privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஈழம்மோடி ஒரு முகமூடி – சென்னை கூட்டம் – தொகுப்பு, புகைப்படங்கள்

மோடி ஒரு முகமூடி – சென்னை கூட்டம் – தொகுப்பு, புகைப்படங்கள்

-

சுயமரியாதை நெருப்பே சுடர் விட்டு எழு ! இந்து மத பாசிசத்தை நெருப்பிலிடு !
புரட்சிகர அமைப்புக்களின் நூல் வெளியீடு

பாரதீய ஜனதாவின் பிரதமர் வேட்பாளராக அறிவிகப்பட்டுள்ள மோடிக்கு புனித பிம்பம் கொடுக்க தமிழினவாதிகள் தயாரக இருக்கின்ற சூழலில் அந்த  முகத்திரையை கிழித்து தொங்க விடும் புரட்சிகர அமைப்புக்கள்  நடத்த இருந்த பொதுக்கூட்டம் அரங்கக்கூட்டமாக – நூல் வெளியீட்டு  நிகழ்ச்சியாக- எழும்பூர் தர்மபிரகாஷ் மண்டபத்தில் 26.10.13 அன்று மாலை 6 மணிக்கு மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், தொழிலாளர்கள் மற்றும் உழைக்கின்ற மக்களின் பங்களிப்புடன் நடந்தேறியது இது பெரியார் பிறந்த மண் என்பதை பறை சாற்றும் விதமாக…

18.10.13 அன்று முதலில் கொடுக்கப்பட்ட பொதுக்கூட்ட அனுமதி நரேந்திரமோடியின் வருகை காரணமாக  ரத்து செய்யப்பட்டு நெடிய போராட்டத்திற்கு  பிறகு அரங்ககூட்டமாக ,  திருச்சியில்மக.இ.கவின் பொதுச் செயலர்   பேசிய  உரையை புத்தகமாக  வெளியிடும் நிகழ்ச்சியாக  நடத்தத் திட்டமிடப்பட்டது. 23ம் தேதி அனுமதி பெறப்பட்டது முதல் நகரமெங்கும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. சென்னை  நகரத்தின் பல பகுதிகளில் “நரேந்திரமோடி இந்தியாவின் ராஜபட்சே” என்பதை உழைக்கும் மக்களிடம் கொண்டு சென்றன புரட்சிகர அமைப்புக்கள்.  நிகழ்ச்சி நடந்த பகுதியை நெருங்கும் போதே இதுதான் சரியான பாதை என்பதை அறிவிக்கும் விதமாக செங்கொடிகள் வழி காட்டின. மண்டபத்திற்கு வெளியே குஜராத் எதில் முதலிடம் என்ற கேள்வியை தாங்கிய பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. மாலை 5 மணி முதல் வந்து கொண்டிருந்த மக்களின் கூட்டம் 6 மணிக்கு  மண்டபத்தை  நிறைத்த போது நிகழ்ச்சி தொடங்கியது.

கூட்டத்திற்கு தலைமை வகித்த புதிய  ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநிலத்தலைவர் தோழர்.முகுந்தன் பார்ப்பன பாசிசத்துக்கு  எதிராக புரட்சிகர அமைப்புக்கள் தொடர்ந்து போராடி வருவதையும் குறிப்பாக நரேந்திர மோடியின் முகத்திரையை கிழிக்க தமிழகமெங்கும் உழைக்கும் மக்களை அணி திரட்டுவதையும்  தெரிவித்து உழைக்கும் மக்களுக்கு எதிரான இந்த நரேந்திர மோடியை விரட்டியடிக்க வர்க்கமாக  அணி திரள வேண்டிய அவசியத்தை பதியவைத்தார்.

அடுத்ததாக பேசிய பெங்களூரு உயர் நீதிமன்ற  வழக்குரைஞர்  தோழர்.பாலன்  ” நரேந்திர மோடி ஒரு சைக்கோ கொலைகாரன் தான், இப்படிப்பட்ட சைக்கோவினால் தான் மக்களை கொல்வதற்கு வகை வகையாக திட்டமிட்டு ரசிக்கமுடிகிறது” என்பதையும் “மோடி தனக்கு  கூட்டாளிகளாக இருந்தவர்களையே  கொலை செய்து தன்னுடைய பதவியை காப்பாற்றிக்கொண்ட வக்கிரத்தையும்  முசுலீம் மக்களுக்கு மட்டுமல்ல சபர்மதி ரயில் பெட்டியை தன்னுடைய  சுய நலத்துக்காக எரித்து இந்து சாமியார்களை கொன்ற மோடி தண்டிக்கப்பட வேண்டியவன் தான்” என்பதை தனக்கே உரிய பாணியில் நய்யாண்டியாக பேசினார். மோடி அமெரிக்காவின் கடைக்கோடி கள்ளப்பிள்ளை என்று கூறும் போது  அரங்கிலிருந்தவர் எழுப்பிய கைத்தட்டல் அதை அங்கீகரித்ததாக இருந்தது.

மோடி : வளர்ச்சி என்ற முகமூடி  நூலை வழக்குரைஞர் பாலன் வெளியிட மக்கள் கலை இலக்கியக்கழகத்தின் சென்னைக்கிளைச் செயலர் தோழர் வெங்கடேசன் பெற்றுக்கொண்டார்.

ஏற்புரை வழங்கிய மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநிலப் பொதுச் செயலர் தோழர் மருதையன் “அரங்கக்கூட்டத்திற்கு போலீசு அனுமதி தேவை இல்லை என்பது வாயளவில் இருந்தாலும் நடைமுறை வேறொன்றாக இருக்கும் பாசிசச் சூழலில் வேறு வழியின்றி புத்தக வெளியீடு நிகழ்ச்சியாக கூட்டத்தை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டதைக் கூறி  மோடி உழைக்கும் மக்களுக்கு விரோதியாக இருந்து பன்னாட்டு, தரகு முதலாளிகளுக்கு குஜராத்தை தாரை வார்த்து கொடுத்து இருப்பதையும் அதற்கு ஏற்றபடி அந்த மாநிலத்தை, பல ஆண்டுகள் மதத்தின் பெயரால் பின்னோக்கி தள்ளியிருப்பதையும் எடுத்துக் கூறினார்.

குஜராத ஆக மொத்தத்தில் உழைக்கும் மக்களுக்கான தேசம் அல்ல, பன்னாட்டு தரகு முதலாளிகளின் வேட்டைக்காடாக மாற்றியது போல இந்த நாட்டையே சுடுகாடாக்குவது தான் மோடியின்,  ஆர்.எஸ்.எஸ், பீஜேபின் கனவு இதை நாம் அனுமதிக்க முடியுமா என்று கேள்வி கேட்டு  மனித குலத்தின் விரோதியான பாசிசக் கொடுங்கோலன் ஹிட்லரை அந்த நாட்டின் அதிபராக்க அந்த நாட்டு முதலாளிகள் என்னென்ன முயற்சிகள் மேற்கொண்டனரோ அதே முயற்சிகளை பாசிச மோடிக்கும் மேற்கொள்ளப்படுவதையும் சுட்டிக் காட்டினார்.  நாட்டை கொள்ளையடிக்க ஏதுவாக ஒட்டு மொத்த அரசமைப்பே இந்த பாசிச வெறியனை தலைவனாகக் கொண்டுவர எத்தனிக்கும் போது  அவன் செய்த குற்றத்திற்காக இந்த உளுத்துப் போன சட்டத்தால் தண்டிக்க முடியுமா? உழைக்கும் மக்களின் எழுச்சியே இந்த பாசிஸ்டை தூக்கிலேற்றும். அந்த எழுச்சிக்கு மக்களை அணிதிரட்டுவதே புரட்சிகர அமைப்புக்களின் கடமை, புரட்சிகர அமைப்புக்களோடு இணைந்து பெரியார் பிறந்த மண்தான் இது என்பதை நிலை நாட்ட அனைவருக்கும் அறை கூவல் விடுத்தார்.

இது சுயமரியாதையின் பூமிதான் என்பதை நிலை நாட்ட மோடியை விரட்டியடித்து பார்ப்பன பாசிசத்துக்கு சவக்குழி தோண்டுவது நக்சல்பாரிகள்மட்டும்தான் என்பதை ம.க.இ.க.வின் மையக் கலைக்குழு பறைசாற்றியது.

முசுலீம் மக்கள், மாணவர்கள்,தொழிலாளர்கள், பெண்கள் என பெருந்திரளான மக்கள் கலந்து கொண்ட இந்த அரங்கக்கூட்டம்  மோடியின் முகத்திரையினை கிழித்தது என்றால் அது மிகை இல்லை. கல்லூரி மாணவர்கள் மோடியை விரும்புகிறார்கள் என்று பிஜேபியினர் புரூடா விட்டுக்கொண்டு இருக்கிறார்கள். மாணவர்கள் பலருக்கு மோடி என்றால் யாரென்றே தெரியவில்லை என்பதுதான்  உண்மை. அப்படி தெரியாமல் இருப்பதுதான் தவறு என்று மாணவர்களின் பார்ப்பன பாசிசத்தின் கொடுங்கோன்மையை விளக்கி அதற்கு எதிராக அணிதிரட்டுவது புரட்சிகர அமைப்புகள்தான் என்பது இதோ நடைமுறையில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

மாவீரன்   நெடுமா உள்ளிட்டவர்களோ முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னத்தை திறக்க ராஜபட்சேவிடம் நெக்லஸ் வாங்கியவர்களுக்கு அழைப்பு விடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஈழத் தமிழர்களின் எதிரியான பீஜேபிக்கு மேக்கப் போட்டு  நம் கழுத்தில் ஈரத்துணியை போட்டு அறுக்கும்  தமிழருவி மணியன், வைகோ உள்ளிட்டவர்களை என்ன செய்யப்போகிறோம்? இவர்கள் தமிழினவாதிகளா? தமிழினத்தை அழிக்க அந்த வியாதிகளா?

புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, சென்னை

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]