privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திகாவிரி டெல்டா, முல்லைப் பெரியாறு போராட்டச் செய்திகள்

காவிரி டெல்டா, முல்லைப் பெரியாறு போராட்டச் செய்திகள்

-

மீத்தேன் திட்ட எதிர்ப்பு போராட்டக் குழு பத்திரிகை செய்தி (13-1-2015)

போகிப் பண்டிகை திருநாளில் மீத்தேன் திட்ட ஒப்பந்த நகலை வீடுதோறும் எரித்துச் சாம்பலாக்குவோம்!

மீத்தேன் திட்ட எதிர்ப்புப் போராட்டக் குழு, விவசாயிகள் விடுதலை முன்னணி ஆகிய அமைப்புகளின் சார்பாக உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கும், காவிரி டெல்டா மாவட்டங்களின் விவசாயிகள், வணிகர்கள், தொழிலாளர்கள் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

மீத்தேன் திட்ட எதிர்ப்புப் போராட்டக் குழு சார்பில் காவிரி டெல்டா பகுதிகளில் மீத்தேன் திட்ட ஆபத்துகளை விளக்கிடும் வண்ணம் எதிர்வரும் 15-1-2015 முல் 18-1-2015 வரை மக்களுடன் தங்கி பிரச்சாரம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட இருக்கிறது.

காவிரி டெல்டா மாவட்டங்களில் வாழும் ஒரு கோடி மக்களின் உணவுக்கும் உயிருக்கும் ஆதாரமாகவும், விளங்கும் காவிரி டெல்டாவைக் காயப் போடுவதன் மூலம் மக்கள் அனைவரையும் வீடற்றவர்களாக, நாடற்றவர்களாக ஆக்கி வெளியேற்றி விட்டு, மீத்தேனையும் நிலக்கரியையும் பன்னாட்டு கம்பெனிகளுக்குத் தாரை வார்க்கவே மீத்தேன் திட்டம் எனும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை தனியார் கம்பெனியுடன் போட்டுள்ளன மத்திய, மாநில அரசுகள்.

இம்மாதம் 4-ம் தேதியுடன் முடிவடைவதாகக் கருதப்படும் இந்த ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டதா? ரத்து செய்யப்பட்டதா? எனும் உண்மை நிலையை மக்களுக்கு விளக்கிட மத்திய, மாநில அரசுகள் இதுவரை முன்வரவில்லை. எனவே, பழையன கழிதலும் புதியன புகுதலும் எனும் முதுமொழிக்கேற்ப தமிழர்தம் இல்லங்களில் இருந்து பழையனவற்றை எல்லாம் வெளியில் வீசிக் கொளுத்திடும் போகிப் பண்டிகை திருநாளில் காவிரி டெல்டா மக்களின் உயிருக்கும் உடைமைக்கும் உலை வைக்கும் இந்த மீத்தேன் திட்ட ஒப்பந்த நகலையும் சேர்த்து வீடுதோறும் தீயிட்டுக் கொளுத்தும்படி மீத்தேன் திட்ட எதிர்ப்புப் போராட்டக் குழு சார்பின் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

இப்படிக்கு

தோழர் கு.ம. பொன்னுசாமி
திருவாரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்,
மீத்தேன் திட்ட எதிர்ப்புப் போராட்டக்குழு,
காவிரிப் படுகை மாவட்டங்கள்
பேசி : 9442889041

பென்னி குயிக்கிற்கு நினைவஞ்சலி

பென்னி குயிக்கிற்கு நினைவஞ்சலி
பென்னி குயிக்கிற்கு நினைவஞ்சலி

னவரி 15, 2015 அன்று,தென்தமிழகம் காத்திட்ட கர்னல் ஜான் பென்னி குயிக் அவர்களின் 174-வது பிறந்த நாளை முன்னிட்டு கம்பம், கூடலூர், தேவாரம், போடி, லோயர் கேம்ப் பகுதிகளை சேர்ந்த முல்லை பெரியார் அணை பாதுகாப்பு குழு வினர் 100-க்கும் மேற்பட்டோர் லோயர் கேம்பில் இருந்து கர்னல் ஜான் பென்னி குயிக் அவர்களின் நினைவு மணி மண்டபம் வரை ஊர்வலமாக சென்றடைந்தனர்.

பின்பு மிகுந்த அனுபவம் மிக்கவரும் மூத்த தோழருமான 93 வயது மிக்க முன்னாள் சி.பி.எம் தோழர் வி.சொக்கலிங்கம்  அவர்கள் கர்னல் ஜான் பென்னி குயிக் அவர்களின் வெண்கல சிலைக்கு மாலையிட்டு மரியாதை செலுத்தினர். பல அரசியல் கட்சிகள் கண்டு கொள்ளாத நிலையில் சில அமைப்புகளும் விவசாய சங்கங்கள் மட்டும் கர்னல் ஜான் பென்னி குயிக்கிற்கு மாலையிட்டு மரியாதை செலுத்தியது குறிப்பிடத்தக்கது.

தகவல்,

விவசாயிகள் விடுதலை முன்னணி,
தேனி மாவட்டம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க