privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கஅன்புமணி ராமதாஸ் கைது : ஆதிக்க சாதி தலைவர்கள் ஓட்டம் !

அன்புமணி ராமதாஸ் கைது : ஆதிக்க சாதி தலைவர்கள் ஓட்டம் !

-

மிழகத்தின் ஆண்ட பரம்பரை, வீரப் பரம்பரை என்று அப்பாவி மக்களை உசுப்பேத்தி ஆதாயம் அடையப் பார்க்கும் ஆதிக்க சாதி தலைவர்கள் ஒரு புறம். மறு புறம் இவர்களது ‘வீரம்’ என்பது பொதுக்கூட்ட மேடைகளில் அதிகபட்ச டெசிபல்களில் கத்தும் ஊளைச் சத்தம் மட்டும்தான் என்பதை வரலாறு பதிவு செய்திருக்கிறது.

வில் ஏந்திய அன்புமணி ராமதாஸ்
வில் ஏந்திய அன்புமணி ராமதாஸ்

மருத்துவர் ராமதாஸ் நிலைமை வண்டு முருகன் என்றால் அன்புமணியின் நிலைமை கைப்புள்ளையின் கண்றாவி கண்டிசனையும் விஞ்சி விட்டது. சென்னை தி.நகர் வீட்டில் அவர் கைது செய்யப்படும் போது அழவில்லையே தவிர அவ்வளவு சோகம். அரற்றியவாறு ஜெயலலிதாவுக்கு சாபம் விடுகிறார். அதுவும் அடுத்த தேர்தலில் அவர் வெற்றிபெற மாட்டார் என்று. தனது கைதை கருணாநிதியின் “ஐயோ” கைதுடன் வேறு ஒப்பிடுகிறார். ஆனாலும் இந்த கைப்புள்ளையின் கைது குறித்து தி.நகரில் ஒரு காக்கா கூட கத்தவில்லை.

மாமல்லபுரம் கூட்டத்தில் நான் கண்ணசைத்தால் என்ன நடக்கும் தெரியுமா என்று ராமதாஸ் வெட்டி வீரம் பேசினார். இவர் சிமிட்டி, காடுவெட்டி குரு, பி.டி அரசகுமார் போன்ற ‘வீரர்கள்’ பொங்கினால் தமிழ்நாடு தாங்காதாம். கடைசியில் என்ன ஆயிற்று? மாமல்லபுரம் முழு நிலவு கூட்டத்தில் சாதித் திமிர் கக்கிய கொங்கு வேளாளக் கவுண்டர், பார்ப்பனர், செட்டியார், கோனார், தேவர் முதலிய காமடி பீஸ்கள் சட்டையைக் காணாம், ஜட்டியைக் காணோம் என்று தலைமறைவாக ஓடியபடியே இருக்கிறார்கள். யாரும் ராமதாஸ் கைது குறித்து மூச்சே விடவில்லை என்பதும் முக்கியம்.

தமிழ்நாட்டை ஆண்ட எல்லா மன்னர்களும் எங்களது தேவர் சாதி முன்னோர்கள்தான் ஏன்று ஏகத்துக்கும் ஊசிப்போன பீலா விடும் முறுக்கு மீசை தேவர் சாதி அரசகுமார் அன்றைய கூட்டத்தில் குருவையும் விஞ்சி தாழ்த்தப்பட்ட மக்களை வன்மத்துடன் குதறி எடுத்தார். ஆனால் பழைய வழக்குகளை தூசி தட்டி ஜெயா அரசு பாமகவை பதம் பார்க்கும்போது இந்த சூராதி சூரர் அம்மா படத்தின் முன் விழுந்து பதிவு செய்து அதிமுக வட்டச் செயலாளர் முன் தோப்புக்கரணம் போட்டு கைதாவதில் இருந்து தப்பிக்க அம்மாவுக்கு நேர்ந்து இருக்கிறார்.

ராமதாஸ் , ஜெயலலிதாசோதனையான நேரத்தில் திருச்சி சிறையில் “சத்திய சோதனை” படிக்கும் ராமதாஸ் கூட ஜெயலலிதாவை நேரடியாக கண்டிக்க வில்லை. யாரோ சில வீணாப்போன போலீஸ் அதிகாரிகள் தவறாக அறிக்கை கொடுத்ததால்தான் அம்மா இப்படி பத்ரகாளியாக ஆடுகிறார் என்று அறிக்கை விடுத்தார். காடு வெட்டி குரு அளவுக்கு கூட மக்கள் முன் நாலு வார்த்தைகளை சேர்த்து பேசத்தெரியாத அன்புமணி கூட அப்பா கைதிற்காக அஹிம்சைப் போராட்டத்தின் மூலம்தான் எதிர்ப்பை காட்டி வருவதாக கூறினார்.

மாமல்லபுரம் கூட்டத்தின் அடுத்த நாள் சட்டசபைக்கு வந்த காடுவெட்டி குரு கூட அம்மா முன் பவ்யமாகத்தான் பேசினார். மரக்காணம் கலவரத்திற்கு வி.சி மற்றும் தலித்துக்கள்தான் காரணம் என்று சொல்வதைக்கூட அம்மா மனம் நோகாமல் எப்படி கூறுவது என்று தவித்தார்.

ஆக கூட்டி கழித்துப் பார்த்தால் ஜெயலலிதா அரசு என்று அல்ல, உறுதியான நடவடிக்கை எடுக்கும் எந்த அரசும் கூட இந்த காமடி பீஸ்களை உண்டு இல்லையென்று முடித்து விடலாம். இவர்களிடம் வீரம் மட்டுமல்ல விவேகமும் கிடையாது. ஆதிக்க சாதிகளைச் சேர்ந்த பெரும்பான்மை மக்கள் கூட இவர்களது சாதிவெறிக்கு அங்கீகாரம் கொடுக்கவில்லை, எதிர்க்கவே செய்கிறார்கள்.

இந்நிலையில் தலித் மக்கள் மீது வன்மம் பொழியும் இத்தகைய ஆதிக்க சாதி தலைவர்கள் மீது வன்கொடுமை மற்றும் குண்டர்கள் தடுப்புச் சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுத்தால் தமிழகத்தில் இவர்களது அத்தியாயத்தை முடித்து விடலாம். ஆனால் ஜெயலலிதா அதற்கு தயாராக இல்லை. அதனால்தான் இத்தகைய சாதி வெறியர்கள் திமுக, அதிமுக இரண்டு கட்சிகளின் ஆட்சியிலும் இப்படி சவுண்டு விட்டு கோஷ்டி சேர்க்கிறார்கள்.

தற்போது ராமதாஸ் கைதை ஒட்டி இரவில் யாருக்கும் தெரியாமல் பஸ்களை எரித்தும் கல்வீசியும் ‘வீரம்’ காட்டும் வன்னியர் சங்க, பாமக குண்டர்களை சமாளிக்க ஒரு வழியிருக்கிறது. சேதப்பட்ட பேருந்துகளுக்கு நட்ட ஈடு கேட்டு அதற்கான தொகை கேட்டு தைலாபுரத்திற்கு தினமும் கூரியர் அனுப்பினால் கண்மூடித் திறக்கும் நேரத்தில் வட மாநில சாலைகளில் அமைதி திரும்பிவிடும். மருத்துவர் ராமதாஸுக்கு காசை வீட மீசை பெரிதில்லை. அங்கு அடித்தால் இங்கு வலிக்கும். நோயும் குணமாகும்.

ராமதாஸை குண்டர்கள் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று வினவு நேற்று வெளியிட்ட கட்டுரைக்காக ஒரு சில ‘வன்னிய குல ஷத்திரியர்கள்’  அடிக்கடி தொலைபேசியில் ஆபாச அர்ச்சனை செய்து வருகிறார்கள்.  எதையும் பேசி விவாதிப்பதற்கு தயாராக இல்லை. அதேநேரம் திட்டுவதில் இருக்கும் ரோசம் முகவரியை தா என்று கேட்டால் குபீரென்று மறைந்து விடுகிறது. முகவரி இல்லாமல், அனாமதேயமாக திட்ட மட்டும்தான் இவர்களது ஷத்திரிய வீரம் அனுமதிக்கிறது. குண்டர்களே இப்படி என்றால் இந்த குண்டர்களது தலைவர்கள் மட்டும் எப்படியாம்?

 1. //இந்த கைப்புள்ளையின் கைது குறித்து தி.நகரில் ஒரு காக்கா கூட கத்தவில்லை.// Some times these kind of casual comments only creates a condition that if a politician got arrested there should be a disturbance in peace..

 2. நீங்க தான் பாமக ஆளுங்களுக்கு விவேகம் இல்லைன்னு சொல்றீங்க. எனக்கென்னமோ அவங்க புத்திசாலின்னு தான் தோணுது. இங்கே பாருங்க:

  // பாளையங்கோட்டையில் ராமதாஸ் மற்றும் அன்புமணி கைதினைக் கண்டித்து பாமக தொண்டர்கள் 4 பேர் மொட்டை போட்டுள்ளனர். //

  http://tamil.oneindia.in/news/2013/05/03/tamilnadu-anbumani-ramadoss-also-arrested-174566.html

  வரப்போற நாடாளுமன்ற தேர்தல்ல பாமக கதி என்னன்னு எவ்வளோ கரெக்டா புரிஞ்சிகிட்டு வச்சிருக்காங்க பாருங்க. பாலச்சந்தர் ஸ்டைல்ல எப்படி சிம்பாலிக்கா சொல்றாங்க பாருங்க!

 3. //தி.நகரில் ஒரு காக்கா கூட கத்தவில்லை//

  அதான் நீங்க கத்தி கட்டுரை எழுதி இருக்கீங்களே..

  ஒன்னுமில்லாத விசயமா இருந்தால் நீங்க கட்டுரை எழுதுவீங்களா..?

  கக்கை கத்தல தோழர்கள் எனும் சிங்கம் ஊருமியது என வைத்துக்கொள்கிறோம்.

 4. “ஐயோ” கைது’!! நல்ல குறியீட்டுப் பதம்! தொலைபேசியில் அழைப்பவர்கள் வண்டுமுருகனோடு கூட இருக்கும் நொந்த குமார்கள்… அற்றசக் கேட்டா அண்ணன் அற்றசையும் ஐயா அற்றசையும் தான் சொல்லணும், இப்போ அதுவும் மத்திய சிறை .. என்ன செய்வார்கள் பாவம்…

 5. இரவில் யாருக்கும் தெரியாமல் பஸ்களை எரித்தும் கல்வீசியும் ‘வீரம்’ காட்டும் வன்னியர் சங்க, பாமக குண்டர்களை சமாளிக்க ஒரு வழியிருக்கிறது. சேதப்பட்ட பேருந்துகளுக்கு நட்ட ஈடு கேட்டு அதற்கான தொகை கேட்டு தைலாபுரத்திற்கு தினமும் கூரியர் அனுப்பினால் கண்மூடித் திறக்கும் நேரத்தில் வட மாநில சாலைகளில் அமைதி திரும்பிவிடும். மருத்துவர் ராமதாஸுக்கு காசை வீட மீசை பெரிதில்லை. அங்கு அடித்தால் இங்கு வலிக்கும். நோயும் குணமாகும்.( அங்கு அடித்தால் இங்கு வலிக்கும்.இந்த வசனம் எங்கோ கேட்ட மாதிரியில்ல இருக்கு)

 6. அடிமை சாதித் தலைவர்களுக்கு கொண்டாட்டம் என்று சொல்லுங்கள்.

  • பொறுத்துப் பார்த்த பெருமாள் ‘ஆண்ட’ சாதியின் பெருமையை காப்பாற்ற களத்தில் குதித்து விட்டார். என்ன, அப்போதும் கூட ஜெயலலிதாவை கண்டித்து பேச முடியாது. பின்னே கந்தக சிறையில் ரத்தக் கொதிப்புடன் மயங்கி விழும் அவலத்தை யார் தாங்குவார்? அதனால் கேட்பாரில்லாத தாழ்த்தப்பட்ட மக்களை ரெண்டு திட்டி விட்டு மன சமாதானம் அடைய வேண்டியதுதான், எல்லாம் நேரம் !

  • இன்னும் 2 நாள் பொருத்து இருந்து பாருங்கள், இவர்களது ஆண்ட பரம்பரை பெருமைகளை வினவு தளத்தில் நிறைத்து விடுவார். மேலும் தலித் இட ஒதுகீட்டை (மட்டும்) பற்றி கேவலமாக விமர்சனம் செய்வார். அப்பறம் பெருமையா வேற சொல்லிக்கிட்டு சுத்துவார் “எப்படி திருப்பி பதிலடி குடுத்தேன் பாரு”
   வழக்கம் போல செய்யறது தானே, கிளப்புங்கள்

  • சினிமாவில் தற்போது வடிவேலு இல்லாத குறையை பெருமாள் தேவனை விட்டு நிரப்பலாம் போல் இருக்கிறதே. சரியான காமெடி பீஸ்யா நீர்.

   • இன்னமும் அடிமை சாதின்னு ஒன்னு இருப்பது உண்மைதான் பெருமாள் தேவன் அவர்களே, அந்த அடிமை சாதியினர் செய்யும் மிக மிக அடிமைத்தன வேலைகள் என்ன என்று உங்களுக்கு சான்றுகளுடன் காட்ட ஆசையாய் இருக்கிறது உங்கள் முகவரி தந்தால் எங்கள் செலவிலேயே அழைத்து சென்று காட்டுகிறோம் வாருங்கள்…….அப்புறம் வாழ்நாள் முழுவதும் அடிமை என்ற வார்த்தையே வராது நிச்சயம்

    • \\உங்கள் முகவரி தந்தால் எங்கள் செலவிலேயே அழைத்து சென்று காட்டுகிறோம் வாருங்கள்…….அப்புறம் வாழ்நாள் முழுவதும் அடிமை என்ற வார்த்தையே வராது நிச்சயம்//

     அப்படி போடு அருவாள

  • நேத்து இரவு வின் டி.வி.யில் யாதவர் சங்க தலைவர்ன்னு ஒரு காமடி பீசு வந்து நாங்க ஆண்ட பரம்பரை.எங்க இனம் ஒரு கோடி பேர்ன்னு சொல்லியது. ஏற்கனவே தேவர் வகையறா நாங்க ஆண்ட பரம்பரை.எங்க இனம் இரண்டு கோடி பேர்ன்னு சொல்லிக்கிட்டு திரியுது.இந்த மூடத்தனத்தின் முன்னோடி ராமதாசு நாங்க ஆண்ட பரம்பரை.எங்க இனம் ஒரு கோடி குடும்பம் அதாவது குடும்பத்துக்கு நாலு பேர்ன்னா கூட நாலு கோடி பேர் ஆண்ட பரம்பரைன்னு பீலா உடுது.

   நா கேக்குறேன்,ஏழு கோடி மக்கள் தொகை கொண்ட மாநிலத்துல ஏழு கோடி பேர் ஆண்ட பரம்பரையா இருக்க முடியுமா.ஏண்டா லூசாடா நீங்கல்லாம்.

 7. ஜாதி வெறி ஜாதிவெறி என்று அலறும் நீங்கள் மட்டும் என்னவாம்! எப்போது பார்த்தாலும் ஜாதி மதம் இனம் மொழி ஆகியவற்றைக்கொண்டுதானே “வினவுவை” நடத்தி வருகிறீர்கள். ராமதாசை காட்டிலும் நீங்கள் தான் ஜாதியில் அதிகம் பழுத்த பழம்!!
  தலித், பார்ப்பனன்,ஆதிக்க ஜாதி மற்றும் இஸ்லாமியர்களின் ‘யோக்கியதை’ பற்றியே எழுதி வருகிறீர்கள். இது மட்டும் சரியா? முதலில் நீங்கள் திருந்துங்கள் அதன் பிறகு மற்றவர்களை திருத்த முயற்சிக்கலாம்!
  தலித் என்ற ஜாதியே தமிழ் நாட்டில் இல்லை. மராட்டியத்தை சார்ந்தது. இதை தமிழகத்தில் நுழைத்து பாட்சாகாட்டுகிரீர்கள்!! தமிழ் வார்த்தை அல்லாத இந்த தலித் என்ற வார்த்தையை உபயோகப்படுத்துவதை நிறுத்துங்கள்!! தமிழனுக்கு சம்பந்தமில்லாத இதை வைத்து அரசியல் பண்ண வேண்டாம்.

 8. தமிழ் நாட்டில் தற்போது நான்குவழி சாலைகள் போடப்பட்டு வருகிறது. இதற்காக பல மரங்களை அரசு துறையினர் வெட்டிவிடுகின்றனர். அதற்கு பணம் செலவு ஆகும். அந்த வேலையைத்தான் ராமதாசின் அடிமைகள் செய்து வருகிறார்கள். மரம் வெட்டுதல், பஸ்களை எரித்தல் போன்றவைகள் இவர்களின் பரம்பரை தொழில்.
  “காந்தியின் சிந்தனைகளை” சிறையில் படித்து வருகிறாராம்!!!! தனது அடிமைகளை குசிபடுத்த இந்த விளம்பரம்.
  காந்திமகான் செய்த பாவம் இதெல்லாம்!!!!!

  • சரி அந்த காந்தி ”மகானையே” போட்டு தள்ளியது யார் செஞ்ச பாவம் நாட்ராயா.

  • வணக்கம் நாட்ராயன் , ”வினவ”வலையில படிக்கறாளவுக்கு விவரமா இருக்கின்றீர்கள் , சம்பளத்த கூட்டிக்கொடுத்தார்னு அரசாங ஊழியர்கள் , இலக்கியம் பேசினார்னு தங்களை அறிவாளிகள்னு சொல்லிகிறவங்க , கதை கவிதை எழுதினார்னு ஒரு கூட்டம் ,கருனாநிதிக்கு அடிமையா இருக்குது , ஆனா இந்த ஆளு இந்தநாட்ட கொள்ளையடிச்சத மறந்துட்டு . ஆங் இவருக்கு முந்தியே இன்னொருத்தர் அதான் அண்ணாதுரை , வாழ்க அண்ணாநாமம் , இந்த ஆளு இந்தநாட்டுக்கு செய்த தியாகம் என்ன ? இந்த உலக மகா கொள்ளையன் கருனாநிதிய உருவாக்கித தவிற , அப்புறம் புரட்ச்சித்தலைவர் ,இவர்செய்த தியாகம் என்ன ,அட்ட கத்திய எடுத்துகினு அரை மணிநேரம் சண்டை போட்டது , அடையாறு ஆலமர விழுதை பிடித்து ஆடி தஞ்சாவூர் கோட்டையில குதித்து பானுமதிய காப்பாத்தினத தவிர ,இந்த ஜெயலலிதா இவங்க புரட்ச்சித்தலைவி ,ஆமா ரஷ்ய புரட்ச்சி , பிரென்ச் புரட்ச்சி மாதிரி இவங்க புரட்ச்சி பண்ணி இந்தியாவுல இருந்து தமிழ்நாட்டுக்கு சுதந்திரம் வாங்கை கொடுத்தாங்க , இவங்க பின்னாடி ஒரு கூட்டம் , இப்படி இந்த மாநிலத்துல இருக்குற எல்லா அரசியல் வியாதிகள (ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்ல ) பற்றியும் எழுதலாம் ,உமக்கு இது போதும்னு நெனைக்கிறன் . இந்த மாநிலத்துல சட்டத்தாலையும் , ஆதிக்க அரசியல் வாதிகளாலும் , புறக்கணிக்கப்பட்டும் வன்ஜிக்கப்பட்டும் வளர்ச்சியடையாமல் இருந்த எங்கள் சமுதாயத்திற்கு இட ஒதுக்கீடு பெற்றுத்தந்த எங்கள் அய்யாவுக்குநாங்கள் அடிமைகள் அல்ல , எங்கள் அய்யா எங்கள் சமுதாயத்திற்குநாங்கள் வணங்கும் கடவுளுக்கு அடுத்த இடம் . மா.குமார் ,விழுப்புரம் .

 9. மக்களே மறந்து போன கட்சியை மீண்டும் சாதி வெறியேற்றி, தூக்கி நிறுத்தலாம் என்று நினைத்திருப்பார்! அரசியல்வாதிகள் ஆற்றோடு போனாலும் ஆதாயமில்லாமல் போகமாட்டார்கள் ! இப்பொதெல்லாம் பா ம க விற்கு சோ வக்காலத்து வாஙகுவதை கவனீத்தீர்களா? விஜயகாந்த் கையை பிசைந்து கொண்டு இருக்கிரார்! திருமா அம்மாவை தன்சமடைவார்! எல்லாமே அரசியல்தான்! வினவு ஆசைப்படுவது போல, அம்மா ப ம க வின் சொத்துக்களை முடக்குவாரா? ஆதிக்க சாதியினரை எந்த அரசியல் கட்சியும் பகைத்து கொள்ளாது என்பதெ நிதரிசனம்!

 10. ஆதிக்க சாதிக்கு அடிப்பனிவதே இந்த அரசாங்கத்தின் வேலையே ஆகவே இந்த அரசை மாற்ற முயற்சிக்காமல் முற்போக்கு பிற்போக்கு என்று பேசும் அரசைநம்பி பிரி யோஜனம் இல்லை.

 11. “மாமல்லபுரம் முழு நிலவு கூட்டத்தில் சாதித் திமிர் கக்கிய கொங்கு வேளாளக் கவுண்டர், பார்ப்பனர், செட்டியார், கோனார், தேவர் முதலிய காமடி பீஸ்கள் சட்டையைக் காணாம், ஜட்டியைக் காணோம் என்று தலைமறைவாக ஓடியபடியே இருக்கிறார்கள். யாரும் ராமதாஸ் கைது குறித்து மூச்சே விடவில்லை என்பதும் முக்கியம்.”

  யார் சொன்னது மூச்சு விடவில்லை என்று போய் மக்கள் தொலைகாட்சியை பாருங்கள் அதில் நீங்கள் மேற்குறிப்பிட்ட அணைத்து ஆதிக்க சாதியை சேர்ந்த தலைவர்களும் கண்டன குரல் எழுப்பி இருக்கிறார்கள்….. சாதிகள் இருப்பதில் தவறு இல்லை அது வக்கிரம் அடைய கூடாது அது தான் முக்கியம்…. அந்த முழு நிலவு கூட்டத்தில் சொன்னது போல தாழ்த்த பட்ட சாதியை சேர்ந்த ஒரு சிலர் ஆதிக்க சாதி பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொள்ளவது என்ற செய்தி தமிழ்நாட்டில் நடக்கும் உண்மையான விஷயம் தான்…

  • இவனுகலுக்கு வன்னியர்களை பற்றி பேசாவிட்டால் இவங்களை யாரு மதிப்பாங்க என்று பயம் உபயோகமில்லாதவங்க. நாம முன்னேறுவதைப் பத்தி பேசலாம்

 12. பாமக தலைவர் கைதை கண்டித்து ஒபாமா உண்ணாநிலை.சிகாகோ நீதிமன்றம் ராமதாஸ் கு பிணை .ராமதாஸ் க்கு ஆதரவாக ரஷ்ய நாடாளுமன்றம் தீர்மானம்…………..ராமதாஸ் கைதை கண்டித்து அமெரிக்காவில் 50 வானூர்திகள் எரிப்பு………………மக்கள் தொல்லைக்காட்சி

  அப்படியே இந்த அரசகுமாரையும் உள்ள தூக்கி போட்டா நல்லா இருக்கும் ஜெயா மேடம்.
  சங்கரச்சரியனுக்கும் கமலுக்கும் அடிச்ச ஆப்ப விட இது சூப்பர் ஆப்பு.நான் இது வரை ஜெயாவுக்கு சப்போர்ட் பண்ணினது இல்லை.ஆனா இதுல உள்குத்து இருந்தாலும் ராமதாஸ் பார்த்தா ஒரே காமெடி யா இருக்கு.
  அய்யா பெருமாள் தேவன் அடிமை ஜாதினா என்ன னு சொல்றீயளா.திருநெல்வேலி ல 96 கலவரத்துல ஓட ஓட விரட்டி வெட்டுணோமே அதெல்லாம் மறந்து போச்சா?

  அடி உதவுற மாதிரி அண்ணன் தம்பி உதவ மாட்டான் ………………திரும்ப போட்டா தான் அறிவு வரும் போல ……………

  • எலேய் வினவு உன்னோட பிளாக்குல உனக்கு ஜால்ற போடுற ,உன்ன மாதிரிநாதாரிக்கு மட்டும் தான் இடம்னு விவரமா சொல்ல வேண்டியதுதானே , ஓ நாந்தான் இது சாக்கடைனு தெரியாம கால இல்ல கைய வச்சிட்டனோ !!

 13. ராமதாஸ் மீது அடுக்கடுக்காக வழக்குகள் பாய்ந்த வண்ணம் உள்ளன. ராமதாஸ் நிலைமை முன்பு சங்கராச்சாரிக்கு ஏற்பட்ட நிலைமை போன்று மாறி வருகிறது. ஜெயலலிதா கவனமாக ‘சமூகப் பிரிவினருக்குள் மோதலை ஏற்படுத்த்துதல்’ போன்ற வழக்குகளுக்கு கீழ் ராமதாஸை சிக்க வைக்கவில்லை. தேவர் சாதி வெறியர்களுக்கு இதனால் இடையூறு இல்லாமல் பார்த்துக் கொள்கிறார். ஏதோ ஒரு காரணத்துக்காக பார்ப்பனர்கள் ராமதாஸையும், வன்னியர்களையும் வெறுக்கவே செய்கிறார்கள். வன்னியர் சாதி அடிப்படையில் ஒரு கீழ் சாதி என்பது கூட காரணமாக இருக்கலாம்.

  ஊடகங்கள் இந்த சாதிவெறி அற்பங்கள் கைது செய்யப்படுவதை மிகைபடுத்தி காண்பிக்கின்றன. கைது செய்யப்படும் பா.ம.க.வினர் இரண்டு பேர் அல்லது அதிகபட்சம் ஐந்து பேராக மட்டுமே இருக்கின்றனர். அரசியல் வாரிசுகளிலேயே மிகவும் கேவலமான மனிதர் அன்புமணி ராமதாஸ். ஏதோ ரொம்ப படித்தவராம். வாயில் சாதிவெறி புழுத்து வடிகிறது.

  • யார்சொன்னது பார்ப்பானுக்கு வன்னியரை பிடிக்காது என்று இவனுங்கெல்லாம் பெரிய மேதாவிங்க

 14. ராமதாசின் கைது வரவேற்கப்படவேண்டியது. மேலும் அவரும் அன்புமனியும் குருவும் குன்டர் சட்டத்தில் கைது செய்யவேண்டும். பஸ்க்ள் எரிப்புக்கு தேசிய பாதுகாப்பு சட்டத்தில் எரித்தவர்களை கைது செய்ய வேண்டும். இழப்பை அபராதத்துடன் அனைத்து செலவுகளையும் சேர்த்து வசூலிக்க வேண்டும்.

 15. ஆண்ட பரம்பரைகளின் வீரத்தைப் பார்த்து நாங்கள் விக்கித்து நிற்கும் வேளையிலே நீங்கள் நோண்டி விட்டுவிட்டீர்கள்.இருந்தாலும் நாங்கள் சாம்ராஜ்யத்தை அவர்களிடமே ஒப்படைக்க முடிவு செய்துவிட்டோம்.எங்கள் அரண்மனையின் அத்தாணி மண்டபத்தில் ஜெயலலிதா வந்து நாடியம் ஆடப் போகிறாரா இல்லையா பார்க்கலாம்.ரத,கஜ,துரக,பதாதிகளுடன் நாங்கள் மாமல்லபுரத்தில் எங்கள் வெற்றிக் கொடியை நாட்டவில்லையா? இதற்க்குப் போயா மஹா ராணி அவர்கள் மன்னரையும்,சின்ன மான்னரையும் காட்டு சிங்கத்தையும் சிறையிலடைப்பது?பாவம் மஹாராஜாவின் குடும்பம் எப்படி கண்ணீர் வடிக்கிறது பாருங்கள்! என்ன? குறு நில மன்னர்களெல்லாம் ஓடிவிட்டார்களா?சேச்சே நன்றாகத் தேட்டிப் பாருங்கள் அம்ம்மாவின் அந்தப்புரத்தில் ஒளிந்திருப்பார்கள்.ஹுக்கும்!

 16. அம்மா அடிச்ச ஆப்ப புடுங்க முடியாம ஆன்ட பரம்பரை தவிக்கின்றது

 17. ஜாதி மோதலை உருவாக்கி இரு இன மக்களுக்குமிடையே பூசலை வரவைத்து குளிர் காய்ந்து கொண்டிருப்பவர் ஜெயலலிதாதான். பிணை கொடுக்கப்பட்ட பிறகும் எப்பொழுதோ பேசிய பேச்சுக்காக தற்போது கைது நாடகம் எதற்க்காக தமிழ்நாட்டில் அமைதியை விரும்பாத முதல்வர் இருப்பது வேதனையாக இருக்கிறது. தற்போது நடந்துவரும் கலவரங்களுக்கு காரணம் முதல்வரின் அரசியல் முதிர்ச்சியின்மையே. மாற்று கட்சியினரை பழிவாங்கும் போக்கை கைவிடவேண்டும். காவல் துறையை ஏவல் அடிமைகளாக பயன்படுத்துவது வெட்கி தலைகுநியவேண்டிய செயல். அதிகார துஷ்பிரயோகத்தின் உச்சகட்டம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க