privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்விவசாயிகள்நியுட்ரினோ திட்டத்தை விரட்டுவோம் ! தேவாரம் பொதுக்கூட்டம்

நியுட்ரினோ திட்டத்தை விரட்டுவோம் ! தேவாரம் பொதுக்கூட்டம்

-

தேனி மாவட்டம் பொட்டிப்புரம் கிராமத்திலுள்ள அம்பரப்பர் மலையில் அமைய இருக்கும் இந்திய நியுட்ரினோ திட்டத்துக்கு எதிராக ,”பொட்டிபுரத்தை போர்க்களம் ஆக்குவோம்! நியுட்ரினோ ஆய்வுத் திட்டத்தை விரட்டியடிப்போம்!” என்ற முழக்கத்துடன் கடந்த இருபது நாள்களாக விவசாயிகள் விடுதலை முன்னணி சார்பில் தீவிர பிரச்சாரம் செய்யப்பட்டது. 20 கிராமங்களில் சுவரொழுத்து பிரச்சாரம் செய்யப்பட்டதுடன், வீடுவீடாக பிரசுரம் கொடுத்தும் ஆதரவு திரட்டப்பட்டது.

நியூட்ரினோ எதிர்ப்பு போராட்டம்
ம.க.இ .க. மைய கலைக்குழுவினரின் இருநாள் தெருமுனைப் பிரச்சாரம் நடத்தப்பட்டது

மேலும் மக்கள் கலை இலக்கியக் கழக மைய கலைக்குழுவின் கலை நிகழ்ச்சிகளோடு இருநாள் தெருமுனைப் பிரச்சாரம் கிராமங்களில் நடத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக கடந்த மார்ச் 23-ம் தேதி மாவீரன் பகத்சிங் நினைவு நாளில், தேவாரத்தில் மாபெரும் பொதுக்கூட்டம் நடந்தது

pottipuram-anti-neutrino-meeting-04

நியூட்ரினோ எதிர்ப்பு போராட்டம்
மார்ச் 23-ம் தேதி மாவீரன் பகத்சிங் நினைவு நாளில், தேவாரத்தில் மாபெரும் பொதுக்கூட்டம்.

கூட்ட நாளன்று பகுதியெங்கும் ஆட்டோ பிரச்சாரம் செய்யப்பட்டது. தொடர்ச்சியான பிரச்சாரத்தினால், பாதிப்பிக்குள்ளாகும் கிராம மக்கள் திரளாக கூட்டத்தில் வந்து கலந்து கொண்டனர். சுவரெழுத்துகளை அழித்து, கிராம மக்களை மிரட்டிய போலீசாரை வன்மையாக கண்டித்ததோடு, மக்களுக்கு பயன்படாத நியுட்ரினோ ஆய்வை அம்பலப்படுத்திடுத்தி தோழர் மோகன், விவிமு பேசினார்.

pottipuram-anti-neutrino-meeting-03சிறப்புரை ஆற்றிய மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராசு, “நியுட்ரினோ திட்டம் மட்டுமல்ல, .கூடங்குளம் அணுமின் திட்டம், மீத்தேன் எரிவாயுத் திட்டம் போன்ற மக்கள் விரோதத் திட்டங்களை தனித்தனியே போராடி ஒழிக்க முடியாது. இவை எல்லாமே ஏகாதிபத்திய, பன்னாட்டுக் கம்பெனிகளின் லாப நோக்கத்திற்காக திட்டமிட்டு திணிக்கப்படுகிறது. எனவே நாட்டுப் பற்று, விடுதலை உணர்வுடன் இதை எதிர்த்துப் போராடவேண்டும்.மேலும், அரசு உறுப்புகள் அனைத்தும் நம் நாட்டையும், மக்களையும் காப்பாற்ற வக்கற்று, அழுகி நாறி விட்டன. இதனை தூக்கி எறியாவிட்டால் உழைக்கும் மக்களுக்கு விடுதலை பெறமுடியாது!” என எழுச்சியுடன் விளக்கிப் பேசினார்.

நியூட்ரினோ எதிர்ப்புப் போராட்டம்.
மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் தோழர் ராஜூ உரை

பயபீதியுடன், தன்னம்பிக்கையற்று இருந்த பொட்டிப்புரம் பகுதி மக்கள் கூட்டத்தினால் மன உறுதிகண்டு தோழர்களுக்கு சால்வை போர்த்தி பாராட்டினார்கள்.

pottipuram-anti-neutrino-meeting-05வைகோ-சீமான் வகையாறாக்களின் வெற்றுப் பேச்சுக்கள் எல்லாம் புரட்சிகர அமைப்பின் பிராச்சாரத்தின் முன் கரைந்துபோய்விட்டது என்பதை நிருபிப்பதாக இருந்தது, பொதுக்கூட்டம். கூட்டத்தின் இறுதியில் கூட்டியக்கமாக செயல்பட மக்களுக்கு அறைகூவல் விடப்பட்டது. சுமார் 1000 பேர் கலந்துகொண்ட கூட்டம் ம.க.இ.க. மைய கலைக்குழுவின் புரட்சிகர கலைநிகழ்ச்சியுடன்  நிறைவுற்றது.

ம.க.இ.க மையக் கலைக்குழுவின் புரட்சிகர கலை நிகழ்ச்சி

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

விவசாயிகள் விடுதலை முன்னணி,
தேனி மாவட்டம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க