பெண்: வலியும் வலிமையும்
பார்ப்பன இந்துமதவெறியும், ஆதிக்க சாதிவெறியும் இணைந்து இந்தியாவெங்கும் பெண்ணை பாரம்பரிய அடிமைகைளாக தக்க வைக்க முயல்கின்றன. முதலாளித்துவமும், நுகர்வுக் கலாச்சாரமும் அவளை சந்தையின் அடிமையாக்கி நுகர்வில் கரைத்து வருகின்றன. இந்த இரு முனைத் தாக்குதலில் மிதிபடும் பெண்களின் வலி என்ன?
இந்த நூலில் இடம்பெறும் பெண்களின் கதைகள் அந்த வலியை ஆழமாக உணர்த்துகின்றது.
கிராமத்து வாழ்க்கையில் கருப்பு நிறம் ஒரு பெண்ணுக்கு தரும் சித்திரவதை எப்படி இருக்கும்? தாலிபான்களிடம் சாகாமல் அந்த வங்க பெண் எழுத்தாளர் ஏன் தப்பிக்கவில்லை? இந்திய சுற்றுலாவுக்கு வந்த அந்த அமெரிக்க மாணவி ஊர் திரும்பியதும் மனநோயாளியானது ஏன்? பாலியல் வன்முறையை ஒரு பெண் எதிர்க்க பயப்படுவதும், மாத விலக்கு என்றொரு உயிரியல் நிகழ்வை அவமானமாக கருத வைப்பதும் வேறு வேறா? பாலஸ்தீனத்து தாய் அபு ரஹ்மேவிடம் இன்னும் கண்ணீர் வற்றாமல் இருப்பது எப்படி? 20 ரூபாய் எலுமிச்சை சாதத்தை கனவாகக் கருதும் அந்த பூங்கா பராமரிக்கும் பெண்ணின் பொழுது எப்படி போகிறது?
அரசு மருத்துவமனையில் குழந்தைகள் குடிக்கும் தாய்ப்பாலில் சோசலிசம் இருப்பதை அறிவீர்களா? இந்தியாவுக்கு அருகே இருப்பதாகச் சொல்லப்படும் ‘சிங்கப்பூர் சொர்க்கத்தில் வீட்டு வேலை செய்யச் செல்லும் ஒரு தமிழ்ப் பெண்ணின் கதை என்ன? மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொண்ட மணிஷா கட்லாலின் கிராமத்தை சுடுகாடாக்கியது யார்? கொல்கத்தா தன்னைக் கைவிட்டு விட்டதாக கூறும் அந்த பெண் பத்திரிகையாளரின் வருத்தம் எது?
இவர்கள் புதுமைப் பெண்கள் அல்ல; போராடும் பெண்கள். போராடும் கடமையை உணர்த்தும் வலிமையான பெண்கள். அந்தப் போராட்டத்தில் தங்களது உயிரையும் வாழ்வையும் இழந்த பெண்கள்.
பெண் விடுதலையானது சமூக விடுதலையின் அங்கம் என்பதை உணர்ந்தவர்களுக்கு இந்த பெண்கள் தமது நெஞ்சுரத்துடன் துணை வருவார்கள்.
தோழமையுடன்
புதிய கலாச்சாரம்
பெண்: வலியும் வலிமையும் – புதிய கலாச்சாரம் ஏப்ரல் 2016 மின்னூல் வடிவில் வாங்குவதற்கு Add to cart அழுத்துங்கள்
₹20.00Read more
மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.
இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு (விவரம் கீழே தரப்பட்டுள்ளது) நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.
அச்சு நூல் தேவைப்படுவோர் சாதாரணத் தபாலில் பெற ரூ 20-ம் (நூல் விலை ரூ 20, தபால் செலவு இலவசம்), பதிவுத் தபாலில் பெற ரூ 50-ம் (நூல் விலை ரூ 20, பதிவுத் தபால் கட்டணம் ரூ 30) எமது வங்கிக் கணக்கில் அனுப்பிவிட்டு தபால் முகவரியுடன் மின்னஞ்சல் அனுப்பவும். வங்கி கணக்கு விவரம் கீழே தரப்பட்டுள்ளது.
நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தாய்ப்பால் சோசலிசம்
- கருப்பாயி
- தாலிபான்களை எதிர்த்து உயிர் துறந்த வங்கப் பெண் !
- நீங்கள் ஒரு போதும் கேட்க விரும்பாத பாரதக் கதை !
- என்னாது மாசா மாசம் வருமா ?
- பாலஸ்தீனம்: ஒரு விதவைத் தாயின் வீரக்கதை!
- ஏம்மா… ஒரு எலுமிச்ச சாதம் என்ன விலைம்மா ?
- நாமறியாத அரசு செவிலியர்கள் !
- கிம்பெர்லி ரெவேரா : ஆதிக்கத்திற்கு துணை போகாத வீரம் !
- சிங்கப்பூர் : நினைத்தாலே கசக்கும்
- மணிஷா எழுதிய கவிதை !
- கொல்கத்தா என்னை கைவிட்டு விட்டது !
- மேட்டுக்குடி இந்தியாவின் பெண் வெறுப்பு !
பக்கங்கள் : 80
விலை ரூ. 20.00
ஆண்டுச் சந்தா உள்நாடு: ரூ 400
ஆண்டுச் சந்தா வெளிநாடு: ரூ 1800
இணையம் மூலமாக ஆண்டு சந்தா செலுத்த | ||
---|---|---|
Paypal மூலம்(வெளிநாடு) | $27 | |
Payumoney மூலம்(உள்நாடு) | ரூ.400 |
மாதந்தோறும் தவறாமல் புதிய கலாச்சாரம் நூல் உங்களுக்கு கிடைக்கும் பொருட்டு ஆண்டு சந்தாவை உடன் அனுப்பி ஆதரிக்குமாறு கோருகிறோம். சந்தா அனுப்புவோர் கன்னையன் ராமதாஸ் பெயருக்கு டிடி, MO, அனுப்பலாம். வங்கிக் கணக்கிற்கு நேரடியாகவும் அனுப்பலாம். விவரங்கள்,
KANNAIAN RAMADOSS
AC,NO – 046301000031766
IFSC – IOBA0000463
BRANCH IOB ASHOK NAGAR.
சந்தா தொகை அனுப்பிவிட்டு உங்களது பெயர், முகவரி விவரங்களோடு உங்களது தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி (இருந்தால்) அனுப்புமாறு கோருகிறோம்.
அலுவலக முகவரி:
புதிய கலாச்சாரம்,
16, முல்லை நகர் வணிக வளாகம்,
2-வது நிழற்சாலை, அசோக் நகர்,
சென்னை – 600 083.
தொலைபேசி
044-2371 8706,
99411 75876, 97100 82506
மின்னஞ்சல்
vinavu@gmail.com
அடுத்த தலைமுறையினரான மாணவர்களுக்கு அரசியல் உணர்வூட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது.
மாணவர்களிடம் புதிய கலாச்சாரம் கொண்டு சேர்க்க உங்கள் ஆதரவு தேவை.
தோழர்கள், நண்பர்கள், இதர முற்போக்கு அமைப்புக்களில் இருப்போர் அனைவரும் புதிய கலாச்சாரம் நூல்களை வாங்கி தமது மற்றும் தமது நண்பர்களது திருமணங்களில் பரிசளிக்கலாம்.
திருமணப் பரிசாக புதிய கலாச்சாரத்தின் புத்தகங்களை வழங்குங்கள் !
_____________
புதிய கலாச்சாரம் வெளியீடு : தலைப்பும் வடிவமைப்பும் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை உருவாக்குகிறது. ஒவ்வொரு மாதமும் புதிய , புதிய தலைப்புகளில் தொகுக்கப்படும் விவரங்கள் சமூகத்தின் போக்கை ஆழமாக உணர்த்துகின்றன.
இம்மாத இதழ் படிக்கையில் ஆணின் இன்ப நுகர்விற்கான ஒரு பொருளாகவும் பெண் ஒரு வீட்டு விலங்காகத்தான் பாவிக்கப்படுகிறாள் என்பதையும் ஆணாதிக்க உணர்ச்சி, வெறி கரை புரண்டு செல்வதையும் ஆழமாக உணர்த்தியது. மொத்தத்தில் ஆழமான சுய பரிசீலணையை இம்மாத வெளியீடு உருவாக்கி விட்டது.
புதிய கலாச்சாரம் படிப்பதும் வினியோகிப்பதும் நல்ல மதிப்பீட்டை உருவாக்கியுள்ளது.