகழ் பெற்ற நபர்களான, அர்விந்த் கேஜ்ரிவால், மனீஷ் சிசோடியா-வால் நிர்வகிக்கப்படும் ‘கபீர்’ அமைப்புக்காக கடந்த மூன்று வருடங்களில் போர்டு பவுண்டேசனிடமிருந்து 400,000 டாலர்களை பெற்றிருக்கிறார்கள். ‘ஊழலுக்கெதிரான இந்தியா’ பிரச்சாரத்துக்கு நிதி வழங்கியவர்களின் பட்டியல் இன்னும் ஆச்சரியமான அதிர்ச்சியை தரக்கூடியது. சொந்தமாக அலுமினிய சுரங்கங்கள் வைத்திருக்கும் இந்திய நிறுவனங்கள், சிறப்பு பொருளாதார மண்டலங்களை கையகப்படுத்தி இருப்பவர்கள், ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்பவர்கள், பல்லாயிரக்கணக்கான கோடிகளுக்குச் சொந்தக்காரர்களான அரசியல்வாதிகளுடன் நெருக்கமாக இருப்பவர்கள் என்று அனைவரும் அடக்கம். இதில் பலர் மீது ஊழலுக்காகவும்  மற்றும் வேறு சில குற்றங்களுக்காகவும் விசாரணை இப்போதும் நடந்துக்கொண்டிருக்கிறது.

ஜன் லோக் பால் மசோதா சூடுபிடிக்கத் தொடங்கிய நேரத்தை நினைவுபடுத்தி பாருங்கள். உலக அரங்கில் விக்கிலீக்சின் மூலம் அதிர்ச்சியளிக்கும் உண்மைகள் வெளிவந்துக் கொண்டிருந்தது. இந்திய அளவில், முக்கியமான பன்னாட்டு நிறுவனங்கள், உயர் பத்திரிகையாளர்கள், மத்திய அமைச்சர்கள் பலர், 2ஜி உள்ளிட்ட பிரமாண்டமான ஊழல்களில் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் செய்திகள் அம்பலப்படுத்தியிருந்தன. அதோடு, காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த அரசியல்வாதிகள், பொதுச்சொத்தின் ஆயிரக்கணக்கான கோடிகளை பல்வேறு வழிகளில் கபளீகரம் செய்ததும் வெளிச்சத்துக்கு வந்திருந்தன.

இந்திய வரலாற்றிலேயே முதல்முறையாக, தரகு வேலை செய்யும் பத்திரிகையாளர்களின் முகத்திரை கிழிந்ததுடன் கார்ப்பரேட் இந்தியாவின் முக்கிய தலைவர்களும் தண்டிக்கப்படக்கூடிய ஒரு தருணம் நெருங்கி இருந்தது. ஊழலுக்கெதிரான போராட்டத்துக்கு இதைவிட சரியான நேரம் கிடைக்குமா என்ன?

அரசாங்கம் தனது கடமைகளிலிருந்து விலகிக்கொள்ள, கார்ப்பரேட்டுகளும் தன்னார்வக் குழுவினரும் அந்த இடங்களில் தங்களை நிரப்பிக் கொண்டிருக்கிறார்கள் (தண்ணீர் வசதி, மின்சாரம், போக்குவரத்து, தொலைதொடர்பு, சுரங்கங்கள், மருத்துவம், கல்வி); தனியாருக்குச் சொந்தமான ஊடகங்கள் தங்களது முழு ஆற்றலையும் செலவழித்து பொது மக்களின் சிந்தனையை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர முயற்சிக்கிறார்கள். இந்த கார்ப்பரேட்டுகள், ஊடகங்கள், தன்னார்வ குழுவினர்கள் தாமாகவே ஜன் லோக் பாலின் வரம்புக்குள் வருவார்கள் போலிருக்கிறதே என்று நினைத்தோம். ஆனால், அவ்வாறு இல்லையாம். அவர்களுக்கு முழுமையான விலக்கு அளிக்கிறது ஜன் லோக்பால் மசோதா.

அரசின் ஊழலுக்கும், கறைபடிந்த அரசியல்வாதிகளுக்கும் ஆப்படிக்கும் போராட்டத்தில், குற்றவாளிகள், மற்ற எல்லோரையும் விட அதிகமாக குரலெழுப்புவதன் மூலம் தங்களை தாங்களே அதன் பிடியிலிருந்து சாதுர்யமாக விடுவித்துக்கொள்கின்றனர். அதைவிட மோசம் இரண்டாம் கட்ட சீர்திருத்தம் என்ற பெயரில் பொது வட்டத்திலிருந்து அரசாங்கம் இன்னமும் பின்வாங்க வலியுறுத்தி அதன் மீது கணைகளை வீசுகிறார்கள். அது நடந்தால்தான் பொது நிறுவனங்கள் மேலும் தனியுடமை ஆகும். பொது கட்டமைப்புகளில் தனியார் இன்னமும் கை வைக்க முடியும். இந்தியாவின் இயற்கை வளங்களை கபளீகரம் செய்ய முடியும். அந்தக் கட்டம் வரும்போது, கார்ப்பரேட் ஊழல் நியாயப்படுத்தப்பட்டு சட்டமாக்கப்பட்டுவிடும். அதற்கு ‘தரகு கமிசன்’ என்றும் பெயர் வைக்கப்பட்டுவிடும்.

20 ரூபாயில் தங்கள் அன்றாட வாழ்க்கையை கடத்தும் 83 கோடி மக்களுக்கு, இந்த மசோதாவினால் உண்மையாகவே ஏதும் பயனிருக்கிறதா? இது அவர்களை மேலும் ஏழ்மைக்கும் வறுமைக்கும் போராட்டத்தை நோக்கியும் தள்ளுமே தவிர வேறு எந்த பயனுமில்லை.

மக்களின் சார்பாக கிரிமினல்களும் கோடீஸ்வர அரசியல்வாதிகளுமே நிரம்பியிருக்கும் பாராளுமன்றங்களின் முழுதோல்விதான் இந்த அருவெறுக்கத்தக்க நெருக்கடியை போலியாக உப்பிபெருக்குகிறது. சாதாரண மக்களால் இங்கு ஒரேயொரு ஜனநாயக அமைப்பைக் கூட நெருங்கமுடியாது.

தேசக்கொடி ஒயிலாக அசைவதைப் பார்த்து மனம் மயங்கிவிடாதீர்கள். நமது இறையாண்மையை கார்ப்பரேட்டுகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக நடத்தப் போகும் யுத்தத்துக்குள் நாம் இழுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம். இந்த யுத்தம் சொந்த நலனுக்காக ஆப்கானிஸ்தானில் யுத்தபிரபுக்கள் நிகழ்த்திய யுத்தம் போன்ற உக்கிரத்தை கொண்டதாக இருக்கும். இந்தியாவில் இதைதான் நாம் இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

_________________________________________________

நன்றி: அருந்ததி ராய், தி இந்து (21.8.2011)

தமிழாக்கம்: வேல்விழி, அறிவுச் செல்வன்

_________________________________________________

 வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்:

  1. அன்னாவின் கொள்கையில் உண்மையும் நேர்மை இருபதாக நம்புபவன். இப்போது அரசியலில் யரு இருக்கான்க, சின்ன வயசுல பொருக்கியா இருந்தவங்க இருக்கிறவர்கள் தான் நாளைக்கு கவுன்சிலர்,நகர தலைவர், MLA, MINISTER, CHEIF MINISTER. படிச்ச நாமளா ஒட்டு மட்டும் தான் போடா முடியும். படிக்காத பொறுக்கி அக்றிணைகல் எப்படி நம்மை ஆளா முடியுது? ஊழல் தான் அவர்களுக்கு தேவையான பணத்தை கொடுக்கிறது. சிறந்த தமிழின தலைவர்கல் எல்லாம் போன தலைமுறை. இப்போது பலர் மரணம் எய்துவிட்டனர் அல்லது உடலும் மனதும் தளர்துவிள்ளனர். நம் இனத்தை வழி நடத்தும் பொறுப்பை படிக்காத அல்லது சிந்திகத மனிதர்களிடம். அவர்களின் குறிக்கோள் எப்படி பதவியை வித்து பணத்தை பண்ணலாம் என்பதே. என் இனம் 30 கிலோ மீட்டர் துரத்தில் அழிக்க படுகிறது. வேடிக்கை பார்க்கிறோம். இளன்சர்களை வழி நடத்த அன்ன ஹ்ச்ஹரே போல ஒரு வழி கட்டி இல்லையே, துடிக்கிறது வெடிக்கிறது இதயம். காலையில் உண்ணா விரதம் ஆரம்பித்து மதியம் முடித்து கொள்ளும் மனதிலும் வயதிலும் முதிய தலைவன். அவரை குறை சொல்ல மனமில்லை.

    காந்தியையே குறைசொல்ல 1000 பேர் இருக்கும் போது அன்னா ஹசாரே எம்மாத்திரம்.

    ஊழல் ஒழிந்தால் தான் நல்ல தலைவர்களும் நல்ல நாடும் உருவாகும்.

    உண்மையுடனும் உறுதியுடனும்
    குணா

    • மிஸ்டர் குனா,

      அன்னா போராட்டத்தில் என்ன நேர்மையை கண்டீர்கள் என விளக்கினால் நலம்.

      • //அன்னாவின் கொள்கையில் உண்மையும் நேர்மை இருபதாக நம்புபவன்// இதுதான் காமெடி. அவர் உண்ணாவிரதம் இருந்தது எதற்காக? பிரதமரையும், நீதிபதியையும் ஜன் லோக்பாலில் சேர்க்க வேண்டுமென்பதற்காகத்தானே? ஆனால் இப்போது அவரின் 3 முக்கிய கோரிக்கைகளை அரசு ஏற்றுக் கொண்டது என்று உண்ணாவை நிறுத்தியுள்ளாரே அது அவர் உண்ணாவிரதம் இருந்ததற்கு காரணமான் கோரிக்கைகளா? இல்லையே?

        ஏன் இந்த அந்தர் பல்டி? அதுவும் குறிப்பாக பாஜகவும் பிரதமர், நீதிபதியை சேர்ப்பதை எதிர்த்து வந்ததும், திடீரென்று அன்னாவுடன் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு அன்னா அந்தர் பல்டி அடித்ததும் அவரது நேர்மைக்கு ஒரு சோற்றுப் பதம்.

        அன்னா பின்னாடி வால் பிடித்து சென்ற எந்த புத்திசாலிக்கும் இந்த ரகசியம் தெரியவில்லை அது அவர்களுக்குத் தேவையுமில்லை. அவர்கள் கணக்குக்கு நானும் தேசபக்தன் என்று கணக்குக் காட்ட ஒரு வாய்ப்பை வழங்கிய அன்னா ஒரு தெய்வம் அம்மட்டே…

        • அன்னா மீது ஊழல் குற்றாச்சாட்டு உள்ளதும், அத சமீபத்தில்தான் அவுட் ஆப் தி கோர்ட் செட்டில் செய்துவிட்டு வந்து உண்ணாவிரதம் இருந்தார் அவர். இந்த மோசடிப் பேர்வழி நேர்மையானவர் எனில் நேர்மை என்று சொல்லுக்குத்தான் அர்த்தத்தை மாற்ற வேண்டும்.

    • குணா :

      // என் இனம் 30 கிலோ மீட்டர் துரத்தில் அழிக்க படுகிறது. வேடிக்கை பார்க்கிறோம்.//

      இனம் இனம் என்று பம்மாத்து பண்ணாம உன் இரத்த உறவுகளிடையே சரியான முறையில் நடந்து உதவி உம்முடையவரை முதலில் பாரும்மய்யா!

    • உங்களுடைய ஆதங்கம் எதார்த்தமானதுதான். ஆதங்கப்படும் போது அறிவு சற்று மழுங்கிவிடும் என்று சொல்வார்களெ அது இதுதானோ!

      ”ஊழல் ஒழிந்தால் தான் நல்ல தலைவர்களும் நல்ல நாடும் உருவாகும்”

      இது என்ன கூத்து? நல்ல தலைவர்கள் இருந்தால் ஊழல் ஒழியுமா? அல்லது ஊழல் ஒழிந்தால் நல்ல தலைவர்கள் உருவாவார்களா? நல்ல நாடு உருவாகுமா? கோழி முந்தியா இல்லை முட்டை முந்தியா என்பது போல உள்ளது உங்களது குழப்பம்.

      மிகவும் குழம்பிப் போயுள்ளீர்கள் குணா.

      நல்லவைகள் நடக்க வேண்டுமானால் முதலில் கெட்டவைகளின் ரூட் காஸ் (root cause) தெரிய வேண்டும். அதை அறியாமல் நல்லவைகளுக்கு ஆசைப்பட்டாலும் நிறைவேறாது. வினவைத் தொடருங்கள். நிச்சயம் உங்களுக்கு விடை கிடைக்கும். நல்லவைகளை நாடும் குணாவுக்கு வாழ்த்துகள்.

    • அருந்ததி ராய் பொய் சொல்ல மாட்டார்கள்.. அதுவும் 12 பொய்… சரியா படிச்சு பாருங்கள்.. பணக்கார பள்ளியில் – லாரன்ஸ் லவ்டேலில் படித்தவர்கள்.. புத்தகம் எழுதி அவார்டெல்லாம் வாங்கியவர்கள்.. அவங்க பொய் சொல்லுவாங்களா?

      • லாரன்ஸ் லவ்டேலில் படித்தவர்கள் எல்லாம் பொய் சொல்லா மட்டார்கல் என்பது என்னநீச்ஷ்யம்

    • பன்னிரு பொய்யில் ஒரேயொரு பொய் பற்றி அந்த தளத்திலுள்ள பொய் ….

      //அண்ணா ஹசாரே போஸ்கோவை எதிர்க்கவில்லை, மகராஷ்டிராவின் விவசாயச் சாவுகளை எதிர்க்கவில்லை, நம் நாட்டில் உள்ள ஏனைய அனைத்து பிரச்சினைகளையும் எதிர்க்கவில்லை என்று சொல்லாமல் சொல்கிறார். இதைவிட அப்பட்டமான பொய் இருக்க முடியாது.

      // அப்படியென்றால் அன்னா ஹசாரே விவசாயிகள் தற்கொலை, போஸ்கோ போன்றவற்றை எதிர்த்தாரா என்ன? எனக்கு தெரிந்து அருந்ததி ராய்தான் இவற்றை எதிர்த்தார். அன்னா ஹசாரே இதோ இன்று வரை எதிர்க்க வில்லை. அவர் காசு வாங்கி தின்பதே மேற்படி போஸ்கோ, டாடா, அம்பானி கும்பலிடம்தான் எனும் போது அவர்களை எப்படி எதிர்ப்பார்?

      மான ரோசமுள்ளவர் எனில் அருந்ததி ராய் இவற்றை சுட்டிக் காட்டிய பிறகாவது அவற்றை அவர் எதிர்த்திருக்க வேண்டும். ஆனால் அவரோ தனது அல்லக்கை ஒருத்தரை வைத்து 12 பொய் என்று பொய்க் கட்டுரை எழுதிகிறார். இதை படிக்கமலேயே ஒரு அரைகுறை இங்கு பேஸ்ட் செய்துள்ளது.

  2. அருந்ததி ராய் அவர்கள் மீது மிகவும் அபிமனாம் கொண்டாலும் சில நெருடல்கள் ,,,,,,,,,,,,,,,,,,,

    “இந்த கார்ப்பரேட்டுகள், ஊடகங்கள், தன்னார்வ குழுவினர்கள் தாமாகவே ஜன் லோக் பாலின் வரம்புக்குள் வருவார்கள் போலிருக்கிறதே என்று நினைத்தோம். ஆனால், அவ்வாறு இல்லையாம். அவர்களுக்கு முழுமையான விலக்கு அளிக்கிறது ஜன் லோக்பால் மசோதா.”

    ஜன் லோக்பால் மசோதா
    “அரசின நிதி உதவி பெறும், அரசுசார தொண்டு
    நிறவனஙகள மட்டும் இதன கீழ வரும்

    ஏறகுறைய 4.3 லடசம பதிவு செய்யப்பட்ட அரசுசாரா தொண்டு நிறவனஙகள் இருக்கினறன. நாடு முழவதும் பல
    மிலலியன பதிவு செய்யப்படாத கழககள இருக்கின்றன.. லோக்பால் அவை அனைத்தயும் தன அதிகார எல்லைக்குள் உட்படுத்தும்

    மேலும் ஜன் லோக்பால் மசோதா வீச்சு

    1. அதிக பட்ச தணடைன 10 வரடஙகள
    2. குற்றம் சாட்டப்பட்டவர் பதவியின் உயரவைப் பொறுத்து தண்டனையாம் கடம
    3. குற்றம சாட்டப்பட்டவர் வியாபாரம் சேர்ந்தவராக இருந்தால் அதிக அபராதம்.
    4. வெற்றிகரமாக குற்றம நிருபிக்கப்பட்டால் வணிக நிறவனஙகளக்கு எதிர்காலத்தில் ஒப்பந்தங்கள் (contracts)
    அளிப்பதைதடை செய்யப்படம்

    மேலும் ஜன் லோக்பால் மசோதாக்கு தொழிலதிபர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் தினமலர் நாளிதலில்

    “http://www.dinamalar.com/News_Detail.asp?Id=300758#comment மும்பை: “”லஞ்சம் தராமல் தொழில் நடத்த முடியாது” என, ரத்தன் டாடா போன்ற தொழிலதிபர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மும்பையில், வர்த்தக மேலாண்மை கல்லூரியில் நடந்த விழாவில் கலந்து கொண்டு, பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா பேசுகையில், “”கடந்த 90ம் ஆண்டுகளில், தொழிற்சாலைகளுக்கான லைசென்ஸ் பெறுவதற்கு மட்டும், லஞ்சம் கொடுக்க வேண்டியிருந்தது. தற்போது ஒப்பந்தம் போட, ஒப்பந்தத்தை மாற்ற என, எதற்கெடுத்தாலும் லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நேர்மையான வழியைக் கையாண்டால், தொழில் நடத்த முடியாது.
    எனவே, லஞ்சம் கொடுப்பது போன்ற குறுக்கு வழியை கையாள வேண்டியுள்ளது. தொழில் நடத்துவதில், சமதளமான சூழ்நிலை இல்லை. இப்படிப்பட்ட தருணத்தில், லஞ்சம் கொடுக்காமல் காரியம் சாதிக்க நினைப்பவர்கள் பின்தங்கி விடுவர். அதே நேரத்தில், “லஞ்சம் கொடுத்து விட்டு காரியத்தை சாதித்துக் கொள்ள வேண்டியது தானே’ என, என்னிடம் வேலை பார்க்கும் இளைஞர்கள் கேட்கின்றனர். அவர்கள் சொல்வதைக் கேட்டால், நான் தலைநிமிர்ந்து நடக்க முடியாது” என்றார். மகேந்திரா அண்ட் மகேந்திரா நிறுவன துணை தலைவர் ஆனந்த் மகேந்திரா குறிப்பிடுகையில், “”ஊழலை ஒழிப்பதில் அரசியல்வாதியிடம் மட்டும் பொறுப்பை எதிர்பார்க்கக் கூடாது என்பதை தான், அன்னா ஹசாரேயின் போராட்டம் தெரிவிக்கிறது. நுகர்வோரிடமும் இந்த பொறுப்புணர்வு இருக்க வேண்டும்” என்றார்.

    இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி குறிப்பிடுகையில், “”தொழிலில் போட்ட பணத்தை பல மடங்கு திருப்பி எடுக்க வேண்டுமானால், லஞ்சம் என்ற குறுக்கு வழியைத் தான் கையாள வேண்டியுள்ளது. லஞ்சம் கொடுப்பது அநியாயமானது என்பதை, வர்த்தகர்கள் பலரும் தைரியமாகக் கூற மறுக்கின்றனர். இளைஞர்கள் அதிக அளவில் அரசியலுக்கு வர வேண்டும். அவர்களுக்கு நாங்கள் ஆதரவளிக்க காத்திருக்கிறோம்” என்றார்.”

    “அண்ணா ஹசாரேவின் போராட்ட வழிமுறைகள் காந்திய வழியாக இருக்கலாம், ஆனால், அவரது கோரிக்கைகள் நிச்சயம் அப்படியானதல்ல. அதிகாரத்தை ஒன்றுகுவிக்காமல் பகிர்ந்தளிக்கச் சொல்லும் காந்தியின் கருத்துகளுக்கு முரணாக ஜன் லோக்பால் மசோதா அரக்கத்தனமான, எதேச்சதிகார, ஒருமுகப்படுத்தப்பட்ட அதிகார மையத்தை கோரும் ஊழல் தடுப்பு மசோதாவாக இருக்கிறது”

    லோக்பால் மாசோதா சாதாரன மக்களக்கு கட்டுப்பட்டுவர்? ஒரு குடிமகன் உச்ச நீதி மனற்ததிடம் அவரை நீககமாறு முறையிடலாம்,,,,,,,,,,,

    ஊழல் ஒழிந்தால் தான் நல்ல தலைவர்களும் நல்ல நாடும் உருவாகும்.

    உண்மையுடனும் உறுதியுடனும்
    பேராளி

    மேலேகுறிப்பிட்டதில் தவறு இருந்தால் தயவு செய்து ஜன் லோக்பால் மசோதா தமிழ் படுத்தவும்

    • //“”லஞ்சம் தராமல் தொழில் நடத்த முடியாது” என, ரத்தன் டாடா போன்ற தொழிலதிபர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். // பாவம் ரொம்ப அப்பாவிங்க இந்த தொழிலதிபர்கள் இல்லையா? ஏண்டா டேய் எவன் மினிஸ்டர் ஆகனும், எவன் எப்படி ஒப்பந்தம் போடனும்னு டிக்டேட் பன்னிட்டுக்கிற நீ லஞ்சம் ஊழலினால் பாதிக்கப்பட்டவனா இல்லை அதை உருவாக்கியவனா? (நீரா ராடியா டேப்).

  3. அன்னா ஹசாரேயின் இயக்கத்திற்கு ஆதரவாக மாணவர் இளைஞர் சமூகத்தை அணிதிரட்டுவோம்

    கட்டுப்படுத்த முடியா வண்ணம் பல்கிப்பெருகி வரும் ஊழலை எதிர்த்த அன்னா ஹசாரேயின் உண்ணாவிரதம் புதுடெல்லி ராம்லீலா மைதானத்தில் தொடர்ந்து கொண்டுள்ளது.read more
    http://ieyakkam.blogspot.com/2011/08/blog-post_5867.html

  4. தனி மனித அண்ணா ஹசாரே மீது இருந்த பார்வையை விளிக்கி ஜன் லோக்பால் மசோதாவின் மீது பபார்வையை பதித்தால் நன்றாக இருக்கும் இன்னும் நம் சிந்தனை ஆக்கபூர்வாமான இருக்க அதில் திருத்தங்களை சொன்னால் உபயோகமாக இருக்கும்

    உண்மையுடனும் உறுதியுடனும்
    பேராளி

  5. சிறப்பான மொழிபெயா்ப்பு. வாழ்த்துக்கள், நான் இந்த பணியை துவங்கி பாதி மொழி பெயா்த்த நிலையில் தங்கள் கட்டுரையை பார்த்துவிட்டேன். மொழி பெயர்ப்பாளர்கள் தோழர் வேல்விழி, அறிவுச்செல்வன் என்னை தொடர்பு கொள்ள வேண்டுகிறேன். நான் உங்களுடன் பேச விழைகிறேன். எனது தொடர்பு எண் வினவு அலுவலகத்தில் உள்ளது.

  6. அண்ணாவின் குழுவினர் உயர் பாதுகாப்பு வசதி கொண்ட அச்சிறைக்கு உள்ளும் வெளியிலுமாக மின்னலென பறந்துக் கொண்டிருந்தனர். (வேறு யாருக்கேனும் இந்த பேரின்ப வாழ்வு கிடைக்குமா?)—-நிச்சயமாக,கனவிலும்கூட கிடைக்காதுங்கோ!

  7. டியர் வினவு,

    போராட்டம் என்பது வருமைகோட்டிர்கு கீழெ உல்லவர்கலுக்கு மட்டும் அல்ல. அதெபோல் 1947 முதல் போரடியும் உங்கலால் வருமையை ஒழிக்க முடியவில்லை என்ரால் உங்கல் போரட்டமும் கந்துடைப்பே.

  8. ஜன் லோக்பால் அமைப்பிலும் இடம்பெறபோகிறவர்கள் இதே குட்டையில் ஊரிய மட்டைகள் என்பதை அண்ணா ஹசாரே மறந்து விட்டாரா? அல்லது உழலற்ற இந்தியனை இந்தியா முழுவதும் தேடி கண்டுபிடித்துவிடலாம் என்று நினைக்கிறறா? இனி இந்த அமைபிர்க்கும் மக்கள் கொட்டி அழ வேண்டி வருமோ ? அண்ணா ஹசாரே வேண்டுமானால் உண்மையான நிலைப்பாட்டில் இருக்கலாம் , ஆனால் அவரை சுற்றி பசுதோல் போற்றிய புலிகள் திரிகிறது. மலிவான விளம்பரத்தை தேடிக்கொள்கிறது.

    ஒரே அடிப்படை விஷயம் , மக்களின் மன நிலை மாறாமல் உழல் ஒழியாது.

    இது போதும் என்று ராசாவோ , கல்மாடியோ , நினைத்திருந்தால் இந்த ஊழல்களுக்கு அவசியம் இல்லமால் போயிருக்கும். இது போதும் என்று மனிதனின் மனநிலை மாறவேண்டும்.

    தண்டனை கிடைக்கும் என்று தெரிந்தும் தவறு செய்கிறார்கள் , இந்த அமைபிர்க்கும் கையூட்டு கொடுத்து சட்டத்தை வலைக்கமாட்டர்கள் என்று என்ன நிச்சயம். இன்னும் லஞ்ச லாவண்யங்கள் பெருகுமே தவிர ஒழியாது .

  9. “அடித்தட்டு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கான தீர்வுகள், அமைப்பு ரீதியாகவே உறைந்துள்ள ஏற்றத்தாழ்வுகளை களைவதில் அடங்கியிருக்கிறதா அல்லது ஏற்றத்தாழ்வுகளுக்கு கட்டுப்பட்டு இணங்கிப் போகச் செய்யும் இன்னொரு அதிகார அமைப்பை உருவாக்குவதில் இருக்கிறதா?”
    “ஏழை விளிம்புநிலை மக்கள் பங்கேற்காத இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தரலாமா என்ற கேள்விக்கு தர வேண்டும் என்பதே பதில். ஏனெனில், விளிம்புநிலை மக்கள் நேரடியாக பாதிக்கப் படாவிட்டாலும், மறைமுகமாக அவர்கள் பாதிக்கப் படுவது, பன்னாட்டு நிறுவனங்களால். உதாரணமாக, காமன்வெல்த் விளையாட்டுக்கள் நடக்கையில், டெல்லியிலிருந்து 20 ஆயிரம் ஏழை மக்கள் அப்புறப் படுத்தப் பட்டனர். சென்னையில், உயர் விரைவு பாலம் கட்டும் விவகாரத்தில், ஆயிரக்கணக்கான சேரி மக்கள் அப்புறப் படுத்தப் பட்டார்கள். இந்த இரண்டு விவகாரங்களிலுமே, கோடிக்கணக்கான ரூபாய் ஊழல் நடந்திருக்கிறது. இந்த ஊழல் காரணமாக நேரடி பாதிப்புக்கு உள்ளானவர்கள் ஏழை மக்களே. இந்த ஊழலில் ஈடுபட்ட அதிகாரிகளும், பன்னாட்டு நிறுவனத்தின் அதிகாரிகளும், புதிய லோக்பால் மசோதாவால் தண்டிக்கப் படுவார்களேயானால், அதனால் பயனடையப் போவது ஏழை விளிம்பு நிலை மக்கள் தானே…. ? இது தவிரவும், சுற்றுச் சூழலுக்கு கடும் சேதத்தை ஏற்படுத்தும் பல்வேறு தொழிற்காலைகளுக்கு அனுமதி கொடுக்கும் விவகாரத்தில் கோடிக்கணக்கில் பணத்தை பெற்றுக் கொண்டு அனுமதி அளிக்கும் அதிகாரிகளும், அமைச்சர்களும் லோக்பால் மசோதாவால் தண்டிக்கப் பட்டால், அதனால் சுற்றுச் சூழல் பாதிக்காமல் தடுக்கப் பட்டால் அதனால் அனைத்துத் தரப்பு மக்களும் தானே பலனடைவார்கள் ?”
    நன்றி சவுக்கு
    உண்மையுடனும் உறுதியுடனும்
    பேராளி

    • தலையின் பின்புறம் சுத்திக்கொண்டு, தொடைகளுக்கு நடுவில் கை விட்டுதான் சாப்பிடுவேன் என்கிறார் நமது சவுக்கு…அதற்கு வாய்ப்புகள் இல்லை என்பதை உணராதவர்களாக….

  10. //வினவைத் தொடருங்கள். நிச்சயம் உங்களுக்கு விடை கிடைக்கும். நல்லவைகளை நாடும் குணாவுக்கு வாழ்த்துகள்//

    ஏசுவை தொடருங்கள் உங்களுக்கு மோட்சம் கிடைக்கும்

  11. தினமலரின் காமெடி !!!!!

    ஹசாரேயால் “உயிர்’ பெற்ற உண்ணாவிரதம்

    *ஐரோம் சானு சர்மிளா-(11ஆண்டு): 2000ல் நவ.,2 ல் மணிப்பூரில் இந்திய துணை ராணுவப் படையால் 10 பேர் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து வடகிழக்கு மாநிலங்களில் அமலில் இருக்கும் ஆயுதப்படைக்கான சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தில் திருத்தம் செய்யக் கோரி, சுமார் 11 ஆண்டுகளாக திட உணவு எடுத்துக்கொள்ளாமல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இவர், ஒவ்வொரு ஆண்டும் தற்கொலைக்கு முயற்சி செய்த குற்றச்சாட்டில் கைதாவதும், பின் விடுதலை செய்யப்பட்டவுடன் மீண்டும் உண்ணாவிரதத்தை தொடர்வதும் வாடிக்கையாக உள்ளது. இவர் கைது செய்யப்படும்போதெல்லாம் வலுக்கட்டாயமாக “டியூப்’ வழியாக உணவு வழங்கப்படும்.

    ஹசாரேயால் ஐரோம் சானு சர்மிளாவின் உண்ணாவிரதம் “உயிர்’ பெற்றதாக தினமலர் கூறியிருப்பது அருவருக்கத்தக்கது. உணர்வற்ற சடலம் மட்டுமே இதுபோல் எழுத முடியும்.

  12. //இனி இந்த அமைபிர்க்கும் மக்கள் கொட்டி அழ வேண்டி வருமோ?// கண்டிப்பா அன்னா டீமுக்கும் ஒரு ஷேர் அழுதாவனும். இதெல்லாம் குணாக்களுக்கு தெரியாது. பாஸ், தூங்கறவன எழுப்பலாம் ஆனா தூங்கறமாதிரி நடிக்கிற குணாக்களை ம்கூம்… முடியாது…முடியாது.

  13. மொழிபெயர்ப்பில் ஆங்காங்கே சில/சிறு தவறுகள்இருந்தாலும் நன்றாக வந்துள்ளது…….ஆயினும் கடைசிக்கு முந்தைய வரியில்

    ”மக்களின் சார்பாக கிரிமினல்களும் கோடீஸ்வர அரசியல்வாதிகளுமே நிரம்பியிருக்கும் பாராளுமன்றங்களின் முழுதோல்விதான் இந்த அருவெறுக்கத்தக்க நெருக்கடியை போலியாக உப்பிபெருக்குகிறது”

    என்று உள்ளது…..அது “மக்களைப் பிரதிநிதிப்படுத்தாத ” என்று ஆரம்பிக்க வேண்டும், இல்லையென்றால் அது மொழிபெயர்ப்பில் அர்த்தத்தை மாற்றிவிடும்.

    ………. தோழர்கள் கவனிப்பார்களா?

  14. மொழிபெயர்ப்பு உயிரோட்டமாக இல்லை. மூல கட்டுரையின் உணர்ச்சிகள் எவையும் மொழிபெயர்ப்பில் வரவில்லை. இதை சிறந்த மொழிபெயர்ப்பாக வெளியிட்டிருக்கலாம். இது போன்ற சிறந்த அரசியல் கட்டுரைகளை பயிற்சி இல்லாமல் மொழிபெயர்க்கும் பயிற்சிக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். எனினும் எதிர்காலத்தில் சிறந்த மொழிபெயர்ப்புகளை செய்ய மொழிபெயர்த்த தோழர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

    • dear sir,
      for days i have been waiting to get your comment on Anna Hazare, it is timely, eye opening and really interesting. salut to arundati roy and i was surprised to see Metha Patkar With team Anna. is she also is sponsored or is she not aware of what is taking place in india by team anna. it is very difficult for me to unerstood.

      reply please

      britto

  15. Enpaneenga Hindu madhathaeye edhirkavaragalache en Hinduva padikkereenga sondhama onnume ezhudha theriyadhu idhulla ivanuga jeyamohaan, charu niveditha pathi solla vandhttanunga… comedy piece.. sathiyama ulagam irukkara varaikkum ungalala oru thurumba ooda killipoda mudiyadhu tamilnadula

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க