மகாவிஷ்ணு, செல்ஃபி, ஜெயா பூஜை, ரூ.37 லட்ச ரூபாய் விடுதி

0
16

மாமிக்காகத் துடிக்கும் மவுன்ட் ரோடு மகாவிஷ்ணு!

“ஜெ விடுதலைக்கு எதிரான கர்நாடக அரசு மனுவை ஏற்பதில் சிக்கல்” – இதுதான் இன்றைக்கு தமிழ் தி இந்துவின் தலைப்பு செய்தி.

ஜெ விடுதலைக்கு எதிராக ஆச்சார்யா தாக்கல் செய்த மனுவில் சில இடங்களில் பக்க எண் குறிப்பிடவில்லை, இரண்டு பக்கம் வெள்ளையாக உள்ளது, எப்.ஐ.ஆர் காப்பி இணைக்கப்படவில்லை – என பத்து குறைபாடுகள் இருப்பதை உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியிருக்கிறதாம். கர்நாடக அரசின் முக்கிய சட்ட நிபுணர்கள் தயாரித்த மனுவில் இத்தனை குறைபாடுகளா, என்று ஆசார்யா அப்டியே ஷா…க் ஆயிட்டாராம்.

இந்த பயங்கரமான சிக்கல் காரணமாக வழக்கு விசாரணை தாமதமாகுமாம்.

இந்த தலைப்புச் செய்தியைப் படிக்கின்ற எவருக்கும், அப்ப அப்பீல் அம்பேல்தான் என்ற கருத்து உருவாகும். அப்படி உருவாக்குவதுதான் இந்த தலைப்பின் நோக்கம்.

உண்மை என்ன?

உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றங்களில் ஒரு மனு தாக்கல் செய்தால், அந்த மனுவில் முறைப்படி எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பதிவாளர் அலுவலகத்தில் சரி பார்ப்பார்கள். அங்கே கையெழுத்தில்லை, இங்கே கமா இல்லை என்று அங்கேயிருக்கும் கிளார்க் திருத்தம் சொல்ல, அதை திருத்திக் கொடுப்பார் வக்கீல் குமாஸ்தா. இது நீதிமன்ற அலுவலகங்களில் அன்றாடம் நடக்கும் விவகாரம்.

எல்லாமே சரியாக இருந்தாலும், “என்னய்யா முக்கியமான பேப்பரைக் காணோம்” என்று இந்தியன் படத்தில ஆப்பீசர் செந்தில் சொல்வாரே, அதுமாதிரி அந்த முக்கியமான பேப்பருக்காகவும் சிக்கல்களை உருவாக்குவார்கள் குமாஸ்தாக்கள்.

இதெல்லாம் இந்து ஆசிரியர் குழுவுக்குத் தெரியாததல்ல. இருந்தாலும் ஆசை வெக்கமறியாதல்லவா?

virtual-worldமெய்யுலகும், மெய்நிகர் உலகும்!

நீரோ மன்னன் பிடில் வாசிக்கும் போது ஊர் எரிந்து கொண்டிருந்தது உண்மைதான். அது அலட்சியத்தின் விளைவுதான், மறுக்க முடியாது. ஆனால் டிஜிட்டல் நுட்பம் கட்டியமைத்த மேட்ரிக்ஸ் கனவுலகில் வாழும் கலர்ஃபுல் அடிமைகளுக்கு அந்த நீரோ கதை இனி போட்டியாக அமையாது என்றால் மறுக்க முடியுமா?

நன்றி: Miguel Villalba Sánchez (Elchicotriste) Cartoon Movement

இதுதாண்டா உலகம்: உப்பரிகை மாளிகையும், குப்பைக் கிடங்கு வாழ்க்கையும்!

ஜெனீவா சொகுசு அறை
கிரேக்கத்தின் மீதான பொருளாதார நெருக்கடி குறித்த திட்டம் இந்த அறையிலும் தீட்டப்படலாம்.

ராயல் பெந்த்ஹவுஸ் சூட். ஜெனிவா நகரத்தின் இருக்கும் பிரசிடெண்ட் வில்சன் ஓட்டலின் முதன்மையான அறை. இங்கே ஓரிரவு தங்குவதற்கு நீங்கள் 53,000 யூரோ அல்லது சுமார் 37 லட்சம் இந்திய ரூபாய் செலுத்த வேண்டும். சென்னையில் இந்த விலையில் இரு படுக்கையறை அப்பார்ட்டுமென்ட் வீடுகளை வாங்கலாம்தான்.

நட்சத்திர விடுதிகளின் அறைகளின் ராஜா இந்த பிரசிடென்சியல் அறைதான். ராயல் பெந்த்ஹவுசின் சிறப்பு நீங்கள் அங்கே பிரம்மாண்டமான பியானோவை இசைக்கலாம்; உயர் வகை எண் 12 மார்பிள் பதிக்கப்பட்ட குளியலறையில் நீராடலாம். குண்டு துளைக்காத கண்ணாடியினுள்ளே கவலையில்லாமல் நித்திரை கொள்ளலாம். பிரம்மாண்டமாக பால்கனியில் அமர்ந்து கொண்டு உயர் வகை ஒயினைக் அருந்திக் கொண்டே கவிதை எழுதலாம்.

ஏதென்ஸ் இருக்கும் அதே கண்டத்தில்தான் ஜெனிவா நகரமும் உள்ளது. எனினும் கிரேக்கத்தின் மீதான பொருளாதார நெருக்கடி குறித்த திட்டம் இந்த அறையிலும் தீட்டப்படலாம்.

பெருநகரங்களில் வாழும் ஏழைகள் எப்படி வாழ்வார்கள் என்பது தெரியுமென்றாலும் இந்த உப்பரிகை மாளிகையோடு சேர்த்து பார்க்கும் போது வர்க்கமென்பது என்ன, அது ஏன் பிரிந்திருக்கிறது என்ற கேள்வி எழும்.

5 காசு தர்மத்துக்கு 5000 ரூபாய் விளம்பரம் செய்!

அ.தி.மு.க அன்னதானம்
சாப்பிடுபவர் மூன்று பேர்! அதை காட்டி அம்மாவுக்கு சோப்பு போட படமெடுக்குறவன் முப்பது பேர்!

மதுரை பாண்டி கோவிலில் கறிச்சோறுடன் அன்னதானம்!
சாப்பிடுபவர் மூன்று பேர்!
அதை காட்டி அம்மாவுக்கு சோப்பு போட படமெடுக்குறவன் முப்பது பேர்!

கறிக்கு எவ்வளவு செலவு?
கேமரா, பிளக்சுக்கு எவ்வளவு செலவு?

‘அம்மா’வ ரீச் பண்ண ஃபோட்டோ வேணும்!
ஃபோட்டோவ அலங்கரிக்க நாலு பேர் வேணும்!

சந்தா