Saturday, October 16, 2021
முகப்பு செய்தி பொறுக்கி ஆஸ்ரம் பாபுவிற்காக புத்தி கெட்ட ஜேத்மலானி!

பொறுக்கி ஆஸ்ரம் பாபுவிற்காக புத்தி கெட்ட ஜேத்மலானி!

-

த்தர பிரதேசம் சஜன்பூரைச் சேர்ந்த 16 வயது மாணவியை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கிய குற்றத்திற்காக ஆன்மீக குரு ஆஸ்ராம் பாபு கைதாகியிருக்கிறார். லட்சக்கணக்கான பக்தர்களின் குரு ஆஸ்ராம் பாபுவை காப்பாற்றுவதற்காக மூத்த வழக்கறிஞர் ராம்ஜேத்மலானி ‘அந்தப் பெண்ணுக்கு ஆண்களால் கவரப்படும் வியாதி இருக்கிறது’ என்று கண்டுபிடித்துக் கூறியிருக்கிறார்.

ராம் ஜெத்மலானி
ராம் ஜேத்மலானி

ராம்ஜெத்மலானி மத்திய சட்ட அமைச்சராகவும், பல்வேறு வழக்கறிஞர்கள் சங்கங்களின் தலைவராகவும் இருந்தவர். சில ஆண்டுகள் பாஜகவிலும் இருந்தார். அவர்களது ஆட்சியில் அமைச்சராகவும் பணியாற்றியிருக்கிறார். அத்வானிக்காக ஹவாலா வழக்கிலும், ஜெசிகா லால் கொலை வழக்கில் மனு சர்மாவுக்கும், கனிமொழி, ஜெகன் மோகன் ரெட்டி, எடியூரப்பா போன்ன்றவர்களின் ஊழல் வழக்குகளிலும், ஹர்ஷத் மேத்தா, கேத்தன் பரேக் ஆகியோர் சார்பில் பங்குச் சந்தை மோசடி வழக்குகளிலும் ஆஜராகி வாதாடியவர். நரேந்திர மோடி அமைச்சரவையில் உள்துறை துணை அமைச்சராக இருந்து போலி என்கவுண்டர் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அமித் ஷாவின் சார்பிலும் ஆஜரானவர். இப்படி முழு கொள்ளைக்காரர்களையும் காப்பாற்றும் வண்ணம் நாட்டிலேயே வேறு எந்த வழக்கறிஞருக்கும் இல்லாத அளவுக்கு சட்ட அறிவும், நீதிமன்ற நடைமுறைகளும் கற்றுத் தேர்ந்தவர்.

1999-2004 பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக் காலத்தில் மத்திய அமைச்சராக இருந்து, பின்னர் கட்சியிலிருந்து விலகி, மீண்டும் 2010-ல் ராஜஸ்தானிலிருந்து கட்சியின் ராஜ்யசபை உறுப்பினராக தேர்ந்தெக்கப்பட்டார். கட்சித் தலைவர் நிதின் கட்காரியை வெளிப்படையாக விமர்சித்ததாக இந்த ஆண்டு தொடக்கத்தில் அவரை கட்சியிலிருந்து நீக்கியிருக்கிறது பாஜக. கட்டுப்பாட்டுக்கு பெயர் போன கட்சியில் அடுத்த வாய்ப்பு கிடைக்கும் வரை பெஞ்சில் உட்கார்ந்திருக்கும் ஜெத்மலானி, பாஜகவின் ஆன்மீக குரு ஆஸ்ராம் பாபு சார்பில் நீதிமன்ற களத்தில் இறங்கியிருக்கிறார். கட்சியில் இல்லாவிட்டாலும் கட்சிப்பணியாற்றுகிறார் போலும்.

அஸ்ராம் பாபு
சாபம் கொடுக்கும் அஸ்ராம் பாபு.

புராணங்களில் முனிவர்கள் தமது பாலியல் குற்றங்களைத் தொடர்ந்து ஊர்வசி, மேனகை, ரம்பை போன்ற பெண்களுக்கு சாபம் கொடுத்து விடுவார்கள். அவர்கள் தண்டனையாக, கல்லாகவோ, சாம்பலாகவோ மாறிக் கிடக்க வேண்டியதுதான். அது போல நவீன முனி புங்கவர் ஆஸ்ராம் பாபுவின் சார்பில் சாப டெலிவரிக்கு ஆஜராகியிருப்பவர்தான் ராம்ஜெத்மலானி. ‘என் தவத்தைக் கலைத்தாள், 72 ஆண்டுகளாக சமூகத்தின் புனிதனாக, லட்சக்கணக்கான மக்களின் ஆன்மீக குருவாக, பாரத பண்பாட்டின் சின்னங்களில் ஒன்றாக உலாவி வந்த என் மீது சேற்றை அள்ளி இறைத்து விட்டாள்’ என்று ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் நியாயம் கேட்டு வாதிடுகிறார் ஆஸ்ராம் பாபு.

காஞ்சி மடத்தில் ஜெயேந்திரனில் ஆரம்பித்து, பிரேமானந்தா, நித்தியானந்தா வரையிலான மடாதிபதிகளும், கருவறையில் காமலீலை நடத்திய தேவநாதன் முதல் சட்டசபையில் பிட்டு படம் பார்த்த எம்.எல்.ஏ.க்கள் வரை பரலோக சிவனையோ, விஷ்ணுவையோ நினைத்து பஜனை செய்து கொண்டு இருக்கும் புனிதர்களை சிற்றின்பத்தில் தவறி விழ வைப்பது பாவ ஜென்மங்களான பெண்கள்தான். அதனால் ஆஸ்ராம் பாபு வழக்கிலும் தண்டிக்கப்பட வேண்டியது அந்தப் பெண்தான் என்று பாரத மரபின் பிரதிநிதியாக வாதிடுகிறார் ராம் ஜெத்மலானி.

அந்த 16 வயது சிறுமி ஆஸ்ராம் பாபு போன்ற ஆண்களை நோக்கி இழுக்கப்படும் கொடிய நோய் தனக்கு இருந்ததை மறைத்து ஐம்புலன்களை அடக்கி தவம் செய்து வரும் ஒரு மகான் முன் வந்ததே குற்றம்.

பாரத தர்ம மரபு இப்படியிருக்க, மிலேச்சரான சோனியா காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ராஜஸ்தான் அரசு அந்த பெண் மீது வழக்கு போடாமல் ஆஸ்ராம் பாபுவை கைது செய்திருக்கிறது. எதிர் வரும் சட்டசபை தேர்தல்களில் பாஜக மாநில ஆட்சிகளை பிடித்து விட்டால் இது போன்று இந்துத்துவ மரபுகளை இழிவுபடுத்தும் வழக்குகளை ஒழித்துக் கட்டி விடுவார்கள்.

நீதிமன்றத்தைப் பொறுத்த வரை நடந்தது என்ன என்பது பொருட்டில்லை. நடந்ததை சட்டத்தின் கீழ் குற்றம் என்று நிரூபிக்க முடியுமா என்பதுதான் கேள்வி. அந்தக் கேள்விக்கு எப்படி விடையளிக்க வேண்டும் என்பதில் கில்லாடி ஜேத்மலானி.

அஸ்ராம் பாபு
அஸ்ராம் பாபுவின் ஆன்மீக ‘சேவை’ தொடரும்.

தனது பெண்ணுக்கு நியாயம் கேட்டு பெண்ணின் தந்தை உண்ணாவிரதம் இருந்திருக்கிறார். உண்மையில் நீதி வேண்டுமென்றால் பெண்ணின் பெற்றோர் இந்திய சட்டங்களின் இண்டு இடுக்குகளில் ஒழிந்து கொண்டிருக்கும் நீதியை தேடிக் கண்டு பிடித்து மேலே இழுத்து வரும் திறமையுடைய ஜேத்மலானி போன்ற ஒரு வழக்கறிஞரை அமர்த்தியிருக்க வேண்டும்.

குற்றம் செய்தவர் ஜெயேந்திரனாகவோ, ஆஸ்ராம் பாபுவாகவோ, தேவநாதனாகவோ இருக்கும் சாட்சியங்களும், ஆதாரங்களும் வலுவாக இருந்தாலும் வழக்கு நடத்தும் அரசுத் தரப்பும் எதிர்த் தரப்பில் வாதாட பல லட்ச ரூபாய் செலவில் அமர்த்தப்படும் வழக்கறிஞர்களும் பல்வேறு வகைகளில் இணைந்து குற்றவாளியை விடுவிக்க போராடுவார்கள். பாலியல் வல்லுறவு நடந்தது, ஆனால் அது ‘ஒரு தாத்தா பேத்தியுடன் நேரம் செலவழித்தது’ போன்றதாக நடந்தது என்றோ அந்தப் பெண்ணுக்கு ‘ஆண்களால் கவரப்படும் நோய்’ உள்ளது என்றோ நிரூபித்து விட்டால் ‘தாத்தா’ சட்டப்படி நிரபராதி ஆகி விடுவார்.

ஆஸ்ராம் பாபு ஜேத்மலானியின் பல லட்ச ரூபாய் மதிப்பிலான சட்ட நிபுணத்துவத்தை பயன்படுத்தி வெளியில் வந்து விடுவார். டான்சி நிலத்தை ஜெயலலிதா வாங்கியதில் கிரிமினல் நோக்கம் இருந்ததாக ஆதாரங்கள் இல்லாததால் உச்ச நீதிமன்றத்தால் ‘கனத்த’ மனதோடு விடுவிக்கப்பட்டது போல, குஜராத்தில் இசுலாமிய மக்களை கொன்று குவித்த மோடியின் தளபதி அமித் ஷா சுதந்திரமாக உலாவுவது போல, ஆஸ்ராம் பாபு அவரது 400-க்கும் மேற்பட்ட ஆசிரமங்களையும், 50-க்கும் மேற்பட்ட குருகுலங்களையும், பல பத்து லட்சம் பக்தர்களையும் வழி நடத்துவதை தொடர்வார்.

இதே ஜேத்மலானிதான் காலஞ்சென்ற பிரேமானந்தாவிற்கும் வாதாடியவர். தற்போது சங்கர ராமன் கொலை வழக்கில் ஜயேந்திரனைக் காப்பாற்றும் வேலையை நீதிமன்றம், போலீசு பார்த்துக் கொள்வதால் இங்கே ஜேத்மலானிக்கு வேலை இல்லை போலும். ஒரு வேளை ஜேத்மலானி ஆஜராகியிருந்தால், “சங்கர ராமனுக்கு மற்றவர்களை கொலை செய்ய தூண்டும் ஆசை இருந்திருக்கிறது”என்று வாதாடியிருப்பாரோ?

அதைக்கூட விடுங்கள், இன்று இந்தியாவை அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்கள் சூறையாடி வருவது கூட பாரத மாதா மற்றவர்களை கவர்ந்து இழுக்கும் நோய் கொண்டவள் என்பதாகவும் சொல்லலாமே?

 1. If Mr Jethmalani argued for the affected girl without fees he can be hailed as a good humanitarian and doing justice instead for huge fees he s representing a ashram head . He argued for our Kani too telling the court she is woman with a child to take care. Advocates are similar dogs which protects an house for pieces of bones. Shame.

 2. 1) ஜேத்மலானி! ஒரு வக்கீல் . அவர்தம் தொழில் குற்ற்ம் சுமர்த்த்பட்டவர்களுக்காக வாதாடுவது. இதில் எதற்காக மதததை இழுக்கிறீர்கள் ? .
  2) இதே ஜேத்மலானிதான் ராஜீவ்- கொலை-3 தமிழ் கைதிகளுக்காக்வும் , சமுகநீதீ-மன்டல்-ஆதாரவாரகளுக்காவும் வாதாடி உள்ளார் ? அப்போது புத்தி கெடவில்லையா ?
  3) இதுபோல – சமீபத்தில் நான் படித்தேன். பிரபல தலித் எழுத்தாளரும் இது போல பாலியல் குற்றத்திற்க்கு உள்ளாகி உள்ளார் என்று. (வேறு மதம்). இது பற்றியும் , விரிவான பொறுக்கி -புத்தி கெட்ட போன்று பதிவை எதிர்பார்க்கிறேன்.

  • தவீரவாதம் என்பதும் ஏதோ தீவிரவாதம் செய்யும் _____ தொழிலாக இருக்கலாம், அதற்கு ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் தீவிரவாதிகளாக சித்தரிப்பது எந்த வகையில் நியாயம்.??
   ராம்ஜெத்மலானி இப்படி ஒரு கேலமான செயலை செய்வதற்கு ________ செய்யலாம்…இவ__ நீதித்துறைக்கே அவமானம்….

   இவ__டமிருந்து நீதியும் வருவதில்லை, நியாயமும் வருவதில்லை…

   நீதி நியாயம் சார்ந்த தொழில் செய்பவன் நியாயத்தின் பக்கம் நிற்கவேண்டுமே தவிர அதற்கு எதிராக வாதிடுவது அவன் வளற்பு முறையின் மோசம்தான்…

 3. /அவர்தம் தொழில் குற்ற்ம் சுமர்த்த்பட்டவர்களுக்காக வாதாடுவது. இதில் எதற்காக மதததை இழுக்கிறீர்கள் ? ./

  அப்படியா, சரி எதற்கெல்லாம் மதத்தை பயன்படுதேல்லாம் என்று சொல்லுங்க?

  //பிரபல தலித் எழுத்தாளரும் இது போல பாலியல் குற்றத்திற்க்கு உள்ளாகி உள்ளார் என்று. (வேறு மதம்).// அதுதானே பார்தேன் என்னடா இவரு ஹிந்து மதம், மோடி இதற்கெல்லாம் பரிந்து பேசுகிறார் என்று, இப்பதான் புரியுது உங்கள் ஜாதி வெறி!

  சரி சரி, நீங்க பார்பன ஹிந்து மதத்தை ஆதரிப்பது சரிதான்!

  • அடப்பாவி-
   நான் வினவியது வினவை ? அதன் ஊடகதர்மத்தை-உனனையில்லை- நீ என்ன அதன் அல்லக்கையா?
   என் மறுமொழிகளை ஒழுஙகாக படி-மோடிக்கு எஙகே பரிந்தேன் ?
   என் இரன்டாவது கேள்வி என்னாவாயிற்று?
   உனக்கு நான் பார்பன ஹிந்து என்றால் நீ யார் ? எதை ஆதரிக்கிறாய் ?

 4. @alagarasan

  எதிர் கேள்வி என்ற ஒன்றை கேட்டால் உடனே நீ அல்லக்கையா…? நல்ல மரியாதை..உன் மொழியில் உனக்கு பதில் சொல்லலாம்…

  சரி நீ பார்பானிய அல்லகையா? அடப்பாவி மட்டுமல்ல இன்னம் பலகோடி மக்களும், கண்டிப்பாக புழுத்து நாறும் மனுதர்மத்தையும்.. அதை தூக்கி பிடிக்கும் இந்திய இந்து மததைதையும், அதன் கிளைகளாக சாதிய வர்க்க வேறுபாடுகளை பாதுகாக்கும் மற்ற ஆபிரகாமிய மதங்களையும் அதரிக்கவில்லை.

  எதை ஆதரிக்ககிறோம் என்றால், தனக்காக குரல் தர இயலாத, தெரியாத, உழைக்கும் பலகோடி அப்பாவிகளுக்கு எது நல்லதோ.. அதை.. அதாவது கம்யூனிசத்தை, அதன் நிஜ வடிவில் ஆதரிக்கிறோம். சரியா?

  இப்போது உன் இரண்டாம் கேள்விக்கு பதில்.. பிரபல தலித் எழுத்தாளர் மட்டுமல்ல பிற்படுத்தபட்ட, முற்படுத்தபட்ட அனைத்து தரப்பிலும் யார் தவறு செய்தாலும் தண்டிக்கபடவேண்டியவர்களே..

  உன் கேள்விக்கு தக்க ஆதாரத்துடன் உன் வலை/பிளாகில் வைத்து லிங்க் கொடு..

  • நான் வினவியது வினவை-
   அல்ல்க்கை என்ற சொல் மனதை புண்படுத்தினால் நான் தற்போதே நிபநதனைஅற்ற மன்னிப்பை கேட்கிறேன்.நானும் மனுதர்மத்தையும்.. சாதிய வர்க்க வேறுபாடுகளை பாதுகாக்கும் எந்த மதங்களையும் அதரிக்கவில்லை.
   எனது வேண்டுகோள் என்னவென்றால் சமுக அவலஙகள் சாதிய / மத வேறுபாடுஇன்றி விமர்சிக்க்படவேன்டும. களையப்படவேண்டும்.
   என் இரன்டாவது கேள்விக்கு ஆதாரம் ஆங்கிலநாளிதழ்களில் உள்ள்து. தமிழில் வந்ததா என தெரியவில்லை- மற்ற் மாநில அவலஙகலை ( குறிப்பாக மகாராஷ்ட்ர ) பதியும் வினவிற்க்கு இது ஏன் தெரியவில்லை ? இது பற்றி ஏன் பதியவில்லை?

 5. ‘அந்தப் பெண்ணுக்கு ஆண்களால் கவரப்படும் வியாதி இருக்கிறது’ அது என்ன வியாதி சத்தியமாக எனக்கு ஒன்றும் புரியவில்லை, இது நக்கலுக்காக எழுதியதா அல்லது உண்மையிலே இருக்கா ? ஆணின் இனை பெண் இது மரபு ? அப்படி இல்லை யெனில் அவர்கள் திருநங்கை என்பார்கள் ஒரு ஆணை கண்டால் பெண்ணுக்கு வரும் இன்பம் அது போன்றுதான் ஆணுக்கும் இதில் என்ன ” அந்தப் பெண்ணுக்கு ஆண்களால் கவரப்படும் வியாதி இருக்கிறது ” அயோக்கியர்கள் தன் செய்த தவறினை மறைக்க ஆயிரம் தகிடு தத்தம் கேவலப்பட்ட பயல்கள், முச்சந்தியில் நிர்க்கவைத்து சாணி கரைத்து அடிக்கவேண்டும், அதற்க்கு வாதிட முயலும் இந்த அயோக்கிய நாய்க்கும் இது போன்று செய்தால்தான் பெண்களை கேவலமாக சித்தரிக்கும் இவனைபோன்றோர்க்கும் , அவர்கள் தூக்கி கொண்டாடும் புராண நூல்களும்மும் சாவு மணி அடிக்க முடியும்

  ராஜா நராசிம்மா விவேக்

 6. முழு இந்து மதமும், காவியங்களும் இந்த கன்றாவியதான் புனிதம் என்று கூறுகிறது. முழு காவிய இதிகாசப் புருஷர்களுக்கும் செக்ஸ் இல்லாமல் வாழமுடியாது. அதை பின் பற்றுகிறவர்களுக்கும் அந்த வியாதி இருக்கத்தானே செய்யம். மக்களின் சிந்திக்கும் திறன் , உண்மையான தேய்வதை அறியும் திறன் இல்லாது போனதே இதற்கு காரணம். பார்பனர்களின் சூழ்ச்சியே இதற்க்கு காரணம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க