முகப்புகட்சிகள்இதர கட்சிகள்பாமக முகத்தில் கரி பூசிய திவ்யா !

பாமக முகத்தில் கரி பூசிய திவ்யா !

-

ருமபுரி நாய்க்கன் கொட்டாயைச் சேர்ந்த திவ்யா-இளவரசன் தம்பதியினர் பற்றிய வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜூலை 1-ம் தேதி நடந்தது.

திவ்யா, தேன்மொழி
சென்னை உயர்நீதிமன்றத்தில் திவ்யாவும் அவரது தாயார் தேன்மொழியும்

திவ்யாவின் தாய் தேன்மொழி தாக்கல் செய்திருந்த ஆட்கொணர்வு மனுவின் மீது ஜூன் 6-ம் தேதி நடந்த விசாரணை ஜூலை 1-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டிருந்தது. அன்றைக்கு நீதிபதிகள் வழக்கை தமது அறையில் விசாரிக்க விரும்புவதாக சொன்னார்கள். அதன்படி, இருதரப்பு வழக்கறிஞர்களை வெளியில் இருக்கச் சொல்லி விட்டு எம் ஜெய்சந்திரன், எம் எம் சுந்தரேஷ் என்ற இரு நீதிபதிகளும் நீதிபதியின் அறையில் திவ்யாவின் கருத்தை கேட்டார்கள்.

திவ்யா சொன்ன கருத்துக்கள் பற்றிய விபரங்கள் பின்னர் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டன.

தான் இன்னமும் இளவரசனை காதலிப்பதாகவும், தனது தாய் தன் காதலை ஏற்றுக் கொள்வது வரை தாயுடன் இருக்க விரும்புவதாகவும் திவ்யா நீதிபதிகளிடம் தெரிவித்திருக்கிறார். கடந்த நவம்பர் மாதம் இளவரசனுடனான திருமணத்துக்குப் பிறகு தந்தை நாகராஜனின் தற்கொலை, அதைத் தொடர்ந்து நடந்த கலவரங்கள் தன்னை பெரிதும் பாதித்ததாகவும், அதே போல தனது தாயையும், தம்பியையும் இழந்து விடுவோமோ என்று பயப்படுவதாகவும் சொல்லியிருக்கிறார்.

இளவரசன் தன்னிடம் அன்பாக இருந்ததாகவும், அவரது பெற்றோர் தன்னை நல்ல முறையில் நடத்தியதாகவும் அவர் கூறியிருக்கிறார். இருந்தாலும், இளவரசனை பார்க்கும் போதெல்லாம், தனது தந்தையின் மரணம் நினைவுக்கு வந்ததாக சொல்லியிருக்கிறார்.

நீதிமன்றத்துக்கு வந்திருந்த இளவரசன் திவ்யாவை சந்திக்கவோ, அவருடன் பேசவோ முடியவில்லை. “திவ்யா எப்போது திரும்பி வந்தாலும் அவருடன் வாழ்வேன்” என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

குடும்பத்திலும், சமூகத்திலும் இவ்வளவு களேபரங்களுக்கு பிறகும் தமது காதலில் உறுதியாக இருக்கும் திவ்யாவும் இளவரசனும் சாதி, சொத்து, அரசியல் என்று காதலை கொச்சைப்படுத்தும் பாமக கும்பலின் முகத்தில் கரியை அள்ளி பூசியிருக்கின்றனர். அந்தக் கூட்டம் இப்போதும் ஒன்றும் தெரியாத அப்பாவிகள் போல வேஷம் போடுகிறது.

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸின் மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி, திவ்யா-இளவரசன் விவகாரத்தில் கட்சிக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றும், இது இரண்டு தனி நபர்களுக்கு இடையேயான விவகாரம் என்றும் கூறியிருக்கிறார். இந்த வழக்கில் எந்த வகையிலும் தலையிட வேண்டாம் என்று தனது கட்சிக்காரர்களிடம் கூறியிருப்பதாகவும் நடிக்கிறார். தலித் இளைஞர்கள் வன்னிய சாதி பெண்களை காதலிப்பதை எதிர்த்து மாநிலம் முழுவதும் பிரச்சாரம் செய்த போது ராமதாசுக்கு இந்த ஞானம் உதிக்காமல் போனது ஏனோ!

திவ்யா-இளவரசன் விவகாரத்தில் ஆரம்பத்திலிருந்தே தலையிட்டு, நடந்த கொடூரங்களுக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ காரணமாக இருப்பவர்கள் பாட்டாளி மக்கள் கட்சியினர்தான். திவ்யாவின் தந்தை நாகராஜனை தற்கொலைக்கு தூண்டிய வன்னியர் சாதி வெறி, தாழ்த்தப்பட்ட மக்களின் குடியிருப்புகளை அடித்து உடைத்தது, திவ்யாவின் தாய் தேன்மொழியின் சார்பில் வழக்கு தாக்கல் செய்து அவரை இளவரசனிடமிருந்து பிரித்தது என்று அடுத்தடுத்த அராஜகங்களுக்கு மூல காரணம் அந்த கட்சியினர்தான்.

இந்த நீதிமன்ற வழக்கிலேயே இதை நிரூபிக்கும் ஆதாரங்கள் பல உள்ளன.

 • திவ்யாவின் தாயார் தேன்மொழியின் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு நடத்துவது பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் க பாலு.
 • ஜூன் மாதம் நடந்த நீதிமன்ற விசாரணையைத் தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்தவரும் தருமபுரியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் செந்தில் என்பவர் திவ்யாவின் வீட்டுக்குப் போனதாக அந்தக் கட்சியைச் சேர்ந்த இணையப் புள்ளி அருள் தனது பதிவில் கட்டுரை வெளியிட்டார்.
  முற்போக்காளர்களும், அரசியல்வாதிகளும் சேர்ந்து திவ்யாவின் கல்விக்கு இடையூறு செய்து விட்டதாகவும், அந்த சிறுமியை படிக்க விடுங்கள் என்று கேட்டுக் கொள்வதாகவும் நீலிக் கண்ணீர் வடித்திருந்தது அந்தக் கட்டுரை.
  டாக்டர் செந்தில் பாட்டாளி மக்கள் கட்சியிலிருந்து விலகி விட்டாரா, அல்லது அன்புமணியின் கட்டளை அவரை கட்டுப்படுத்தாதா என்று விசாரித்து அருள் ஒரு பதிவு வெளியிட வேண்டும்.
 • அருள் தனது வலைப்பதிவில், ஜூன் மாதம் நடந்த நீதிமன்ற விசாரணையின் போது தானும் உடனிருந்ததாகவும், திவ்யா தானாகவே தாலியை கழற்றி எறிந்து விட்டதாகவும், அவர் தனது காதலனுடன் சேர்ந்து வாழ விரும்பவில்லை என்றும் அறிவித்திருந்தார்.
  இந்த வழக்கில் அருளின் தலையீடு அன்புமணி ராமதாஸின் முடிவுக்கு எதிரானதா இல்லையா என்று விளக்கியும் அருள் ஒரு பதிவு வெளியிடலாம்.

இந்த வழக்கில் தொடர்புடைய தனிநபர்களான திவ்யா, இளவரசன், இளவரசனின் பெற்றோர் அனைவரும் பொறுப்பான, கௌரவமான முறையில் நடந்து கொண்டிருக்கிறார்கள்.

திவ்யாவின் தாய், வன்னிய சாதி அரசியல் அழுத்தத்தால் மகளின் வாழ்க்கைக்கு எதிராக நிற்கிறார். பாமக போன்ற அமைப்புகளால் தூண்டி விடப்பட்ட சாதி வெறியால் திவ்யா, இளவரசன் போன்ற இளைஞர்கள் தமது விருப்பத்துக்கு ஏற்ற வாழ்க்கையை அமைப்பது தடை செய்யப்படுகிறது.

திவ்யா-இளவரசன் என்ற இரு இளைஞர்களின் வாழ்க்கையையும், பல நூறு தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வாதாரங்களையும் குலைத்து, சாதி வெறியைத் தூண்டுவது மருத்துவர் ராமதாசும் அவரது கட்சியினரும். உழைக்கும் வன்னிய மக்களை தவறாக வழி நடத்தி அரசியல் ஆதாயங்களை குவிக்கத் துடிக்கும் அந்த கும்பலை அரசியல் அரங்கிலிருந்து ஒழித்துக் கட்ட வேண்டியது ஜனநாயக சக்திகளின் கடமை.

மேலும் படிக்க

 1. //திவ்யாவின் தாயார் தேன்மொழியின் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு நடத்துவது பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் க பாலு.//

  இளவரசனுக்காக வாதாடுவது யார், ‘கவுண்டனை வெட்டு, அவன் பொண்டாட்டியை கட்டு’ ன்னு சொன்னர்வர்தானே?

  • அதை போய் ரஜினிகாந்திடம் கேளுங்க ஆனந்த், ஆனா நீங்க இங்கே யாருக்காக வாதாடுகிறீர்கள் என்பதை சொல்லுங்கள்.

   • மற்றவர் பெண்கள் எல்லாம் நம் இல்லம் அலங்கரிக்க வேண்டும், என மேடை போட்டுப் பேசியவரை, வினவு கண்டிக்கும் எனும் எதிர்பார்ப்பு ..பொய்யானதே?! அந்த மேடையில் வாய் மூடி நின்ற பெரிய மனிதர்கள் போலவே வினவு தளம், காதைப் பொத்திக் கொண்டதோ?

 2. தற்போது இங்கே முடிவு எடுக்கவேண்டியது திவ்யாவின் தாயார் தான்

  தனது ஜாதி தான் பெரிது என்று நினைத்தால் தனது மகளை தன்னுடன் வைத்து ஒரு ஜடம் போல் வளர்த்து கொள்ளலாம்

  தனது மகளின் வாழ்க்கை தான் பெரிது என நினைத்தால் மகள் ஏதோ அவசரபட்டு தவறு செய்து விட்டாள், தற்போது திரும்பி வந்துள்ளாள், திவ்யாவையும் இளவரசனையும் சேர்த்து வைத்து அவர்களுக்கு நல்லதொரு வாழ்க்கையை அமைத்து கொடுத்து ஜாதிய வெறி பிடித்த சாக்கடைகளின் முகத்தில் கரி பூசுவது தான் சரியாக இருக்கும்.

 3. இருவர் காதலுக்குள், இரு குடும்பத்தினர் சம்பந்தப்பட்ட பிரச்சினைக்குள் சாதி சங்கங்கள் தலையிட்டு சாதி பிரச்சினை ஏற்படுத்துவது தவறு.

  திவ்யா, இளவரசனை சுத்தியிருக்கும் சாதி வெறியர்கள் விலகி ஓடினாலே அனைத்தும் சரியாகிடும்.
  அந்த தம்பதிகள் இணைந்து வாழட்டும்.

 4. அடடா…. அப்டியா…. அருமையான காதலை பிரித்துவிட்டனரே சன்டாள பாவிகள்.நீங்க ஏன் ஒரு போராட்டம் நடத்தக்கூடாது?

 5. தமது காதலில் உறுதியாக இருக்கும் திவ்யா இளவரசனின் உறுதிக்கு முன் சாதி வெறியைத் தூண்டுவது மருத்துவர் ராமதாசும் அவரது கட்சியினரும் மட்டும் இன்றி வலைப்பதிவில் பொய் பிரச்சாரம் செய்யும் அருள் உள்பட தூக்கு மடினு சாகவேண்.

  • இப்ப நீங்கதான் அவதூர செய்தி வெளியீடு வாசகர்களை குழப்பியதற்கு தூக்குமாட்டி சாகனும் உங்க மூஞ்ச்ல்தான் கரி பூசிகிடிங்க

  • அப்ப ஒங்க திருமா என்ன பண்ணுவாரு…??? ஒவ்வொரு வீட்டிலேயும் போயி அங்க இருக்கிற பெண்ணுங்கள காதலிக்கிறமாதிரி நடிச்சி கொண்டுலிட்டு வாங்கடா (நம்ம முஸ்லீம் பாய் வீட்டுல போயி ஒன்னும் பண்ணீடாதீங்கடா )கட்ட பஞ்சாயத்து விஷயத்த நான் பாத்துக்கிறேன்னு சொல்லுவாரா…..

 6. என்ன தான் சொல்லவரிங்க பாஸ். சில நாட்கள் முன் ராமதாஸ் மற்றும் பா.மா.கா வை சேர்ந்தவர்கள், அவங்க அம்மாவையும் தம்பியையும் கொன்னுடுவேன்னு மிரட்டினர்கள் அதனால் தான் அந்த பொண்ணு அம்மா கூட போச்சுன்னு எழுதுனீங்க, இப்ப முகத்துல கரிய பூசினதா எழுதுறீங்க? ஒருவேளை இப்போ திருமாவளவன் பாதுகாப்புல இருக்கா? என்ன கொடுமை சரவணா?

  அடுத்தவன் வீடு பற்றி எறிந்தால் தீய அனைக்க உதவி பன்னலனாலும் மண்ணெண்ணைய ஊத்தாம இருங்கடா. அவங்க ரெண்டு வீட்டு பிரச்சனைய அவங்களே பாத்துப்பாங்க உங்க அரசியல நடத்த வேற இடத்த பாருங்க. நம்ம முற்போக்கு மற்றும் பிற்போக்கு கருத்துக்களையும் பொது விசயத்துல காமிங்க.

  என்ன பன்றது வீடு தொறந்து இருந்தா எட்டி பாத்து கருத்து சொல்றது நம்ம பழக்கமாச்சே//.

  • கருத்துச் சொல்லலாம். ஆனால் எப்பொழுதும் வினவு மேல் துவேஷ மனப்பான்மைக் கொண்டே பதிவை படிக்காமல் ஒழுங்கா முழுசா படிச்சு கருத்து சொல்லலாமில்லையா

  • என்னா ஒரு நடு நிலையோட பேசுறாரு சரன். எரியிற வீட்ல எண்ணெயை ஊத்துறதை பத்தி நத்தம் காலனியில தலித் மக்கள் வீட்டில் புகுந்து திருடிய, வீட்டைக் கொழுத்திய குச்சுக்கொழுத்தி பயல்கள் பேசக்கூடாது

 7. வினவிற்கு ஒரு கேள்வி: ஓரு இஸ்லாமிய ஆண், ஒரு தலித் பெண்ணை மத மாற்றமின்றி கல்யாணம் செய்து கொண்டால், அது உங்கள் பார்வையில் சரியா? அதற்கு இஸ்லாமியர்கள் எதிர்ப்புத் தெரிவித்தால் அதைப் பற்றி வினவில் உணர்ச்சிப் பொங்க எழுதுவீர்களா?

  • இரு காதலர்களின் உணர்ச்சிகளைவிட பார்ப்பனீயத்தின் உணர்ச்சி மேலானதா?

  • ஆவனுங்க பேசமாட்டானுங்க…வெட்டிடுவானுங்க…அதுமட்டுமில்ல இங்க சில முட்டாள்கள் பேசுறமாதிரி ஜாதி இல்ல, மதமிலலேன்னு பேசுறவனுங்களையும், வினவுமாதிரி எழுதுறவனுங்களையுந்தான்…..

 8. டாக்டர். செந்திலும் அன்புமணி ராமதாசும் ஒரு வகுப்பு தோழர்கள்

 9. வன்னியர்கள் வினவை கண்டிக்க முன்வர வேண்டும். வினவின் சாதி வெறி அதிகமாகி கொண்டு வருகிறது.

  • பஸ்சை கல்லெறிஞ்சு ஒடைச்சதுக்காக அரசாங்கம் உங்ககிட்ட வசூல் பன்ன வருது மாமா, அதே போல கல்லடி பட்டு காயம்பட்டவர்களின் சொந்தக்காரங்களும், உயிர் இழந்தவர்களின் உறவினர்களும் உங்களை தேடிக்கிட்டு இருக்காங்களாம் ஜாக்ரதை.

   • சந்தோஷமா பணத்த கொடுப்போம். என்ன , நாடக காதல் மூலமா நீங்க கட்ட பஞ்சாயத்து பண்ணி மிரட்டி பணம் புடுங்குவது இனிமே நடக்காது.

    பொண்ண பெத்தவன் இப்பதான் நிம்மதியா தூங்குறான். இந்த நிம்மதிக்காக எவ்வளோ வேணா பணம் கொடுக்கலாம்.

    • நீங்க கட்ட பஞ்சாயத்து பண்ணி மிரட்டி பணம் புடுங்குவது இனிமே நடக்காது———–… கட்டபஞ்சாயத்து பண்ணி சம்பாதிச்ச பணத்த அவனுங்க கிட்டேயிருந்து எப்ப புங்குறது படையாச்சி

 10. Intercaste marriages should be supported by all to eradicate casteism from our home land. These marriages may be an outcome of love or arranged marriage is not a matter of concern. PMK as a political party is opposing intercaste marriage which is not at all good for tamils as a race. Dr Anbumani and Dr Ramadoss should understand this and develop vanniyars in that angle. These two leaders are taking the uneducated vanniyars to ransom by poisoning their minds. This should be condemned.

 11. தருமபுரி காதல்: இனி ஒருபோதும் இளவரசனுடன் போகமாட்டேன்- செல்வி. திவ்யாவின் வெளிப்படையான முதல் பேட்டி…புரட்சியாளர்கள் கவனத்திற்காக முழு காணொலி!

  http://arulgreen.blogspot.com/2013/07/Dharmapuri-Divya-break-up-video.html

  • இந்த விவகாரத்தில் கட்சிக்கு எந்தத் தொடர்புமில்லை என்று சின்ன பிராடு சின்னைய்யா சொன்னது முழுப் பொய் என்பதை அவரது அடியாள் அருளே இங்கே வாக்குமூலம் தருகிறார். அந்த வகையில் சின்ன பிராடு முகத்தில் அருளே கை நிறைய கரி பூசியிருக்கிறார். நன்றி

   • திருட்டுமாமா பிளான் பண்ணுன நாடக காதல் இனிமேல் வேலைக்காகாது. அய்யாவின் கருணையால் பல பெண்களின் வாழ்க்கை காப்பற்றபட்டு விட்டது.

    வாழ்க அய்யா … வாழ்க குரு … வாழ்க சின்ன அய்யா.

  • நாம்ம எல்லோரும் சேர்ந்து தானே மச்சான் இளவரசியையும் அவங்க அம்மாவையும் அப்படி சொல்லச் சொன்னோம், அதையும் சொல்லிடுங்க இல்லைன்னா நம்பளை பொய் சொல்றவங்கன்னு சொல்லுவாய்ங்க.

 12. தருமபுரி காதல்: இனி ஒருபோதும் இளவரசனுடன் போகமாட்டேன்- செல்வி. திவ்யாவின் வெளிப்படையான முதல் பேட்டி…புரட்சியாளர்கள் கவனத்திற்காக முழு காணொலி!

  http://arulgreen.blogspot.com/2013/07/Dharmapuri-Divya-break-up-video.html

  தர்மபுரி சம்பவத்தில் தொடர்புடைய காதல் நிகழ்வில் சேர்த்துப் பேசப்படும் செல்வி. திவ்யா, “நான் செய்தது தவறு என்பதை உணர்ந்து அம்மாவுடன் வந்துவிட்டேன். இளவரசனுடன் இனி எந்த சூழ்நிலையிலும் சேர்ந்து வாழத் தயாராக இல்லை. இளவரசன் தரப்பு வழக்குரைஞர் ரஜினிகாந்த் ‘என் அம்மா இளவரசனை ஏற்றுக்கொண்டால் நான் வாழத்தயாராக இருப்பதாக’ தவறான செய்தியை பரப்புகிறார்” என வெளிப்படையாகக் குற்றம் சாட்டியுள்ளார்

  • இப்படி வெட்கம் கெட்ட முறையில் ஒரு அப்பாவிப் பெண்ணை மிரட்டி ஆனந்தம் கொள்ளும் அருள் அவர்களே நீங்களெல்லாம் மனிதர்தானா?

   • அருள் அவர்களே: வினவிற்கு சரியான செருப்படி கொடுத்ததற்கு மிக்க நன்றி..!!நீங்கள் அந்த பேட்டியின் லிங்க்-கை கொடுக்காமல் விட்டுருந்தால், உண்மை வெளியே வந்திருக்கவே வந்திருக்காது…!!

    வினவின் நேர்மை, அவர்கள் நான் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்காமல் மழுப்பியதிலிருந்தே தெரிகிறது….

    They apply one yardstick for Hindus and different one for Muslims. Will Vinavu stand with Divya if she had been a Muslim girl, who also refused to convert?

    • //Will Vinavu stand with Divya if she had been a Muslim girl, who also refused to
     convert?//

     நீங்க வினவை ரெகுலரா படிக்கிற ஆள் இல்லன்னு தெரியுது. அதான் அல்லு சில்லறங்களுக்கெல்லாம் அவங்க பதில் கொடுக்கறதில்ல. விரல் சூப்புரத விட்டுட்டு இஸ்கூலுக்குப் போயி ஒழுங்கா பாடம் படி மாமு

     • //நீங்க வினவை ரெகுலரா படிக்கிற ஆள் இல்லன்னு தெரியுது.//

      Correct. I am not a regular reader of Vinavu. But from whatever i have read, i have felt that they are biased against Hindus. Hence i asked that question. My question to you Saravedi is: Why are you replying on their behalf? And there was also NO நேர்மை in your response. You could have atleast ANSWERED the question instead of just REPLYING. Let them now answer and let them share their opinion in front of ALL the users transparently. What is there to fear if they are applying the same yardstick and STAND for LOVE Marriages…!!

   • இப்படி உண்மைக்கு புறம்பாய் கட்டுரை எழுதி பத்திரிக்கை விபச்சாரம் செய்யும் வினவு என்ன தெய்வ சாதியா….

    இதை போன்ற பொய் பிரச்சாரம் சாதி வெறியன் ராமதாசையும் அவன் அடியாள் காடுவெட்டியையும்…இண விடுதலை போராட்ட தியாகிகள் என்ற நிலைக்கு உயர்த்தும்….

    …நீ ஆணி புடுங்கனது போதும் மூடு

    • நீ மூடு ராசா, நீயும் நானும் என்ன ஒசந்த சாதியா ? நாம எல்லாம் சூத்திரப் பயலுக என்பது மறந்து போச்சா, பறையனுக்கும் ஒனக்கும் என்னடா வித்தியாசம் ?

  • அருள் , மிக்க நன்றி. இந்த ஆதாரத்தை பார்த்த பிறகும் , சில 7 மாத முன்னாள் குழந்தைகள் உண்மையை கண்டு கொள்ள முடியாமல் தவிக்கின்றன.

   வினவு வேஷம் கலைஞ்சி போச்சு …. முகத்த எங்க வசிக்க போறாங்க ?

   • படையாச்சி நீ அந்த கூட்டத்துக்கு வந்தியா, வரல இல்ல அப்புறம் என்ன பெரிய வெண்ணெய் வெட்டி மாதிரி பேசுற, வாய மூடு. அந்த கூட்டத்துல நான், நம்ம அருள் மாமா, பாலு மச்சான் இன்னும் நம்ம சொந்தங்கள் எல்லாம் தான் கலந்துகிட்டோம். அந்த கூட்டத்துல கலந்துகிட்ட நான் தான் சொல்றேன் நம்ம சாதிக்காரனுங்க தான் இளவரசியையும் அவங்க அம்மாவையும் டார்ச்சர் பன்னி அப்படி பேச வச்சாங்க இது நம்ம சாதி மேல சத்தியம், சத்தியம், சத்தியம்.

  • அப்பா டக்கர் அருள் அவர்களே,

   உங்களுடைய பதிவு முழுவதும் செல்வி திவ்யா என்று குறிப்பிடும் நீங்கள் முதலில் அவர் திருமதி.திவ்யா இளவரசன் என்பதை இந்து நாளிதழ் வழியாக படித்து அறிந்து கொள்ளவும்.

   இல்லாவிட்டால் தமிழ்நாட்டுச் செல்வி உங்களை புரட்டி புரட்டி எடுத்து மறுபடியும் குண்டாசில் போட்டு விடுவார்…..ஜாக்கிரதை…

  • என இளவரசியை நம்ம சொந்தங்கள் எல்லாம் சேர்ந்து டார்ச்சர் செய்ததால் தான் அவர் அப்படி சொல்கிறார் என்பதை மாமா அருள் மறைக்க முயல்கிறார், நாங்கள் எல்லாம் சத்திரிய குலம் என்பதால் சத்தியத்துக்கு கட்டுப்பட்டு பொய் பேசக் கூடாது என்று நான் இந்த உண்மைகளை சொல்கிறேன். நாங்க தான் அப்படி இளவரசியை கட்டாயப்படுத்தி பொய் சொல்லச் சொன்னோம் அதனால தான் இளவரசி நிதானமாக பேசாமல் அழுதுகிட்டே பேசினார். இது தான் உண்மை.

 13. நீங்களெல்லாம் புகுந்து குட்டையை குழப்பாமல் இருந்தாலே இந்த மேட்டர் செட்டில் ஆகிவிடும்…

  • ஆமா நம்ம சாதிக்காரனுங்களும், பா.ம.க வும் குட்டையை குழப்பாமல் இருந்தாலே மேட்டர் செட்டில் ஆயிடும்.

 14. அட என்னங்க மாத்தி மாத்தி பேசுறீங்க. திவ்யா அப்பா செத்ததால சேர்ந்து வாழ முடியல. அம்மாவுக்காக வாழ போறேன்னு சொல்றாங்க. இது உங்களுக்குதான கரிப்பூச்சு. அது எப்படி பா.ம.க னு சொல்றீங்க?

  • திவ்யா தன்னோட வாயால அப்படி சொல்லியிருந்தா அது உண்மை தான் ஆனா அது வாயால நம்ம அன்புமனி, ராமதாஸ், அருள், பாலுன்னு நம்ம கட்சிக்காரங்களும் சொந்தக்காரங்களும் தானே பேசினானுங்க.

 15. வினவின் கதையெல்லாம் வீனாகிவிட்டது. திவ்வியாவின் பேட்டீ வினவின் முகத்தில் கரியை பூசிவிட்டது.

  • சிவாஜி, நம்ம திவ்யாவை இவனுங்க தாம்பா சிவாஜி ரேஞ்சுக்கு நடிக்க வச்சாங்க, அதெல்லாம் அப்பாவி பயலான ஒனக்கு தெரியாது. கூட்டத்துல காலந்துகிட்டவங்களுக்கு தான் தெரியும்.

 16. I couldnt see that Divya committed any mistake.Its her right to choose her life partner, If some one blames Divya for eloping with Illavarasan(without getting her parents approval) then its not her, its the society and Cinema/TV shows which needs to be blamed for that. Because now a days medias presenting in such a way, eloping is acceptable at this modern days.

  Drama in the court has happended bcoz of political pressure.

 17. //திவ்யா-இளவரசன் என்ற இரு இளைஞர்களின் வாழ்க்கையையும், பல நூறு தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வாதாரங்களையும் குலைத்து, சாதி வெறியைத் தூண்டுவது மருத்துவர் ராமதாசும் அவரது கட்சியினரும்//

  வினவு மட்டுமென்ன செய்கிறது? வினவின் ஒவ்வொரு பதிவிலும், சாதி வெறியைத் தவிர வேறு என்ன இருக்கிறது? எல்லாப் பதிவிலும் பாரபட்சம். எல்லாப் பதிவிலும் வக்கிரம்.

  • நீங்க பெரிய சாதி எதிர்ப்பு போராளியா பாஸ்.

 18. //இளவரசன் தரப்பு வழக்குரைஞர் ரஜினிகாந்த் ‘என் அம்மா இளவரசனை ஏற்றுக்கொண்டால் நான் வாழத்தயாராக இருப்பதாக’ தவறான செய்தியை பரப்புகிறார்” என வெளிப்படையாகக் குற்றம் சாட்டியுள்ளார்// ரவுடி அருள் போன்றோர் முன்னிலையில் பயந்து அந்த பெண் சொன்னதையும், அதே பெண் ரவுடிகளை நீதிபதி வெளியே அனுப்பிய பிறகு சொன்னதையும்: “தான் இன்னமும் இளவரசனை காதலிப்பதாகவும், தனது தாய் தன் காதலை ஏற்றுக் கொள்வது வரை தாயுடன் இருக்க விரும்புவதாகவும் திவ்யா நீதிபதிகளிடம் தெரிவித்திருக்கிறார். ” பார்க்கும் பொழுது கரி அல்ல சட்டி நிறைய பீ அள்ளி பூசப்பட்டுள்ளது தெளிவாகிறது. அருளோ வலிந்து ஓடுவதை தொடைத்தால் உண்மை என்பது போலாகிவிடும் என்று சப்புக் கொட்டிக் கொண்டே சப்பைக் கட்டுகிறார்.

 19. “நீதிபதி முன்பு ‘அம்மாவின் விரும்பியபடி அம்மாவுடன் இருப்பேன்’ என்றுதான் கூறினேன். இதை வழக்குரைஞர் ரஜினிகாந்த் ‘அம்மா விரும்பினால் அவனுடன் போவேன்’ என தவறாக மாற்றிக் கூறுகிறார்” – என்றுதான் திவ்யா கூறினார்.

  எனவே, வினவு முன்னுக்குப் பின் முரணாக பேசுவது போல – எங்களது முன்பு பயத்தில் பேசிவிட்டு, அதன் பின்னர் அவர் நீதிபதியை பார்க்கவில்லை. நீதிபதியை 1 ஆம் தேதி பார்த்தார். ரஜினிகாந்த் மீது குற்றம் சாட்டியது 3 ஆம் தேதி! முதலில் நீதிபதியை பார்த்துவிட்டு, அதன் பின்னர்தான் பத்திரிகையாளர்களிடம் பேசினார்.

  எனவே, வினவின் முகத்தில் பூசப்பட்டுள்ள கரியை தொடைக்க முயற்சிக்கவும். இன்னும் சந்தேகமாக இருந்தால் இன்றைய தி இந்து நாளிதழைக் காண்க

  “I appeared before the court today to make it clear that I am not interested in living with my husband. My appearance was necessary as my submission before the court a few days ago was completely distorted, giving the impression that I will join my husband if my mother allows”

  http://www.thehindu.com/news/national/tamil-nadu/we-have-become-incompatible-divya/article4878001.ece

  • அதே இந்து கட்டுரையில் வழக்கறிசர் சங்கரசுப்புவின் வாதத்தையும் படிக்கவும். திவ்யாவை மிரட்டி அவரது தாய், தம்பி கொல்லப்பட்டுவிடுவார்களோ என பயம் காண்பித்து அவரது வாழ்க்கையை சீர்குலைத்து விட்டு அதில் வன்னிய மானத்தை தேடும் உங்களைப் போன்றவர்களின் முகத்தில்தான் திவ்யா இன்னும் நன்றாக கரி பூசியுள்ளார். விரைவில் பாமாக மற்றும் வன்னியர் சங்கத்தின் முடிவுரை தமிழக மக்களால் – அதில் வன்னிய மக்களும் இருப்பார்கள் – எழுதப்படும்.

   • இந்து பத்திரிக்கையின் மேல் திடீர் கரிசனம்..ஆஹா?
    அடுத்து தினமலரும் புனிதப்படுத்தப்படும்?
    நமக்குப் பிடித்தவாறு செய்தி வெளியிட்டால்!

   • சங்கரசுப்பு இளவரசன் தரப்பு வழக்கறிஞர். அவர் வேறு எப்படி பேசுவார்?

    வழக்கறிஞர் சங்கர சுப்புவின் வாதத்தை நீதிபதிகள் ஏற்கவில்லை என்பதையும், சங்கர சுப்பு விரும்பினால் ‘திவ்யாவுடன் அப்போதே, உடனடியாக திவ்யாவிடம் மீண்டும் பேச’ நீதிபதிகள் தயாராக இருப்பதாகக் கூறியதை சங்கர சுப்பு ‘வேண்டாம்’ என மறுத்ததையும் கவனத்தில் கொள்ளவும்.

    • அருள்,
     செவிடன் காதுல சங்கு ஊதறது வேஸ்ட். வினவு செலெக்டிவ் செவுடன் . பா மா க வ பத்தி எவன் எப்ப தப்பா பேசுறானோ அப்ப மட்டும் (அவன் பேசுறது) கேக்கும்.

     நாடக காதல் வேறு எங்கும் நடக்காதவாறு பார்த்து கொள்வது அனைவரின் சமுதாய கடமை.

     • அந்த கடமையை செய்வதன் மூலம் கள்ளக்காதல் மட்டும் எல்லா இடத்திலும் வளர நாம் பாடுபட வேண்டும். இதுவே நமது கொள்கை.

     • sir,antha payyan sethuttan ippo.

      I dont knw if it is murder/suicide but please stop discussing it now,two families are broken now and that girl ll have to face serious public scrutiny now.

     • படை அவர்களே. திருமணம் செய்து கொண்டவர்கள் காதல் எவ்வாறு நாடகக்காதல் ஆகும். இந்த சாதிவெறி வன்னியமலங்கள் தங்கள் ஓட்டு பிழைப்பிற்கு ஒரு தம்பதியரை பிரித்து விட்டனர். உங்கள் பேச்சு உங்களுக்கே அடுக்காது.

    • திவ்யா எப்புடி பேசும் மச்சான் நாம தான் யார் கண்ணுக்கும் தெரியாத வஸ்தை வச்சு அந்த பொண்ணு வாயை நல்லா அடைச்சிட்டோமே, ஆனாலும் இதெல்லாம் நல்லதில்லை மச்சான். இந்த பாவத்துக்கு நமக்கு என்னைக்கு இருந்தாலும் தண்டனை இருக்கு, அந்த பொண்ணோட சாபம் நம்மளை எல்லாம் சும்மா விடாது, ஆனா நான் அப்ரூவர் ஆகிட்டதனால எனக்கு பாவத்தின் சம்பளம் கொஞ்சம் குறைவா தான் இருக்கும்னு சந்தோசப்பட்டுக்கிறேன்.

  • அவரது பேச்சில் முழுக்க அவரது அப்பாவை இழந்த வலிதான் தெரியுது. இளவரசனைப் பிடிக்காததால் விலகவில்லை. அவரது அப்பா வன்னிய சாதி வெறியர்களால் தற்கொலைக்கு தூண்டப்படாமல் இருந்திருந்தா இன்னிக்கு திவ்யா இளவரசன் கூடத்தான் இருந்திருப்பார். ரெண்டு குடும்பத்துக்கும் மனக்கசப்பு இருந்திருக்கலாம். அது அவுங்க பிரச்சனை. சமூக நீதி காக்க புறப்பட்ட பாமக போராளிகளே ஆறுமுகம் போல எத்தன பேரு காயடிக்கபடப் போரீங்களோ தெரியல

  • சாதி வெறி பீடித்த அருள் அவர்களே. இரண்டே நாட்களுக்குள் அந்த பெண்ணை பயமுறுத்தி மாற்றி பேச வைத்து விட்டீர்கள். நன்று. ஆனால் ஒரு தம்பதியரை பிரித்த இந்த பாவத்தை எங்கு போய் கழுவுவீர்கள். சாதி வெறி பேய் ராமதாசுக்கும் அவன் இட்ட சாணியான அன்புமணிக்கும் இப்படி காலை நக்கும் வேலை செய்கிறீர்களே. இதற்கும் வெட்கமாக இல்லையா.

 20. வினவின் சாதி வெறி அதிகமாகி கொண்டு வருகிறது.
  ஆம்.இவர் ஒரெஅடியாக வன்னியர்கலை தாக்கி எழுதுகிரார்.இதே போல் மற்ற ஜாதிகளை பற்றி எழுத தைரியம் உள்ளதா

  • அவங்க எல்லோரை பத்தியும் தான் எழுதுறாங்க, ஆனா நம்ம ஆளுங்க தானே ரொம்ப கேவலமா மட்டமா நடந்துக்கிறானுங்க. தலித்துங்க வீட்ல புகுந்து இரா திருடனாட்டம் கிடைச்சதை எல்லாம் திருடுன திருட்டுப் பயலுக நம்ப ஆளுங்க தானே கயல்விழி. அப்புறம் அதே மாதிரி தமிழ்நாட்ல இருக்க மத்த மொள்ளமாரிங்களோடயும் நம்ம மக்களை சேத்து வச்சி ஊரு பூரா கெட்ட பேரு வாங்கி குடுக்குற கும்பல் இந்த பயலுக தான். அதனால இது வன்னியர் மக்களை தாக்கி எழுதுறது இல்லைன்னு முதல்ல புரிஞ்சிக்கிங்க. அப்புறம் இந்த காடு வெட்டி குரு, அருள், அன்புமணி மாதிரி நம்ம சாதிக்கும் மக்களுக்கும் கெட்ட பேரை வாங்கித்தர்ற கம்னாட்டிகளை திட்டி எழுதுறது மட்டும் பத்தாது மத்தவங்க கை வக்கிறதுக்கு முன்னாடி முந்திக்கிட்டு நாமே இந்த பன்னாடைகளை நாலு சாத்து சாத்தனும்கிறேன்.

 21. அந்த பெண் எடுக்கும் முடிவுகள் எல்லாமே முதிர்ச்சி அற்றவைகளாகவே தெரிகிறது..முதலில் கல்யாணம் அடுத்து பிரிவு..எல்லாமே! இன்று ஒன்று..நாளை வேறென கருத்து சொல்வது என்பதும்!

  இன்று அவரின் செயலுக்கு கருத்து சொல்றவங்களை, நாளைக்கு கேலியாக்கிவிடுகிறார்.

  விலகி இருப்பதே நல்லது..!

  • இந்த சாதிவெறி பிடித்த பா.ம.வினரும், அடிப்பொடி அருளும் ஒரு விசயத்தைப் பற்றிக் கூற மறுக்கிறார்கள். திவ்யா எக்க்காரணத்தைக் கொண்டும் இளவரசனையோ, இளவரசனது குடும்பத்தினரையோ பற்றித் தவறாகக் கூறியதில்லை. ஜூன் மாதம் 8-ம் தேதி இந்துவில் வந்த கட்டுரையில் Happy with husband, but Divya joins mother ( http://www.thehindu.com/news/national/tamil-nadu/happy-with-husband-but-divya-joins-mother/article4787639.ece?ref=relatedNews ) ” Ms. Divya told The Hindu over the phone after appearing in court: “I faced life with a lot of confidence and believed that I could lead a happy and peaceful life. The caste issue was not at all on my mind [when she fell in love and later decided to marry Mr. Ilavarasan]. But the death of my father and the violent incidents that followed turned my life upside down.”

   Ms Divya said while Mr Ilavarasan had been a good husband she could not reciprocate his feelings as she was constantly haunted by the death of her father and the violent incidents that followed. “It is my own making. The thought of suicide also crossed my mind. I don’t think I can overcome these feelings and can lead a life with him.” என்று தான் கூறியிருந்தார்.

   “இளவரசன் ஒரு நல்ல கணவனாகத் தான் இருந்தார். ஆனால் என் அப்பாவினுடைய மரணத்தைத்தான் என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை, அது அடிக்கடி என் நினைவில் வந்து என்னை நிம்மதியிழக்கச் செய்கிறது” என்ற அர்த்தத்தில் தான் கூறியிருக்கிறார்.

   அவருடைய அப்பாவின் மரணத்தைத் தாண்டி பா.ம.க சாதி வெறியர்கள் தன் தாயையும், தம்பியையும் கொன்றுவிடுவதாக மிரட்டியதும் ஒரு முக்கியமான காரணமாக இருந்திருக்கும். ஏனென்றால் இளவரசன் வீட்டில் திவ்யா எந்தத் துன்பத்தையும் அனுபவித்ததாக இதுவரை கூறவில்லை. அப்படியிருந்திருந்தால் இளவரசன் மீதும் அவர் குடும்பத்தின் மீது புகார் அளித்திருக்கலாமே.

   ஜூலை 2-ம் தேதி வந்த செய்தி Divya to stay with mother till family accepts Dalit husband ( http://www.thehindu.com/news/national/tamil-nadu/divya-to-stay-with-mother-till-family-accepts-dalit-husband/article4870383.ece ) கண்டிப்பாக உண்மையாகத்தான் இருக்கும். அதன்பின்னர் பா.ம.க சாதிவெறியர்கள் அந்தப் பெண்ணை மிரட்டியிருப்பார்கள். அந்தப் பெண்ணும் தன் தந்தையை இழந்து சோகத்தில் இருக்கிறோம்; தன் தாயையும் இந்த சாதிவெறியர்கள் கொன்றுவிட்டு தற்கொலை செய்துவிட்டார் என்று கூறிவிடுவார்கள் என்று இவ்வாறு பேச ஒத்துக்கொண்டிருப்பார். சாதிவெறிக்காக பல நூறு தலித் மக்களின் குடும்பங்களின் வாழ்க்கையைச் சூரையாடியவர்கள்; சாதிவெறிக்காக கலப்புத் திருமணம் செய்த வன்னியப் பெண்களையும், ஆண்களையும் கொலை செய்த வன்னைய சாதி வெறியர்களுக்கு இதுவொன்றும் பெரிய விசயம் இல்லை என்று நினைத்திருப்பார்.

   திவ்யாவின் தந்தை நாகராசன் இறந்த போது நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் போது ” உன்னை யாரேனும் கடத்திச் சென்றார்களா? என்று கேட்டதற்கு என்னை யாரும் கடத்தவில்லை. நான் விரும்பித்தான் இளவரசனுடன் வந்தேன்” என்று கூறினார். உடனே பா.ம.க வழக்குரைஞர்கள் நாகராசனின் கொலைக்கு திவ்யாதான் காரணம் என்று ஒரு மனுத் தாக்கல் செய்தார்கள். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

   மேலும் திருமணம் நடந்து முடிந்த சமயத்தில் திவ்யாவின் அம்மா, உறவினர்கள் அனைவரும் திவ்யாயாவைத் தங்களுடன் வந்துவிடுமாறு அழைத்த போது ” அங்கே கூட்டிச் சென்று என்னைக் கொல்லத்தானே போகிறீர்கள். இங்கேயே என்னைக் கொன்றுவிடுஙகள் ” என்று கூறியிருக்கிறார்.

   ஆக இப்படித் துணிவுடன் இருந்த திவ்யாவை, அவரது அம்மைவை வைத்து மனக்குழப்பம் அடையச் செய்தது கண்டிப்பாக பா.ம.க சாதிவெறியர்கள் தான். அன்று பிரிய முடிவெடுத்ததற்கும், இன்று இப்படி மாற்றிப் பேசுவதற்கும் காரணம் கண்டிப்பாக பா.ம.க சாதி வெறியர்களின் மிரட்டல்தானேயொழிய, இளவரசனோ அல்லது அவர்களது குடும்பத்தினரோ அல்ல.

   இந்தக் கேவலமான சூழல் தமிழகத்தில் நிலவுவதை எண்ணி சனநாயக உணர்வுடைய ஒவ்வொருவரும் வெட்கித் தலை குனிய வேண்டும். முக்கியமாக வன்னிய சாதியில் உள்ள சனநாயக சக்திகளின் அமைதியால் தான் இந்த சாதி வெறிக் கூட்டத்தால் இதைச் சாதிக்க முடிந்திருக்கிறது. சனநாயக உணர்வுள்ள, முற்போக்கு எண்ணம் கொண்ட பிறப்பால் வன்னியராக இருக்கினறவர்கள் அனைவரும் பா.ம.க ராமதாசு மற்றும் பா.ம.க சாதிவெறியர்களைக் கண்டிக்காததால்தான் இவர்களால் இவ்வாறு துணிந்து செய்ய முடிகிறது.

   அன்பார்ந்த வன்னிய உழைக்கும் மக்களே, வன்னிய இளைஞர்களே, பா.ம.க சாதி வெறியர்களின் பின்னால் செல்லாதீர்கள். சொந்த சாதி மக்களுக்கே தீங்கிழைக்கும் சாதி அரசியலில் இருந்து வெளியேறி ராமதாசு உள்ளிட்ட சாதி வெறியர்களைத் தனிமைப்படுத்துங்கள்.

   • நீங்கலம் முதலில் தலித்தியம் பேசம் உங்க வேலைய பார்த்தல் சாதி பிரட்சனி தான தீரட்டும் நீங்க பேச பேச இன்னும் அதிகம் பதிகபடுவது தளித்தே நீங்கலம் உங்க பொழப்ப பார்த்த நல்ல இருக்கும்

    • நீங்க மொதல்ல தெள்ள்ள்ளிவா பேசுங்க அண்ணே.

 22. அருள் போன்றவர்கள் ஜனநாயகமற்ற முறையில் பேசுகிறார்கள். திவ்யாவை அவரது அம்மாவுடனே இருக்கவைத்து பேட்டி எடுத்து குதூகலிப்பதை விடுத்து முதலில் திவ்யாவை இளவரசனுடன் பேச அனுமதிக்க வேண்டும்.

  • இளவரசனிடம் தனிமையில் பேசுகிறாயா? என்று நீதிபதிகள் பலமுறை கேட்டபோதும், திவ்யா உறுதியாக மறுத்துவிட்டார்.

   இதில் சட்டவிரோத கணவனிடம் நாங்கள் எதற்காக பேசவைக்க வேண்டும்? இதுதான் ஜனநாயகம் என்பது கேலிக்கூத்து.

   • அம்மாவே(திவ்யாவின்) நிர்ப்பந்தத்தில் இருக்கும்போது திவ்யா மட்டும் விதிவிலக்கா. இளவரசன் திவ்யாவை தனிமையில் சந்திக்கும் முயற்சித்தால் தடங்கல் ஏற்படுத்தாமல் இருப்பீர்களா? அல்லது தடங்கலுக்கு வருந்துகிறோம் என ஜனநாயகத்திற்கு திரை போடப்படுமா.

   • அருள் மச்சான் நான் என்னா கேக்குறேன்னா நாம எதுக்காக இந்த கேச நடத்தனும், நம்ம பாலுக்கு வேற வேலையே இல்லையா, எத்தனை திருட்டு கேசு, டியல் எஸ்டேட், பஸ்சை ஒடைச்ச கேஸ்ல எல்லாம் நம்ம ஆளுங்க உள்ள இருக்கானுங்க அவனுங்கல் எடுக்காம எதுக்கு இதைக் கட்டிக்கிட்டு அழுகனும்கிறேன், அதுவுமில்லாம நம்ம சின்ன அய்யா வேற கட்சிக்கும் இதுக்கும் இனி எந்த சம்பந்தமும் இல்லைன்னு சொல்லிட்டாரு அப்புறமும் எதுக்கு இதுல தலையிடனும்னு கேக்குறேன்.

    ஒரு வேளை நீங்க கட்சில இருக்கீங்களா இல்லையா, இல்லைன்னா நீங்க தனியா ஒரு கூட்டத்தை போட்டு நீ இப்படி பேசு நான் இப்படி பேசுறேன்னு அன்புமனியும் நீங்களும் தனியா பேசிக்கிட்டீங்களா.

  • கள்ளக்காதலில் பாமக பிரமுகர் ஆணுறுப்பு நசுக்கி கொலை !
   https://www.vinavu.com/2013/07/04/pmk-leader-killed-in-love/

   உங்ககிட்ட கேட்ட கேள்விக்கு இதுவரை பதிலைச் சொல்லவில்லையே, முதலில் பதிலைச் சொல்லுங்க மாமா.

 23. பொண்ண பெத்தவன நிம்மதியா தூங்க வைத்த , ஐயாவுக்கும் , குருவுக்கும் அனைவரும் சாதி மத வேறுபாடு இல்லாம நன்றி சொல்லி வாழ்த்துவோம்.

  வாழ்க அய்யா … வாழ்க குரு … வாழ்க சின்ன அய்யா.

  • திரு படையாச்சி,பொண்ண பெத்தவர் இறந்து விட்டார்.காரணம்,அவரை திட்டமிட்டு கேவலமாக பேசியது.இதுதான் உங்களது மொழியில் பொண்ண பெத்தவன நிம்மதியா தூங்க வைத்ததா?.

  • இதுக்கு என்ன அர்த்தம் என்றால் இளவரசனை கொலை செய்த ஐயாவுக்கும், குருவுக்கும், சின்ன ஐயாவுக்கும் சாதி மத வேறுபாடு இல்லாம நன்றி சொல்வோம்.

   கொலையை ஒத்துகினாலும் ஒத்துக்காட்டியும் ஜெயாவின் போலீசு உங்க ஐயாவையும் சின்ன ஐயாவையும் கவ்விப் பிடிக்கப்போவதை தமிழக மக்கள் விரைவில் பார்க்கப்போகிறார்கள்.

 24. திவ்யாவின் நேரடி கருத்தை வீடியோவாக போட்டதற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் தொண்டர் அருளுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

  அ. திவ்யா, தான் காதலித்துதான் திருமணம் செய்து கொண்டதாக தெளிவாக சொல்கிறார். ராமதாசும், அவரது தொண்டர்களான அருள் போன்றவர்களும் நாடகக் காதல் என்று தலித் இளைஞர்களை குற்றம் சாட்டுவதறு பொய் என்பதற்கு நேரடி சாட்சி திவ்யா.

  ஆ. இதுவரை அம்மாவும் கணவனும் வேணும்னுதான் இருந்தேன் (எதுவரை? ஜூலை 1 வரை), பாமகவின் வழக்கறிஞர் அடிப்பொடிகளை விலக்கி விட்டு கேட்ட நீதிபதிகளிடம் அதை சொன்னேன். அதை ரஜினிகாந்த், திவ்யா அம்மா சம்மதித்தால் இளவரசனுடன் வாழத் தயார், என்று பப்ளிக்காக சொன்ன பிறகு நிலைமை மாறியிருக்கிறது.

  இ. எப்படி மாறியிருக்கிறது? ரஜினி சார் அப்படி சொன்னதால எனக்கு துணை யாருமில்லாத நிலை ஏற்பட்டிருக்கு, சமூக நிலைமை அப்படி இருக்கு, அதனால இனிமேல் அம்மா கூடத்தான் இருப்பேன்.

  இந்த மூணு விஷயங்களிலுமே பாமகவும் அருளும் விளக்கம் சொல்ல வேண்டியிருக்கிறது.
  – திவ்யா-இளவரசன் காதல் நாடகக் காதல் என்பது பொய் பிரச்சாரம், அதை வைத்து தலித்துகளின் வீடுகளை நாசம் செய்தது கிரிமினல் குற்றம்
  – அன்புமணி ராமதாஸ் கட்சிக்காரர்கள் ஒதுங்கி இருக்குமாறு சொன்ன பிறகு வழக்கறிஞர் பாலுவும் பசுமை அருளும் இந்த தனிநபர் விவகாரத்தில் மீண்டும் மீண்டும் தலையிடுகிறார்கள். திவ்யாவையும் அவரது அம்மாவையும் மிரட்டி தமது அரசியலுக்கு ஏற்றபடி நடக்க வைக்கிறார்கள்

  அருள் ஸ்பிரிங் போல குதிப்பதை விட்டு விட்டு அய்யாவிடமோ, சின்ன அய்யாவிடமோ இதற்கெல்லாம் பாமகவின் விளக்கங்களை கேட்டு விட்டு வந்து பதிவு போட வேண்டும்.

 25. இளவரசன் இன்று மரணமடைந்து விட்டார்.அவருக்கு என் ஆழ்ந்த அஞ்சலி.உழைக்கும் மக்களே,ஜனநாயக சக்திகளே அணி திரள்வீர் !ஆதிக்க சாதி வெறிக்கு முடிவு கட்டுவோம்.

 26. சாதி வெறியர்களின் கொடூரமான, குரூர மணம் கொண்ட அரசியல் வெறியர்களினால் எனது சகோதரன் இன்று மரணத்தை சந்தித்துள்ளான், என்னுடைய நடுங்கும் விரல்களால் எனது எதிர்ப்பை பதிவு செய்கிறேன், இதையும் டி.ஆர்.பி ரேட்டிங்கிற்காக முதல் படக்காட்சி என்று ஒரு தொலைக்காட்சி ஒலிபரப்புகிறது. ஒழிக இந்த போலி ஜனநாயகம், ஒழிக ஜாதிவெறியர்கள்,…

 27. உரிய வயதும் வரவில்லை, படிப்பையும் முடிக்கவில்லை. வேலையும் இல்லை, வருமானமும் இல்லை.

  ‘வெறும் காதல் மட்டுமே வாழ்க்கை ஆகாது’, ‘பொருளில்லார்க்கு இவ்வுலகில்லை’ என்பதை மரணத்தின் மூலம்தான் அறிய வேண்டுமா?

  எந்த ஒரு மரணமும் வருத்ததிற்கு உரியது, வருந்துகிறோம். எட்டு மாதத்திற்கு முன்பு ‘எங்கள் வீட்டில் நிகழ்ந்த எழவுக்காக ஒருவரும் அழவில்லை’ என்பதையும் நினைத்து பார்க்கிறோம்.

  • இரு கொலைகளை அவ்வளவு எளிதாக செய்து விட்டு கொஞ்சமும் வார்த்தைகளை மெல்லாமல் “வருந்துகிறோம்” என்று கூறி விட்டீர்களே அருள். சத்திரிய வீரம் என்றால் இதுதானோ.

   அந்த பெண்ணையும் சேர்த்து கொன்றுவிட வேண்டியதுதானே. அவளை வேறு ஒரு ஒன்றுமற்ற வன்னிய அப்பாவியை மணமுடிக்க நிர்பந்திப்பீர்கள். முடிந்தால் சாதிவெறி ராமதாசு வின் சொந்த பந்தங்களின் யாரையேனும் சம்பந்தம் பேச சொல்லுங்கள்.

   சாதிவெறி மலங்களே. உங்களுக்கும் ஒரு அழிவு வரும்.

  • காடுவெட்டிக்கு எழவு இருக்கு அப்ப நீங்களே கட்டிபுடிச்சிக்கிட்டு அழுகுங்க நாங்கள்லாம் அதை கொண்டாடுவோம்.

 28. //எந்த ஒரு மரணமும் வருத்ததிற்கு உரியது, வருந்துகிறோம். //

  இருட்டில் பஸ் மீது கல்லெறிந்தீர்களே அப்போது எண்ணிப்பார்த்தீரா பஸ்ஸினுள்ளே இருக்கும் மக்களின் கதியைப் பற்றி.. நீரெல்லாம் வருத்தம் தெரிவிக்கிறீர். நாடு ரொம்ப கெட்டுப்போச்சு

 29. ஆடுநனைகிறதே என்று ஓநாய்கள் அழவேண்டாம். அருள் இது உங்களுக்குத்தான்.

 30. மருத்துவர் தமிழ்குடிதாங்கியையும், அவரது கட்சியையும் தமிழத்தில் புல்பூண்டு அளவுக்கும் இல்லாமல் செய்வதே இளவரசன் (தற்)கொலைக்கு நாம் செய்யக் கூடிய பரிகாரம்.

 31. உங்க யாருக்குமே பேரோ இனிசியலோ இல்லையா ? எல்லாமே டூப்லிகேட் பெயர்ல எழுதுரீங்க , சரி அதவுடு விசயத்துக்கு வருவோம் ஏன்னா அசிங்கத்த பேசி என்ன ஆவப்போவுது , முதல்ல ஒரு விசயத்த தெளிவு படுத்திக்குவோம் சாதிவெறி சாதிவெறின்னு பேசுறீங்களே இந்தநாட்ல முதல் சாதிவெறி அரசியல்நடத்தியதே அம்பேத்கார் தான் ,நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னும் பின்னும் இந்தநாட்ல எல்லா சாதியிலும் கல்வியிலும் , பொருளாதாரத்திலும் , வேலைவாய்ப்பிலும் பின் தங்கியவர்கள் இருந்தார்கள் , ஆனா தன்னோட சாதிக்காரங்க மட்டுந்தான் கல்வியிலும் , பொருளாதாரத்திலும் , வேலைவாய்ப்பிலும் பின் தங்கியுள்ளதா மற்றவர்களை மிறட்டி தனது சாதிக்கு மட்டும் இட ஒதுக்கீடு பெற்றதுதான் இன்றுநடக்கும் அனைத்து சாதி மோதலுக்கும் ஆணிவேர் ,இதை தவிர்த்து பொருளாதாரத்தில் பின் தங்கிய அனைத்துசாதி மக்களையும் ஒன்றிணைத்து (ஆம் பொருளாதாரம் தான் ஒரு மனிதனை அடையாளப்படுத்தும் முக்கிய காரணி ) இட ஒதுக்கீடு பெற்றுத்தந்திருந்தாதால் இன்றுநாட்டு மக்கள் சமநிலையில் முன்னேறியிருப்பார்கள் , பொருளாதரத்தில் சமநிலை பெற்று இருந்தால் சாதீய சிந்தனை தானாகவே மறைந்திருக்கும் ,நீங்க சொல்லுகிற அந்த புரட்சியாளர்ன்ற வார்த்தைக்கும் அர்த்தம் இருக்கும் , அப்போ ராமதாஸ் ஏன் தன்னோட சாதிக்கு இட ஒதுக்கீடு கேட்டு போராடினார்னு கேட்களாம் சாதிவாரி இடஒதுக்கீடுனு ஆரம்பிச்சதே அம்பேத்கார்தான் . இவர் ஆரம்பிச்ச இந்த சாதி அரசியல் தான் இன்று இந்த இளவரசன் மரணம் வரையிலான அனைத்து சாதி மோதலுக்கும் அடிப்படைக்காரணி . தீண்டாமை மனித இனத்திற்கே அவமானகரமான செயல் இதில் மாறுக்கருத்துக்கு இடமில்லை , அதை ஒழிக்க கொண்டுவரப்பட்ட சட்டம் சரியானதுதான் ,ஆனால் இன்றைய அதன் பயன்பாடு தான் அந்த சட்டத்தை மற்றவர்கள் எதிர்ப்பதற்குக்காரணம் .இதில் யாருக்கும் வெட்கமில்லைநிலைதான் . பிறகு நீங்கள் சொல்லும் இந்த சாதி மறுப்பு திருமணம் , இருவேறு சமுதாயத்தை சேர்ந்ததவர்கள் திருமணம் செய்து கொண்டால் பிறக்கும் குழந்தைகளுக்கு சாதிச்சான்றிதழில் சாதி சார்ந்த சலுகைகளைப்பெற வேண்டி தான் சார்ந்த்த சாதியையே குறிப்பிடுகின்றனர் அப்புறம் எங்கே வந்தது சாதி மறுப்பு ,நீங்கள் செய்யும் குற்றங்களை மறைப்பதற்குநீங்களும் ,உங்களிடமிருந்து ஓட்டுகளைப்பெற ஆதிக்க ஓட்டு பொறுக்கிஅரசியல் வியாதிகளும் உங்களை கண்ணை மூடிக்கொண்டு ஆதரிப்பதுவுமே இந்த சாதி ஒழியாமல் இருப்பதற்கு காரணம் . எனது இந்த பதிவை நீங்கள் பதிவிட மாட்டீர்கள் என்பது எனக்கு தெரியும் .நாடு சுதந்திரமடைந்து 66 ஆண்டினைக்கடந்தும் நாடும் மக்களும் இந்தநிலையில்நீடிப்பதற்கு உங்களின் சுயனலமே ஒட்டு மொத்தக்காரணம் . மா.குமார் , விழுப்புரம் .

  • இதுவும் வெஷம் தான் ஆனா கொஞ்சம் பரவாயில்ல சாகமாட்டோம் சரி பன்னிடலாம்.

 32. வினவு என்ற பெயரை விடுதலை சிறுத்தைகள் பக்கம் என்று மாற்றவும்.வினவு என்ற தமிழ் பெயரை கொச்சைபடுத்தவேண்டாம்.மொக்கை பசங்க..

  • விடுதலைச் சிறுத்தைகள் என்கிற பிழைப்புவாத கும்பலுக்கும் வினவுக்கும் கூட இந்த அறிவாளி அருனுக்கு வித்தியாசம் தெரியல இந்த லட்சணத்துல நியாயம் சொல்ல வந்துட்டாரு போய்யா அந்த பக்கம்.

 33. உங்கள் இணையத்தில் திவ்யா இளவரசன் விவகாரத்தில் பாமாக மட்டுமே குற்றவாளி என்று கூறுவது ஒரு பக்க சார்பான கருத்து செயல்பாடாகும் இங்கு விடுதலை சிறுத்தைகள் என்ன வேடிக்கை பார்த்தார்களா…..? இந்த இரண்டு கட்சிகள் இந்த பிரச்சனையை கையில் எடுத்தே இந்த காதலர்களின் குடும்பங்கள் இன்று சிதைந்து போவதற்கு முழு காரணம் இதை தெளிவு படுத்த வக்கில்லை கருத்து கூற எவருக்கும் அருகதை இல்லை மூடிகிட்டு அவர்கள் வேலையைப் பார்த்தல் சமுதாயத்திற்கு நல்லது

  • எல்லோரும் மூடிட்டு அவங்கவங்க வேலையை பாருங்க எல்லாம் சரியா நடக்கும்னு போதனை பன்ற இந்த மகேந்திரன் போன்ற செண்டர் பார்டிகள் தான் ராமதாசை விட பிரச்சினைக்குரிய ஆட்கள் என்பது வினவு வாசகர்களுக்கு நன்றாக தெரியும் என்று நினைக்கிறேன்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க