Friday, April 25, 2025
முகப்புவாழ்க்கைகாதல் – பாலியல்தருமபுரி நத்தம் காலனி மக்கள் போராட்டம் - படங்கள் !

தருமபுரி நத்தம் காலனி மக்கள் போராட்டம் – படங்கள் !

-

பாமக சாதிவெறியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வக்கற்ற அரசும், போலீசும் இளவரசனைப் பறிகொடுத்த நத்தம் காலனி மக்கள்,  ஜனநாயக சக்திகள் மற்றும் புரட்சிகர அமைப்புகள் மீது பல்வேறு அடக்குமுறையை ஏவிவிட்டு வருகின்றன. மருத்துவமனையில் நுழையத் தடை, சுவரொட்டி கிழிக்கும் போலீசு, நக்சல் பீதி, சிறை என்று அந்த அடக்கு முறைகள் அன்றாடம் வளர்ந்து வருகின்றன. இதை எதிர்த்து நத்தம் காலனி மக்கள் போராடி வருகிறார்கள்.  நத்தம் காலனி உண்ணாவிரதம், மற்றும் இளவரசனுக்காக மக்கள் வைத்துள்ள பேனர்கள் குறித்த இந்த படங்கள் மக்களிடம் போராட்ட உணர்வு எந்த அடக்கு முறைக்கும் ஓய்ந்து விடாது என்று காட்டுகின்றன.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

படங்கள் : புதிய ஜனநாயகம் செய்தியாளர், தருமபுரி

  1. அடக்குமுறையை ஏவிவிடும் அரசுக்கு எதிராக சீமான் போராடுவாரா

  2. ஆமா … தேசபிதா இன்னும் காந்தி தான ? இல்ல மாத்துற ஐடியா எதாவது இருக்கா ???

    • மரம் வெட்டி மகாத்மா!காடுவெட்டி காந்திமகான்!!அகிம்சாமூர்த்தி அன்புமணி!!!

  3. நத்தம் காலனி மக்களோட போராட்ட உணர்வு மற்ற ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் புதிய உத்வேகத்தை அளிக்கிறது.

    அவர்களுக்கு எந்த தலைவரோட ஆதரவும் தேவையில்லை !

    தமிழகத்தில் கடந்த இரு ஆண்டுகளில் நடந்த, நடந்து கொண்டிருக்கிற மக்கள் போராட்டங்கள் எந்த தலைவரது தூண்டுதலும், வழிகாட்டுதலும் இல்லாமல் தன்னெழுச்சியாகத்தான் நடக்கின்றன.

    இது ஒரு நல்ல மாற்றம் !

    சினிமா போதையில் சிக்கியிருந்த என் நாடு அதை தூக்கி எறிந்து அரசியல் பாதையில் சென்று போராடுவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

    இதில், மக்கள் கலை இலக்கிய கழகத்தின் பங்கு போற்றுதலுக்குரியது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க