Tuesday, April 13, 2021
முகப்பு கட்சிகள் காங்கிரஸ் அப்சல் குரு தூக்கு : மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம் !

அப்சல் குரு தூக்கு : மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம் !

-

நாடாளுமன்ற தாக்குதல் நாடகம்! அப்சல் குருவுக்கு அநீதியான தூக்கு!
மதுரை உயர்நீதிமன்றம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்

நாள்: 12.02.2013 செவ்வாய்
நேரம் : காலை 10.00 மணி
பங்கேற்போர்
: மனித உரிமை போராளிகள், ஆர்வலர்கள், ஜனநாயக சக்திகள், வழக்கறிஞர்கள், புரட்சிகர இயக்கங்கள்

ஆர்ப்பாட்டம் செய்திட! அனைவரும் வருக!

மதுரை ஆர்ப்பாட்டம்

___________________________________________________________________

 • ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி., இந்து மதவெறி பாசிஸ்டுகளை திருப்திபடுத்தவே அப்சல்குரு தூக்கு!
 • ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி., சங்கப் பரிவாரங்கள் இந்து பயங்கரவாதிகள் என்று சொன்ன மத்திய உள்துறை அமைச்சர் ஷிண்டே அதற்குப் பரிகாரமாய் அப்சல் குருவை இரகசியமாய் தூக்கிலிட்டுஅறிவித்தார்!
 • சங்கப் பரிவாரங்கள் இந்து பயங்கர வாதிகள் என்றால் காங்கிரஸ் மதச்சார்பற்ற முகமுடி அணிந்த பயங்கரவாதி!
 • இந்திய–ஐரோப்பிய– அமெரிக்க அரசுகளின் பயங்கரவாதமே இசுலாமிய தீவிர வாதத்துக்கு அடிப்படை!
 • நாடாளுமன்றத் தாக்குதலுக்கு திட்டம் வகுத்துக் கொடுத்து மூளையாகச் செயல்பட்டது இந்திய உளவுத்துறை ராவும் இந்து மதவெறி பாசிஸ்டு அத்வானியும் தான்! அதை மூடி மறைக்கவே அப்சல் குரு அவசரக் கொலை.
 • உச்சநீதிமன்றம் உச்சிக்குடுமி மன்றம். இந்திய தேசிய மன சாட்சி என்பது இந்து மதவெறி மனசாட்சி தான்!
 • இந்தியாவில் நீதி, நியாயம், ஜன நாயகம் என்பதெல்லாம் வெற்றுக்கூச்சல்.
 • புனிதமான நாடாளுமன்றமா? கிரி மினல்கள் பொங்கி வழியும் குற்றவாளிகளின் கூடாரமா?
 • இந்திய அரசே!
  காஷ்மீரை கபளீகரம் செய்யாதே!
  7லட்சம் ராணுவத்தை வெளியேற்று!
 • காஷ்மீரின் சுயநிர்ணய உரிமையை அங்கிகரி!
 • மதத் தீவிரவாதிகளின் பெயரால்–அரசு பயங்கரவாதம் தாண்டவமாடுகிறது!
  மறுகாலனியாக்கத்தை எதிர்த்துப் போராடும் சொந்த நாட்டு மக்களை ஒடுக்கவே தீவிரவாதம், பயங்கரவாதம் வளர்க்கப்படுகிறது.
  சிறப்பு ஆயுதச் சட்டம், பயங்கர வாத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம்.
  பதட்டமான பகுதி என்று அடுக்கடுக்காகப் போட்டுவரும் கருப்புச் சட்டங்கள் பன்னாட்டு மூலதனத்துக்குப் பாய் விரிக்கத் தான்.
  நாட்டை மீண்டும் அடிமை யாக்கும் அனைத்து ஓட்டு சீட்டு
  அரசியல்தரகர்களை எதிர்த்துப் போராடாவிட்டால் நாளையப் பொழுது நமக்கில்லை, கார்ப்பரேட்களுக்கே!
 • சிங்… சிங்… மன்மோகன் சிங்,
  நீயா… நீயா… சோனியா
  பசி… பசி… அகோர பசி, நாட்டை விற்றும் அடங்காத பசி
  பச்சை துரோகத்துக்குப் பெயர் தேச பக்தி!

சட்டம்,நீதி, மனித உரிமைகளை மீறி படுகொலைகளை ரகசியமாக அரங்கேற்றும் போலி ஜனநாயக அரசினை எதிர்த்துப் போராடுவோம்!
போராடும் உரிமைகளை இழக்கும் முன் போராடும் துணிவைப் பெறுவோம்!

தகவல் : மனித உரிமை பாதுகாப்பு மையம்–தமிழ்நாடு மதுரை மாவட்டக்கிளை,
தொடர்புக்கு – 94434 71003

 1. ஒருத் தீயவனுக்குக் கிடைக்கும் மரணத் தீர்ப்பு -உலகில்
  பல நல்லவர்களுக்கு கிடைக்கும் அன்பளிப்பு.
  ஜெய்ஹிந்த்.

  • குற்றவாளி என்று தெரிந்திருந்தும் ஒரு தீயவனுக்கு (மோடி வகையறா) கிடைத்திருக்கும் அன்பளிப்பு, உலகில் பல நல்லவர்களுக்கு கிடைத்திருக்கும் மரணத்தீர்ப்பு என்று எடுத்துக் கொள்ளலாமா? மிஸ்டர் பையா!!
   (ஜெய்ஹிந்த் – திற்கு எதிர்ப்பதம் என்ன சொல்வது – மண்ணைக் கவ்வட்டும் ஹிந்த் என்று சொல்லலாமா?!)

 2. அண்மைச் செய்தி ஒன்று

  ///லெஷ்கர் இ தொய்பா செய்தி தொடர்பாளர் அப்துல்லா கஸ்னாவி, “அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதை நாங்கள் சாதாரணமாக எடுத்துக்கொள்ள மாட்டோம். பழிக்கு பழி வாங்குவோம். இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களை தகர்ப்போம். இந்தியா தன் செயலுக்கான விலையை கொடுத்தே தீர வேண்டும்” என்று எச்ரிக்கை விடுத்துள்ளார்.///

  “வருமுன் காப்போம்” திட்டப் படி நமது தமிழ்நாட்டை அமைதிப் பூங்காவாக வைத்திருக்கும் “மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா” அவர்கள் இந்தத் தாக்குதலில் இருந்து தமிழ் நாட்டைக் காப்பதற்காக இந்த மிரட்டலின் அடிப்படையில் 31 மாவட்ட ஆட்சியர் மூலம் 144 தடை உத்தரவு போடுவாரா?

  • ///லெஷ்கர் இ தொய்பா செய்தி தொடர்பாளர் அப்துல்லா கஸ்னாவி, “அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதை நாங்கள் சாதாரணமாக எடுத்துக்கொள்ள மாட்டோம். பழிக்கு பழி வாங்குவோம். இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களை தகர்ப்போம். இந்தியா தன் செயலுக்கான விலையை கொடுத்தே தீர வேண்டும்” என்று எச்ரிக்கை விடுத்துள்ளார்.///

   இதை சாக்காக வைத்து நீங்கள் எங்கும் குண்டு வைத்து பழியை அவர்கள் மேல் போட்டு விடாதீர்கள்.

   • இந்தப்பக்கம் லெஷ்கர் இ தொய்பா, இந்தப்பக்கம் உங்க கூட்டம்….அப்பாடியோவ் அப்சலுக்கு பெருகுது ஆதரவு…

 3. **நாடாளுமன்றத் தாக்குதலுக்கு திட்டம் வகுத்துக் கொடுத்து மூளையாகச் செயல்பட்டது இந்திய உளவுத்துறை ராவும் இந்து மதவெறி பாசிஸ்டு அத்வானியும் தான்! அதை மூடி மறைக்கவே அப்சல் குரு அவசரக் கொலை.***

  என்னப்பா இது ..தேர்தலே வரல அதுகுள்ளையுமா ஆட்சி மாறிப்போச்சி…?

  உங்க ஆறாவது அறிவு செயல்பாட்ட பாத்தா..எனக்கு கிச்சு முச்சா வருதுப்பா..!!

 4. அப்சலுக்கு, இப்போது, தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது, அரசியல் ரீதியிலான முடிவு என்பது தெளிவாகிறது. அரசின் முகத்தை அம்பலப்படுத்த, இந்த சம்பவம், நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. இந்த விவகாரத்தில் முடிவெடுக்க, நீதித் துறை, மூன்று ஆண்டுகளை மட்டுமே எடுத்துக் கொண்டது. ஆனால், தீர்ப்பை அமல்படுத்த, அரசு, எட்டு ஆண்டுகளை, எடுத்துக் கொண்டு உள்ளது.

 5. குடியரசுத் தலைவர்(காங்கிரஸ் கைக்கூலி)கருணை மனுவை தள்ளுபடி செய்தது;அப்சல் குரு தூக்கில் போடப்பட்டது எல்லாமே ரகசியம்.தூக்கு பற்றி அவருடைய குடும்பத்திற்கு சொல்ல வேண்டும்,அவர்களை சந்திக்க அனுமதிக்க வேண்டும்.கருணையினால் அல்ல.அது உரிமை.ஏன் அதை காங்கிரஸ் கயவாளிகள் செய்யவில்லை? மீண்டும் உச்ச நீதி மன்றத்துக்கு செல்ல அவருக்கு உரிமை இருக்கிறது.அப்படி போய்விடக் கூடாது என்பதற்காகத்தான் இந்த சதியை அரங்கேற்றி இருக்கிறது காங்கிரஸ் நரி.இவர்கள் எப்பேர்ப்பட்ட பயங்கரவாதிகள்?அப்சல் குரு இதில் சம்பந்தப்படவில்லை என்பது சற்று தேசிய வெறியை தள்ளி வைதுவிட்டுப் பார்த்தால் தெளிவாகத் தெரியும்.பாராளுமன்றம் , நீதிமன்றம் ,பிரதமர்,மந்திரிகள் ,அதிகாரிகள்,எம்.எல்.ஏ.,எம்.பி.க்கள் இவர்களெல்லாம் புனிதர்களாக்கும்.இதைப் புரிந்துகொண்டு போராடுகிறவர்களை அரசு தான் தீவிரவாதிகளாக மாற்றுகிறது.காஷ்மீரை அநியாயமாக கபளீகரம் செய்ய இந்திய ஆளும் வர்க்கம் படுகொலைகளை காஷ்மீர் மக்களுக்குப் பரிசாகத் தரும்போது தீவிரவாதம் தான் திருப்பிக் கிடைக்கும்.தீவிரவாதம் பயனளிக்காது என்ற போதிலும் அரசு பயங்கரவாதம் இருக்கும் வரை தீவிரவாதம் நீடிக்கும். அது தான் லஷ்கர்-இ-தொய்பாவின் குரல்.அப்சல் அவர்களுடைய ஆள் என்பதாக அல்ல.காஷ்மீர் பற்றி எரிந்து கொண்டிருக்கிறதே ஏன்?மக்கள் எல்லோரும் தீவிரவாதிகள்.அங்கே நிறுத்தப் பட்டிருக்கும் ஏழு லட்சம் ராணுவம் சர்புத்திரர்கள் ,அப்படித்தானே?

 6. எப்படியோ உண்மை குற்றவாளியை தப்பிக்க விட்டாச்சு. இந்து டவுசர் இயக்கங்கள் அப்சல் தூக்கி ஆதரிப்பதை பார்த்தால் ஆடு திருடி பஞ்சாயத்தை கலைக்கும் சூனா பானா தான் நியாபகத்திற்கு வருது.

 7. //ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி., இந்து மதவெறி பாசிஸ்டுகளை திருப்திபடுத்தவே அப்சல்குரு தூக்கு!//

  யோவ் அறிவிருக்கா…னீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் தான் இந்தத்தீவிரவாதிக்கு தூக்கு தண்டனை அளிக்கப்பட்டது, இதில் ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பியை திருப்திப்படுத்த என்ன இருக்கிறது…அவன்நாட்டின் மேல் போர் தொடுத்த ஒரு மிகக்கொடிய தீவிரவாதி….

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க