பா.ம.க. சாதிவெறிக்கு இளவரசன் பலி
மனித உரிமைப் பாதுகாப்பு மையம்- மதுரை மாவட்டக்கிளை கண்டன ஆர்ப்பாட்டம்.
இளவரசனை காவு வாங்கிய பா.ம.கவின் சாதிவெறியைக் கண்டித்து மனித உரிமைப் பாதுகாப்பு மையம் – மதுரை மாவட்டக்கிளை சார்பாக 09.07.2013 காலை 10 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உயர்நீதிமன்றம், மதுரைக்கிளை முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மதுரை உயர்நீதிமன்றக் கிளையின் வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் மு.திருநாவுக்கரசு தலைமைப் பொறுப்பேற்றார்.
“பா.ம.கவின் சாதிவெறி இளவரசன் என்ற இளைஞனை வாழவிடாமல் பலிவாங்கியது அநாகரிகமானது, கண்டிக்கத்தக்கது. பெரியாரின் கொள்கைகள் தோன்றிய இந்த மண்ணில் இப்படிப்பட்ட சாதிக்கொடுமைகள் நிகழ்வதை நாம் அனுமதிக்கக்கூடாது. சாதிவெறிக்கு எதிராக வேறுபாடற்ற முறையில் ஒன்றிணைந்து போராடவேண்டும்” என்று முன்னணி வழக்கறிஞர் லஜபதிராய் பேசினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த வழக்கறிஞர்கள் ஷாஜி செல்லான், மோகன்தாஸ்காந்தி, மற்றும் வழக்கறிஞர்கள் அருணாச்சலம், கந்த வடிவேல், வழக்கறிஞரும் எழுத்தாளருமான ராபர்ட் சந்திரகுமார் ஆகியோர் பா.ம.கவின் சாதிவெறியைக் கண்டித்தும் இளவரசனுடைய சாவு சாதிவெறியர்களின் முகத்தில் காறி உமிழ்வதாகவும் இருந்தது என்றும் இந்த சாவு தற்கொலை என்று நம்பமுடியாத அளவிற்கு பெரும்பான்மை மக்கள் கொலை என்றே பேசுகின்ற வகையில் உள்ளது என்று தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்தனர்.
உயர்நீதிமன்ற வழக்கறிஞர், மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மதுரை மாவட்ட துணைச்செயலாளர் வாஞ்சிநாதன் பேசும் போது இளவரசன், திவ்யா திருமணத்திற்கு பிறகு, அவர்களின் வாழ்வு சிதைப்பதற்காக ராமதாசு, அன்புமணி ராமதாசு, காடுவெட்டிகுரு, தர்மபுரி வழக்கறிஞர் பாலு மற்றும் வன்னிய சாதிவெறியர்கள் திட்டமிட்டு இளவரசனுடைய மரணத்தை அரங்கேற்றியுள்ளனர் என்பதை முந்தைய நிகழ்வுகளில் இருந்து தொகுத்துரைத்தார். இளவரசனின் சாவு ஒருவேளை தற்கொலையே ஆனாலும் கூட வன்னிய சாதிவெறியர்கள் திட்டமிட்டு நிகழ்த்திய படுகொலையே ஆகும். இதற்கு காரணமான ராமதாசு மற்றும் சாதிவெறிக்கூட்டாளிகளை வன்கொடுமை கொலைவழக்கின் கீழ் கைது செய்ய வேண்டும், பா.ம.க வன்னியர் சங்கத்தை உடனே தடை செய்ய வேண்டும். கௌரவ கொலையை தடுக்கும் வகையில் இளவரசனின் மனைவி திவ்யாவுக்கு அரசு முழு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரினார்.
மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மதுரை மாவட்ட செயலாளர் ம.லயனல் அந்தோணிராஜ் பேசும் போது “அரசியல் ரீதியாக படுதோல்வி அடைந்த ராமதாசு வன்னிய சாதிவெறியைத் தூண்டி அதிலே அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறார். எனவேதான் சாதிவெறியர்களின் காட்டுமிராண்டித்தனத்தை ஏற்றுக்கொண்டு இளவரசனின் சாவுக்கு காரணமாகியுள்ளார். தமிழ்நாட்டை ஆண்ட பரம்பரையாகிய வன்னியர்குல சத்திரியர்களே மீண்டும் ஆளவேண்டும். இதை எதிர்வரும் பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களிலே வன்னியர்கள் உத்தரவாதப்படுத்த வேண்டும் என்று ஊர்ஊராக பேசிவருகிறார். அனைத்து சமுதாயப் பாதுகாப்பு பேரவை என்று ஏற்படுத்திக்கொண்டு ஆதிக்க சாதிவெறியர்களை ஒன்றினைத்து தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்த மக்களை எதிரிகளாக்கி வன்கொலை செய்து அரசியல் ஆதாயம் தேட கனவு காண்கிறார். இந்த சாதிவெறியர்களை பெரியாரின் வாரிசுகள் ஜனநாயக முற்போக்கு மற்றும் புரட்சிகர இயக்கங்களை சார்ந்தவர்கள் இதனை ஒன்று கூடி மக்களைத்திரட்டி முறியடிக்கவேண்டும். மனித உரிமைப் பாதுகாப்பு மையம் சட்டரீதியாகவும், களத்தில் நின்றும் போராடும். சாதிமறுப்பு முற்போக்குத் திருமணங்களை ஊக்குவிக்கும், இளவரசன் சாவுக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படும்வரை நமது போராட்டம் ஓயக்கூடாது” என்றும் பேசினார்.
செயற்குழு உறுப்பினர் சே.கணேஷ் நன்றியுரையாற்றினார்.
ராமதாசின் உருவப்படம் ஆர்ப்பாட்டத்தின் போது செருப்பால் அடிக்கப்பட்டு காரி உமிழப்பட்டது. 100-க்கும் மேற்பட்டவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர்.
முன்னதாக ராமதாசு கும்பலை கைது செய்யக்கோரியும், பா.ம.க, வன்னியர் சங்கங்களை தடைசெய்யக்கோரியும் மதுரை நகர் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி துண்டறிக்கைகளும் விநியோகிக்கப்பட்டன. சாதிவெறியர்களை அம்பலப்படுத்தி ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்ட முழக்கங்கள் மிகுந்த வரவேற்பை பெற்றது.
[படங்களை பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]
தகவல் : மனித உரிமைப் பாதுகாப்பு மையம்- மதுரை மாவட்டக்கிளை
அய்யா ராமதாஸ் அவர்களே இந்த இழி பிறப்புகளை மன்னித்து விடுங்கள் .
உங்கொய்யாவ பாத்து நீ வேணா பயப்படலாம்…
தோழர்கள் அல்ல…
தமிழ் நாட்டில் இருக்கும் ஓட்டுப்பொறுக்கி கட்சிகள் ஒன்றிர்க்காவது இந்த தைரியம் உண்டா?
உன் பிறப்பு இழிவானது என்பதை உன் பெயர் சொல்கிறது….You shouldn’t talk about others….
குச்சிகொழுத்திய எங்க படையாச்சி பேச்சு சத்தத்தையே காணோம்.
ராமதாஸ் மருத்துவ சிகிச்சையிலும், குரு போன்ற தலைவர்கள் ஜெயிலில் இருப்பதாலும்,,,தலித்கள் மற்றும் தலித் ஆதரவு தலைவர்களும் கொஞ்சம் அதிகமாதான் வன்னியர்களை சீண்டுகிருறீர்கள்….
தலித்களின் குற்ற சாட்டுக்கு பதில் அளிக்க கூட அந்த பக்கம் ஆளில்லை..எதிர்க்க ஆளில்லாததால், இப்படியா வறுத்து எடுப்பது ….???
அவங்க மட்டும் வெளியில் இருந்தாங்கன்னா,,அவங்க பேச நீங்க பேசன்னு……..இந்நேரம் இன்னொரு ஜாதி வெறி சண்டை நடந்து இருக்கும்…இன்னும் ஆக்ரோஷமாக….
ஏதோ பா ம கா தலைவர்கள் மேல சசெ போட்டதால, அம்மா புண்ணியம் தேடிக்கிட்டாங்க
மனிதன் உள் மிருகம்
Manetha Merukam said://அய்யா ராமதாஸ் அவர்களே இந்த இழி பிறப்புகளை மன்னித்து விடுங்கள் .//
நாங்களும் இந்த நாட்டு சோத்தை தின்னுட்டு இந்திய நாட்டுக்கே துரோகம் செய்யும் கம்யூ கும்பல்களின் தலைவன்கள் லின்கள், சே,வோக்களுக்கு செருப்படி கொடுப்போம்.
எங்கள் கோபமும் சரியானது தானே.
நீ யார்னு எங்களுக்கு தெரியும், ஒழுங்கா போய்டு மவனே. ஒன்னோட கம்யூனிச வெறுப்புக்கு இதை நீ பயன்படுத்திக்கிற, உன்னை மாதிரி எத்தனை பேரை பார்த்திருக்கோம்..
இரத்தம் ஒரே நிறம் !
//நீ யார்னு எங்களுக்கு தெரியும், ஒழுங்கா போய்டு மவனே. ஒன்னோட கம்யூனிச வெறுப்புக்கு இதை நீ பயன்படுத்திக்கிற, உன்னை மாதிரி எத்தனை பேரை பார்த்திருக்கோம்..//
இன்று பெரும்பாண்மையான பிராமணர்கள் பகுத்தறிவாதிகலாக ,காலத்திற்கு ஏற்ப மாற்றத்தை ஏற்று கொண்டவர்களாக வாழ்கிறார்கள்,பிராமணர் பிரிவிலும் காதல் திருமணம் நடைபெறுகிறது,ஆனால் யாரும் வன்முறை போராட்டம் நடத்துவதில்லை,கொலையில் ஈடுபடுவதில்லை,கிராமங்களை கொளுத்துவதில்லை,பிராமண பெண்கள் ஒருகாலத்தில் படிக்க கூடாது,விதவைகள் மொட்டை அடித்து கொள்ளவேண்டும் என்று கட்டுபாடு இருந்தது,இன்று பிராமண பெண்கள் தான் அதிகம் படிக்கிறார்கள்,மறுமணம் செய்து கொள்கிறார்கள்,கடல் தாண்டி போவது தீட்டு என்று இருந்தது,இன்று அவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று வேலை செய்கிறார்கள்,இடஒதுக்கீட்டால்,பிராமணர்களின் வளர்ச்சியை தடுக்கமுடியவில்லை,ஏன் சிலர் அசைவம் கூட சாப்பிடுகிறார்கள்,வேலை செய்யும் இடத்தில் சாதி பாகுபாடு பார்க்காமல் பழகுகிறார்கள்,உண்மையை சொல்வது என்றால் பெரியார் கொள்கைகளை அவர்கள் தான் பின்பற்றுகிறார்கள்,ஆம் இப்போதும் நாம் பின்பற்றும் விதமாக பிராமணர்கள் உயர்ந்து தான் இருக்கிறார்கள்,உயர்சாதியினர் என்று சொல்வது இதனால் தானோ,பிராமணர்களை தூற்றுவதை விட,பிராமணர்களை போல் நாமும் காலத்திற்கு ஏற்ப மாற்றத்தை ஏற்று கொண்டு ,பழைய மூடநம்பிக்கைகளை விடுத்து,சாதிபெருமை பேசுவதை விடுத்து,சாதி சண்டை போடுவதை விடுத்து நாமும் அவர்கள் வழியில் வாழ்வோம்,உயர்வோம்
உணவுக்கு இல்லாமல் சாகும் மக்கள் ஒருபுறம்: உணவை தீயில் இட்டு கொளுத்தும் பார்ப்பனீயம் மறுபுறம்………….
அதுதானே நல்ல சமூகம் ………….
……..இட்டு கொளுத்தும் “வன்னியம்” மறுபுறம்………….
பா ம க வின் மீது உள்நோக்கத்துடன் பழிசுமத்தும் வெறி பிடித்த
நாய்களே, நீங்கள் மனித குல அவமானம். நாசமா போங்க.வீட்டை எறித்தது நீ!
திவ்யாவின் தாலியை அறுத்தது நீ !
நாசமாய் போவது மட்டும் நாங்களா !
//பா ம க வின் மீது உள்நோக்கத்துடன் பழிசுமத்தும் வெறி பிடித்த நாய்களே , நீங்கள் மனித குல அவமானம். நாசமா போங்க.//
அப்படி எல்லாம் இருந்தாலும் பாப்பான் உங்களோட சம்பந்தம் வச்சுக்குவானா இல்ல சூத்திரனேன்னு சொல்லுவானா ஆனந்து..
பொழைக்கிர புள்ள எங்கவேனா போய் பொழைச்சுக்கும்,
மனுவின் மறுபதிப்பாகிறது தலித் ஆதரவு சாதிவெறி!
காட்டில் வாழ வேண்டிய காட்டுமிராண்டிகள் எல்லாம் நகரத்திற்குள் வந்து மக்களை – காதலர்களை நாசம் பன்னுகிறது.
coimthur_thambiJuly 10, 2013 at 12:32 pm
Permalink
1.1
உங்கொய்யாவ பாத்து நீ வேணா பயப்படலாம்…
தோழர்கள் அல்ல…
தமிழ் நாட்டில் இருக்கும் ஓட்டுப்பொறுக்கி கட்சிகள் ஒன்றிர்க்காவது இந்த தைரியம் உண்டா?
— கூட்டத்தில் கோசம் போடுவ ஏன் அதே சத்தத்தை மகாபலிபுரம் கூட்டம் நடக்கும்போது அங்க பொய் பண்ணி இருக்கலமே அப்ப தேர்ந்து இருக்கும் உன் வீரம் வெட்டி பேச்சி உன் ஜாதி வெறி
சூரியனை பார்த்து நாய் குரைப்பது போல இருக்கிறது. இந்த பதிவும் அதில் காணப்படும் புகைப்படமும். இது ஒரு கையாலாகாத தனம். ஓசி சோறு திண்று உழைப்பை மறந்தவர்களின் திருட்டுத்தனமிது. உங்களின் ஒரு சில விமர்சனங்கள் எல்லொரையும் தன்னுடைய ஜாதியை உணரவைத்துவிட்டது. பட்டிதொட்டியெல்லாம் ஜாதியை பரப்பிய பெருமை உங்களை போன்றோரைதான் சேரும். அருமை மேலும் தொடரட்டும் ஜாதி ஊக்குவிப்பு போராட்டம்.
சாதீ வெறி,கட்ட பஞ்சாயத்து கும்பல் கூவுது !
//சூரியனை பார்த்து நாய் குரைப்பது போல இருக்கிறது.//
சொந்த சாதி பெண்ணின் தாலி அறுத்த ராமதாசுக்கு செருப்படி பத்தாது வேட்டிய உரிவிட்டு ஜெட்டி கூட இல்லாம தர்மபுரி முழுக்க ஓடவிட்டு அடிக்கனும்
……..இல்லாம தர்மபுரி முழுக்க ஓடவிட்டு அடிக்கனும்.”பிதா மகன் பட கிளைமாக்ஸ் மாதிரி!!!”
யாரும் இல்லாத மூத்திர சந்தில் எப்படி வேண்டுமானால் பேசலாம். எல்லோரும் இருக்கும் சந்தையிலுங்கள் குரல் ஓங்கி ஒலிக்காது. திண்டிவனம் போன்ற வடக்கு மாவட்டங்களில் போதுக்கொட்டம் போட்டு செருப்பால் அடிக்க முயற்சி செய்யுங்களேன்!…
sulukku yedukkappadum.
https://www.vinavu.com/2013/06/12/parents-fight-against-exorbitant-fees/
கட்டணம் செலுத்தத் திரண்டிருந்த பெற்றோர்களை அச்சுறுத்தி “கவர்மெண்ட் பீஸ் கட்டவர்ரீங்களா? ஏண்டா கட்ட வக்கில்லன்னா கவர்மெண்ட் ஸ்கூலுக்கு போங்கடா, உங்களால எங்க பிள்ளைங்க படிப்பு கெடுது, நாதியத்த நாலு பேர் சங்கம் வச்சிக்கிட்டு பிரச்சினை பன்றீங்களா” என்று வந்தவர்கள் கூடியிருந்த பெற்றோர்களை பார்த்து வாய்க்கு வந்த மாதிரி பேசினர். பள்ளி வாசலில் குறுக்கே நின்று கொண்டு, “என்ன வேனும் கவர்மெண்ட் பீசா போ வெளியே” என விரட்டினர். “போஸ்டரா ஒட்டுரீங்க நாதியத்த பசங்களா, நாங்க தான் இனி பெற்றோர் சங்கம், நான் தலைவர், நீ செயலாளர், நீ பொருளாளர்” என்று சொன்ன பொறுக்கி(பா.ம.க. மாவட்டச் செயலாளர் வேணு புவனேஸ்வர்) மாவட்ட செயலாலரை கண்டிக்க வக்கிலை இங்க வந்து பின்னோட்டம் .ஏங்க நீங்க எதாவது கல்விக் கொள்ளைக்கு எதிராக ஒரு போராட்டம் அறிவிச்சு நடத்தி பாருங்கள்
திரு முரளி ஒந்திரியர்,முதலில் இதற்குப் பிறகாவது சாதிவெறி எண்ணங்களுக்காக வருத்தப்படுங்கள்.சாதிவெறி எண்ணங்களை விட்டொழியுங்கள்.அதுதான் சரியானதாக இருக்கும்.அதன்றி,அங்கே பொதுக்கூட்டம் போட்டு செருப்பால் அடிக்க முயற்சி செய்யுங்களேன்!…இங்கே பொதுக்கூட்டம் போட்டு செருப்பால் அடிக்க முயற்சி செய்யுங்களேன்!…என்பது என்னைப் பொருத்தவரை முடியுமா?முடியாதா?என்பதல்ல விடயம்.நீங்கள் குறிப்பிடுகிற ஊருக்குள்ள சாதிவெறியோடு உலவிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதுதான் பொருள்.இது தேவைதானா என்பதை யோசியுங்கள்.
அவரு என்ன சொல்றாருன்னா. நல்ல பொறப்பா இருந்தா அந்த காரியத்த வட தமிழ் நாட்டுல வந்து செய் , அப்புறம் நடுரோட்டுல பிச்ச எடுத்து பொழைக்கலாம் ன்னு சொல்றார். விளங்கிச்சா ?
இன்னும் அதே சாதிவெறி!உழைக்கும் மக்கள் விடுதலைக்கான நக்சல்பாரி அரசியல் அதனை வெட்டி எறியும்.
// நல்ல பொறப்பா இருந்தா அந்த காரியத்த வட தமிழ் நாட்டுல வந்து செய் , அப்புறம் நடுரோட்டுல பிச்ச எடுத்து பொழைக்கலாம் //
உங்கள் அரசியல் பிச்சை நிலைமையைவிட இது மேலானது.
நல்ல செயல் செய்தால் நல்ல பிறப்பு.
இழி செயல் செய்தால் இழி பிறப்பு.
நக்சல்பாரி அரசியல் அதனை வெட்டி எறியும்.
i num oru sila naallla naxalite kootathaye adiyoida azhichu westbenal , chattisgar, bihar, jharkhand aiya makkala andha naiga kitta irundhu viduthala pannaiduvaana aoppuram enna naxcalbari iyakam naatupudunguvor iyakkam koopadu podatheenga
……..பிதா மகன் பட கிளைமாக்ஸ் மாதிரி தானே !!!
//திண்டிவனம் போன்ற வடக்கு மாவட்டங்களில் போதுக்கொட்டம் போட்டு செருப்பால் அடிக்க முயற்சி செய்யுங்களேன்!…//
மரு.அய்யாவிற்கு எதிராக மட்டும் போடும் கருத்துகளை பதிப்பிக்கும் நீங்கள் என்ன வெறியண்டா. எவனுக்கு கைக்கூளி நீ. உங்க நடுநிலை இதிலிருந்து வெட்ட வெளிச்சமாகிறதுடா பரதேசிங்களா
ராஜ இந்த இனையதளம் இப்படி தான்
விடு பாத்துக்கலாம்
என்னத்த பார்த்துப !!!!
//ராஜ இந்த இனையதளம் இப்படி தான்
விடு பாத்துக்கலாம்//
கொன்சம் பழசு
பா.ம.க தலைவர் ராமதாஸ்.. என்ன சொன்னார்? 10 நாட்களில் ரிலையன்ஸ் பிரஷ்-ஐ மூடா விட்டால் நடக்கிறதே வேற என்று 2007 மார்ச் 20 யில் அறிக்கை விட்டார். மார்ச் 30 ல் ரிலையன்ஸ் செல்பவர்களின் காலைத் தொட்டு போகாதீர்கள் என்று கதறுகிறார். இவர்கள் தான் மத்தியில் அங்கம் வகிக்கிறார்கள். மத்திய அமைச்சரவையில் இவரது மகன் அன்புமணி கலந்து கொண்ட கூட்டத்தில் தான் இந்த மக்கள் விரோத நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஏன் இன்று மக்களை பார்த்து போகாதீர்கள் என்று காலில் விழ வேண்டும்? அமைச்சரவைக் கூட்டத்திலேயே மன்மோகன் சிங், மற்றும் ப.சிதம்பரத்தின் காலில் விழுந்து ரிலையன்ஸ் பிரஷ்-ஐத் தடுத்து இருக்கலாமே?
பா ம க ஆதரவாளர்கள் எங்கிருந்தாலும் பதில் சொல்லவும்
பா ம கா வின் ஆதரவாளர்கள் ஒரு சிறிய கேள்விக்கு பதில் சொல்ல வக்கில்லையே
ஆனா
2016இல் ஆட்சி அமைக்கப்போகுதாம்
ELAVARASAN MARANAM,SUSIDE ENRU DOCTORS REPORT SOLKIRADU,IDAI VAITHU PMK PARTY AZHIKA NINAIKIRARKAL MARAKKANATHIL 2 VANNIYARKALAI KOLAI SEIDAVARGAL,DEVAR JAYANTHIIL KALANDU KONDA 10 DEVARALAI KOLAI SEIDARKALE…ADARKU ENNA PATHIL SOLLKIRARKAL IPPODU KOOPPADU PODUM ADIMEDHAVIGAL…
YAR JADHI VERIYARKAL ENDRU
NERUKKU NER VIVADAM SEIYA EVANUKKAVADU DIL IRUKA?
கருமம். கருமம் என்று தலையில் அடித்துகொள்ளவேண்டியுள்ளது.
பின்னூட்டம் இடும் தமிழன சொந்தங்களே, தயவு செய்து ஆபாச வன்முறை வசவுகளை விடுத்து உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். சுய விமர்சனம் செய்தால் உங்களை நீங்களே இப்படித்தான் கேவலமாக திட்டிக்கொள்வீர்களா? பின் ஏன் புற விமர்சனம் செய்யும் போது இவ்வாறு பேச வேண்டும்? விமர்சனம் என்பதை கருத்தின் மீது வைக்காமல் கருத்தை சொன்ன மனிதனை தாக்குவது என்ன நியாயம்? சாதீயம் பற்றி பேசும் போது சாதியை திட்ட வேண்டிய அவசியம் என்ன? உங்கள் பக்க நியாயத்தை நிறுவ நீங்கள் மக்களின் நியாய உணர்வுகளுக்கு அழைப்பு விடுப்பீர்களா இல்லை அவர்களை சொரணை கெட்டவர்களே என்று திட்டுவீர்களா?
வினவு என்ன சொல்கிறது:
// கருத்து மாறுபட்டை ஆணித்தரமாகவோ, ஏன் கோபமாகக் கூட சொல்லலாம். ஆனால் எல்லா விவாதத்திலும் கருத்தற்ற தனிநபர் தாக்குதல், வசைச்சொற்கள், அநாகரீக மொழிகளை தவிர்க்க வேண்டும். அத்தகைய பின்னூட்டங்கள் பகுதி அளவிலோ அல்லது முழுமையாகவோ நீக்கப்படும்
வினவு பெயரில் வரும் பின்னூட்டங்களைத் தவிர மற்றவர்களின் கருத்துக்கு அவரவரே பொறுப்பு. அது வினவு கருத்தாக புரிந்து கொள்ள வேண்டாம்
ஆரோக்கியமான விவாதங்களை வளர்க்கும் பொருட்டே இந்த கொள்கை முடிவுகள். அனைவரும் புரிந்துணர்வுடன் ஆதரிக்குமாறு கோருகிறோம்.//
இந்த விசயத்தில் வினவு தன் கொள்கையை கடைபிடிப்பதாக தெரியவில்லையே?
“சத்தியத்தை” பேசும்போதுதான்-அதுவும் நாகரீகமாக பேசும்போதுதான் வெகுஜன ஆதரவு கிடைக்கும்.
“சண்டியர்த்தனமாக” பேசினால் கொஞ்சம் அல்லக்கைகள்தான் கிடைக்கும்.:-இந்த சொற்றொடரை உபயோகித்தமைக்கு எல்லோரும் மன்னிக்கவும்.
பார்பன சாதி என்று பதிவுக்கு பதிவு எழுத்தும் நீ எல்லாம் எப்படி ராமதாஸ் பற்றி பேசுகிரையோ நெஉம் சாதியை வைத்து தான் பிழைப்பை நடத்துகிறாய் ராமதாஸ் போல
தருமபுரி நக்சல்பாரி தோழர் பாலன்
வழியில் தான் இந்த
சாதீ வெறி,கட்ட பஞ்சாயத்து கும்பலுக்கு
பதில் சொல்லவேண்டும்!
இளவரசனின் சாவு ஒருவேளை தற்கொலையே ஆனாலும் கூட வன்னிய சாதிவெறியர்கள் திட்டமிட்டு நிகழ்த்திய படுகொலையே ஆகும்.
It is 100% true