privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஆந்திர படுகொலை : கும்மிடிப்பூண்டி கொல்கத்தா சாலை மறியல்

ஆந்திர படுகொலை : கும்மிடிப்பூண்டி கொல்கத்தா சாலை மறியல்

-

1. கும்மிடிப்பூண்டி பு.ஜ.தொ.மு

ந்திர மாநிலம் திருப்பதி அருகே 20 தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து கும்மிடிப்பூண்டி பைபாஸ் சாலையில் மறியல் நடத்தப்பட்டது. புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் திருவள்ளூர் மாவட்டத் தலைவர் தோழர் விகந்தர் தலைமையில் நடைபெற்ற இந்த மறியலில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

andhra-encounter-gpd-demo-4வழக்கம் போல மறியல் போராட்டத்தை சீர்குலைக்கும் நோக்குடன் 20 காக்கி சீருடை போலீசும், 30 உளவுத்துறை போலிசும் மறியல் துவங்குவதற்கு 10 நிமிடத்துக்கு முன்பே ‘ஜனநாயக கடமையாற்ற’ வந்துவிட்டனர்.

andhra-encounter-gpd-demo-6தோழர்கள் திட்டமிட்டபடி செஞ்சட்டையோடு கையில் செங்கொடியேந்தி முழக்கமிட்டபடியே சாலையை மறித்து போராட்டம் நடத்தினர். அனைவரையும் அடித்து நெறுக்கி வேனில் ஏற்றிவிடும் தோரணையோடு, தமாசு காட்டியது போலிசு.

andhra-encounter-gpd-demo-5மறியலின் போது மறியல் போராட்டத்தின் தலைவர் தோழர் விகந்தர் பேசுகையில் “இது ஒரு அரச பயங்கரவாதம். போலி மோதல் கொலைகளை செய்து உழைக்கும் மக்களை கொன்று குவிக்கும் இந்த அரசு, மக்கள் சொத்தை கொள்ளையடித்த கிரானைட் கொள்ளையன் பி.ஆர்.பழனிசாமியையோ, தாதுமணல் கொள்ளையன் வைகுண்டராஜனையோ நடுரோட்டில் வைத்து சுட்டுக்கொல்லவில்லை. மாறாக, அவர்களை பத்திரமாக பாதுகாக்கிறது.

andhra-encounter-gpd-demo-3செம்மரத்தை கடத்திய உண்மை குற்றவாளிகளை கைது செய்ய துப்பில்லாத இந்த அரசு தான் அப்பாவி கூலித் தொழிலாளிகளை சுட்டுக் கொள்கிறது. இது தமிழர்களுக்கான பிரச்சனை மட்டுமன்று. இது அனைத்து உழைக்கும் மக்களுக்குமான பிரச்சனை. இதை உணர்ந்து இதற்கெதிராக உழைக்கும் மக்கள் அணிதிரண்டு போராட வேண்டும்” என்று உரையாற்றினார்.

andhra-encounter-gpd-demo-2எப்போதும் நெரிசலாக இயங்கும் இந்த சாலையில் மறியல் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆர்ப்பாட்ட முழக்கம்

கண்டிக்கின்றோம்! கண்டிக்கின்றோம்!
தமிழக தொழிலாளர்கள் 20 பேரை
நாயைப் போல சுட்டுக்கொன்ற
ஆந்திர அரசின் பயங்கரவாதத்தை
வன்மையாகக் கண்டிக்கின்றோம்!

andhra-encounter-gpd-demo-1படுகொலை! படுகொலை!
அப்பாவி கூலித் தொழிலாளர்கள்
20 பேர் படுகொலை!

கைது செய்! கைது செய்!
ஆந்திர மாநில டிஜிபி
காந்தாராவ் உள்ளிட்ட
போலீசு அதிகாரிகளை
கைது செய்! சிறையிலடை!

காரணமென்ன காரணமென்ன?
அப்பாவி கூலி தொழிலாளிகளை
சுட்டுக்கொன்ற ஆந்திர அரசே
செம்மரக் கடத்தல் மாஃபியாக்களை
விட்டு வைக்க காரணமென்ன?

மத்திய அரசே மாநில அரசே
நடவடிக்கை எடு நடவடிக்கை எடு
என்கவுண்டர் என்ற பேரில்
நரவேட்டை நடத்தியுள்ள
போலிசு அதிகாரிகள் மீது
கொலை வழக்கு பதிவு செய்து
நடவடிக்கை எடு நடவடிக்கை எடு

விசாரணை நடத்து! விசாரணை நடத்து!
நடுநிலையாளர்களை ஜனநாயக சக்திகளை
ஈடுபடுத்தி விசாரணை நடத்து!
உழைக்கும் மக்களே! தொழிலாளர்களே!

முறியடிப்போம் முறியடிப்போம்!
நாளுக்கு நாள் பெருகிவரும்
அரசின் பயங்கரவாதத்தை
முறியடிப்போம் முறியடிப்போம்!

கட்டியமைப்போம் கட்டியமைப்போம்
இயற்கை வளங்களை பாதுகாக்க
மக்கள் அதிகார மன்றங்களை
கட்டியமைப்போம்! கட்டியமைப்போம்!

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி வாழ்க!

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
திருவள்ளூர்

2. விருத்தாச்சலம் – ம.உ.பா.மை

ந்திர மாநிலம் திருப்பதி அருகே 20 தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து விருத்தாச்சலம் மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கவுள்ளது.

andhra-encounter-prpc-demo

andhra-encounter-prpc-noticeதகவல்

மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்,
விருத்தாசலம், கடலூர் மாவட்டம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க