privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திதுக்ளக்குடன் போட்டி போடுகிறார் சூப்பர்மேன் கட்காரி

துக்ளக்குடன் போட்டி போடுகிறார் சூப்பர்மேன் கட்காரி

-

ந்திய மக்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தித் தர இந்தியாவின் 1 லட்சம் கிலோமீட்டர் நீள தேசிய நெடுஞ்சாலை நெடுகிலும் 200 கோடி மரங்கள் நடுவதற்கான மகா திட்டத்தை வகுக்குமாறு மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை, கப்பல் போக்கு வரத்து மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் நிதின் ஜெய்ராம் கட்காரி அதிகாரிகளை பணித்திருக்கிறார்.

எகனாமிக் டைம்ஸ் நாளிதழில் வெளியான செய்தியின்படி,

நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் மொத்த நீளம் 1 லட்சம் கிலோமீட்டர். இந்த சாலைகளில் 200 கோடி மரங்களை நடும் திட்டத்தை தயாரிக்கும்படி அதிகாரிகளிடம் கூறியிருக்கிறேன். இந்த திட்டம் வேலையில்லாதவர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தருவதோடு, சுற்றுச்சூழலையும் பாதுகாக்க வழி செய்யும்.

என்று கட்காரி கூறியிருக்கிறார்.

சூப்பர்மேன் கட்காரி
சூப்பர்மேன் கட்காரி

கடந்த பல ஆண்டுகளாக பெருமளவு அதிகரித்து விட்ட நான்கு சக்கர வாகனங்களாலும், தொழில்துறை மாசுகளாலும் சுற்றுச் சூழல் சீர்குலைந்திருக்கும் நிலையில் பெரும் எண்ணிக்கையிலான மரங்கள் நடும் திட்டம் வரவேற்கப்பட வேண்டிய ஒன்றுதான். ஆனால், அமைச்சர் கனவுகளை விற்கிறாரா அல்லது நடைமுறையை பேசுகிறாரா என்பதை நாம் சரிபார்த்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

  • இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின்படி இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் நீளம் 79,243 கிலோ மீட்டர்தான். இருந்தாலும், ஒரு பேச்சுக்கு கட்காரி சொல்லும் 1 லட்சம் கிலோமீட்டர் என்ற எண்ணிக்கையையே எடுத்துக் கொள்வோம்.
  • நெடுஞ்சாலையின் இரு புறங்களிலும் மரங்களை நடலாம். எனவே மரம் நடுவதற்கு கிடைக்கும் நீளம் நெடுஞ்சாலை நீளத்தை விட இரண்டு மடங்கு, அதாவது 2 லட்சம் கிலோமீட்டர்.
  • 2 லட்சம் கிலோமீட்டரில் 200 கோடி மரங்கள் என்றால் ஒரு கிலோமீட்டருக்கு 10,000 மரங்கள் என்றாகிறது.
  • அதாவது 1000 மீட்டருக்கு 10,000 மரங்கள் அல்லது ஒரு மீட்டருக்கு 10 மரங்கள்.
  • 1 மீட்டர் 3.28 அடிக்கு சமம். எனவே தேசிய நெடுஞ்சாலைகளின் ஒவ்வொரு அடியிலும் 3 மரங்கள் நடப்படும் என்று பொருள்படுகிறது.

மூளை சரியாக செயல்படும் யாருக்கும் ஒரு அடி நீளத்தில் 3 மரங்களை நடுவது அசாத்தியமானது என்று தெரிந்திருக்கும். தேசிய நெடுஞ்சாலையில் வளர்ந்துள்ள மரங்களின் கிளைகள் பல அடி தூரத்துக்கு நீள்கின்றன. எனவே, 200 கோடி மரங்களை நடப் போவதாக கட்காரி சொல்வது சுத்தப் பொய். அவரது சகாவான பிரதமர் மோடி, 2012 குஜராத் சட்டமன்ற தேர்தலின் போது இதே போல 5 ஆண்டுகளில் 50 லட்சம் வீடுகள் கட்டப்படும் என்று ஒரு கனவை விற்றுக் கொண்டிருந்தார். குஜராத்திகளுக்கு 50 லட்சம் வீடுகள் கிடைக்கப் போவதுமில்லை, இந்தியர்களுக்கு 200 கோடி மரங்கள் கிடைக்கப் போவதுமில்லை என்பதுதான் நிதர்சனம்.

இந்திய மக்கள் தொகையில் 20% பேரை தனக்கு ஓட்டு போட வைத்து மோடி பிரதமராகி விட்டார் என்பதாலேயே பதவி ஏற்ற பிறகும் அவரது அமைச்சர்கள் கனவுகளை விற்றுக் கொண்டிருக்க முடியாது. தேர்தல் முடிந்து விட்டது, எனவே உண்மைக்கு புறம்பான பிரச்சாரங்களுக்கான நேரமும் முடிந்து விட்டது என்பதை அவர்கள் உணர வேண்டும்.

நன்றி : Truth of Gujarat

ஆங்கிலத்தில் மூலக்கட்டுரை : Superman Gadkari wants to plant 3 trees every feet of Indian National Highway – Pratik Sinha

தமிழில் : பண்பரசு