Tuesday, December 10, 2024
முகப்புநீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்வருண்காந்தி மீதான வழக்குகள் ரத்து : முலயம் சிங்கின் முகத்திரை கிழிந்தது !

வருண்காந்தி மீதான வழக்குகள் ரத்து : முலயம் சிங்கின் முகத்திரை கிழிந்தது !

-

“இது கை அல்ல. தாமரையின் சக்தி. முசுலிம்களின் தலைகளை வெட்டி எறியும்” என்றும், “இந்துவுக்கு எதிராக எவனாவது கையை உயர்த்தினால், கீதை மீது ஆணையாக அந்தக் கையை வருண் வெட்டுவான்” என்றும் 2009 மக்களவைத் தேர்தலில் உ.பி.யின் பிலிபித் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராகப் போட்டியிட்ட வருண்காந்தி மேடை தோறும் பேசியதை நாடெங்கும் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பின. கோடிக்கணக்கான மக்கள் அதனைப் பார்த்தார்கள். அந்தத் தேர்தலில் வருண்காந்தி வெற்றியும் பெற்றார்.

வருண் காந்திஇம்மதவெறிப் பேச்சுக்காக அன்றைய உ.பி. அரசு வருண் காந்தி மீது இரண்டு வழக்குகளைப் பதிவு செய்தது. தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி வருண்காந்தி தாக்கல் செய்த மனுவையும் அலகாபாத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உடனே பர்க்கரோ நீதிமன்றத்தில் சரணடையப் போவதாகக் கூறி, மதவெறிக் காலிகளின் படையைத் திரட்டிக் கொண்டு வருண் காந்தி நடத்திய பேரணி, தீவைப்பிலும் கல்வீச்சிலும் முடிந்தது. 25 பேர் படுகாயமடைந்தனர். இந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக மற்றுமொரு வழக்கும் பதிவானது.

நாடறிய இழைக்கப்பட்ட இந்தக் குற்றங்கள் எதுவும் நிரூபிக்கப்படவில்லை என்று வருண் காந்தி பிலிபித் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டிருக்கிறார். சட்டத்தின் ஆட்சியைப் பற்றியும், நீதித்துறையின் சுயேச்சைத் தன்மையைப் பற்றியும் பேசுவோர் இவ்வழக்கின் விசாரணை எப்படி நடைபெற்றது என்பதைத் தெரிந்து கொள்வது அவசியம்.

நீதித்துறை வரலாற்றிலேயே முதன்முறையாக அனைத்து சாட்சியங்களும் ஒரே நாளில் பதிவு செய்யப்பட்டன. சிலரது வாக்குமூலங்களை வருணுக்குச் சாதகமாக அரசு வழக்குரைஞர்களே மாற்றி எழுதினார்கள். நீதிபதி நீதிமன்றத்தில் இல்லாத நிலையிலும் சில சாட்சியங்களின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன. நீதிபதிகள் இரண்டே நாட்களில் பதினெட்டு சாட்சியங்களை ஆய்வு செய்திருக்கின்றனர். சில சாட்சிகள் மாற்றுக் கருத்துகளைச் சொன்னபோதும் அரசு வழக்குரைஞரோ, நீதிமன்றமோ அவற்றைப் பொருட்படுத்தவேயில்லை.

வருணின் பாதுகாப்புக்குத் தலைமை வகித்த போலீசு அதிகாரி, வருண் பேசியதாகக் கூறப்படும் பேச்சு எதையும் தாம் கேட்கவில்லை என்று கூறினார்.போலீசும் அரசு வழக்குரைஞர்களும் மிரட்டியிருந்ததால், சாட்சிகள் அனைவருமே விசாரணையின்போது பிறழ்சாட்சியம் அளித்தனர். ஒரு வழக்கில் சாட்சிகள் அனைவருமே பிறழ்சாட்சியம் தந்தால் அவ்வழக்கை மறுபடியும் விசாரித்தாக வேண்டும் என நூற்றுக்கணக்கான முன்னுதாரணத் தீர்ப்புகள் இருந்த போதிலும், இவ்வழக்கை மீண்டும் விசாரித்திட நீதிபதி உத்தரவிடவில்லை.

வருண் பேச்சின் ஒலிப்பதிவை ஆவு செய்த அதிகாரி நீதிமன்றம் வந்து சாட்சி சோல்லத் தேவையில்லை என்று வழக்கை நடத்திய அரசுத் தரப்பே கோரியது. வழக்கின் முக்கிய ஆதாரமான குரல்மாதிரியைக் கொடுக்க முடியாது என்று வருண் காந்தி மறுத்தார். அனைத்தையும் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.

இந்த வழக்கில் பிறழ் சாட்சியம் அளித்தவர்களை “தெகல்கா” பத்திரிகை பேட்டி எடுத்திருக்கிறது. சாட்சியங்களை மாற்றிச் சொல்லும்படி பிலிபித் போலீசு அதிகாரி அமித் வர்மாவாலும் பிற அதிகாரிகளாலும் தாங்கள் மிரட்டப்பட்டதையும் தங்களுக்கு இலஞ்சம் தரப்பட்டதையும் பெரும்பான்மையான சாட்சிகள் ஒப்புக்கொண்டுள்ளனர். இவையனைத்தையும் தெகல்கா ரகசிய கேமிராக்களில் பதிவு செய்திருக்கிறது.

பாரதிய ஜனதா ஆட்சியில் இருந்தால் செய்யக்கூடிய எல்லா விதமான கிரிமினல் வேலைகளையும் செய்து வருண் காந்திக்கு விடுதலை பெற்றுத் தரும் சாதனையைச் செய்திருப்பது முஸ்லிம்களின் காவலனாகத் தன்னைச் சித்தரித்துக் கொள்ளும் சமாஜ்வாதி கட்சியின் அரசுதான். 2012-இல் ஆட்சிக்கு வந்தவுடனேயே, இவ்வழக்கைத் திரும்பப் பெறுவதற்கு சமாஜ்வாதி அரசு முயன்றிருக்கிறது. முஸ்லிம் அமைப்புகள் கடுமையாக எதிர்த்ததால், வழக்கை நடத்துவதாகப் போக்குக் காட்டி ஊத்தி மூடியிருக்கிறது.

மதச்சார்பின்மை சவடாலை வைத்து முஸ்லிம்களை ஏத்து வரும் ஒரு கட்சி, நீதித்துறை, போலீசு, அதிகாரிகள் உள்ளிட்ட அரசமைப்பு முழுவதையும் வருண்காந்தி என்ற ஒரு தரங்கெட்ட பொறுக்கியாலேயே விலை பேச முடியும் போது, கொலைகாரன் மோடி பிரதமர் நாற்காலியை நம்பிக்கையுடன் குறி வைப்பதில் வியப்பென்ன இருக்கிறது?

– அன்பு
________________________________________________________________________________
புதிய ஜனநாயகம் – ஆகஸ்ட் 2013
________________________________________________________________________________

  1. மத வெறி பேசும் எல்லா ______க்கும் காயடிக்க வேண்டும் என்று தான் சொல்கிறோம். இதில் அவன் பேசினானே முதலில் அவன் மயிரைப் புடுங்கு என்று புடுங்கித்தனமாகப் பேச வேண்டாம்.

      • முட்டாள்களிடம் 300 தடவை சொன்னாலும் அவன் ஏணிக்கு நோனி என்று தான் சொல்வான்.

          • ஜோக்குன்னு நினைப்பாக்கும். எனக்கு சிரிப்பு வரவில்லை. ஏனெனில் அதைப் (வருண்) போய் சிங்கத்துடன் ஒப்பிட்டால் அப்புறம் சிங்கத்தை என்னவென்று சொல்லி அழைப்பது? உங்களின் ஒப்பீட்டை பார்த்தால் உங்களை என்ன சொல்வது?. அதனால் தான் உண்மையை சொன்னேன். வேண்டுமானால் அதி அதி புத்திசாலி என்று அழைக்கலாம்.

    • சுப்ரமணி அய்யரே! மலத்தை சோறு என்று ஓவைசி சொன்னால் என்ன அல்லது மோடி சொன்னால் என்ன – மலம், மலம் தான் என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும். நாங்கள் அதை ஒதுக்கி தூரத் தள்ளித்தான் வைப்போம். மோடி சொல்லிவிட்டாரே என்று நெற்றியில் பூசிக்கொண்டு விதண்டாவாதம் செய்ய மாட்டோம்.

      அதற்கு தனி தெலுங்கானா கேட்கும் மக்கள் தான் பதில் கூற வேண்டும். அதனால் பலன் பெற நினைக்கும் அரசியல் வியாதிகள் தான் பதில் கூற வேண்டும்.

      தெலுங்கானா உருவாக்கப்படும் என்று சொல்லியதற்குப் பிறகு நீங்கள் தெலுங்கானா பகுதியை சேர்ந்தவரையோ அல்லது ஆந்திரா பகுதியை சேர்ந்தவரையோ சந்தித்து பேசியிருக்கிறீர்களா? அவர்களின் கருத்துக்களை முதலில் கேளுங்கள். பிறகு நான் சொல்கிறேன். (என்னுடைய வேலை நிமித்தம் நான் அவர்களை சந்தித்து இருக்கிறேன். சந்த்தித்துக் கொண்டும் இருக்கிறேன்)

  2. “போலீஸை 15 நிமிடம் சும்மா இருக்க சொல்லுங்கள். 15 கோடி முஸ்லீம்கள் 80 கோடி இந்துக்களை கொன்றுவிடுவார்கள்”னு சொன்ன ஒவைசியை பற்றி வினவு ஏதாவது எழுதியிருந்தா கொடுங்கப்பா…அவ்வ்வ்வ்வ்வ்வ்…

  3. I am just asking you what is your opinion about Owaisi+Madani+Mulayam Singh’s Chamchas+Local Al Umma old timers etc etc.

    You can mention it clearly,I dont see Modi and these guys as the same,if you do,then clearly mention they are all untouchable for you.

    I studied in a central government institution and i have so many friends from Andhra pradesh and across all 3 regions,i know what i am saying.

    Most Telengana people,especially working class people are for a separate Telengana.

    Only the elite people dont care about it including Owaisi and co.

    Owaisi & Co are old Razakars who oppressed and killed working class people of Telengana and most of their relatives fled Hyderabad for Pakistan.

    They have no right to refuse Hyderabad for Telengana people.

    They just act as a front of Coastal Andhra Politicians.

    • இதற்கு என் பதில் மேலே உள்ள பின்னூட்டம் எண் 2 – ஐ பார்க்கவும். நீங்கள் சென்ட்ரல் கவர்ண்மென்ட் இன்ஸ்டிடியூடில் படித்திருந்தாலும் அல்லது ஆக்ஸ்போர்ட் யுனிவர்ஸிடியில் படித்திருந்தாலும் நீங்கள் அவர்களிடம் தற்போது கேட்டீர்களா என்பது தான் என் கேள்வி. உங்களுக்கு இந்தி அல்லது தெலுகு தெரியுமென்றால் நான் அவர்கள் பேசுவதை ரெக்கார்ட் செய்து உங்களுக்கு கூரியர் மூலம் அனுப்புகிறேன். கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். உங்களின் சொந்தக் கருத்துக்களை எல்லாம் இங்கு தினிக்காதீர்கள்.

  4. I talk to them all the time,i come across people from all 3 regions across all castes and economic levels.

    I dont have to bluff here and whoever you met while travelling and the people i meet are close friends who were with me in campus.

    Regardles of region,their feeling towards owaisi is the same,nobody wants owaisis in hyderabad.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க