Thursday, June 20, 2024
முகப்புகட்சிகள்அ.தி.மு.கபுதுச்சேரி தோழர்கள் மீது அதிமுக வெறிநாய் ஓம்சக்தி சேகர் கும்பல் தாக்குதல் !

புதுச்சேரி தோழர்கள் மீது அதிமுக வெறிநாய் ஓம்சக்தி சேகர் கும்பல் தாக்குதல் !

-

ன்பார்ந்த உழைக்கும் மக்களே !

கரையான் கட்டிய புத்துக்குள் கருநாகம் புகுந்ததைப்போல தமிழ் நாட்டில் தமிழ் மக்களால் கட்டப்பட்ட சிதம்பரம் நடராசர் கோயிலில் பார்ப்பன தீட்சிதர்கள் புகுந்துக்கொண்டு இந்த கோயில் தங்களுக்குத்தான் சொந்தம்! இங்கு தமிழர்களுக்கு எவ்வித உரிமையும் கிடையாது, கோயிலில் தமிழில் பாடக்கூடாது என்றும், தமிழ் மொழி வேசி மொழி என்றும், தமிழில் பாடினால் தீட்டு என்றும், தமிழன் வேசி மகன் என்றும் இழிவுப்படுத்தி பல நூற்றாண்டுகளாக கொட்டம் அடித்து வந்தார்கள்.

நந்தனாரையும், வள்ளலாரையும் சாதிவெறி பிடித்துஎரித்து சாம்பலாக்கி விட்டு ஜோதியாகி விட்டார்கள் என்று வரலாற்று உண்மையை மறைத்த கொலைகார கிரிமினல்கள். கோயிலின் ஆண்டு வருமானம் 30,000 ரூபாய்தான் என்று தில்லை நடராசன் தலையிலும், உயர் நீதிமன்ற நீதிபதி தலையிலும் அடித்து சத்தியம் செய்து ஆண்டு வருமானம் 1 கோடி ரூபாயை ஆட்டையை போட்டும், கோயிலின் தங்க ஆபரணங்களை திருடியும் ஏமாற்றும் திருடர்கள். இந்த சாதிவெறி பிடித்த, இனவெறி பிடித்த, கொலைவெறி பிடித்த அரக்கர்களின் கொட்டத்தை அடக்கியது 2008 மார்ச்-2 ல் எமது தோழமை அமைப்பான மனித உரிமை பாதுகாப்பு மையம் மற்றும் பு.ஜ.தொ.மு , வி.வி.மு, பு.மா.இ.மு ஆகிய அமைப்புகள்.

எந்த மொழியை வேசி மொழி என்றார்களோ அந்த மொழியால், எந்த தமிழனை வேசி மகன் என்றார்களோ அந்த தமிழனால் தில்லை நடராசன் சன்னதியில், சிற்றம்பல மேடையில் தேவாரம், திருவாசகம் முழங்கப்பட்டது. வெண்தாடி வேந்தன் பெரியாருக்கு பிறகு வீழ்ந்த முதல் அடி. அடுத்து கோயிலின் மீது தீட்சிதர்கள் செலுத்தி வந்த ஆதிக்கத்தை ஒழித்து அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. இது பார்ப்பன கும்பலுக்கு விழுந்த இரண்டாவது அடி.

இவ்வாறு தொடர்ச்சியாக விழுந்த அடியால் நிலை குலைந்து போன பார்ப்பன தீட்சித கும்பல் வெறி கொண்டு பார்ப்பன பாசிச ஜெயாவையும், சு.சாமி, சோ மற்றும் ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இந்து பரிவார கும்பலை நாடி தனது அதிகாரத்தை மீண்டும் கோயிலில் நிறுவிக் கொள்ள,  தமிழக ஜெயலலிதா அரசு முதற்கொண்டு, உச்ச நீதி மன்றம் வரை தனது பூணூல் அதிகாரத்தை கொண்டு, கோயிலில் தமிழர்களின் வழிபாட்டு உரிமையை மீண்டும் நசுக்கிவிட முயல்கிறது. எந்த தமிழர்களின் ஓட்டை பெற்றுக்கொண்டு முதலமைச்சராக இருக்கிறாரோ அந்த தமிழர்களின் கோயில் வழிபாட்டு உரிமையை நசுக்கவும், கோயிலை தீட்சிதர்களுக்கு சொந்தமாக்கவும் உதவி வருகிறார் பார்ப்பன பாசிச ஜெயா. ஆகையால்தான் ஆண்டுக்கு 1 கோடிக்கு மேல் வருவாய் வருவதையும் பார்க்காமல், இவர் ஆட்சி பொறுப்புக்கு வருவதற்கு காரணமான மக்களை இழிவு படுத்துவதையும் அவர்களது வழிப்பாட்டு உரிமை பறிக்கப்படுவதையும் பார்க்காமல் தீட்சிதர்களின் வழக்குக்கு எதிராக ஒரு சிறு துரும்பு எதிர்ப்பைக் கூட காட்டாமல் தீட்சிதர்கள் வெற்றி பெறும் வகையில் சட்ட ரீதியாக அனைத்து வாய்ப்புகளையும் மறைமுகமாக செய்து வருகிறார்.

இதை அம்பலப்படுத்திய பிரசுரத்தை மக்களிடம் வினியோகித்து, ஜெயாவை கண்டித்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட எமது பு.ஜ.தொ.மு தோழர்களை புதுச்சேரி சட்டமன்ற அ.தி.மு.க எம்.எல்.எ வெறிநாய் ஓம் சக்தி சேகர் தனது ரவுடிகளுடன் பிரச்சாரம் செய்யும் இடத்திற்கே வந்து மூன்று தோழர்களை சட்டையை பிடித்து கிழித்து கடுமையாக அடித்து தோழர்கள் மக்கள் மத்தியில் நிதி திரட்டி வைத்திருந்த உண்டியலை பிடிங்கிக் கொண்டும் போலிஸ் நிலையத்தில், எங்களது அம்மாவை எப்படி விமர்சிக்கலாம்? என்றும் இவர்கள் மக்களிடம் மிரட்டி காசு வாங்குகிறார்கள் என்றும்  புகார் கொடுத்து விட்டு பத்திரிக்கைக்கு பேட்டி கொடுத்து விட்டு சென்று விட்டனர்.

தோழர்கள் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நிலையறிந்து மற்ற தோழர்கள் காவல் நிலையத்துக்கு சென்றவுடன் இன்ஸ்பெக்டர், “நமது தோழர்களை பார்த்து உங்களை பற்றி எனக்கு தெரியும் நீங்கள் மக்களிடம் கட்டாயப்படுத்தி வங்கமாட்டீர்கள், 1 ரூபாய் கொடுத்தாக் கூட வாங்கிகிட்டு செல்வீங்க, அவர்களுக்கு உங்களை பற்றி தெரியவில்லை. நீங்கள் உங்கள் தோழர்களை அழைத்துச் செல்லுங்கள்” என்று அனுப்பி வைத்தார்.

நமது சார்பாக ஓம் சக்தி சேகரை கொலை முயற்சி வழக்கில் கைது செய்ய வேண்டும் என்று புகார் கொடுக்கப்பட்டுள்ளது. ஓட்டு பொறுக்கும் போது மக்களின் காலில் விழுந்து ஓட்டு பொறுக்குவது, பிறகு மக்களை காலில் போட்டு மிதிப்பது இதுதான் ஓட்டு சீட்டு அரசியலின் ரவுடித்தனமான ஜனநாயகம். இந்த போலி ஜனநாயகதத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். தமிழர்களின் ஓட்டு வாங்கி காசு சம்பாரிக்கும் அ.தி.மு.க ஜெயா கும்பல் தமிழர்களின் குடலையே அறுக்கும் சதிகார கும்பல் என்பதை பார்ப்பன ஜெயா மட்டும்மல்ல இவரின் அடிமை ரவுடி ஓம் சக்தி சேகர் எம்.எல்.எ வும் நிரூபித்து காட்டி விட்டான்.

இந்த சம்பவத்தை நிறைவேற்றுவதற்கு ஓம்சக்தி சேகர் பத்திரிக்கையாளர்களை கூடவே அழைத்து வந்துதான் தனது காலித்தனத்தை அரங்கேற்றியுள்ளான். பத்திரிகை ஊடகங்களோ அதாவது தினத்தந்தி, தினகரன், தினமலர் ஆகிய பத்திரிகைகள் பிரசுரத்தில் உள்ள கோரிக்கைகளையும் தோழர்களின் பிரச்சாரத்தின் முக்கியத்துவத்தையும் பார்க்காமல் பத்திரிகையின் நாணயத்திற்கு விரோதமாக ”மக்களிடம் பணம் வசூல் செய்தார்கள்” என்றும் தோழர்கள் “தாக்கப்பட்டவுடன் தோழர்களில் சிலர் ஓடிவிட்டார்கள்” என்றும் கொச்சையாக கம்யூனிஸ்டுகளின் பிரச்சார வடிவத்தை இழிவுபடுத்தும் வகையிலும் ஓம் சக்தி சேகர் சொன்னதை அப்படியே வாந்தி எடுத்தும் எழுதியுள்ளார்கள்.

மேலும், தமிழர்களின் உரிமையான தில்லைக் கோயிலை தீட்சிதர்களுக்கு சொந்தமாக்க முயலும் அதிமுக ஜெயாவை விமர்சித்து எழுத துப்பில்லாமல், ஒரு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி (எம்எல்ஏ) காலித்தனமாக நடுரோட்டில் ஜனநாயகத்திற்கு உட்பட்டு பிரச்சாரம் செய்த தோழர்களை ஜனநாயத்திற்கு விரோதமாக, தோழர்களைத் தாக்கி நடந்து கொண்டதை பற்றி எழுத துணிவில்லாமல் கயமைத்தனமாக பார்ப்பனியத்திற்கு ஆதரவாக மக்கள் விரோத ரவுடிக் கும்பலுக்கு ஆதரவாக செயல் படும் போக்கில் நடந்து கொண்ட இப்பத்திரிகைகளை எங்கள் அமைப்பின் சார்பாக வன்மையாக கண்டிக்கின்றோம்.

மக்கள்தான் இந்த உண்மையை புரிந்து கொண்டு இந்த பார்ப்பன பரிவார ஜெயா கும்பலை விரட்டியடிக்க வேண்டும். தில்லை கோயிலை மீட்டெடுத்து தமிழர்களின் உரிமையை நிலைநாட்ட வேண்டும் என உங்களை அறைகூவி அழைக்கிறோம். அதிமுக வெறிநாய் ஓம்சக்தி சேகர் ரவுடி கும்பலுக்கு புதுச்சேரி உழைக்கும் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

இவண்  :
பு.ஜ.தொ.மு – புதுச்சேரி

 1. இவன் ஒரு ரியல் எஸ்டேட் தாதா. புஜதொமுவினர் இவனுக்கு தக்க பாடம் புகட்டவேண்டும்.

 2. இந்த எம் எல் ஏ சேகர் வயதில் மூத்த தோழர் ஒருவரை அடித்து பணத்தை பிடுங்குவதை தினகரன் பத்திரிக்கையில் பார்த்தேன்.ஐந்தாறு போட்டோக்கள் போட்டிருந்தனர். அப்பட்டமான கொலை முயற்சி இது. அவனை பிடித்து உடனே ஜெயிலில் போடணும். அந்தப் பகுதி மக்கள் அவனை ஆட்சியில் அமர்த்திய மக்கள் திரண்டு இன்னிக்கி அவனை மொத்தணும். அப்படி மொத்தினா அவங்க ஆண்மையானவங்கன்னு சொல்லலாம்.

 3. காசுகாக கூவும் இந்த களவாணி கும்பல் அவசரப்பட்டு கைநீட்டி விட்டார்கள். கம்யூனிஸ்ட்களின்,மக்களின் உண்மையான வலிமை இந்த சைக்கோ கும்பலுக்கு புரியும் நாள் வெகு தொலைவில் இல்லை.

 4. எனதருமை தொழிலாளர் தோழர்களே

  இது ஆரம்பம் மட்டுமே. இனிமேல்தான் மெயின் பிக்சர்.

 5. கட்டப்பன்ஜாயத்துச் செய்து, மக்கள் காசைப் பிடிங்கி ஊரில் இருப்பவனைஎல்லாம் ரியல் எஸ்டேட் தொழிலில் ஏமாற்றிப் உண்டு-குடித்துப் பிழைத்து வரும் அந்த நாய் குலைப்பதற்கா நாம் பயந்தோடிவிடுவோம்? அவனுக்குச் செருப்படி வாங்கும் ஆசை பெருகிவிட்டது போலும். அப்பட்டமான புகைப்பட ஆதாரங்கள் இருந்தும், யார் யாரிடம் தகராறு செய்தது என்பதை நேர்மையாக எழுத வக்கில்லாத, எழுத விரும்பாத பத்திரிக்கைகள் ப்ராத்தல் தொழில் செய்து பிழைக்கலாம்.

 6. நம்ம சொக்காய புடிக்காதவரைக்கும், நமக்கு கவலை இல்லைங்கிறமாதிரி போற போக்கு மக்களிடம் இருக்கு, அது அவங்க பாக்கிற சினிமா, சீரியல், கடவுள் நம்பிக்கை, வழிபாடு மூலம் தெளிவான காரியவாதியா மாத்திடுது. இதிலிருந்து வெளியே வந்தாதான், ரோட்ல தோழர்கள், யாருக்கு பேசறாங்க, என்ன பேசறங்கனு புரிஞ்சிக்க முடியும். இல்லன்னா நாம முட்டாளாகவும், அடிமையாகவும் தான் இருப்போம்.

 7. மக்களே, என்ன நடந்தாலும் தயவு செய்து அமைதியா மட்டும் போகாதிங்க, தாங்கமுடியல……

 8. ஓம்சக்தி சேகர்ரை செருப்பால் அடித்து பாடம் புகட்டும் செய்தி வர வேன்டும்…பலிக்கு பலி பாடம் புகட்டுவொம்…விரைவில்…

  • ஆத்தாவே ஒருநாள் கிழிஞ்ச செருப்ப
   எடுத்து இவனை அடிக்கிற நாள் வெகு தொலைவில் இல்லை!

 9. நக்கிப் பிழைக்கும் நாய் சேகர் ஒரு ______ மகன். இவனுடைய வேட்டி உருவி தெருவில் துரத்த வேண்டும்….அதிமுக அடிமை நாய்க்கு கேடு காலம் நெருங்கி விட்டது.

 10. நாம என்ன ஆயுதம் எடுக்கனும்னு எதிரிதான் முடிவு பண்ணுறான்….

 11. //இந்த சம்பவத்தை நிறைவேற்றுவதற்கு ஓம்சக்தி சேகர் பத்திரிக்கையாளர்களை கூடவே அழைத்து வந்துதான் தனது காலித்தனத்தை அரங்கேற்றியுள்ளான். பத்திரிகை ஊடகங்களோ அதாவது தினத்தந்தி, தினகரன், தினமலர் ஆகிய பத்திரிகைகள் பிரசுரத்தில் உள்ள கோரிக்கைகளையும் தோழர்களின் பிரச்சாரத்தின் முக்கியத்துவத்தையும் பார்க்காமல் பத்திரிகையின் நாணயத்திற்கு விரோதமாக ”மக்களிடம் பணம் வசூல் செய்தார்கள்” என்றும் தோழர்கள் “தாக்கப்பட்டவுடன் தோழர்களில் சிலர் ஓடிவிட்டார்கள்” என்றும் கொச்சையாக கம்யூனிஸ்டுகளின் பிரச்சார வடிவத்தை இழிவுபடுத்தும் வகையிலும் ஓம் சக்தி சேகர் சொன்னதை அப்படியே வாந்தி எடுத்தும் எழுதியுள்ளார்கள்.//

  தினத்தந்தி,தினகரன்,தினமலர் போன்றவை மக்கள் நலனை மட்டுமே குறிகோளாய் கொண்ட சமுக அமைப்புகளால் நடத்த படுவது கிடையாது… மாறாக லாபம் ஒன்றையே குறிகோளாய் செயல்படும் முதலாளிகளால் நடத்தப்படுவது … அதிலும் குறிப்பாக தினகரன் ஒரு மோசமான நயவஞ்சக மக்கள் விரோத பத்திரிக்கை … மற்றைய பத்திரிகைகள் அடக்கி செய்தியை மட்டும் வாசிக்க. தினகரன் படத்தோடு போட்டு செய்தி வெளியிட்டது ஏதோ சமுக அக்கறையினால் அல்ல. வெறும் நக்கல் அடிப்பதற்கு மட்டும் தான். அடிப்படையில் தினகரன் ஒரு கம்யுனிஸ்ட் விரோத பத்திரிக்கை. அவர்களுக்கு கம்யுனிசம் என்றால் கொஞ்சமும் பிடிக்காது. இதை பலமுறை அவர்களின் பத்திரிக்கை தலையங்கத்தில் நான் பார்த்திருக்கிறேன்

  • அதென்னவோ உண்மைதான். நானும் படத்தை பார்த்துட்டு இந்த அளவுக்கு போடறது பெரிய விஷயம்னு நினைச்சேன். கட்டுரையை மறுபடியும் படிச்சிட்டு பேப்பர புரட்டினா போராட்டம் பத்தின செய்தியே இல்ல. வெறும் படம்போட்டு கமெண்டு போட்ருக்கான்.

 12. இந்த நாய்க்கு பாடம் கட்டிய செய்தியை ஆவலுடன் எதிர் பார்த்து காத்திருக்கிறோம்….

  • //இந்த நாய்க்கு பாடம் கட்டிய செய்தியை ஆவலுடன் எதிர் பார்த்து காத்திருக்கிறோம்….//

   பாடம் அல்ல.. பாடை கட்டிய செய்தியைத்தான் நான் எதிர்பார்க்கிறேன்.

 13. ரியல் எஸ்டேட் கொல்லையன் விவசாயிகளை மிரட்டி விளைநிலங்களை விற்று வயறு வளக்கும் பன்றிபையன் எமது தோழரிடம் மண்டியிடும் வரை மக்களிடம் தீர்வுக்கு அனித்திரட்டுவோம்.அவனை மக்கள் மன்றத்தில் தண்டிப்போம் மிகவிரைவில்.வாழ்க கம்யூனிசம் வெல்க கம்யூஸ்டுகள்.

 14. பார்ப்பன பாசிச ஜெயாவின் காலை நக்கும் சுய மரியாதையற்ற, மானங்கெட்ட, ஈனப் பிறவிகளான இந்த அ.தி.மு.க அடிமைகள் மக்களுக்காக தன்னலமற்றுப் போராடும் தோழர்களைத் தாக்கியிருக்கிறார்கள். ஓம்சக்தி சேகர் போன்ற பன்றிகளை தோழர்கள் சும்மாவிடக் கூடாது. சுய மரியாதையற்ற அடிமைகளுக்கு இவ்வளவு திமிர் இருந்தால், அனைத்து உழைக்கும் மக்களின் விடுதலைக்காகப் போராடும் புரட்சிகரத் தோழர்களின் பலம் எப்படியிருக்கும் என்று இந்தப் பொறுக்கிகளுக்கு காண்பிக்கவேண்டும்..

 15. பன்றிபையன் எமது தோழரிடம் மண்டியிடும் வரை மக்களிடம் தீர்வுக்கு அனித்திரட்டுவோம்..

 16. இந்த நாய்க்கு பாடம் கட்டிய செய்தியை ஆவலுடன் எதிர் பார்த்து காத்திருக்கிறேன்…

 17. புதுச்சேரி போலிசு ஏன் ஓம்சக்தி சேகரை கைது செய்யவில்லை?

 18. நீதி! வாடை காற்று பட்டு மலரும் பூ இதழ் போல் கிடைப்பது இல்லை,
  கில்லடின் எந்திரத்தின் ஓசையில் இருந்து தான் கிடைக்கும்!

  அதற்காக விவேகம் இல்லாமல், செயல்பட முடியாது,
  இன்று சட்ட ரீதியாக,
  நாளை சரியான விதத்தில்!

  தெலுங்கான போராட்டத்தில், தங்களின் தோழர் இறப்புக்கு காரணமான ஒரு நாயை, அவன் தப்பி ஓடும் போது ரயில் நிலையத்தில் உள்ள விவசாய தோழர்களால் பிடிகப்பபட்டு, அவனை கீழே தள்ளி, ஒரு மூதாட்டி அவன் முகத்தில் சிறுநீர் கழித்து, மற்ற தோழர்களால் மிதித்தே கொன்று தூக்கி ஏறிய பட்டான்,

  அதுபோல், இதுபோன்ற எச்சி பொறுக்கி நாயுக்கும் பாடம் கற்பிக்க வேண்டும்,
  மக்களின் கோபம் எப்படி பட்டது என்று ஒருநாள் புரிய வைக்க வேண்டும்…..

  அன்று வரை கோபம் தணியாது!

 19. தெலுங்கான போராட்டத்தில், தங்களின் தோழர் இறப்புக்கு காரணமான ஒரு நாயை, அவன் தப்பி ஓடும் போது ரயில் நிலையத்தில் உள்ள விவசாய தோழர்களால் பிடிகப்பபட்டு, அவனை கீழே தள்ளி, ஒரு மூதாட்டி அவன் முகத்தில் சிறுநீர் கழித்து, மற்ற தோழர்களால் மிதித்தே கொன்று தூக்கி ஏறிய பட்டான்,

  அதுபோல், இதுபோன்ற எச்சி பொறுக்கி நாயுக்கும் பாடம் கற்பிக்க வேண்டும்,
  அன்று வரை கோபம் தணியாது!

 20. தெரு கடிக்க வந்தால் கல்லால் அடிப்பது போல், இந்த ஒம் சக்தி சேகரை அதே இடத்தில் செருப்பால் அடித்திருக்க வேண்டும், தோழர்கள் ஏன் திருப்பி அடிக்கவில்லை.

 21. தந்நலமற்றவன்தான் தலைவன் என்று உணராத மக்கள் முன்பு ,உணர்ந்தவர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து கண்டனக்குரல் எழுப்ப வேண்டும் இந்த அநாகரிகத்துக்கு.

 22. ராமர் கோவிலுக்கு உங்களால் இது போல் குரல் கொடுக்க முடியுமா

  கையால் ஆகாத பேடி தான் தோழர்கள் எனும் நீங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க