மக்கள் அதிகாரம்: டாஸ்மாக்கை மூடு – தொடரும் போராட்டங்கள் !

1
14

மூடு டாஸ் மாக்கை! .ஓடு ஊரை விட்டு!!

என்ற முழக்கத்தோடு தமிழகமெங்கும் போராட்டங்கள் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன. பல இடங்களில் தோழர்கள், மக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் கல்லூரிகள், பள்ளிகளிலும் போராட்டங்கள் நடைபெறுகின்றன. அவற்றின் சுருக்கமான தொகுப்பை இங்கே வெளியிடுகிறோம்.

விருத்தாசலம் வட்டம் மேலப்பாளையூர் மக்களின் போராட்டம்

mp 700 pix 2கடந்த ஒருமாத காலமாக மூடு டாஸ் மாக்கை அருகதை இழந்த்து அரசுக் கட்டமைப்பு, இதோ ஆள வருகுது மக்கள் அதிகாரம் என்ற முழக்கத்துடன் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் தமிழகம் முழுவதும் சுவர்கள் அரசியல் பேசின. ரயில்கள், பேருந்துகளில், தெரு முனைகளில், கிராமங்களில், ஆளும் அருகதையற்ற அரசை அம்பலப் படுத்தி களம் இறங்கினார்கள் மக்கள் அதிகாரத்தின் அமைப்பினர்.

தமிழகமே மக்கள் அதிகாரத்தின் அரசியல் பிரச்சார அனலில் எரியத் தயாராகிக் கொண்டு இருந்த வேளையில் சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் டாஸ்மாக் கடை உடைப்பைப் பார்த்து, மாணவ, மாணவிகளை கொலை வெறிகொண்டு தாக்கியது காக்கி சாராய குண்டர் படை. இதைப் பார்த்து தமிழகமே வெகுண்டெழுந்து மக்களும் மாணவர்களும் டாஸ்மாக் கடைகளை உடைத்துக் கொண்டு இருந்தனர்.

இந்நிலையில் விருத்தாசலம் சந்தைத்தோப்பு பகுதியில் டாஸ்மாக் கடை பு.மா.இ.மு-வினரால் நொறுக்கப் பட்டது. இச்செய்தி மாவட்டம் முழுவதும் பற்றிப்பரவ இதனையொட்டி விருத்தாசலம் வட்டம் மேலப்பாளையூர் ஊராட்சியில் இருந்த டாஸ்மாக் கடை மூட வேண்டும் என பல முறை கோரிக்கை வைத்துப் போராடிய மக்கள் மக்கள் அதிகாரம் அமைப்புடன் கைகோர்த்தனர்.

மூன்றாம் தேதி இரவோடு இரவாக ஏற்கனவே பிரச்சாரம் செய்திருந்த பவழங்குடி, மருங்கூர், கீரமங்களம், காவனூர், கீரனூர், மேலப்பாலையூர் எனப்பல கிராமங்களிலும் ஊர் முன்னணியாளர்கள் ஆண்களையும், பெண்களையும் ஒருங்கிணைத்தனர். விடிந்தது பொழுது, விரைந்தனர் மக்கள் சுமார் 10.45 மணிக்கு 100 பெண்கள் 150 ஆண்கள் உட்பட 250 பேர் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு தலைமையில் முழக்கமிட்டவாரே மேலப்பாலையூர் கிராமத்தின் உள்ளே இருந்து வந்தனர்.

அதே வேளையில் இதை தெரிந்து கொண்ட உளவுத்துறை இரண்டு போலிசைக் காவலுக்குப் போட்டது. வெகுதூரத்தில் மக்கள் வெகுண்டு வருவதை கண்ட விற்பனையாளர் ஷட்டரைப் பூட்டிக் கொண்டு ஓட்டம் பிடித்தார். சில நிமிடங்களில் கடையை நெருக்கிய மக்கள் கடை பூட்டிக் கிடப்பதைக் கண்டு ஆத்திரமடைந்து டாஸ்மாக் போர்டை அடித்து நொறுக்கி அதன் சிமெண்ட் ஷீட், இரும்புக் கம்பிகளை உடைத்தெறிந்தனர். கடப்பாறையால் கதவை உடைத்தனர். காவலுக்கு நின்ற போலிசை தடுத்த போது தூரத்தள்ளி விட்டு ஆவேசத் தாக்குதலும் முழக்கமும் 1 ½ மணி நேரம் தொடர்ந்தது. சிறிது நேரத்தில் போலிசுப் படையுடன் வந்தார் ஆய்வாளர் செந்தில் குமார்.

இதன் பின் துணைக் காவல் கண்காணிப்பாளரும், அதிரடிப்படையும் வந்தது. டாஸ்மாக் பொது சொத்து அதை உடைப்பது சட்டபடி குற்றம் தெரியுமா? என்றார் டி.எஸ்.பி. மக்கள சாராயத்தால கொல்றதுதான் சட்டமுனா எங்களுக்கு சட்டமே வேண்டாம் என்று சீறினார்கள் பெண்கள். அவர்களின் கேள்விக்கு எதிர்கொள்ள முடியாமல் பின் வாங்கிய டி.எஸ்.பி தன் உயர் அதிகாரிக்கு போன் பேசிவிட்டு அனைவரையும் கைது செய்தனர். 9 பெண்கள் 16 ஆண்கள் என முன்னணியினரையும் கைது செய்தது போலிசு. மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜு, ஓய்வு பெற்ற ஆசிரியர் சிறு தொண்ட நாயனார் , வெள்ளாற்று பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பஞ்சமூர்த்தி, கீரனூர் ராஜ வன்னியர், பவழங்குடி தெய்வக்கண்ணு, மேலப்பாலையூர் நந்தக்குமார் உள்ளிட்ட 23 பேர் கைது செய்யப்பட்டு விருத்தாசலம் காவல் நிலையம் கொண்டு செல்லப்பட்டனர்.

சிறிது நேரத்தில் காவல் நிலையத்தில் குவிந்தனர் உள்ளூர் பிரமுகர்கள், அதே நேரத்தில் தாசில்தாரும் அங்கு வந்தார். கைது செய்யப்பட்டவர்களிடம் முகவரி அங்க அடையாளம் கேட்ட போது டாஸ் கடையை மூட வேண்டும் அதுவரை நாங்கள் சாப்பிட மாட்டோம் பெயர் முகவரி தர மாட்டோம் என்று அங்கும் போராட்டத்தை துவங்கினர். ஒரு கட்டத்தில் உங்கள் கோரிக்கையை ஏற்றுக் கொள்கிறேன் சாப்பிடுங்கள் என்றார் தாசில்தார். இதை ஏற்க மறுத்து போராட்டத்தை தொடர்ந்தனர்.

இந்நிலையில் கோரிக்கையில் ஒன்றான போராடிய பெண்களை விடுதலை செய்வதற்கு ஏற்றுக் கொண்டு அன்று மாலையே விடுதலை செய்தனர். ஆனால் மேலப்பாளையூர் டாஸ்மாக் கடையில் போலிசு குவிக்கப்பட்டு மீண்டும் கடையை திறக்க முயற்சித்த போது உள்ளூர் மக்களின் எதிர்ப்பால் மூடப்பட்டது. அன்று இரவு மீண்டும் மக்களை சந்தித்து அணி திரட்டி மறு நாள் காலையில் ஆர்பாட்டம் நடத்த திட்ட மிட்டதை அறிந்த போலிசு இரண்டு வேன்களில் இறக்கி மக்களை அச்சுறுத்தி கலைக்கப் பார்த்தது. மேலப்பாளையூர்.ஊ.ம.தலைவர் சசிக்குமார் தலைமையில் 100 க்கு மேற் பட்டோர் அணிதிரண்டு கடையின் முன் கூடி முழக்கமிட்டனர்.

வட்டாச்சியரிடம் எங்கள் ஊரில் டாஸ்மாக் வேண்டாம் ரோடு வேண்டும், பள்ளிக் கூடத்தில் வாத்தியார் வேண்டும், சுகாதார நிலையம் வேண்டும், குடிகெடுக்கும் சாராயக் கடை வேண்டாம் மீண்டும் திறந்தால் போராட்டம் தொடரும் என்று எச்சரித்தனர்.

அதே நேரத்தில் விருத்தாசலம் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் மீதும், போராடிய பொதுமக்கள் மீதும் பொய்வழக்கு போடப்பட்டதை கண்டித்து மக்கள் உரிமைப் பாதுக்காப்பு மையத்தின் மாவட்டச் செயலாளர் புஷ்பதேவன் தலைமையில் வழக்குறைஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். விருதை நகரமெங்கும் போராடிய கிராமங்களிலும் மக்கள் அதிகாரம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் ஆகிய அமைப்புகளின் சார்பாக கண்டன சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு அம்பலப்படுத்தியதோடு அடுத்த கட்டப் போராட்டத்திற்கு மக்களை அணிதிரட்டி வருகின்றனர்.

தகவல்: மக்கள் அதிகாரம், தமிழ்நாடு.

 படங்களை பெரிதாக பார்க்க அழுத்தவும்

___________________________________________________________

சென்னை புதுக்கல்லூரி மாணவர்கள் போராட்டம்:

டாஸ்மாக்கை மூடு, அதிகாரத்தை கையிலெடு என்ற முழக்கத்தோடும் பச்சையப்பா மாணவர்களை தாக்கிய போலிசைக் கண்டித்தும் சென்னை புதுக்கல்லூரி மாணவர்கள் நடத்திய போராட்டம்!

new college 700.jpg 1____________________________________________

3. விழுப்புரம் டாஸ்மாக் கடையை மூடும் போராட்டம்:

விழுப்புரம் சாலமேடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை பகுதியில் உள்ள புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்களும், மக்களும் அணிதிரண்டு முற்றுகையிட்டு போராடினர். தோழர்களை போலீசு கைது செய்த போது பெண்கள் சாலை மறியில் செய்தனர். கைது செய்யப்பட்ட தோழர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

IMG_3758

 படங்களை பெரிதாக பார்க்க அழுத்தவும்:

___________________________________________________

4. சென்னை தியாகராயர் கல்லூரி மாணவர் போராட்டம்:

05.08.2015 அன்று சென்னை தியாகராயர் கல்லூரி மாணவர்கள் டாஸ்மாக் கடைகளை மூடக் கோரியும், பச்சையப்பா மாணவர்களை தாக்கிய போலிசைக் கண்டித்தும் செய்த வேலை நிறுத்தம், மறியல் – புகைப்படங்கள்.

_________________________________________________

5. சென்னை பச்சையப்பா கல்லூரி மாணவர்கள் போலிசால் தாக்கப்பட்ட அன்று மதுரையில் நடந்த வழக்கறிஞர்கள் சாலை மறியல் – புகைப்படங்கள்

_______________________________________________

6. சுவரொட்டிகள்:

Jpeg

___________________________________

7. சென்னை பூந்தமல்லி அண்ணா மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் போராட்டம்!

மாணவர்கள் மீது காவல்துறை தடியடி!

பூந்தமல்லியில் உள்ள அண்ணா மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், பூரண மதுவிலக்கு கொள்கையை அமுல்படுத்த கோரியும், பச்சையப்பா கல்லூரி மாணவர்களை விடுதலை செய்ய கோரியும் சாலை மறியல் செய்துள்ளனர். மாணவர்கள் என்றும் பாராமல், வெறித்தனமாக காவல்துறை தடியடி நடத்தியுள்ளனர். பல மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

____________________________________________________

சந்தா