Thursday, July 17, 2025
முகப்புகட்சிகள்காங்கிரஸ்குஜராத் பின் தங்கிய மாநிலம் - ரகுராம் ராஜன் குழு அறிவிப்பு !

குஜராத் பின் தங்கிய மாநிலம் – ரகுராம் ராஜன் குழு அறிவிப்பு !

-

2013 மே மாதத்தில் முதன்மை பொருளாதார ஆலோசகராக பணியாற்றியவரும், தற்போதய ரிசர்வ் வங்கியின் கவர்னருமான  ரகுராம் ராஜனை தலைவராக கொண்ட 6 பேர் குழுவினது ஆய்வின் படி பொருளாதார வளர்ச்சியில் கோவா, கேரளா, தமிழ்நாடு மாநிலங்கள் முதல் இடங்களிலும், ஒடிசா, பீகார், மத்திய பிரதேச மாநிலங்கள் கடைசி இடங்களிலும் உள்ளன.

ரகுராம் ராஜன்
ரகுராம் ராஜன் (படம் : நன்றி தி இந்து)

சரி, அப்படியானால் மோடியின் குஜராத்? இந்த ஆய்வு “குஜராத் மாடலையும்”, “வைபரண்ட் குஜராத்தையும்” உலகமே தரிசிக்கும்படி செய்துள்ளது. குஜராத்தின் ஓட்டைகளை மறைத்து வளர்ச்சியை நிலைநாட்டி விடலாம் என்று ஊடகங்களும் பேஸ்புக் போராளிகளும் எவ்வளவு முயன்றாலும் சில சமயம் இது போன்ற ஆய்வுகள் அவர்களை சந்தி சிரிக்க வைத்து விடுகின்றன.

பீகார் முதல்வர் நித்திஷ்குமார் தனது மாநிலம் பின் தங்கிய நிலையில் இருப்பதாகவும் அதற்கு  சிறப்பு அந்தஸ்து அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். மேற்கு வங்கம், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களும் இந்த கோரிக்கையை எழுப்பின. கடந்த மே மாதத்தில் பின் தங்கிய மாநிலங்களை கண்டறிவதற்கான அளவீட்டு முறையை பரிந்துரை செய்ய மத்திய அரசு ரகுராம் ராஜன் தலைமையிலான குழுவை அமைத்தது.

இது வரை இருந்து வந்த கட்கில்-முகர்ஜி ஃபார்முலாவில் மக்கள் தொகையை முதன்மையாகவும், தனிநபர் வருமானம், கல்வியறிவு போன்றவற்றை அடுத்தபடியாகவும் வைத்து மாநிலங்களின் முன்னேற்றம் அளவிடப்பட்டது. இந்த முறைக்கு மாற்றாக பின்வரும் 10 காரணிகளை சம முக்கியத்துவமுடையதாக கொண்டு மாநிலங்களை வரிசைப்படுத்த வேண்டும் என்று ரகுராம் ராஜன் குழு பரிந்துரை செய்திருக்கிறது.

தனிநபர் மாத நுகர்வு
கல்வி
மருத்துவம், சுகாதாரம்
வீட்டு உபயோக பொருட்கள்
வறுமை வீதம்
பெண்களின் கல்வியறிவு
ஆதிதிராவிடர்/பழங்குடியினர் சதவீதம்
நகர மயமாக்கல் வீதம்
நிதி சேவைகள் பரவலாக கிடைத்தல்
சாலை இணைப்புகள்

இவற்றைக் கொண்டு மாநிலங்கள் 0 முதல் 1 வரை இலக்கமிட்டு வரிசைப்படுத்தப்பட்டன. 0.6-க்கு அதிகமாக மதிப்பீடு செய்யப்பட்ட 10 மாநிலங்கள் மிகப் பின் தங்கிய மாநிலங்கள் என்றும் 0.4-க்கும் 0.6-க்கும் இடையில் மதிப்பீடு செய்யப்பட்ட 11 மாநிலங்கள் பின்தங்கியவை என்றும் 0.4-க்கு குறைவாக மதிப்பீடு பெற்ற 7 மாநிலங்கள் ஒப்பீட்டளவில் முன்னேறிய மாநிலங்கள் என்றும் கருதப்பட வேண்டும் என்று குழு பரிந்துரைத்திருந்தது. இதன் அடிப்படையில் மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு மாநிலங்களின் தேவையின் அடிப்படையில் செய்யப்பட வேண்டும் என்று குழு அறிவுறுத்தியிருக்கிறது.

மாநிலங்கள் பட்டியல்
படம் : நன்றி தி இந்து.

இதன்படி பின் தங்கியிருப்பதற்கான குறியீட்டில் குறைவான புள்ளிகள் பெற்று கோவா (0.045) மிக அதிகம் வளர்ச்சி பெற்ற மாநிலமாகவும், கேரளா (0.095) இரண்டாம் இட்த்திலும், தமிழ்நாடு (0.341) மூன்றாம் இடத்திலும், மிகவும் பின் தங்கிய மாநிலமாக ஓடிசா (0.798) கடைசி இடத்திலும் உள்ளதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

குஜராத் பின் தங்கியிருப்பதில் 0.491 மதிப்பீடு பெற்று மாநிலங்களின் வரிசையில் 12-வது இடத்தில் உள்ளது. இது வளர்ச்சி குறைந்த மாநிலம் என்ற பிரிவில் வருகிறது. இந்த பிரிவில் வரும் மற்ற மாநிலங்கள் மேற்கு வங்காளம், நாகாலாந்து, ஆந்திர பிரதேசம், ஜம்மு காஷ்மீர், மிசோரம், திரிபுரா, கர்நாடகா, சிக்கிம் மற்றும் இமாச்சல பிரதேசம்.

இது போன்ற புள்ளிவிவரங்கள் தொடர்ச்சியாக குஜராத்தை அம்பலப் படுத்தினாலும் மக்களை முட்டாளாக, மூடர்களாக கருதி 12 ஆவது இடத்தில் இருக்கும் ஒரு மாநிலத்தை முதலாவது இடம், முன்னோடி என்று ஊடகங்கள் முன்னிறுத்தி வருகின்றன.

வறுமைக் கோட்டை நிர்ணயிப்பதிலோ இல்லை மாநிலங்களின் வளர்ச்சியை மதிப்பிடுவதிலோ உள்ள இத்தகைய முதலாளித்துவ பொருளாதார ஆய்வுமுறைகளை நாங்கள் ஏற்பதில்லை. வினவிலும் அவற்றை விளக்கி பல கட்டுரைகள் வந்திருக்கின்றன. ஆனால் இந்துமதவெறியர்களும், பத்ரி சேஷாத்ரி உள்ளிட்ட மோடி ரசிகர்களும் இத்தகைய ஆய்வு முறைகளைக் கொண்டுதான் குஜராத்தில் மாபெரும் சாதனை நிகழ்த்தப்பட்டிருப்பதாக பிரச்சாரம் செய்கின்றனர். ஆனால் அந்த பிரச்சாரங்களுக்குரிய ஒரிஜினல் ஆவணங்களைப் பார்த்தாலே குஜராத் பின்தங்கியிருப்பது தெரியவரும். அந்த வரிசையில் இது மற்றுமொரு சாட்சி.

இதனால்தான் திருச்சி பொதுக்கூட்டத்திலும் குஜராத்தின் சாதனை என்று ஒரு வரியைக்கூட மோடி குறிப்பிடவில்லை. மோடி பொய் சொல்வதில் அஞ்சுபவர் இல்லை என்றாலும் அவரது பொய்கள் தோலுரிக்கப்பட்ட நிலையில் அந்த டாபிக்கே வேண்டாம் என்று முடிவு செய்து விட்டு, பயங்கரவாதம் பக்கம் தாவி விட்டார். ஏனெனில் ஒரு பயங்கரவாதிதானே பயங்கரவாதத்தை குறித்து ஆழமாக பேச முடியும்!

மேலும் படிக்க

  1. எப்படியோ நாடு சீரழிந்துவிட்டது இப்போது காப்பாற்றுகிறேன் என்ற நம்பிக்கை மொழி மோடியிடம் இருந்து மட்டும்தான் வருகிறது. மீண்டும் காங்கிரஸ் வந்தால் நாடு முற்றிலும் அழியும் என எல்லோருக்கும் தெரியும் இப்படி இருக்கையில்.. மோடித்தான் வந்து காப்பாற்றட்டுமே..ஒரு வாய்ப்பு கொடுத்தால்தான் என்ன?

    மசூதி இடிக்கப்பட்டதும் திவீரவாதிகளால் பொதுமக்கள் காப்பாற்றப்பட்டதும் காங்கிரஸ் ஆட்சியில்தான் நடந்தன அவர்கல் அதை ஒடுக்ககூட முன்வரவில்லை இதைவிட மோடியில் ஆட்சியில் எதும் நடந்துவிடபோவதில்லை.

    ரகுராமன் குழு காங்கிரஸ் பார்வையில்லாமல் எதையும் செய்யுமா? அப்படி யாருடைய தலையிடும் இல்லாமல் இவ்வாறு நடக்குமா என்பது உங்கள் சிந்தனைக்கே!

    தமிழ்நாடு ஒரு முன்னேறிய மாநிலம் என்றால் ஒட்டுமொத்த இந்தியாவில் நிலை எவ்வாரு இருக்கும் என நினைத்துப்பார்க்கவே கொடூரமாக இருக்கிறது.

    ஒரு நம்பிக்கை குரல் மோடியிடம் இருந்து வருகிறது அதனால் ஒரு வாய்ப்பை தரலாம் என்பது உறுதி.

    • குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு. புதுசா பதவிக்கு வருபவர்கள் இப்படித்தான் வாக்குறுதி தருவார்கள். மாநிலத்தை முன்னேற்றாதவன் எவ்வாறு நாட்டை முன்னேற்றுவான். என்னத்தான் பட்டாலும் நாங்களெல்லாம் முட்டாளாகத்தான் இருப்போம்.

    • தனிநபர் மாத நுகர்வு
      கல்வி
      மருத்துவம், சுகாதாரம்
      வீட்டு உபயோக பொருட்கள்
      வறுமை வீதம்
      பெண்களின் கல்வியறிவு
      ஆதிதிராவிடர்/பழங்குடியினர் சதவீதம்
      நகர மயமாக்கல் வீதம்
      நிதி சேவைகள் பரவலாக கிடைத்தல்
      சாலை இணைப்புகள்

      Why they cannot take Single man & Family Income, Electricity supply, GDP , Industries,Agriculture, ….etc.
      Top 3 States is famous for Drinks. You know that.

  2. ரகுராம் ராஜன் ரிசெர்வ் வங்கியின் தலைமை ஏற்க வருகிறார் என்றார் என்றதும் யார் இந்த ரகுராம் ராஜன்.இவன் ஒரு அமெரிக்காவின் கைக்கூலி என்று எழுத வேண்டியது.மோடியின் பிரதமராகும் வாய்ப்புகள் அதிகமாவதைப் பார்த்ததும் அது ரகுராமாகவே இருப்பினும் அவரது கருத்துகளை முன் வைப்பது. வெட்கமாக இல்லை? ஜீன்ஸ் படத்தில் ராதிகா கிளைமாக்ஸ் காட்சியில் சொல்வது மாதிரி அவுக செஞ்சது தப்புன்னா இவுக செஞ்சதும் தப்புதான்.அவுக செஞ்சது ரைட்னா இவுக செஞ்சதும் சரிதேன் . உம்மா முகத்திர கிளிஞ்சிட்டில்லா

  3. முன்னெச்சரிகையாக ரகுராம்ராஜன் ஒரு பார்ப்பணர் என்றும் எழுதி விடுங்கள்.

    ஏனென்றால் நாளை அவர் மோடியை ஆதரித்தால்

    மோடிக்கு ஜே போடும் ரகுராம்ராஜனின் காங்கிரஸ் பார்ப்பனீயம் !!!!!!!!!!!!

    என்று ஒரு நாள் எழுத வேண்டி வரும்.

    • //முன்னெச்சரிகையாக ரகுராம்ராஜன் ஒரு பார்ப்பணர் என்றும் எழுதி விடுங்கள்.//

      கிருஷ்ணய்யர் மாதிரி ரகுராம்ராஜன் ‘ஐயங்கார்’ன்னா? 😀 😀 😀

  4. பொருளாதார வளர்ச்சியில் குஜராத் முதல் இடம் என்று வந்தால்

    உங்கள் கட்டுரையின் தலைப்பு மோடிக்கு ஜே போடும் ரகுராம்ராஜனின் காங்கிரஸ் பார்ப்பனீயம்!!!!

    என்றுதானே இருக்கும்?

  5. Goa and Kerala take a big lead in the factors counted for the development. The news items carries issues that were taken to come to the conclusion of underdevelopment.
    Poverty ratio,urbanisation,education ,health,female literacy, financial inclusion,consumption in the household etc
    Kerala receives huge inflows of money from foreign countries as state ‘s sizable population work outside india mostly in Middle east and other countries. Federal Bank alone receives inward remittance to the state to the tune of Rs 34000 crores per year.
    SBT receives another Rs 32000 crores into the state. There are rest of the banks for which we do not have data for each bank’s handling of inward remittance into kerala.
    But we can assume that around Rs 125000 may come as foreign money and such huge money which can be counted detached for “savings” account. Hence such huge money gets invested in various forms of trading,industrial activity. There are textile industries developing in and around Cannanore,jewellery industry across the state and investments are seen in a mixture of segments. There is current account surplus exists in this state.
    Money earns money theory happens as expected.
    Whereas in Tamilnadu there has been no agriculture development for several decades but this survey did not take into account agriculture.
    In tamilnadu politicians are corrupt and unqualified but the education through hundreds of engineering colleges came in handy for the state to register growth as the candidates emerged from these institutions engaged themselves in some kind of activity and participated in the economic development of the state.
    Goa now has a chief minister who is an IIT graduate. He can surpass others in better management

  6. ஸ்ஸ்ஸ்….ப்பா! தாங்க முடியல

    னம்பர்ர் ஒன்னூ …. னம்பர்ர் ஒன்னூ ன்னு குத்தாட்டம் போடுறீங்க. எப்படிப்பா ‘னம்பர்ர் ஒன்னூ’ என்று கேட்டால், நாளை எழுதப் போகும் கட்டுரையின் தலைப்பை இன்று மை போட்டு கண்டுபிடிப்பார்களாம்

    முடியல

  7. அந்த ஆள் வேலைக்கு வந்தே ஒரு மாசம்தான் ஆகுது…. அதுக்குள்ள ஒட்டு மொத்த இந்தியாவயும் அலசிட்டாரா… பயங்கரமான ஆளா இருப்பாரு போல இருக்கே…

  8. பிரதம வேட்பாளரா வந்து ஒரு மாதம்தான் ஆகுது ஆனா 60 வருடமா இந்தியாவில்தான் இருக்கார்..ங்

  9. எனக்கு உறுத்தலாக படும் விஷயம் பல்லாயிரம் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்ட விதர்பா உள்ள மாநிலம் மகாராஷ்டிரா எப்படி முன்னேறிய மாநிலத்தில் வந்தது?

  10. மோடி ரசிகர்களுக்கு,
    காங்கிரஸ் அரசு வெளியிட்டு இருக்கும் இந்த ஆவணத்தை சந்தேகிப்பது நியாயம்தான். ஆனால், அத்தோடு நிறுத்தாமல், ஆவணத்தை படித்துவிட்டு நேரிடையாக விமர்சியுங்கள். வினவு ஏற்கனவே என்ன அலகுகள் (parameters), என்ன methodology என கோடிட்டு காட்டியுள்ளது. ஆவணம் இன்னும் விரிவாக சொல்லி இருக்கும். இவற்றை விமர்சிக்கலாம். அல்லது data தவறு என சொல்லலாம். இப்படி ஏதாவது செய்யுங்கள்.

    உதாரணமாக இந்த ஆவணம் தயாரித்த குழுவின் ஒரு உறுப்பினர் இந்த அறிக்கையின் methodology யை நிராகரித்து எழுதிகிறார்:

    http://www.firstpost.com/economy/put-it-in-the-dustbin-raghuram-rajans-report-on-states-seriously-flawed-1137647.html

  11. வினவு மோடியை தூற்றுவது ஒன்றும் புதிதல்ல. நல்லவர்களை திட்டி வல்லவர்களாக்கட்டும்!! சோனியா கும்பலின் ஆட்சியில் இந்திய பொருளாதாரம் எப்படியெல்லாம் சீரழிந்து விட்டது என்பது சாதாரணமாகவே அனைவரும் தெரிந்து வைத்துள்ளார்கள். இது ஏன் இவர்களுக்கு புரியவில்லை என்பது புதிராக இருக்கிறது. ஊழலும் விலைவாசியும் உயர்ந்து உசசியில் உள்ளது. மக்களுக்கு நன்றாக தெரிகிறது. சோனியா என்ற வெளிநாட்டுப் பெண்ணால் இந்தியா சீரழிந்ததுதான் மிட்சம். வினவு ஏன் சோனியாவின் இந்த மோசமான நடவடிக்கைகளுக்கு வக்காலத்து வாங்குகிறது என்று தெரியவில்லை. இந்திய ராணுவத்தினரை தினசரி கொன்று குவிக்கும் பாக்கிஸ்தானை கண்டு கொள்வதே இல்லை. சோனியாவையும் வினவுவையும் இனி மக்கள் கண்டுகொள்ள மாட்டார்கள். (இப்போது மட்டும் என்ன கண்டுகொண்ட இருக்கிறார்கள்)

    ஒரு இந்திய பிரஜை இந்தியாவில் உள்ள மற்ற இடங்களுக்கு செல்லுவது எதிர்த்து கருப்புக்கொடி காட்டும் வினவு மற்றும் முஸ்லீம் அமைப்புக்களை தடை செய்யவேண்டும். காஷ்மீர் சென்று இவர்கள் தங்களது வீரத்தை காட்டவேண்டும். வினவுவும் அதன் “புரட்சியாளர்களும்” ஒரூமுறை காஷ்மீர் சென்று அங்கிருந்து துரத்தப்பட்ட மக்களுக்காக குரல் எழுப்ப வேண்டும்.

    • //வினவு ஏன் சோனியாவின் இந்த மோசமான நடவடிக்கைகளுக்கு வக்காலத்து வாங்குகிறது என்று தெரியவில்லை. இந்திய ராணுவத்தினரை தினசரி கொன்று குவிக்கும் பாக்கிஸ்தானை கண்டு கொள்வதே இல்லை.காஷ்மீர் சென்று இவர்கள் தங்களது வீரத்தை காட்டவேண்டும்.வினவுவும் அதன் “புரட்சியாளர்களும்” ஒரூமுறை காஷ்மீர் சென்று அங்கிருந்து துரத்தப்பட்ட மக்களுக்காக குரல் எழுப்ப வேண்டும்.வினவு மற்றும் முஸ்லீம் அமைப்புக்களை தடை செய்யவேண்டும். //

      அண்ணன் நட்டுக்கு நைட்டு அடிச்ச சரக்கு இன்னும் எறங்கவே இல்ல போல.

  12. \\2013 மே மாதத்தில் முதன்மை பொருளாதார ஆலோசகராக பணியாற்றியவரும், தற்போதய ரிசர்வ் வங்கியின் கவர்னருமான ரகுராம் ராஜனை தலைவராக கொண்ட 6 பேர் குழுவினது ஆய்வின் படி பொருளாதார வளர்ச்சியில் கோவா, கேரளா, தமிழ்நாடு மாநிலங்கள் முதல் இடங்களிலும், ஒடிசா, பீகார், மத்திய பிரதேச மாநிலங்கள் கடைசி இடங்களிலும் உள்ளன.\\
    ____________

    உங்களுக்கு எல்லாம் மரியாத கொடுத்த இத்தன நாளா எழுதிகிட்டு இருந்தேன். இப்ப தான்டா உங்க இத்து போன வெக்கங்கட்ட புத்தி முழுசா தெரியுது

    ஒரு பக்கம் கார்ப்பரே கை கூலின்ன்னு மோடிய திட்ற பன்னாடைங்களா… அப்ப கார்ப்பரேட்காரன் கொடுத்த சட்டிபிக்கெட்ட மட்டும் எடுத்து எழுதிறீங்களே…

    உங்களுக்கு எல்லாம் வெட்கம், மானம் சூடு சொறனை எதாவது இருக்குத…

    சோத்துக்கு உப்பு போட்டு திங்கிறீங்களா… இல்ல…………….**********************

    • //முதன்மை பொருளாதார ஆலோசகராக பணியாற்றியவரும், தற்போதய ரிசர்வ் வங்கியின் கவர்னருமான ரகுராம் ராஜனை தலைவராக கொண்ட 6 பேர் குழுவினது ஆய்வின் படி //

      “கார்ப்பரேட்” என்றால் என்ன என்று அறியாத கூமுட்டை தான் நீ.

  13. எளிமையான, ஆனால் சுவாரஸ்யமான ஆவணம். படித்து பாருங்கள்.

    http://www.scribd.com/doc/171140093/Raghuram-Rajan-Panel-Report

    இவர்களது methodology (வழிமுறை?) பொதுவாக நியாயமானதாக, ஏற்கும் படியாகவே உள்ளது. இந்த ஆவணம் மாநிலங்களை வரிசைப்படுத்தி மெடல் கொடுக்க ஏற்படுத்தப்படவில்லை. மத்திய நிதியை எப்படி பகிர்ந்தளிப்பது என்பது குறித்த ஆலோசனைக்காக உண்டானது. பிற்பட்ட மாநிலத்துக்கு அதிக பணம் கிடைக்கும்.

    இந்த குழுவில் இடம் பெற்ற குப்தா சில விஷயங்களில் கருத்து வேறுபாடு கொண்டு, தனது எதிர்ப்பை ஆவணத்தின் பின்னிணைப்பாக கொடுத்துள்ளார். அதில் கூறியுள்ள விஷயங்களும் நியாயமாக இருக்கின்றன. உதாரணமாக, எடுத்துக்கொண்ட 10 காரணிகளில் தனித்தனியாக மதிப்பெண் வழங்கியபின், அவற்றின் சராசரியை (average) மொத்த மதிப்பெண்ணாக கொள்கின்றனர். ஆனால், குப்தா இதை எதிர்க்கிறார். ஒவ்வொரு காரணிக்கும் ஒரு எடை (weight) கொடுத்து, weighted average எடுக்க வேண்டும் என்கிறார். எடைகளை principal component analysis (அப்படின்னா என்ன? விக்கிபீடியா பாக்கணும்) மூலம் நிர்ணயிக்க வேண்டும் என்கிறார். இந்த வகையில் சில காரணிகள் அதிகமாகவும், சில குறைவாகவும் முக்கியத்துவம் பெறும். அதே போல எந்த காரணிகள் எடுப்பது என்பதிலும் வேறுபாடு கொள்கிறார்.

    எனக்கும் weighted average தான் சரி என படுகிறது. அதே போல சில காரணிகளிலும் உடன்பாடு இல்லை. உதாரணமாக, சுகாதாரம் என்பதை infant mortality rate (IMR) என்ற ஒற்றை எண் மூலம் அளக்கின்றனர். எத்தனை மருத்துவர்கள் உள்ளனர் எத்தனை மருத்துவமனைகள் உள்ளன போன்றவற்றையும் கணக்கில் எடுக்க வேண்டும் என்பது என் எண்ணம். ஆனால், சுகாதாரம் தொடர்பான பல விஷயங்களுக்கும் IMR எண்ணிற்கும் உள்ள நேரடி தொடர்பு (correlation) பற்றி ஒரு ஆராய்ச்சி கட்டுரையை மேற்கோள் காட்டுகின்றனர்.

    // வறுமைக் கோட்டை நிர்ணயிப்பதிலோ இல்லை மாநிலங்களின் வளர்ச்சியை மதிப்பிடுவதிலோ உள்ள இத்தகைய முதலாளித்துவ பொருளாதார ஆய்வுமுறைகளை நாங்கள் ஏற்பதில்லை. //

    // பத்ரி சேஷாத்ரி உள்ளிட்ட மோடி ரசிகர்களும் இத்தகைய ஆய்வு முறைகளைக் கொண்டுதான் குஜராத்தில் மாபெரும் சாதனை நிகழ்த்தப்பட்டிருப்பதாக பிரச்சாரம் செய்கின்றனர் //

    இந்த கருத்து எனக்கு ஏற்பில்லை. என் புரிதலின் படி, பத்ரி சேஷாத்ரி போன்றோர் GDP, தொழில் வளர்ச்சி ஆகியவற்றில் கவனம் செலுத்துகின்றனர். நீங்கள் அடிமட்ட மக்கள் வாழ்வுநிலையில் கவனம் கொள்பவர்கள். இந்த ஆவணம் எடுத்துக் கொண்ட 10 அலகுகள் பெரும்பாலும் உங்களது கோட்பாட்டிற்கு அருகில் இருப்பவை. பத்து அலகுகள், அவற்றின் உப-அலகுகள், உதாரணத்திற்கு:

    Income : Average consumption
    Education : School attendance (primary and high school)
    Health : IMR
    Percentage of households having electricity, sanitation, water supply
    Female literacy
    SC/ST polulation fraction
    Inclusion: Percentage of households having bank account
    Urbanization
    Transportation network

    இதில் பெரும்பாலானவற்றில் அதிக மதிப்பெண் பெற மக்கள் அனைவரும் முன்னேற வேண்டும் என்பது முக்கியம். பணக்காரர்கள் மட்டும் மேலே சென்றால் போதாது. மறுபுறம், வலது சாரியினர் வெறும் GDP, சாலை வசதிகள் போன்றவற்றை மட்டும் கணக்கில் எடுக்க கூடும். அந்த வகையில் இது நீங்கள் விரும்பும் மக்கள் நல index எனலாம். குஜராத் கீழே இருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கக் கூடும்.

    ஒவ்வொரு காரணிக்கும் மதிப்பெண் வழங்குவதில் இவர்கள் பயன்படுத்தும் சூத்திரம் மிக எளிமையானதாக உள்ளது. எனவே, தமிழகம் 0.34, குஜராத் 0.49 என்பது misleading என்பது என் எண்ணம். 10 காரணிகளில் இந்த மாநிலங்கள் எந்நிலையில் உள்ளன என பார்ப்பதில் ஆவல் உள்ளது. ஆனால், ஆவணத்தில் இந்த புள்ளிவிவரங்கள் கொடுக்கப்படவில்லை. சுட்டி மட்டுமே தரப் பட்டுள்ளது. இவற்றையும் பார்த்து விட்டு ஏதாவது இருந்தால் எழுதுகிறேன்.

  14. Look who is talking he was appointed by congress gov you think he is going to say anything good about modi are u surprised that he said that?

    I have a question for vinavu if you hate modi then who do want as next pm chindbaram, manmohan,Sonia Rahul,priyanka or Robert Vadrav ?

  15. ரகுராம் சோனியாவின் கைக்கூலி.காங்கிரசின் ஏஜென்ட்.இதுநாடரந்த உன்மை

  16. தனிநபர் மாத நுகர்வு
    அரசாங்கம் கொடுத்த இலவச சம்பளம் இல்லாமல் இதன் மதிப்பீடு
    வெளிநாட்டு பண வரவு இல்லாமல் ஏற்றுமதி மற்ற தொழில்கள் மூலம் பெரும் வருமானம்
    விவசாய பொருட்களை ஏற்றுமதி செய்கிறதா இல்லை சார்ந்து உள்ளதா

    கல்வி
    அரசாங்க கல்வி பெரும் மத்திய தர குடுமத்தினர் எண்ணிக்கை
    தனியார் கல்விக்கு மக்கள் செலவிடும் தொகை
    மாணவர் innovation

    மருத்துவம், சுகாதாரம்
    அரசாங்க மருத்துவ வசதி பெரும் மக்களின் எண்ணிக்கை

    வீட்டு உபயோக பொருட்கள்
    இலவசம் இல்லாமல் மக்கள் தாமாக வாங்கிய பொருட்கள்

    வறுமை வீதம்
    இலவசம் பெறாதோர் எண்ணிக்கை

    பெண்களின் கல்வியறிவு

    ஆதிதிராவிடர்/பழங்குடியினர் சதவீதம்
    வளர்ச்சியை இதை வைத்து எப்படி கணிக்கிறார்கள் ?

    நகர மயமாக்கல் வீதம்
    திட்ட மிட்ட நகர மயமாக்கள் , தண்ணீர் மின்சார போக்குவரத்து ,பூங்கா வசதிகளுடன்

    நிதி சேவைகள் பரவலாக கிடைத்தல்
    சாலை இணைப்புகள்

    • // ஆதிதிராவிடர்/பழங்குடியினர் சதவீதம்
      வளர்ச்சியை இதை வைத்து எப்படி கணிக்கிறார்கள் ? //

      இந்த ஆவணத்தின் முக்கிய நோக்கம் மத்திய அரசு வருவாயை ஒவ்வொரு மாநிலத்துக்கும் எவ்வளவு பிரித்துக் கொடுப்பது என்பது குறித்த பரிந்துரை செய்வது. அந்த வகையில் ஒவ்வொரு மாநிலமும் எவ்வளவு முன்னேறியுள்ளது என கணக்கிடுகிறார்கள். பின்தங்கிய மாநிலங்களுக்கு அதிக பணம் தரப்படும். SC/ST சதவீதம் அதிகம் இருந்தால் அதிக பணம் தரப்படவேண்டும் என்ற கொள்கை அடிப்படையில் இதையும் ஒரு காரணியாக சேர்த்துள்ளனர்.

      இதையும் ஒரு காரணியாக சேர்த்து கணக்கிடப்படும்போது அதிக SC/ST சதவீதம் இருந்தால் அந்த மாநில பின்தங்கிய நிலைக் குறியீடு அதிகரிக்கும்! ஆனால், SC/ST அதிகம் இருந்தால் பின்தங்கிய மாநிலம் என்று அவர்கள் சொல்லவில்லை. மேலே சொன்ன நோக்கத்தின் காரணமாகவே இதையும் கணக்கில் கொண்டுள்ளனர். இது குறித்து ஆவணம் விளக்கியுள்ளது. இந்த ஆவண குழுவின் ஒரு உறுப்பினரான குப்தா இந்த காரணியை சேர்க்கக் கூடாது என்று முரண்டு பிடித்து தனது அதிருப்தியை ஆவணத்தின் பின்னிணைப்பில் தெரிவிக்கிறார். (உடனே, அவர் பார்ப்பனீயம் பார்க்கிறார் என சொல்லி விடாதீர்கள். ஏன் இதை சேர்க்கக் கூடாது என பொருளாதாரவியல் தொடர்பான விளக்கம் கொடுத்துள்ளார்).

      குஜராத்தில் SC/ST சதவீதம் சுமார் 7%, தமிழகத்தில் சுமார் 20%. எனவே இந்த காரணியில் தமிழக பின்தங்கிய நிலை குறியீடு அதிகரித்திருக்கும். இருந்தும் தமிழகம் மொத்த பின்தங்கிய நிலை குறியீடு 0.34 பெற்றுள்ளது. குஜராத் 0.49 பெற்றுள்ளது! (குறைவான மதிப்பெண் என்றால் முன்னேறிய மாநிலம் என்று அர்த்தம்).

  17. According to sub-editorial of Times of India dated 2nd Oct entitled as “State of States”,Raghuram Rajan”s panel has recommended 25% the central allocation to a state be tied to improvement in performance and TOI has suggested an incentive of 50%.It is also reported by TOI that the formula for allocation of funds has been designed in a way to ensure that a state”s improvement in it”s development index does not result in a loss of central funds.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க