Sunday, September 20, 2020
முகப்பு போலி ஜனநாயகம் அதிகார வர்க்கம் சிவகங்கை பாலியல் குற்ற வழக்கு - திசை திருப்பும் போலீசு

சிவகங்கை பாலியல் குற்ற வழக்கு – திசை திருப்பும் போலீசு

-

சிவகங்கை சிறுமி பாலியல் குற்ற வழக்கில் ஏ.டி.ஜி.பி உள்ளிட உயர்போலீசு அதிகாரிகளை காப்பாற்ற வழக்கை திசை திருப்புகிறது சி.பி.சி.ஐ.டி போலீசு! அதற்கு துணை நிற்கிறது தமிழக அரசு

sivagangai-protest-against-rapist-police-officials-1சிவகங்கை சிறுமியை பெற்ற தந்தை முதல் உயர் போலிசு அதிகாரிகள் வரை கூட்டுப் பாலியல் வன்முறையை ஏவிய கொடூரத்தை பத்திரிக்கை ஊடகங்கள் வாயிலாக அறிந்திருப்பிர்கள். இந்த செய்தி மழைக்கால மின்னலைப் போல தோன்றி மறைந்து போனதையும் அறிவோம். இந்த சம்பவத்தில் ஈடுபற்ற குற்றவாளிகளாக சிறுமியின் தந்தை, அண்ணன், மாமா, அண்ணனின் நண்பன் அரவிந்த் நடத்துநர் நமச்சிவாயம் சிவகங்கை காவல்நிலையத்தில் பணியாற்றிய ஆய்வாளர் சங்கர் உட்பட 8பேர் மீது வழக்கு பதியப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ளார்கள்.

ஆனால் கடந்த ஜூன் மாதம் காரைக்குடி மாஜிஸ்டிரேட்டிடம் தன் வாழ்க்கையை சீரழித்த மேலும் பல குற்றவாளிகள்ப் பற்றி வாக்குமூலத்தில் கூறியுள்ளார். மதுரை ஜி.ஜி அலுவலகத்தில் பணியாற்றும் நுண்ணறிவுப் பிரிவைச் சேர்ந்த ஆய்வாளர் சிவக்குமார், தென் மண்டல ஜி.ஜி-யாக பணியாற்றி தற்போது ஏ.டி.ஜி.பி-யாக உள்ள இராஜேஸ்தாஸ், எஸ்.பி. அஸ்வின் கோட்னிஸ் மற்றும் பல போலீஸ் அதிகாரிகள் என 28 பேர் பெயரை வாக்குமூலமாக குறிப்பிட்டிருக்கிறார். இவர்கள் அனைவரும் கூட்டுச்சேர்ந்து தங்கள் விரும்பியபோதெல்லாம் அச்சிறுமியை அழைத்து வரச்செய்து கட்டாய போதையூட்டி வல்லுறவு செய்திருக்கிறார்கள். இந்த குற்றவாளிகள் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. காரணம் இவர்கள் எல்லாம் உயர்பதவியில் உள்ளவர்கள். சிறுமி என்றுகூட பாராமல் வெறிநாய்களைப் போல கடித்துக் குதறியிருக்கிறார்கள்.

இது ஏதோவிபரம் தெரியாமல் செய்த ஒருநாலாந்தர பொறுக்கியின் செயலாகக் கருதி ஒதுக்கி விட முடியாது. இந்த நாட்டையே sivagangai-protest-against-rapist-police-officials-5காவல் காப்பதாகவும், சட்ட ஒழுங்கை காப்பதாகவும் கூறிக்கொள்ளும் அரசின் அங்கமான சீருடையணிந்த மிருகங்களால் நடத்தப்பட்ட சமூக அவலம் இது. தமிழ்நாடு போலீஸ் ஸ்காட்லாந்து போலிசைவிைட திறமையானவர்கள் என்கிறார்கள். சிதம்பரம் பத்மினி காவல் நிலையத்தில் கணவன் முன்னே பலாத்காரம் செய்யப்பட்டார். சிவகாசி ஜெயலெட்சுமி விவகாரத்தை நாடே காறித்துப்பியது. விரப்பன் தேடுதல் வேட்டையில் வாச்சாத்தி பழங்குடி பெண்களை பாலியல் பாலத்காரம் செய்தது காக்கிக் கூட்டம். எந்த வழக்குகளிலும் குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை.

பெண்களை பாரத மாதாவாகவும், தாய் உள்ளம் கொண்ட ஆட்சி அம்மா ஆட்சி என்கிறார்கள் அ.தி.மு. அடிமைகள். பெண் என்றால் பேயும் இறங்கும் என்பார்கள். ஆனால் இந்தப் பேய்கள் பெண்ணுக்கு இறங்கவில்லை. சிறுமியை சீரழித்தவர்களை காப்பற்ற துடிக்கிறது ‘அம்மா’ அரசு. அதற்காக புகார் கொடுக்கக் காரணமான சிறுமியின் அத்தையை கைது செய்த சி.பி.சி.ஐ.டி போலீசு. இவரது தூண்டுதலால் தான் சிறுமி போலீசு அதிகாரிகள் பற்றி பொய் வாக்குமூலம் கொடுத்ததாக வழக்கையே திசைதிருப்புகிறது. பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக இவரது 18-வயது மகனும் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஊடகங்கள் அரசியல் கட்சிகள் அமைதிக்கு என்ன காரணம்? டெல்லி மாணவி பாலியல் சம்பவத்தில் நாடே பற்றி எரிந்த போது நாடாளுமன்றத்தில் விவாதம் நடந்தது. உலக நாடுகளே ஆங்கில ஊடகங்கள் வாயிலாக கண்டனம் தெரிவித்தார்கள். சிவகங்கை சிறுமி சம்பவம், நம்மை பாதுகாப்பதாக சொல்லிக் கொள்ளும் போலீஸ் துறையிலே ஐ.ஜி, ஏ.டி.ஜி.பி போன்ற உயர் பொறுப்பிலே உள்ள சீருடையணிந்த கிரிமினல்களால் நடத்தப்பட்டிருக்கிறது. இது பகிரங்கமாக வெளியே நாறிய பிறகும் எதுவுமே நடக்காததுபோல மூடி மறைக்கிறார்கள், வழக்கை திசை திருப்புகிறார்கள்.

இவர்கள் செய்த குற்றத்திற்கு நடுத்தெருவில் வைத்து தூக்கிலிடவேண்டும் அவ்வளவு பெரிய குற்றம் இது. நீதித்துறையோ, போலீ, இராணுவம், உயர் அதிகாரிகளை கண்டித்தால் அரசின் ஸ்தரத்தன்மை கெட்டுவிடும் என்கிறது.

ஓட்டுக்கட்சிகளும், ஊடகங்களும் உயர் அதிகாரிகள் என்பதால் அடக்கி வாசிக்கிறார்கள். குற்றவாளிகளை காப்பாற்ற முயற்சிக்கிறார்கள்.

தீர்வு என்ன?

sivagangai-protest-against-rapist-police-officials-6இந்த சமூகமே நிலப்பிரபுத்துவ ஆணாதிக்க சமூக அமைப்பு. பெண்களை போகப் பொருளாகவும் நுகர்வு பொருளாகவும் கருதும் உளவியல் சிந்தனையை ஊட்டி வளர்க்கும் சமூக அமைப்பு, ஆபாச சீரழிவு பண்பாட்டு வக்கிரங்களை பரப்பி ஆண்களை வெறியூட்டி வருகிறது. பெற்ற தந்தையே மகளை பலாத்காரம் செய்வதும், பாதுகாக்க வேண்டிய போலீசே கூட்டு சேர்ந்து வல்லுறவு செய்வதும், நீதி வழங்க வேண்டிய நீதித்துறையோ திருடர்களை பாதுகாப்பதாகவும், போராடும் மக்களை, வழக்கறிஞர்களை ஒடுக்கும் கருவியாகவும் இருப்பது என அரசு உறுப்புகள் அருகதையற்று நிற்கிறது.

இந்நிலையில் சூரியநெல்லி பாலியல் பலாத்கார வழக்கில் அறைகுறையான தீர்ப்பை பெறுவதற்கே 18 ஆண்டுகள் போராடவேண்டியிருந்ததை மறக்க முடியாது. எனவே சிவகங்கை சிறுமிக்கு நீதிகிடைக்க பாலியல் குற்றவாளிகளை தண்டிக்க மக்கள் அனைவரும் வீதியில் இறங்கி போராடுவதை தவிர வேறு எந்த வழியும் இல்லை. நம்மை பாதுகாத்துக்கொள்ள ஒரே வழி இதுதான்.

21-12-2015 -அன்று மாலை 4.00 மணியளவில் போலீஸ் அனுமதி மறுத்த நிலையிலும் அதை மீறி மக்கள் அதிகாரம் அமைப்பினா் ஆா்ப்பாட்டம் நடத்தினா். பெண்கள் உள்பட திரளான மக்கள் கலந்து கொண்டனா். போலீஸ் அவா்களை கைது செய்தது. அங்கு கூடியிருந்த மக்கள் போலீசை திட்டினா் உங்களையும் ஒரு நாளுக்கு இப்படி ஏத்தனும்டா என்று போலீசை நோக்கி ஒருவா் கூறினாா். வழக்கு குறித்த விபரங்களை மூடி மறைப்பதற்கு போலீஸ் முழு மூச்சுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் மக்கள் அதிகாரத்தின் ஆா்ப்பாட்டமானது உயா் போலீஸ் அதிகாரிகளின் குற்ற செயலை அம்பலப்படுத்தும் விதத்தில் அமைந்தது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்
மக்கள் அதிகாரம்
சிவகங்கை – இராமநாதபுரம் மாவட்டங்கள்
8438103269

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க