privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திபட்ஜெட் : முதலாளிகளுக்கு சொர்க்கவாசல் - மக்களுக்கோ பேரழிவு !

பட்ஜெட் : முதலாளிகளுக்கு சொர்க்கவாசல் – மக்களுக்கோ பேரழிவு !

-

ndlf-letterheadதேதி : 02-03-2015

மத்திய அரசின் பட்ஜெட்:

முதலாளிகளுக்கு சொர்க்கவாசல்!
நாட்டு மக்களுக்கோ பேரழிவு!

பொருள்: நாட்டுக்கு பேரழிவை உருவாக்கக் கூடிய மோடி அரசின் 2015-16-ம் ஆண்டிற்கான பட்ஜெட் முன்மொழிவுகளை கண்டிக்கின்றோம்!

அச்சே தின் கார்ட்டூன்
“அச்சே தின்” தேடினாலும் கிடைக்காது – மோடியின் பட்ஜெட்டில்

2015-16-ம் நிதியாண்டுக்கான ரயில்வே மற்றும் பொது பட்ஜெட் முன்மொழிவுகள் அனைத்தும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு பல்லாயிரம் கோடிகளை மானியமாகவும், வரிச்சலுகைகளாகவும் வாரி இறைத்துள்ளது. அதே நேரத்தில் இந்த நாட்டின் 130 கோடி மக்களுக்கும் துரோகம் செய்துள்ளது. குறிப்பாக கீழ்க்காணும் பட்ஜெட் அம்சங்கள் மக்களை பெரிதும் பாதிக்கும் என கருதுகிறோம்.

  1. ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள 10% சரக்குக் கட்டண உயர்வால் பருப்பு, எண்ணெய் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயரும். ஏனைய பொருட்கள் மீது உயர்த்தப்பட்டுள்ள சரக்குக் கட்டண உயர்வானது மறைமுகமாக மக்கள் தலை மீதே சுமத்தப்படும்.
  1. சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியம் வங்கிகளில் நேரடியாக செலுத்தப்படுகின்ற திட்டமானது அனைத்து தரப்பு மக்களையும் கடுமையாக பாதித்துள்ளது. இந்நிலையில், சரக்கு ரயில் கட்டண உயர்வு காரணமாக சிலிண்டர் விலை உயர்வதும் மக்களுக்கு மேலும் அதிக துயரத்தையே தரும்.
  1. பட்ஜெட் - "மேட் இன் அமெரிக்கா (நியூஜெர்சி)"
    பட்ஜெட் – “மேட் இன் அமெரிக்கா (நியூஜெர்சி)”

    புதிய ரயில் திட்டங்களை அறிவிக்க வேண்டும் எனில் தனியார் முதலீட்டை ரயில்வே துறையில் அனுமதிக்க வேண்டும் என்கிற அறிவிப்பானது உலகின் மிகப்பெரிய ரயில்வே அமைப்பை பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்த்துக் கொடுக்கின்ற சதித்திட்டமாகும்.

  1. பொது பட்ஜெட்டிலோ, சுகாதாரத்துக்கான நிதி ஒதுக்கீடு கணிசமாக குறைக்கப்பட்டிருப்பதுடன், கார்ப்பரேட் மருத்துவ நிறுவனங்களை ஊக்குவிக்கின்ற விதமாக திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள தேசிய சுகாதாரக் கொள்கையானது, மக்களின் சுகாதாரத்தை அரசு தான் பேண வேண்டும் என்கிற பொறுப்பினை அரசு கைகழுவி விடுவதாக உள்ளது. அதே திசைவழியில் தான் தற்போதைய பட்ஜெட் அறிவிப்புகளும் உள்ளன.
  1. கல்வி போன்ற சமூக கடமைகளுக்கான நிதி ஒதுக்கீடு தேவையை விட குறைவாக இருக்கின்ற அதே தருணத்தில் ராணுவத்துக்கு மட்டும்கடந்த ஆண்டினை விட அதிகமாக நிதி ஒதுக்கப்பட்டிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. அமெரிக்க அதிபர் ஒபாமா சமீபத்தில் இந்தியாவுக்கு வந்த போது ராணுவ தளவாட உற்பத்தியில் அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு போடுவதற்கு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. அமெரிக்க ராணுவ தளவாட உற்பத்தி நிறுவனங்கள் லாபமீட்டுவதற்காகவே ராணுவத்துக்கு ரூ 2,46,727 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது அநீதியானது மட்டுமல்ல: நாட்டின் நிதி வருவாயை பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு வாரி இறைப்பதாகும்.
  1. மோடி மஸ்தானின் "அச்சே தின்" மேஜிக்
    மோடி மஸ்தானின் “அச்சே தின்” மேஜிக்

    நாட்டின் தொழிலாளர்களில் பெரும்பகுதியினர் எவ்வித உரிமைகளும் இல்லாமல் இருக்கின்றனர். வேலை நிரந்தரம், உழைப்புக்கேற்ற ஊதியம், சட்டப்படியான வேலைநேரம், நியாயமான வேலைச்சுமை ஆகிய அனைத்தும் மறுக்கப்பட்டுள்ளன. பல தொழிலாளர்கள் தங்களுக்கான அடையாள அட்டையாக பி.எஃப் மற்றும் ஈ.எஸ்.ஐ சான்றுகளைத் தான் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் பி.எஃப் மற்றும் ஈ.எஸ்.ஐ திட்டங்களில் சேர்வது கட்டாயமில்லை என்கிற பட்ஜெட் அறிவிப்பானது தொழிலாளர்களது அரைகுறை பாதுகாப்பையும் பறிப்பதாகும்.

  1. பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் விற்பனை மூலம் ரூ 69,500 கோடிகளை திரட்ட திட்டமிட்டிருப்பது மற்றொரு அநீதியாகும். தனியார் நிறுவனங்கள் அனைத்தும் நாட்டின் சொத்துக்களை கொள்ளையடித்து வருகின்ற தருணத்தில் நாட்டின் தொழில்துறை முன்னேற்றத்துக்கும், சமூக-பொருளாதார வளர்ச்சிக்கும் பொதுத்துறை நிறுவனங்கள் ஆற்றிய பங்கு மகத்தானதாகும். இத்தகைய பொதுத்துறை நிறுவனங்களை மெல்ல மெல்ல தனியாருக்கு விற்கக்கூடியதே “பங்குகள் விலக்கல்” திட்டம். எனவே, பொதுத்துறை பங்குகள் விற்பனை என்பது நாட்டுக்கும், வீட்டுக்கும் கேடாகும்.
  1. பட்ஜெட் : மோடி - ஜேட்லி ஜோடியின் தாலாட்டு
    பட்ஜெட் : மோடி – ஜேட்லி ஜோடியின் தாலாட்டு

    கச்சா பெட்ரோலியத்தின் விலையானது சர்வதேச சந்தையில் 60% வரை வீழ்ச்சியடைந்த போது பெயரளவுக்கு ஓரிரு ரூபாய் விலை குறைப்பை செய்திட்ட மோடி அரசு, திடீரென பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்தி வருகிறது. அதே நேரத்தில் விமான பெட்ரோலுக்கு கணிசமான விலைகுறைப்பு சலுகைகளை செய்து வருகிறது. மக்கள் தலை மீது மலையளவு சுமையை உயர்த்தியும், முதலாளிகளுக்கு மானியங்கள்-வரிச்சலுகைகளை உயர்த்தியும் வருகின்ற மோடி அரசானது கார்ப்பரேட்டுகளின் அரசு தான் என்பது தெளிவாகிறது.

  1. இன்சூரன்சு துறையில் அந்நிய நேரடி முதலீட்டினை 26%-லிருந்து 49% ஆக உயர்த்துகின்ற மசோதாவினை கடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் ராஜ்ய சபையில் நிறைவேற்ற முடியாததால், அவசரச் சட்டம் போடப்பட்டது. அவசரச் சட்டம் போடப்பட்டாலும் 6 மாதத்துக்குள் நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற்றாக வேண்டும் என்பதால் குறுக்கு வழியைக் கையாண்டுள்ளது, மோடி அரசு. தங்களது கூட்டணிக்கு ராஜ்ய சபையில் போதிய பலம் இல்லாததால் இன்சூரன்ஸ் மசோதா தோற்று விடும் என்கிற நிலையில், இவர்களே போற்றுகின்ற நாடாளுமன்ற மரபுகளுக்கு மாறாக, ராஜ்ய சபையில் நிலுவையில் உள்ள மசோதாவை அங்கு நிறைவேற்றாமலேயே மக்களவையில் தாக்கல் செய்துள்ளனர்.

மொத்தத்தில், மோடி அரசின் பட்ஜெட் முன்மொழிவுகளும், ஏனைய திட்டங்களும் நாட்டுக்கும் மக்களுக்கும் பேரழிவை உருவாக்கக் கூடியவை. கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது “மோடி என்றால் வளர்ச்சி” என்று புகழ் பாடிய கட்சிகளும், ஊடகங்களும், அறிவிஜீவிகளும் கூட மோடியின் செயல்பாடுகளை கண்டிக்கத் துவங்கியுள்ளனர். மோடியின் சாயம் வெளுத்து விட்டது. எனவே, மோடி அரசின் நடவடிக்கைகளை முறியடிக்க நாட்டு மக்கள் எதிர்த்துப் போராட வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

நன்றி !

(சுப.தங்கராசு)
பொதுச்செயலாளர்

(கேலிச்சித்திரங்கள் – இணையத்திலிருந்து)