privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கஅரித்துவாரமங்கலம் டாஸ்மாக் மூடப்பட்டது !

அரித்துவாரமங்கலம் டாஸ்மாக் மூடப்பட்டது !

-

அரித்துவாரமங்கலம் டாஸ்மாக் மூடப்பட்டது! மக்கள் அதிகாரம் தலைமையில் மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி!

amangalam-shutdown-tasmac-protest-14
(கோப்புப் படம்)

கும்பகோணம் அருகில் உள்ள அரித்துவாரமங்கலத்தில் உள்ள டாஸ்மாக்கை மூடுவதற்காக அப்பகுதியில் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் மக்கள் அதிகார அமைப்பின் தோழர்கள் தலைமையில் தொடர்ச்சியாக பிரச்சாரங்கள், தெருமுனைக்கூட்டங்கள் நடத்தப்பட்டன. கடந்த மார்ச் 7-ம் தேதி காலை 10 மணியளவில் பெண்கள், பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் பறையிசை, முழக்கங்கள் அதிர மக்கள் அதிகாரத் தோழர்கள் தலைமையில் கடையை முற்றுகையிட்டு காலையிலிருந்தே கடையை நடத்த விடாமல் செய்தனர். காவல் துறையினரை குவித்து மிரட்டி பார்த்தும் பெண்களும், பள்ளி மாணவர்களும் சிறிதளவுக்கூட விட்டுக்கொடுக்கவில்லை, டாஸ்மாக் மாவட்ட அதிகாரி பேச்சுவார்த்தை நடத்தியும் மக்கள் “கடையை மூடித் தீரவேண்டும்” என்பதில் உறுதியாக இருந்ததால் வேறுவழியின்றி கைது செய்து பிறகு காவல் நிலையத்திலும் யாரும் உணவருந்தாமல் போராட்டத்தை தொடர்ச்சியாக நடத்தியதால் மாலையில் வெளியே விட்டுவிட்டனர்.

தற்போது முதற்கட்டமாக தமிழக அரசு சில கடைகளை மட்டும் மூடுவதாக அறிவித்ததில் இந்த கடையையும் மூடிவிட்டனர். அந்த வட்டாரப்பகுதிகளில் பல கிராமங்களில் டாஸ்மாக் கடை உள்ளது, ஆனால் அதிகம் லாபம் வரும் இந்தக் கடையை ஏன் முதலில் மூடவேண்டும்? இதற்கான ஒரே பதில் மக்கள் அதிகாரத் தோழர்கள் மற்றும் அப்பகுதி மக்களின் போராட்டமே தவிர வேறொன்றுமில்லை.

amangalam-shutdown-tasmac-protest-11
(கோப்புப் படம்)

கடையை மூடியபிறகு அப்பகுதி மக்கள், போராட்டத்தில் ஈடுப்பட்ட மக்கள் ஆகியோரிடம் இதைப்பற்றி கேட்டபோது ஒரு பெண் “போராட்டம் எல்லாம் நடத்தி போலீசு கைது செய்தது தான் மிச்சம், கடையை மூட முடியல என்று என்னப் பார்த்து கேலியாக பேசியவங்க இப்ப தலையை குனிஞ்சிப் போராங்க, எனக்கு எதையோ சாதிச்சமாதிரி இருக்கு, சந்தோசமா இருக்கு” என்று கூறினார்.

இன்னொரு அம்மாவிடம் கேட்டதற்கு “தினமும் குடிச்சிட்டிருந்த என் வீட்டுக்காரரு இப்ப இரண்டு மூணு நாளைக்கு ஒருதடவத்தான் குடிக்கிறாரு, தினமும் 100 ரூபாய் வீட்டுக்கு குடுக்குறாரு, பக்கத்துல இருக்குற கடையையும் மூடிட்டா எப்பவும் குடிக்க மாட்டாரு அந்த கடைகளை மூட போராட்டம் நடத்துன கண்டிப்பா நான் கலந்துக்குவேன்” என்று கூறினார்.

இன்னொரு பெண் “கல்யாணம் ஆனதல இருந்து என் வீட்டுக்காரரு இப்பதான் பணத்த கையில குடுக்குறாரு” என்றார்.

இளைஞர் ஒருவர் “கடை இருந்தப்ப கடைத்தெருபக்கம் போக முடியாது, குடிச்சிட்டு அசிங்க அசிங்கமா பேசுறது, பெண்களை கேலி செய்வது, குடித்துவிட்டு பாட்டிலை ரோட்டில் போட்டு உடைப்பது என்று அந்தப் பகுதியே குடிகாரர்கள் ராஜ்ஜியமா இருந்திச்சு! இப்ப அமைதியா இருக்கு. இந்த போராட்டத்தில கலந்துக்கொண்டதல நானும் ஒருவன்னு பெருமையாக இருக்கு, வேறு எந்த போராட்டமா இருந்தாலும் சொல்லுங்க நான் கண்டிப்பா கலந்துக்குறேன்” என்று கூறினார்.

கடைத்தெருவில் மக்கள் அதிகார தோழர் ஒருவரைப் பார்த்து ஒரு அ.தி.மு.க. அல்லக்கை “நீங்க போராடி மூட முடியல, அம்மா மூடிட்டாங்க பாத்திங்களா” என்றதற்கு உடனே அங்கிருந்து இன்னொருவர் கோபத்துடன் அவரைப் பார்த்து “ஏன் உங்கம்மா போன தடவ முதலமைச்சரா இருந்தப்ப மூட முடியாதுன்னு சொன்னாங்க, இப்ப எப்படி மூடுனாங்க! இவங்க போராடுனதாலத்தான் மூடிருக்காங்க” என்று சொன்னவுடன் அந்த அல்லக்கை அவ்விடத்தைவிட்டு நகர்ந்துவிட்டார்.

இனிமேல் இந்த அரசியில்வாதிகள், அதிகாரிகளின் திமிரை மக்களே அடக்கும் காலம் வந்துவிட்டது என்பதை இவரின் பேச்சி உணர்த்தியது. தற்போது மக்கள் பல்பேறு பிரச்சனைகள் மக்கள் அதிகாரத்தோழர்களிடம் கொண்டு வருகின்றனர், நமது உரிமையைப் பெற போராடுவது தான் வழி என்பதை உணர்ந்துள்ளனர் என்பதை பார்க்க முடிகிறது.

தகவல்
மக்கள் அதிகாரம்,
குடந்தை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க