privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஅமெரிக்காவின் டாஸ்மாக் கருணை !

அமெரிக்காவின் டாஸ்மாக் கருணை !

-

அப்பாவிகள் மீது உச்சநீதிமன்றம் காட்டும் கருணைக்கு காரணம் என்ன?

எழுவர் விடுதலையை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த மனு மீது உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. எழுவர் விடுதலையில் தலையிட மத்திய அரசுக்கு உரிமையில்லை எனும் தமிழக அரசு வழக்குறைஞர் வாதத்திற்கு எதிராக, மத்திய அரசு சார்பில் அரசு வழக்குறைஞர் ஜெனரல் ரஞ்சித்குமார் வாதிடும் போது, ”ராஜீவ் கொலையின் போது 18 பேர் உயிரிழந்து, 48 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் சார்பாக குரல் கொடுக்கும் தார்மீக உரிமை மத்திய அரசுக்கு உண்டு” என்றார்.

உடனே நீதிபதிகள்,” உச்சநீதிமன்ற தீர்ப்பை பயன்படுத்தி, கொலை குற்றவாளிகளை விடுவிக்க சட்டத்தை வளக்கும்போது, பாதிக்கப்பட்ட சார்பில் குரல் கொடுக்கும் உரிமை மத்திய அரசுக்கு உண்டு” என்று தெரிவித்தனர். சட்டம் வளைக்கப்படுவது குறித்து என்ன ஒரு கவலை?

சரி ஐயா, குஜராத் மாநில முஸ்லீமகளும் 2002 கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள்தான். இதில் பாதிப்புண்டாக்கியவர்கள் இன்று நாடாள்கிறார்கள். கலவரத்தில் இவர்களது பங்கை மறைக்க சட்டத்தை வளைத்து வக்காலத்து வாங்கிய சதாசிவம் போன்ற நீதிபதிகள் கவர்னர் இன்னபிற எலும்புத்துண்டை பெற்றுக் கொண்டு வாலாட்டுகிறார்கள்.

இப்படி இருக்கையில் ஈழத்தமிழ் மக்களை பாதிப்புள்ளாக்கிய இந்திய அமைதிப்படையும் அதை அனுப்பி பாதிப்புக்கு தலைமை தாங்கிய ராஜிவ்காந்தி குறித்தும் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழ் மக்களுக்கு குரல் கொடுக்க உரிமை உண்டா இல்லையா?

ஆடுகள் அடிமைப்பட்டிருக்கும் வரை ஓநாய்கள் கண்ணீர் விடத்தான் செய்யும்!

_____________________________

செய்தி: தோழமை கட்சி என்ற சகாப்தம் முடிந்து விட்டது. ஆட்சியில் பங்கு அளித்தால் மட்டுமே இனி கூட்டணி என தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்

நீதி: இனி நல்லி எலும்போடதான் கறி சாப்பாடு போடணும்னு பல்லு இல்லாதவர் சொன்னா சிரிப்பீர்களா, பரிதாபப்படுவீர்களா?

_____________________________

20150722 Parliament Sesion 700 pix

______________________________

ஏழைகளுக்கு நிதி வேண்டுமென்றால் அவர்கள் மது அருந்த வேண்டும்!

சமூக பிரச்சினைகளை நேரில் சோதித்தறியும் காபி பெர்சின் இந்த முறை நியூயார்க் நகர மக்களின் கருணை குறித்து அறிய நினைக்கிறார். முதலில் “வீடற்றவனாகிய எனக்கு போதை பொருள், சாராயம் கிடைக்க பணம் கொடுங்கள்” என்று அட்டை எழுதி ஒரு கடைத்தெருவில் பரிதாபமான தோற்றத்தோடு அமர்கிறார். ஒரு மணிநேரத்தில் பலரும் பணம் போடுகிறார்கள். ஒருவர் “நம்பிக்கையோடு இரு, ஒரு பாட்டில் கிடைப்பதை உறுதி செய்” என்றெல்லாம் உற்சாகமூட்டுகிறார்.

பிறகு பாபி பெர்சின் அட்டையை மாற்றுகிறார். இந்த முறை வீடற்ற தந்தைக்கு நிதி அளித்து உதவுங்கள்” என்று ஒரு சிறுமியுடன் அமர்கிறார். ஆனால் ஒரு மணிநேரம் கழித்தும் எவரும் பணம் போடவில்லை.

கடைசியில் ஒரு பெண் வந்து, “இந்த பணம் என்னை விட உங்களுக்குக்கும் குட்டி மகளுக்கும் பயன்படும்” என்று கொடுத்துவிட்டு அவர்களுக்காக பிரார்த்திக்கவும் செய்கிறார். இவ்வளவிற்கும் அவரும் வீடற்றவர்தான். மேலும் அவரது ஒரு நாள் வருமானத்தை அப்படியே கொடுத்து விடுகிறார். பிறகு அந்த பெண் விடைபெறும் போது பெர்சின் சென்று உண்மையை எடுத்துரைத்துவிட்டு அவளது பணத்தோடு கூடுதலான நிதியுதவியையும் அளித்துவிட்டு நீங்கள்தான் ஹீரோ என்று வாழ்த்துகிறார்.

ஒரு மணிநேரத்தில் பலர் தமது பிள்ளைகளோடு கடந்து சென்றாலும் எவரும் பெர்சினை கண்டு கொள்ளவில்லை. பிள்ளைகளும் தம்மையொத்த ஒரு சிறுமி தெருவில் படுத்துக் கிடப்பதை சட்டை செய்யவில்லை. இல்லாதவர்களுக்குத்தான் இல்லாதவர்களின் அவலம் புரியும் என்பதை அந்த பெண் நிரூபித்திருக்கிறார். அதே நேரம் இல்லாதவன் சரக்கடித்து விட்டு சாக வேண்டும் என்று தானம் கேட்டால் கொடுப்பதற்கு நிறைய பேர் இருக்கிறார்கள்.

தமிழகத்தில் டாஸ்மாக் விற்பனையை அதிகரிக்க பாடுபடும் அரசு, இன்னொரு புறம் பள்ளிகளை மூடுவதற்கும், நியுயார்க் மக்களின் கருணைக்கும் என்ன வேறுபாடு?

tasmac - newyork 700 pix

வினவு ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட குறுஞ்செய்திகள்
இணையுங்கள்